Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏழில் செவ்வாய்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நம்பிக்கையே கடைந்தெடுத்த தவறு.. செவ்வாய் என்பது ஒரு கோள் (கிரகம்).....அதுக்கு கோபம், ஆத்திரம், கவர்ச்சி, இந்தக் கோள்ளைப் பார்த்தால் அதுக்கு ஆகாது, சூரியன் நேராப் பார்த்தால் முகத்தினை மூடிக்கொண்டு போகும் போன்ற எண்ணங்களெல்லாம் ஏற்பட அது மனமும், மூளையும் உணர்வும் கொண்ட ஒரு உயிரினம் அல்ல. இத்தகைய விடயங்களைச் சொல்லி பிரச்சாரங்கள் செய்பவர்கள் எல்லாரும், சாத்திர வியாபாரிகள்

உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இப்படிச் சொல்லி வெருட்டி இருந்தால், அவர்களை தம் மனசுக்கு ஏற்றமாதிரி காதலித்து கட்டச் சொல்லுங்கள்.

பேசாம ஒக்டோபஸ்ஸை கேட்டிட்டு செய்யுங்க..!

கொடுமைடா சாமி. இந்த விஞ்ஞானம் எப்படி தான் வளர்ந்தாலும்.. மூட நம்பிக்கைகளை மூளையில வளர்க்கிறதுக்கென்றே ஒரு கூட்டம் இருக்கும் போல.

புலம்பெயர் தமிழ் தேசிய தொலைக்காட்சிகளை பாருங்க.. மலையாள மாந்திரி.. கேரள மந்திரி.. யள் தான் எங்கட குடும்பப் பிரச்சனைகளுக்கே முடிவு சொலுறாங்களாமில்ல..! நாட்டுப் பிரச்சனையில இருந்து தமிழன்ர குடும்பப் பிரச்சனை வரை மலையாளி கையில தான் கிடக்கு. என்னத்தை சொல்லி எவன் கேட்கிறான்.

எல்லாம் விளம்பரம் வியாபாரம் என்றாகிப் போச்சு. நீங்க நல்லா அணைச்சுக்கட்டி ஏழு செவ்வாயை எட்டுச் செவ்வாயோட முடிச்சு வைச்சுப் பாருங்க ஏதேனும்.. பரிகார பலன் கிட்டும்.

மனிசன் செவ்வாய்க்குப் போய் குடித்தனம் நடத்தினாலும் இவங்க திருந்த மாட்டாங்க போல எல்லோ இருக்குது. :lol: :lol:

நிழலிக்கும், நெடுக்காலபோவானுக்கும் செவ்வாய் குற்றம் இருந்து........

செவ்வாய் குற்றம் இல்லாதவரை திருமணம் செய்ய முடிவு எடுப்பார்களா.......

ஊருக்கு உபதேசம் செய்வது சுலபம். அதனை நீங்களே.... செய்ய தயாராக இல்லை என்பதே உண்மை.

சாத்திரம் எல்லாம் முன்பு நடந்தவைகளுடன் ஒப்பிட்டு பார்த்து..... சொல்வது.

பணத்துக்காக ஆசைப்பட்டு சாத்திரம் சொல்லும்.... சாத்திரி மாரை நீங்கள் நம்பினால் நாம் என்ன செய்வது.

நாளைக்கு வீணாவின் திருமணத்தின் பின் ஏதாவது நடந்தால்...... அதற்கு பொறுப்பேற்க நீங்கள் இருவரும் தயாரா?

.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கும், நெடுக்காலபோவானுக்கும் செவ்வாய் குற்றம் இருந்து........

செவ்வாய் குற்றம் இல்லாதவரை திருமணம் செய்ய முடிவு எடுப்பார்களா.......

ஊருக்கு உபதேசம் செய்வது சுலபம். அதனை நீங்களே.... செய்ய தயாராக இல்லை என்பதே உண்மை.

சாத்திரம் எல்லாம் முன்பு நடந்தவைகளுடன் ஒப்பிட்டு பார்த்து..... சொல்வது.

பணத்துக்காக ஆசைப்பட்டு சாத்திரம் சொல்லும்.... சாத்திரி மாரை நீங்கள் நம்பினால் நாம் என்ன செய்வது.

நாளைக்கு வீணாவின் திருமணத்தின் பின் ஏதாவது நடந்தால்...... அதற்கு பொறுப்பேற்க நீங்கள் இருவரும் தயாரா?.

தமிழ் சிறி அண்ணா.. எனக்கு திருமணம் செய்யுற நிலை வந்திச்சு என்றால் நிச்சயமா குறிப்பு பார்க்காமல் தான் செய்வன். அதுக்கு ஒத்துவராதவங்கள எல்லாம் திருமணம் செய்ய சம்மதிக்கமாட்டன். ஆனால் குருதிப் பரிசோதனை.. பொதுவான உடற்பரிசோதனை.. எச் ஐ வி.. மற்றும் தொற்றுநோய்கள்.. பரம்பரை நோய்கள்.. உடற்குறைபாடுகள்.. பற்றி கேட்டு அறிஞ்சு கொள்ளுவன். அதேபோல் என்னுடைய மருத்துவப் பின்னணியையும் பகிர்ந்து கொள்ளுவன். அவ்வளவும் தான். :):lol:

இப்போ எல்லாம் குருதி வகைகள் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அதை கண்காணிக்கவும் அதற்கு நிவாரணங்கள் பெறவும் மருத்துவ உலகம் தயாராக இருக்கிறது.

