Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

புலிக் கொடி பிடியாதே தெருவில் இறங்கிப் போராடாதே அறிவைப் பாவி என இங்கு எழுதிக் குவிக்கும் அறிவிலிகளுக்கு இது தகுந்த படிப்பினை.உணர்திறன் அறிவைக் கொண்டு சிந்திப்பதே அதி உயர் சிந்தனை.அந்த சிந்தனை வாய்க்கபெற்றவர்களாலேயே மக்களின் அரசியல் வேட்கையைப் புரிந்து கொண்டு அவர்களை அணிதிரட்டிப் போராட முடியும்.மக்கள் போராட்டம் என்று எழுதிக் கொண்டிருப்பதால் ஒன்றும் நடவாது.புலிக் கொடி பிடியாதே என்று பிரித்தானிய அரசோ மக்களோ பொலிசாரோ சட்டமோ சொல்லவில்லை.அப்படிச் சொல்பவர்கள் புலிக் காச்சலால் வருந்தும் சிலரும் சிறிலங்கா அரசும் அதன் எடுபிடிகளுமே.புலிக் கொ. தமிழரின் அடையாளம்,மக்களை அணிதிரட்டுவதற்கான அடிப்படை.அதன் சக்தி அதன் குறியீட்டு வலுவை அறியாத அறிவிலிகளே இங்கு பலர், குறிப்பாக கனடாவில் இருந்து எழுதும் அரசியல் சூனியங்கள் பிரித்தானியத் தமிழரிடம் இருக்கும் போர்க் குணத்தையும் ஒற்றுமையையும் அரசியல் தெளிவில் இருந்தும் கற்றுக் கொள்ளுங்கள். நான் இவ்வாறு எழுதியதில் கனடிய உறவுகள் சீற்றம் அடைய வேண்டாம்.ஏனெனில் எனது அவதானத்தில் இங்கு எழுதும் பல அரசியல் சூனியங்கள் கனடாவில் இருந்தே எழுதுகின்றன.

இதே பிரிட்டன் தான் புலிகளை பொறுத்த நேரத்தில் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்து இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான சமநிலையை குழப்பி போருக்கான பாதையை தொடங்கிவைத்தது. வன்னியில் மக்கள் அழிவின் போது நடத்தாத போராட்டமா? அப்போது ஏன் பிரிட்டன் மக்கள் அழிவை தடுக்கவில்லை? இலங்கை அரசின் போருக்கு பக்கபலமாக நின்றது பிரிட்டனும்தான். ஈராக் ஆக்கிரமிப்பில் இலங்கை அரசை விட மோசமான போர்க்குற்றவாளி பிரிட்டன். இங்கே ஜனநாயகம் அரசியல் ஞானம் சூனியம் எல்லாம் அம்மணமாக நிற்கின்றது.

மகிந்தரை வரவழைத்து நெருக்கடி கொடுக்கப்படுகின்றது. தமிழ்மக்கள் பயன்படுத்தப்படுகின்றனர். மகிந்தர் வரேக்க சனல் 4 க்கு காணொளியும் எடுத்துவந்தவரோ? சனல் 4 இடம் ஏற்கனவே இருந்த காணொளியை பயன்படுத்துகின்றார்கள்.

போராட்டம் நடத்த வேண்டாம் தெருவில் இறங்கவேண்டாம் என்று எவரும் சொல்லவில்லை உங்கட புலிக்கொடிச் சுதிக்கு இடையில் இப்படியான வசனத்தையும் செருகுகின்றீர்கள். புலிக்கொடியை தவிர்ப்பது தொடர்பான கருத்துக்களுக்குக் காரணம் புலிகளை இந்த நாடுகளே பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. மக்கள் பேராட்டங்களை புலிகள் பின்னணியில் இருக்கின்றார்கள் என்று இந்த நாடுகளே அலட்சியப்படுத்தியது. புலிகளை பயங்கரவாதிகள் என்று வரையறுத்தே அழிப்பதற்கு இலங்கை அரசுக்கு பக்கபலமாக நின்றது. இற்றை வரைக்கும் பயங்கரவாத முத்திரை அப்படியேதான் இருக்கின்றது. போராட்டம் புலிகளின் தூண்டுதல் என்ற அலட்சியத்துக்கு இடமளிக்கக் கூடாது என்ற அடிப்படையிலேயே புலிக்கொடி தவிர்க்கும் படியான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது. கடந்த போராட்டங்களில் அலட்சியங்கள் ஆழமானது. மக்கள் அழிவு எல்லாம் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருதல் என்ற கணக்கில் நடந்தேறியது மறக்கமுடியாது. இதில் உள்ள சாதக பாதகங்களையே கருத்தில் கொள்ளவேண்டும். தவிர புலிகள் புலிக்கொடி என்பது இலங்கையில் வாழும் ஏக தமிழ்மக்களுக்கும் பொதுவான ஒன்றல்ல.

மகிந்தர் உரையாற்றவில்லை எண்டதும் வந்த திடீர் உசாரில போரக்குணம் ஒற்றுமையை போதிக்கின்றீர்கள். புலம்பெயர்நத போக்குணம்? உங்களுக்கு பழைய வரலாறுகள் தெரியுமா? தெரியாட்டி லண்டனில உள்ள பழசுகளிடம் கேட்டுப்பாருங்கள். முதன் முதல்ல லண்டனில தமிழன் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் பண்ணியது அதாவது போர்குணத்தை காட்டியது எதுக்கெண்டு தெரியுமோ? அகதிகள் எண்ட போர்வையில் படிப்பறிவில்லாத தமிழரை லண்டனுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றுதான் லண்டன்ல தமிழன்ட போராட்டம் தமிழனுக்கு எதிரா நடந்தது. சொந்த தாயகத்தை விட்டு ஓடிவந்து என்னுமொருவன் நாட்டில நக்கிறம் அதில நான் கூட நக்கிறன் நீ கூட நக்கிற.

