Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்திரன்.

Featured Replies

எந்திரன்.

எந்திரன்- இந்த வார்த்தைதான் இன்றைய தேதியில் உலக தமிழர்களால் அதிகமாக உச்சரிக்கப்படும் வார்த்தையாக இருக்குமென்று அடித்து கூறலாம். கடந்த ஒரு வாரத்தில் பெரிசு முதல் சிறுசுவரை, பாமரன் முதல் படித்தவன்வரை, ஏழை முதல் பணக்காரன்வரை, ரஜினியை பிடித்தவர்கள் முதல் பிடிக்காதவர்கள்வரை, உலகின் பெரும்பான்மை தமிழர்களின் பேச்சும் எதிர்பார்ப்பும் எந்திரன்தான் என்றால் அது மிகையில்லை.

இப்படியாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகிய எந்திரன் அதன் மிகை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என்றால் நிச்சயமாக பூர்த்தி செய்துள்ளதென்பதுதான் எனது பதில்(இவன் ரஜினி ரசிகன் என்பதால் இப்படி கூறுகிறான் என்று நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல, நிச்சயமாக நடுநிலை ரசிகர்களின் பதிலும் இதுவாகத்தான் இருக்கும்) விஞ்ஞானபடாமாக இருந்தாலும் பக்கா ஜனரஞ்சகமான ஒரு காமர்சியல்படமாகதான் எந்திரன் தெரிகிறது.

நிச்சயமாக பொழுதுபோக்கிற்காகவும் மகிழ்ச்சிக்காவும் திரையரங்கிற்கு வருபவர்களை எந்திரன் 100 % திருப்திப்படுத்தும் என்பதில் சந்தேகமேதும் இல்லை. ஒவ்வொரு ரஜினி ரசிகனும் பலதடவைகள் திரையங்குகளில் எந்திரனை தரிசிக்கபோவது உறுதி, இது நடுநிலை ரசிகர்களுக்கும் பொருந்தும். மூன்று விதமான வேடங்களில் நடித்திருக்கும் ரஜினி மூன்று வேடங்களுக்கும் உடல்மொழி, வசன உச்சரிப்பு,மானரிசம் போன்றவற்றில் சிறப்பானமுறையில் வேறுபாடிகாட்டி கலக்கியுள்ளார்.

விஞ்ஞானியாக வரும் ரஜினி (வசீகரன்) சீடியஸ் கேரக்டர் என்றால் சிட்டிரோபோ படத்தின் கலகலப்பு கேரக்டர். இறுதியாக மூன்றாவதாக வரும் ரோபோ ரஜினி (படத்தின் ஹீரோ) முதல் இரண்டு ரஜினியையும் தூக்கிச்சாப்பிடுமளவிற்கு தனது நடிப்பால் அசத்தியிருக்கிறார், குறிப்பாக வசீகரனை ரோபோ கூட்டத்தில் தேடும்போது மூன்றாவது ரஜினி நடிக்கும் நடிப்பை ரஜினியை பிடிக்காதவர்களும் ரசிக்காமல் இருக்கமுடியாது. அப்பப்போ வசீகரனை டென்ஷன் ஆக்கும்போது சிட்டி ரோபோவின் வசன உச்சரிப்பு படு பிரமாதம்.

இறுதிகாட்சியில் சிட்டியின் நடிப்பும் வசனமும் நிச்சயம் ரசிகர்கள் மனதில் ஒருவித கனத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காதல்காட்சிகளில் ஒருவித தயக்கமும் இல்லாமல் இளைஞர்களைபோல கலக்கும் சூப்பர்ஸ்டார் பாடல்காட்சிகளில் வயது திறமைக்கு தடையல்ல என்பதை உணர்த்தியிருக்கிறார். ஐஸ்வர்ய்யாமீது சிட்டிக்கு காதல்வரும்போது ரஜினி கொடுக்கும் உணர்ச்சிகளை விபரிப்பதர்க்கு வார்த்தைகள் இல்லை. சிட்டியும் வசீகரனும் ஒன்றாகவரும் காட்சிகள் அனைத்தும் படு பிரமாதமாக வந்திருக்கிறது.

ரஜினியின் நடிப்புக்கு நீண்டநாட்களுக்கு பின்னர் கிடைத்துள்ள தீனிதான் எந்திரன். ஐஸ்வர்யாராய் அதிகமான தமிழ்பட நாயகிகள் போலல்லாது படம் முழுவதும் வருகிறார். காதல், கோபம், மகிழ்ச்சி, பயம், கவலை என அனைத்து உணர்வுகளையும் நன்றாக வெளிக்காட்டி சிறப்பான முறையில் தனது பங்களிப்பை ஆற்றியுள்ளார். பாடல்காட்சிகளில் தனது பாணியில் வழமைபோல பட்டையை கிளப்ப்பியிருக்கும் ஐஸிற்கு 37 வயதென்றால் யாராவது நம்புவார்களா? சிட்டியின்நிலையை சிட்டிக்கு புரியவைக்க முயற்ச்சிக்கும் காட்சிகளில்(சிட்டி காதலை வெளிப்படுத்தியவுடன்) தான் ஒரு முதிர்ச்சியான(நடிப்பில்) நடிகை என்பதை எமக்கு உணர்த்துகிறார்.