உங்கள் குடும்பப் பின்னணிகள் பற்றிய சரியான மருத்துவ தகவல்களை பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பீர்களானால்.. நிச்சயம்.. குறிப்பு என்பது ஒரு பெரிய மூட நம்பிக்கை என்பதை கண்டறிந்து கொள்வீர்கள். :D

இன்றும் கூட எம்மவர் மத்தியில் genetic test செய்து கொள்ள பயமானவர்கள் இருக்கிறார்கள். இப்படியான நோயாளிகளை நான் சந்தித்திருக்கிறேன். :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நன்றி nunaavillan உங்கள் தகவலுக்கு....பயனுள்ளதாய் அமைந்தது... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் தோஷம் என்பது சரியான இரத்தவகை கொண்ட ஆணையும், பெண்ணையும் சேர்ப்பது தானே தவிர வேறொன்றும் இல்லை. மேலும் செவ்வாய் தோஷப்படாத ஜாதகர்கள் உத்வேகம் அற்றவர்களாக, துணிச்சல் குறைந்தவர்களாக போகும் வாய்ப்பும் உள்ளது.

இனி செவ்வாய் தோஷம் என்றால் பயமில்லைதானே

http://www.hi2web.com/forum/showthread.php?t=20290

நுணாவிலான் இது எத்தனை அளவுக்கு சரியான தகவல் என்று எனக்குத் தெரியாது. செவ்வாய் தோசத்திற்கும் இரத்த வகைகளுக்கும் இடையேயான தொடர்பு பற்றிய எந்த அறிவியல் விளக்கமோ கண்டுபிடிப்போ இல்லை. இது ஆராய்ச்சி ரீதியில் நிரூபிக்கப்படவும் இல்லை.

ஆனால் குருதி வகைகளில் Rh - உள்ள பெண் Rh + உள்ள ஆணைத் திருமணம் செய்து முதற் குழந்தை Rh + ஆக இருந்து மருத்துவ கவனிப்பின்றி குழந்தை பிறந்தால் மட்டுமே இரண்டாம் குழந்தை Rh + வோடு உருவானால் Rh - உள்ள தாய் அல்லது குழந்தை ஆபத்தை சந்திக்க நேரிடும்.

இப்போ எல்லாம் கர்ப்பம் தரித்த நிலையிலேயே தாயின் குழந்தையின் குருதி வகைகளை ஒப்பிட்டு பிள்ளை பேற்றின் போது Rh - தாயின் குருதியோடு Rh + குழந்தையின் குருதி கலக்க வாய்ப்பிருப்பின் அந்த தாய்க்கு குழந்தை பிறந்த உடன் ஒரு ஊசி மருந்தைக் கொடுப்பார்கள். இதன் மூலம் அடுத்த குழந்தை பிறப்பது எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாது.

இதுக்கேன் குறிப்பு. ஒரு இரத்தப் பரிசோதனை போதுமானது.

மேலும் குருதி வகைகள் தொடர்பான விஞ்ஞானத் தகவல் இங்கு.

http://en.wikipedia.org/wiki/Blood_type

இதற்கும் செவ்வாய் தோசத்திற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக விஞ்ஞான ரீதியில் உறுதி செய்யப்படவில்லை.

-------------------------

Rhesus factor problems

When you're pregnant, it's important to know whether your blood is Rhesus positive (Rh+) or Rhesus negative (Rh-). This will be checked from the blood sample that you give at your first antenatal appointment. If you're Rh-, it's important to know whether your partner is Rh- too. If he isn't, there's the possibility that your baby will have a blood group which is incompatible with yours, and this can cause problems.

Fortunately, Rhesus factor problems are almost entirely preventable. Women who are Rh- are routinely given an injection of a substance called Anti-D shortly after the baby is born (or after a miscarriage or termination). This destroys any Rh+ cells that may have got into the bloodstream so that they won't produce any more antibodies. In some areas, Anti-D is given to Rh- women during pregnancy, but this is not routinely done everywhere.

http://www.babyworld.co.uk/information/pregnancy/complications/complications_rhesus_factor_problems.asp

Edited by nedukkalapoovan

சாத்திரமும் ஒருவகை அரைகுறை விஞ்ஞானம் தான்.

ஆனால், தளம்பாத மன உறுதி உடையவர்கள் சாத்திரம் பார்த்து நடக்க வேண்டியதில்லை.

மண வாழ்க்கைக்கு புரிந்துணர்வுள்ள மனங்களே முதன்மையானது. இது இருந்தால் ஏழில் செவ்வாயும், எட்டில் வெள்ளியும் பார்க்க வேண்டியதில்லை.

நிழலிக்கும், நெடுக்காலபோவானுக்கும் செவ்வாய் குற்றம் இருந்து........

செவ்வாய் குற்றம் இல்லாதவரை திருமணம் செய்ய முடிவு எடுப்பார்களா.......