  • Replies 72
  • Views 7.2k
  • Created
  • Last Reply

அதுக்கும் புலிகொடி பிடிக்கிறதுக்கும் என்ன பிரச்சினை வந்தது...?? ஆட்டுக்கை ஏன் மாட்டை புகுத்துறீயள்...?? எதாவது எழுதி குழப்ப வேணும் எண்டு எழுதிறீயளோ....??

பிரித்தானியா எண்டுற நாட்டுக்கு எண்டு சில வெளியுறவுக்கொள்ளைகள், தேச நலன் அடிப்படையான உறவுகள் இருக்கு... தன் நாட்டுக்கு எது சரியானதோ அதுக்கு சார்ப்பான முறையிலை பிரச்சாரம் செய்து தனது நாட்டு நலனிற்க்கு எது சரியோ அதை செய்ய துணிகிறான்...

அதைவிட அவனுக்கு அவனது தேச கௌரவம் மிக முக்கியம்... ! அதையும் புலிகொடியையும் ஏன் செருகிறீயள்...??? பிரித்தானியா எங்களை பாவிக்கிறதோ நாங்கள் அவர்களை பாவிக்கிறமோ என்பது எல்லாத்தையும் விட எங்கட மக்களுக்கு நீதி வேணும்... அதுக்காக அவர்கள் எங்களையும் நாங்கள் அவர்களையும் பாவிக்கலாம்... தப்பே இல்லை...

புலிக்கொடி பிடிக்காட்டால் பிரித்தானியா தட்டிலை வைச்சு தமிழரை தாங்கும் எண்ட அளவுக்கு தான் நீங்கள் சிந்திக்கிறனீங்களோ....???

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

புலிக் கொடி பிடிக்காமல் 2009 இல ஒட்டாவாவில நடத்தின ஆர்ப்பாட்டத்துக்கும் கனேடிய பா.உக்கள் எட்டிப் பாக்கக் கூட வரேல்லயெண்டு அறிஞ்சன். அப்பவே இந்த புலிக்கொடிப் பிரச்சினைக்கு முடிவு வந்ததாக நினைச்சன். இன்னும் இது நடக்குதா? அது சரி, எங்களுக்கேன் கொடியும் புலியும், எங்கட பிழைப்புக்கு துரும்பே போதுமே, கொடி எதுக்கு? <_<

dbsjeyaraj‎: President Rajapaksa said he will "continue to seek venues in the UK and elsewhere where I can talk about my future vision for Sri Lanka.”

தன் இன அழிப்பு கொள்கைகளை பிரச்சாரம் செய்ய மற்றும் உதவி கேட்க சரியான இடங்கள் : சீனா , இந்தியா ( காங்கிரஸ் ) , ஈரான், பாகிஸ்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தர் உரையாற்றவில்லை எண்டதும் வந்த திடீர் உசாரில போரக்குணம் ஒற்றுமையை போதிக்கின்றீர்கள். புலம்பெயர்நத போக்குணம்? உங்களுக்கு பழைய வரலாறுகள் தெரியுமா? தெரியாட்டி லண்டனில உள்ள பழசுகளிடம் கேட்டுப்பாருங்கள். முதன் முதல்ல லண்டனில தமிழன் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் பண்ணியது அதாவது போர்குணத்தை காட்டியது எதுக்கெண்டு தெரியுமோ? அகதிகள் எண்ட போர்வையில் படிப்பறிவில்லாத தமிழரை லண்டனுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றுதான் லண்டன்ல தமிழன்ட போராட்டம் தமிழனுக்கு எதிரா நடந்தது. சொந்த தாயகத்தை விட்டு ஓடிவந்து என்னுமொருவன் நாட்டில நக்கிறம் அதில நான் கூட நக்கிறன் நீ கூட நக்கிற.

இதுக்கும் கொலைகாரன் மகிந்தவுக்கு எதிரான ஒற்றுமையான (அல்லது ஒற்றுமையற்ற) தமிழர் போராட்டதுக்கும் என்ன சம்பந்தம்? வழமையாக "கூலாக" இருக்கும் உங்களுக்கு ஏன் இண்டைக்கு இவ்வளவு இரத்தக் கொதிப்பு? பாசம் பேசுதா அல்லது எஜமான விசுவாசம் அழுகுதா? <_<

மகிந்தர் உரையாற்றவில்லை எண்டதும் வந்த திடீர் உசாரில போர்க்குணம் ஒற்றுமையை போதிக்கின்றீர்கள். புலம்பெயர்ந்த போர்க்குணம்?

கூறுவதற்கு ஒன்றும் இல்லை. இவ்விடயத்தில் பல்கலைக்கழகம் கூறுவதை கேட்டுக்கொள்ளுங்கள்.

"Due to security concerns surrounding Mr. Rajapaksa's visit which have recently been brought to our attention by the police, the Union has regretfully found that the talk is no longer practicable and has had to cancel his address," the Oxford Union said on its website. It said that "due to the sheer scale of the expected protests, we do not feel that the talk can reasonably and safely go ahead as planned." The decision was not made because of Rajapaksa's political position, the policies of his administration or any allegations against his government, it said.

