Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Living together

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லிவிங் டு கெதர் ..............திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்தல்

.படித்ததில் பகிர்ந்தது.

கடவுள் என்ற மூட நம்பிக்கையில் உங்கள் காலத்தைவீணடிக்காதீர்கள்.நமக்கெல்லாம் பகுத்தறிவு எதற்கு

இருக்கிறது.அதை கொஞ்சமாவது உபயோகப்படுத்திவாழுங்கள் .கடவுளை விட உங்களுக்கு அதிகம்

சக்தி கிடைக்கும்...`

பலத்த கரகோசத்துடன் பேசி முடித்தான் ஆகாஷ்.

ஆகாஷ் இன்றையத் தேதியில் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவன்.அவனது பகுத்தறிவுக் கொள்கை மற்றும் பின்னவீனத்துவமான எழுத்துக்களில் கிறங்கிப்போய் அவனுக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.அவனது புகழ் பெருகக் காரணம் அவனது பேச்சுத் திறனும் எழுத்து நடையும் மட்டுமல்ல.நிஜ வாழ்க்கையில் கூட அவன் பகுத்தறிவுவாதியாக தனக்குப் பிடித்த பெண்ணோடு பல சமூக எதிர்ப்புக்களுக்கும் மத்தியிலும் சேர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பதால் அவனை ஒரு பின்னனவீனத்துவ பகுத்தறிவுவாதத்துக்கு உதாரண புருஷனாகவே அவனது ரசிகர்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.திருமணம் என்பது மூட நம்பிக்கை என்று மேடைக்கு மேடை பேசுவதோடு நின்று விடாமல் நிஜத்திலும் லிவ்விங் டுகதர் வாழ்க்கை வாழும் அவனை உதாரண புருஷனாக ஏற்றுக் கொள்வதில் ரசிகர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை.

கூட்டத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு காரில் எரிய ஆகாஷின் செல்போன் சிணுங்கியது...

`ஹலோ ஆகாஷ் கொஞ்ச நேரமா தாங்க முடியாத வயிற்று வலியாக இருக்குது. எங்கே இருக்கிறீங்க / உடனே வாங்க உங்களைவிட்டால் எனக்கு வேறு யார் இருக்கிறார்கள்?`.

மறுமுனையில் அழைத்தால் அவளது லிவ்விங் டுகெதர் பார்ட்னர் பிரியா.

செல்லம் கொஞ்ச நேரம் பொறுத்துக் கொல்லுடா இந்த பக்கத்தில வந்திட்டன் என்றவாறே காரின் வேகத்தைஅதிகரித்தான் ஆகாஷ்.அவசர அவசரமாக வீட்டுக்குச் சென்று யாருமே இல்லாமல் தனியாக வயிற்று வலியோடு போராடிக்கொண்டிருந்த தன் லிவ்விங் டுகதர் பார்ட்னரை வைத்திய சாலைக்கு அழித்துப்போனான் ஆகாஷ்.அவளைப் பரிசோதித்த வைத்தியர் ஆகாஷிடம் ` உங்கள் மனைவிக்கு நச்சுக்கொடி கழன்றுவிட்டது உடனடியாகசீசர் செய்து பிள்ளையை எடுக்காவிட்டால் பிள்ளையின் உயிருக்கு மட்டுமல்ல தாயின் உயிருக்கு கூட உத்தரவாதம் இல்லை என்று சொல்லி உடனடியாக சத்திர சிகிச்சைக்கு சம்மதம் என்று கையெழுத்துப் போடும்படி சொல்லிவிட்டு போனார்.

நேர்ஸ் ஒரு நீண்ட போர்மோடு வந்து சார் சொல்லுங்க நீங்க பேஷண்டுக்கு என்ன முறைவேனும்...

நான் அவளோட பார்ட்னர் .

-பார்ட்னர் என்றால் ? கணவன் இல்லையா?

இல்லை நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து வாழுகிறோம்.

-நீங்க பேஷண்டுக்கு சொந்தமா?

