Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்ன செய்யலாம்

Featured Replies

நீதி:

தகைமையை ஏதோ ஒரு வகையில் உயர்த்தி இலாபமடைய முயற்சிப்பது என்பது எங்குமே உள்ளது. வீடுவாங்கச் சென்றால்கூட விற்பவர் அவசரப்படுகிறார் என்றால் வீட்டை அடிமாட்டுவிலைக்குக் கேட்பது நடைமுறையில் உள்ள ஒன்று.

அதேசமயம் மணமகள்களும் இலேசுப்பட்டவர்கள் என்று இல்லை. வயது, நிறம், உடல் தோற்றம், சாதி, பிரதேசம், கல்விநிலமை, தொழில்நிலமை இவை பற்றிய பல்வேறு துவேசமான உள நிலைப்பாடுகளை பெண்களும் கொண்டுள்ளார்கள். ஓர் விதவைப்பெண்ணாக காணப்பட்டாலும் மறுமணம் செய்யும் ஒரு பெண்ணின் உளத்தில் வயது, நிறம், உடல் தோற்றம், சாதி, பிரதேசம், கல்விநிலமை, தொழில்நிலமை இவை பற்றிய பல்வேறு துவேசமான உள நிலைப்பாடுகள் நிச்சயம் காணப்படலாம். ஊரில் தன்னிலும் பல வயதுகள் இடைவெளி உள்ள நபரை மறுமணம் செய்வதற்கு விரும்பாத ஓர் பெண் வெளிநாட்டில் அவ்வாறான நபரை மறுமணம் செய்வதற்கு சம்மதிக்கலாம்.

  • Replies 187
  • Views 14.5k
  • Created
  • Last Reply

வெளிநாடுகளில் நடைபெறும் இளம் சமுதாயத்தின் வாழ்வியலின் அடிப்படையில் நான் கருத்து கூறவில்லை. நீங்கள் ஏற்கனவே கூறிய விடயத்திற்குரிய பதில் அது. 30வயது ஊரில் உள்ள விதவைப்பெண் பற்றிய விடயம் அது.

ஆண் துணை இல்லாதுததால் தான் அங்கு பெண்கள் எல்லாம் அங்கு தற்கொலை செய்து கொள்கிறார்கள்... அவைகளுக்கு திருமணம் தான் தீர்வு எனும் தொனியிலும் நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்.... மீண்டும் அவைகளையும் மீட்டு பாருங்கள்...

தணிகாசலம் அவர்கள் சிறந்தவர் என்று கூறவில்லையே. அவர் தனியாக உரையாடியபோது தனது உள்ளக்கிடக்கைகளை கூறியுள்ளார்.

தணிகாசலம்... திருமணம் செய்வதில் பிழை இல்லை... அது அவரின் சொந்த விருப்பம்.... ஆனால் 30 வயதுகுள் குழந்தை பெறாத ஒரு ஆளை ( பச்சையாக சொன்னால் பெண் உறுப்பை ) தேடுவது அவர் எதை தேடுகிறார் என்பதை நன்கு புரிய வைக்கிறது...

உங்களுக்கு புரியாதது எனது தவறு அல்ல...

தணிகாசலம் கலியாணமே கட்டக்கூடாது என்று யாரும் சொன்னதாக நான் இங்கு கூறவில்லையே. வயது துவேசமாக கருத்துக்கள் கூறியது பற்றியே நானும் கருத்துக்கள் இட்டேன். தணிகாசலத்திற்கு 56 வயது என்பதே இங்கு பலரின் பிரச்சனை. நீங்கள் மீண்டும் மேற்கண்டது போன்ற கருத்தை எழுதி அதை மீண்டும் மெய்ப்பித்து உள்ளீர்கள். அதாவது 26வயது இளைஞர் இவ்வாறு உரையாடியிருந்தால் நீங்கள் பலர் பூரிப்படைந்து இருப்பீர்கள். காரணம் உங்கள் உளத்தில் உள்ள வயது துவேசம்.

வயது துவேசமாக யாரும் இங்கு எதையும் சொன்னதாக நான் அறியவில்லை... இந்த வயது பிரச்சினையை நீங்கள் தான் சொல்கிறீர்கள் ... அவர் தனது வயதுக்குரிய கண்ணியத்துடன் செயற்பட வேண்டும் இதுதான் தணிகாசலம் மீது உள்ள விமர்சனம்...

இது புரியாதது கூட எனது தவறும் இல்லை...

இங்கு சந்தேகம் ஏது? அவர் ஊரில் உள்ள பெண் ஒருவரை மறுமணம் செய்வதில் மிக நிச்சயமாக அவரது சுயநலம் அடங்கியுள்ளது. இல்லை என்று கூறவில்லையே! அத்துடன் வயதில் குறைவான பெண் வேண்டும் என்று கேட்பது மறுமணம் மூலம் குழந்தை ஒன்றை பெறுவதற்கான காரணமாகவும் அமையலாம்.

56 வயதில் ஒருவர் தனக்கு இனித்தான் குழந்தை வேணும் எண்டு எதிர்பார்க்கிறார் என்பது இயற்கைக்கு முரணானது... குழந்தைக்கு 10 வயது இருக்கும் போது ஓய்வூதியம் பெற்று விடும் அவரால் ஒரு குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம்... ! ஆகவே ஒரு பெண்ணின் வாழ்க்கை மட்டும் இல்லாது குழந்தையின் வாழ்வும் கேள்விக்குறி...

