Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தோழர் விமல் வீரவன்ஸாவிற்கு அட்வான்ஸ் புரட்சிகர வீரவணக்கங்கள்

Featured Replies

fastone.jpg

தோழர் விமல் வீரவன்ஸா, கொழும்பிலுள்ள ஐ.நா தூதரகத்துக்கு முன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க தொடங்கி விட்டாராம். தோழர் விமல் வீரவன்ஸா நாட்டுப்பற்றுள்ளவர்/கொள்கைப்பற்றுள்ளவர் ஆகவே இப்போராட்டத்தை கை விடமாட்டார். அப்படி விடவும் கூடாது என்று கேட்டுக் கொண்டு, சாகும்வரை உண்ணாவிரதத்தில் முடியும் பட்சத்தில் ... அனைவரும் தோழருக்கு வீர அஞ்சலிகள் செலுத்துவார்கள்! ஆகவே நாம் முந்திக் கொண்டு இப்பவே புரட்சிகர வீரவணக்கத்தை செலுத்துவோம்.

சிவப்புத்தோழரே, உனக்கு எமது புரட்சிகர வீரவணக்கங்கள் Skull_holder_3.gif

Edited by Nellaiyan

அப்படியே ஒரு இரண்டு மூண்டு ஐநா ஊளியர்களின் மண்டையையும் வெறி கொண்டு தாக்கி உடைக்க வாழ்த்துக்கள்...

மறக்காமல் பழியை தமிழர்கள் மீது போடுங்கோ... டக்கிளஸ் குறூப் தான் (TPPF) செய்தது எண்டு சொன்னால் இன்னும் விசேசம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சாகும் வரை வீரவன்ஸ உண்ணாவிரதம்.

இடையில் எழும்பினால் விசுக்குவதற்கு புத்த பிக்குக்கள் விசிறியுடன் காத்திருக்கின்றார்கள்.

வாத்தியார்

*********

அது சரி நெல்லையன், கருணாநிதி உண்ணாவிரதம் இருந்த போது காலடியில 3 பெண்டுகள் விழுந்து கிடந்தவளுகள், ஆனால் இவருக்கு பிக்கு மட்டும் தான் இருக்கிறான், அது சரி இவருக்கு ஒருத்தியும் வரமாட்டாளுகலோ :rolleyes::lol::):D:D:D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.வின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான போராட்டங்கள் முட்டாள்தனமானவை – JHU

07 July 10 01:13 pm (BST)

ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் வகையிலான போராட்டங்கள் முட்டாள்தனமானவை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

pu.jpg:rolleyes::lol:

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொழும்புக் கிளை அலுவலக நடவடிக்கைகளுக்கும், அதன் பணியாளர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி ஜே.என்.பி.யினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் போராட்டத்தில் பல பௌத்த பிக்குகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் பல நாடுகள் அங்கம் வகிப்பதாகவும், நிபுணர்கள் குழுவினை நியமித்த பொறுப்பு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளரைச் சாரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, நிபுணர்கள் குழு நியமித்தமை தொடர்பான பொறுப்பினை பான் கீ மூன் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு இதற்கு பொறுப்புச் சொல்ல முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தை கருத்திற் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

எமது வரையறைகளுக்கு உட்பட்ட வகையில் அமைதியான முறையில் எதிர்ப்பை வெளியிடுவதே நாகரீகமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைய வேண்டிய நாடு எனவும், வெளிநாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தும் போது இதனைக் கருத்திற்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

சில துரோகிகள் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேற்குலக நாடுகளை பிழையாக வழிநடத்தக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=26898&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து நாடுகளிலும் இயங்கி வரும் ஐ.நா. அலுவலகம் முற்றுகையிடப்படும் - விமல் வீரவன்ச ஆவேசம்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-08 09:43:20| யாழ்ப்பாணம்]

இலங்கைக்கு எதிரான நிபுணர் குழுவை ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் கலைக்கத் தவறினால் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஐ.நா. அலுவலகங்களின் முன்பா கவும் போராட்டம் நடத்துவோம்- எமது போ ராட்டம் உலகளாவிய ரீதியில் முடுக்கி விடப் படும் என்று வீடமைப்பு மற்றும் பொறியியல் தொழில்நுட்ப அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீர வன்ச தெரிவித்தார்.

அவர் ஐ.நாவின் கொழும்பு அலுவலகம் மீதான முற்றுகை குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலே யே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் சொன்ன பதில்களும் வருமாறு,

கேள்வி:- நீங்கள் என்ன செய்கின்றீர்கள்?