மீண்டும் மீண்டும் நேர்ஸ் கேள்வி கேட்கவே ஆத்திரப்பட்ட ஆகாஷ் என்ன மிஸ் அங்கே பிரியா வலியிலே துடிக்கிறாள் நீங்க இங்கே இன்டர்வியு வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று திட்டிவிட்டான்..ஆனால் நேர்ஸ் எந்த சலனமும் இல்லாமல் சாரி சார் ஒப்பரேஷனுக்கு கணவரோ அல்லது யாராவது உறவினறோதான் கையெழுத்துப் போட

முடியும் .நீங்கள் சத்தம் போட்டு மற்ற பேஷண்ட டிஸ்டர்ப் பண்ணாமல்

வெளியே வெயிட் பண்ணுங்கள் என்று அவனை அலட்சியப்படுத்திவிட்டுப்

போனால் ,அப்ப பிரியாவுக்கு இப்ப ஆப்பரேஷன் பண்ண மாட்டீங்களா என்று சற்று அதிகமான சத்தத்திலே கேட்க...

அது நாங்க பேஷனோடு கதைத்து அவங்கட சம்மதத்தோடு செய்து கொள்கிறோம்..நீங்கள் வெளியே வெயிட் பண்ணுங்கள் என்று சொல்லி உள்ளே போய்விட்டால்...

ஒரு மணிநேரம் கழித்து வெளியே வந்த டாக்டர்...

குட் நியூஸ் மிஸ்டர் ஆண்குழந்தை எந்த ஆபத்துமில்லாமல் பிறந்திருக்கிறது. பேஷண்ட கணவனிடம் சொல்லிவிடுங்கள்.

ஐயோ டாக்டர் பிரியா எனக்குச் சொந்தமானவள்.பிறந்த பிள்ளை என் பிள்ளைதான் .நாங்க சேர்ந்து வாழுகிறோம்.

ஓ சாரி மிஸ்டர் ... என்று விட்டு சென்ற டாக்டரிடம் , தாங்க்ஸ் டாக்டர்.

நோ நோ நான் என் கடமையைத்தான் செய்தேன். நன்றி சொல்வதென்றால் அந்தக் கடவுளுக்கு சொல்லுங்கள் என்று விட்டுப்போய்விட்ட்டார் டாக்டர்.

தாங்க்ஸ் கடவுளே அவனையறியாமலேயே அந்த நாத்திகனின் வாய் முணுமுணுத்தது.

நான்கு நாட்களுக்குப் பிறகு...பிரியா கவனமா இரும்மா நான் அப்படியே ரேஜிஸ்ரார் ஆபிஸ் போய் பிள்ளையை ரேஜிஸ்ரார் பண்ணிவிட்டு வாறன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான் ஆகாஷ்...சார் நான் பிள்ளையை ரேஜிஸ்ரார் பண்ண வேண்டும். .

ஓகே இந்த போர்மை நிரப்பி உங்க மேரேஜ் சேர்ட் டிபிக்கட்டையும் தாருங்கள்.

சாரி சார் மேரேஜ் சேர்ட் டிபி கட் இல்லை..

என்னது இல்லையா? அப்ப யாரோட பிள்ளை இது ?

என்னோட பிள்ளைதான். நாங்க சேர்ந்து வாழுறோம்.

அப்படியா சாரி நீங்க ரெஜிஸ்ரர் பண்ண முடியாது.

இப்ப நான் என்ன செய்ய ?

பிள்ளையின் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வாங்க.

இல்ல சார்.இப்பதான் ஒப்பரேஷன் செய்து வீட்டில இருக்கிறா அவளைக் எப்படி கூட்டிக் கொண்டு வாறது

என்ன மிஸ்டர் உமக்கு சொன்னால் விளங்காதா . இந்தப் பிள்ளையை நீங்க பதிவு செய்ய ஏலாது.விரும்பினால் அம்மா வந்து அவரின் பெயரில் பதிவு செய்து கொள்ள முடியும்.