புலிக் கொடி பிடிக்காமல் 2009 இல ஒட்டாவாவில நடத்தின ஆர்ப்பாட்டத்துக்கும் கனேடிய பா.உக்கள் எட்டிப் பாக்கக் கூட வரேல்லயெண்டு அறிஞ்சன். அப்பவே இந்த புலிக்கொடிப் பிரச்சினைக்கு முடிவு வந்ததாக நினைச்சன். இன்னும் இது நடக்குதா? அது சரி, எங்களுக்கேன் கொடியும் புலியும், எங்கட பிழைப்புக்கு துரும்பே போதுமே, கொடி எதுக்கு? :D

புலிக்கொடியை ஹீத்தரோ விமான நிலையத்தில் கண்ட பிரித்தானிய காவல்துறைக்கு வயிற்றால போனதால்தானே நிகழ்வு இரத்து செய்யப்பட்டதாக பலரும் பேசுகின்றார்கள். <_<

எனக்கும் ஒரு சந்தேகம் உள்ளது. மகிந்தவின் பேச்சு ரத்து செய்யப் பட்டுள்ளதாக..... செய்தியை கசிய விட்டுட்டு...... தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டத்தை நிறுத்திவிட்டு.... நாளை ஒக்ஸ்போட்டில் மகிந்த பேசினால்...... முழுத்தமிழரின் முகத்திலும் கரி.

சிங்களவனையும், இந்தியனையும், இங்கிலாந்துக்காரனையும் நம்பக் கூடாது.

பரவாயில்லையே, யாழ் களத்தில் ஒருவராவது முன் எச்சரிக்கையுடன் உசாராக இருக்கின்றீர்கள். :D ஓர் political game நடக்கின்றது. அவசரப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு statementகளை விடாமல் தொடர்ந்து என்ன நடக்கின்றது என்று அவதானிப்போம். <_<

சிலர் ஏதோ தமிழீழம் கிடைத்து விட்டதுபோலவும்,சிலர் இதுக்குதான் நாங்கள் இவ்வளவு நாளும் போராடினாங்கள் என்றமாதிரி நினைக்கின்றார்கள் போல கிடக்கு.அதைவிட மகிந்தா தங்களுக்கு மாத்திரம் தான் எதிரி மாற்றுக்கருத்தாளர்களின் நண்பர்கள் போலவும் துள்ளிகுதிக்கின்றார்கள்.

இதுவரை எதிரியார் என்று தெரியாமல் இருப்பவர்கள் புலிகள்தான்.சிங்களவனை விட தங்களுடன் இல்லாத தமிழன் தான் அவர்களுக்கு முதல் எதிரி.இங்கும் பலர் அதே [பல்லவியுடன் அடிக்கடி மாற்றுகருத்துமாணிக்கங்களென்று கொட்டுவது அதனால் தான்.

சிங்களவன் எதிரி ஆனால் புலிகளும் பிழைவிடுகின்றது என்பதே எங்களின் வாதமாக இருந்தது.கண்ணைமூடி கொண்டு புலி எது செய்தாலும் சரியென்று சொன்னதால் தான் அவர்கள் மேலும் மேலும் பிழைகளை விட்டு கடைசியில் அவர்களின் அழிவிற்கே வழிவகுத்தது.

அதிலும் ஒரு சிறுவன் கனடாவில் இருப்பவர்களின் கருத்தை குறி பார்த்தது எங்கே போய் முட்டுவதென தெரியவில்லை.உலக நாடுகளெல்லாம் தடை செய்ததுகூட அவருக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை.வன்னி அவலத்தின் தாக்கம் கூட அவருக்கு பெரிதில்லை.முள்ளிவாய்க்கால் முடிவு கூட ஏன் என இன்னமும் புரியவில்லை ஆனால் நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் கொடி பிடிப்போம் என்ற வீரம் மெய் சிலிர்க்க வைக்கின்றது.

இதை புரியும் விளக்கம் இருந்த்திருந்தால் முள்ளிவாய்கால் என்ற நிகழ்வே நடந்திராது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடியை ஹீத்தரோ விமான நிலையத்தில் கண்ட பிரித்தானிய காவல்துறைக்கு வயிற்றால போனதால்தானே நிகழ்வு இரத்து செய்யப்பட்டதாக பலரும் பேசுகின்றார்கள். <_<

வயித்தால வாயால போற உங்கட கற்பனைய விட்டுப் போட்டு, நான் எழுதினதுக்குப் பதில் தாங்கோவன். ஒட்டாவாவில புலிக்கொடி இல்லாமல் போன போதும் கனேடியன் கண்டு கொள்ள இல்லை எண்டது உண்மையா இல்லையா? அது உண்மை எண்டால் புலிக் கொடியால தான் எங்கட குரல் எடுபடவில்லை எண்ட உங்கள் போன்றோரின் வாதம் ஒட்டாவாவிலயே ஒன்றரை வருடம் முன்பு பொய்ப்பிக்கப் பட்டிருக்கு என்பது தானே உண்மை? இதுக்குப் பதில் இருக்கா? சொல்லுங்கோ. இதுக்குப் பதில் இல்லையா, போய் ஒழிச்சிருந்துட்டு பிறகொரு சந்தர்ப்பம் கிடைக்கேக்க வாங்கோ! :D

  • கருத்துக்கள உறவுகள்

புலிக் கொடி பிடிக்காமல் 2009 இல ஒட்டாவாவில நடத்தின ஆர்ப்பாட்டத்துக்கும் கனேடிய பா.உக்கள் எட்டிப் பாக்கக் கூட வரேல்லயெண்டு அறிஞ்சன். அப்பவே இந்த புலிக்கொடிப் பிரச்சினைக்கு முடிவு வந்ததாக நினைச்சன். இன்னும் இது நடக்குதா? அது சரி, எங்களுக்கேன் கொடியும் புலியும், எங்கட பிழைப்புக்கு துரும்பே போதுமே, கொடி எதுக்கு? <_<