ஊருக்கு உபதேசம் செய்வது சுலபம். அதனை நீங்களே.... செய்ய தயாராக இல்லை என்பதே உண்மை.

சாத்திரம் எல்லாம் முன்பு நடந்தவைகளுடன் ஒப்பிட்டு பார்த்து..... சொல்வது.

பணத்துக்காக ஆசைப்பட்டு சாத்திரம் சொல்லும்.... சாத்திரி மாரை நீங்கள் நம்பினால் நாம் என்ன செய்வது.

நாளைக்கு வீணாவின் திருமணத்தின் பின் ஏதாவது நடந்தால்...... அதற்கு பொறுப்பேற்க நீங்கள் இருவரும் தயாரா?

.

ஊகங்களுக்கு பதில் சொல்ல முடியாது தமிழ் சிறி...எனக்கு செவ்வாய் தோசம் இருப்பதாக என் அம்மா சொல்லி நினைவில்லை. அப்படி இருந்திருந்தாலும் அது பற்றிக் கவலைப்பட்டிருக்க போவதில்லை

ஊருக்கு உபதேசம் செய்யவில்லை. என் இரு பிள்ளைகளுக்கும் சாதகம் எழுதவும் இல்லை, எந்த இக்கட்டிலும் சாத்திரம் பார்க்கப் போவதும் இல்லை. என் அம்மாவில் இருந்து மனைவியின் பெற்றோர் வரைக்கும் எவ்வளவோ பிள்ளை பிறந்த நேரம் அறியத் தரக் கேட்டும் கொடுக்கவில்லை'

சாத்திரம் எல்லாம் முன் நடந்தவையுடன் ஒப்பிட்டு முன்னோர்கள் சொல்வது என்பது மிகத் தவறு. அப்படி என்றால் பொருத்தம் பார்த்து கட்டிய தம்பதியில் துணையை இழந்தவர்கள் இருக்கக் கூடாது, அதே மாதிரி விவாகரத்தும் இருக்கக் கூடாது...ஈழத்தில் துணையை இழந்தவர்களின் எண்ணிக்கையே ஒரு இலட்சத்துக்கும் தாண்டும் போது பொருத்தம் பார்ப்பதும், பார்க்காமல் விட்டால் நடப்பதை பொறுப்பேற்க சொல்வதும் தவறு

Edited by நிழலி

நான் காதலித்து திருமணம் முடித்தாலும் எனது உறவினர்கள் பொருத்தம் பார்க்கவேணும் என்று நின்றார்கள் , தாலிப்பொருத்தம் இல்லாட்டி அம்மன் தாலி கட்ட வேணும் அதற்க்காக பார்க்கவேணும் என்று சொன்னார்கள் எனக்கு இதில் கொஞ்சமும் விருப்பம் இல்லாட்டியும் இந்த கல்யாணத்திற்க்காக எவ்வளவு கஸ்டப்பட்டு சம்மதம் வாங்கினான் இதற்க்காக ஏன் முரண்டு பிடிக்கவேணும் என்று சம்மதம் சொல்லிட்டன். பொருத்தம் பார்த்த சாத்திரி சொல்லிட்டான் இவர்கள் இருவரும் கல்யாணம் கட்டினால் பிள்ளையே பிறக்காது என்று, இந்த சாத்திரியில் நம்பிக்கை இல்லாம இன்னொரு சாத்திரியிட்ட கேட்க அவரும் இதையே தான் சொன்னார் . ஆனா நான் அவரைக்கட்டி 4 வருடத்தில் 2 பிள்ளைகள் இப்போ

  • கருத்துக்கள உறவுகள்

tuesday problem ?

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் காதலித்து திருமணம் முடித்தாலும் எனது உறவினர்கள் பொருத்தம் பார்க்கவேணும் என்று நின்றார்கள் , தாலிப்பொருத்தம் இல்லாட்டி அம்மன் தாலி கட்ட வேணும் அதற்க்காக பார்க்கவேணும் என்று சொன்னார்கள் எனக்கு இதில் கொஞ்சமும் விருப்பம் இல்லாட்டியும் இந்த கல்யாணத்திற்க்காக எவ்வளவு கஸ்டப்பட்டு சம்மதம் வாங்கினான் இதற்க்காக ஏன் முரண்டு பிடிக்கவேணும் என்று சம்மதம் சொல்லிட்டன். பொருத்தம் பார்த்த சாத்திரி சொல்லிட்டான் இவர்கள் இருவரும் கல்யாணம் கட்டினால் பிள்ளையே பிறக்காது என்று, இந்த சாத்திரியில் நம்பிக்கை இல்லாம இன்னொரு சாத்திரியிட்ட கேட்க அவரும் இதையே தான் சொன்னார் . ஆனா நான் அவரைக்கட்டி 4 வருடத்தில் 2 பிள்ளைகள் இப்போ

உங்கள் கணவர் செவ்வாயை விஞ்சிய செம்மனச் செம்மல்..! :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

இனி செவ்வாய் தோஷம் என்றால் பயமில்லைதானே

http://www.hi2web.com/forum/showthread.php?t=20290

மூடப்பழக்கத்திற்கு விஞ்ஞான விளக்கம் வேறு. சாதகம் பார்ப்பதைவிட இரத்தப் பரிசோதனை செய்து மணமுடிக்க அறிவுரை செய்யலாமே :lol:

செவ்வாய் கிரகமும் செவ்வாய் தோஷமும்

“செவ்வாய் கிரகமும் செவ்வாய் தோஷமும்” என்ற நூலை படித்தேன். பல ஜோதிட புளுகளுக்கு கேள்விகள் மற்றும் பதில்கள் அறிவியல் ஆதரங்களுடன் விளக்கங்களுடன் எழுதி உள்ளார் இந்த நூலின் ஆசிரியர் ஏற்காடு இளங்கோவன். அதனை தொகுத்து ஒரு பதிவுதான் இது.

மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது திருமணம் ஆகும். ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் திருமணத்தின் போது ஜாதக பொருத்தம் பார்கிறார்கள். செவ்வாய் தோஷம் உள்ள ஒரு ஜாதகத்திற்கு அதே தோசம் உள்ள ஒருவருடன் திருமணம் செய்ய வேண்டும். இல்லையேல் ஆபத்து. பெண்ணாக இருந்தால் கணவருக்கும் மாமியாருக்கும் ஆபத்து. மேலும் விவகாரத்து, பிரிவு மரணம் போன்ற பல நடக்கும், பிறக்கும் குழந்தைக்கு ஆபத்து எனவும் சொல்லுகிறார்கள். இதனை நம்பவும் ஒரு கூட்டம்.

கிலோ கணக்கில் தங்கமும், டன் கணக்கில் சீர்களும் செய்யத் தயாரானால் அதே செவ்வாய் தோஷம் கொண்ட பெண்ணை திருமணம் செய்துகொண்டு போவது எப்படி? நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, பார்பனர்கள் வேதம் ஓத நடந்த கண்ணகி கோவலன் வாழ்வில் சோக முடிவுகள் ஏற்படவில்லையா? நடந்த எல்ல விவகாரதுகளும் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதக காரர்களுடயாத? விதவைகள் எல்லோருன் செவ்வாய் தோசம் உடையவர்களா? உடல் ஆரோக்கியம் குடும்ப சூழல் என பல காரணிகளால் பிரச்சனைகள் ஏற்படலாம். அதற்கும் செவ்வாய் தோஷம் என முடிச்சு போடுவது அறிவீனம் இல்லையா?

அதாவது ஜாதகத்தில் லக்கனம், ஜென்மராசி மற்றும் சந்திரன் இருக்கும் இடம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் உள்ள சாதகம் ஆகும். உதாரணமாக மேஷ லக்கன ஜாதககாரருக்கு ரிசபம்,கடகம்,துலாம்,விருச்சிகம்,மீனம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருப்பின் அவர் செவ்வாய் தோஷம் உடையவராவர்.

இப்படி பார்க்கும்போது 12 ராசிகளில் 6 ராசிகள் செவ்வாய் தோஷம் உடையதாகி விடுகிறது. அப்படி என்றால் பிறப்பதில் பாதிப் பேர் (50 சதவீதம்) தோஷம் உடையவர் ஆகிவிடுகிறார்கள். இப்படி பாதிப் பேர் தோஷம் உடையவர் என சொல்லிவிட்டால் ஜோதிடத்தின் மீது உள்ள நம்பிக்கை போய்விடும் அல்லவா? ஆகவே இதில் விதிவிலக்குகள் கொடுக்கிறார்கள். சனி,ராகு,கேது,குரு,சூரியன் செவ்வாயுடன் இருந்தால் அந்த ஜாதகம் செவ்வாய் இல்லாதது என்பர். மேலும் சிம்மம்,கடகம் ஆகிய வீடுகள் தொசமற்றதாகி விடுகின்றன. இது போல் இன்னும் பல பரிகாரங்கள் உள்ளன. அனால் இதையும் மீறி செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பிறக்கீரார்கள்.

எப்படி பார்த்தாலும் தினமும் இரண்டு மணி நேரத்தில் பிறக்கிற குழந்தைகள் செவ்வாய் தோஷம் உடயவர்கலகா பிறக்கின்றனர். எப்படி என்றால் சூரியன் ஒவ்வொரு ராசியிலும் இரண்டுமணி நேரம் இருப்பார். அவர் 12 ராசியை கடக்க 24 மணி நேரம் ஆகிறது. ஆக பல நிவர்த்திகள் கிடைத்தாலும் குறைந்தது இரண்டு மணிநேரத்தில் செவ்வாய் தோசம் உடைய குழந்தைகள் பிறப்பார்.

2007 ம் ஆண்டு இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 30 குழந்தைகள் பிறந்தன. ஒரு மணிக்கு 1815 குழந்தைகளும், ஒரு நாளைக்கு 43560 குழந்தைகளும் பிறந்தன. இதில் குறைந்தது தினமும் 3630 குழந்தைகள் தோசமுடைய குழந்தைகளாகும். ஆனால் உண்மையில் மிக அதிகமானவர்கள் செவ்வாய் தோசம் உடயவர்கலகின்றனர். இதனை பார்க்கும் போது செவ்வாய் தோஷம் இவர்கள் வாழ்கையை கேள்விக்கு உள்ளக்கி விடுகிறது. ஆனால் உண்மையில் செவ்வாய் தோஷம் பற்றி எல்ல ஜோதிட சாஸ்திரங்களும் வலியுறித்தி சொல்லப்படவில்லை என சோதிட ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஜோதிட புளுகுகள் இத்துடன் விட்டுவைக்கவில்லை R .H நெகடிவ் ரத்தத்துடன் இந்த தோசத்தை இன்னைத்து வலு சேர்க்க பார்கிறார்கள். புளுகு மூட்டைகள்.