ஏன் மிஸ்டர் இவ்வளவு அக்கறை இருக்கும் நீங்கள் பேசாமல் ஆயிரம் ரூபா கட்டி மேரேஜ்ரெஜிஸ்ரர் பண்ணினால் என்ன குறைஞ்சா போயிடுவீங்க?போங்க மிஸ்டர் போங்க எங்களுக்கு ஒரு விதிமுறை இருக்கு அதுபடிதான் நாங்க ரெஜிஸ்ரர் பண்ணுவோம் .போய் அம்மாவைக் கூட்டிக் கொண்டு வாங்க...

அதற்கு மேல் பேச முடியாத அந்த உலகப் புகழ் பெற்ற எழுத்தாளன் மனமுடைந்து காரிலே ஏறிக்கொண்டான்..அப்படியே அவனது நினைவுகள் தேனிலவை நோக்கி சென்றது.ஒரு வருடத்துக்கு முன் தேனிலவுக்காக ஊட்டி சென்றிருந்த போது , விடயம் தெரியாமல் ஒரு ஹோட்டலிலே தங்கஅது பாலான சமாச்சாரத்துக்கு பெயர் போன ஹோட்டேல் என்று போலீஸ் ரெயிட் வந்தபோதுதான் ஆகாசுக்குப்

புரிந்தது.

வந்த போலீஸ் காரன் ....

-

வா வா வந்து வண்டியிலே ஏறுங்க

சார் நாங்க ஹனிமூனுக்காக வந்திருக்கம் .நாங்க அப்படிப்பட்ட ஜோடி இல்ல.

.

என்ன ஹனிமூனா? நீ என்ன அவளிண்ட புருஷனா?

இல்ல நாங்க லிவ்விங் டுகதர்.

பின்ன பிடிபட்ட மற்ற ஜோடிஎல்லாம் ஒரே ரூமில தனித்தனியாகவா இருந்ததுகள்..ஏதோ இவங்க மட்டும்தான் டுகதேராம்.ஏறு ஏறு வண்டியில ஏறுங்க ரெண்டு பேரும்.

ஏதோ அவனுக்கு தெரிஞ்ச ஒரு பெரும் தலையால அந்தப் பிரச்சினையில் இருந்து அன்று தப்பித்துக் கொண்டான்.

அன்றுதான் முதன் முதலாக பிரியா அவனிடம் ..

`என்னங்க நாம பேசாம ரெஜிஸ்ரர் மேரேஜ் பண்ணிக்குவோமே என்று கேட்டாள்`.

இல்லடா பிரியா நான் இப்ப ரெஜிஸ்ரர் பண்ணினாலே அது பெரிய பிரச்சினையாகிப் போகும் என்று தன் ரசிகர்களை ஏமாற்றும் திட்டத்தை தொடர்ந்துகொண்டான் ஆகாஷ்.இப்படி சோகமான தன் ஹனிமூன் நினைவுகளில் இருந்து அவை எழுப்பியது மொபைல்.... ..

ஹலோ ஆகாஷ்! வாழ்த்துக்கள் ஆம்பிளைப் பிள்ளை பிறந்திருக்காமே ....

அப்படியே இன்னொரு குட் நியூஸ் நாளைக்கு விஜய் டீவி நீயா நானாவில் திருமணமா லிவ்விங் டுகதேரா என்று விவாதம் நடக்க இருக்கு. லிவ்விங் டுகதர் பற்றி பேச உங்களைத்தவிர ஆள் இல்லை வரமுடியுமா ?

சாரி நாளைக்கு நான் பிரியாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று அதனால் வரமுடியாது என்று போனைத் துண்டித்தான் ஆகாஷ்...

.முற்றும்

.படித்ததில் பகிர்ந்தது. .

