Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி தெரியாக் காயங்கள்

Featured Replies

வலி தெரியாக் காயங்கள்....

முருகன் கோவிலுக்கு முன்னால் மனதால் கும்பிட்டுவிட்டுத் திரும்பி பார்த்தாள் வேணி. அவளையே வைத்த கண்வாங்காமல் பார்த்தபடி நின்ற முகத்தினைக் கண்டு திடுக்குற்று, அவன் யார் என்று உற்றுப் பார்த்தாள் முகம் புரியவில்லை. கடந்த ஒரு மாதமாக அவளையே பின் தொடரும் யார் அவன்? பாடசாலைக்கு முன்னால் நிற்பான். ரீயூசனுக்கு போனாலும் வருவான். கோவிலுக்கு போனாலும் வந்து நிற்கிறானே யார் இவன்? மெல்லிய அரும்பு மீசை, கூரான நாசி ம்ம் பார்த்தால் மறு முறை பார்க்க தூண்டும் முகம்.

அடுத்த நாளும் பாடசாலைக்கு போகும் போதும் அவன் பின்தொடர்வதை அவள் உணர்ந்து கொண்டாள். பின்னால் வரும் அந்த இளைஞன் யார் என்று கூட வந்த சினேகிதியிடம் கேட்டாள். "யார் ஊருக்குள் புதுமுகம் என்றும், ம்ம் கொழும்பில் இருந்து வந்த புதிய குடும்பம் டெக்னிக்கல் காலேஜ் படிக்கும் சிவில் இஞ்சினியர் பொடியன்" என்று சொன்னாள்.

"ஓ; சரி எங்கே இருக்கினம்" என்று ஆர்வமில்லாதவள் போல் அக்கறையாக கேட்டாள். "புதுவீடுகட்டினவை தானே அது இவர்கள் தான்" என்று சொன்னாள்.

ஒரு நாள் ரீயூசன் போய்வரும்போது பஸ்சை தவறவிட்டுவிட்டாள் நடந்துவந்து கொண்டு இருந்தபோது, பின்னால் வந்த அவன் அவளிடம் பேச்சுக் கொடுத்தான். "என்ன இனி பஸ் இல்லை நடந்தாபோகப் போறீங்கள்?" அவள் பதில் பேசவில்லை அவன் கண்ணியமாக "இஞ்ச பாருங்கோ நான் இந்த சினேகிதன் சைக்கிளில் வாறேன் நீங்கள் என் சைக்கிளில் வாங்கோ" என்று சைக்கிளை கொடுத்தான்.

10 கீ.மீ நடக்க நடுச்சாமம் ஆகும் என்று நினைத்து சைக்கிளை வாங்கி நன்றி சொல்லி விட்டு ஓடத் தொடங்கினாள். பின்னாலே பாதுகாப்பாக இடைத்தூரம் விட்டு அவனும் சினேகிதனும் யாரும் தப்பாக நினைக்காதபடி வந்தார்கள். வீட்டுக்கு கிட்டவந்ததும் அவளிடம் சொன்னான் "சரி நாங்கள் போறோம்" என்று அப்போ தான் வேணி "இல்லை கொஞ்சம் பொறுங்கோ" என்று கூறி அவர்களை தடுத்த நிறுத்தினாள்.

வீட்டு வாசலில் இருந்தபடியே "அப்பா இங்கை வாங்கோ" என்று தகப்பனை அழைத்தாள் என்ன பிள்ளை என்று கேட்டபடியே வந்த தகப்பன் முகம் சுருக்கினார் "யார் இந்த பொடியங்கள்? என்று யோசித்தபடி அப்பா இவர்கள் தான் நான் பஸ்சை விட்டு விட்டபோது தங்கள் சைக்கிளை தந்து உதவி பண்ணியவை" என்று அறிமுகபடுத்தினாள்

"ஓ மெத்த பெரிய உதவி தம்பியவை உள்ள வாங்கோ ரீ குடித்து விட்டு போங்கோ தம்பியவை" என்று அன்புடன் அழைத்தார் உள்ளே வந்து முற்றம் பார்த்த அவன் திகைத்துவிட்டான். அழகான முற்றம் குரோட்டன், மல்லிகை, கனகாம்பரம் என்று ஒரு நந்தவனத்தினுள் இருப்பது போன்ற ஒர் உணர்வு அவனுக்குள் ஏற்பட்டது.

