Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிலாபம் இந்துக் கோவிலில் மிருக பலி! தடுக்கும் பணியில் பிக்குகள்

Featured Replies

சிலாபத்தில் உள்ள முனீஸ்வரம் காளி அம்மன் கோவிலில் இன்று இடம்பெற இருக்கின்றது என்று கூறப்படும் மிருக பலியை தடுத்து நிறுத்த பேரணியாக புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த புத்த பிக்குகள் குழு ஒன்று பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஆலயத்துக்குள் பிக்குகள் பிரவேசிக்கின்றமையைத் தடுக்கும் வகையில் கலவரம் அடக்கும் பொலிஸார் அச்சுற்றாடலில் குவிக்கப்பட்டு உள்ளார்கள்.

பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டமையை அடுத்து சீற்றம் அடைந்திருக்கும் இப்பிக்குகள் இவ்வேள்வியை தடுத்து நிறுத்தும் வரை அங்கிருந்து செல்லமாட்டார்கள் என்று அடம்பிடித்து வீதியில் உட்கார்ந்து இருக்கின்றார்கள்.

இன்று ஆடுகள் சுமார் 300 உட்பட ஏராளமான மிருகங்கள் இவ்வாலயத்தில் பலி கொடுக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

படங்களை பார்வையிட >>> http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9065:2010-08-25-07-48-24&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

அந்தந்த நாட்டு பழக்கவழக்கங்களுக்கேற்ப வாழப்பழகுங்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல் முறையாக பிக்குகள் ஒரு நல்ல காரியத்தை செய்யுதுகள்.!!

Edited by காட்டாறு

மிருகபலி கொடுக்கும் காட்டுமிராண்டிகளை உடன் கைது செய்து நீண்டகாலம் சிறையில் அடைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கொன்றால் பாவம் தின்றால் போச்சு

இப்பிடி சொல்லி சொல்லிதான் வெட்டுறாங்கோ...........

  • கருத்துக்கள உறவுகள்

மிருகங்களுக்கு அவஸ்தை ஏற்படாமல் வெட்டினால் சரிதானே...? மாமிசக் கடைகளில் அதுதானே நடக்குது? :wub: அவனை நிறுத்தச்சொல்லு; நாங்களும் நிறுத்திறம் எண்டு குருக்கள்மார் சண்டைக்கு வரப்போகினம்..! :(

பிக்குகள் 300 மிருகபலியைத் தடுப்பது சரியாக இருக்கலாம்.

30 ஆயிரம் நரபலி கொடுத்தாவது புலியை வெல்லவேண்டும் என்ற நிலையில் சிங்களம் இருந்தபோது ஒரு பிக்கு கூட மௌனம் கலைக்காதிருந்தது சிங்களப் பிக்குகளின் போராட்டத்தைச் சந்தேகிக்க வைக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொன்றால் பாவம் தின்றால் போச்சு

இப்பிடி சொல்லி சொல்லிதான் வெட்டுறாங்கோ...........

முதல் முறையாக பிக்குகள் ஒரு நல்ல காரியத்தை செய்யுதுகள்.!!

மிருகபலி கொடுக்கும் காட்டுமிராண்டிகளை உடன் கைது செய்து நீண்டகாலம் சிறையில் அடைக்க வேண்டும்.

அண்டுதொடக்கம் இண்டைக்கு வரைக்கும் உந்த பிக்குகள் தமிழனுக்கு செய்த கொடூரமெல்லாத்தையும் மறந்த விண்ணர் எல்லாருக்கும்...... ஒரு மிருகபலியை தடுத்தவுனை கண்ணாலை ஆனந்த கண்ணீர் கண்ணீராய் வருதாமெல்லே

மிருகபலியை விட மனிதபலி மேல் போலை கிடக்கு

நானும் மிருகபலிக்கு எதிரானவன் தான். ஆனால் அதை சொல்லவேண்டிய இடத்திலை சொல்லோணும்.

இங்கு பிக்குகள் ஆர்ப்பாட்டம் செய்ததற்காக சந்தோசப்படுவதாக யாரும் எழுதவில்லை. போதையில் இருப்பவர்களுக்குத் தான் ஏதாவது பிழையாகத் தெரிந்திருக்கம். அந்த இனவாதிகளின் எதிர்ப்புக்கு, அந்த இனவாதிகள் தமிழன் மீது சேறு பூசுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த மிருக பலியை கண்டித்துள்ளோம்.

பிக்குக்களின் ஆசியுடன் நடக்கும் தமிழின மனிதபலியை எதிர்த்து பிக்குகள் ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது மடமை.

அதைத் தொடர்ச்சியாக செய்யவேண்டியது எம்மவர் பொறுப்பு. அதை நாம் சரிவர செய்வதில்லை.

தமிழின மனிதபலியை ஆதரிக்கும் பிக்குகள் மிருகபலியை எதிர்க்கிறான் என்பதற்காக தமிழ் பூசாரிகள் சிலரால் ஆலயத்தில் செய்யப்படும் மிருகபலியை நியாயப்படுத்த முனைவதும் தவறு. இதன் மூலம் தமிழனுக்கு அபகீர்த்தி மட்டுமே ஏற்படப் போகிறது.

