Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2011 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவுக்கு தான் எண்டு நினைக்கிறன் ஏனென்டால் அவங்களுக்கு அதிஸ்டம் வேலை செய்யுது

நாளைக்கு கோப்பை இலங்கையின் கைகளில். :unsure:

  • Replies 2.2k
  • Views 83.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு ரீமுக்கும் சப்போட் பண்ணாம விளையாட்டைப் பாக்கிறது ரொம்பக் கஷ்டம். இந்தியன் வெல்லுறதும் விருப்பமில்லை. அதே நேரம் சொறிலங்கா வெல்லுறத்தால சிங்களவன் துள்ளிக் குதிப்பான் மகிந்த வெற்றி முழக்கம் செய்வான் எண்டதிலும் பார்க்க எங்கட தமிழ் நாயள் சிங்கக்கொடியை போர்த்துகொண்டு லண்டன் சிட்னி என்று எங்கெங்கெல்லாம் இந்த சிங்கத்துக்கெதிராக போரட்டம் நடாத்தினமோ அங்கெல்லாம் அதே கொடியோடு கூத்தடிக்கப் போகும் காட்சியைத்தான் நினைத்துப் பார்க்க சகிக்கமுடியாமல் இருக்கிறது.

நீங்கள் தாராளமாக சொறிலங்காவை ஆதரியுங்கள். வெற்றி பெற்றால் குடித்து கும்மாளம் அடியுங்கள். ஆனால் உங்களுக்கு கொஞ்சமேனும் மாவீரர்கள் மீதோ மாண்ட மக்கள் மீதோ மரியாதை இருந்தால் தயவு செய்து சிங்கக் கொடியோடு வெளியில் செல்லாதீர்கள்.

Edited by காட்டாறு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை விளையாடப் போக்கும் வீரர்கள் விபரம்

India 1 Virender Sehwag, 2 Sachin Tendulkar, 3 Gautam Gambhir, 4 Virat Kohli, 5 Yuvraj Singh, 6 MS Dhoni (capt & wk), 7 Suresh Raina, 8 Harbhajan Singh, 9 Zaheer Khan, 10 Sreesanth/Ashwin, 11 Munaf Patel.

Sri Lanka 1 Tillakaratne Dilshan, 2 Upul Tharanga, 3 Kumar Sangakkara (capt & wk), 4 Mahela Jayawardene, 5 Chamara Silva, 6 Thilan Samaraweera, 7 Thisara Perera, 8 Lasith Malinga, 9 Nuwan Kulasekara, 10 Muttiah Muralitharan, 11 Suraj Randiv/Rangana Herath.

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போட்டியில் விளையாடுவேன்! முரளிதரன் அதிரடி அறிவிப்பு

வெள்ளி, 01 ஏப்ரல் 2011 20:55

முத்தையா முரளிதரனின் உடல் திடநிலை குறித்து கவலைகள் நிலவிய போதிலும் நாளை நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவர் விளையாடுவார் என இலங்கைக் கிரிக்கெட் அணியின் பயிற்றுநர் ட்ரவோர் பெய்லீஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் முரளிதரனும் இக்கருத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

39 வயதான முத்தையா முரளிதரன் உலகக்கிண்ண சுற்றுப் போட்டியின் போது கணுக்கால், முழங்கால், கவட்டுப் பகுதி என உடலின் பல பகுதிகளில் உபாதைகளுக்குள்ளானார்.

அரையிறுதிப் போட்டியின் போது முரளிக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும் என்ற ஆலோசனை பலரால் முன் வைக்கப்பட்டது. எனினும் அவர் அப்போட்டியில் சிறப்பாக பந்துவீசி இலங்கை அணியின் வெற்றிக்கு உதவினார்.

ஆனால் அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வியாழக்கிழமை மும்பை வாங்கெட் அரங்கில் நடைபெற்ற பயிற்சிகளில் கலந்துகொள்ளவில்லை.

