Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இத்தாலியில் கைதான தமிழர்கள் கோத்தாவினால் இரகசியப் ப்ணிக்காக அனுப்பப்பட்டவர்களாம்

Featured Replies

இத்தாலியில் வைத்து 9 தமிழர்களை இத்தாலியப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை அரசின் அனுசரணையுடன் ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்திருப்பதாகவும் எனினும் இந்தத் திட்டம் என்ன என்பது குறித்து தமக்கு இத்தாலியில் வைத்தே அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் அறிய வருகிறது.

தமிழ் மக்களின் அரசியல் நகர்வுகளை முறியடிப்பதற்கும் அதற்கேற்ற வகையில் இவர்கள் மூலமாக வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளைத் தாம் எப்படியாவது முறியடிப்போம் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவர்களின பெயர் விபரங்கள் வருமாறு.

அருமைநாதன் கிருஷ்ணஜெகன் (22) ‐ சாவகச்சேரி

பாக்குலகிருஷ்ணா கோபாலகிருஷ்ணன் (20) சாவகச்சேரி.

கஜிதா ரஞ்சிதநாதன் (23) யாழப்பாணம்.

சிவநேஸ்வரன் கோகிலதாஸ் (31) காரைநகர்.

தர்மகஜனி சிறிதரன் (26) யாழ்ப்பாணம்.

ஸ்டெலின்ராசா துஷ்யந்தன் (29) யாழ்ப்பாணம்.

தர்மகுலசிங்கம் துஷ்யந்தன் (24) மானிப்பாய்.

எட்வட் ஜெய்சன் (27) மன்னார்‐ பேசாலை.

நந்தகுமார் உதயபுத்திரன் (25) உடுவில்

இவர்களில் அருமைநாதன் கிருஷ்ணஜெகன், பாக்குல கிருஷ்ணா கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் புகைப்படங்களே இணைக்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களுக்கு: http://www.eelamweb.com

இத்தாலியில் 9 தமிழ் இளைஞர்கள் கைது – இரகசிய நடவடிக்கைக்காக இலங்கையின் பாதுகாப்பு அதிகாரியே தம்மை அனுப்பியதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவிப்பு – கொழும்பில் இருந்து GTN செய்தியாளர்‐ படம் இணைப்பு

07 May 10 02:32 pm (BST)

இரகசிய நடவடிக்கையொன்றுக்காக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் பிரதான அதிகாரியொருவரே தம்மை ஜரோப்பாவுக்கு அனுப்பியதாக, அகதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் இத்தாலிய காவற்துறையிரால் கைதுசெய்யப்பட்ட 9 தமிழர்கள் தெரிவித்துள்ளதாக ஜீ.ரீ.என்ற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இத்தாலிய காவற்துறையினர் இராஜதந்திர நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும் இந்த சம்பவமானது அரசாங்க அதிகாரத் தரப்பு போலிக் கடவூச்சீட்டு மூலம் கருணாவை இங்கிலாந்து அனுப்பிய சம்பவத்தை நினைவூட்டுவதாக இத்தாலியில் இருந்து ஜீ.ரீ.என்ற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குழுவின் தலைவரான அருமைநாதன் கிருஷ்ணஜெகன் சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்டவராவார். இந்த குழுவில் கஜிதா ரஞ்சிநாதன் என்ற யுவதியும் இடம்பெற்றுள்ள தாக கொழும்பில் இருந்து ஜீ.ரீ.என் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அவர்களின் படங்களை பார்க்க

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=24085&cat=1

  • அருமைநாதன் கிருஷ்ணஜெகன் (22) ‐ சாவகச்சேரி.
  • பாக்குலலகிருஷ்ணா கோபாலகிருஷ்ணன் (20) சாவகச்சேரி.

  • கஜிதா ரஞ்சிதநாதன் (23) யாழப்பாணம்.

  • சிவநேஸ்வரன் கோகிலதாஸ் (31) காரைநகர்.

  • தர்மருகஜனி சிறிதரன் (26) யாழ்ப்பபாணம்.

  • ஸ்டெலின்ராசா துஷ்யந்தன் (29) யாழ்ப்பாணம்.

  • தர்மகுலசிங்கம் துஷ்யந்தன் (24) மாணிப்பாய்.

  • எட்வட் யேசுஜெய்சன் (27) மன்னார்‐ பேசாலை.