இக்காலத்தில் கனேடிய வானொலிகளில் சில கனேடியர்கள், பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக இருக்கும் தமிழர்களைப் பார்த்து இவர்கள் வேலைக்குப் போகாமல் தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு முன்பாக இருக்கிறார்கள். அப்படியானால் இவர்கள் டோல் பணத்தில் சீவிக்கிறார்கள். நாங்கள் வரி கட்டுகிறோம். சிறிலங்கன் டோல் பணம் எடுக்கினம் என்றும் கதைத்ததுண்டு. நாங்கள் எப்படிச் செய்தாலும் எதாவது கதைக்கவென்று சில பேர்கள் இருப்பார்கள். அவர்களைக் கண்டு கொள்ளமால் அந்தந்த நாட்டுச் சட்டதிட்டங்களுக்கு அமைய போராட்டங்களை நடத்தவேண்டும்.

புலிக்கொடி தூக்கியவர்களிடமே இந்தவினாவை கேட்கவேண்டும். நான் கலந்துகொண்ட அனைத்து போராட்டங்களிலும் கனேடிய நாட்டு கொடியுடனே சென்றேன். Gardiner பெருந்தெருவை வழிமறித்து முற்றுகையிட்ட போராட்டத்தில் நான் கனேடிய கொடியுடன் இருவழிகளையும் பிரிக்கின்ற highway medianமேல் ஏறி நின்றேன். அருகில் உள்ள கட்டடத்தொகுதியூடாக எம்மை அவதானித்த ஓர் வேற்றினத்தவர் கனேடிய கொடியை காட்டி எனக்கு தனது பெருவிரலை உயர்த்தி கையை உதறி ஆதரவு தெரிவித்தார். கனேடிய கொடியுடன் நின்றமையால் பல்வேறு சமயங்களில் வேற்று இன மக்கள், ஊடகங்கள் என்னை அணுகி தமது வினாக்களை, சந்தேகங்களை கேட்டார்கள். ஒருவர் கூறினார் எனக்கு இவர்களிடம் கேட்க விருப்பம் இல்லை. உன்னைப்பார்க்கும்போது reasonableஆன ஒருவன் போல் தெரிகின்றது.. என கூறி தனது சந்தேகங்களை கேட்டார். நாங்கள் சும்மா படுத்துக்கிடந்துவிட்டு கருத்து கூறவில்லை. Ottawa, Chicago, Toronto, New York, Washington எல்லா இடமும் நின்று குரல் உடையும்வரை கத்திவிட்டு எமது அனுபவங்களை கூறுகின்றோம். நாங்கள் உங்களைப்போல் ஒளிந்திருந்து பேசவில்லை. <_<

மகிந்தா தங்களுக்கு மாத்திரம் தான் எதிரி மாற்றுக்கருத்தாளர்களின் நண்பர்கள் போலவும் துள்ளிகுதிக்கின்றார்கள்.

இதுவரை எதிரியார் என்று தெரியாமல் இருப்பவர்கள் புலிகள்தான்.சிங்களவனை விட தங்களுடன் இல்லாத தமிழன் தான் அவர்களுக்கு முதல் எதிரி.இங்கும் பலர் அதே [பல்லவியுடன் அடிக்கடி மாற்றுகருத்துமாணிக்கங்களென்று கொட்டுவது அதனால் தான்.

ஓர் வாதத்தில் முறையாக தமது கருத்துக்களை வைக்கமுடியாவிட்டால் உடனடியாக மாற்றுக்கருத்து மாணிக்கம், துரோகி, எட்டப்பன் என்று கூறுவது வழமைதானே. புலிகளே கூறி உள்ளார்கள், விமர்சனங்களை வைக்கலாம் என்று. நடேசன் அவர்கள் த.வி.புவை விமர்சிக்கமுடியும் என்று கூறிய யாழில் பார்த்த ஓர் செய்தி இப்போதும் நினைவில் உள்ளது. கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி விடமாட்டான். இவர்களிற்கு தமது விசுவாசத்தை காட்டுவதற்கு வேறு ஏதும் வழி இல்லை என்றால் இதைத்தானே தொடர்ந்தும் செய்யமுடியும்? <_<

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடி தூக்கியவர்களிடமே இந்தவினாவை கேட்கவேண்டும். நான் கலந்துகொண்ட அனைத்து போராட்டங்களிலும் கனேடிய நாட்டு கொடியுடனே சென்றேன். Gardiner பெருந்தெருவை வழிமறித்து முற்றுகையிட்ட போராட்டத்தில் நான் கனேடிய கொடியுடன் இருவழிகளையும் பிரிக்கின்ற highway medianமேல் ஏறி நின்றேன். அருகில் உள்ள கட்டடத்தொகுதியூடாக எம்மை அவதானித்த ஓர் வேற்றினத்தவர் கனேடிய கொடியை காட்டி எனக்கு தனது பெருவிரலை உயர்த்தி கையை உதறி ஆதரவு தெரிவித்தார். கனேடிய கொடியுடன் நின்றமையால் பல்வேறு சமயங்களில் வேற்று இன மக்கள், ஊடகங்கள் என்னை அணுகி தமது வினாக்களை, சந்தேகங்களை கேட்டார்கள். ஒருவர் கூறினார் எனக்கு இவர்களிடம் கேட்க விருப்பம் இல்லை. உன்னைப்பார்க்கும்போது reasonableஆன ஒருவன் போல் தெரிகின்றது.. என கூறி தனது சந்தேகங்களை கேட்டார். நாங்கள் சும்மா படுத்துக்கிடந்துவிட்டு கருத்து கூறவில்லை. Ottawa, Chicago, Toronto, New York, Washington எல்லா இடமும் நின்று குரல் உடையும்வரை கத்திவிட்டு எமது அனுபவங்களை கூறுகின்றோம். நாங்கள் உங்களைப்போல் ஒளிந்திருந்து பேசவில்லை. :D

