Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எந்திரன் பார்த்தேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எந்திரன் பார்த்தேன்

அ.முத்துலிங்கம்

நான் என் வாழ்க்கையில் எந்த திரைப்படத்தையும் முதல் நாள், முதல் காட்சி பார்த்தது கிடையாது. நாற்பது வருடங்களுக்கு முன்னர் அது இலங்கையில் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று. கேட் பாய்ந்தோ, சுவரில் தொங்கியோ, ஆட்களின்மேல் நடந்தோ போக சாத்தியப்பட்டவர்களுக்கே அது முடியும். ஆகவே படத்தை 'இன்றோ நாளையோ மாற்றிவிடப் போகிறார்கள்' என்று செய்தி வந்ததும் போய்ப் பார்ப்பேன். அநேகமாக என்னுடைய நண்பர்கள் அந்தப் படம் பார்த்ததையே அப்போது மறந்துவிட்டிருப்பார்கள்.

கனடாவில் ‘எந்திரன்’ வருகிறது என்றதும் வழக்கம்போல பெரிய பரபரப்பும் ஆயத்தங்களும் தெரிந்தன. பகல் காட்சி, இரவுக்காட்சி, நடுஇரவுக்காட்சி என்று பல காட்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். தமிழ்நாட்டில் ஒக்டோபர் முதல் தேதிதான் படம் ஆரம்பம், ஆனால் கனடாவில் செப்டம்பர் 30ம் தேதியே பார்த்துவிடலாம். முன்பதிவு செய்யவேண்டும் என்று பயமுறுத்தியபோது சிறிது தயக்கம் ஏற்பட்டது. வாழ்நாள் சாதனை என்று தொடங்கியபின்னர் இதையெல்லாம் பார்க்கக்கூடாது. முதல் நாள், முதல் காட்சி சாதாரணமானதா, நான் பார்த்த பின்னர்தான் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கானவர்கள் பார்க்கப் போகிறார்கள்.

படத்துக்குப் பெரிய கூட்டம் வரும் என்று நினைத்தேன். படம் தொடங்கியபோது 600 ஆட்கள் இருக்கக்கூடிய வசதிகள் கொண்ட அரங்கில் நூற்றைம்பது பேர் வந்திருந்தார்கள். அதிலே ஒரு பத்துப்பேர் ரஜினி திரையில் தோன்றியபோது விசில் அடித்தார்கள். உலக அழகி வந்தபோது அதுவும் இல்லை. படத்தைப் பற்றி நான் ஒன்றுமே எழுதப் போவதில்லை. அதை எழுதுவதற்காக இரண்டு வருடங்களாகத் தங்களைக் தயார் செய்துகொண்டிருந்தவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் எழுதுவார்கள். சுஜாதாவின் கதை என்பது தெரிகிறது. ஒவ்வொரு திருப்பமும், ஒவ்வொரு புத்திசாலித்தனமான காட்சியும், அவரை நினைவூட்டுகிறது. அந்த வகையில் நல்ல கதை. ஆரம்பத்திலிருந்து கடைசிவரை விறுவிறுப்பு குறையவில்லை. படம் ஓடும் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் பத்து வயதுக்குக் குறைந்தவராக இருந்தால் நிறைய இடத்தில் சிரிப்பீர்கள்.

படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல் திணறியிருக்கிறார்கள். விஞ்ஞானி ரஜினி ஒரு ரோபோவை உருவாக்குகிறார். அது அடிமை போல புத்திசாலித்தனமாகவும், நட்பாகவும் வேலை செய்கிறது. பல இடங்களில் எதிரிகளை அடித்து நொறுக்கி கதாநாயகியை உற்சாகமாகக் காப்பாற்றுகிறது. ரோபோவுக்கு விஞ்ஞானி உணர்ச்சிகளைக் கொடுத்தவுடன் பிரச்சினை ஆரம்பிக்கிறது. ரோபோவும் ஐஸ்வர்யா ராயைக் காதலிக்கிறது. ரஜினி சொல்வதைக் கேட்க மறுக்கிறது. ரஜினி வெறுத்துப்போய் அதைப் பிரித்து குப்பையில்போட, அது எதிரிகள் கையில் சிக்கிக்கொள்கிறது. ரோபோவாக வரும் ரஜினி செய்யும் தந்திரங்களும், சாகசங்களும் ரசிகர்களுக்கு நிறையப் பிடித்துப்போகிறது. ரோபோவுக்கும் விஞ்ஞானிக்குமிடையில் நடக்கும் சண்டையில் ரசிகர்கள் ரோபோ பக்கம்தான். ஒரு கட்டத்தில் ரோபோ ஒரு ஹெலிகொப்டரையே விழுங்கிவிடுகிறது. நம்பமுடியாதது என்று ஒன்றுமே இல்லை. ரோபோதானே, அது எல்லாம் செய்யும். இழுபறிப்பட்டு கதையை ஒரு முடிவுக்குக் கொண்டு வருகிறார்கள். பிரச்சினை என்னவென்றால் ரசிகர்களுக்கு இரண்டு ரஜினியுமே வேண்டும்.

ஒரு விசயத்தில் நிறைய பெருமைப்படலாம். இவ்வளவு தொழில்நுட்ப நேர்த்தியுடன் ஒரு தமிழ்ப் படம், ஏன் இந்தியப் படம் வந்ததில்லை. ஹொலிவுட்டில் செய்யாததைக்கூட செய்திருக்கிறார்கள். பல இடங்களில் அதன் உச்சம் வியக்க வைத்திருக்கிறது. இன்னும் பத்துவருடங்களில் திரைப்படம் சம்பந்தமான கணினி தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு ஹொலிவுட்டுக்கு சவாலாக வரும் என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. பாடல், நடனம், இசை பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லை. ஒளிப்பதிவு, ஒப்பனையும் அப்படியே. இப்படியான பெரிய பட்ஜெட் படத்தில் எப்படி இருக்கவேண்டுமோ அப்படியே அவை இருக்கின்றன. இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது, நடிப்பைப் பற்றி ஏதாவது சொல்லவேண்டும். ஆனால் அது படத்தில் வரவில்லை. எது ரஜினியின் நடிப்பு, எது கம்ப்யூட்டரின் நடிப்பு என்பதைக் கண்டு பிடிப்பதற்கு வாய்ப்பே கிடையாது.

படம் முடிந்து வெளியே வந்தபோது இரண்டு விசயங்கள் தோன்றின. இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படம். அது படத்துக்குப் போகும் முன்னரே தெரிந்த விசயம்தான். ஆனால் ஓர் உயர்ந்த படத்தைப் பார்க்கும்போது உங்கள் உள்ளத்தில் ஏற்படும் ஒரு மாற்றம், ஒரு நெகிழ்ச்சி, ஒரு வெளிச்சம் அது தோன்றவில்லை. அதை எதிர்பார்க்கவும் முடியாது. மனித உணர்வுகளை முந்திக்கொண்டு தொழில்நுட்பம்தான் நிற்கிறது.

இரண்டாவது, எதிர்காலத்தில் புதிதாக வரும் தமிழ் கதாநாயகர்களுக்கு ஏற்படப்போகும் பரிதாபம். புகழின் உச்சியில் இருக்கும் முதிய நடிகர்கள் எல்லோரும் கணினி தொழில்நுட்ப உதவியால் இருபது வயதுக் காளைகளாகவும், பத்து வயது சிறுவனாகவும், மூன்று வயதுக் குழந்தையாகவும் நடித்துக்கொண்டே இருக்கப் போகிறார்கள். அவர்கள் வீட்டுக்குப் போகப் போவதில்லை. அவர்கள் நடிப்பைக்கூட கணினியே செய்துவிடும். இது எல்லாவற்றையும் தாண்டித்தான் புது நடிகர்கள் தங்களை நிலைநாட்டவேண்டும். முடிகிற காரியமா? ரஜினியை இவ்வளவு இளமையாகக் காட்டியவர்கள் பாவம், ஐஸை விட்டுவிட்டார்கள். அவரையும் ஒரு பத்து வயது குறைந்தவராகக் காட்டியிருக்கலாமே. 162 கோடி ரூபா பட்ஜெட்டில் அவ்வளவு செலவா ஆகியிருக்கும்.

