Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பப்பாகாயும் MB5 வும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mb5.jpg

மச்சான் சுமதி வீட்டு வாசலில நிக்கிறாடா.. என்ற தகவலோடு MB5 மோட்டார் சைக்கிளில் பறந்து வந்திருந்தான் ரங்கன். பதிலுக்கு.. பொறுடா மச்சான்.. இப்பவே வெளிக்கிட்டு வாறன்டா.. கொஞ்சம் வெயிட் பண்ணு என்று அறைக்குள் நம்பர் 11 ஐ கொழுவிக் கொண்டே சவுண்டு விட்டான் சங்கர்.

1986 களில் கோடை வெப்பத்தை தாங்க முடியாத யாழ் நகரத்து குடிமக்கள் மாலை நேரங்களில் வீட்டு முற்றத்துக்கு தண்ணீர் தெளித்துவிட்டு வீட்டுக்கு முன் கேற்றடியில் காத்து வாங்கிறம் என்று சொல்லி கூடி நிற்பது வழமை.

அதேபோல் அன்றும் சுமதி வீட்டின் முன்னும் பெண்கள் கூடி இருந்தனர். சுமதி வீட்டில் கண்டிப்பான தகப்பன், தாய் மற்றும் 3 இளம் பெண் பிள்ளைகள், அவர்களின் நண்பிகள் என்று எப்போதுமே இளம் பெண்களின் நடமாட்டம் அதிகம். சுமதிக்கு ஒரே ஒரு அண்ணன்.. அவனும் குடும்பக் கஸ்டம் காரணமாக முதலில் ஜேர்மனி என்று போய் அங்கிருந்து கனடாவுக்குள் அப்போதுதான் நுழைந்திருந்தான்.

அண்ணன் கனடா போன விடயத்தை நண்பிகளோடு பகிர்ந்து கொண்டு கலகலப்பாக தண்ணீர் தெளித்திருந்த முற்றத்தில் போட்டிருந்த கதிரைகள் ஒன்றில் அமர்ந்திருந்தாள் சுமதி. அப்போது யாழ் கோட்டைப் பக்கமிருந்து துப்பாக்கிகள் முழங்கத் தொடங்கின. இடை இடையே குண்டுச் சத்தங்களும் கேட்டன.

ஆமி வெளிக்கிட்டு வாறான் போல. சக்கை அடிக்கிறாங்கள்... செல்லடிக்கப் போறாங்களடி.. உள்ளுக்க வாங்கடி பிள்ளையள்.. என்று பதறி அடித்துக் கொண்டே குசுனிக்குள் ஏதோ வேலையில் இருந்த சுமதியின் அம்மா முற்றத்துக்கு ஓடி வந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிள்கள் உறுமும் சத்தம் கேட்டு சுமதி கேற்றுக்கு வெளியே வந்து எட்டிப் பார்த்தவள்.. கிட்டு போறாண்டி.. ஆமி வெளிக்கிட்டிட்டுட்டான் போல... என்று கத்தினாள்.

கிட்டண்ணன் போராளிகளோடு போய் சற்று நேரத்தில்.. சங்கரும் ரங்கனும்.. கட்டம் போட்ட சேட்டுப் போட்டுக் கொண்டு அதனை காற்றில் பறக்க விட்ட படி கிட்டண்ணன் போன திசையிலேயே MB5 வில் விரைந்து போய்க் கொண்டிருந்தார்கள். மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த சங்கர் சுமதி வீட்டை கடைக்கண்ணால் நோட்டமிட்டபடியே போனான்.

மச்சான் சுமதி நிக்கிறாடா. அப்பையா கடைச் சந்தி வரைக்கும் போட்டு MB யை திருப்படா மச்சான். அதுக்கு அங்கால போகாத.. கோட்டையில் இருந்து செல் இறங்கினாலும் இறக்குவாங்கள் என்றான் சங்கர்.. பயம் கலந்திருந்தாலும் காதல் செய்யும் துணிவில்.. புறப்பட்டு வந்திட்டமே என்ற எண்ணத்தில்.

மச்சான்.. நான் அதைப் பார்த்துக் கொள்ளுறன்.. எங்கையடா அந்தப் பப்பாகாய்.. என்றான் ரங்கன் பதிலுக்கு.

பின்னால செருகிட்டன் மச்சான். அப்படியே கிரனைட் செருகின போல சேட்டுக்க பொம்மிக் கொண்டு நிற்குது மச்சான்... என்றான் சங்கர்.