நான் ஒளிந்திருந்தேனா இல்லை உங்களைப் போல நகர உலாப் போனேனா எனப் பட்டியலிட வேண்டிய எந்த அவசியமும் எனக்கில்லை. ஒரு தாய்க்குச் செய்வதை ஒரு மகன் பட்டியலிட்டு ஊரவர் அயலவரிடம் அங்கீகாரம் வாங்க வேண்டிய தேவை இருக்கிறதா? தாயகத்திற்காக ஐரோப்பாவை நடந்து கடந்தவனும், பட்டினி கிடந்து அவமானப் பட்டு, பின் தனது சொந்தக் காசில் வழக்காடி திரும்பவும் எங்கள் கதையை உலகம் பார்க்க வைத்தவனும் மௌனமாகத் தொடர்ந்து பணி செய்ய நீங்கள் மதில் மேல் ஏறி நின்றதும் நான் கோஷம் போட்டதும் பற்றி பகிரங்கமாக விலாசம் காட்டுவது தாய்க்குச் செய்ததைச் சொல்லிக் காட்டும் செயல் தான். கேள்வி உங்களுக்கு விளங்கவில்லையா? புலிக் கொடி பிடிப்போரால் எங்கள் போராட்டம் அங்கீகாரம் இழந்தது என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள், புலிக் கொடி பிடித்தோரல்ல. ஒட்டாவாவில் நடந்தது என்னத்தைச் சொல்கிறது என்று உங்களிடம் தான் கேட்க வேண்டும்..புலிக் கொடி பிடித்தோர் அதை ஏந்தும் காரணம் பற்றி ஏலவே அறிந்து தான் ஏந்தினார்கள்.அவர்களிடம் கேட்க எதுவும் இல்லை. கேள்விக்கு சுய விலாசம் தான் பதில் என்றால் நான் முதலே சொன்னதைச் செய்யுங்கள்: நைசாக மாறி விடுங்கள், பிறகு நிறைய வாய்ப்புகள் வரும் வந்து "உருட்டுங்கள்" <_<

அதுக்கும் புலிகொடி பிடிக்கிறதுக்கும் என்ன பிரச்சினை வந்தது...?? ஆட்டுக்கை ஏன் மாட்டை புகுத்துறீயள்...?? எதாவது எழுதி குழப்ப வேணும் எண்டு எழுதிறீயளோ....??

பிரித்தானியா எண்டுற நாட்டுக்கு எண்டு சில வெளியுறவுக்கொள்ளைகள், தேச நலன் அடிப்படையான உறவுகள் இருக்கு... தன் நாட்டுக்கு எது சரியானதோ அதுக்கு சார்ப்பான முறையிலை பிரச்சாரம் செய்து தனது நாட்டு நலனிற்க்கு எது சரியோ அதை செய்ய துணிகிறான்...

அதைவிட அவனுக்கு அவனது தேச கௌரவம் மிக முக்கியம்... ! அதையும் புலிகொடியையும் ஏன் செருகிறீயள்...??? பிரித்தானியா எங்களை பாவிக்கிறதோ நாங்கள் அவர்களை பாவிக்கிறமோ என்பது எல்லாத்தையும் விட எங்கட மக்களுக்கு நீதி வேணும்... அதுக்காக அவர்கள் எங்களையும் நாங்கள் அவர்களையும் பாவிக்கலாம்... தப்பே இல்லை...

புலிக்கொடி பிடிக்காட்டால் பிரித்தானியா தட்டிலை வைச்சு தமிழரை தாங்கும் எண்ட அளவுக்கு தான் நீங்கள் சிந்திக்கிறனீங்களோ....???

இதுக்கும் கொலைகாரன் மகிந்தவுக்கு எதிரான ஒற்றுமையான (அல்லது ஒற்றுமையற்ற) தமிழர் போராட்டதுக்கும் என்ன சம்பந்தம்? வழமையாக "கூலாக" இருக்கும் உங்களுக்கு ஏன் இண்டைக்கு இவ்வளவு இரத்தக் கொதிப்பு? பாசம் பேசுதா அல்லது எஜமான விசுவாசம் அழுகுதா?

நீங்கள் போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்த முற்படுகின்றீர்களா அல்லது அதனை சாட்டி புலியிருப்பை தக்கவைக்க முனைகின்றீர்களா? போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்த முற்படின் மக்கள் அவலமாகக் கொல்லப்பட்ட பதாகைகளை தாங்கி ஆர்பாட்டத்தை செய்யவேண்டியதுதானே? இதற்குள் புலிக்கொடி எதற்கு வருகின்றது?

