Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேபி - நாடு கடந்த அரசு - பேரவை - வட்டுக்கோட்டைத் தீர்மானம்

Featured Replies

எழுதி நீண்ட நாட்கள் ஆகி விட்டது. மீண்டும் எழுத வேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன். மீண்டு எழ முடியாத ஒரு நிலை தமிழனித்திற்கு வந்து விட்டதை எண்ணி சோர்ந்து போய் மீண்டும் எழுதுகின்ற எண்ணத்தை கைவிடுவேன்.

உண்மையை சொன்னால் எதை எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை. எழுதுவது என்றால் உண்மையை, சரி என்று நம்புவதை எழுத வேண்டும். அது முடியவில்லை என்றால் வாயை மூடிக் கொண்டு பேசாது இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்.

ஆனால் எழுதாது இருக்கவும் முடியவில்லை. புலம்பெயர் அரசியல் மிகவும் ஒரு கேவலமான நிலையில் இருக்கின்றது. யாரிடம் போய் முறையிட முடியும் என்கின்ற திமிரும் இன்றைக்கு புதிதாக சேர்ந்து விட்டது.

ஈழத்து அரசியலிலும் சரி, புலத்து அரசியலிலும் சரி யாரையும் ஆதரிக்க முடியாத ஒரு நிலை தோன்றியிருக்கிறது. மக்களும் சிந்திக்க முடியாதவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் யாருக்குப் போய் எதைச் சொல்வது?

நாடு கடந்த அரசு பற்றிய நிலைப்பாடு

நாடு கடந்த தமிழீழ அரசு என்னும் புதிய கட்டமைப்பை உருவாக்குவது பற்றி அறிவிக்கப்பட்ட பொழுது பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன். அது ஒரு பலமான கட்டமைப்பாக இருந்து தமிழினத்தை ஒருங்கிணைத்து வழிநடத்தும் என்று நம்பியிருந்தேன். இன்றைக்கு நாடு கடந்த அரசின் நிலை அந்தோ பரிதாபம் என்பதாகவே இருக்கிறது.

நாடு கடந்த அரசினால் அதனுடைய எதிரிகளை முறியடிக்க முடியவில்லை. புலம்பெயர் தேசங்களில் உள்ள கட்டமைப்புகளை தன்னுடைய ஆளுமையின் கீழ் கொண்டு வர முடியவில்லை.

நாடு கடந்த அரசு பற்றிய அறிவிப்பை வெளியிட்ட கேபி வெளியில் இருந்திருந்தால் இந்த நிலமை தோன்றியிருக்காது. மிகவும் பலமான ஒரு அமைப்பாக நாடு கடந்த அரசு இருந்திருக்கும். ஆனால் துர்நிலையாக கேபி சிறிலங்கா அரசால் கைது செய்யப்பட்டு விட்டார்.

நாடு கடந்த அரசு இன்றைக்கு ஒரு யாப்பை உருவாக்கயிருக்கிறது. ஒரு அமைச்சரவையையும் பிரதம மந்திரியையும் தெரிவு செய்திருக்கிறது. ஆனால் புலம்பெயர் தமிழர்கள் மீது நேரடியான செல்வாக்கை செலுத்த முடியாத ஒரு அமைப்பாகவே நாடு கடந்த அரசு இன்றைக்கு இருக்கிறது.

ஒரு புலம்பெயர் நாட்டில் சில நூறு தமிழர்கள் கலந்து கொள்ளக் கூடியதான ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்வதற்கான வல்லமை நாடு கடந்த அரசிடம் இருக்கிறதா என்பதே ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. அப்படி ஒழுங்கு செய்தாலும் அது சிலரால் குழப்பியடிக்கப்பட முடியும் என்கின்ற அளவில்தான் இன்றைய நிலைமை இருக்கிறது.

நாடு கடந்த அரசு உறுதியாக அச்சமின்றி சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் அதற்கு எதிர்காலம் இருக்கின்றது. இல்லையென்றால் அமெரிக்காவில் ஏதாவது இடத்தில் கூடி, அந்த இடத்தின் வரலாற்றுச் சிறப்புகளை இணையத்தில் வரச் செய்து விட்டு அறிக்கைகளையும் விட்டு விட்டு கலைய வேண்டியதுதான். சராசரித் தமிழன் அதைப் பற்றி எந்த அக்கறையும் கொள்ள மாட்டான்.

பேரவைகள் பற்றிய நிலைப்பாடு

நாடு கடந்த அரசுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்கு இந்தப் பேரவைகளே காரணம் என்று துணிந்து சொல்வேன். “உள்ளுர் அரசியலுங்கள் நாங்கள், வெளியுலக அரசியலுக்கு அவர்கள்”, “இரட்டைக் குழல் துப்பாக்கிகள்” இப்படியெல்லாம் வெளியில் நைச்சியமாக பேசிக் கொண்டே ஒருவருக்கு ஒருவர் குழி பறிப்பதில் மும்மரமாக இருக்கிறார்கள்.