வில்லனாக நடித்திருக்கும் டானிக்கு பெரிதாக திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் இல்லாவிட்டாலும் கொடுத்ததை சிறப்பாக செய்துமுடித்துள்ளார். சந்தானம், கருணாசின் காமடி சில இடங்களில் ரசிக்கவைத்தாலும் சில இடங்களில் ரசிக்கமுடியவில்லை. ஒருகாட்சியில் வந்தாலும் கலாபவன்மணியும், ஹனிபாவும் மனதில் நிற்கிறார்கள், வேறு எந்த கேரக்டர்களும் மனதில் ஒட்டுமளவிற்கு படத்தில் இல்லை, இதற்கு காரணம் படம் முழுவதும் ரஜினியினதும், ஐஸ்வர்யாவினதும் ஆதிக்கம்தான்.

ரஜினி படத்தின் நாயகனாலும் உண்மையான எந்திரனின் நாயகன் ஷங்கர்தான், இதை ஒரு ரஜினி ரசிகனாக சொல்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை, நிச்சயமாக இதுவொரு ஷங்கர் பாடம்தான், தளபதி எப்படி மணிரத்தினால் ரஜினிக்கு எடுக்கப்பட்ட திரைப்படமோ அதேபோல எந்திரன் ஷங்கரால் ரஜினிக்கு எடுக்கப்பட்ட திரைப்படம். இத்தனை பிரம்மாண்டத்தை ஒரு தமிழ்ப்படத்தில் வெறும் 150 கோடியில் கொடுக்கமுடியுமென்றால் அது ஷங்கரால் மட்டும்தான் முடியும்.

சிந்தித்து பார்க்கமுடியாத கற்பனை, திறமை. இறுதிகாட்சிகளை வாயைபிளந்தது பார்த்ததோடல்லாமல் இது "ஹோலிவூட் படமல்ல அதுக்கும்மேல்" என்பதுதான் பெரும்பாலானவர்களது திரையரங்க கருத்தாக இருந்தது. ஆரம்பத்தில் காமடியாக நகர்ந்த ஷங்கரின் திரைக்கதை இடைவேளையின் பின்னர் சூடுபிடிக்க தொடக்கி இறுதி காட்சிகளில் சரவெடியாக மாறி படத்திற்கு பெரும்பலமாக அமைந்தது. சுஜாதாவின் கதைக்கு உயிர்கொடுத்த ஷங்கர் சுஜாதாவின் வசங்களுடன் மதன்கார்க்கியின் வசனங்களையும் தனது வசனங்களையும் படத்தின் தேவைக்கேற்றால்போல பயன்படுத்தியுள்ளார்.

சிட்டி ஐஸ்வர்யாவை விரும்புவதாக கூறுமிடத்தில் சிட்டியும் வசீகரனும் ஐஸ்வர்யாவும் பேசும் வசனங்கள், இறுதியாக சிட்டி பேசும் வசனங்கள்(குறிப்பாக கருணாஸ், சந்தானத்திடம் கூறும் வசனம்), கடைசியில் படம் முடியும்போது "சிந்தித்ததால்" எனவரும் ஒருவரி வசனம் உட்பட வசனங்கள் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கின்றதென்றே சொல்லலாம். படத்தின் ஸ்பெஷல் எபக்ட் மற்றும் கிராபிக் காட்சிகள் என்பன இதற்க்கு முன்னர் எந்த இந்திய திரைப்படத்திலும் பார்க்காதது மட்டுமல்ல இனிமேலும் இது இந்திய திரைப்படங்களில் சாத்தியமா என்று நினைக்கவைக்கிறது.

எவ்வளவு திட்டமிடல் இருந்தால் இது சாத்தியமாகும்? எது செட் எது கிராப்பிக்ஸ் என்று தெரியாத அளவிற்கு படு பிரமாதமாக வந்திருக்கிறது. ஸ்பெஷல் எபக்ட் மற்றும் கிராபிக் காட்சிகளின் உதவி இல்லாவிட்டால் ஷங்கரால் இப்படி ஒரு படத்தை நிச்சயமாக நினைத்துகூட பார்த்திருக்கமுடியாது. ரஹுமானது இசையில் பாடல்கள் ஏற்கனவே பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியதால் பாடல்களை விடுத்து பின்னணி இசையை எடுத்துக்கொண்டால் ரஹுமானின் உழைப்பு நிச்சயம் வெற்றிபெற்றுள்ளதென்றே கூறலாம்.