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

அட நெசமாத்தான் சொல்கிறியளா நிலா அக்கா நன்றி

கடைசியில் பகுத்தறிவு தோற்று தெய்வ பக்தி வந்து விட்டது போல ஆகாசுக்கு :D

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி, எழுதியவரின் கற்பனை என்றாலும் கூட இந் நாடுகளில் பல குடும்பங்கள் பதிவு இன்றி சேர்ந்துதான் வாழுகின்றனர், அப்பொழுதுதான் இங்கு அரச கொடுப்பனவு கூட வரும், பிள்ளைகளின் தொகை குறித்து கூடுதல் சலுகைகளும் உண்டு. பிள்ளைகளுக்கு தாயினது தந்தையின் பெயர் முதல் எழுத்தாக வரும். மேலும் ஊரில் பதிவுத் திருமணம் செய்தவர்களும் இங்கு விவாகரத்து பெற்று, சலுகைகள் அனுபவிப்பார்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கும் நேரத்திற்கும் நன்றியக்கா

ஆனால் இது நாம் வாழும் நாடுகளில் பொருந்தாது

இங்கு இது சாதாரணம்

இது போன்ற கேள்விகளும் இங்கு இல்லை.

ஜதார்த்தமான உண்மை... நண்றி நிலாமதி அக்கா....

கதைக்கும் நேரத்திற்கும் நன்றியக்கா

ஆனால் இது நாம் வாழும் நாடுகளில் பொருந்தாது

இங்கு இது சாதாரணம்

இது போன்ற கேள்விகளும் இங்கு இல்லை.

இருக்கண்ணா... ஆனால் உங்களை ஒரு கேள்வி கேட்டு இருப்பாங்கள் யோசிச்சு பாருங்கள்... நீங்கள் இந்தக்குழந்தையின் அம்மாவை திருமணம் செய்தவரா... ஆங்கிலத்தில் married legal partner எண்று என்னைகேட்டவர்கள்... ஆம் என்பதின் பின்னால் தான் பிள்ளையின் பதிவை தொடர்ந்தவர்கள்...

அப்படி இல்லை எண்றால் அம்மா தான் பிள்ளையை பதிய போக வேண்டும்... வைத்திய சாலையிலும் இரத்த உறவு அல்லது திருமண உறவா எனும் கேள்வியை கேட்ப்பார்கள்... அதாவது சட்ட பூர்வமான உறவு... சேர்ந்து வாழ்வதை சட்டபூர்வமாக எடுப்பதில்லை காரணம் அதை யார் வேண்டுமானாலும் அப்படி பொய் சொல்ல முடியும்....

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தயா

நீங்கள் சொல்வதை உடன் உறுதிப்படுத்தமுடியவில்லை. ஏனெனில் இது எனக்கு புதிய பக்கம்.

விசாரித்து எழுதுகின்றேன்

லிவிங் டு கெதர்.....

சமீப காலமாய் பதிவுலகில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் லிவிங் டு கெதர் என்பதுதான். அதை ஏன் நாம் அப்படி சொல்ல வேண்டும். சேர்ந்து வாழ்வது என்று சொல்லிப் பாருங்கள் ஆங்கிலத்தில் தெரியும் விகார அர்த்தம் குறைந்திருக்கும். ஆம் விகாரம் தான். லிவிங் டு கெதர் என்றாலே செக்ஸ் என்று மட்டுமே நினைத்துக் கொண்டு திரும்ப, திருமப, குடும்பம், கலாச்சாரம், குழந்தை, பெண்களுக்கு வேசி பட்டம் என்று தலைக்கு தலை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கிறது திருமணம் என்கிற சொசைட்டியின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு விருப்பமில்லை. அப்படியிருக்கும் போது அவர்கள் இருவரும் மனமொத்து சேர்ந்து வாழ பிரியப்படுகிறாகள். பதினைந்து வருடங்களாய் சேர்ந்து வாழும் தம்பதிகள் இருவரை எனக்கு தெரியும். அதில் ஒரு ஜோடி தங்களுக்குள் எந்தவிதமான ரிலேஷன்ஷிப் பைண்டிங் இருக்கக் கூடாது என்று குழந்தையே பெற்றுக் கொள்ளவில்லை. இன்னொரு ஜோடிக்கு ஒரு பையன் இருக்கிறான். இப்போது காலேஜ் படித்துக் கொண்டிருக்கிறான். என்னைப் பொறுத்த வரை அவர்கள் ஆதர்ச தம்பதிகள். பருவ வயதில் இம்முடிவெடுத்து இப்போது நடுத்தர வயதிலிருக்கும் அவர்களிடத்து செக்ஸ் மட்டுமே தான் வாழ்க்கையாக இருக்குமா..?