"தம்பி நீங்கள் நடா அண்னை மகன்தானே.? இதுயார் புது பையன்? என்று வேணியின் அப்பா கேட்டார். "அது வந்து இப்போ புதுவீடுகட்டி வந்து இருக்கும் கொழும்பு மகேந்திரன் டொக்டரின் மகன் பேர் சண்" என்று சொன்னான் அப்போ தேனீரும் தட்டில் பிஸ்கெட்டும் கொண்டுவந்த வேணிக்கும் அவன் பெயர் சொன்னது கேட்டது. அப்போ சண் கேட்டான் "அங்கிள் எங்கடவீட்டில் பூமரங்களே இல்லை எனக்கு கொஞ்சம் பதியன் தருவிங்களா?" என்று "கடவுளே தம்பி இது என்னோடது இல்லை என் மகள் தான் வைத்து இருக்கிறா அதில சாமிக்கு கூட என் மனிசி பூ பிடுங்கவிடமாட்டா எதுக்கும் அவளிடம் கேளுங்கோ ஆனால் தராவிட்டால் கவலைப் படவேண்டாம் கோண்டவிலில் ஒரு இடம் பூகன்றுகள் விற்கும் இடம் இருக்கு இடத்தைச் சொன்னால், நீங்களே போய் வாங்கலாம்" என்று வேணியின் அப்பா சொன்னர்.

  • Replies 120
  • Views 14.6k
  • Created
  • Last Reply

இந்திரஜித் கதை நன்றாகப் போகின்றது. தொடரும் தானே

கதை நல்லாருக்கு அண்ணா இதையும் சோகமா முடிக்க வேண்டாம் ப்ளீஸ் தலைப்பை பாத்தா அப்படித்தான் போல இருக்கு அப்படித்தானா :P

தம்பி தொடக்கமே நல்லா இருக்கு மிகுதி எப்ப????????

கதை நல்லாருக்கு அண்ணா இதையும் சோகமா முடிக்க வேண்டாம் ப்ளீஸ் தலைப்பை பாத்தா அப்படித்தான் போல இருக்கு அப்படித்தானா :P

அப்ப உங்களுக்காண்டி கதையை மாத்தச் சொல்லுறியளே கொஞ்சம் செலவாகும் எப்பிடி வசதி??....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திரஜித் சோகங்களும் சுகமானவைதான் தொடருங்கள் ஒரு அற்புதமான மண்ணின் மணம் பரப்பும் கதையை எதிர்பார்க்கின்றேன்.

பார்த்தீர்களா தோல்விகள்தான் ஒரு மனிதனுக்கு அவனுள் இருக்கும் திறமைகளை வெளிக்கொணர்கிறது..அலட்டாமல் கதை சொல்லும் உங்கள் பாணி என்னைக் கவர்கிறது. காத்திருக்க வைக்காதீர்கள்

தம்பி தொடக்கமே நல்லா இருக்கு மிகுதி எப்ப????????

அப்ப உங்களுக்காண்டி கதையை மாத்தச் சொல்லுறியளே கொஞ்சம் செலவாகும் எப்பிடி வசதி??....

செலவைப்பற்றி யோசிக்காதீங்க அங்கிள் சந்தோஷமாக கதையை முடிக்கச் சொல்லுங்க :P

(நானே நேரா சொன்னா போச்சு எதுக்கு உங்களுக்கு காசு தரோணும்) :idea: :wink:

இந்திரஜித் ஆரம்பமே நன்றாய் இருக்கு தொடருங்க.

கதை நன்றாக செல்கிறது இந்திரஜித் மேலும் தொடர்க

  • தொடங்கியவர்

வலி தெரியாக் காயங்கள்.... பாகம் 2

" அப்பா என்ன உங்களுக்கு தெரியாதே இந்த ஆடிமாதவெக்கையில் யாரும் பூக்கன்று பதியன் வைப்பினமே எப்படி தண்ணீர் விட்டாலும் வளரவே மாட்டுது இது என்ன கொழும்பே மழை எப்போதும் வாறதுக்கு நாங்களே கிணத்தில தண்ணி இல்லாமல் யோசிக்கிறோம் கார்த்திகைக்குபிறகு தானே சின்ன பூ தோட்டம் வைக்கலாம்" என்று அப்பாவுக்கு சொல்வது போல் சண்ணுக்கு சொன்னாள்.