இறுதிக்காட்சிகளில் ரகுமானின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் பலம். அதேபோல அடக்கி வாசிக்கவேண்டிய இடங்களையும் நன்கு உணர்ந்து அதற்கேற்றால்போல சிறப்பாக தனது பங்கை ரஹுமான் செய்துள்ளார். படத்தின் இன்னுமொரு மிகப்பெரும் பலம் ஒளிப்பதிவாளர் இரத்தினவேலு, 'கிளிமாஞ்சாரோ', 'காதல் அணுக்கள்' பாடல்களுக்கு கவிதை பேசிய இரத்தினவேலுவின் கமெரா 'அரிமா அரிமா'வில் தாண்டவமாடியுள்ளது, இறுதிக்காட்சிகளில் ஒளிப்பதிவு படத்தின் வேகத்திற்கு ஏற்றால்போல சிறப்பாக உள்ளது. ரஜினி மற்றும் ஐஸ்வர்யாவை இப்படி இளமையாக அழகாக காட்டியதற்கு இரத்தினவேல் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

படத்தொகுப்பாளர் அன்டனி ஆரம்பத்தில் சீரானவேகத்தில் சென்று கொண்டிருந்த எந்திரனை இறுதி 30 நிமிடங்களுக்கும் மின்னல்வேகத்தில் நகர்த்தவும் ரசிகர்களை கதிரையின் நுனிவரை கொண்டுவரவும் உதவியிருக்கிறார். ஆனாலும் சிட்டி நுளம்புடன் பேசும் காட்சி, ரயில் சண்டை என்பவற்றில் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டால் நன்றாக இருந்திருக்கும். அந்நியனுக்கு பின்னர் சிவாஜியில் ஒரு இடைவெளிவிட்டு மீண்டும் சங்கருடன் இணைந்த சாபுசிரில் சங்கரின் பிரம்மாண்டத்திற்கு தனது கைவண்ணத்தால் நியாயம் தேடியுள்ளார்.

இந்த படத்திற்கு 150 கோடி போதுமா என்கின்ற அளவில் சாபுவின் வேலைகள் படு பிரம்மாண்டமாக வந்துள்ளன. பிரம்மாண்டம் என்பதை வார்த்தையில் சொல்லி விபரிக்கமுடியாத அளவிற்கு சாபுவின் கலை அமைந்துள்ளது. படம் முழுவதும் இவரின் திறமை வியாபித்திருப்பதால் குறிப்பிட்டு இது நன்றாகவிருக்கிறது அது நன்றாகவிருக்கிறதேன்று சொல்லவேண்டிய வேலை எமக்கு இல்லை.

பீட்டர் கெயின்- படத்தின் இன்னுமொரு நாயகன், இவரது கைவண்ணத்தில் படத்தின் சண்டைகாட்சிகள் சர்வதேசதரத்துக்கு இணையாக படமாக்கப்பட்டிருக்கின்றன, அனைத்து சண்டைகாட்சிகலுமே சிறப்பாக வந்திருந்தாலும் இறுதிகாட்சிகளை என்னவென்று சொல்வது? அதேபோல நடன பயிற்சியாளர்களும் தங்கள் பங்கிற்கு பாடல்களுக்கு ஏற்றால்போல ரசிக்கும்படியான நடன அசைவுகளை வழங்கியிருக்கிறார்கள்.

இவ்வளவும் சொல்லிவிட்டு தயாரிப்பாளர் பற்றி ஒருவார்த்தை சொல்லவில்லை என்றால் நன்றாக இருக்காது, இப்படியொரு பிரம்மாண்டத்தை தயாரித்துமுடிக்கும்வரை பணத்தால் எந்த தடையும் வராமல் பார்த்துக்கொண்டதற்க்கு திரு.கலாநிதிமாறன் அவர்களுக்கு நன்றிகள்.

அப்படியானால் படத்தில் என்னதான் மைனஸ்?

ஐஸ்வர்யா காரில் இருக்கும்போது கூட இருக்கும் ரோபவை போலீசார் சரமாரியாக சுடுவது, அனைத்து வாகனங்களையும் மிதித்துத்தள்ளும் ரோபோகூட்டம் வசீகரனின் காரை மட்டும் மிதிக்காமல் துரத்துகிறது என ஓரிரு இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் கமர்சியல் படமொன்றை லாஜிக் மீறல்கள் இல்லாமல் எடுப்பது சாத்தியமில்லை என்பதால் இதுவொரு பெரியகுறையல்ல.

ரஜினி, ஷங்கர், ஐஸ்வர்யாராய், ரகுமான், ரத்தினவேலு, சாபுசிரில், அன்டனி, தயாநிதிமாறன் என பிரம்மாண்டமான இந்த கூட்டணியின் எந்திரன் நிச்சயமாக ஒரு ஜனரஞ்சகமான பக்கா பொழுதுபோக்குத் திரைப்படமென்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

மொத்தத்தில் எந்திரன் - இந்திரன்.

எந்திரனின் அட்டகாசமான் புகைப்படங்கள்..... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4909

நன்றி: http://eppoodi.blogspot.com/2010/09/blog-post_30.html

Edited by easyjobs

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஈசிஜொப் ஈசியாகவே எம்மைச் சொறியுறாரெடா. படம் உத்திக்கிச்ச. தமிழ்நாட்டில ஓடும் புலம்பெயர் தேசத்திலையும் ஓடும் ஏனெண்டால் இங்கையும் முணாங்கிளாசகள் இருக்குதுதானே. மாட்டின் சேட்டையும் மாட்டிக்கொண்டு டொங்கி ரூட்டில வந்த வின்சர் தியோட்டர் சனங்கள் அதுகளும் அதுகளின்டை வாரிசுகள் இருக்கும்வரைக்கும் ..... ஓடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோபட் போன்ற ஆங்கிலப் படங்களின் கலவையாம் இது. அப்படின்னா.. இது சுத்த வேஸ்டு. இதுக்கு ரஜனி ஸ்ரைலில ஒரு படம் எடுத்து பிழைப்பை ஓட்டி இருக்கலாம். :D :D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