ஏற்கனவே செயற்பட்ட அமைப்புகள் புதிய பெயரையும் ஜனநாயகப் பூச்சையும் பூசிக் கொண்டு வருவதன் பெயர்தான் பேரவைகள். இங்கே புதிதாக எதையும் நாம் காணப் போவது இல்லை. பழைய பெயரில் அவர்களே இயங்குவது நல்லது. ஏதாவது உருப்படியாக செய்தால் மக்கள் தாமாக ஆதரவளிக்கப் போகிறார்கள். பெரும் செலவில் தேர்தல்களை நடத்தி மக்கள் பணத்தை வீணடிக்கத் தேவையில்லை.

ஏற்கனவே “வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு” என்கின்ற கோமாளிக் கூத்தை நடத்தி முடித்தாகி விட்டது. மேலும் மேலும் இப்படியான கூத்துகள் தேவையில்லை.

“வட்டுக் கோட்டை தீர்மானம்” பற்றிய நிலைப்பாடு

புலிகள் இயக்கத்தின் தோற்றம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கியிருந்தது. சில நாட்களுக்கு முன்னர்தான் புலிகள் இயக்கத்தின் மிக முக்கிய கூட்டமும் நடைபெற்றிருந்தது.

எப்படித்தான் நட்பு பாராட்டினாலும் “பெடியன்கள்” எப்பொழுதும் தமது கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார்கள் என்பது கூட்டணிக்கு தெரிந்தே இருந்தது. மக்களும் புலிகளின் பக்கம் தமது பார்வையை திருப்பத் தொடங்கியருந்தார்கள்.

இந்த நிலையில் தமிழ் மக்களை தமது பக்கம் திருப்ப வேண்டிய தேவை கூட்டணிக்கு எழுந்தது. மக்களை முட்டாள்களாக தொடர்ந்தும் வைத்திருந்து மேடை அரசியல் செய்யவும், விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தவும் கூட்டணியினர் கண்டு பிடித்ததுதான் இந்த “வட்டுக் கோட்டை தீர்மானம்”.

தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை நீர்த்துப் போக செய்வதற்கு கூட்டணியினர் கையில் எடுத்த அதே ஆயுதத்தைக் கொண்டு முள்ளிவாய்க்காலின் பின்னர் புதிய வடிவம் எடுக்க இருந்த தமிழர்களின் அடுத்த கட்டப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்த வேதனையை எங்கே போய் சொல்வது?

பெரும்பான்மையான தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்ற செய்தியை உலகுக்குச் சொல்லி விட்டு வட்டுக் கோட்டைத் தீர்மான முடிவுகள் ஆவணக் கோப்புகளில் துங்கிக் கொண்டிருக்கின்றன.

கேபி பற்றிய நிலைப்பாடு

கேபி கைது செய்யப்பட்டார் என்றே நம்புகிறேன். அவரைப் பற்றிய வதந்திகளை பரப்புவர்கள் யாரும் உத்தமர்களோ உண்மையைப் பேசுபவர்களோ அல்ல.

கேபி நீண்ட காலம் தமிழினத்தின் விடுதலைக்காக உழைத்தவர் என்பதும் புலிகள் இயக்கத்தின் வெளியில் தெரிந்து எஞ்சியுள்ள ஓரேயொரு மூத்த தலைவர் என்பதும் அவர் மீது மென்மையான பார்வையையே எனக்குக் கொடுக்கிறது.

தன்னுடைய சாணக்கியத்தனத்தினால் தன்னுடைய உயிரைத் தக்க வைத்திருக்கிறார். இன்றைக்கும் தேசியத் தலைவரை தன்னுடைய தலைவர் என்றே கூறுகிறார். தேசியத் தலைவர் வீரச் சாவடைந்தார் என்கின்ற செய்தியை அன்றைக்கு துணிந்து மக்கள் முன் சொன்னவர். தேசியத் தலைவர் வீரனாக வாழ்ந்து தமிழ் மக்களுக்காக வீரனாக போரிட்டு மடிந்தார் என்கின்ற வரலாற்றுச் செய்தியை இன்றைக்கும் அவரே சொல்கிறார்.

தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக பொய் சொல்லித் திரிகின்ற மோசடிப் பேர்வழிகளும், தேசியத் தலைவர் கோழையைப் போன்று சரணடைந்து பின்பு கொல்லப்பட்டார் என்று தமிழர்களின் வரலாற்றை கொச்சைப்படுத்த முனைபவர்களும் நிறைந்திருக்கின்ற இன்றைய நிலையில் கேபியின் குரல் தவிர்க்க முடியாதபடி தேவையாக இருக்கிறது.

எது எப்படியிருப்பினும் அவர் சிறிலங்கா அரசின் ஒரு கைதி என்கின்ற யதார்த்தம் முன்னே வந்து நிற்கிறது. அதையும் தாண்டி கேபியை வைத்து எம்மால் ஒரு சிறப்பான அரசியலை செய்திருக்க முடியும். கேபி தன்னை பயன்படுத்த அனுமதித்து சிறிலங்கா அரசை தமிழ் மக்களுக்காக பயன்படுத்துகின்ற அரசியலை செய்வதற்கு முயல்கிறார். ஆனால் இதை ராஜதந்திரத்தோடு அணுகுவதற்கு எம்மிடம் திறமை போதாமல் போய்விட்டது.