அப்படியே மெயின்ரென் பண்ணுடா. நான் உதில பெருமாள் கோவிலடி போய்.. அப்படியே கன்னாதிட்டி சந்திக்கால திருப்பி.. கஸ்தூரியார் வீதிக்கால போய்.. நாவலர் ரோட்டுக்கால வெட்டி.. பிறவுன் வீதிக்கு மறுபடி ஏறுறண்டா மச்சான் என்று தன் பயணப் பாதையை சங்கருக்கு சொல்லிக் கொண்டிருந்தான் ரங்கன்... சங்கரின் அவசரத்தைப் புரிந்து கொண்டவனாய்.

அப்படியே செய் மச்சான். அதுதான் சோட் கட். சுமதி வீட்டடிக்கு முன்னால போனதும் மெதுவா போடா. நான் அவளைப் பார்கனுண்டா.. பின்னால் இருந்து கெஞ்சிக் கொண்டிருந்தான் சங்கர்.

ரங்கன் சொன்னபடியே பிறவுன் வீதியை வந்தடைந்தான்.. சுமதியின் வீடு நெருங்கியதும்... மோட்டாள் சைக்கிளின் வேகத்தைக் குறைத்து சங்கருக்கு காதல் செய்ய வழிவிட்டான்.

அப்போ சுமதியும் MB5 சத்தம் கேட்டு புளூ அண்ணா வாறாண்டி என்று கத்திக் கொண்டே கேற்றுக்கு வெளியில் வந்து எட்டிப்பார்த்தாள். கூடவே அவளின் நண்பிகளும் ஓடி வந்தனர். சங்கர் பொதுவா புளூ கலர் சேட் போடுவதால் அவனுக்கு சுமதி வீட்டில் உள்ள பெண்கள் வைத்துள்ள பெயர் புளூ அண்ணா. ரங்கன் கறுப்பு என்பதால் அவனுக்கு அவர்கள் வைத்துள்ள பெயர் பிளக் அண்ணா.

புளூ அண்ணா.. சுமதி அம்மன் தரிசனம் கண்டு கொண்டே மிகுந்த சந்தோசத்தில் வைத்த கண் வாங்காமல் அவளைப் பார்த்துக் கொண்டு சுமதியின் வீட்டைத் தாண்டிப் போனார். போனவர் தான் போனார்.... சுமதி வீட்டைத் தாண்டி சற்றுத் தூரம் போனதும்... பின்னால் செருகி இருந்த பப்பாகாய் காம்பொடிந்து கீழே விழுந்து றோட்டில் உருண்டோடியது தெரியாமல் போய்க் கொண்டே இருந்தார்.. கற்பனையில் டூயட் பாடிக் கொண்டே.

ஆனால் புளூ அண்ணன் இடுப்பில் இருந்த பப்பாகாய் ஒடிந்து விழுந்து றோட்டில் உருண்டோடியதை.. சுமதி கண்டுவிட்டாள். உடனே அவள்.. நண்பிகளை நோக்கி.. அடியே இவன்... புளூ அண்ணா இயக்கம் இல்லையடி. சேட்டுக்க பப்பாக்காய் செருகி வைச்சிருக்காண்டி. அது றோட்டில விழுந்து உருண்டு ஓடிப் போய் கிடக்கு. போய் பாருங்கடி... என்றாள் நக்கல் கலந்த தொனியில்.

இதனை அறியாமல்.. புளூ அண்ணா ரஜனி காந்த் நினைப்பில்.. அடுத்த ரவுண்டு வாறதற்கு ரங்கனை கெஞ்சிக் கொண்டிருந்தார்.

மச்சான் இன்னொருக்கா போவம்டா.....

போறன்.. எனக்கு இப்ப கோலா வேண்டித்தா என்றான் ரங்கன் கூலிக்கு.

இதில வெட்டி.. இப்படியே பிறவுன் றோட்டால போய் நாவலர் சந்திக்குப் போ.. அதில உள்ள கடையில வேண்டித் தாரண்டா என்று கெஞ்சாத குறையாக கேட்டுக் கொண்டான் சங்கர்.

சரிடா பொறு.. என்றவன் மோட்டார் சைக்கிளை திருப்பினான். திருப்பி மீண்டும் சுமதி வீட்டடிக்கே வந்தான்.