இரத்த வகைகளில் R.H நெகடிவ் இரதம் உடையவருக்கு அதே இரத்த வகையை சார்ந்தவருடன் தான் திருமணம் செய்ய வேண்டும்.அப்படி இல்லை என்றால் குழந்தை பிறக்காது .அல்லது பிறந்த குழந்தை இறந்து விடும் .ஆனால் தற்போது இதற்க்கு ஊசி மருந்து கண்டு பிடித்து விட்டார்கள்.இந்த பிரச்சனைக்கு முடிவு ஏற்பட துடன்கிவிட்டது.

ஆனால் ஜோதிடர்கள் ஜோதிடம் உண்மை எனக் கூறுவதற்காக R.H நெகடிவ் இரத்த வகிக்கும்,செவ்வாய் தோசத்திற்கும் தொடர்பு உள்ளது என கூறி வருகிறார்கள்.செவ்வாய் கிரகம் இரத்த நிறம் கொண்டது இதற்கும் இரத்தத்திற்கும் தொடர்பு உண்டு செவ்வாய் தோஷம் உடையவர்களுக்கு R.H நெகடிவ் இரத்த வகை உள்ளது என்கிறார்கள்.

ஆனால் அதற்க்கான ஆதாரம் எதுவும் கூறவில்லை .ஆனால் இதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தியாவில் சுமார் 3 முதல் 4 சதவிதம் பேர் R.H நெகடிவ் ரத்த வகை கொண்டவராக உள்ளனர்.செவ்வாய் தோஷம் உடையவர்களோ யார் யார் என ஜோதிடர்கள் கூறினார்களோ அவர்களின் ஜாதகத்தை பெற்று அவர்களுக்கு இரத்த வகையை பரிசோதித்து பார்த்துள்ளனர்.இதில் 99 சதவீதத்திற்கு மேலானவர்களுக்கு RH இரத்த வகை இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பல்வேறு பிரச்சனைக்கு காரணம் சமுக பொருளாதார பிரச்சனைகள் தாம் என்பது நன்கு ஆலோசனை செய்பவர்களுக்குப் புலனாகும்.நோய்க்கு காரணம் கிருமிகள் தான் என்பதை ஏற்கனவே விஞ்ஞானிகள் நிருபித்துள்ளனர்.அதனால் தான் நோய் வந்தவுடன் மருத்துவரை நாடுகிறார்கள்.

வளர்ந்திருக்கும் அறிவியல் வளர்ச்சியை கொண்டு மனிதனின் பிரச்சனைகளை தீர்க்க முடியும். பிரச்சனைக்கான காரண காரியங்களை கண்டறிந்து அதனை தீர்ப்பதற்கு முயற்சிமேர்க்கொள்ள வேண்டும். எந்த செவ்வாய் கிரகத்தால் ஆபத்து, தோஷம் என்கிறோமோ அதே செவ்வாய் கிரகத்தில் மனிதன் தன் கால்களை விரைவில் பதிக்கப்போகிறான். அங்கெ தங்கி ஆய்வு செய்ய ஆய்வகமும் கட்டப்போகிறான். இந்த மூட நம்பிக்கையில் இருந்து விடுதலை பெற்று பகுத்தறிவோடு சிந்தித்து ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்போம்

http://tamilnirubar.org/?p=9437

உங்கள் கணவர் செவ்வாயை விஞ்சிய செம்மனச் செம்மல்..! :lol::D

:D:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் தோசம் என்பது எல்லாம் உண்மை என்டது என் கருத்து...கல்யாணம் கட்டிப் பிரிவதற்கு முதலே எல்லாவற்றையும் பார்த்து செய்தால் பிரிவதற்கு சந்தர்ப்பம் இல்லை...இது உங்கள் வாழ்க்கை நீங்கள் தீர்மானியுங்கள் வீணா :lol:

செவ்வாய் தோசம் என்பது எல்லாம் உண்மை என்டது என் கருத்து...கல்யாணம் கட்டிப் பிரிவதற்கு முதலே எல்லாவற்றையும் பார்த்து செய்தால் பிரிவதற்கு சந்தர்ப்பம் இல்லை...இது உங்கள் வாழ்க்கை நீங்கள் தீர்மானியுங்கள் வீணா :lol:

செவ்வாய் தோசமா? அப்படினா என்ன?

இப்பவுமா இதை நம்புறானுங்க??