அவன் ஒரு மாங்கா மடையன் புரியவில்லை "என்ன அங்கிள் நான் பூக்கன்று தானே கேட்டேன் அதுக்கு ஏன் இவ பூந்தோட்டம் வைக்கப்போறா" என்று அப்பாவியா கேட்டான். கன்னம் சிவக்க கொடுப்புக்குள் சிரித்த வேணி அப்பாவி என்று புரிந்து கொண்டாள். "அப்பா கொஞ்சம் பொறுக்கச் சொல்லுங்கோ" என்று வீட்டுக்குள்ளே போய் கொஞ்சம் வாடாமல்லி விதையும், கொஞ்சம் சூரியகாந்தி விதையும் ஒரு பேப்பருக்குள் சுற்றி கொண்டுவந்து கொடுத்தாள்.

"இதை முதலில் ஒரு அடிவிட்டு மேடைகட்டிவையுங்கோ முளைத்தால் நல்லமண் என்றால் வேறு கன்றுகள் வைத்து தாறேன்" என்று கொடுத்தாள். சரி என்று நன்றி சொல்லிவிட்டு தேனீர் குடித்து விட்டு வேணியின் அம்மாவிடமும் அப்பாவிடமும் சொல்லி விட்டு சைக்கிளையும் எடுத்து கொண்டு புறப்பட்டார்கள்.

கூடவந்த நண்பன் வெளியே வந்ததும் "நீ என்னடா சண், வேணி உனக்கு சொல்ல நீ முட்டாள் மாதிரி உளறிவிட்டாய் என்று கேட்டு சொன்னான் இனியாவது கொஞ்சம் கொழும்பு புத்தியை விட்டுவிட்டு கவனமாக நட மச்சி" என்று சொன்னான் அவனுக்கு புரியவில்லை.

இப்பொதெல்லாம் வேணியின் தம்பி சண்ணுக்கு நல்ல தோழன் சண் வீட்டில் தான் விளையாட்டு எல்லாம் சண் அப்பா கொழும்பில் ஏதாவது உதவி என்றால் வேணியின் அப்பாதான் உதவி செய்வார் சண் வீட்டுக்கு மிக நெருங்கிய நட்பாகிவிட்டார்கள் ஏதாவதுவிஷேசம் என்றால் இருவீட்டுமனிதர்களும் பலகாரம் கொடுத்து சந்தோசமாக இருந்தார்கள் அடிக்கடி சண் வீட்டுக்கு அன்ரி என்று உறவு முறை கொண்டாடி கொண்டு வேணியும் வருவா சண் பூந்தோடத்துக்கும் போய் ரசிப்ப உதவியும் செய்வா அவர்கள் இருவருக்கும் பல ரசனைகள் ஒன்றாக இருந்ததும் அவர்களை சீக்கிரமே நல்ல நண்பர்கள் ஆக்கிவிட்டது வீட்டில் நன்றாக பேசும் சண் வெளியில் தெரியாதவன் போல் போவான் ஏன் அப்படி என்று யோசித்த வேணிக்கு புரியாமல் கேட்டாள் "ஏன் என்னைக் கண்டால் தெரியாதமாதிரி போறனீங்கள்" என்று கேட்டாள்.

"ம்ம் நான் உங்களை பார்த்து கதைக்க யாரும் தப்பா பேச வேண்டாமே உங்களுக்கு என்னால் ஏன் பிரச்சனை" என்று சொல்லி சிரித்தான் சண் அவன் முன் எச்சரிக்கை அவளை அவன் எண்னங்களை மதிக்கவைத்தது உண்மை தான் ஊரில் தப்பாக தான் பேசுவினம் என்று சொல்லி சிரித்தாள். "அது சரி சண் நீங்கள் படித்த ஏ.எல். விலங்கியல், தாவரவியல், ரசாயனம், பௌதீகம் புத்தகங்கள் இருக்கா இருந்தால் தாறிங்களா?" எனக்கு தேவை என்று கேட்டாள்.