இலங்கை அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஏஞ்சலோ மத்தியூஸும் காயமடைந்துள்ளார். அதனால் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸ், சுழற்பந்துவீச்சாளர் சுராஜ் ரந்தீவ் ஆகியோர் மாற்று வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள இந்திய அணியுடனான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் முரளி விளையாடுவார் என அணியின் பயிற்றுநர் பெய்லீஸ் கூறியுள்ளார். முரளி விளையாடுவதற்கு சிறந்த வாய்ப்பு உள்ளது.

அவர் அரையிறுதிப் போட்டியில் 10 ஓவர்கள் பந்து வீசினார். அவர் அப்படியான குணவியல்பு கொண்ட அவர் அசௌகரியமான நிலையிலும் விளையாடுவார்' என அவர் கூறினார்.

இப்போட்டியுடன் முரளிதரன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முரளிதரன் விளையாடுவதாக அறிவித்துள்ளமையானது இலங்கை இரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

tamilenn

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை! * விழிப்பாக இருக்க வேண்டும்

மும்பை: "பைனல் குறித்து வெளியாகும் பரபரப்பான தகவல்களில் இருந்து, சக வீரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இலங்கைக்கு எதிரான போட்டியில், சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

பத்தாவது உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை நடக்கும் பைனலில் ஆசிய அணிகளான இந்தியா, இலங்கை மோதுகின்றன.

இதுகுறித்து கேப்டன் தோனி கூறியது:

உலக கோப்பை அட்டவணை, உண்மையில் நமக்கு பெரும் உதவியாக இருந்தது. கிடைக்கும் ஓய்வை பயன்படுத்தி, கொஞ்சம், கொஞ்சமாக இழந்த பார்மை மீட்டு வந்தனர். இத்தொடரின் சில போட்டிகளில், கடைசிநேரத்தில் தான் வெற்றி பெற்றோம். இது இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பாக அமைய, அரையிறுதிக்கு முன்னேற முடிந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டி நடந்த மொகாலி ஆடுகளம், எப்போதும் வேகத்துக்கு தான் ஒத்துழைக்கும். இதனால் தான் அஷ்வினை சேர்க்காமல் ஆஷிஸ் நெஹ்ராவை களமிறக்கினேன். ஆனால் எனது கணிப்பு தவறாகிவிட்டது. இருப்பினும், எதிர்பார்ப்புக்கு மாறாக சுழலுக்கு நன்கு உதவ, ஹர்பஜனும், யுவராஜ் சிங்கும் அசத்தி, நெருக்கடி கொடுத்தனர்.

தற்போது உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியுள்ளோம். நாம் கோப்பை வெல்லவேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகின்றனர். இந்நிலையில் தேசத்துக்காக போட்டிகளில் பங்கேற்கும் போது, எந்த ஒரு வீரரையும் யாரும் ஊக்குவிக்க வேண்டும் என்ற தேவையில்லை.

சரியான நேரத்தில் எழுச்சி பெறுவோம் என இத்தொடரின் துவக்கத்தில் கூறினேன். அதுபோல ஒவ்வொரு போட்டியிலும் போராடி வென்று வந்துள்ளோம். இது அவ்வளவு எளிதானதல்ல. தவிர, இலக்குகளை "சேஸ்' செய்வது உட்பட, அனைத்து பிரிவுகளிலும் அணியின் திறமையை சோதித்து பார்த்துவிட்டோம். தற்போது பைனலுக்கு தயாராகியுள்ளோம்.

பைனல் போட்டி குறித்து பல்வேறு வகையான கருத்துக்கள் நம்மைச் சுற்றி உலவுகின்றன. இந்த செய்திகளில் நமது கவனத்தை சிதறச்செய்து விடக்கூடாது. ஏனெனில் எல்லோரும் தொழில் ரீதியிலான கிரிக்கெட் வீரர்கள், அதனால் பைனலில் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்த வேண்டும்.