ஆக தணிகாசலம் தனது வயதுக்கு ஒத்த ஒருவரை நாடுவது தான் எல்லாருக்கும் நல்லது...

Edited by தயா

வயது துவேசமாக யாரும் இங்கு எதையும் சொன்னதாக நான் அறியவில்லை... இந்த வயது பிரச்சினையை நீங்கள் தான் சொல்கிறீர்கள் ... அவர் தனது வயதுக்குரிய கண்ணியத்துடன் செயற்பட வேண்டும் இதுதான் தணிகாசலம் மீது உள்ள விமர்சனம்...

இது பற்றி உங்களுக்கு நெடுக்ஸ்சும், தும்பளையானும் தெளிவான ஓர் பதிலை தந்துள்ளார்கள். உங்கள் சுய ஒழுக்ககோவைகளை - வயது சம்பந்தமான உங்கள் சுய விருப்பு, வெறுப்புக்களை உங்களுடன் வைத்திருங்கள். மற்றவனில் திணிக்காதீர்கள்.

56 வயதில் ஒருவர் தனக்கு இனித்தான் குழந்தை வேணும் எண்டு எதிர்பார்க்கிறார் என்பது இயற்கைக்கு முரணானது... குழந்தைக்கு 10 வயது இருக்கும் போது ஓய்வூதியம் பெற்று விடும் அவரால் ஒரு குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம்... ! ஆகவே ஒரு பெண்ணின் வாழ்க்கை மட்டும் இல்லாது குழந்தையின் வாழ்வும் கேள்விக்குறி... ஆக தணிகாசலம் தனது வயதுக்கு ஒத்த ஒருவரை நாடுவது தான் எல்லாருக்கும் நல்லது...

மீண்டும் உங்கள் வயது சம்பந்தமான ஓர் எதிர்பார்ப்பு, திணிப்பு! - துவேசம்.

தணிகாசலம்... திருமணம் செய்வதில் பிழை இல்லை... அது அவரின் சொந்த விருப்பம்.... ஆனால் 30 வயதுகுள் குழந்தை பெறாத ஒரு ஆளை ( பச்சையாக சொன்னால் பெண் உறுப்பை ) தேடுவது அவர் எதை தேடுகிறார் என்பதை நன்கு புரிய வைக்கிறது...

தணிகாசலம் நமது சமுதாயத்தை பிரதிபலிக்கும் ஒருவர்; சோற்றுப்பானையில் உள்ள ஓர் சோறு. அவருக்கு சுயநலம் உள்ளது. அத்துடன், திருமணம் செய்யும் பெரும்பாலான அனைவருமே - நீங்களும்தான் முக்கியமாக பாலியல் உறுப்பை தேடுகின்றார்கள். இதற்கு தணிகாசலம் மட்டும் ஏன் விதிவிலக்காக காணப்படவேண்டும்?

ஆண் துணை இல்லாதுததால் தான் அங்கு பெண்கள் எல்லாம் அங்கு தற்கொலை செய்து கொள்கிறார்கள்... அவைகளுக்கு திருமணம் தான் தீர்வு எனும் தொனியிலும் நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்.... மீண்டும் அவைகளையும் மீட்டு பாருங்கள்...

ஆண்துணை இல்லாமையால் தற்கொலை செய்வதாக கூறவில்லையே. வசதிகள், வாய்ப்புக்கள் இன்றி வாழ்க்கையில் அநாதரவாக கைவிடப்பட்டு தத்தளிக்கின்ற நிலையில் உள்ள பெண் ஒருவருக்கு தணிகாசலம் போன்ற பிரான்சில் வசதியாக உள்ள ஒருவர் மூலம் வாழ்வதற்கு ஓர் வாய்ப்பு கொடுக்கப்படுகின்றது என்பதையே கூறினேன். பெருந்தன்மை உள்ள ஓர் மனிதர் என்றால் பொருளாதார ஆதரவை மாத்திரம் கொடுப்பார். ஆனால், தணிகாசலம் தனக்கும் இதன்மூலம் நன்மை கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். இதுவே விடயம்.

Edited by கரும்பு

புலம்பெயர் நாடுகளில் ஒரு 10-30 வருடங்களாக வாழும் நாம் பல விடயங்களை கற்றுகொண்டுள்ளோம். அதில் ஒன்று இடத்துக்கு ஏற்றவாறு பணத்துக்கு அடிமையாக வாழ பணத்தால் அடிமையாக்க.

பணத்துக்கு அடிமையாக வாழ - இந்த முதலாளித்துவ நாடுகளில் எத்தனையோ உளரீதியான, கருத்து ரீதியான, பாலியல் வல்லுறவுகளுக்கு உள்ளாக்கப்பட்டு மனவேதனைகளுக்கு மத்தியில் வாழ்கின்றோம். அடிமனதில் எமது சொந்த மண்ணில் வாழும் நிம்மதியை இழந்து, சுகத்தை தொலைத்து வாழுகின்றோம்.

இந்த நிலையில் நாம் கையில் இருக்கும் பணத்தை வைத்து, வெளிநாடு என்ற ஒரு மோகத்தை தொடர்ந்தும் பேணி, " நாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்" என்பதை உருவாக்குகின்றோமா?