நீங்கள் போய்ப் பாருங்கள். முடிந்தால் உங்கள் பிள்ளைகளையும் கூட்டிப் போங்கள். பேரப்பிள்ளைகள் இருந்தால் அவர்களையும் கூட்டிப் போங்கள். தவறவிடக்கூடாது. இது ஒரு சாதனைப் படம். கிட்டத்தட்ட என்னுடைய வாழ்நாள் சாதனை போலத்தான்.

http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=3450

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரமாண்டமானபடம்

இதில் பிரமாண்டம் என்னவெனில்?

சங்கர்

ரகுமான்

ரஜனிகாந்த்

ஐஸ்வர்யாராய்

ஆகியோரும்

மற்றும்....

சண் நெற்வேக்

தாத்தாவின்

கலைஞர் தொலைகாட்சியில்

வரும் அதிமிஞ்சிய விளம்பரங்களும்தான் பிரமாண்டம்.

இந்த பிரமாண்டங்களின் பின்னணி .... எம் பணம்!!!!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

எந்திரன் படம் பார்க்க மனைவி மறுப்பு-தற்கொலைக்கு முயன்ற ரஜினி ரசிகர்

கோவை: ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரன் படத்தைப் பார்க்க மனைவி வர மறுத்ததால் மனம் உடைந்த ரஜினி ரசிகர் தற்கொலைக்கு முன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கோவை சரவணம்பட்டி தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (25). இவர் மனைவி பிரீதா (20). இருவரும் காதலித்து கடந்த மே மாதம் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகு இருவரும் கட்டட வேலைக்கு சென்று வருகின்றனர்.

தீவிர ரஜினி ரசிகரான வினோத்குமார், எந்திரன் படத்தை பார்க்க ஆவலாக இருந்தார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மனைவியிடம் சென்று "தலைவர் ரஜினியின் எந்திரன் படம் ரொம்ப பிரமாண்டமாக இருக்கிறதாம். ரஜினி சூப்பரா நடிச்சிருக்காராம். படம் பார்த்தவங்க எல்லாரும் பெருமையா சொல்றாங்க. நாமும் படத்துக்கு போகலாம்", என அழைத்துள்ளார்.

"எக்கச்சக்க கூட்டமாக இருக்கிறது, இன்னும் கொஞ்ச நாள் கழித்துப் போகலாம்" என்று கூறி தடுத்துள்ளார் மனைவி. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிணக்காக மாறியுள்ளது. அன்று மதியம் இருவருமே சாப்பிடாமல் இருந்துள்ளனர்.

படம் பார்க்க செல்ல முடியாத ஏக்கமும், மனைவியுடனான சண்டையும் சேர்ந்து வினோத் குமாருக்கு வெறுப்பை ஏற்படுத்த, வெள்ளிக்கிழமை மாலையில் திடீரென தூக்கு மாட்டிக் கொண்டார் அவர். இதைப் பார்த்து பிரீதா கூச்சல் போட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வினோத்குமாரை மீட்டு சரவணம்பட்டி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவிக்கு பிறகு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது தந்தை சாமிநாதன் கூறுகையில், "என் மகன் சரவணன் தீவிர ரஜினி ரசிகன். சின்ன வயசிலேருந்து எப்போதும் ரஜினி ரஜினி என்று கூறிக் கொண்டிருப்பான். ரஜினி ரசிகனாக இருந்ததாலோ என்னமோ எந்த கெட்ட பழக்கமும் அவனுக்கு இல்லை. அதனால் நாங்களும் அவனை விருப்பப்படி விட்டுவிட்டோம்.

இப்போது எந்திரன் படம் பார்த்துவிட்டு மற்றவர்கள் புகழ்ந்து கூறியதைக் கேட்டபோது, தன்னால் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்திலும், அதற்காக மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாகவும் அவன் தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார். நல்லவேலை சீக்கிரம் காப்பாத்திட்டோம்" என்றார்.

நன்றி தற்ஸ் தமிழ்.

.

நானும் இப்படத்தை இந்த வார இறுதியில் பார்த்தேன்.

