Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவங்களுக்கு மேலாலைதான் நடந்து வந்தம் ஒரு பெண் போராளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
audio.gifவீரத்தின் விலாசங்களாக வெற்றியின் அடையாளங்களாக ஒளிர்ந்தவர்களின் வழியில் வந்தவள்தான் இவள். பெண்ணின விடுதலையின் அடையாளச் சின்னங்களாய் அணிவகுத்த ஆயிரமாயிரம் தங்கைகளின் அக்காக்களின் வழியில் இவளும் ஒரு பொழுது ஊரிலிருந்து புறப்பட்டுச் சென்றாள். அடக்குமுறைகளினாலும் அடக்குமுறையாளர்களினாலும் அதிகம் வலிகள் சுமந்த கிழக்கு மாகாணத்திலிருந்து தன்னினவிடுதலைக்காகச் சென்றவள் இன்று மறதிகளுடனும் மனநிலைக் குழப்பத்துடனும் ஊனமாகித் திரும்பியிருக்கிறாள் ஊருக்கு. அக்காக்கள் இருவருக்குப் பின்னால் பிறந்த குடும்பத்தின் கடைக்குட்டி காணாமல் போன பொழுது அழுதவர்கள் அவள் திரும்பி வரும்வரை இவள் நினைவோடிருந்தார்கள். இன்று இவளோ நினைவுகளில் கூட பல விடயங்களை புரிந்து கொள்ளச் சிரமப்படுகிறாள். தலையில் ஏற்பட்ட காயம் மறதியையும் ஒற்றைக்காலின் ஒற்றைக்கையின் இயக்கங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக பறித்துக் கொண்டிருக்கிறது. தலைக்குள் இருக்கின்ற எறிகணைத்துகள்களை எடுத்தால் இவள் உயிரை இழந்துவிடுவாள். எடுக்காதுவிட்டால் வாழும் வரையும் சாவின் வேதனையை அனுபவித்துப் போகவேண்டிய நிலமை. 32வயதுடைய இவளுக்கு இன்று மிஞ்சியிருப்பது வயதான பெற்றோர்கள் மட்டுமே. வறுமையால் சூழப்பட்ட குடும்பம் இவள் வருகையால் இன்னும் நொந்துபோயிருக்கிறது. மீளவும் உயிருடன் ஏன் வந்தேன் என அழுகின்ற இவளுக்கு ஆறுதல் அம்மாவும் அப்பாவும் தான். சுகமாகப்போனவள் முடமாகத் திரும்பி வந்திருப்பதுபற்றி அதிகம் துயரமடைகின்றவள் தன் அடுத்த நேரச்சோற்றுக்கே அல்லலுறுகிறாள். எத்தனையோர் பேர் இவளுக்கு உதவுவதாக வாக்குறுதிகள் வழங்கியும் எவரது உதவிகளும் கிடைக்காத நிலமையில் நேசக்கரம் பயனாளர் ஒருவரால் இனங்காணப்பட்டு எம்மிடம் வந்திருக்கிறாள். எத்தனையோ இவள்போன்றவர்களுக்கு நேசக்கரம் கொடுத்த உங்களை நம்பி இவளது குரலை எடுத்துவருகிறோம். யாராவது இவளுக்கு நேசக்கரம் கொடுப்பீர்களென்ற நம்பிக்கையில் இதோ இவளது குரலிலிருந்து….
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

ஒலிப்பதிவை கேளுங்கள். குறிப்பிட்ட பெண் கூறிய சொல்தான் சவம் என்றது. அதனை அப்படியே போட்டுள்ளேன். அந்தப்பெண் சொல்வதை கேளுங்கள். அவளுக்கு ஏதாவது சிறு உதவி உங்களால் செய்ய முடிந்தால் மகிழ்ச்சி.

இந்தப்பெண்ணுக்கு ஒரு சுயதொழில் செய்வதற்கு இலங்கைரூபா இருபதாயிரம் யாராவது மனமுவந்து வழங்கினால் இந்தப் பெண் உங்களை மறக்கவேமாட்டாள். இவளுக்காக உதவும் உள்ளம் படைத்தவர்களை இறைஞ்சுகிறேன் நண்பர்களே யாராவது உதவுங்கள்..

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் 20000ஆயிரம் தருகிறேன் சாந்தி அக்கா. திங்கள்,அல்லது செவ்வாய்கிழமை அனுப்பிவிடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் 20000ஆயிரம் தருகிறேன் சாந்தி அக்கா. திங்கள்,அல்லது செவ்வாய்கிழமை அனுப்பிவிடுகிறேன்.