இப்பொழுது நாட்டில் உள்ள ஒரு இலட்சம் கணவனை இழந்தவர்களுக்கு, தொலைத்தவர்களுக்கு தணி மாதிரி ஒரு தீர்வை தேடுவதில் எம்மின் ஆற்றலை அலசலை ஒதுக்கும்வேளை நாம் எம்மையே ஏமாற்றுகின்றோமா?

இதைவிட அந்த மண்ணில் சொந்த மண்ணில் அந்த மக்களை அவர்கள் தேவைகளை கேட்டு உதவுவது நல்லமா?

பிள்ளைகள் உள்ளவர்களுக்கு அந்த நாளைய சமுதாயம் வளம் பெற சென்ன செய்யலாம் என ஆராய்வது நல்லமா?

இது பற்றி உங்களுக்கு நெடுக்ஸ்சும், தும்பளையானும் தெளிவான ஓர் பதிலை தந்துள்ளார்கள். உங்கள் சுய ஒழுக்ககோவைகளை - வயது சம்பந்தமான உங்கள் சுய விருப்பு, வெறுப்புக்களை உங்களுடன் வைத்திருங்கள். மற்றவனில் திணிக்காதீர்கள்.

உங்கட அக்கா தங்கச்சி மாருக்கு ஒரு கிழடனை கட்டி வையுங்கோ... மற்றவை கட்டுறது சரி எண்டு திணிக்காதேங்கோ... அதை நான் கேக்க இல்லை... அது உங்கட குடும்ப பிரச்சினை... அது மட்டும் தான் உங்கட அளவு... அதுக்கும் மேலை பொதுப்பிரச்சினை...

மீண்டும் உங்கள் வயது சம்பந்தமான ஓர் எதிர்பார்ப்பு, திணிப்பு! - துவேசம்.

வாசிப்பு பழக்கமும் கிரக்கிக்கும் அறிவும் போதாமை தான் இதுக்கு காரணம்.... சொல்லப்படும் விசயத்தை புரிந்து கொள்ள முடியாமை என்பது அறிவு வளர்ச்சியின் போக்கு... நான் பிடித்த முயலுக்கு மூண்டு கால் எனக்கு நீங்கள் சொன்னால் அதனால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை..

தணிகாசலம் நமது சமுதாயத்தை பிரதிபலிக்கும் ஒருவர்; சோற்றுப்பானையில் உள்ள ஓர் சோறு. அவருக்கு சுயநலம் உள்ளது. அத்துடன், திருமணம் செய்யும் பெரும்பாலான அனைவருமே - நீங்களும்தான் முக்கியமாக பாலியல் உறுப்பை தேடுகின்றார்கள். இதற்கு தணிகாசலம் மட்டும் ஏன் விதிவிலக்காக காணப்படவேண்டும்?

எல்லாரும் விழுகினம் எண்டதுக்காக நீரும் அந்த சேத்துக்கை தான் இருப்பன் எண்டால் அந்த பண்றி வாழ்க்கைக்கு நான் வரவில்லை..... நான் இண்டைக்கு நாகரீகம் வளர்ந்த மேற்க்கு நாட்டில் இருக்கிறன்.... எனக்கு உம்மை போல பிற்போக்கு தனங்கள் எனக்கு தேவையும் இல்லை...

100% மான ஆண்கள் விதவிதமான பெண்களின் பின்னால் திரிகிறார்கள் என்பது கிணத்துக்கை இருக்கும் தவளையின் கூற்று...

ஆண்துணை இல்லாமையால் தற்கொலை செய்வதாக கூறவில்லையே. வசதிகள், வாய்ப்புக்கள் இன்றி வாழ்க்கையில் அநாதரவாக கைவிடப்பட்டு தத்தளிக்கின்ற நிலையில் உள்ள பெண் ஒருவருக்கு தணிகாசலம் போன்ற பிரான்சில் வசதியாக உள்ள ஒருவர் மூலம் வாழ்வதற்கு ஓர் வாய்ப்பு கொடுக்கப்படுகின்றது என்பதையே கூறினேன். பெருந்தன்மை உள்ள ஓர் மனிதர் என்றால் பொருளாதார ஆதரவை மாத்திரம் கொடுப்பார். ஆனால், தணிகாசலம் தனக்கும் இதன்மூலம் நன்மை கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். இதுவே விடயம்.

மீண்டும் எழுதிய கருத்துக்களை போய் படித்து பாரும்.... என்னால் அந்த குப்பைகளை திரும்ப மீட்டி இங்கை போடுவது வேலையத்த வேலை...

நான் சொல்ல வேண்டியவைகளை தெளிவாக சொல்லி இருக்கிறன்...

56 வயது கிழடு தணிகாசலத்துக்கு 30 பிள்ளை பெறாத பெண்ணை கட்டி வைக்கிறதும் இல்லாததும் உமது பிரச்சினை...

Edited by தயா

உங்கட அக்கா தங்கச்சி மாருக்கு ஒரு கிழடனை கட்டி வையுங்கோ... மற்றவை கட்டுறது சரி எண்டு திணிக்காதேங்கோ... அதை நான் கேக்க இல்லை... அது உங்கட குடும்ப பிரச்சினை... அது மட்டும் தான் உங்கட அளவு... அதுக்கும் மேலை பொதுப்பிரச்சினை...