அவர்களது வாழ்க்கையை பற்றிய தெளிந்த பார்வை அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள். அவரவர்கள் வாழ்க்கைக்கு அவரவர்கள் எடுக்கும் முடிவே நல்லது. எத்தனை கல்யாணங்கள் திருப்திகரமாய் இருந்திருக்கிறது?. திருமணமாகி மூன்று மாதத்திற்கெல்லாம் டைவர்ஸ் கேட்டு கோர்ட்டு படியேறும் தம்பதிகளை என்னவென்று பார்க்கும் இந்த சமூகம்?. செக்ஸ் தான் பிரச்சனை என்றால்? டைவர்ஸ் செய்யும் பெண்களையும் கற்பு கெட்டுப் போனப் பெண் என்றுதான் சொல்வீர்களா? திருமணம் ஆகி ஒரு வருடத்தில் கர்பமாகி, அதற்கு பிறகு குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு, டைவர்ஸ் வாங்கிய என் உறவினர் பெண்ணையும் எனக்கு தெரியும். அந்த குழந்தைக்கு வேண்டுமானால் இனிஷியல் இருக்கலாம். அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?. ஜீவனாம்சம் கூட வேண்டாம் என்று தன் காலில் சுயமாய் என் குழந்தையை வளர்கிறேன் என்று நிற்கும் பெண்ணுக்கு தோள் கொடுப்பதுதான் என் கடமையாய் தெரிகிறதே தவிர, அவள் கன்னிப் பெண்ணல்ல, செகண்ட் ஹாண்ட் என்றெல்லாம் தோன்றவில்லை. அவள் செகண்ட் ஹாண்ட் என்றால் அந்த ஆணும் செகண்ட் ஹாண்ட்தான். ஆம்பளைக்கு ஆயிரம் கல்யாணம் என்பதெல்லாம் அந்தக்காலம் நல்ல சம்பாதித்து நல்ல நிலையில் இருக்கும் நிறைய பேருக்கு இன்றளவில் வயதேறிக் கொண்டிருக்கிறதே தவிர திருமணம் நடந்த பாடில்லை. டைவர்சியான ஆணுக்கும் மீண்டும் திருமணம் எனும் போது பல பிரச்சனைகளை கடந்துதான் திருமணமாகிறது. அப்படியெல்லாம் இல்லை என்று சொல்பவர்களுக்கு நான் ஏதும் பதில் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் நிஜத்தில் நடக்கும் விஷயங்களை அறிய, தெரிய மறுப்பவர்களுக்கு நான் சொல்லி மட்டும் தெரிந்து விடவா போகிறது.