பிக்குகள் இதன் மூலம் தாம் மிருகங்களைக் கூட வதைப்பதில்லை என்ற தமக்கு பொருத்தமில்லா புகழையும், தமிழர் ஆலயங்களில் மிருக வதை செய்யும் கீழ்த்தரமானவர்கள் என்ற அடையாளத்தையும் சர்வதேச ரீதியில் ஏற்படுத்திவிடுவார்கள்.

சிங்கள பயங்கரவாதிகள் இதைப் படம் எடுத்து தமிழருக்கு எதிரான சர்வதேச பிரச்சாரங்களில் இணைத்து அபகீர்த்தி ஏற்படுத்துவதை தடுக்க முயலுங்கள் முதலில். போதையில் உளறுவதை தவிர்த்தால் நல்லது.

பிக்குகள் 300 மிருகபலியைத் தடுப்பது சரியாக இருக்கலாம்.

30 ஆயிரம் நரபலி கொடுத்தாவது புலியை வெல்லவேண்டும் என்ற நிலையில் சிங்களம் இருந்தபோது ஒரு பிக்கு கூட மௌனம் கலைக்காதிருந்தது சிங்களப் பிக்குகளின் போராட்டத்தைச் சந்தேகிக்க வைக்கிறது.

இதில் சந்தேகப்பட ஏதுமில்லை.

தமிழின மனிதபலியை ஆதரிக்கும் பிக்குகள் மிருகபலியை எதிர்ப்பதில், அதை சிங்கள பயங்கரவாத போலிஸ் தடுப்பதில் சந்தேகப்பட ஏதுமில்லை. பிக்குகள் எதிர்ப்பதும், போலிஸ் தடுப்பதும் சூழ்நிலையை பயன்படுத்தி அழகாக திட்டமிட்டப்பட்ட நாடகம்.

இவற்றின் நோக்கம் சர்வதேச ரீதியில் தமிழர் மீது சேறு பூசுவது தான்.

இவ்வாறான வேலைகளை, கதிர்காமர் வழிகாட்டலில், கச்சிதமாச் சிங்களவன் கடந்த காலங்களில் செய்து வந்ததால் தான் புலிகள் மீதான தடைகளை ஏற்படுத்த முடிந்தது. கதிர்காமரிடம் கற்றுக்கொண்ட சிங்கள இனப்படுகொலையாளர்களின் செயற்பாடுகளை நெருக்கமாக அவதானித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும்.

சிங்கள இனப்படுகொலையாளர்கள் இதைப் படம் எடுத்து தமிழருக்கு எதிரான சர்வதேச பிரச்சாரங்களில் இணைத்து அபகீர்த்தி ஏற்படுத்துவதை தடுக்க முயலுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு பிக்குகள் ஆர்ப்பாட்டம் செய்ததற்காக சந்தோசப்படுவதாக யாரும் எழுதவில்லை. போதையில் இருப்பவர்களுக்குத் தான் ஏதாவது பிழையாகத் தெரிந்திருக்கம். அந்த இனவாதிகளின் எதிர்ப்புக்கு, அந்த இனவாதிகள் தமிழன் மீது சேறு பூசுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த மிருக பலியை கண்டித்துள்ளோம்.

பிக்குக்களின் ஆசியுடன் நடக்கும் தமிழின மனிதபலியை எதிர்த்து பிக்குகள் ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது மடமை.

அதைத் தொடர்ச்சியாக செய்யவேண்டியது எம்மவர் பொறுப்பு. அதை நாம் சரிவர செய்வதில்லை.

தமிழின மனிதபலியை ஆதரிக்கும் பிக்குகள் மிருகபலியை எதிர்க்கிறான் என்பதற்காக தமிழ் பூசாரிகள் சிலரால் ஆலயத்தில் செய்யப்படும் மிருகபலியை நியாயப்படுத்த முனைவதும் தவறு. இதன் மூலம் தமிழனுக்கு அபகீர்த்தி மட்டுமே ஏற்படப் போகிறது.

பிக்குகள் இதன் மூலம் தாம் மிருகங்களைக் கூட வதைப்பதில்லை என்ற தமக்கு பொருத்தமில்லா புகழையும், தமிழர் ஆலயங்களில் மிருக வதை செய்யும் கீழ்த்தரமானவர்கள் என்ற அடையாளத்தையும் சர்வதேச ரீதியில் ஏற்படுத்திவிடுவார்கள்.

சிங்கள பயங்கரவாதிகள் இதைப் படம் எடுத்து தமிழருக்கு எதிரான சர்வதேச பிரச்சாரங்களில் இணைத்து அபகீர்த்தி ஏற்படுத்துவதை தடுக்க முயலுங்கள் முதலில். போதையில் உளறுவதை தவிர்த்தால் நல்லது.

ஒரேயொரு கருத்தை சொல்வதற்கு உள்ள இடமெல்லாம் போய் வந்திருக்கிறீர்களே ஆசான்?

நரகபலியை எதிர்த்து தனியாக தலைப்பு தொடங்குங்கள்.கோடிபுண்ணியம் உங்களைச்சேரும்.

:lol:

போதையில் உளறுபவர்களை விட

போதையில்லாமல் உளறுபவர்களைத்தான் நம்பக்கூடாது.

:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.