உங்கள் உளத்தில் உள்ள வயது துவேசத்தை தொடர்ந்து ஆவேசத்துடன் நிரூபித்து உள்ளீர்கள். நன்றி. :wub:

வாசிப்பு பழக்கமும் கிரக்கிக்கும் அறிவும் போதாமை தான் இதுக்கு காரணம்.... சொல்லப்படும் விசயத்தை புரிந்து கொள்ள முடியாமை என்பது அறிவு வளர்ச்சியின் போக்கு... நான் பிடித்த முயலுக்கு மூண்டு கால் எனக்கு நீங்கள் சொன்னால் அதனால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை..

ஆமாம், நீங்கள் கூறுவதற்கு நான் உடன்படாவிட்டால் எனக்கு வாசிக்கும் பழக்கம் இல்லை, கிரகிக்கும் அறிவு போதாது. :)

எல்லாரும் விழுகினம் எண்டதுக்காக நீரும் அந்த சேத்துக்கை தான் இருப்பன் எண்டால் அந்த பண்றி வாழ்க்கைக்கு நான் வரவில்லை..... நான் இண்டைக்கு நாகரீகம் வளர்ந்த மேற்க்கு நாட்டில் இருக்கிறன்.... எனக்கு உம்மை போல பிற்போக்கு தனங்கள் எனக்கு தேவையும் இல்லை...

நீர் மேற்கு நாட்டில இருந்தாலும் தொடர்ந்தும் மிகவும் பிற்போக்குத்தனமாகவே அங்கு வாழ்கின்றீர். நீர் இன்னமும் கிணற்றுக்குள் இருந்து வெளியில் வரவில்லை.

மீண்டும் எழுதிய கருத்துக்களை போய் படித்து பாரும்.... என்னால் அந்த குப்பைகளை திரும்ப மீட்டி இங்கை போடுவது வேலையத்த வேலை... நான் சொல்ல வேண்டியவைகளை தெளிவாக சொல்லி இருக்கிறன்... 56 வயது கிழடு தணிகாசலத்துக்கு 30 பிள்ளை பெறாத பெண்ணை கட்டி வைக்கிறதும் இல்லாததும் உமது பிரச்சினை...

நானும் சொல்லவேண்டியவைகளை தெளிவாக சொல்லி இருக்கிறன். உமது வயது துவேசத்தை தொடர்ந்து அருமையாக வெளிப்படுத்தி இருக்கின்றீர். பாராட்டுக்கள். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் இத்திரியை நாற்சந்திக்கு நகர்த்தினால் நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சந்தேகம் ஏது? அவர் ஊரில் உள்ள பெண் ஒருவரை மறுமணம் செய்வதில் மிக நிச்சயமாக அவரது சுயநலம் அடங்கியுள்ளது. இல்லை என்று கூறவில்லையே! அத்துடன் வயதில் குறைவான பெண் வேண்டும் என்று கேட்பது மறுமணம் மூலம் குழந்தை ஒன்றை பெறுவதற்கான காரணமாகவும் அமையலாம்.

திருமணத்திற்கு ஒருவர் தயார் என்று சொன்னால் என்னதான் கஸ்டமான நிலையில் இருந்தாலும் பெண்வீட்டார் ஆணின் பின்புலத்தை சரியாக அறியாமல் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். அப்படியொரு பெண்ணின் உறவினன் என்ற ரீதியில் என்னை வைத்துப் சிந்தித்தால், சரியாக விசாரிக்காமல் எதற்கும் உடன்படமாட்டேன்.

மேலும் தணிகாசலம் தான் ஊருக்குப் போகப்போவதால் அவசரமாக ஒரு பெண்ணைத் தேடிப் பிடித்துத் தருமாறு கேட்பதாகத்தான் கதை உள்ளது. அத்துடன் அவர் பெண்ணை வெளிநாட்டுக்கு எடுப்பாரா அல்லது ஊரில் இருக்கச் சொல்லிவிட்டு, இடையிடையே விடுமுறை போகும்போது மட்டும் "பார்த்து" விட்டு வருவாரா என்பதெல்லாம் சொல்லப்படவில்லை. எனவே சாதக பாதகங்களைப் பொறுப்பாக ஆராய்ந்துதான் முடிவு செய்யவேண்டும். திடுமென எந்த முடிவையும், அதுவும் கல்யாணம் என்று வரும்போது, எடுப்பது நல்லதல்ல.

நானும் உங்கள் நிலமையிலேயே காணப்படுவேன் கிருபன். பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போன்ற நிலமை நிச்சயம் ஏற்படக்கூடாது. ஆனால், இங்கு ஏறக்குறைய 150 பதில் கருத்துக்கள் கொண்ட இந்தக்கருத்தாடலை முழுமையாக பார்த்தீர்களானால் பலர் தணிகாசலத்தை போட்டு தாக்குவதிலேயே ஆர்வப்பட்டுள்ளார்கள். சாத்திரி அண்ணாவிடம் தனிப்பட அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவ்வாறு பேசியதால் தாம் தீம் தோம் என்று இவர்கள் குதிக்கின்றார்களாம். உண்மையில் தொலைபேசியில் கதைத்தவர் தனக்கு கேட்டாரா அல்லது வேறு ஒருவருக்கு கேட்டாரா என்று கூட தெரியாது. அவர் உண்மையில் விரைவில் ஊருக்கு போகின்றாரா என்றுகூட தெரியாது. சாத்திரி அண்ணாவிடம் எதையாவது தகவல் புடுங்குவதற்காகக்கூட இப்படி ஒருவர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இருக்கலாம்.