"ஓ அதுக்கு என்ன தாறேன் நோட்ஸ்சும் தாறென் வைத்து படியுங்கோ எனக்கு கம்பஸ் என்ரண்ஸ் கிடைத்திருக்கு இனி எனக்கு தேவை இல்லை நீங்கனே வைத்து இருங்கோ" என்று சொன்னன் சண்

-தொடரும்-

கதை அருமையாய் இருக்கு.. தாயக நினைவுகளை கண்ணுக்குள் கொண்டு வருகிறிர்கள். அதாவது புந்தோட்டத்தை சொன்னேன். மாரிகாலத்தில் அது தானே வேலை ... போகும் வீடெல்லாம் புங்கன்று வேண்டி வருவது... தொடருங்கள். ஆவலுடன் பார்த்து இருக்கின்றோம்....

கதை நன்றாக செல்கிறது இந்திரஜித் மேலும் தொடருங்கள். ஆவலுடன் பார்த்து இருக்கின்றோம்....

கதை நன்றாக செல்கிறது இந்திரஜித் மேலும் தொடர்க

தம்பி கதையை இன்னும் கொஞ்சம் நீளமாக எழுதிப் போட்டு தொடரும் எண்டு போடலாம்தானே.. ஆவலைத் தூண்டி ரெலிராமா மாதிரி விடுகிறீயள்

.

மாரிகாலத்தில் அது தானே வேலை ... போகும் வீடெல்லாம் புங்கன்று வேண்டி வருவது...

அட எங்கடை வீட்டிலை புக்கண்டு களவுபோண விசயம் இப்பதான் விளங்குது.........

தம்பி கதையை இன்னும் கொஞ்சம் நீளமாக எழுதிப் போட்டு தொடரும் எண்டு போடலாம்தானே.. ஆவலைத் தூண்டி ரெலிராமா மாதிரி விடுகிறீயள்

.

அட எங்கடை வீட்டிலை புக்கண்டு களவுபோண விசயம் இப்பதான் விளங்குது.........

அங்கிள் என்ன பகிடி சொல்கிறீர்கள்??? நீங்கள் தானே அந்த புக்கண்டுகளையெல்லாம் புடுங்கி அதுக்குலை கடிதத்தையும் வைத்து பொன்னமாக்காவிடம் கொடுக்கச் சொல்லி தந்தனீங்கள்... இப்போ மறந்து போச்சா?

நீங்கள் தானே அந்த புக்கண்டுகளையெல்லாம் புடுங்கி அதுக்குலை கடிதத்தையும் வைத்து பொன்னமாக்காவிடம் கொடுக்கச் சொல்லி தந்தனீங்கள்..

.

அடே அது நீங்களே அப்ப பொண்ணம்மாக்கான்ரை பச் மேட் எண்டு சொலலுங்கோ...

.

அடே அது நீங்களே அப்ப பொண்ணம்மாக்கான்ரை பச் மேட் எண்டு சொலலுங்கோ...

ஐய்யோ அங்கிள் சின்னப்பிள்ளையை யாரும் கண்டுகொள்ளமாட்டினம் என்று கடிதம் அன்ரிட்டை பாத்திரமாக கொண்டுபோய் கொடு சொக்கா தரேன் என்று எமாத்தி தந்திட்டு இப்ப...... :evil: :evil: :evil: :evil:

கதையின் ஆரம்பம் நன்றாக இருக்கின்றது. மற்றய பாகங்களை காணவில்லையே இந்திரஜித்? நோட்பாட்டில் எழுதி ஒவ்வொரு அங்கமாக யாழில் இணைத்தால் படிப்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்கும். அடுத்த பாகத்தை விரைவில் எதிர்பார்க்கின்றேன்,

  • தொடங்கியவர்

வலி தெரியாக் காயங்கள்.... பாகம் 3

நண்பனுடனும் செவ்வந்தி விதைகளுடனும் வீட்டுக்கு வந்தவனை அம்மா கேலியாக கேட்டா "என்ன திருப்பியும் பூ வந்து விட்டது" என்று.