கேபிக்கு பேரம் பேசுகின்ற பலத்தை தற்காலிகமாக என்றாலும் வழங்கி சிறிலங்காவை எதிர்கொள்வதற்கு நாம் முயற்சி எடுத்திருக்கலாம். சிலர் அப்படி ஒரு முயற்சியை எடுத்தார்கள். ஆனால் சுயநலவாதிகளின் குரலே மீண்டும் ஓங்கி ஒலித்தது. இந்தக் குரலே பொதுவான தமிழர்களிடம் எடுபடுகிறது.

இந்த நிலையில் எதை எழுத?

எனக்கு எல்லாத் தரப்பிலும் நண்பர்கள் உண்டு. இங்கே என்னுடைய நிலைப்பாடுகளை எழுதியதற்கு யாருடைய கோபங்களை சம்பாதிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் பல ஆண்டுகளாக சந்திக்காத ஒரு நண்பனை சந்தித்தேன். மிகவும் மகிழ்ச்சியோடு என்னை வரவேற்றான். அரசியல் பற்றி பேச்சு வந்தது. தேசியத் தலைவரின் இறப்பு அல்லது இருப்பு பற்றிய பேச்சும் வந்தது. சிறிது நேரத்தின் பின்பு தேனீரும் தராது எனக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தான்.

எனக்கு சரி என்று படுவதை எழுதி மற்றவர்களுக்கும் மன உளைச்சலை கொடுத்து நானும் மன உளைச்சலுக்கு ஆளாகிறேனோ என்று சிந்திக்கிறேன். அரசியலை விட்டு விட்டு வேறு விடயங்களை கொஞ்ச நாட்களுக்கு எழுதலாம் என்று நினைக்கிறேன்.

அந்த வகையில் என்னுடைய அடுத்த கட்டுரை பற்றிய அறிவிப்பை இப்பொழுதே வெளியிடுகிறேன். இன்றைக்கு உலகத் தமிழர்களின் மிக முக்கிய வாழ்வாதாரப் பிரச்சனையாக மாறிப் போயிருக்கின்ற “பிரபுதேவா - நயன்தாரா விவகாரம் பற்றிய பரபரப்புக் கட்டுரை அடுத்ததாக வெளிவரும். இதனால் எனக்கும் பிரச்சனை இல்லை. படிப்பவர்களுக்கும் பிரச்சனை இல்லை. ஆவலோடு காத்திருங்கள்.

இறுதிப்போர் நடந்த போது KP இந்திய அதிகாரிகளுடனும், இந்திய அமைச்சர்களுடனும் , ( ஜெகத்கஸ்பர் உட்பட) பேசிய தாக சொன்னது பொய்யா...?? இந்தியாவால் வலை வீசி தேடப்பட்டு வந்த KP எப்படி பேசினார்...?? பேசும் போது அவரின் அமைவிடத்தை இந்திய புலநாய்வு பிரிவு கண்டு பிடித்து இருக்க மாட்டாதா...???

நடேசன் அண்ணாவுடனும், புலித்தேவன் அண்ணாவுடனும், மற்றய தளபதிகளுடனும் பேச முடியவில்லையா இல்லை அவர்களுடன் பேச ஒப்பவில்லையா....?? இதுவரை காலமும் நேரடியாக புலிகளுடன் பேச ஒத்துக்கொள்ளாத இந்தியா தன்னால் தேடப்பட்ட KP யுடன் பேச மட்டும் எப்படி ஒப்புக்கொண்டது...??

இந்த விடயங்கள் தலைவருக்கு தெரியாதா எண்டு கேக்காதீர்கள் நிச்சயமாக தெரியும் ...! இறுதியாக இந்தியாவுடன் பேசி பாக்கலாம் எண்று வெளியில் இருந்த சிலரின் வற்புறுத்தலால் தான் KP க்கு தலைவரால் கடிதமே வழங்கப்பட்டது...

உங்கள் கருத்துக்கள் மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்தவேண்டியது முக்கியமல்ல.உண்மையில் உங்களின் மனசாட்சிக்கு சரியான கருத்தை எந்த தருணத்திலும் முன் வைக்கும் நிலையை எடுக்க வேண்டும்.இப்போதுதான் மனம் தளராமல் சரியான ஒரு நிலைபாட்டை எடுக்க வேண்டிய நிலைக்கு தமிழினம் வந்திருக்கின்றது.இப்போதும் ஆக்கபூர்வமாக சிந்திப்பவர்கள் துரோகியாகிவிடுவோமோ எனப் பயந்து மவுனித்து இருந்தால் மீண்டும் பிழையான ஒரு கூட்டத்தின் கையிலேயே தமிழினத்தின் தலைவிதி போய் சேர்ந்துவிடும்.