வன்னியில் மக்கள் அவலத்தை நோக்கி நகர்த்தப்பட்டார்கள். அவ்வாறு நகர்த்துவதின் ஊடாகவே போராட்டத்தை தக்கவைக்கலாம் என்று நம்பினார்கள். பயங்கரவாத முத்திரையை அகற்றி சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்பினார்கள். தமிழரின் போராட்ட சக்தி மீது சர்வதேசம் போட்ட பயங்கரவாதக் கோடுக்கு பக்கத்தில் சிங்களத்தை பெரும்பயங்கரவாதமாக பெரியதொரு கோடு போட முற்பட்டார்கள். இந்த நம்பிக்கைகளின் பின்னால் புலம்பெயர் மக்கள் இருக்கவே செய்தார்கள். சரணடைவதை விட மானத்தோடு சாவது மேல் என்று புலத்தில் இருந்து கருத்துரைத்தவர்களும் இருக்கின்றார்கள். அந்தவகையில் போர்க்குற்றத்தில் புலம்பெயர் மக்கள் மீதும் மக்கள் அளிவில் கணிசமான பங்கு இருக்கின்றது.

படுகொலைகளை நிறுத்தும்படியான புலம்பெயர் போராட்டங்களில் கூட போராட்டத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற உள்நோக்கமே முன்நின்றது மக்கள் இரண்டாம்பட்சமாகவே இருந்தார்கள். இதனால்தான் போராட்டம் தோல்வியடைந்ததும் கவனயீர்ப்பு கைவிடப்பட்டது. மக்கள் தொடர்ந்து அவலப்பட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். பல்லாயிரம் மக்களும் போராளிகளும் சிறைப்பட்டுத்தான் இருந்தார்கள்.

மக்கள் வேறு புலிகள் வேறு என்றே இந்த சர்வதேசம் வரையறுத்துள்ளது. போராட்டம் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டுள்ளது.புலிக்கொடியை பயன்படுத்தும் போதெல்லாம் புலியாதரவாளர்கள் போராட்டம் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் மாற்று சிந்தனைக்கு இடமில்லை என்றே உலகநாடுகள் இலங்கை அரசுடன் நின்றது. இவ்வாறானதொரு சூழலில் தான் மக்களை முன்நிறுத்தி புலிக்கொடியை பின்தள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தக் கட்டாயச் சூழ்நிலையிலும் அங்காங்கே கள்ளத்தனமாக புலிக்கொடியை மறைத்துவந்து தூக்கிப்பிடித்து புலியிருப்பை தக்கவைக்க இதுதான் வழி என்று முனைகின்றனர்.

இன்று இலங்கையில் வாழும் தமிழர்களில் சரிபாதி என்றளவை நெருங்கிக்கொண்டிருக்கும் இஸ்லாமியத்தமிழர்களுக்கு உடன்பாடில்லாத கொடியிது. பல்வேறு பட்ட சிந்தனை முறைகளின் கீழ் வாழும் மக்களுக்கு உடன்பாடில்லாத கொடியிது. எப்படிப்பார்த்தாலும் பெரும்பான்மை தமிழ் மக்களுக்கு உடன்பாடில்லாத கொடியிது. மக்கள் அவலத்துக்கு எதிரான போர்வையில் இந்தக் கொடியை திணிப்பது ஜனநாயகம் அன்று. புலிச் சிந்தனை முறை படுதோல்வி கண்டுள்ளது. அதை இனிக் கையில் எடுக்கமுடியாது. இங்கே புலிச்சிந்தனை முறை என்பது மையவாதச் சிந்தனை முறையாகும். அதாவது வசதியானவன் எல்லாம் புலம்பெயர்ந்தும் அரச கட்டுப்பாட்டிலும் இருந்துகொண்டு வறிய மக்களை காவுகொடுத்து தமிழீழம் பெறுவதைக் குறிக்கும். இந்தச் சிந்தனை முறையை இனியும் தொடர்ந்து வெற்றி பெற முடியாது என்பதை புலிக்கொடியை பிடிப்பவர்கள் முதலில் உணரந்துகொள்ள வேண்டும்.

பிரிட்டன் காரன் தானே தமிழர்களின் பிரதேசங்களையும் சிங்களவனிடம் கையளித்துவிட்டுப்போனான். என்னும் சொல்லப்போனால் பெளத்த உருவாக்கம் சிங்கள தேசிய இன உருவாக்கம் என்பதே பிரிட்டன் உருவாக்கியதுதான். த

தமிழ்மக்களின் அத்தனை அழிவுகளிலும் பிரதான சூத்திரதாரியும் குற்றவாளியும் பிரிட்டன் காரனே. நாம் தட்டிக்கேட்க முற்பட்டால் பிரிட்டனின் வரலாற்றுத்தவறையும் சுட்டிக்காட்டி இலங்கை அரசுடன் அவனையும் குற்றவாளியாக்கவேண்டும். போர்க்குணம் என்றால் பிரதான எஜமானை நக்கிக்கொண்டு இரண்டம் எஜமானை எதிர்ப்பதாக அர்த்தப்படுத்த முடியாது. அதனால் எந்த ஒரு வெற்றியும் கிடைக்காது. விளக்கில் விழுந்து மடியும் விட்டில்களாகவே எமது கதை முடியும்.

உங்களுக்குப் பிடிக்காத கருத்துக்கள் எழுதினால் அவர்களை சிங்கள விசுவாசிகளாக்குவது ஒன்றும் புதிதில்லை. அது மண்டையில்போட்ட பழம்பெரும் மரபுவழிச் சிந்தனை முறை. அந்த சிந்தனை முறையை வைத்து இனி ஒரு மயிரையும் புடுங்க முடியாது.