நன்றி ஐயா

கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் நிச்சயம் மனதில் இருத்துவார்

சாந்தி,

நீங்களும் சாத்திரியாரும் தாயக உறவுகளுக்கு செய்யும் கடமைக்காய் நன்றி. எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசீர்வதித்துக் காப்பாராக. நான் 30 பவுண்ட்கள் தருகிறேன். பணம் கட்டுவதற்கான இணைப்பு தெரியாத மொழியிலே உள்ளது. இலகுவான வழியை அறியத்தரவும்.

நிறைய செய்ய ஆசை. ஏற்கனவே எல்லை கிராமங்களில் உள்ள பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு உதவி செய்வதால் சிரமமாயுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் 20000ஆயிரம் தருகிறேன் சாந்தி அக்கா. திங்கள்,அல்லது செவ்வாய்கிழமை அனுப்பிவிடுகிறேன்.

நன்றிகள் ஜீவா. உங்கள் உதவி நிச்சயம் அந்தப்பெண்ணை மீளவும் நம்பிக்கையுடன் வாழ வழிவகுக்கும்.

சாமிகள் இத்தகையோரில்தான் வாழ்வதான எனது நம்பிக்கை வீண்போகவில்லை.

நன்றி ஐயா

கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் நிச்சயம் மனதில் இருத்துவார்

உங்களுக்கு ஒரு பச்சை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி,

நீங்களும் சாத்திரியாரும் தாயக உறவுகளுக்கு செய்யும் கடமைக்காய் நன்றி. எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசீர்வதித்துக் காப்பாராக. நான் 30 பவுண்ட்கள் தருகிறேன். பணம் கட்டுவதற்கான இணைப்பு தெரியாத மொழியிலே உள்ளது. இலகுவான வழியை அறியத்தரவும்.

நிறைய செய்ய ஆசை. ஏற்கனவே எல்லை கிராமங்களில் உள்ள பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு உதவி செய்வதால் சிரமமாயுள்ளது.

வணக்கம் thappili,

இணையப்பக்கம் இன்னும் வேலை நடந்து கொண்டிருப்பதால் பேபால் இணைப்பு டொச்மொழியிலேயே இருக்கிறது. இன்று கட்டாயம் ஆங்கிலத்திற்கு மாற்றிவிடுகிறேன். ஏற்கனவே மச்சான் ஒருதரமு் சொல்லியிருந்தார் ஆனால் மறந்துவிட்டது. நன்றிகள் ஞாபகப்படுத்தியமைக்கு.

இது ஆங்கில இணைப்பு - https://www.paypal.com/us/cgi-bin/webscr?cmd=_flow&SESSION=slXvD8O-Oeyrz4c7S9WOmuzO_5RZ4UbsCtCTKr8GVu0NRsqZ5Q0_y7FRCCm&dispatch=5885d80a13c0db1f8e263663d3faee8dc18bca4c6f47e633b393e284a5f8a8f8

ஏற்கனவே நீங்கள் உதவிகள் செய்து கொண்டிருக்கும் நிலமையில் எமது திட்டத்துக்கும் உதவ வந்திருக்கிறீர்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த திட்டத்தில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்..! :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த திட்டத்தில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்..! :unsure:

இசைக்கலைஞன்,

இந்த இணைப்பில் - http://www.yarl.com/forum3/index.php?showtopic=75836 உள்ளவருக்கு ஏதாவது உங்களால் செய்ய முடியுமாயின் செய்யுங்கள். இந்தக்குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கிறது. ஏற்கனவே நாட்டுக்காக நிறைய இழந்துவிட்ட குடும்பம். இந்த குரலைக் கேளுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன்,

இணைப்பில் உள்ள குரலுக்குரிய குடும்பமும் ஏதாவது சுயதொழில் செய்யவே உதவிகோரியுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் 20000ஆயிரம் தருகிறேன் சாந்தி அக்கா. திங்கள்,அல்லது செவ்வாய்கிழமை அனுப்பிவிடுகிறேன்.

உருகி போகிறேன் ஐயா தங்களின் உயர்ந்த உள்ளம் கண்டு,

  • கருத்துக்கள உறவுகள்

நான் 20000ஆயிரம் தருகிறேன் சாந்தி அக்கா. திங்கள்இஅல்லது செவ்வாய்கிழமை அனுப்பிவிடுகிறேன்.

ஜீவா அவர்களிற்கு உளமார்ந்த நன்றிகள்;. இனிவரும் காலங்களி;ல் யாழ் கள உறவுகள் வீண் விவாதங்களிலும் விதண்டாவாதங்களிலும் வேறு அரசியல் விடயங்களிலும் பக்கம் பக்கமாக எழுதி பொழுதை போக்குவதை விடுத்து இது போன்ற ஆக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உண்மையான தாயக நேசிப்பாக அமையும் ..இதை தவிர்த்து வெளிநாடுகளில் அமைப்பு கட்டி அடிபடுவது எதற்கும் உதவாது நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

தங்களது வேலைகளுக்கு மத்தியில்

இவ்வளவு நேரத்தையும் ஒதுக்கியது பெரியவிடயம்

ஆனால்..............???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்தி அக்கா,

இன்று பணம் அனுப்பி உள்ளேன். கிடைத்ததும் சொல்லுங்கள்.