இத்தொடரில் துவக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தால் அசத்தி வருபவர்கள் இலங்கை அணியினர். இவர்களுக்கு எதிரான பைனலில், நம்மால் முடிந்த அளவுக்கு திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான், இலங்கை அணியை வீழ்த்த முடியும்.

இவ்வாறு தோனி தெரிவித்தார்.

--

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால் இம்முறையும் தோற்கும்.

யாருக்குத் தெரியும் :D

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி போட்டியில் ராமர் - ராவணன் போர்: இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ஜ வெள்ளிக்கிழமைஇ 01 ஏப்ரல் 2011இ 08:00.53 மு.ப புஆவு ஸ

பாகிஸ்தானுக்கு எதிராக மொகாலியில் நடந்த "மகாயுத்தத்தில்' இந்திய அணி வெற்றி பெற்றது.

அடுத்துஇ இலங்கையுடன் நடக்க உள்ள இறுதி போட்டியில் "ராமர் - ராவணன்" இடையிலான "போராக" ரசிகர்கள் வர்ணிக்கின்றனர்.

இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று முன் தினம் மொகாலியில் நடந்த அரையிறுதியில் பரம எதிரிகளான இந்தியாஇ பாகிஸ்தான் அணிகள் மோதின. உலக மகாயுத்தமாக கருதப்பட்ட இப்போட்டியில்இ அபார வெற்றி பெற்ற இந்திய அணிஇ இறுதி போட்டிக்கு முன்னேறியது.

நாளை மும்பையில் நடக்க இருக்கும் இறுதி போட்டியில் இந்திய அணிஇ இலங்கையை எதிர்கொள்கிறது. இதனை "ராமர் - ராவணன்' போராக இந்திய ரசிகர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான எஸ்.எம்.எஸ் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதில்இ நாளை ராமர்(இந்தியா)இ ராவணன்(இலங்கை) இடையே போட்டி நடக்க உள்ளது. இதில்இ ராவணனை வதம் செய்து சீதாவை(உலக கோப்பையை) ராமர் கொண்டு வருவார்இ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள ராமர் கோயில்களில் இந்திய அணியின் வெற்றிக்காக நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இது குறித்து ரசிகர் ஒருவர் கூறுகையில்இ இலங்கைக்கு எதிராக வெற்றி பெற பகவான் ராமர் அருள் புரிய வேண்டும். ராமாயணத்தில் இவர் தான் இலங்கையை வீழ்த்தியுள்ளார்இ என்றார்.

ரசிகர்கள் விருப்பத்துக்கு ஏற்ப தோனி தலைமையிலான இந்திய அணி இம்முறை உலக கோப்பை வென்று வரலாறு படைக்க நாமும் பிரார்த்திப்போம்.

இந்திய அணிக்கு இம்முறை "எம்" மந்திரம் கைகொடுக்கிறது. அதாவது ஆங்கில எழுத்தான "எம்" என்று துவங்கும் இடங்கள் அல்லது மைதானங்களில் நடந்த போட்டிகளில் வென்றுள்ளது. உதாரணமாகஇ மிர்புர்(எதிர்இ வங்கதேசம்)இ எம்.ஏ.சின்னசாமி அரங்கம்(எதிர்இ அயர்லாந்து)இ எம்.ஏ. சிதம்பரம்(எதிர்இவெ.இண்டீஸ்)இ மொடிரா(எதிர்இ ஆஸி.இ)இ மொகாலி(எதிர்இ பாக்.இ) ஆகிய இடங்களில் வெற்றிவாகை சூடியுள்ளது.

இறுதி போட்டி நடக்க உள்ள மும்பையின் பெயரும் "எம்" என்ற எழுத்தில் தான் துவங்குகிறது. இதனால்இ இந்திய அணி கோப்பை வெல்ல வாய்ப்பு உள்ளது. தவிரஇ மகேந்திர சிங் தோனி என்ற பெயரும் "எம்" என்ற எழுத்தில் தான் துவங்குகிறது. இம்முறை பங்கேற்றுள்ள கேப்டன்களில் இவரது பெயர் மட்டுமே "எம்" என்ற எழுத்தில் துவங்குவது சிறப்பம்சம்.