ஐரோபட் போன்ற ஆங்கிலப் படங்களின் கலவையாம் இது. அப்படின்னா.. இது சுத்த வேஸ்டு. இதுக்கு ரஜனி ஸ்ரைலில ஒரு படம் எடுத்து பிழைப்பை ஓட்டி இருக்கலாம். :D :D

எந்திரன் படம் மாபெரும் என்ற செய்தி வந்துகொண்டு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எந்திரன் படம் மாபெரும் என்ற செய்தி வந்துகொண்டு இருக்கிறது.

தயாரிப்பு: சன் பிக்சேர்ஸ்

கலாநிதி மாறன்

நடிப்பு: ரஜனிகாந்த் ஐஸ்வரியா ராய்

இசை: ஆஸ்கர் ரகுமான்

இயக்கம்: சங்கர்

வெளிநாட்டு விநியோகம்: ஐங்கரன்.

இவ்வளவும் இருந்தா.. எந்த படத்தை தான் வெற்றிப்படமா காட்ட முடியாது.

ஒரே அடிதடி படத்தை பார்க்கிற தமிழ் ரசிகர்களுக்கு இது புதிசா இருக்கலாம். ஆனால் ஆங்கிலப் படம் பார்க்கிற மக்களுக்கு இதன் கதையில் இருந்து காட்சி அமைப்பு வரை அத்தனையும் கொப்பி என்பது அப்பட்டமா தெரியும். :D :D

  • தொடங்கியவர்

தயாரிப்பு: சன் பிக்சேர்ஸ்

கலாநிதி மாறன்

நடிப்பு: ரஜனிகாந்த் ஐஸ்வரியா ராய்

இசை: ஆஸ்கர் ரகுமான்

இயக்கம்: சங்கர்

வெளிநாட்டு விநியோகம்: ஐங்கரன்.

இவ்வளவும் இருந்தா.. எந்த படத்தை தான் வெற்றிப்படமா காட்ட முடியாது.

ஒரே அடிதடி படத்தை பார்க்கிற தமிழ் ரசிகர்களுக்கு இது புதிசா இருக்கலாம். ஆனால் ஆங்கிலப் படம் பார்க்கிற மக்களுக்கு இதன் கதையில் இருந்து காட்சி அமைப்பு வரை அத்தனையும் கொப்பி என்பது அப்பட்டமா தெரியும். :D :D

அந்தக் காலத்து புருஸ்லீ படத்தில் இருந்து, தற்போதைய Inception வரை நிறைய ஆங்கிலப் படங்கள் பார்த்துள்ளோம். ஆங்கிலப் படத்தின் பாதிப்பு சற்றும் இல்லாமல் இருக்கிறது படம். தயவுசெய்து படம் பார்த்துவிட்டு பின் கருத்து சொல்லவும் நண்பரே.

தயாரிப்பு : அம்பானியின் Big pictures.

நடிப்பு : விக்ரம் , ஐஸ்வர்யாராய்

இசை : ஆஸ்கார் ரகுமான்.

இயக்கம்: மணிரத்னம்

வெளியீடு: Big Pictures.

இவ்வளவு இருந்தும் படம் Flap. காரணம் ரஜினிகாந்த் இல்லை. நீங்கள் குறிப்பிட்ட அனைவரும் 0. பக்கத்தில் ரஜினி எனும் 1 இருந்தால்தான் எல்லாவற்றுக்கும் மதிப்பு.

Edited by easyjobs

  • கருத்துக்கள உறவுகள்

எந்திரன் - உணர்ச்சிகள் இல்லை....!

October 1, 2010

என் இனிய நண்பர்களே...!

ஆன்லைன் புக்கிங் தந்த ஆதரவில் எந்திரன் படத்திற்கு முதல் நாள் டிக்கெட் கிடைத்தது. ஆனால் வீட்டில் இருந்து கொஞ்சம் தொலைவில் இருக்கும் கொளத்தூர் கங்கா திரையரங்கில் தான் கிடைத்தது. பத்து டிக்கெட்டை எடுத்து வைத்துக்கொண்டு நான் பட்ட பாடு இருக்கே... அய்யுய்யுய்யோ.... சொன்னா நம்ப மாட்டீங்க... வர்றதுக்கு ஆள் இல்லைங்க... எப்படியோ நண்பரின் உறவினர், உறவினரின் நண்பர் என்று எப்படி எல்லாமோ தேடி ஆள் சேர்த்துவிட்டேன். பதிவில் திரைக்கு முன் என்று போட்டு ஒரு பத்தியை இணைப்பதற்காக ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே திரையரங்கிற்கு சென்றுவிட்டேன். ஆனால் பெரிய அளவில் ஆரவாரமில்லை. இரண்டே பேனர்கள் மட்டுமே கட்டியிருந்தனர். விசிலடிச்சான் குஞ்சுகள் சிலர் எதற்காக கத்துகிறோம் என்ற காரணமே தெரியாமல் கத்திக் கொண்டிருந்தனர். அரங்கின் உள் நுழையும் வரை சுற்றிச்சுற்றி வேடிக்கை பார்த்தபடி இருந்தேன். தனிப்பத்தி போடும்படி எதுவும் சுவாரஸ்யமாக நடக்கவில்லை. எனவே நேரடியாக விமர்சனத்திற்கு செல்வோம்....