பல கனேடியர்கள் -மேற்கைத்தியர்கள் ஆண் - பெண் உறவை 18 வயதுக்குள்ளேயே முடித்துவிடுவார்கள்.

பலருக்கு இந்த "இயற்கை" வாழ்க்கை முறை முப்பதுகளிலேயே வெறுத்துவிடும்.

பின்னர் ஒரு பகுதியினர் தன்னினச்சேர்க்கையயை தெரிவு செய்வார்கள்.

சிலருக்கு அதுவும் பின்னர் வெறுத்துவிடும். எல்லாத்தையும் விட மிகவும் கொடூரமான ஒன்றை செய்வார்கள் - குழந்தைகளை தமது இச்சைக்கு உள்ளக்குவார்கள்.

இப்படியான நிகழ்வுகள் இடம்பெறுவது பாடசாலைகளிலும் மத நிறுவனங்களிலும் கூடத்தான்.

இந்த மாதிரி நிகழ்வெல்லாம் எவ்வளவு தூரம் பரந்தளவில் நடக்கின்றது என்பது பல தமிழ் பெற்றோர்களுக்கு தெரியாது.

உண்மையில் இது தனது பிள்ளைகளுக்கு நடக்கவே நடக்காது என எண்ணியே பலர் வாழ்கின்றனர். அப்படி நடக்கும்போது தாய் நாடு சொர்க்கமாக தெரியும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி நடக்கும்போது தாய் நாடு சொர்க்கமாக தெரியும்.

தாய் நாட்டில் இதுவெல்லாம் நடப்பதில்லை என்று சொல்லுவதும் அறியாமையாகத்தான் இருக்கும்.

கனடாவில் ஒரு பகுதியினர், அமெரிக்கவால் பொருளாதார தடை விதிக்கப்பட்ட, கியூபாவுக்கு செல்வர்கள்.

அங்கே உள்ள மக்களின் வறுமையான வாழ்வுக்குள் தமக்கு சிற்றின்ப சுகம் தேடுவார்கள். சிலர் அவர்களை கனடாவுக்கு கூப்பிடுவதாக ஏமாற்றுவார்கள். கனடாவுக்கு "எயுட்சு" நோயையும் கொண்டுவார்கள். பின்னர் இதை இங்கு ஒளித்து பிறருக்கு பரப்புவார்கள் ( இது ஓரி சட்ட குற்றம் இங்கு) .

கியூபாவில் அதன் பொருளாதாரம் மேம்படும் வரையில் அதன் மீது ஏறி குதிரை சவாரி செய்வார் பலர்.

தாய் நாட்டில் இதுவெல்லாம் நடப்பதில்லை என்று சொல்லுவதும் அறியாமையாகத்தான் இருக்கும்.

அப்படியென்றும் கூறுவதற்கு இல்லை. ஊர் என்றால் தாங்கள் நினைப்பது போல் இருக்கும் அல்லது இருக்கவேண்டும் என்பதே வெளிநாட்டில் உள்ள பலரின் எதிர்பார்ப்பு. வெளிநாட்டில் உள்ளவர்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் ஊரில் உள்ளவர்கள் வாழ்வார்கள், வாழவேண்டும் அல்லது அவ்வாறு வாழ வைக்கப்படுவார்கள். எங்கள் social norm. :)

இன்னொரு பகுதி கனேடியர்கள் உலகின் "சிறுவர் பாலியல்" முடிசூடா நாடான கம்போடியாவுக்கு செல்வார்கள். அதிகளவில் ஆண்களும் படிப்பிக்க என தென் கொரியா செல்லும் பலர் "ஒரு வார இறுதி" பயணம் கம்போடியாவுக்கு மேற்கொள்ளுவார்கள்.

இப்படி பாதிக்கப்பட்ட சிறுவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு பெரிய உளரீதியில் மன அழுத்தத்தில் வாழ்பவர்கள், சிலர் நடை பிணங்கள்.

தாயகத்திலும் இன்று ஒரு இலட்சம் திணை இழந்தவர்கள் இருப்பின் மூன்று இலட்சம் குழந்தைகளும் ஒரு தாயோ இல்லை தந்தையோ இல்லாமல் இருப்பார்கள். இவர்களின் எதிர்காலம் சரியான பாதையில் அமையாவிடில், தன்னம்பிக்கை உடையவர்களாக வளரவிட்டால், பொருளாதார பலம் மிக்க சமுதாயமாக தாயகம் இல்லை விடில், அங்கும் ஒரு கம்போடியா உருவாகி விடும்.

தாய் நாட்டில் இதுவெல்லாம் நடப்பதில்லை என்று சொல்லுவதும் அறியாமையாகத்தான் இருக்கும்.

பிறகேன் அப்பு ஊருக்கு போறார்..??

அப்பு வுக்கு அப்ப லண்டலிலை ஒரு 30 வயது பிள்ளையை பாத்து கட்ட ஏலாதோ...?