நன்றி-தமிழ்வின்.

  • கருத்துக்கள உறவுகள்

eelam_flag_01.jpg

Edited by nedukkalapoovan

இலங்கைதான் வெல்லும் வெல்ல வேண்டும்.சிங்களவன் துள்ளுவான் குதிப்பான்.உலகத்திற்கே துரோகம் செய்யும் அமெரிக்கா பல விளையாட்டுகளில் வெல்ல கறுப்பர்கள் எல்லாம் துள்ளிக்குதிப்பார்கள்.ஸ்பை லீ கூட முதல் வரிசையில் இருந்து பாஸ்கெட்போல் பார்ப்பார்.

பிரச்சனை இருக்கு அதை நாங்கள் எமது விவேகத்தால் தீர்ப்போம்.எதிரி எமக்கு இந்தியனோ,சிங்களவனோ இல்லை அரசியல் தான் அதை உணர்ந்து விளையாட்டை ரசிப்போம்.

இலங்கைதான் வெல்லும் வெல்ல வேண்டும்.சிங்களவன் துள்ளுவான் குதிப்பான்.உலகத்திற்கே துரோகம் செய்யும் அமெரிக்கா பல விளையாட்டுகளில் வெல்ல கறுப்பர்கள் எல்லாம் துள்ளிக்குதிப்பார்கள்.ஸ்பை லீ கூட முதல் வரிசையில் இருந்து பாஸ்கெட்போல் பார்ப்பார்.

பிரச்சனை இருக்கு அதை நாங்கள் எமது விவேகத்தால் தீர்ப்போம்.எதிரி எமக்கு இந்தியனோ,சிங்களவனோ இல்லை அரசியல் தான் அதை உணர்ந்து விளையாட்டை ரசிப்போம்.

http://www.youtube.com/watch?v=jqczX_Aa8bc

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாட்டு :):D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2_30_30_30.jpg

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்ச நேரத்தில் விளையாட்டு ஆம்பம் ஆக்கப் போக்குது :):D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கட் என்பது ஒரு விளையாட்டு. இதனை விளையாட்டாக தான் பார்க்க வேண்டும்.

சஜித் அப்பிரிட்டி

  • கருத்துக்கள உறவுகள்

இரு அணி வீரர்களும் கோப்பையுடன்

130871.jpg

130870.jpg

வந்த புதுசுல எத்தினை கோப்பைகளை பாத்தனாங்கள்.எங்களுக்கு பிலிம் காட்டுறாங்கள் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா மட்டையடியை தெரிவு செய்து இருக்கு...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்த்து ரொஸ் போடேக்க..

இரண்டாம் தரம் போட வேண்டி வந்தது...முதல் ம்ஸ் டோனி ரொஸ் வின் பன்னினது என்று சொன்னார் அப்பியர்...பிறக்கு சங்கக்காரா டோனி முனு முனுக்க ரொஸ் திருப்பி போட்டவை,,அதில் சிறிலங்கன் ரொஸ் வின் பன்னினது..!! :):D

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பையா.என்ன ஒரு இணைப்பும் வேலை செய்யுது இல்லை.எதாவது ஒன்டை தாங்கோ.நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பையா.என்ன ஒரு இணைப்பும் வேலை செய்யுது இல்லை.எதாவது ஒன்டை தாங்கோ.நன்றி.

http://cjsportss.blogspot.com/index.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது நிக்காமை வேலை செய்யிது

http://www.crictime.com/server5.htm

  • கருத்துக்கள உறவுகள்

ஆமை வேகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒம்

  • கருத்துக்கள உறவுகள்

17-1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20 பந்துக்கு இரண்டு ஓட்டம் உப்பில் தரங்கா..

வெளிய :D

என்ன 1 விக்கெட் போட்டுது.

இந்தியா நல்ல ஆரம்பம் பந்து வீச்சில்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.