அதற்கு முன்னால் சில வரிகளை சொல்லியே ஆகவேண்டும். எனக்கு ஷங்கரையும் ரஜினியையும் கொஞ்சம் கூட பிடிக்காது. ஆனால் அதையெல்லாம் தாண்டி படம் மிகவும் பிடித்திருந்தது, திரைக்கதை துரித வேகத்தில் அமைந்திருந்தது, அது மட்டுமில்லாமல் பல கோடி செலவு செய்து பத்து ஆண்டுகள் பாடுபட்டு எடுத்த படத்திற்கு கண்டிப்பாக பாசிடிவ் விமர்சனம் எழுதியே ஆகவேண்டும் என்றெல்லாம் தோன்றியது முதல்பாதி முடியும் வரை. அதன்பிறகு கொஞ்சம் தலை சுற்றியதும், வயிற்றுப்போக்கு ஏற்பட்டதும் ஏன் என்று தெரியவில்லை.

கதைச்சுருக்கம்

விஞ்ஞானி வசீகரன், தனது பத்து வருட உழைப்பில் சகலகலாவல்லவனாக ரோபோ ஒன்றினை உருவாக்குகிறார். அதுபோல பல ரோபோக்களை உருவாக்கி இந்திய ராணுவத்திற்கு பரிசளிக்க வேண்டுமென்பதே அவரது லட்சியம். ஆனால் இதற்கு நேர்மாறான எண்ணம் கொண்டவர் வசீகரனின் விஞ்ஞான குருவான விஞ்ஞானி போஹ்ரா. அழிவு சக்தி கொண்ட ரோபோக்களை உண்டாக்கி தீவிரவாதங்களில் ஈடுபடும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவேண்டுமென்பதே அவரது விருப்பம். இடையில் இங்கே வசீகரனுக்கும் மருத்துவக்கல்லூரியில் படிக்கும் சனாவுக்கும் காதல். உன் ரோபோ முட்டாள் ரோபோ என்று விஞ்ஞானி போஹ்ரா குற்றம் சாட்டியதால் வசீகரன் ரோபோவுக்கு உணர்வுகளை கற்பிக்க அதற்கும் சனா மீது காதல் வருகிறது. வசீகரனுக்கும் ரோபோவுக்கும் நடக்கும் காதல் தகராறில் ரோபோவை உடைத்து குப்பையில் போடுகிறார் வசீகரன். விஞ்ஞானி போஹ்ரா குப்பையை அள்ளிக்கொண்டு வந்து கேடு கெட்ட சிப் ஒன்றினை சொறுக ரோபோ மனித இனத்திற்கு எதிராகி பல உயிர்களை கொன்று குவிக்கிறது விஞ்ஞானி போஹ்ரா உட்பட. கடைசியில் சனாவுடன் கை கோர்ப்பது வசீகரனா ரோபோவா என்பதே மீதிக்கதை. என்னது... தலை சுற்றுகிறதா... எனக்கும் அப்படித்தாங்க இருந்தது.

விரிவான கதை: (திரையரங்கில் தான் பார்ப்பேன் என்று அடம் பிடிப்பவர்கள் அடுத்த இரண்டு பத்திகளை ஸ்கிப் செய்துவிடவும்)