வந்தவன்... மச்சான்.. அங்க பார் பப்பாகாய் ஒன்று றோட்டில கிடக்குது. எதுக்கும் உன்ர இடுப்பில பப்பாகாய் செருகி இருக்கோ என்று பார்.. என்றான் ரங்கன்.

பொறுடா.. என்று பின்னால் இடுப்பை தடவிய சங்கருக்கு ஏக்கமே மிஞ்சியது. இடுப்பில் செருகி இருந்த பப்பாகாய் காம்பொடிந்து கீழே விழுந்திருந்தது அப்போதே தெரிய வந்தது.

மச்சான் நான் செருகி இருந்த பப்பாகாய் தாண்டா அது. சுமதி கண்டிருப்பாளோடா.. என்றான் ஏக்கம் கவலை தோய...

இருக்காது மச்சான் என்ற படி மோட்டார் சைக்கிளை கொஞ்சம் வேகமாக ஓட்டி சுமதி வீட்டை கடந்து போனான் ரங்கன்.

அப்போது.. MB5 சத்தத்தைக் கேட்டுவிட்டு.. சுமதி வீட்டு முற்றத்தில் இருந்து கொண்டே அவளின் நண்பிகள் கேட்க.. வேண்டும் என்றே கத்தினாள்.. அடியே MB5 இல பப்பாகாய் போகுதடி.. என்று.

அதை சங்கரும் ரங்கனும் தெளிவாகவே கேட்டனர்.

புளூ அண்ணாவாக கீரோவாக வலம் வந்த சங்கர் பப்பாகாயா வீழ்ந்து போனதை எண்ணி கவலையோடு நாவலர் சந்தியில் கோலாவுக்கு மனிப் பேர்சை திறந்த போதுதான் ஞானம் பிறந்தது.

மச்சான் எனி அந்தப் பக்கம் போகாத. அடுத்த கிழமை நான் கனடா புறப்படப் போறண்டா. ஏன் அதுக்குள்ள மானத்தை இழப்பான்.. என்று அழாத குறையாக ரங்கனைப் பார்த்து கேட்டுக் கொண்டான்.

ரேக் இற் ஈசி மச்சான் என்று சமாதானம் சொல்லி அவனை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட.. கோலா குடிக்க என்று நிற்பாட்டி இருந்த MB5 ஐ மீண்டும் ஸ்ராட் செய்தான் ரங்கன்.

papaya1.jpg

(கற்பனை கலந்த நிஜம். நான் குட்டிப் பையனா இருந்த போது கண்ட உண்மைகள் கலந்தது... அப்போ விபரம் தெரியவில்லை. காட்சிகள் மனதில் பதிந்திருந்தன. இப்போ.. காட்சிகளுக்கு விபரம்... இக்கதையில் சம்பந்தப்பட்ட அனைவரும் இப்போ கனடாவில் இருக்கிறார்கள் என்றே நினைக்கின்றேன்..! :lol: கிட்டுமாமா மற்றும் போராளிகள் வீர்காவியம் ஆகிவிட்டனர். ! :D )

Edited by nedukkalapoovan

ஆகா..... பாகம் 3 ஒரு குட்டி போட்டு, அந்த குட்டியும் சுடச் சுட இன்னொரு குட்டி போட்டிட்டா.........

இது எங்க போய் முடியுமோ தெரியல்லையே? :wub:

இப்படியெல்லாம் நடந்திருக்கா...... :wub::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா..... பாகம் 3 ஒரு குட்டி போட்டு, அந்த குட்டியும் சுடச் சுட இன்னொரு குட்டி போட்டிட்டா.........

இது எங்க போய் முடியுமோ தெரியல்லையே? :o

அதுக்கும் இதுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை..! :wub:

இப்படியெல்லாம் நடந்திருக்கா...... :D:D

இதை விட அதிகம் நடந்துள்ளன. நாம் அவற்றை முழுமையயாக அறிய முடியாத வயசில இருந்திட்டம். :o:D

  • கருத்துக்கள உறவுகள்

mb5.jpg

மச்சான் சுமதி வீட்டு வாசலில நிக்கிறாடா.. என்ற தகவலோடு MB5 மோட்டார் சைக்கிளில் பறந்து வந்திருந்தான் ரங்கன். பதிலுக்கு.. பொறுடா மச்சான்.. இப்பவே வெளிக்கிட்டு வாறன்டா.. கொஞ்சம் வெயிட் பண்ணு என்று அறைக்குள் நம்பர் 11 ஐ கொழுவிக் கொண்டே சவுண்டு விட்டான் சங்கர்.