ஜீவா அவர்களிற்கு உளமார்ந்த நன்றிகள்;. இனிவரும் காலங்களி;ல் யாழ் கள உறவுகள் வீண் விவாதங்களிலும் விதண்டாவாதங்களிலும் வேறு அரசியல் விடயங்களிலும் பக்கம் பக்கமாக எழுதி பொழுதை போக்குவதை விடுத்து இது போன்ற ஆக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உண்மையான தாயக நேசிப்பாக அமையும் ..இதை தவிர்த்து வெளிநாடுகளில் அமைப்பு கட்டி அடிபடுவது எதற்கும் உதவாது நன்றி வணக்கம்

பாரிஸில் ஒரு புதிய துரோகி.......

சாந்தி நீங்கள் இணைத்த ஆங்கில இணைப்பில் Fatal Failure என்று வருகிறது. தனி மடல் அனுப்பியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா,

இன்று பணம் அனுப்பி உள்ளேன். கிடைத்ததும் சொல்லுங்கள்.

இந்த ஜீவா

வெளிநாட்டில் எந்த விசாவில் இருக்கிறார்

எப்படியான வேலை செய்கின்றார் என்பது தெரிந்தவன் என்றரீதியில்.................

எமது மக்கள் பிழைத்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை வருகிறது

இவர் போன்ற இளைஞர்களின் கைகொடுப்பை காணும்போது.

மீண்டும் மீண்டும் நன்றி ஐயா.

வழிமொழிகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா,

இன்று பணம் அனுப்பி உள்ளேன். கிடைத்ததும் சொல்லுங்கள்.

நீங்கள் அனுப்பிய 175€ நேற்று (05.10.10) கிடைத்துள்ளது. அடுத்தவாரம் உரிய பெண்ணைச் சென்றடையும். பணம் பெற்றுக்கொண்டதன் பின்னர் உரியவரிடமிருந்து கடிதம் படங்கள் வரும். பின்னர் அஞ்சலிடுகிறேன்.

இசைக்கலைஞன் - 53,06€ தப்பிலி - 38,89€ ஆகியோரின் பங்களிப்பு இந்த இணைப்பில் http://www.yarl.com/forum3/index.php?showtopic=75836 உதவி கோரியுள்ள குடும்பத்துக்கு அனுப்புகிறேன்.

தமிழன் (இவர் ஒரு தமிழகத்து உறவு) 66,57 € இந்த இணைப்பில் உள்ள http://www.yarl.com/forum3/index.php?showtopic=75908குடும்பத்துக்கு மாதாந்த உதவியாக 100கனேடிய டொலர்களை உதவ முன்வந்து முதலாவது கொடுப்பனவை அனுப்பியிருக்கிறார். உரிய குடும்பத்திற்கு வங்கிக்கணக்கு எதுவும் இல்லாமையால் முதல் கட்ட உதவி நேசக்கரம் வங்கியூடாக அனுப்பப்படுகிறது. அடுத்த முறையிலிருந்து இந்த உதவி நேரடியாக தமிழன் அவர்கள் செய்யவுள்ளார். இக்குடும்பம் ஓரளவு வளமைக்குத் திரும்பியதும் அவர்களுக்கான சுயதொழில் வேலையொன்றைச் செய்து கொடுப்பதற்கும் முன்வந்துள்ளார்.

தேவையறிந்து உதவிகள் வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

உதவி செய்த ஜீவா உட்டபட அனைவருக்கும் நன்றி.மற்றும் இந்த திரியில் நடக்கும் சில வாதப்பிரதி வாதங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ நான் காரணமாகி விட்டேன்.அதற்க்கு சகலரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.தயவு செய்து எங்களுக்குள் அடிபட்டுக்கொன்டிருக்காமல் ஒற்றுமையாய் இருப்போம்.ரதி,மற்றும் விசுகு எந்த அரசியல் எம்மமை நன்பர்களாக்கியதோ அதே அரசியலால் நாம் பிரியக்கூடாது. :) நன்றி.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜீவாவின் உதவியுடன் குறித்த பெண் தனது சுயதொழில் முயற்சியை கடந்தவாரம் புதன்கிழமை ஆரம்பித்துள்ளதாக இன்று தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். மீண்டும் ஜீவா உங்களுக்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.