முதல் பாதி முழுக்க சிட்டி செய்யும் அதிசயங்களை வைத்து ஜாலியாக கதையை நகர்த்தியிருக்கிறார்கள். ரஜினி உருவாக்கிய ரோபோவின் பெயர் தான் சிட்டி. வழக்கமாக ரஜினி ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துகொண்டும் ஒரு குத்துமதிப்பாக அரசியல் வரிகளை இணைத்து ரசிகர்களை கிறுக்கர்களாகவும் மாற்றும் ஒப்பனிங் சாங் இந்தப் படத்தில் இல்லை. அதற்கு பதிலாக டைட்டில் பாடலாக புதிய மனிதா பாடலும் பேக்ரவுண்டில் ரஜினி எந்திரனை அசெம்பிள் செய்யும் காட்சியும் சிறப்பாக பொருந்தியிருந்தது. டைட்டிலில் கலாநிதி மாறன் பெயர் போட்டதும் ஏதோ இவர்களும் கலாநிதி மாறனும் ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள் போல ஒரு கும்பல் ஓ வென்று கத்தி உயிரை வாங்கியது. இவ்வாறாக ரோபோ செய்வதில் ரஜினி பிஸியாக இருக்க காதலி ஐஸ் கோபித்துக்கொள்கிறார். ஐஸை சமாதானப்படுத்த ரஜினி போக அங்கே சில முத்த பரிமாற்றங்கள். (நோ... நோ... ரசிகர்கள் யாரும் கோபப்பட வேண்டாம்... ஒரு தாத்தா தனது பேரக்குழந்தையின் மீது கொண்ட பாசத்தில் முத்தம் கொடுத்ததாக நினைத்துக்கொள்வோம்). அப்படியே கட் பண்ணா பிரேசில் பாலைவனத்துல ரஜினியும் ஐஸும் காதல் அனுக்கள் டான்ஸ் ஆடுறாங்க. சும்மா சொல்லக்கூடாது... உண்மையில் பாலைவனத்திற்கு நடுநடுவே ஏரிகள் அமைந்த அந்த லொகேஷன் படு சூப்பர். அடுத்த காட்சியில் எந்திரனை விஞ்ஞானிகள் மத்தியில் ரஜினி அறிமுகப்படுத்த உடன் இருக்கும் ஐஸ் இம்ப்ரெஸாகி எந்திரனை இரண்டு நாட்களுக்கு அவரது வீட்டுக்கு அழைத்து செல்கிறார். பரீட்சைக்கு படிக்கும் ஐஸை தொந்தரவு செய்யும் பக்கத்து வீட்டு பக்கிகள், சவுண்ட் சர்வீஸ் கும்பல் ஆகியோரை அடித்து ஹீரோயிசம் காட்டுகிறார். பரீட்சைக்கு பின்நவீனத்துவ முறையில் பிட் கொடுத்து பாஸாக்குகிறார். பரீட்சை முடிந்து திரும்பும்போது மின்சார ரயிலில் அடியாள் கும்பலுடன் ஒரு பைட் சீன். மேற்படி சீனில் கிராபிக்ஸ் ரொம்பவே தூக்கல். குழந்தைகள் அதிகம் ரசிப்பார்கள். எந்திரனின் ஆற்றல் ஆபத்தானது என்று காரணம் கூறி அதனினை அப்ரூவ் செய்ய மறுக்கிறார் விஞ்ஞானி வில்லன். பின்னர் ஒரு தீ விபத்தில் எந்திரனை வைத்து ரஜினி சாகசங்கள் நிகழ்த்திக்காட்ட முயன்று அது விபரீதத்தில் முடிகிறது. அதற்குப்பின் எந்திரனுக்கு ஆறாவது அறிவாக உணர்ச்சிகளை கற்றுத்தருகிறார் ரஜினி. உணர்ச்சிகளை கற்றுக்கொண்ட எந்திரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கும் ஒரு கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம் பார்க்கிறார். உணர்ச்சிப்பூர்வமான அந்த காட்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த சம்பவம் காரணமாக ஐஸ் உணர்ச்சிவசப்பட்டு எந்திரனுக்கு முத்தம் கொடுக்க, எந்திரனுக்கு லவ் மூட் ஸ்டார்ட் ஆகிருதுங்க. இடைவேளை.

endhi1.jpg

இடைவேளை முடிந்ததும் ஏதோ கொசு மருந்து விளம்பரம் போட்டுவிட்டார்கள் என்றே எண்ணினேன். ஐஸை கடித்த கொசுவை எந்திரன் விரட்டி பிடிப்பதும் கொசு தங்களுக்குள்ளாக பேசிக்கொள்வதும் மொக்கை காமெடி. ஐஸின் பிறந்தநாள் விழாவில் ரஜினியும் எந்திரனும் ஐஸை போட்டி போட்டு காதலிக்க ஒரு கட்டத்தில் எந்திரன் ஐஸுக்கு முத்தம் கொடுத்து விடுகிறது. (யூ டூ ப்ரூட்டஸ்). ஐஸை தானும் காதலிப்பதாக சொல்லும் எந்திரனிடம் ரஜினியும் ஐஸும் சேர்ந்து யதார்த்தத்தை உணர்த்துகிறார்கள். எனினும் காதலை கைவிட முடியாமல் தவிக்கும் எந்திரனை உருவாக்கிய ரஜினியே அழித்து விடுகிறார். சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கும் வில்லன் உடைந்து போன பாகங்களில் இருந்து மீண்டும் எந்திரனை உருவாக்கி அதில் அழிவு சக்தி கொண்ட சிப் ஒன்றினை இணைத்துவிடுகிறார். அதன் பிறகு சுமார் ஒரு மணி நேரத்திற்கு சிட்டியின் அட்ராசிட்டி. ஹாலிவுட் படங்களில் வருவது போல அட்டகாசமான கிராபிக்ஸ் காட்சிகள். (ராம நாராயணனின் குட்டிப் பிசாசு படத்தில் வருவது போல என்றுகூட சொல்லலாம்). நீண்ட நெடிய கிளைமாக்ஸ் காட்சிக்குப்பின் ரஜினி எந்திரனின் உடலில் இருந்த அழிவுசக்தி சிப்பை கழட்டி எரிய, கட் பண்ணா கோர்ட். (அட... வழக்கமா தமிழ் சினிமாக்கள் அங்க தானப்பா முடியும்). இறுதிக்காட்சியில் ரஜினியும் ஐஸும் இணைய எந்திரனை மட்டும் பிரித்து எறிந்துவிடுகிறார்கள். கடைசியாக மனிதர்களின் கோபம், பொறாமை போன்ற உணர்வுகள் பற்றி எந்திரன் சொல்லும் மெசேஜ் நன்றாக இருந்தது.