  • நந்தகுமார் உதயபுத்திரன் (25) உடுவில்

விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த மக்கள் மத்தியில் இருந்த நிலையில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என கைதுசெய்யப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் இவர்கள் இருந்ததாகவும் இத்தாலியில் தம்மை சந்திக்கும் நபர் தாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தமக்கு அறிவிக்கவிருந்ததாகவும் கைதுசெய்யப்பட்டவர்கள் இத்தாலிய காவற்துறையினரிடம் தெரிவித்துள்ளதாக ஜீ.ரீ.என்ற்குத் தெரியவருகிறது.

அமைச்சர் ஒருவரின் சகாவே தம்மை கட்டுநாயக்க விமான நிலையம் வரை அழைத்துச் சென்றதாகவும் இவர்கள் கூறியுள்ளனர். இத்தாலியின் "பாலர்வோ" நகரில் உள்ள தொடரூந்து நிலையத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கொழும்பில் இருந்து ஜீ.ரீ.என் செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கைதுசெய்யப்பட்ட பின்னர், இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் கிருஷ்ணன் என்பவர் இவர்களை சந்தித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட நமக்காக நாம் நிதி திரட்டல் நடவடிக்கையின் கீழ் இத்தாலியில் நிதித் திரட்டும் பொறுப்பு கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் பிரதானியொருவரின் அனுமதியுடன், கைதுசெய்யப்பட்டவர்கள் இத்தாலிக்கு அனுப்பட்டதாக கூறப்படும் தகவல் கொழும்பில் ஊடக மட்டங்களில் பரவியுள்ள நிலையில் தாம் முற்றாக அதனை நிராகரிப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார் என கொழும்பில் இருந்து ஜீ.ரீ.என் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இராணுவத்தினரிடம் சரணடைந்த அனைவரும் புனர்வாழவளிக்கப்படுவதற்காக ஒப்படைக்கப்படுவதாகவும் அவர்களை இராணுவத்தினர் தமது பொறுப்பில் வைத்துகொள்வதில்லை எனவும் அவர் கூறியுள்ளதாகவும் கொழும்பில் இருந்து ஜீ.ரீ.என் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் இவ்வாறு விடுக்கப்பட்டவர்கள் இத்தாலிக்கு தப்பிச் சென்றிருக்கக்கூமோ என்பதை தான் அறியவில்லை எனவும் எவ்வாறாயினும் இந்த விடயம் குறித்து தேடிபார்த்து பின்னர் பதிலளிப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் சமரசிங்க மேலும் கூறியுள்ளதாகவும் எமது ஜீரீஎனின் புலநாய்வு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=24085&cat=1

Edited by தயா

தற்போது நடைபெறும் ஒரே ஒர்ரு உருப்படியான செயற்பாடு நாடு கடந்த அரசு ஒன்று தான் அதை குழப்ப சிங்களவன் அனைத்தும் செய்கிறான், உண்மையில் புலிகளை விட நாடுகடந்த அரசை எதிர்கொள்ளுவது சிங்களவனுக்கு கஷ்டம்'.

புலிகளை இலகுவாக இந்திய வடக்கத்தையர்களின் உதவியோடு பயங்கரவதிகளாக்கி விட்டார்கள்( நாங்களும் உளறிதள்ளினோம்)

தற்போது நடைபெறும் ஒரே ஒர்ரு உருப்படியான செயற்பாடு நாடு கடந்த அரசு ஒன்று தான் அதை குழப்ப சிங்களவன் அனைத்தும் செய்கிறான், உண்மையில் புலிகளை விட நாடுகடந்த அரசை எதிர்கொள்ளுவது சிங்களவனுக்கு கஷ்டம்'.

அதற்கு அவசியமே இல்லை. இன்னொரு கோஸ்டி அதைக் கைப்பற்றுவதற்காக வெற்றிகரமாக நாடுகடந்த அரசுக்குள் ஊடுருவியுள்ளதாக அறிக்கை விட்டதைப் படிக்கவில்லையா ?

ஆரம்பத்திலேயே அகப்பட்டதால ரகசியத்திட்டத்துக்கு ஆப்பா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரகசிய திட்டத்த காட்டி குடுத்திடாதீங்கோ! :D

ரகசிய திட்டத்த காட்டி குடுத்திடாதீங்கோ! :D

நீங்க அவர்களுக்கு அறிவுரை சொல்லலாம். எல்லா தகுதியும் உங்களிட்டை இருக்கு. :lol:

அதற்கு அவசியமே இல்லை. இன்னொரு கோஸ்டி அதைக் கைப்பற்றுவதற்காக வெற்றிகரமாக நாடுகடந்த அரசுக்குள் ஊடுருவியுள்ளதாக அறிக்கை விட்டதைப் படிக்கவில்லையா ?