1986 களில் கோடை வெப்பத்தை தாங்க முடியாத யாழ் நகரத்து குடிமக்கள் மாலை நேரங்களில் வீட்டு முற்றத்துக்கு தண்ணீர் தெளித்துவிட்டு வீட்டுக்கு முன் கேற்றடியில் காத்து வாங்கிறம் என்று சொல்லி கூடி நிற்பது வழமை.

அதேபோல் அன்றும் சுமதி வீட்டின் முன்னும் பெண்கள் கூடி இருந்தனர். சுமதி வீட்டில் கண்டிப்பான தகப்பன், தாய் மற்றும் 3 இளம் பெண் பிள்ளைகள், அவர்களின் நண்பிகள் என்று எப்போதுமே இளம் பெண்களின் நடமாட்டம் அதிகம். சுமதிக்கு ஒரே ஒரு அண்ணன்.. அவனும் குடும்பக் கஸ்டம் காரணமாக முதலில் ஜேர்மனி என்று போய் அங்கிருந்து கனடாவுக்குள் அப்போதுதான் நுழைந்திருந்தான்.

அண்ணன் கனடா போன விடயத்தை நண்பிகளோடு பகிர்ந்து கொண்டு கலகலப்பாக தண்ணீர் தெளித்திருந்த முற்றத்தில் போட்டிருந்த கதிரைகளில் அமர்ந்திருந்தாள் சுமதி. அப்போது யாழ் கோட்டைப் பக்கமிருந்து துப்பாக்கிகள் முழங்கத் தொடங்கின. இடை இடையே குண்டுச் சத்தங்களும் கேட்டன.

ஆமி வெளிக்கிட்டு வாறான் போல. சக்கை அடிக்கிறாங்கள்... செல்லடிக்கப் போறாங்களடி.. உள்ளுக்க வாங்கடி பிள்ளையள்.. என்று பதறி அடித்துக் கொண்டே குசுனிக்குள் ஏதோ வேலையில் இருந்த சுமதியின் அம்மா முற்றத்துக்கு ஓடி வந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிள்கள் உறுமும் சத்தம் கேட்டு சுமதி கேற்றுக்கு வெளியே வந்து எட்டிப் பார்த்தவள்.. கிட்டு போறாண்டி.. ஆமி வெளிக்கிட்டிட்டுட்டான் போல... என்று கத்தினாள்.

கிட்டண்ணன் போராளிகளோடு போய் சற்று நேரத்தில்.. சங்கரும் ரங்கனும்.. கட்டம் போட்ட சேட்டுப் போட்டுக் கொண்டு அதனை காற்றில் பறக்க விட்ட படி கிட்டண்ணன் போன திசையிலேயே MB5 வில் விரைந்து போய்க் கொண்டிருந்தார்கள். மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த சங்கர் சுமதி வீட்டை கடைக்கண்ணால் நோட்டமிட்டபடியே போனான்.

மச்சான் சுமதி நிக்கிறாடா. அப்பையா கடைச் சந்தி வரைக்கும் போட்டு MB யை திருப்படா மச்சான். அதுக்கு அங்கால போகாத.. கோட்டையில் இருந்து செல் இறங்கினாலும் இறக்குவாங்கள் என்றான் சங்கர்.. பயம் கலந்திருந்தாலும் காதல் செய்யும் துணிவில்.. புறப்பட்டு வந்திட்டமே என்ற எண்ணத்தில்.

மச்சான்.. நான் அதைப் பார்த்துக் கொள்ளுறன்.. எங்கையடா அந்தப் பப்பாகாய்.. என்றான் ரங்கன் பதிலுக்கு.

பின்னால செருகிட்டன் மச்சான். அப்படியே கிரனைட் செருகின போல சேட்டுக்க பொம்மிக் கொண்டு நிற்குது மச்சான்... என்றான் சங்கர்.

அப்படியே மெயின்ரென் பண்ணுடா. நான் உதில பெருமாள் கோவிலடி போய்.. அப்படியே கன்னாதிட்டி சந்திக்கால திருப்பி.. கஸ்தூரியார் வீதிக்கால போய்.. நாவலர் ரோட்டுக்கால வெட்டி.. பிறவுன் வீதிக்கு மறுபடி ஏறுறண்டா மச்சான் என்று தன் பயணப் பாதையை சங்கருக்கு சொல்லிக் கொண்டிருந்தான் ரங்கன்... சங்கரின் அவசரத்தைப் புரிந்து கொண்டவனாய்.