காதலிச்சு கல்யாணம் பண்ணுங்க எதுவும் தேவையில்லை(இது என் கருத்து மட்டுமே)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி வீனாவுக்கு அண்ணன் எழுதிக்கொள்வது, நான் வயதில மூத்தவன் எல்லாத்தையும் பாத்தவன் என்ற முறையில்(இது பஞ்ச் டயலாக்) நான் ஒரு நாத்திகனாக இருந்த போதும் மற்றவர்களது நம்பிக்கைகளை மறுப்பவன் அல்ல, இது உங்கள் வாழ்கை, நீங்கள் உறுதியாக இல்லாத விடயத்தில் அம்மா அப்பாவின் சொற்படி கேட்பதுதான் உசிதம், ஆயிரம் பேர் அட்வைஸ் சொல்ல வருவினம், நடந்து முடிந்த பின்னர் யாரும் கிட்ட வரமாட்டினம், செய்தது பிழையோ பிழையோ என சிந்தித்து சிந்தித்தே உங்கள் வாழ்கை சிதைந்து விடும், வாழ்கைக்கு நிம்மதிதான் முக்கியம், எது உங்கள் மனதுக்கு நிம்மதியை தருகிறதோ அந்த வழியை நீங்கள் தேர்தெடுங்கள், காதலிப்பவருக்கு இந்த சாத்திரங்கள் செல்லாது என படித்து இருக்கிறேன், காதலினால், சாத்திரம் அடிபட்டுபோகும், சாதிகள் அடிபட்டு போகும், சமுதாய ஏற்றதாழ்வு அடிபட்டு போகும், ஆகவே புவிவாழ் மக்களே காதல் செய்யுங்கள் காதல் செய்யுங்கள், காதல் போயின், என்ன செய்யிறது இன்னொன்று செய்யுங்கள் :lol:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீனா போனவங்களின் கதை கேட்டு தம்பி வீணா நீங்களும் வீனா போயிடாதீங்கோ :lol:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் தோசமா? அப்படினா என்ன?

இப்பவுமா இதை நம்புறானுங்க??

காதலிச்சு கல்யாணம் பண்ணுங்க எதுவும் தேவையில்லை(இது என் கருத்து மட்டுமே)

காதலிக்கிறவங்களுக்கு செவ்வாய் தோசம் இல்லை என்கிறீர்கள்...அதுவும் சரிதான். :D

வீணா தங்கச்சி.. இதைப் பார்த்திட்டு நீங்க வீணா பயந்திடாதேங்க. இவர் கூட எங்களுக்கு ஒரு களேபர பூர்வீக கணக்கிருக்குது. அதுதான் தீர்த்துக்கிட்டு இருக்கம். :lol: :lol:

அடப்பாவி இப்படியும் இருக்காங்களா. வெளியில திறந்த புத்தகம் என்றிட்டு.. சாட்டோட சாட்டா தனிமடல் போடுறன் என்று சிக்னல் கொடுக்கிறது. ஏதோ நடக்கட்டும் நடக்கட்டும். ஆத்துக்காரிட்ட சிங்கன்ர குறிப்பை ஒருக்கா வடிவா பார்க்கச் சொல்லனும் போல இருக்குது..! :lol: :lol:

(எங்களுக்கு தனிமடல் போட்டு பழக்கமில்லை ஆக்கும். ஆனா தனிமடல் வந்தா ஒரு மனிதாபிமான அடிப்படையில் ஐநா விதிகளுக்கு அமைய.. பதில் போட்டிருக்கமாக்கும்..! ) :D :D

முதலில் யாழில் இருப்பவர்களுக்கு மனிதாபிமானம் என்டால் என்னவென்டு விளங்கப்படுத்தனும் போல இருக்கு. :D

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் சம்பந்தமாக ஒரு தெளிவான கொள்கை இல்லாமையே

இது போன்றவற்றிற்கான முழுக்காரணம்

எப்போ அதில் எமக்கு 100 வீத நம்பிக்கையோ

100 வீத அவநம்பிக்கையோ இருக்கவில்லையோ அது மற்ற எல்லாவற்றிற்றிலும் தொத்திக்கொள்கிறது என்பதுதான் என் கருத்து

நீங்கள் கடவுளை 100 வீதம் நம்புபவராக இருந்தால் இந்த சந்தேகமே தங்களுக்கு வந்திராது

அதே நேரம் 100 வீதம் கடவுள் நம்பிக்கையற்றவர்களும் இவற்றை கணக்கெடுப்பதில்லை.

ஆனால் இந்த இரண்டும் கெட்டான்களே உலகில் அதிகம்

அவர்களே அதுவும் இல்லாமல்....... இதுவும் இல்லாமல் .......குழம்பிப்போய்க்கிடக்கிறார்கள்

மற்றவர்களையும் குழப்புகிறார்கள்

நானும் அவ்வகையே...

இதைச்சொல்ல வெட்கம்எதற்கு....

ஆனால் நான் காதலித்து திருமணம் செய்தபடியால் சாதகத்தை பார்க்கவில்லை.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் யாழில் இருப்பவர்களுக்கு மனிதாபிமானம் என்டால் என்னவென்டு விளங்கப்படுத்தனும் போல இருக்கு. :lol:

அக்கா.. அன்னை தெரேசாவும் ஒரு மனிதாபிமானி.. ஜேசுவும் ஒரு மனிதாபிமானி. புத்தனும் ஒரு மனிதாபிமானி.. விவேகானந்தரும் ஒரு மனிதாபிமானி.

ஒரு கதை..