என்னத்தை சொல்ல ஊர் திருவிழாவில் தொடங்கிஅ போட்டி ஒரு இனத்தின் விடுதலைவரை வந்துவிட்டது அதுவும் படித்த முன்னெறிய மேலைநாட்டிலும் தொட்ர்கின்றது என்பது வேதனையான விடையம்.

இத்தாலியில் 9 தமிழ் இளைஞர்கள் கைது – இரகசிய நடவடிக்கைக்காக இலங்கையின் பாதுகாப்பு அதிகாரியே தம்மை அனுப்பியதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவிப்பு – கொழும்பில் இருந்து GTN செய்தியாளர்‐ படம் இணைப்பு

இராணுவத்தினரிடம் சரணடைந்த அனைவரும் புனர்வாழவளிக்கப்படுவதற்காக ஒப்படைக்கப்படுவதாகவும் அவர்களை இராணுவத்தினர் தமது பொறுப்பில் வைத்துகொள்வதில்லை எனவும் அவர் கூறியுள்ளதாகவும் கொழும்பில் இருந்து ஜீ.ரீ.என் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் இவ்வாறு விடுக்கப்பட்டவர்கள் இத்தாலிக்கு தப்பிச் சென்றிருக்கக்கூமோ என்பதை தான் அறியவில்லை எனவும் எவ்வாறாயினும் இந்த விடயம் குறித்து தேடிபார்த்து பின்னர் பதிலளிப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் சமரசிங்க மேலும் கூறியுள்ளதாகவும் எமது ஜீரீஎனின் புலநாய்வு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது சர்வதேசத்தை தொடர்ச்சியாக ஏமாற்றும் சிங்களவனின் சுத்த பொய். இதற்கு துணை போவது இதைக் கண்டு கொள்ளலாமல் இருக்கும் சகல தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் தான்.

புனர்வாழ்வு முகாம்கள் முழுக்க முழுக்க சிங்கள பௌத்த இராணுவ பயங்கரவாதிகளால் தான் நடத்தப்படுகிறது. பெண்கள் முகாமிலும் சகல சர்வதேச நியமங்களுக்கு மாறாக பெருமளவு ஆண் சிங்கள பௌத்த இராணுவ பயங்கரவாதிகள் தான் உள்ளனர்.

"இராணுவத்தினரிடம் சரணடைந்த அனைவரும் புனர்வாழவளிக்கப்படுவதற்காக ஒப்படைக்கப்படுவதாகவும் அவர்களை இராணுவத்தினர் தமது பொறுப்பில் வைத்துகொள்வதில்லை" என்பது சர்வதேசத்தை கவரும் அப்பட்டமான பொய். சகல புனர்வாழ்வு முகாம்களுக்கும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், ஏனைய ஐ. நா. பிரதிநிதிகள் அடிக்கடி தாம் விரும்பிய நேரத்தில் சென்று வந்தால் இந்த உண்மை தெரியும்.

இப்பிடியே சொல்லி சொல்லித் தான் சிங்கள பயங்கரவாத அரசு மேற்குலகை ஏமாற்றுகிறது. மேற்குலகமும் ஏமாறுகிறது. இந்த பொய்களை தகர்க்க வேண்டியது நா. க. த. ஈ. அ. உறுப்பினர்களின் தலையாய பணிகளில் ஒன்று.

வெறுமனே தேர்தலை வைத்து, இத்தனை வீதத்தால் வென்றோம், பேச்சுவார்த்தை என்ற போக்கில் இறுமாப்பு அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டிருந்தால், சிங்கள பயங்கரவாத அரசு தமிழ் மக்களை அழித்துவிடும்.