Edited by தயா

" தாய் நாட்டில் இதுவெல்லாம் நடப்பதில்லை என்று சொல்லுவதும் அறியாமையாகத்தான் இருக்கும்."

இதுவெல்லாம் நடப்பதில்லை என இல்லை. ஆனால் இங்கு, புலம்பெயர் நாடுகளில் பரந்தளவில் நடப்பது ஒன்று. ஒரு விதத்தில் சமூகத்தால் ஏற்கப்பட்ட ஒன்று.

ஊரில் பிள்ளைகளை வளர்ப்பது கிராமம்.

இங்கே பிள்ளைகளை வீதியில் விடவே "பயம்". இங்கு பிள்ளைகளை அழிப்பது பாடசாலைகளும், மத குருமார்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிறகேன் அப்பு ஊருக்கு போறார்..??

அப்பு வுக்கு அப்ப லண்டலிலை ஒரு 30 வயது பிள்ளையை பாத்து கட்ட ஏலாதோ...?

எல்லோரைப் போலவும் "ஹோம்லி"யான பெண் தேவை என்பதால்தால் ஊருக்குப் போகின்றார். இலண்டனில் இருக்கும் "ஹோம்லி"யான பெண்கள் "ஹாண்ட்ஸம்" ஆன ஆண்களைத்தான் கட்டுவார்கள். 56 இல் உள்ள மத்திய வயதுக்காரர் "ஹாண்ட்ஸம்" ஆக இருப்பார் என்று சொல்லமுடியாது.

நானும் உங்கள் நிலமையிலேயே காணப்படுவேன் கிருபன். பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போன்ற நிலமை நிச்சயம் ஏற்படக்கூடாது. ஆனால், இங்கு ஏறக்குறைய 150 பதில் கருத்துக்கள் கொண்ட இந்தக்கருத்தாடலை முழுமையாக பார்த்தீர்களானால் பலர் தணிகாசலத்தை போட்டு தாக்குவதிலேயே ஆர்வப்பட்டுள்ளார்கள். சாத்திரி அண்ணாவிடம் தனிப்பட அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவ்வாறு பேசியதால் தாம் தீம் தோம் என்று இவர்கள் குதிக்கின்றார்களாம். உண்மையில் தொலைபேசியில் கதைத்தவர் தனக்கு கேட்டாரா அல்லது வேறு ஒருவருக்கு கேட்டாரா என்று கூட தெரியாது. அவர் உண்மையில் விரைவில் ஊருக்கு போகின்றாரா என்றுகூட தெரியாது. சாத்திரி அண்ணாவிடம் எதையாவது தகவல் புடுங்குவதற்காகக்கூட இப்படி ஒருவர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இருக்கலாம்.

சாத்திரியியண்ணையின் பதிவை வைத்தே பெரும்பாலான கருத்துக்கள் பதியப் பட்டு இருகின்றன... இது என்ன புதுக் கதையா இருக்கு? :)

...

தணிகாசலம்...எனக்கு தம்பி இப்ப 56 வயது

நான்..ஒம்

தணிகாசலம்..என்ரை மனிசி வருத்தம் வந்து 2 வருசத்துக்கு முதல் மோசம் போயிட்டா..

நான்.....ஸ்.....ப்ச்......ம்........சொல்லுங்கோ

தணிகாசலம்....எனக்கு இரண்டு பிள்ளையள் அதுகளும் கலியாணம் கட்டி தனியா போட்டுதுகள்.

நான்..ஓ அப்ப நீங்கள் தனிச்சு போனியள் உங்கடை கவலை விளங்குது அப்பிடியெண்டால் ஒரு சின்ன பிள்ளையொண்டை பொறுப்பெடுத்து வளவுங்கோவன் அதுக்கான வசதியை செய்து தரலாம்..

தணிகாசலம்..நான் ஒரு பிள்ளையை பொறுப்பெடுத்து வளக்கிறதெண்டிறது கஸ்ரம் தம்பி அதோடை நான் இந்தமாத கடைசி ஊருக்கு போறன் அங்கை ஆரும் பிள்ளையள் இல்லாத விதைவை இருந்தால் நான் பொறுப்பெடுத்து உதவிசெய்யலாமெண்டு பாக்கிறன். அப்பிடி யாரும் உங்கடை லிஸ்ரிலை இருந்தால் சொல்லுங்கோ. அதுவும் வயது ஒரு முப்பதுக்குள்ளையெண்டால் இன்னும் நல்லது......

அப்பொழுதுதான் அவர் என்னவகையான உதவி செய்ய விரும்புகிறார் என எனக்கு பட்டென்று புரிந்தது ;அண்ணை .நாங்கள் உதவி அமைப்புத்தான் நடத்திறம் புறோக்கர் வேலை செய்யேல்லை என்றுவிட்டு தொலைபேசியை நிறுத்தலாமா??என ஒரு செக்கன் யோசித்தாலும். சரி யாரோ ஒரு பெண்ணிற்கு ஒரு வழியும் வெளிநாட்டு வாழ்வும் கிடைத்தாலும் கிடைக்கும். எதற்கு குழப்புவான் என இரண்டு மனதில் போராட்டத்துடன்

நான்.அண்ணை உங்கடை பிரச்சனை விளங்கிது ஆனால் உதவவிரும்புகிறவையின்ரை உதவியை கொண்டு சேர்க்கிறதுதான் எங்கடை வேலை ஆனால் உங்கடை உதவி கொஞ்சம் சிக்கலான விசயம்.அதாலை நான் தனியா முடிவெடுக்கேலாது எங்கடை அமைப்பிலை மற்றவையோடையும் கதைத்து முடிவு சொல்லுறன். அதோடை வேறை உதவியளும் பிள்ளையளிற்கு கல்வி எண்டு கனக்கதேவைப்படுது அதைப்பற்றியும் யோசியுங்கோ நான் உங்களுக்கு பிறகு போனடிக்கிறன்.