ஜேசு ஒரு கிராமத்துக்குப் போகும் போது ஒரு பெண்ணை ஒழுக்கம் குறைந்தவள் என்று அந்தக் கிராமமே கல்லாடி அடித்துக் கொண்டிருந்ததாம். அப்போது அதை தடுத்து நிறுத்தி ஜேசு சொன்னாராம்.. உங்களில் குற்றமில்லாதவர் மட்டும் இவளுக்கு கல்லால் அடிக்கும் தகுதி பெறுவர் என்று. எவருமே கல்லால் அடிக்க முன் வரவில்லையாம். அதன் பின்னர் ஜேசுவே அந்தப் பெண்ணுக்கு தன்னிடத்தில் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து பின்னர் வழி அனுப்பி வைத்தாராம்.

(இதை எங்கட சமூகம் எப்படிச் சொல்லும்.. அட பாவி ஜேசு.. அந்தப் பொண்ணுக்கு புகையடிச்சிட்டாண்டா.. சாமியார் என்று சொல்லி மயக்கிட்டாண்டா என்று தான் சொல்லும். ஏனெனில் எமது சமூகமும் அப்படி அதன் சிந்தனைகளும் அப்படி.. செயலும் அப்படி.. அது கொண்டுள்ள சாமியார்களும் அப்படி. நாயோடு பிறந்து வளர்ந்தது நாயாகவே மாறிடும்.)

இது ஜேசுவின் வாழ்வில் ஒரு சம்பவம். நான் இந்தக் கதையை சொல்லும் போது.. பெண்... ஒழுக்கம் குறைந்தவள்.. இப்படி எல்லாம் எண்ணிக் கொண்டு தான் கதை எழுதுகிறேன். ஆனால் ஜேசுவுக்கு அவள் பெண் என்ற நிலைக்கும் அப்பால் சக மனிதன்.. தன்னைப் போன்ற ஒரு உயிர் என்பதுதான் தென்பட்டிருக்கிறது. இதுதான் மனிதாபிமானம். அந்த உயிர் துன்பப்படுவதில் இருந்து அதை விடுவித்ததும் அவரே அதனை அதன் வழியில் போக உதவி செய்து அனுமதிக்கிறார். இதுதான் மனிதாபிமானம் என்று நான் கருதுகிறேன்.

இப்படியாக துன்பத்தில் இருப்பவங்கள் பலர். ஆனால் எமது சமூகத்தில் தான் பெண் அல்லது ஆண் என்ற சிந்தனையால் உதவிகளைக் கூட ஆணுதவி.. பெண்ணுதவி என்று தான் பிரித்து நோக்குகின்றனரே தவிர மனிதாபிமான உதவி என்று நினைக்க முன் வருவதில்லை.

அதேபோல் ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு உதவ முன்வந்தால்.. அல்லது மாறி உடனே அவனுக்கு அவளில் அல்லது அவளில் அவனுக்கு ஈடுபாடு என்று தான் எங்கட சமுதாயம் காட்டி வைச்சிருக்குது. இது தப்பு. இதுதான் எம்மவர்கள் மனிதாபிமானத்தை காட்டுவதற்கே தடையாக இருக்கிறது.

ஒரு பெண்ணை ஒரு ஆண் தொட்டு உதவி செய்தால் கூட அதனை அவளின் கற்ப்புக்கு கழங்கம் ஏற்படுத்தியதாக காட்டும் நிலையில் இருக்கும் ஒரு சமுதாயம்.. எப்படி மனிதம் என்றதை ஆண் பெண் பால் பிரிவினைகளுக்கு அப்பால் காணும் என்பது எனக்குப் புரியவில்லை.

ஆனால் என்னால் இதனை உணர முடிகிறது. மனிதாபிமானம் என்பது.. ஆண் பெண் முகம் உருவம் பார்க்காது. ஒரு உயிரின் துன்பத்தை உதவியின் தேவையை மட்டுமே பார்க்கும். அங்கு வக்கிரம் வன்மம் இருக்காது. நட்பு.. அன்பு இருக்கும்.

கோவிலுக்கு போவாங்க சாமி கும்பிடுறம் என்று.. அங்க போயிட்டு நீ எத்தனை பவுனுக்கு நகை போட்டா.. என்ன சாறி கட்டினா.. என்ன வேலை.. என்ன கார்.. என்ன சம்பளம்.. மகள் சுகமோ.. சாமத்தியப்பட்டிட்டோ இதுதான் விசாரிப்பாங்க. எவனுமே அவனுக்கு அருகில் நிற்பவனின் துன்பத்தை துயரத்தை காண்பதில்லை. கேட்டு அறிவதும் இல்லை. அதை விலக்க அவனுக்கு உதவுவதும் இல்லை. அதை கடவுள் பார்த்துப்பார் என்றுவிட்டு கழன்றுவிடுவார்கள்.

இதுதான்.. சாதாரண உங்களைப் போன்ற மனிதர்களுக்கும்.. அன்னை தெரேசா போன்ற.. ஜேசு போன்ற மனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு. நான் சாதாரணமானவர்களின் முன்னால் கொஞ்சம் என்றாலும் மனிதாபிமானம் உள்ளவனாக இருக்க விரும்புகிறேன். ஜேசு போல் மகானாக என்னால் வாழ முடியாது. பின்னர் என்னையும் சிலுவையில் அறைந்துதான் கொல்லும் இந்த மனித சமூகம்.