கடந்தகால தவறுகளில் மிக பெரியது தமிழ் மக்கள் பிரச்சனைகளை சர்வதேச மட்டத்தில் ஆதாரங்களுடன் கொண்டு செல்லாததும், சிங்கள பயங்கரவாத அரசின் படுகொலைகளை, போலித்தனங்களை, பொய்களை, .... ஆதாரங்களுடன் தொடர்ந்தும் தகர்க்காதது ஆகும். இதற்காக ஒரு குழு பாதுகாப்பான வெளிநாடொன்றில் இயங்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை சொல்ல ஊர் திருவிழாவில் தொடங்கிஅ போட்டி ஒரு இனத்தின் விடுதலைவரை வந்துவிட்டது அதுவும் படித்த முன்னெறிய மேலைநாட்டிலும் தொட்ர்கின்றது என்பது வேதனையான விடையம்.

இதை தான் தமிழில் சொல்லுவார்கள் "நாயை நடுக்கடலில் விட்டாலும் நக்கு தண்ணி தான் என்று".

என்னத்தை சொல்ல ஊர் திருவிழாவில் தொடங்கிஅ போட்டி ஒரு இனத்தின் விடுதலைவரை வந்துவிட்டது அதுவும் படித்த முன்னெறிய மேலைநாட்டிலும் தொட்ர்கின்றது என்பது வேதனையான விடையம்.

படித்து முன்னேறிய மேலைநாட்டில் இருக்கும் நம்மவர்களில் பெரும்பாலானவர்கள் A/L கூட பாஸ் பண்ணாதவர்கள் தான். அவர்கள் குறுக்கு வழியில் எதையும் செய்து பழகி விட்டவர்கள். அதைத் தான் நாயைக் குளிப்பாடி நடு வீட்டில் வைத்தாலும் நாய், நாய் தான். இதை நான் வேதனையுடன் தான் கூறுகிறேன்.

அண்ணோய் அமெரிக்காவில் பங்குசந்தை வியாபரத்தில பிடிபட்ட ராஜரட்ணமும் பாஸ் பண்ணாமலே அவ்வளவுகாசை சம்பாதிச்சவர் :)

இது சர்வதேசத்தை தொடர்ச்சியாக ஏமாற்றும் சிங்களவனின் சுத்த பொய். இதற்கு துணை போவது இதைக் கண்டு கொள்ளலாமல் இருக்கும் சகல தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் தான்.

புனர்வாழ்வு முகாம்கள் முழுக்க முழுக்க சிங்கள பௌத்த இராணுவ பயங்கரவாதிகளால் தான் நடத்தப்படுகிறது. பெண்கள் முகாமிலும் சகல சர்வதேச நியமங்களுக்கு மாறாக பெருமளவு ஆண் சிங்கள பௌத்த இராணுவ பயங்கரவாதிகள் தான் உள்ளனர்.

"இராணுவத்தினரிடம் சரணடைந்த அனைவரும் புனர்வாழவளிக்கப்படுவதற்காக ஒப்படைக்கப்படுவதாகவும் அவர்களை இராணுவத்தினர் தமது பொறுப்பில் வைத்துகொள்வதில்லை" என்பது சர்வதேசத்தை கவரும் அப்பட்டமான பொய். சகல புனர்வாழ்வு முகாம்களுக்கும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், ஏனைய ஐ. நா. பிரதிநிதிகள் அடிக்கடி தாம் விரும்பிய நேரத்தில் சென்று வந்தால் இந்த உண்மை தெரியும்.

இப்பிடியே சொல்லி சொல்லித் தான் சிங்கள பயங்கரவாத அரசு மேற்குலகை ஏமாற்றுகிறது. மேற்குலகமும் ஏமாறுகிறது. இந்த பொய்களை தகர்க்க வேண்டியது நா. க. த. ஈ. அ. உறுப்பினர்களின் தலையாய பணிகளில் ஒன்று.

வெறுமனே தேர்தலை வைத்து, இத்தனை வீதத்தால் வென்றோம், பேச்சுவார்த்தை என்ற போக்கில் இறுமாப்பு அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டிருந்தால், சிங்கள பயங்கரவாத அரசு தமிழ் மக்களை அழித்துவிடும்.

கடந்தகால தவறுகளில் மிக பெரியது தமிழ் மக்கள் பிரச்சனைகளை சர்வதேச மட்டத்தில் ஆதாரங்களுடன் கொண்டு செல்லாததும், சிங்கள பயங்கரவாத அரசின் படுகொலைகளை, போலித்தனங்களை, பொய்களை, .... ஆதாரங்களுடன் தொடர்ந்தும் தகர்க்காதது ஆகும். இதற்காக ஒரு குழு பாதுகாப்பான வெளிநாடொன்றில் இயங்கவேண்டும்.