கிராபிக்ஸ்:

படத்தின் நாயகன் கிராபிக்ஸ் தான் ரஜினி எல்லாம் அப்புறம் தான். எது கிராபிக்ஸ் எது உண்மை என்று கண்டுபிடிக்க முடியாதபடி செய்வதே உண்மையான கிராபிக்ஸ். அதை கச்சிதமாக செய்திருக்கிறார்கள் குழுவினர். இவர்களுக்கு உடந்தையாக கலை இயக்குனர் சாபு சிரிலும் கலக்கி எடுத்திருக்கிறார். படத்தில் ரஜினி ஸ்டைல் என்று சொல்லிக்கொள்ளும் பலதையும் கிராபிக்ஸ் மூலமே செய்திருக்கிறார்கள் என்பதால் ரஜினி ரசிகர்கள் ரொம்பவும் சிலிர்த்துக்கொள்ள வேண்டாம்.

endhiran-rajinikanth.jpg

ரஜினி:

விஞ்ஞானி வசீகரனாகவும் ரோபோ சிட்டியாகவும் இரட்டை வேடம். இருப்பினும் வசீகரன் கதாப்பாத்திரத்தை மட்டுமே ரஜினியாக பார்க்க முடிகிறது. வழக்கமாக ரஜினி மனிதராக வந்து செய்யும் சாகசங்களை எல்லாம் இந்தப் படத்தில் ரோபோவாக வந்து செய்கிறார். ஷங்கரின் பத்து வருட கனவு நிறைவேறியதா என்று தெரியவில்லை ஆனால் ரஜினியின் பத்து வருட ஐஸ் கனவு இந்தப் படத்தில் நிறைவேறியிருக்கிறது.

ஐஸ்:

இந்தப் படத்தில் ஐஸுக்கு எதிர்பார்த்ததை விட முக்கியமான வேடம். ஐஸை பார்த்ததும் ரோபோவுக்கே காதல் வரும்போது நமக்கு வராதா. ஐஸின் உடை சம்பந்தப்பட்ட விஷயத்தில் மணி ரத்னத்திற்கு நான் ஒன்றும் சளைத்தவன் அல்ல என்று ஷங்கர் நிரூபித்திருக்கிறார்.

46387869587483788384.jpg

மற்றும் பலர்:

படத்தின் வில்லன் யாரோ டேனி டென்சொன்பா என்று சொன்னார்கள். ஆனால் அவர் சுத்த டம்மி பீசுங்க. எந்திரனுக்கு ஜட்டி மாட்டி விடும் உதவியாளர்களாக கருணாசும் சந்தானமும். சந்தானத்தை அநியாயத்துக்கு வேஸ்ட் பண்ணியிருக்காங்க. கொச்சின் ஹனீபாவும் கலாபவன் மணியும் தலா ஒரு மொக்கை காட்சியில் வந்து செல்கிறார்கள். பீட்டர் ஹெயினும் சாபு சிரிலும் ஆளுக்கொரு காட்சியில் முகம் காட்டுகிறார்கள்.

danny-denzongpa-endhiran-villain.jpg

இசை & வசனம்:

இசையை பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை ஏனென்றால் ரசிகர்கள் போட்ட கூச்சலில் ஒன்றையும் ரசிக்க முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக ரகுமான் கலக்கி இருப்பார் என்று புதிய மனிதா டைட்டில் இசையை கேட்ட போதே உணர முடிந்தது. சுஜாதாவின் வசனங்களும் அதுபோல தான். இரைச்சலில் ரசிக்க முடியவில்லை. இவர்கள் இவருக்காகவே பிறிதொரு நாளில் ரசிகர்கள் கூட்டம் ஆடி ஓய்ந்தபிறகு நைட்ஷோ பார்க்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன்.

எனக்குப் பிடித்த காட்சி:

ஐஸ் பரிட்சைக்காக படித்துக்கொண்டிருக்கும்போது பக்கத்தில் இருக்கும் மாரியாத்தா கோவிலில் சவுண்டாக பாடலை ஒலிபரப்பி இம்சை கொடுக்கிறது ஒரு கும்பல். அதை தட்டி கேட்கப்போகும் எந்திரன் அவர்களுடன் சண்டை போடுகிறார். அப்போது இரண்டே இரண்டு கைகளில் கத்தி, அரிவாள் என்று பல்வேறு ஆயுதங்களுடன் காட்சி அளிக்கும் எந்திரனை பார்த்து பெண்கள் சாமியாடுவது போலவும் சிலிர்ப்பது போலவும் காட்டி இருந்தது சிறப்பாக இருந்தது.

இந்தப் பதிவிற்கு ஏன் இந்தப் பெயர் வைத்தேன் என்று கேட்கிறீர்களா...? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்... இந்தப் படத்தில் ரஜினி தான் ஹீரோ என்று சொல்கிறார்கள். ஆனால் 90 சதவீதம் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் கிராபிக்ஸ். ஐஸ் சம்பந்தப்பட்ட சில ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் ரஜினி டூப் - கிராபிக்ஸ் எதுவும் இல்லாமல் நடித்திருப்பார் போல. பேய்கள் பற்றி ரஜினியும் வடிவேலும் பேசிக்கொள்ளும் சந்திரமுகி காட்சியை கொஞ்சம் நினைவுக்கு கொண்டு வாருங்களேன். அந்தக் காட்சியில் இருந்த அந்த ஒரிஜினாலிடி இந்தப் படத்தில் சிற்சில காட்சிகளில் மட்டுமே காண முடிந்தது. எனவே தான் சொல்கிறேன்...