அப்படியே செய் மச்சான். அதுதான் சோட் கட். சுமதி வீட்டடிக்கு முன்னால போனதும் மெதுவா போடா. நான் அவளைப் பார்கனுண்டா.. பின்னால் இருந்து கெஞ்சிக் கொண்டிருந்தான் சங்கர்.

ரங்கன் சொன்னபடியே பிறவுன் வீதியை வந்தடைந்தான்.. சுமதியின் வீடு நெருங்கியதும்... மோட்டாள் :wub: சைக்கிளின் வேகத்தைக் குறைத்து சங்கருக்கு காதல் செய்ய வழிவிட்டான்.

அப்போ சுமதியும் MB5 சத்தம் கேட்டு புளூ அண்ணா வாறாண்டி என்று கத்திக் கொண்டே கேற்றுக்கு வெளியில் வந்து எட்டிப்பார்த்தாள். கூடவே அவளின் நண்பிகளும் ஓடி வந்தனர். சங்கர் பொதுவா புளூ கலர் சேட் போடுவதால் அவனுக்கு சுமதி வீட்டில் உள்ள பெண்கள் வைத்துள்ள பெயர் புளூ அண்ணா. ரங்கன் கறுப்பு என்பதால் அவனுக்கு அவர்கள் வைத்துள்ள பெயர் பிளக் அண்ணா.

புளூ அண்ணா.. சுமதி அம்மன் தரிசனம் கண்டு கொண்டே மிகுந்த சந்தோசத்தில் வைத்த கண் வாங்காமல் அவளைப் பார்த்துக் கொண்டு சுமதியின் வீட்டைத் தாண்டிப் போனார். போனவர் தான் போனார்.... சுமதி வீட்டைத் தாண்டி சற்றுத் தூரம் போனதும்... பின்னால் செருகி இருந்த பப்பாகாய் காம்பொடிந்து கீழே விழுந்து றோட்டில் உருண்டோடியது தெரியாமல் போய்க் கொண்டே இருந்தார்.. கற்பனையில் டூயட் பாடிக் கொண்டே.

ஆனால் புளூ அண்ணன் இடுப்பில் இருந்த பப்பாகாய் ஒடிந்து விழுந்து றோட்டில் உருண்டோடியதை.. சுமதி கண்டுவிட்டாள். உடனே அவள்.. நண்பிகளை நோக்கி.. அடியே இவன்... புளூ அண்ணா இயக்கம் இல்லையடி. சேட்டுக்க பப்பாக்காய் செருகி வைச்சிருக்காண்டி. அது றோட்டில விழுந்து உருண்டு ஓடிப் போய் கிடக்கு. போய் பாருங்கடி... என்றாள் நக்கல் கலந்த தொனியில்.

இதனை அறியாமல்.. புளூ அண்ணா ரஜனி காந்த் நினைப்பில்.. அடுத்த ரவுண்டு வாறதற்கு ரங்கனை கெஞ்சிக் கொண்டிருந்தார்.

மச்சான் இன்னொருக்கா போவண்டா.....

போறன்.. எனக்கு இப்ப கோலா வேண்டித்தா என்றான் ரங்கன் கூலிக்கு.

இதில வெட்டி.. இப்படியே பிறவுன் றோட்டால போய் நாவலர் சந்திக்குப் போ.. அதில உள்ள கடையில வேண்டித் தாரண்டா என்று கெஞ்சாத குறையாகக் கேட்டான் சங்கர்.

சரிடா பொறு.. என்றவன் மோட்டார் சைக்கிளை திருப்பினான். திருப்பி மீண்டும் சுமதி வீட்டடிக்கே வந்தான்.

வந்தவன்... மச்சான்.. அங்க பார் பப்பாகாய் ஒன்று றோட்டில கிடக்குது. எதுக்கும் உன்ர இடுப்பில பப்பாகாய் செருகி இருக்கோ என்று பார்.. என்றான் ரங்கன்.

பொறுடா.. என்று பின்னால் இடுப்பை தடவிய சங்கருக்கு ஏக்கமே மிஞ்சியது. இடுப்பில் செருகி இருந்த பப்பாகாய் காம்பொடிந்து கீழே விழுந்திருந்தது அப்போதே தெரிய வந்தது.