மிக அவசியமான கருத்து. நன்றி ஆசான்.

அண்ணோய் அமெரிக்காவில் பங்குசந்தை வியாபரத்தில பிடிபட்ட ராஜரட்ணமும் பாஸ் பண்ணாமலே அவ்வளவுகாசை சம்பாதிச்சவர் :)

ஏன் விபச்சாரியாக இருந்து, ஏமாந்த ராஜிவை கைக்குள் போட்டு, இன்று இந்தியாவை ஆளும் சோனியா மட்டும் என்ன கொக்கா?

ஏன் விபச்சாரியாக இருந்து, ஏமாந்த ராஜிவை கைக்குள் போட்டு, இன்று இந்தியாவை ஆளும் சோனியா மட்டும் என்ன கொக்கா?

படித்து முன்னேறிய மேலைநாட்டில் இருக்கும்நம்மவர்களில் பெரும்பாலானவர்கள் A/L கூட பாஸ் பண்ணாதவர்கள் தான்]

Edited by Jil

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலியில் கைதான தமிழர்கள் கோத்தாவினால் இரகசியப் ப்ணிக்காக அனுப்பப்பட்டவர்களாம்.

இத்கலியில் கைதான் தமிழ் இளைஞர்கள் தாம் கோத்தாவினால் இரகசியப் பாதுகாப்புப்பணிக்காக அனுப்பப்பட்டவர்கள் எனக் கூறியுள்ளனர். முன்னால்ப் போராளிகளான இவர்களை கோத்தாவும் அவனது ஏவல்களும் புலத்தில் இருக்கும் தமிழர்களுக்கு எதிராகச் செயற்படும் பொருட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

A Tamil group arrested in Italy say they were sent to Europe on a SL Defense Chief’s mission

(Lanka-e-News, May 7, 2010, 5.55 PM 2nd Edition 08.May. 2.45AM) A group of 9 Tamils who were arrested in Italy by the police of that country on suspicions of refugee status seekers have disclosed that they were there to fulfill a mission of a SL defense chief, reports say.

Because of this disclosure a Diplomatic crisis had been sparked. Italian police sources say that this is reminiscent of how Karuna Amman was sent to Britain illicitly with the backing of Govt. high officials.

The leader of this group is Arumainathan Krishnajegan, a 22 year old youth whose birth place is Chaavakacheri. Kajitha Ranjinathan, another youth is also in the group. Given below are the names of those who were arrested.

Arumainathan Krisnajegan (22) - Chavakacheri

Gopala Krishnan Pakula Krishnan (20) - Chavakacheri

Kajitha Ranjinathan (23) - Jaffna

Sivanesharan Kokiladas (31) – Kareinagar

Damarugajani Siridaran (26) - Jaffna

Stalinrasa Dhushyanthan (29) - Jaffna

Dharmagunasigham Dhsuhyanthan (24)- Manipay

Edward Jesujeysan (27) - Pesalai

Nandakumar Udyaputhiran (25) - Uduvil

This group during the final phase of the war had crossed over to the civilian population area from among the LTTE. They were among the many thousands who were taken into custody by the Army as suspected LTTE cadres. This group had told the Italian police that they were to be given instructions as to what they should do by an individual whom they were to meet in Italy.

They have stated that they were brought to Katunayake Airport by a Minister‘s subordinate. They were arrested in Palarivo city railway station in Italy.

The ‘chief’ who came to meet them when they were arrested was an individual named Krishnan, a worker in the SL Embassy in Italy. This individual earlier was the leader of the campaign collecting monies in Italy for the ‘api wenuwen api’ program of the State defense Ministry of SL, reports say.

When we inquired from Major General Prasad Samarasinghe whether this group was dispatched with the knowledge of Defense Ministry bigwig , he totally denied the allegations as false.

All those who surrendered to the Army or those who were arrested were handed over to the rehabilitation camps . None of them was kept in the custody of the Army . After rehabilitation they were released. Whether they went to Italy after being released by illicit routes is a matter beyond his knowledge , the Major General stated.. The latter added that he would be able to give more information after he has inquired into this fully.

காசுபறித்து, பிரச்சனைகளை உண்டுபண்ணி, தமிழனுக்கு எதிரான சர்வதேச அபிப்பிராயங்களை உண்டாக்க அனுப்பப்பட்ட அணி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.