இன்னொரு விஷயம் இப்படி லிவிங் டு கெதரில் வாழ்ந்து பிரிந்து போன ஜோடிகளுக்கு பிறக்கும் குழந்தைகளால் தான் அமெரிக்காவில் வன்முறை தலைவிரித்தாடுகிறது என்று ஒரு சாரார் சொல்லியிருக்கிறார்கள். தினசரி பேப்பரை திறந்தால் கள்ளக்காதலினால் மனைவி கொலை, மனைவி கணவனை காதலனுடன் சேர்ந்து கொன்றாள். குழந்தைகளோடு விஷம் குடித்து சாவு என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் தான் இருக்கிறது. இவர்கள் எல்லாம் நம் கலாச்சார வழக்கப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் தான். இப்படிப்பட்ட செயல்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மனநலம் குன்றி, பின்னாளில் ஒரு ரவுடியாகவோ, அல்லது வக்கிரம்பிடித்தவனாகவோ, வன்முறையை கையாளுபவனாகக்கூட இருக்கக்கூடும். என் நண்பருடய குடும்பத்தில் தினம் ஒரு பிரச்சனை, கணவர் மீது சந்தேகம், அதனால் மனைவி கொடுக்கும் டார்சர் தாங்க முடியவில்லை இதனால் நிதம் சண்டை இந்த சண்டையை பார்த்த அவரது மகன் மன அழுத்தம் தாங்காமல் ஒரு நாள் கை நரம்பை அறுத்து கொண்டான் அவர்களின் சண்டையை நிறுத்துவதற்காக, அவனை காப்பாற்றுவதற்குள் பெரும் பாடு பட்டு விட்டார்கள். ஆனால் மீண்டும் பிரச்சனை என்னவென்றால் இதற்கெல்லாம் காரணம் நீதான்? என்று ஆளாளுக்கு கிளம்பிவிட்டார்கள். இவ்வளவு பிரச்சனையுடன் இவர்களும் கலாச்சாரப்படி சேர்ந்துதான் வாழ்கிறார்கள். ஏன்?

குடும்பம்னா ஆயிரம் இருக்கும் என்று சால்ஜாப்பு சொல்பவர்களுக்கு ஒன்று. ஆயிரம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த ஆயிரத்தில் பல நல்ல விஷயங்கள் இருந்தால் நல்லது. பொழுதன்னைக்கு பிரச்ச்னைதான் வாழ்க்கைன்னா சரிவராதவங்க பிரிஞ்சு போயிடறது நல்லதுதானே. அப்படி விவாகரத்துன்னு வர்றவங்களுக்கு ஜீவனாம்சம் அது இதுன்னு ஆயிரம் பார்மாலிட்டி இருக்கு, அந்த கஷ்டம் எல்லாம் டைவர்ஸ் பண்ணி பார்த்தவனுகும், கூட அலைஞ்சவனுக்கும் தான் தெரியும். டைவர்ஸுக்கு பிறகு நல்ல வாழ்க்கை செட்டான ஆண், பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதையெல்லாம் சொல்லி நான் லிவிங் டுகெதருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதிலும் பல பிரச்சனைகல் இருக்கத்தான் செய்கிறது. முதலில் வயதில் ஏற்படும் காதல் , காமம் வகையராக்களை தாண்டி வருவதற்குள் இவர்களிடமும் பிரச்சனை ஏற்படத்தான் செய்கிறது. என்ன கொஞ்சம் பொறுத்துப் பார்த்து பின்பு ஒரு முடிவுக்கு வந்து பிரிந்துவிடுகிறார்கள். கோர்ட்டு, வழக்கு, மற்றும் பல பிரச்சனைகள் கிடையாது. இதில் இன்னும் சில பேர் சொத்துகள் வாங்கி அதை ரிஜிஸ்டர் செய்யும் போது அக்ரிமெண்ட் கூட போட்டுக் கொள்கிறார்கள். அதே போல குழ்ந்தை பிறந்து ரெண்டு வருடம் கழித்து பிரிந்த ஒரு ஜோடி குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று ப்ளான் செய்யும் நேரத்திலேயே அக்குழந்தைக்கான சேப்டி விஷயங்கள் அனைத்தையும் செய்துவிட்டுதான் குழந்தையே பெற்றுக் கொண்டார்கள். அக்குழந்தைக்கான எதிர்காலம், அவனுக்கான இனிஷியல் உள்பட. இன்று அந்த பெண் இன்னொரு திருமணம் செய்து கொண்டு நன்றாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவனும் தான்.