மச்சான் நான் செருகி இருந்த பப்பாகாய் தாண்டா அது. சுமதி கண்டிருப்பாளோடா.. என்றான் ஏக்கம் கவலை தோய...

இருக்காது மச்சான் என்ற படி மோட்டார் சைக்கிளை கொஞ்சம் வேகமாக ஓட்டி சுமதி வீட்டை கடந்து போனான் ரங்கன்.

அப்போது.. MB5 சத்தத்தைக் கேட்டுவிட்டு.. சுமதி வீட்டுக்குள் இருந்து கொண்டே அவளின் நண்பிகள் கேட்க.. வேண்டும் என்றே கத்தினாள்.. அடியே MB5 இல பப்பாகாய் போகுதடி.. என்று.

அதை சங்கரும் ரங்கனும் தெளிவாகவே கேட்டனர்.

புளூ அண்ணாவாக கீரோவாக வலம் வந்த சங்கர் பப்பாகாயா வீழ்ந்து போனதை எண்ணி கவலையோடு நாவலர் சந்தியில் கோலாவுக்கு மனிப் பேர்சை திறந்த போதுதான் ஞானம் பிறந்தது.

மச்சான் எனி அந்தப் பக்கம் போகாத. அடுத்த கிழமை நான் கனடா புறப்படப் போறண்டா. ஏன் அதுக்குள்ள மானத்தை இழப்பான்.. என்று அழாத குறையாக ரங்கனைப் பார்த்து கேட்டுக் கொண்டான்.

ரேக் இற் ஈசி மச்சான் என்று சமாதானம் சொல்லி அவனை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட.. கோலா குடிக்க என்று நிற்பாட்டி இருந்த MB5 ஐ மீண்டும் ஸ்ராட் செய்தான் ரங்கன்.

papaya1.jpg

(கற்பனை கலந்த நிஜம். நான் குட்டிப் பையனா இருந்த போது கண்ட உண்மைகள் கலந்தது... அப்போ விபரம் தெரியவில்லை. காட்சிகள் மனதில் பதிந்திருந்தன. இப்போ.. காட்சிகளுக்கு விபரம்... இக்கதையில் சம்பந்தப்பட்ட அனைவரும் இப்போ கனடாவில் இருக்கிறார்கள் என்றே நினைக்கின்றேன்..! :D கிட்டுமாமா மற்றும் போராளிகள் வீர்காவியம் ஆகிவிட்டனர். ! :D )

உங்கள் சிறுகதைக்கு மிக்க நன்றி. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யாயினி. :wub:

---------------------------------------

அன்றைய யாழ் நகர இளைஞர்களுக்கு MB5 மீது அப்படி காதல் இருந்தது.

Edited by nedukkalapoovan

...

அப்போது.. MB5 சத்தத்தைக் கேட்டுவிட்டு.. சுமதி வீட்டு முற்றத்தில் இருந்து கொண்டே அவளின் நண்பிகள் கேட்க.. வேண்டும் என்றே கத்தினாள்.. அடியே MB5 இல பப்பாகாய் போகுதடி.. என்று.

...

(கற்பனை கலந்த நிஜம். நான் குட்டிப் பையனா இருந்த போது கண்ட உண்மைகள் கலந்தது... அப்போ விபரம் தெரியவில்லை. காட்சிகள் மனதில் பதிந்திருந்தன...

தலைப்பைப் பார்த்ததுமே நினைச்சேன் ஏதோ மண்ணைக் கவ்வுற கதையாகத் தான் இருக்கும் என்று.... :D நகைசுவை கலந்து கதை தந்த விதம் அழகு நெடுக்ஸ்...

ஒரு குட்டி சந்தேகம்... அப்போது நீங்கள் குட்டிப் பயனாக இருந்ததாகக் பின்குறிப்பில் கூறி இருக்கிறீர்கள், அப்ப அந்த பப்பாக்காயயை பறிச்சுக் குடுத்த ஆள் நீங்களா?? :wub:

Edited by குட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குட்டி சந்தேகம்... அப்போது நீங்கள் குட்டிப் பயனாக இருந்ததாகக் பின்குறிப்பில் கூறி இருக்கிறீர்கள், அப்ப அந்த பப்பாக்காயயை பறிச்சுக் குடுத்த ஆள் நீங்களா?? :wub:

நோ... அப்படி எல்லாம் கிடையாது. நான் அந்த அக்காமாரின் செல்லமாக்கும். எனக்கு விளையாட்டு காட்டிறதா.. அவை தான் என்னை.. அவையின்ர அப்பாட்ட இருந்து தப்ப.. யூஸ் பண்ணிக்கிறது. இதுக்கு மேல சொல்ல வெளிக்கிட்டன்.. இந்தக் கதையை வைச்சே நான் யாருன்னு சம்பந்தப்பட்டவர்கள்.. இலகுவாக கண்டுபிடிச்சிடலாம். ஆனால் எனக்கு அது விருப்பமில்லை..!