கேள்விக்கு சுய விலாசம் தான் பதில் என்றால் நான் முதலே சொன்னதைச் செய்யுங்கள்: நைசாக மாறி விடுங்கள், பிறகு நிறைய வாய்ப்புகள் வரும் வந்து "உருட்டுங்கள்" <_<

நீங்கள் எழுதுவதை நீங்கள் திரும்பவும் வாசிப்பது இல்லைப்போல, அல்லது உங்களுக்கு விளக்கம் குறைவோ தெரியாது. எனது சுய விலாசம் காட்டுவதற்காக இங்கு நான் மேலுள்ள விடயங்களை எழுதவில்லை. மேலும் உங்கள் வீணாய்ப்போன அங்கீகாரங்கள் மூலம் எனது நேரத்தை வீணாக்குவது தவிர வேறு ஒன்றும் புடுங்கவும் முடியாது. :D உங்கள் வினாவுக்குரிய பதிலே நான் மேல் எழுதிய கருத்தில் உள்ளது. எனது அனுபவத்தை வைத்து பதில் கூறினேன். மூக்குச்சாத்திரம் பார்த்து பதில்கூறவில்லை. இதனால், உடனடியாகவே, என்னை துரோகி, எட்டப்பன் என்று உங்கள் வழமையான பாணியில் கூறமுடியாதபடியால் தாயிற்கு செய்ததை சொல்லி சுயவிலாசம் காட்டுவதாக முறைப்பாடு செய்கின்றீர்கள். இங்கு உருட்டுவது நீங்களா அல்லது நானா?

வயித்தால வாயால போற உங்கட கற்பனைய விட்டுப் போட்டு, நான் எழுதினதுக்குப் பதில் தாங்கோவன். ஒட்டாவாவில புலிக்கொடி இல்லாமல் போன போதும் கனேடியன் கண்டு கொள்ள இல்லை எண்டது உண்மையா இல்லையா? அது உண்மை எண்டால் புலிக் கொடியால தான் எங்கட குரல் எடுபடவில்லை எண்ட உங்கள் போன்றோரின் வாதம் ஒட்டாவாவிலயே ஒன்றரை வருடம் முன்பு பொய்ப்பிக்கப் பட்டிருக்கு என்பது தானே உண்மை? இதுக்குப் பதில் இருக்கா? சொல்லுங்கோ. இதுக்குப் பதில் இல்லையா, போய் ஒழிச்சிருந்துட்டு பிறகொரு சந்தர்ப்பம் கிடைக்கேக்க வாங்கோ! :wub:

Edited by கரும்பு

இந்தக் கட்டாயச் சூழ்நிலையிலும் அங்காங்கே கள்ளத்தனமாக புலிக்கொடியை மறைத்துவந்து தூக்கிப்பிடித்து புலியிருப்பை தக்கவைக்க இதுதான் வழி என்று முனைகின்றனர்.

Can you please elaborate on this? கள்ளத்தனம் எனும் பதம் எதனை குறிக்கின்றது, பிடித்து உள்ளே போடக்கூடும் எனும் உள்பயத்துடன் கொடியை தூக்குவதா? <_<

அரசுகள் என்றும் தமது நலங்களின் அடிப்படியிலையே செயற்படும்.அந்த நலங்களை விட மானிட விடுதலை சுதந்திரம் முக்கியமானது என்று இயங்கும் தனி நபர்களும் பத்திரிகைகளும் இயக்கங்களும் இங்கு இயங்குகின்ரன.பிரித்தானிய அரசு என்பது அதன் கொள்கைகள் ஏன் சிறிலங்காவைப் பொறுத்த வரையில் ஏன் மானிட விடுதலை சுதந்திரம் என்பனவற்றிற்க்கு எதிராக இருக்கிறது என்பது கமக்கள் மத்தியில் வெளிக்கொணரப் படும் போது அது அந்த அரசுக்கும் அரசு சார் நிறுவனக்களுக்கும் நெருக்கடியைக் கொடுக்கிறது.அதனால் பிரித்தானிய அரசு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது.மக்கள் தெருவில் இறங்கி புலிக் கொடியுடன் போராடியதாலேயே இன்று பிரித்தானியாவில் ஸ்கொட்லண்ட் யாட்டுக்கு முன்னாலேயே புலிக் கொடியுடன் செல்ல முடிகிறது,விமான நிலையத்துக்குள் புலிக்கொடியுடன் செல்ல முடிகிறது.புலிகளும் தமிழ் மக்களும் ஒன்றென்பதும்,தமிழருக்கான அடக்குமுறைக்கு எதிராகவே புலிகள் போராடினார்கள் என்பதும் அவர்களின் போராட்டம் நியாயமானது என்பதும் நிறுவப்படுகிறது.

இங்கே புலிக் கொடி இல்லாமல் இனி ஒரு குழு நடாத்திய எந்தப் போராட்டமும் எந்த ஒரு பிரித்தானிய ஊடகத்தின் கவனத்தையும் பெற வில்லை.ஒரு பத்து இருவர் மட்டுமே கலந்து கொண்ட இத்தகைய போராட்டங்களின் பின்னால் மக்கள் அணி திரளவில்லை.

அதனால் தான் சொல்கிறேன் மக்களைப் போராடாதே மாவீரர் தினத்தைக் கொண்டாடாதே புலிக் கொடி பிடிக்காதே ,சிறிலங்கா அரசுக்கு அது பிடிக்காது என்னும் சூனிய அரசியல் அறிவிலித் தனமானது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எழுதுவதை நீங்கள் திரும்பவும் வாசிப்பது இல்லைப்போல, அல்லது உங்களுக்கு விளக்கம் குறைவோ தெரியாது. எனது சுய விலாசம் காட்டுவதற்காக இங்கு நான் மேலுள்ள விடயங்களை எழுதவில்லை. மேலும் உங்கள் வீணாய்ப்போன அங்கீகாரங்கள் எனது நேரத்தை வீணாக்குவது தவிர வேறு மூலம் ஒன்றும் புடுங்கவும் முடியாது. <_< உங்கள் வினாவுக்குரிய பதிலே நான் மேல் உள்ள கருத்தில் உள்ளது. எனது அனுபவத்தை வைத்து பதில் கூறினேன். மூக்குச்சாத்திரம் பார்த்து பதில்கூறவில்லை. இதனால், உடனடியாகவே, என்னை துரோகி, எட்டப்பன் என்று உங்கள் வழமையான பாணியில் கூறமுடியாதபடியால் தாயிற்கு செய்ததை சொல்லி சுயவிலாசம் காட்டுவதாக முறைப்பாடு செய்கின்றீர்கள். இங்கு உருட்டுவது நீங்களா அல்லது நானா?