பதில்:- பான் கீ மூன் அவருடைய அதிகார எல்லைக்கு அப்பால்பட்ட விதத்தில் இலங்கைக்கு எதிரான ஐ.நா. நிபுணர் குழுவை அமைத்து விட்டார்.இலங்கை ஐ.நாவில் அங்கம் வகிக்கும் ஒரு நாடு. ஒரு அங்கத்துவ நாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் முதலில் அதன் பாதுகாப்புச் சபை, மனித உரிமைகள் சபை ஆகியவற்றுக்கு அந்த யோசனையைச் சமர்ப்பித்து அவற்றின் அங்கீகாரத்தை முதலில் பெற வேண்டும் என்பது ஐ.நா. நியதி. ஆனால் மூன் அப்படிச் செய்யவில்லை.

அவருக்கென ஆலோசனைக்குழு என்று எதேச்சாதிகாரமாக மூன் நியமிக்கின்றமைக்கு ஐ.நா. சட்டத்தில் இடமில்லை. ஜனாதிபதி, இராணுவ உயரதிகாரிகள், பயங்கரவாதத் தைத் தோற்கடித்த அரச படையினர் ஆகி யோரை யுத்தக் குற்ற நீதிமன்றம் ஒன்றின் முன் நிறுத்தி தண்டிக்கின்றமைக்காகவே இந் நிபுணர் குழு அமைக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையை யுத்தக் குற்றம் என்கின்ற பெயரில் தண்டிக்க ஐ.நாவால் மேற்கொள் ளப்படுகின்ற திட்டமிட்ட நடவடிக்கையின் முதல் கட்டமே இது.

எமது நாட்டின் தேசப்பற்றாளர்கள் எவரும் இச் சதி நடவடிக்கையை அனுமதிக்கவே மாட்டார்கள். இலங்கை பயங்கரவாதத்தை முறியடித்து விடாது என்றே பான் கீ மூன் நம் பிக் கொண்டிருந்தார். ஆனால் நாம் பயங்கரவாதத்தை முறிய டித்துக் காட்டி விட்டோம். அதேபோல இந் நிபு ணர் குழுவை பான் கீ மூன் கலைக்கும் வரை ஐ.நாவுக்கான எதிரான எமது போராட்டத்தை நிறுத்தவே மாட்டோம். நான் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் என்ற வகையில் இவற்றைக் கூறு கின்றேன். ஒரு அமைச்சராக அல்ல.

கேள்வி:- உங்கள் நடவடிக்கைகளால் அரசுக்கு பிரச்சினைகள் ஏற்படாதா? உங் கள் முற்றுகை நடவடிக்கையைப் பயங்கர வாதச் செயற்பாட்டின் வடிவமாக வன்முறை யின் உருவமாக ஏன் கருதக் கூடாது?

பதில்:- நான் அமைச்சராகவோ அரசில் அங்கம் வகிக்கும் ஒருவராகவோ இல்லா விட் டால் கூட இந்த முற்றுகை நடவடிக்கையைச் செய்துதான் இருப்பேன். ஏனெனில் நான் இந்த நாட்டின் குடிமகன். எனது நாட்டை நேசிக்கின்றேன். நாட்டில் சமா தானத்தை ஏற்படுத்திய தலைவர்களையும் படையினரையும் காப்பாற்ற வேண்டிய தார் மீகக் கடமையும் பொறுப்பும் நாட்டின் ஒவ் வொரு பிரஜைக்கும் உண்டு. இவர்கள் யுத்தக் குற்றங்களுக்காக சர்வ தேச நீதிமன்றங்களின் முன் நிறுத்தப்படுகின் றமையை அனுமதிக்கவே முடியாது. இந் நாட்டுப் பிரஜைகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். எமது போராட்டத்தில் மிகவும் கெளரவத் துக்குரிய புத்தபிக்குகளும் பங்கேற்கின்றார் கள். ஆகவே இது பயங்கரவாத நடவடிக்கை அல்ல. அமெரிக்காவால் ஈராக், ஆப்கானிஸ் தான் ஆகிய நாடுகள் மீது தொடுக்கப்பட்ட தைப் பயங்கரவாதத்துக்கு உதாரணங்கள் ஆகின்றன.

கேள்வி:-இனிமேல் என்ன செய்வீர்கள்?

பதில்:- பான் கீ மூன் நிபுணர் குழுவை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்கின்றோம். அவர் நிபுணர் குழுவை வாபஸ் பெறும்வரை ஐ.நாவின் கொழும்பு அலுவலகத்தின் முன் எமது ஆர்ப்பாட்டமும் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டமும் தொடரும். அவர் நிபுணர் குழுவைக் கலைக்கத் தவறி னால் எமது போராட்டம் உக்கிரமடையும்.