இந்த சமூகம் பல விஷயங்களை தனக்கேற்றார் போல மாற்றிக் கொண்டுதான் வருகிறது. ஒரு காலத்தில் என் தாத்தாவுக்கு மூணு பொண்டாட்டி என்று சொன்னதையெல்லாம் இப்போது சொல்ல முடிவதில்லை.. ஏனென்றால் ஒரு குடும்பம் நடத்துவதே பெரிசு என்றாகிவிட்டதும் ஒரு காரணம். இன்றைய காலகட்டத்தில் வாழ்வதே பிரச்சனையாய் நினைக்கும் மக்கள் இருக்குமிடத்தில் இம்மாதிரியான ரிலேஷன்ஷிப் பைண்டிங் இல்லாமல் வாழ ஆசைப்படும், பொருளாதார சுதந்திரத்துடன் இருக்கும் ஆண் பெண் நிறைய பேர். தங்கள் வாழ்க்கையில் தங்கள் பெற்றோர்கள், தங்கை, அக்கா, அண்ணண் என்று அவர்கள் வாழும் வாழ்கையை பார்த்து இப்படியெல்லாம் சகித்துக் கொண்டு அவனோடோ, அவளோடோ வாழ்ந்துதான் ஆக வேண்டுமா என்று பயந்து போனவர்கள் நிறைய பேர்.

தன்னுடய் அக்காள்கள் எவரும் திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழவில்லை. அவரவர்களுக்கு வாழ வேண்டிய கட்டாயம் இருப்பதால் சேர்ந்திருக்கிறார்கள் எனறு என் தோழி திருமணமே வேண்டாமென்று ஒற்றைக்காலில் நின்றாள். கடைசியில் வீட்டில் இருப்பவர்க்ள் எல்லோரும் ஒரு வ்ழியாய் சம்மதிக்க வைத்தார்கள். ஆனால் அவள் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு தற்கொலை செய்து கொண்டாள். ஊரில் எல்லோரும் அவளூக்கு காதல் தோல்வி என்றார்கள். எனக்கு மட்டும் தான் தெரியும் அவளுக்கு வாழ்க்கையே தோல்வியென்று.. என்னை பொறுத்த வரை அது லிவிங் டு கெதரோ, அல்லது திருமணமோ.. இரு மனம் ஒத்து வாழூம் எல்லாருடய வாழ்கையும் நல் வாழ்கையே.. மற்றவர்கள் அவர்கள் வாழ்க்கையில் எட்டி பார்த்து மூக்கை நுழைக்காதவரை..

.படித்ததில் பகிர்ந்தது. . from facebook..

நன்றி தயா

நீங்கள் சொல்வதை உடன் உறுதிப்படுத்தமுடியவில்லை. ஏனெனில் இது எனக்கு புதிய பக்கம்.

விசாரித்து எழுதுகின்றேன்

இங்கு எனது மனைவிக்கு குழந்தை கிடைத்த போதும் சரி, பிறப்பு சாண்றிதள் பதியும் போதும் சரி... என்னை கேட்டவர்கள் ... கேட்ப்பதுக்கான விளக்கமும் தந்தார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுற்கு நன்றீ அக்கா...இப்படி பல இடங்களீல் நடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பிறக்கும் அனைவரது பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்திலும் ஒரு கேள்வி இருக்கும் அது எதுவெனில், பிள்ளையின் தாயார் விவாகமானவரா? அப்படியெனில் தாயாரது, திருமணத்திற்கு முந்திய முழுப்பெயர் என்ன? ஆக இலங்கையில் திருமணம் செய்யாது தாய்மையடையலாம் என்பதில் எந்தவித சட்டச்சிக்கலுமில்லை ஆனால் தந்தையாரது பெயரைப் பதியலாமா என்பதற்குப் பதில் ஆம் என்பதே. இக்கதை நடந்த களம் இந்தியா, ஆகவே இந்திய பினல்கோட்(?) சட்டமும் பிரித்தானிய காலணித்துவ நாடுகளது சட்டங்களும் ஓரளவு சமச்சீரானவை. கதை சுவாரசியமாக இருந்தாலும் இவ்விடையங்களால் எங்கேயோ இடிக்கிறது.

தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.