பண்பட்ட நடிப்பு ஜஸ்வரியாவிடம் வெளிப்பட்டுள்ளது. குறிப்பாகப் பொய்யாக றோபோவைச் சிக்கலான நிலையில் காதலிப்பதாய்ச் சொல்கையில் அவரின் முகபாவகம் மிகச் சிறப்பாய் எனது பார்வையி;ல் அமைந்துள்ளது.

பாட்டுக்கள் பொழுதுபோக்கு அம்சத்துடன் வந்துள்ளன, கிளிமான்ச்சாரோ பாட்டை பற்றித் தான் எத்தனையோ எதிர்பார்ப்பு வைத்திருந்தேன் ஆனால் அப்பாட்டில் கோரியோகிரபி சொதப்பப்பட்டுள்ளதாயே நானுணருகிறேன். ஐஸ்வரியா மட்டும் ஓரளவிற்கு ஏதோ செய்ய மற்றையவர்களும் பின்னணிக் கட்டடங்கள் மற்றும் விலங்கினங்களும் கட்டாயத்திற்குச் செருகியது போல் வந்துபோய் இப்பாட்டுக் காட்சியை வெறுப்பேத்தின.

இப்படம் றஜனி படம் என்பதால், எவ்விதமான ஆளங்களையோ, அதிர்வுகளையோ எதிர்பார்க்காது முளுக்க முளுக்க ஒரு மசாலாவை மட்டுமே காணலாம் என்று மட்டுமே நினைத்துச் சென்றேன் சென்றேன். அவ்வாறே ஒரு றஜனி படமாக மட்டும் இப்படம் அமைந்துள்ளது. சிவாஜியை திரை அரங்கில் பார்க்காது ஒரு வருடம் களித்து டி.வி.டி இல் பார்த்தேன். சிவாஜியை விட எந்திரன் மசாலா பறவாயில்லை என்று படுகிறது.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

எந்திரன் படம் பார்க்க மனைவி மறுப்பு-தற்கொலைக்கு முயன்ற ரஜினி ரசிகர்

படம் பார்த்திருந்தாலும் தற்கொலைக்கு முயன்றிருப்பாரா? :)

நேற்று பிரபல சுத்துமாத்துக்கள் வலைத்தளத்திற்கு தற்செயலாக போன சமயத்தில் அங்கு எந்திரனை வலையில் பார்ப்பதற்கு தொடுப்பு கொடுக்கப்பட்டு காணப்பட்டது. தொடுப்பை அழுத்தினால் காணொளி அகற்றப்பட்டுவிட்டது என்று தகவல் வந்தது. பிறகு கூகிழுக்கால தேடல் செய்து சுமார் இருபது நிமிடங்கள் பார்த்தன். பொழுதுபோக்கு என்று பார்த்தால்.. சுவாரசியமாய்த்தான் செல்கின்றது. படத்தை முழுமையாக பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் எனது விமர்சனத்தையும் எழுதி போடுகின்றேன். படத்தை பார்த்தபோது அதனுடன் வந்த இசை நல்லாய் செய்துள்ளார்கள் என்று நினைக்கின்றேன்.

Edited by கரும்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரையில் பார்த்தால்தான் கிராபிக்ஸின் திறமையைக் காணலாம். நல்ல பொழுதுபோக்குப் படம். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரையில் பார்த்தால்தான் கிராபிக்ஸின் திறமையைக் காணலாம். நல்ல பொழுதுபோக்குப் படம். <_<

கருவாட்டு கிராபிக்ஸுக்கும் பொழுது போக்குக்கும் என்னத்துக்கு ரசனி ஐஸ்சு ?

பேசாமல் இஞ்சை போற குழந்தைப்பொடியளின்ரை கார்ட்டூன் ரிவியளை ரெஞ்சன் இல்லாமல் பாக்கலாமே?

கிளடு குமரனாய் நடிக்கிறதுக்கு தமிழ்நாட்டிலை என்னதான் பஞ்சமோ?

Edited by குமாரசாமி

இன்றிரவு நானும் திரையரங்கு சென்று பார்த்தேன். பொழுது போக்குக்கு பார்க்க கூடிய படம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.