இறுதிவரை இனங்காணப்படாத ஒரு ஆளாகவே இருக்க விரும்புறன்..! :D :D

Edited by nedukkalapoovan

நோ... அப்படி எல்லாம் கிடையாது. நான் அந்த அக்காமாரின் செல்லமாக்கும். எனக்கு விளையாட்டு காட்டிறதா.. அவை தான் என்னை.. அவையின்ர அப்பாட்ட இருந்து தப்ப.. யூஸ் பண்ணிக்கிறது. இதுக்கு மேல சொல்ல வெளிக்கிட்டன்.. இந்தக் கதையை வைச்சே நான் யாருன்னு சம்பந்தப்பட்டவர்கள்.. இலகுவாக கண்டுபிடிச்சிடலாம். ஆனால் எனக்கு அது விருப்பமில்லை..!

இறுதிவரை இனங்காணப்படாத ஒரு ஆளாகவே இருக்க விரும்புறன்..! :wub::o

ஹிஹிஹி... இதுக்கு மேல கேட்டல் அழுதுடுவிங்கள் போல இருக்கு... :D சரி சரி நான் கேட்க இல்லை.. :o . உங்களை அழவைச்ச பாவம் ஏன் எனக்கு?? :D உங்கட விருப்பம் போலவே இருங்கோ! :D:o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹிஹி... இதுக்கு மேல கேட்டல் அழுதுடுவிங்கள் போல இருக்கு... :wub: சரி சரி நான் கேட்க இல்லை.. :o . உங்களை அழவைச்ச பாவம் ஏன் எனக்கு?? :D உங்கட விருப்பம் போலவே இருங்கோ! :D:D

அழ எல்லாம் மாட்டேன். ஆனால் சரியில்ல.. ஆக்களை இனங்காட்டிக் கொடுக்கிறது. அதுதான். :o :o

இக் கதையில் வருவதெல்லாம் 84 , 85 , 86 ஆண்டுகளில் நான் காண ஊருக்கு ஊர் நடந்த விடயம். மாவட்டத்திற்கு ஒரு AK வைத்திருப்பார்கள். அதை சுழற்சி முறையில் ஒவ்வொரு ஊராக மோட்டார் சைக்கிளில் கொண்டு திரிந்து 'ஷோ' காட்டித்திரிவார்கள். (பாடசாலை விடும் நேரத்தில் அதிகளவு நடமாட்டம் இருக்கும்) இதில் மனவருத்தாமான விடயம் என்னவென்றால் ஆரம்பத்தில் இவ் இயக்கங்களிலேயே திறமையான துடிப்பு மிக்க இளைஞர்கள் உள் வாங்கப்படிருன்தனர். தலைமை அவர்களை சரியாக பயன்படுத்தவில்லை.

பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் தலையை குனிந்து கொண்டு நல்ல பிள்ளை மாதிரி திரிவார்கள். கீழ் மட்டத்தில் ஒருவருக்கொருவர் மற்றவர் தங்கள் இயக்கமா என்பது கூட தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும். எனக்கு தெரிந்த வெளியூர் நண்பர் ஒருவர் தான் வணிகவியல் படிப்பதாக ஒரே புத்தகமும் கையுமாய் திரிவார். களுவாஞ்சிக்குடி போலீஸ் நிலைய தாக்குதலில் பரமதேவாவுடன் அவர் இறந்த பின்புதான் தெரியும் அவர் புலி என்று.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்
:) அட பப்பாய்க்காயை இதற்கும் பயன்படுத்தலாம் என்பது எனக்கு தெரியாமல் போய்யிட்டுதே,,,,,நெடுக்ஸ் :lol:
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இதைப்பார்த்தேன்

உண்மைதான்

ஒரு காலத்தில் இயக்கத்தில் இருப்பது என்று சொன்னால்

விரும்பப்படுபவராகவும் , வீரம் நிறைந்தவர்களாகவும் இருந்ததால்

அதைப்போல் பலர் எடுப்பெடுக்க வெளிக்கிட்டவை.