புலிகளின் போராட்ட வழியுடன் ஒரு நாளும் நான் ஒத்துப் போனவனல்ல.இருந்தும் நாட்டில் இருந்த சூழ்நிலையில் அவர்களால் சில அரசியல் ரீதியான முடிவுகளை எடுக்க முடியாமல் போயிருக்கலாம்.ஆனால் புலம் பெயர்ந்து ஒரு மாபெரும் அமைப்பு அவர்களிடம் இருந்தது.அவர்களால் எப்படி புலிலளுக்கு எதுவித அரசியலையும் புரியவைக்க முடியாமல் போயிற்று?.ஏனேனில் இவர்கள் புலிப் போர்வையில் குளிர் காய ஒட்டிக்கொண்ட வியாபாரிகள் தமது வியாபாரத்திற்காக புலிவேசம் போட்டவர்கள்.இதை கால காலமாக நாம் சொல்லிக்கொண்டுதான் இருந்தோம்.இவர்களை அடையாளம் காணத் தவறியத்துதான் புலிகளின் மாபெரும் தவறு.இவர்களில் பலர் இலங்கையில் இருக்கும் போது மாறி மாறி வரும் சிங்கள அரசுகளுக்கு தாள்ம் போட்டுக்கொண்டிருந்தவர்கள்.பின் புலி பலம் பெற தாளத்தை புலிகள் பக்கம் போட்டு உண்மையில் தமிழனின் விடிவிற்கு முன் நின்றவர்களையெல்லாம் ஓரம்கட்டி விட்டார்கள்.(இது தான் தமிழக அரசியலில் காலம்காலமாக நடக்கின்றது)இதே கூட்டம் தான் இன்றும் தனது இருப்பிற்கு முழுத்தமிழினத்தையும் யாரிடமாவது அடைவுவைக்க தயாராகின்றது.அது ராஜபக்சாவாக இருக்கலாம் அல்லது இந்தியாவாக இருக்கலாம்.இதை அறியாமல் இன்னமும் இவர்கள் பின்னாலும் பல புலம் பெயர்ந்ததுகள் இழுபடுதுகள்.

துணிந்து கருத்துக்களை எழுத வேண்டிய நேரம் இப்போதுதான்.தொடருங்கள்.

நாடு கடந்த அரசு பேரவை இரண்டுக்குமே புலம் பெயர் மக்கள் ஆதரவு செலுத்த வேண்டிய தேவை உள்ளது. காரணம் :

1. தமிழீத்தில் ஒரு கட்சியும் பலமாக இல்லை, இருக்க முடியாத நிலை.

2. யாரையுமே முழுதாக நம்புவது எமது எதிரிகளுக்கும் அவன் வேலையை இலகுவாக்கி விடும்.

3. உலக நாடுகளும் ஒன்றுக்கு மேற்பட்ட தலைமைகளையே விரும்புகின்றது.

4. இருவரும் சேர்த்தும் தனி தனியாகவும் செய்ய நிறையவே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

.

புலிகளின் போராட்ட வழியுடன் ஒரு நாளும் நான் ஒத்துப் போனவனல்ல

..இவர்களை அடையாளம் காணத் தவறியத்துதான் புலிகளின் மாபெரும் தவறு.

ஒன்று மட்டும் தெரிகிறது

சபேசன் தாங்கள் விரும்புவதை எழுதப்போவதில்லை

ஏனெனில் புலிகளை கேலி செய்பவரல்ல......

"உங்கள் கருத்துக்கள் மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்தவேண்டியது முக்கியமல்ல.உண்மையில் உங்களின் மனசாட்சிக்கு சரியான கருத்தை எந்த தருணத்திலும் முன் வைக்கும் நிலையை எடுக்க வேண்டும்."

விசுகு அண்ணை கோவிக்க வேண்டாம் எதையும் ஒருமுறை வடிவாக வாசியுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா உங்களுக்கு எனது சார்பாக ஒரு பச்சை...புலம் பெயர் அமைப்பை பற்றி நீங்கள் எழுதியது மெத்த சரி.

  • தொடங்கியவர்

இரண்டு விதமான கட்சிகள் இருப்பது தவறு இல்லை. ஆளுங் கட்சி என்று ஒன்று இருந்தால் எதிர்கட்சி என்கின்ற ஒன்றும் இருக்க வேண்டும்.

ஆனால் இரண்டு அதிகார மையங்கள் இருப்பது நல்லது அல்ல. அதுவும் புலம்பெயர் தமிழர்கள் ஒரு அரசை உருவாக்கியதன் பிற்பாடு இன்னொரு அதிகார மையம் அதைத் தாண்டி செயற்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது.

தமிழர்களிடம் செல்வாக்கு ஒள்ள தரப்பு வலுவாக இருந்தால்தான் சர்வதேசம் எம்மோடு பேசும். எமது கோரிக்கைகள் பற்றி கொஞ்சமாவது அக்கறை செலுத்தும்.

ஆனால் எம்மை நாமே பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

எமது அடுத்தகட்ட வரலாறு சர்வதேசங்களினாலும் ( அமெரிக்க/ இந்தியா / சீனா ) அவற்றின் பூகோள அரசியல் முடிவிகளாலும் எமது ( புலம் பெயர் ) தமிழர் பொருளாதார ( அது தரும் அரசியல் பலம் ) பலத்திலேயே தங்கி உள்ளது.

பூகோள அரசியல் நிலைமைகளை நம் பக்கம் மாற்றவும் எமது சக்தியை மீறி அவை மாறும் போது நாம் அதை எம்பக்கம் திருப்பக்கூடிய வலிமையும் உள்ளவர்களாக இருப்பதே இன்றைய தேவை என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

"உங்கள் கருத்துக்கள் மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்தவேண்டியது முக்கியமல்ல.உண்மையில் உங்களின் மனசாட்சிக்கு சரியான கருத்தை எந்த தருணத்திலும் முன் வைக்கும் நிலையை எடுக்க வேண்டும்."