தணிகாசலம்..தம்பி நான் இந்தமாதக்கடைசி கட்டாயம் போறன் றிக்கற் எல்லாம் போட்டிட்டன். மற்றபடி நான் வடக்கு கிழக்கு சாதி சமயம் எண்டெல்லாம் பாக்கிறேல்லை(எண்டெரு தத்துவத்தையும் உதிர்ந்து) உங்களிட்டை இருக்கிற விபரங்களை போடுங்கோ நான் நேரை போய் சந்தித்து மிச்ச அலுவல்களை நான் பாக்கிறன். கட்டாயம் போகமுதல் நல்லமுடிவாய் சொல்லுங்கோ

தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

...

எனக்கு, நான், என்ர என்றால் அடுத்தவருக்கு என்று தமிழில கருத்து வேற இருக்குப் போல...

பிறகேன் அப்பு ஊருக்கு போறார்..??

அப்பு வுக்கு அப்ப லண்டலிலை ஒரு 30 வயது பிள்ளையை பாத்து கட்ட ஏலாதோ...?

தயா அண்ண, நீங்கள் அவரை அப்பு என்று சொல்லக் கூடாது... அவர் 'பிரஞ் மண்டேலா' :wub::unsure:

சாத்திரியியண்ணையின் பதிவை வைத்தே பெரும்பாலான கருத்துக்கள் பதியப் பட்டு இருகின்றன... இது என்ன புதுக் கதையா இருக்கு? :wub: எனக்கு, நான், என்ர என்றால் அடுத்தவருக்கு என்று தமிழில கருத்து வேற இருக்குப் போல...

தொலைபேசியில் முன்பின் அறியாத ஒருவர் ஒன்று சொன்னால் அதை வெளிநாட்டில் வாழும் விபரமான ஆளாகிய நீங்கள் முழுமையாக நம்பிவிடுவீர்கள்? :)

அவர் 'பிரஞ் மண்டேலா'

அவர் பிரஞ் மண்டேலா நீங்கள் என்ன யூகே ஆறுமுகநாவலரா?

தயா அண்ண, நீங்கள் அவரை அப்பு என்று சொல்லக் கூடாது... அவர் 'பிரஞ் மண்டேலா' :):mellow:

நான் நினைக்கிறன் சிலருக்கு எப்பவும் தாங்கள் மன்மதன்கள் எண்ட நினைப்பு.... தங்களுக்கு பின்னாலை வர பொம்பிளையள் அதுவும் யங் வுமன்ஸ் வர நிக்கினம் எண்ட கற்பனை... ! ஒரு நாளைக்கு காறி துப்பி செருப்பாலை சாத்து வாங்கினால் தான் இதுக்கு முடிவு வரும்...

நான் நினக்கிறன் அப்பு முந்தி 56 வயசிலை ஒராளை பாக்க நிண்டு இருப்பார்... இப்பதான் வசதியா போர் நிறைய அவரின் இச்சைக்கு வசதியாக விதவைகளை தந்து இருக்குதே ஆகவே 28 இலை இரண்டை பாப்பம் எண்டு நினச்சாராக்கும்.... :wub::unsure::wub:

Edited by தயா

எல்லோரைப் போலவும் "ஹோம்லி"யான பெண் தேவை என்பதால்தால் ஊருக்குப் போகின்றார். இலண்டனில் இருக்கும் "ஹோம்லி"யான பெண்கள் "ஹாண்ட்ஸம்" ஆன ஆண்களைத்தான் கட்டுவார்கள். 56 இல் உள்ள மத்திய வயதுக்காரர் "ஹாண்ட்ஸம்" ஆக இருப்பார் என்று சொல்லமுடியாது.

ஓ அதுதான் மலிவாய் ஒண்டை பிடிக்க ஊருக்கு போறார் போல கிடக்கு... ஊருக்கு போற காசுக்கு இங்கை கிங்குறஸ் பக்கம் போய் வரலாம் எண்டு ஒருத்தரும் அறிவுரை சொல்ல இல்லை போல கிடக்கு...

-----

சிங்கிள் 56 அப்பு டபிள் ஆக வாழ்த்துக்கள்... முக்கியமாக அவருக்காக நிண்டு முக்கிறவைக்கும் வாழ்த்துக்கள்.... :)

தொலைபேசியில் முன்பின் அறியாத ஒருவர் ஒன்று சொன்னால் அதை வெளிநாட்டில் வாழும் விபரமான ஆளாகிய நீங்கள் முழுமையாக நம்பிவிடுவீர்கள்? :)

அவர் என்ன சொல்லுகிறார் அல்லது சொல்ல வருகிறார் என்பதைக் கூட அறிந்து கொள்ள வெளிநாட்டில தான் இருக்க வேணும் என்று இல்லை, இதை விளங்காமல் அல்லது விளங்கியும் வழங்காதது போல் இருப்பவர்களை என்னவெண்டு சொல்ல்வது? விதவைப் பெண்களுக்கு உதவி கோரியதை தனக்கு சார்ப்பாக வைத்து கேட்டது கூடவா விளங்க இல்லை... :wub:

அவர் பிரஞ் மண்டேலா நீங்கள் என்ன யூகே ஆறுமுகநாவலரா?