நல்ல கருத்து

ஆனால்அந்த எடுப்பே எமக்கு பல தீமைகளை விளைவித்துவிட்டதும் உண்மை.

எல்லா இயக்கங்களிலும் இப்படிவிலாசம் காட்டிக் கொண்டுதிரிந்தவர்கள் தான் பிரபலமானார்கள்.படித்தவன்,சிந்தனாவாதி,இடதுசாரிகள் போராட்டித்திற்கு தலைமைவகிக்க வேண்டியவர்களெல்லாம் கோழைகளாக்கப்பட்டு கையாலாதாகவன் என பட்டம் கட்டி உந்த கேஸுகள் தான் விலாசம் காட்டிக் கொண்டு எமது போராட்டத்தின் முன்மாதிரியாகிவிட்டார்கள்.பின்னர் சேர்ந்தவர்களும் அவர்களியே தொடர்ந்தார்கள்.

பெயர்கள் எழுத வேண்டிய தேவையே இல்லை முழு இயக்கத்திலும் இருந்த விலாசமானவர்களின் பட்டியலை பார்த்தால் போராட்டத்திற்கே வெக்கக்கேடு. இதில் 90% ஆனவர்கள் இப்போது உயிருடன் இல்லை.அவர்களும் நாட்டுகாக என்றுதான் போராட வந்தார்கள் அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்காமல் விட்டது தலைமைகளின் பிழையே.

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பழைய சம்பவங்களை மீண்டும் ஞாபகப்படுத்தும் பதிவு. எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பழைய சம்பவங்களை மீண்டும் ஞாபகப்படுத்தும் பதிவு. எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்........

என்னைப் பொறுத்த வரை நாங்கள் எதனையும் இழக்கவில்லை. வரலாறாய் அவை எழுந்து நிற்கின்றன. இன்றும் கூட எமது நிலம் பறிக்கப்பட்டிருந்தாலும்.. அங்கு ஆக்கிரமிப்பாளன் தனது ஆக்கிரமிப்பு வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறான்.

1700 களில் பிரித்தானியன் ஆக்கிரமித்த போது யாரேனும் எல்லாத்தையும் இழந்திட்டோம் என்று அழுததாக தெரியவில்லை. அதேபோல் அன்றைய ஆக்கிரமிப்பில் வெற்றிக் களிப்பில் இருந்த பிரித்தானியன் 1940 களில் ஆக்கிரமிப்பை விலக்கிக் கொள்ளப்பட்ட போது.. எல்லாத்தையும் இழந்து விட்டதாக கருதி வாழா திருந்ததாகவும் தெரியவில்லை.

வரலாறு ஒரு தனி மனிதன சுற்றி மட்டும் உருவாவதில்லை. பிரபாகரனின் வரலாறு பெரிய வரலாற்றேட்டின் ஒரு அத்தியாயம் மட்டுமே. இன்னும் எத்தனையோ புதிய புதிய அத்தியாயங்கள் எழுதப்பட வேண்டி உள்ளன. இப்போ ஆக்கிரமிப்பாளனதும்.. துரோகிகளினதும் காலம்.. அவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.. அவ்வளவே.

1987 இல் இந்தியனுடன் இணைந்து இப்படி ஒரு வரலாற்றை துரோகிகள் எழுதினர்.. அது நிலைக்கவில்லை. இப்போதும் அதையே செய்கின்றனர்.. அவர்களின் வரலாற்றில் மாற்றமில்லை. ஆனால் தமிழினம்.. இதையே அனுமதித்துக் கொண்டும் இருக்கப் போவதில்லை. பிரபாகரன் காட்டிய பாதை தெளிவானது. அதில் நிச்சயம் புதிய வரலாற்றாளர்கள் உருவாகி இனத்துக்கான புதிய வரலாற்றை எழுதுவார்கள்.

ஏன்.. முயன்றால் நாமே அதை எழுதலாம். அதைவிட்டு எல்லாத்தையும் இழந்திட்டோம் என்று அடிமையாக வாழும் வரலாற்றை கூட்டத்தோடு கூட்டமாக எழுதப் போகிறோம் என்றால் அதையும் தரிசித்துத்தான் ஆக வேண்டும் கந்தப்பு. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.