விசுகு அண்ணை கோவிக்க வேண்டாம் எதையும் ஒருமுறை வடிவாக வாசியுங்கோ.

உங்களிடம் அறவே இல்லா ஒன்றை மற்றவரிடம் எதிர்பார்ப்பது................?????????????

இரண்டு விதமான கட்சிகள் இருப்பது தவறு இல்லை. ஆளுங் கட்சி என்று ஒன்று இருந்தால் எதிர்கட்சி என்கின்ற ஒன்றும் இருக்க வேண்டும்.

ஆனால் இரண்டு அதிகார மையங்கள் இருப்பது நல்லது அல்ல. அதுவும் புலம்பெயர் தமிழர்கள் ஒரு அரசை உருவாக்கியதன் பிற்பாடு இன்னொரு அதிகார மையம் அதைத் தாண்டி செயற்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது.

தமிழர்களிடம் செல்வாக்கு ஒள்ள தரப்பு வலுவாக இருந்தால்தான் சர்வதேசம் எம்மோடு பேசும். எமது கோரிக்கைகள் பற்றி கொஞ்சமாவது அக்கறை செலுத்தும்.

ஆனால் எம்மை நாமே பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

வணக்கம் அண்ணா

இவ்வளவு கட்சிகளைக்கொண்ட இந்தியாவில் கூட

காந்தியையும் சுபாஸ் சந்திரபோசையும் ஏற்காத கட்சிகள் உண்டா...?

மக்களிடம் போகவேண்டுமென்றால்...

மக்களுக்காக உழைத்தவர்களை மக்கள் மனம்களிலுள்ளவர்களை முதலில் ஏற்க வேண்டாமா....?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுதி நீண்ட நாட்கள் ஆகி விட்டது. மீண்டும் எழுத வேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன். மீண்டு எழ முடியாத ஒரு நிலை தமிழனித்திற்கு வந்து விட்டதை எண்ணி சோர்ந்து போய் மீண்டும் எழுதுகின்ற எண்ணத்தை கைவிடுவேன்.

உண்மையை சொன்னால் எதை எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை. எழுதுவது என்றால் உண்மையை, சரி என்று நம்புவதை எழுத வேண்டும். அது முடியவில்லை என்றால் வாயை மூடிக் கொண்டு பேசாது இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்.

ஆனால் எழுதாது இருக்கவும் முடியவில்லை. புலம்பெயர் அரசியல் மிகவும் ஒரு கேவலமான நிலையில் இருக்கின்றது. யாரிடம் போய் முறையிட முடியும் என்கின்ற திமிரும் இன்றைக்கு புதிதாக சேர்ந்து விட்டது.

ஈழத்து அரசியலிலும் சரி, புலத்து அரசியலிலும் சரி யாரையும் ஆதரிக்க முடியாத ஒரு நிலை தோன்றியிருக்கிறது. மக்களும் சிந்திக்க முடியாதவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் யாருக்குப் போய் எதைச் சொல்வது?

நாடு கடந்த அரசு பற்றிய நிலைப்பாடு

நாடு கடந்த தமிழீழ அரசு என்னும் புதிய கட்டமைப்பை உருவாக்குவது பற்றி அறிவிக்கப்பட்ட பொழுது பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன். அது ஒரு பலமான கட்டமைப்பாக இருந்து தமிழினத்தை ஒருங்கிணைத்து வழிநடத்தும் என்று நம்பியிருந்தேன். இன்றைக்கு நாடு கடந்த அரசின் நிலை அந்தோ பரிதாபம் என்பதாகவே இருக்கிறது.

நாடு கடந்த அரசினால் அதனுடைய எதிரிகளை முறியடிக்க முடியவில்லை. புலம்பெயர் தேசங்களில் உள்ள கட்டமைப்புகளை தன்னுடைய ஆளுமையின் கீழ் கொண்டு வர முடியவில்லை.

நாடு கடந்த அரசு பற்றிய அறிவிப்பை வெளியிட்ட கேபி வெளியில் இருந்திருந்தால் இந்த நிலமை தோன்றியிருக்காது. மிகவும் பலமான ஒரு அமைப்பாக நாடு கடந்த அரசு இருந்திருக்கும். ஆனால் துர்நிலையாக கேபி சிறிலங்கா அரசால் கைது செய்யப்பட்டு விட்டார்.

நாடு கடந்த அரசு இன்றைக்கு ஒரு யாப்பை உருவாக்கயிருக்கிறது. ஒரு அமைச்சரவையையும் பிரதம மந்திரியையும் தெரிவு செய்திருக்கிறது. ஆனால் புலம்பெயர் தமிழர்கள் மீது நேரடியான செல்வாக்கை செலுத்த முடியாத ஒரு அமைப்பாகவே நாடு கடந்த அரசு இன்றைக்கு இருக்கிறது.

ஒரு புலம்பெயர் நாட்டில் சில நூறு தமிழர்கள் கலந்து கொள்ளக் கூடியதான ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்வதற்கான வல்லமை நாடு கடந்த அரசிடம் இருக்கிறதா என்பதே ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. அப்படி ஒழுங்கு செய்தாலும் அது சிலரால் குழப்பியடிக்கப்பட முடியும் என்கின்ற அளவில்தான் இன்றைய நிலைமை இருக்கிறது.