அவனுக்கு உடனே மாலினியின் நினைப்பு வந்து அவன் மனதைஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. கொழும்பில் அவன் வீட்டுக்கு அருகில் இருந்த தேவதை அவள். பூங்கன்றுகள் மேல் காதலை உருவாக்கிய நந்தவனம் அது. அந்த பூந்தோட்டத்தில் அவள் நின்றால் ஒரு அழகான தேவதை வலம் வருவது போன்று, ஒர் அற்புதமான உணர்வு தனக்குள் ஏற்படுவதாக அடிக்கடி அவளிடமே கூறியிருக்கின்றான். அன்பான தோழியுமாக அவள் இருந்திருக்கின்றாள். இருவரும் ஒரேவகுப்புதான். ஒன்றாகவே பாடசாலை போவார்கள் வருவார்கள் சிங்களம், தமிழ் என்று வேறுபாடு பார்க்காமல் நெருக்கமாகத்தான் அவர்கள் குடும்பம் பழகியது. அவள் அண்ணா இராணுவத்தில் சேர்ந்தபோது, இருந்த நிம்மதி அத்துடன் தொலைந்து போனது .

கொழும்பில் எப்போ அம்புலன்ஸ் சத்தம் கேட்டாலும் அவள் குடும்பம் உடனே பிரார்த்தனை செய்யத்தொடங்கும். முகத்தில் ஏதோ கலக்கம் இருக்கும் எங்கே சண்டை என்று நியூஸ் கேட்டபடி, அவள் அப்பா ரேடியோவுக்கு அருகில் இருப்பார். அவள் அம்மாவோ சாப்பிடாமலே காலத்தை கழிப்பா. அவர்கள் ஏழ்மைதான் அவள் அண்ணாவையும் இராணுவத்தில் சேரத் தூண்டியது. இப்படி எத்தனை அண்ணாக்களோ.?

அன்று ஒரு மாலை நேரம் அப்பா வந்து சொன்னார் "ஆனையிறவில் சண்டையாம் என்று இந்தமுறை எங்கடை பொடியள் ஆனையிறவை ஒருகை பார்ப்பார்கள்" என்று சொல்லி சிரித்தார். அம்மா "கடவுளே எங்கடை நிம்மதிக்காக தங்கள் அருமந்த உயிரை கொடுக்க போகுதுகளோ எத்தனை சின்ன உயிர்கள்" என்று கண்மூடி கடவுளே என்று கண்கள் கசிய அப்படியே சுவரில் சாய்ந்துவிட்டா அம்மா.

மாலினி கவலை தோய்ந்த முகத்துடன் மெல்ல வீட்டினுள் வந்து எங்கள் எல்லோரையும் பார்த்தபடி "அண்னா ஆனையிறவில் இருந்து கடிதம் போட்டார் லீவுக்கு வர இருந்தாராம் சண்டை முடிய வருவேன் என்று எழுதி இருந்தார் ஆனால் அப்பா நியூஸ் கேட்டு சொன்னார் சரியான அடிபாடு என்று கடவுளை கும்பிட சொல்லி நான் பன்சலைக்கு போறேன் யாரும் கூடவாறீங்களா" என்று அழுகின்ற முக பாவனையுடம் நின்றபோது, அவனும் கூடபோணான். அங்கே இவனை வெறுப்பு உமிழும் முகங்களுடன் எத்தனையோ பேர் பார்த்தார்கள் அவனுக்கு ஏதோமாதிரி இருந்தது அவர்கள் பேசும் சிங்களம் அவனைக் காயப்படுத்தியது. புரியாதவன் போல் பன்சலைக்கு வெளியே போய் நின்றான் மாலினி வரும் வரைக்கும் திரும்பி வந்த அவளுடன் பேசியபடியே நடந்தான்.

"மாலினி எனக்கு யோசனையா இருக்கு உனக்காக நானும் கடவுளை கும்பிடுறேன்" என்று ஏதோ ஆறுதலாக அவன் கையை பிடித்தபடி மாலினி நடந்து வந்தாள் அவனும் தடுக்கவில்லை ஆனால் அதை ஆத்திரத்துடன் பார்த்தபடி இரு ஜோடிகண்கள் இருட்டில் மின்னியது அது தான் அவனையும் அவளையும் பிரித்ததும் இப்படி தகப்பனை விட்டு வரபண்ணியதும், ம்ம்ம் காலங்கள் தான் எப்படி வேகமாக போகிறது அவளையும் மறந்து விட்டேனா என்று நினைத்தபோது மனசை என்னவோ செய்தது.