கேள்வி:- அப்போதும் அவர் நிபுணர் குழு வைக் கலைக்காவிட்டால் என்ன செய்வீர்கள்?

பதில்:- நாம் மிகவும் கடுமையான விழி முறைகளைக் கைக்கொள்ள வேண்டியிருக் கும். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஐ.நா. அலுவலகங்கள் முன்பாகவும் போராட்டம் நடத்துவோம். உலகளாவிய இப் போராட்டத்தில் வெளி நாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர் களும் பங்குபற்ற வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்.

இதேவேளை தேசிய சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்த அமைதியான எதிர்ப்புப் போராட்டத்தைப் பொலிஸாரின் பலத்தைக் கொண்டு கலைத்த பொலிஸ் அதிகாரி இலஞ் சம் பெறுபவர். அவர் போராட்டக்காரர்களைக் கலைக்க ஐக்கிய நாடுகள் சபையிடம் இலஞ் சம் பெற்றுள்ளார் என அமைச்சர் விமல் வீர வன்ச தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் பணியாளர் களை வெளியில் செல்ல விடாது அமைதி யான முறையிலான போராட்டத்தை மேற் கொண்டனர். ஆர்ப்பாட்டங்களின் போது சிறிய இடை யூறுகள் ஏற்படுவது இயல்பானது. நிபுணர் குழுவை விலக்கிக் கொள்வது குறித்து ஐ.நா. செயலாளர் உடனடியாக அறிவிக்க வேண் டும் எனவும் கோரியுள்ளார்.தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

நன்றி வலம்புரி

வாத்தியார்

**********

நாயை பப்பாவிலை ஏத்துங்கோ முறிச்சு விழுத்துவம். சிங்களத்திலை மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கி மின்னஞ்சல்கள் அனுப்பினால் நாய் உற்சாகமாக உண்ணாவிரதம் இருக்கும். றல்லாக முடிந்தவர்கள் உற்சாகப்படுத்துங்கள்

வாத்தியார்

**********

  • தொடங்கியவர்

இன்று ஒரு வாசகர், தனது கருத்தை தோழரின் உண்ணாவிரதம் தொடர்பாக டெயிலி மிரரில் எழுதியது ...

.... தமிழ் மக்கள், இப்படியானதொரு போராட்டத்தை கொழும்பில் நடத்தியிருந்தால்?????? என்ன நடந்திருக்கும் என்று ....

... 58ஐ நினைவூட்டுகிறது!!!

ஐ நா கிளை மூடப்பட்டால் ஏதோ இலங்கைக்குப் பாதகம் நிகழும் என்று நாம் எதிர் பார்க்கின்றோம். அப்படி எதுவுமே நடந்து விடுவதற்கு வாய்ப்பில்லை. நிபுணர் குழு மீளப் பெறுவது உறுதியாக நடக்கும்.

மேற்கு நாடுகள் இலங்கையை தமது ஆதிக்கத்தில் தக்கவைக்க ஐ நா என்ற துரும்பை பயன்படுத்துகின்றது. இந்தியாவுக்கும் சீனா இலங்கை உறவு கசப்பை ஏற்படுத்துவதால் அமரிக்காவை கொண்டு ஐநா வை தூண்டி பிறகு தான் தலையிட்டு தீர்ப்பது போல ஒரு விழையாட்டை காட்டலாம். என்னும் எத்தனை கோமாளித்தனங்களை செய்தாலும் அதில் தமிழர்கள் மீதான அக்கறை ஒரு துளி கூட இருக்கப்போவதில்லை. இரண்டு வருடத்துக்கு முதல் இதே ஐ நா வை வெளியேறவேண்டாம் என கிளிநொச்சியில் தமிழர்கள் மன்றாடியதை அலட்சியப்படுத்தி வெளியேறினார்களே இன்று நீதி விசாரணைக்கு குழு? ஐ நா இங்கு முக்கியமானதில்லை ஆனால் தமிழனை அழிக்கும் போதும் சரி விசாரணை நடத்த முற்படும் போதும் சரி சிங்களக் கட்சிகள் ஒன்றாகின்றார்கள். அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

.

Sarg_mit_Skelett.jpg

விமல் வீரவன்சவின் சாகும்வரை உண்ணாவிரதம் தொடர வாழ்த்துக்கள்.

அவரின் கோரிக்கை நிறைவேறாமல் அவர் இறந்தால்.... அவரின் பூதவுடலை, இந்தச் சவப் பெட்டியில் வைத்து மூடுங்கள்.

மூடிய பின் ஆமைப்பூட்டால் பூட்ட மறவாதீர்கள்.

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.