நாடு கடந்த அரசு உறுதியாக அச்சமின்றி சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் அதற்கு எதிர்காலம் இருக்கின்றது. இல்லையென்றால் அமெரிக்காவில் ஏதாவது இடத்தில் கூடி, அந்த இடத்தின் வரலாற்றுச் சிறப்புகளை இணையத்தில் வரச் செய்து விட்டு அறிக்கைகளையும் விட்டு விட்டு கலைய வேண்டியதுதான். சராசரித் தமிழன் அதைப் பற்றி எந்த அக்கறையும் கொள்ள மாட்டான்.

பேரவைகள் பற்றிய நிலைப்பாடு

நாடு கடந்த அரசுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்கு இந்தப் பேரவைகளே காரணம் என்று துணிந்து சொல்வேன். “உள்ளுர் அரசியலுங்கள் நாங்கள், வெளியுலக அரசியலுக்கு அவர்கள்”, “இரட்டைக் குழல் துப்பாக்கிகள்” இப்படியெல்லாம் வெளியில் நைச்சியமாக பேசிக் கொண்டே ஒருவருக்கு ஒருவர் குழி பறிப்பதில் மும்மரமாக இருக்கிறார்கள்.

ஏற்கனவே செயற்பட்ட அமைப்புகள் புதிய பெயரையும் ஜனநாயகப் பூச்சையும் பூசிக் கொண்டு வருவதன் பெயர்தான் பேரவைகள். இங்கே புதிதாக எதையும் நாம் காணப் போவது இல்லை. பழைய பெயரில் அவர்களே இயங்குவது நல்லது. ஏதாவது உருப்படியாக செய்தால் மக்கள் தாமாக ஆதரவளிக்கப் போகிறார்கள். பெரும் செலவில் தேர்தல்களை நடத்தி மக்கள் பணத்தை வீணடிக்கத் தேவையில்லை.

ஏற்கனவே “வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு” என்கின்ற கோமாளிக் கூத்தை நடத்தி முடித்தாகி விட்டது. மேலும் மேலும் இப்படியான கூத்துகள் தேவையில்லை.

“வட்டுக் கோட்டை தீர்மானம்” பற்றிய நிலைப்பாடு

புலிகள் இயக்கத்தின் தோற்றம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கியிருந்தது. சில நாட்களுக்கு முன்னர்தான் புலிகள் இயக்கத்தின் மிக முக்கிய கூட்டமும் நடைபெற்றிருந்தது.

எப்படித்தான் நட்பு பாராட்டினாலும் “பெடியன்கள்” எப்பொழுதும் தமது கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார்கள் என்பது கூட்டணிக்கு தெரிந்தே இருந்தது. மக்களும் புலிகளின் பக்கம் தமது பார்வையை திருப்பத் தொடங்கியருந்தார்கள்.

இந்த நிலையில் தமிழ் மக்களை தமது பக்கம் திருப்ப வேண்டிய தேவை கூட்டணிக்கு எழுந்தது. மக்களை முட்டாள்களாக தொடர்ந்தும் வைத்திருந்து மேடை அரசியல் செய்யவும், விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தவும் கூட்டணியினர் கண்டு பிடித்ததுதான் இந்த “வட்டுக் கோட்டை தீர்மானம்”.

தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை நீர்த்துப் போக செய்வதற்கு கூட்டணியினர் கையில் எடுத்த அதே ஆயுதத்தைக் கொண்டு முள்ளிவாய்க்காலின் பின்னர் புதிய வடிவம் எடுக்க இருந்த தமிழர்களின் அடுத்த கட்டப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்த வேதனையை எங்கே போய் சொல்வது?

பெரும்பான்மையான தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்ற செய்தியை உலகுக்குச் சொல்லி விட்டு வட்டுக் கோட்டைத் தீர்மான முடிவுகள் ஆவணக் கோப்புகளில் துங்கிக் கொண்டிருக்கின்றன.

கேபி பற்றிய நிலைப்பாடு

கேபி கைது செய்யப்பட்டார் என்றே நம்புகிறேன். அவரைப் பற்றிய வதந்திகளை பரப்புவர்கள் யாரும் உத்தமர்களோ உண்மையைப் பேசுபவர்களோ அல்ல.

கேபி நீண்ட காலம் தமிழினத்தின் விடுதலைக்காக உழைத்தவர் என்பதும் புலிகள் இயக்கத்தின் வெளியில் தெரிந்து எஞ்சியுள்ள ஓரேயொரு மூத்த தலைவர் என்பதும் அவர் மீது மென்மையான பார்வையையே எனக்குக் கொடுக்கிறது.

தன்னுடைய சாணக்கியத்தனத்தினால் தன்னுடைய உயிரைத் தக்க வைத்திருக்கிறார். இன்றைக்கும் தேசியத் தலைவரை தன்னுடைய தலைவர் என்றே கூறுகிறார். தேசியத் தலைவர் வீரச் சாவடைந்தார் என்கின்ற செய்தியை அன்றைக்கு துணிந்து மக்கள் முன் சொன்னவர். தேசியத் தலைவர் வீரனாக வாழ்ந்து தமிழ் மக்களுக்காக வீரனாக போரிட்டு மடிந்தார் என்கின்ற வரலாற்றுச் செய்தியை இன்றைக்கும் அவரே சொல்கிறார்.

தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக பொய் சொல்லித் திரிகின்ற மோசடிப் பேர்வழிகளும், தேசியத் தலைவர் கோழையைப் போன்று சரணடைந்து பின்பு கொல்லப்பட்டார் என்று தமிழர்களின் வரலாற்றை கொச்சைப்படுத்த முனைபவர்களும் நிறைந்திருக்கின்ற இன்றைய நிலையில் கேபியின் குரல் தவிர்க்க முடியாதபடி தேவையாக இருக்கிறது.

எது எப்படியிருப்பினும் அவர் சிறிலங்கா அரசின் ஒரு கைதி என்கின்ற யதார்த்தம் முன்னே வந்து நிற்கிறது. அதையும் தாண்டி கேபியை வைத்து எம்மால் ஒரு சிறப்பான அரசியலை செய்திருக்க முடியும். கேபி தன்னை பயன்படுத்த அனுமதித்து சிறிலங்கா அரசை தமிழ் மக்களுக்காக பயன்படுத்துகின்ற அரசியலை செய்வதற்கு முயல்கிறார். ஆனால் இதை ராஜதந்திரத்தோடு அணுகுவதற்கு எம்மிடம் திறமை போதாமல் போய்விட்டது.

கேபிக்கு பேரம் பேசுகின்ற பலத்தை தற்காலிகமாக என்றாலும் வழங்கி சிறிலங்காவை எதிர்கொள்வதற்கு நாம் முயற்சி எடுத்திருக்கலாம். சிலர் அப்படி ஒரு முயற்சியை எடுத்தார்கள். ஆனால் சுயநலவாதிகளின் குரலே மீண்டும் ஓங்கி ஒலித்தது. இந்தக் குரலே பொதுவான தமிழர்களிடம் எடுபடுகிறது.

இந்த நிலையில் எதை எழுத?

எனக்கு எல்லாத் தரப்பிலும் நண்பர்கள் உண்டு. இங்கே என்னுடைய நிலைப்பாடுகளை எழுதியதற்கு யாருடைய கோபங்களை சம்பாதிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் பல ஆண்டுகளாக சந்திக்காத ஒரு நண்பனை சந்தித்தேன். மிகவும் மகிழ்ச்சியோடு என்னை வரவேற்றான். அரசியல் பற்றி பேச்சு வந்தது. தேசியத் தலைவரின் இறப்பு அல்லது இருப்பு பற்றிய பேச்சும் வந்தது. சிறிது நேரத்தின் பின்பு தேனீரும் தராது எனக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தான்.

எனக்கு சரி என்று படுவதை எழுதி மற்றவர்களுக்கும் மன உளைச்சலை கொடுத்து நானும் மன உளைச்சலுக்கு ஆளாகிறேனோ என்று சிந்திக்கிறேன். அரசியலை விட்டு விட்டு வேறு விடயங்களை கொஞ்ச நாட்களுக்கு எழுதலாம் என்று நினைக்கிறேன்.

அந்த வகையில் என்னுடைய அடுத்த கட்டுரை பற்றிய அறிவிப்பை இப்பொழுதே வெளியிடுகிறேன். இன்றைக்கு உலகத் தமிழர்களின் மிக முக்கிய வாழ்வாதாரப் பிரச்சனையாக மாறிப் போயிருக்கின்ற “பிரபுதேவா - நயன்தாரா விவகாரம் பற்றிய பரபரப்புக் கட்டுரை அடுத்ததாக வெளிவரும். இதனால் எனக்கும் பிரச்சனை இல்லை. படிப்பவர்களுக்கும் பிரச்சனை இல்லை. ஆவலோடு காத்திருங்கள்.

நீங்கள் நம்புவதையும், நினைப்பதையும் விட, உண்மையை மட்டும் நீங்கள் எழுதினால் எங்களுக்கு போதுமானது. :) :) :)

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தோழர் சபேசன் ....நான் உங்க களத்தில் சிறுத்தை மற்றும் தமிழ்தேசியன் என்ற பெயரில் எழுதி வந்தேன்... போர் நடைபெற்று இருக்கும் போதே தீர்க்க தரிசனமாக 2 கருத்துக்களை வைத்திருந்தீர்கள் ஒன்று ...நாடு கடந்த தமிழ் ஈழ அரசு மற்றும் இரண்டாவது எதாவது ஒரு தீவை குறைந்த படசம் விலை கொடுத்து வாங்குவது... முதலாவது நடக்கிறது ... இரண்டாவதற்கு அடி போடுங்க தோழர் சபேசன்.... :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனின் கட்டுரையில் உள்ளவற்றோடு ஒத்துப் போகின்றேன். எனினும் தனித் தீவு வாங்கி இரண்டு அதிரார மையங்களை உருவாக்கும் நிலையோடு ஒத்துக்போகமுடியாது!