-தொடரும்-

  • தொடங்கியவர்

வலி தெரியாக் காயங்கள்.... பாகம் 4

அம்மா கேட்டா "என்ன தம்பி யோசனை?"என்று

"இல்லையம்மா மாலினியை நினைத்தேன் எப்படி இருக்கிறாவோ தெரியாது. அவள் அண்ணாவின் இழப்பு எங்களை இப்படி வரவைத்து விட்டது இருந்தாலும் இப்போ எத்தனையோ பாதுகாப்பா எனக்கு இருக்கு என்று சொன்ன அம்மாவின் வார்த்தைகளையும் ஆமோதித்தான்.

" எப்போ எங்கே வேணும் என்றாலும் எல்லோரும் பயம் இல்லாமல் போகிறோம் வருகிறோம். அப்பாதான் தனிய அவரும் அலுவல் பார்ப்பதாகவும், ஊரோடு இடமாற்றம் வாங்கிக் கொண்டு வருவாராம்" என்றும் எழுதி இருந்தார்.

"சரி அம்மா அப்பாவுக்கு கடிதம் எழுதும் போது மாலினி குடும்பத்தையும் கேட்டு எழுதுங்கோ" என்று சொல்லி விட்டு பூந்தோட்டத்துக்குள் மும்முரமானான் அவன்.

மெதுவாக மழைக்காலமும் வந்தது அவனுக்கும் வேணிக்கும் எப்போதும் பூந்தோட்டமே கதியானது. பூக்கன்றுகள் தேடி சிலசமயங்களில் இணுவில் வரை அலைவார்கள் ஒருநாள் இருவரும் பூந்தோடத்தில் நின்ற போது சரசரவென்று அவள் கால்களில் ஏதோ ஊர்ந்து போனது. ஜயோ என்று கத்தியபடி வேணி அவன்மேல் பாய்ந்து விட்டாள். என்னென்று குனிந்து பார்த்தவனுக்கு ஒருபாம்பின் தடம் ஈரமண்னில் தெரிந்தது கொஞ்சம் பெரிய தடம் பயத்தில் நடுங்கியபடி வேணி அவன் சொன்னான் பயப்படவேண்டாம் சாரைப்பாம்புதான் என்று அவள் பயத்தை போக்கியவன் அது நாகப்பாம்புதான் என்ற முடிவுக்கு வந்தான் ஆனால் யாரிடமும் சொல்ல வில்லை வேணியை வீட்டுக்கு அனுப்பி விட்டு, அந்தபாம்பின் தடம் பார்த்து தொடர்ந்தான்.

இவனது தேடுதலை கண்ட அம்மா கேட்டா என்ன தம்பி என்று அவன் ஒன்றுமில்லை என்று தேடுதலை தீவிரபடுத்தினான்.

-தொடரும்-

கதை நன்றாக இருக்கிறது மேலும் தொடர்க

உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள். :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

கதை நல்லாய் இருக்கு... கன நாள் லீவு தரமால் எழுதுங்கோ

இந்திரஜித் நன்றாக இருக்கிறது. தொடர்ந்து இன்னும் பல கதைகளை தாருங்கள்.

கதையை துண்டு துண்டாக இணைத்தால் சுவாரசியம் போய்விடுமே? முடிந்தவரையில் பகுதி பகுதியாக எழுதி சேமித்து விட்டு இணைக்கலாமே இந்திரஜித்?

  • தொடங்கியவர்

மன்னிக்கவேண்டும் எனது கணணியில் எதோ பிரச்சனை சேமித்து வைத்தால் சிக்கலாக இருக்கிறது இனிமேல் கூடியவரை முழுக்கதையாக எழுதமுயற்சிக்கிறேன் .நேரம் இன்மை இந்த வருட இறுதிவரை இருக்கும் அது தான் மதன் அவர்களே மற்றும் அன்பான ஆதரவு தரும் உள்ளங்களே நிலமையை புரிந்து மன்னிக்கவேண்டுகிறேன்

நாங்கள் அனைவரும் உங்களுக்காக காத்திருக்கின்றோம் முடிந்தவரையில் பாகம் பாகமாக பிரித்து எழுதுங்கள். இதில் மன்னிக்க என்ன இருக்கின்றது, உங்களுடைய சிரமங்கள் புரிகின்றது வருத்தம் வேண்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.