எந்திரன் - உணர்ச்சிகள் இல்லை....!

என்றும் அன்புடன்,

N.R.PRABHAKARAN

http://philosophyprabhakaran.blogspot.com/2010/10/blog-post.html

உலகத்தமிழர் ஆவலுடன் எதிர்பார்த்த எந்திரன் திரைப்படம். :D

First on net

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழர் ஆவலுடன் எதிர்பார்த்த எந்திரன் திரைப்படம். :D

உலகத் தமிழர் என்றால்...... எல்லா தமிழரும், விசுக்கோத்துகள் என்று அர்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காலத்து புருஸ்லீ படத்தில் இருந்து, தற்போதைய Inception வரை நிறைய ஆங்கிலப் படங்கள் பார்த்துள்ளோம். ஆங்கிலப் படத்தின் பாதிப்பு சற்றும் இல்லாமல் இருக்கிறது படம். தயவுசெய்து படம் பார்த்துவிட்டு பின் கருத்து சொல்லவும் நண்பரே.

The most expensive film ever made in India has been released.

Tamil star Rajinikanth's latest film Endhiran (The Robot) has been made with a budget of 1.6bn rupees ($35m; £23m), according to the film's makers.

Fans queued for tickets overnight in the southern city of Madras (Chennai) ahead of Friday's release. Analysts expect box-office records to be broken.

The 60-year-old actor has a huge fan following. Opposite him in the film is Bollywood superstar Aishwarya Rai.

A science-fiction fantasy thriller, Endhiran is being screened in nearly 2,000 cinemas worldwide. The film has also been released in Hindi and Telugu.

Rajinikanth's fans celebrated the release by lighting firecrackers and beating drums. In Madras, his larger than life-size posters were washed with gallons of milk, a sign of purity.

Huge expectations were generated for the film over the past few years - its makers claimed that its technical effects would challenge Hollywood films like Terminator and Godzilla. :unsure::)

Those who have seen the film say its technology and graphics are far superior to other Indian films.

Rajinikanth has made more than 100 films and is Tamil cinema's biggest superstar. His movies are a hit not just in India but in other parts of the world which have large Tamil populations.

His films are generally a colourful spectacle with song-and-dance routines and death-defying stunts.

Critics, however, say the actor is a bad role model - in some of his past movies he was shown stylishly lighting cigarettes and activists say this promotes smoking among his fans, who include many children.

A former bus conductor, Rajinikanth started his film career as a villain. Today, at 60 he is called the "ageless superstar" and has a cult-like following.

His critics say it could be time for him to retire. The Robot visibly shows his age in spite of heavy make-up.

But, going by the reaction of his fans, it seems Rajinikanth has nothing to fear.

http://www.bbc.co.uk/news/world-south-asia-11454565

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபஞ்சமே ஆவலோடை எதிர்பார்த்த எந்திரனை...

ஜேர்மன்காரனும் உந்த படத்தை பாக்க பால்ச்செம்போடை ஒற்றைக்காலிலை நிக்கிறான் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எந்திரன் படம் இப்பத்தான் பார்த்தேன் எனக்கென்னவோ இயந்திரன் சுஜாதாவின் " என் இனிய இயந்திராவின் தழுவல் இல்லை" இது முன்னர் தூர்தர்சன் சீரியல் பார்த்தவர்களுக்கு தெரியும்.. மற்றபடி கதை எல்லாம் உபேந்திராவின் "காலிஉட்" கதையை சில மாறுதல் களோடு...ஒத்து போகிறது... :rolleyes:

Story

Surendra (Upendra) and Upendra (Upendra) are identical twins. Surendra is a research scientist in Los Angeles working with an old professor (Anant Nag). Upendra, a filmmaker from India, lives with his brother Surendra. Upendra's aim to is make an Oscar winning Hollywood film. They have a beautiful blond neighbor called Manisha (Felicity) who is an American Indian. Surendra is a shy guy and Upendra is a dashing guy. Surendra admires Manisha, but Manisha likes Upendra for his vigor.

Depressed Surendra tells his professor about his problem. Then the professor creates a robot which looks and acts like Upendra. That robot acts the way Manisha wants it to be and makes Manisha fall in love with Surendra. The professor's idea is to destroy the robot once Manisha falls in love with Surendra. In the process, the robot becomes selfish and it wants to remain as lover of Manisha. The robot starts misbehaving and tries to suppress Surendra. To counter this robot, the professor creates a look-alike of Manisha so that robot Manisha attracts robot Surendra. After coming to know about these look - alike and powerful robots, mafia in USA kidnaps these people. The climax deals with putting an end to this troublesome triplet.

http://www.idlebrain.com/movie/archive/mr-hollywood.html

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.