ஆமென்

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது அதிகார மையம் தற்போது செயல்படாமல் உள்ளது ... ஈழம் எனும் கருத்துருவாக்கம் உலக அளவில் உருவாக்க படும்போது மீண்டும் அதே வீச்சோடு கைப்பற்றவேண்டி வெளியில் வரும் :lol: ... தற்காலிக நிலையை உருவாக்க வேண்டும் ... ஈழம் எனும் கருத்துருவாக்கம் சர்வதேச அளவில் உருவாக்க பட வேண்டும்.. அதற்கு எதாவது தீவு வாங்குவதுதான் சரி... போக ... ஒரே நாளில் தற்போதைய சூழ்நிலையில் ஈழத்தினை அங்கிகரிக்கபோவதில்லை... வாங்கிய தீவை ஈழம அமைந்த பிறகு விற்றுவிடலாம் என்பது எனது கருத்து... ஆக கொடி ஒன்று ஐ.நா சபையில் பறக்க வேண்டும்...

இந்த கனடாவின் பிரான்ஸ் மக்கள் கியுபெக் தனி வாக்கெடுப்பு வரைக்கும் சென்றிருக்கிறார்கள்...... இத்தனைக்கும் அது வேறு நாடு என்றாலும் சர்வதேச அளவில் அது ஏற்று கொள்ள்பட்ட ஒன்று.. வேண்டும் என்றால் அந்த ஈழத்தின் சார்பில் வாங்கும் நாட்டுக்கு சர்வதேச அளவில் வல்லாதிக்கநாடுக்ளினால் துரத்தியடிக்கபட்டோர் நாடு என பெயர் வைத்து கொள்ளலாம்... (ஈழதோழர்க்ள் மன்னிக்குக ஆனால் நக்கலாகவும் தவறை சுட்டு காட்டும் விதமாகவும் பெயரினை வைக்கலாம்) தோழர் ராஜவன்னியன் இணைத்தது போல நானும் இதுவரை வாடிகன் சிட்டி தான் உலகத்தின் சிறிய நாடு என்று நினைத்திருந்தேன் ... இந்தா ஒரு சின்ன சிறிய பாலம் கூட நாடாம்... :D

sealand.jpg

டிஸ்கி :

நாடு கடந்த தமிழீழ அரசினை வைத்திருக்கும் தோழர்கள் அதே போல அரசினினை அமைத்திருக்கும் தலாய்லாமா கோஸ்டியை சந்தித்து இன்னும் ஆதரவு கோராது இருப்பது ஏன்?சீனா கொவித்து கொள்ளுமா? கிந்தியா கோவித்து கொள்ளுமா? தற்போதைய நிலையில் இந்த புலா சுளாக்கிகள் கோவித்து கொண்டு ஒன்டும் ஆகபோவது இல்லை... காரணம் இப்போ ஆயுத போராட்டம் இல்லை... உலகத்தால் ஏற்று கொள்ள பட்ட ஜன நாய்க போராட்டம்............. போக..... கைவிடுவது/ஏற்பது குறித்து ராஜத்ந்திர ரீதியில் அணுகவேணும்..ராட்சச பக்சே போல சீனாவுக்கும் கிந்தியாவுக்கும் மேற்குலகிற்கும் இடையில் ஒரு சடுகுடு ஆட்டம் ஈழத்தோழர்கள் ஆட முடியாதா? :lol:

தற்போதுள்ள நிலையில் யாரையாவது ஒருவரை ஆதரவாக திருப்புவது முக்கியம்... இந்த தலாய்லாமா கோஸ்டியை ஈழம் எனும் கருத்துருவாக்கம் சர்வதேச அளவில் உருவாக்கும் வரை ... இந்த தமிழ்நாட்டு கோஸ்டிகளை அழைத்து அங்கு மேடைகளில் கூவ விடுவதை விட இவரை போன்றவர்களை அழ்நித்து சில மேனா மினுக்கி வேலைகளை ஈழத்தோழகள் செய்ய வேண்டும்... இந்த வாய் பேச்சு வள்ளலகள் உணர்வோடு கூவுகிறார்கள் என்றாலும் ...

http://www.youtube.com/watch?v=mElGhdKnvtI

இவர்களால் ஆகபோவது ஒன்றுமில்லை 40 எம்பி சீட்டுகளை வைத்து கொண்டு 500 மேற்பட்ட கிந்திய நாடாளுமன்றத்தில் வெட்டவோ புடுங்கவோ முடியாது...

சர்வதேசத்தினால் ஏற்று கொள்ளபட்ட அவர்க்ள் கூவுவதற்கு மவுசு அதிகம்... இந்த மியான்மர் சூச்சி போன்றவர்களுக்கு நாடு கடந்த அரசின் சார்பாக விருது கிருது வழங்கி குல்மால் வேலைய ஆரம்பிக்கணும்... போக இப்ப நோபல் பரிசு வாங்கவேண்டி சீனாவின் சிறையில் இருப்பவருக்கும் தனி விருது ஒன்று கொடுக்கலாம்...

GD4890292@An-Ig-Nobel-award-is--6183.jpg

அந்தா கிந்து ராமு "சிங்கள ரத்னா " வாங்கி கொண்டு வாய் கூசாமல் புளுகுவதை போல.......... உண்மையவாவது சொல்ல சிலருக்கு சொம்படி சோப்பு வித்தைகளை ஈழதோழர்கள் பழகவேணும்....

ஏன் இன்னும் செய்யாமல் உள்ளார்கள்??? :lol:

இன்னும் கிந்திய விசுவாசமா என்று வினவுகிறான் இந்த தோழர்??? :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

இதான் உலகத்தின் சின்ன சிறிய நாடுகளாம்.. :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.