இப்ப விளங்கிச்சோ அக்கா. மனிதாபிமானம்.. என்பது என்னென்று. அதற்கு ஆண் பெண் பகுப்பு நிலை இல்லை அக்கா. அங்கு பொய் கூட ஒரு உயிரின் நன்மைக்காகவே இருக்கும் அக்கா. ஆனால் அந்த உயிர்கள் அதனை கண்டு வருந்தினால் அந்தப் பொய்களை தவிர்ப்பதும் உண்மைகளை சொல்வதும் தான் நன்மை. ஒரு வைத்தியர் ஒரு நோயாளியிடம் பொய் சொல்வது அவனை /அவளை குணப்படுத்தவே அன்றி நோயை மறைத்து அவனை அல்லது அவளை சாகடிக்கனும் என்பதற்காக அல்ல. அங்கு அந்தப் பொய் மனிதாபிமானம். அந்த உயிர் வலி நீங்கி வாழனும் என்று அந்தப் பொய் அமைகிறது. இப்ப புரியிதோ அக்கா. :D:lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

காதலிக்கிறவங்களுக்கு செவ்வாய் தோசம் இல்லை என்கிறீர்கள்...அதுவும் சரிதான். :lol:

முதலில் யாழில் இருப்பவர்களுக்கு மனிதாபிமானம் என்டால் என்னவென்டு விளங்கப்படுத்தனும் போல இருக்கு. :lol:

அக்கா அவர் எனக்கு தனி மடல் ஒன்றும் அனுப்பவில்லை..அவருக்கு முதலிலேயே சொல்லிட்டன்..நான் boy என்று..அவர் மேல சந்தேகபடாதீங்க.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா அவர் எனக்கு தனி மடல் ஒன்றும் அனுப்பவில்லை..அவருக்கு முதலிலேயே சொல்லிட்டன்..நான் boy என்று..அவர் மேல சந்தேகபடாதீங்க.. :lol:

boy என்று சொன்னதற்காக தனிமடல் அனுப்பவில்லை என்று நினைப்பது தவறு. நான் உங்களின் பால் தொடர்பாக நீங்கள் சொன்னதை கவனத்தில் எடுக்கவே இல்லை. காரணம் எனக்கு உங்களைப் பற்றிய உண்மை தெரியாது. நீங்கள் சொன்னதற்காக தம்பி என்றேன் அவ்வளவும் தான்.

மற்றும் படி தனிமடல் அனுப்ப வேண்டிய அல்லது தனிமடலுக்கு பதிலளிக்க வேண்டிய மனிதாபிமான தேவை இருக்கவில்லை என்பது தான் நிஜம். :lol::D

  • தொடங்கியவர்

செவ்வாய் தோசம் என்பது எல்லாம் உண்மை என்டது என் கருத்து...கல்யாணம் கட்டிப் பிரிவதற்கு முதலே எல்லாவற்றையும் பார்த்து செய்தால் பிரிவதற்கு சந்தர்ப்பம் இல்லை...இது உங்கள் வாழ்க்கை நீங்கள் தீர்மானியுங்கள் வீணா :lol:

அம்மா அப்பா கையில் பொறுப்பு ஒப்படைச்சாச்சு அவர்கள் ஒரு 3 வருஷம் தேடி பார்த்து விட்டு முடியாமல் மகனே நீயே தேடிக்கொள் என்று சொல்வார்கள் அதுவரைம் ஒதுங்கி இருப்பம்.. :lol:

  • தொடங்கியவர்

7 ல் செவ்வாய் எண்டாலும் அதிலும் பல விலக்குகள் உண்டு. நல்ல சோதிடரைப் பார்த்து கணிப்பது நல்லது.

நல்ல சோதிடரை எப்பிடி அக்கா கண்டுபிடிப்பது...அதுவே இப்போது பெரும் கஷ்டமாக இருக்கிறதே எங்கட சித்தன் அல்லது முனிவர் ஜி அல்லது நாரதரிடம் ஒருக்கால் காட்டுவோமா? . :lol: .

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்ன கவலை என்டால் வைத்தியருக்கு தான் முதலில் வைத்தியம் பார்க்க வேண்டும் என்ட கவலை தான் :lol:

அக்கா அவர் எனக்கு தனி மடல் ஒன்றும் அனுப்பவில்லை..அவருக்கு முதலிலேயே சொல்லிட்டன்..நான் boy என்று..அவர் மேல சந்தேகபடாதீங்க.. :lol:

தம்பி இப்ப ஆர் சொன்னது உங்களூக்கு தனிமடல் போட்டவர் என்டு...அப்படிப் போட்டாலும்[தம்பியோ,தங்கையோ] அதுக்கு என்ன :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்ன கவலை என்டால் வைத்தியருக்கு தான் முதலில் வைத்தியம் பார்க்க வேண்டும் என்ட கவலை தான் :lol:

வைத்தியர்கள் செய்வதை சொல்வதை எல்லாம் நோயாளிகள் புரிஞ்சுக்க முடியாதுக்கா. முடிஞ்சா அவங்களும் வைத்தியராயிடலாம் அக்கா. :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.