நான் எப்போதும் என்னை ஆறுமுக நாவலரோட என்னை ஒப்பிட்டு பதிந்ததாக பதிவுகளில் இல்லை! என்னை நான் ஒருபோதும் எனக்கு மேலே இருப்பவர்களோடு ஒப்பிடுவதும் இல்லை!! நீங்கள் தான்

"முதுமை என்பது வயதில் தங்கி இல்லை. இதற்கு உதாரணமாக மேற்கண்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டன"
என்று நடிகர்கள் கமல், ரஜனி மற்றும் மண்டேலாவின் படங்களை இங்கே ஒட்டினீர்கள்... :unsure:

அவர் என்ன சொல்லுகிறார் அல்லது சொல்ல வருகிறார் என்பதைக் கூட அறிந்து கொள்ள வெளிநாட்டில தான் இருக்க வேணும் என்று இல்லை, இதை விளங்காமல் அல்லது விளங்கியும் வழங்காதது போல் இருப்பவர்களை என்னவெண்டு சொல்ல்வது? விதவைப் பெண்களுக்கு உதவி கோரியதை தனக்கு சார்பாக வைத்து கேட்டது கூடவா விளங்க இல்லை... :)

நிச்சயமாக இங்கு அவரது சுயநலம் உள்ளது. யார் இல்லை என்று கூறினார்கள்?

நான் எப்போதும் என்னை ஆறுமுக நாவலரோட என்னை ஒப்பிட்டு பதிந்ததாக பதிவுகளில் இல்லை! என்னை நான் ஒருபோதும் எனக்கு மேலே இருப்பவர்களோடு ஒப்பிடுவதும் இல்லை!! நீங்கள் தான்என்று நடிகர்கள் கமல், ரஜனி மற்றும் மண்டேலாவின் படங்களை இங்கே ஒட்டினீர்கள்... :wub:

56 வயது உடையவர் ஓர் அப்பு - கிழவர் என்று சொல்வதற்கு இல்லை. கமலகாசனும், ரசனிக்காந்தும் தமது 56, 61 வயதுகளில் இளங்குமரிகளுடன் குதி தெறிக்க ஆடுவதை எம்மால் பார்த்து கைதட்ட முடிகின்றது. ஆனால்.. நம்மவர் ஒருவர் 56 வயதுடையவர் என்றால் அப்பு என்று கூறி கிண்டல் செய்கின்றோம், ஒதுக்கி வைக்கின்றோம். வயதுபோனவர்கள் ஆற்றல் அற்றவர்கள் உடல் பலவீனமானவர்கள் எனும் stereotypeஐ மறுதலிக்கவே அவர்கள் படங்களை இணைத்தேன். த.வி.பு தலைவரும் ஐம்பது வயது சொச்சம் உடையவர். உங்கள் பாசையில் அந்த அப்புவை நம்பி ஒரு பெரிய தேசத்தையே ஒப்படைத்து தமிழர் தலைவிதியையே தீர்மானிக்கலாம் என்றால் ஒரு முப்பது வயது பெண்ணிற்கு வாழ்வு கொடுப்பதற்கு ஏன் 56வயது நபர் ஒருவரால் முடியாது? மண்டேலா மூன்றாம் தரமாக திருமணம் செய்தபோது அவருக்கு வயது 80, அவரது மூன்றாவது மனைவியைவிட அவருக்கு 27 வயதுகள் அதிகம். உங்கள் பாசையில் நாளைக்கோ நாளன்றைக்கோ மண்டையை போடக்கூடிய 80 வயது நபர் ஒருவரை ஏன் ஒருவர் திருமணம் செய்யவேண்டும்? அவ்வளவு பெரிய தலைவருக்கு ஏன் 80 வயதில் திருமணம் தேவைப்படுகின்றது? தலைவர் என்றால் என்னவும் செய்யலாம், அதை ஏற்றுக்கொள்வீர்கள், ஆனால், ஓர் சாதாரண மனிதன் என்றால் 56 வயது என்றதும்... கோயில், குலம் என்று புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு பரலோகம் போவதற்கு தன்னை ஆயத்தப்படுத்தும் அலுவல்களை மாத்திரம் செய்யவேண்டும்?

எங்கட ராச்சியத்தில வயதிற்கோ ஒழுக்கத்திற்கோ முக்கியமில்லை.எங்கட ஆளாக இருந்தால் எதுவும் செய்யலாம்.நாம அதுக்கு நியாயம் வேறு சொல்லுவோம்.

பொங்கு தமிழ் கணேசலிங்கத்திட்டை கேட்டுப் பாருங்கோ நான் சொன்னது சரியோ பிழையோ என்று.

வானொலியில் வந்தவர் ஆற்ற ஆளென்று பாருங்கோ பிறகு சரியோ பிழையோ என்று தீர்மானிப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.