எனக்கு விளக்கம் குறைவு தான் கரும்பு, உங்களுக்குத் தெரியாததா? நான் படிக்காத பாமரன். அமெரிக்கத் தேசிய கீதம் பாடும் அமெரிக்கத் தமிழன் அல்ல :D . ஆனால் கேள்வி உங்கள் அனுபவம் அல்லது அது தரும் செய்தி பற்றியோ இல்லை (உங்கள் அனுபவம் என்ன 2011 almanac ஆ? ). ஒட்டாவாவில் புலிக் கொடி இல்லாமல் போன போதும் நாம் கவனிக்கப் படாதது உங்களுக்கு என்னத்தைச் சொன்னது? அதுக்கு வர மாட்டேனென்கிறீர்கள் இன்னும். கேள்வி உங்களுக்குத் தான் புரியவில்லை. ஆங்கிலத்தில் கேட்க வேண்டுமோ? :wub:

சரி நாரதர், நீங்கள் கூறும்படியே வைத்துக்கொள்வோம். அதாவது புலிக்கொடி பிடிக்கப்படுகின்றது. பிடிப்பவர்கள் தொடர்ந்து பிடிக்கட்டும்.. அது ஒருபுறம் காணப்பட...

போர்க்குற்றங்கள் பற்றிய அனைத்து மனிதவுரிமை அமைப்பு அறிக்கைகளிலும் இருதரப்பினரையும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. த.வி.பு போர்க்குற்றங்கள் செய்தார்கள் என்று நிரூபிக்கப்படும்போது புலிக்கொடியை தூக்குவது எவ்விதமான அரசியல் அனுகூலங்களை தமிழருக்கு ஏற்படுத்தி தரும்?

ஒருபுறம் சிறீ லங்காஅரசு குற்றவாளிகள், மறுபுறம் த.வி.பு... இதை நான் கூறவில்லை மனிதவுரிமை அமைப்புக்கள் கூறுகின்றன. ஐ.நா விசாரணைகள் என வரும்போது இரண்டு பக்கமும் குற்றங்கள் சாட்டப்படும். சிறீ லங்கா அரசு என்று குற்றம் சாட்டப்படும்போது குறிப்பிட்ட காலத்தில் பதவிவகித்தவர்கள் மாத்திரமே சிக்கலிற்கு உள்ளாவர்கள். ஏன் என்றால் இது ஓர் அரசு. ஆனால்.. த.வி.பு விடயம் கொடி அவ்வாறு இல்லை. தொடர்ந்தும் பயங்கரவாத பட்டியலிலேயே த.வி.பு காணப்படுகின்றது. இதைப்பற்றிய உங்கள் பார்வை என்ன? அதாவது ஐ.நா விசாரணையில் த.வி.பு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால்.. புலிக்கொடிக்கு சர்வதேசத்தில் கிடைக்கக்கூடிய அங்கீகாரம் என்ன? ஆத்திரப்படாமல்.. சிந்தித்து பதில் கூறுங்கள். <_<

  • கருத்துக்கள உறவுகள்

அரசுகள் என்றும் தமது நலங்களின் அடிப்படியிலையே செயற்படும்.அந்த நலங்களை விட மானிட விடுதலை சுதந்திரம் முக்கியமானது என்று இயங்கும் தனி நபர்களும் பத்திரிகைகளும் இயக்கங்களும் இங்கு இயங்குகின்ரன.பிரித்தானிய அரசு என்பது அதன் கொள்கைகள் ஏன் சிறிலங்காவைப் பொறுத்த வரையில் ஏன் மானிட விடுதலை சுதந்திரம் என்பனவற்றிற்க்கு எதிராக இருக்கிறது என்பது கமக்கள் மத்தியில் வெளிக்கொணரப் படும் போது அது அந்த அரசுக்கும் அரசு சார் நிறுவனக்களுக்கும் நெருக்கடியைக் கொடுக்கிறது.அதனால் பிரித்தானிய அரசு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது.மக்கள் தெருவில் இறங்கி புலிக் கொடியுடன் போராடியதாலேயே இன்று பிரித்தானியாவில் ஸ்கொட்லண்ட் யாட்டுக்கு முன்னாலேயே புலிக் கொடியுடன் செல்ல முடிகிறது,விமான நிலையத்துக்குள் புலிக்கொடியுடன் செல்ல முடிகிறது.புலிகளும் தமிழ் மக்களும் ஒன்றென்பதும்,தமிழருக்கான அடக்குமுறைக்கு எதிராகவே புலிகள் போராடினார்கள் என்பதும் அவர்களின் போராட்டம் நியாயமானது என்பதும் நிறுவப்படுகிறது.

இங்கே புலிக் கொடி இல்லாமல் இனி ஒரு குழு நடாத்திய எந்தப் போராட்டமும் எந்த ஒரு பிரித்தானிய ஊடகத்தின் கவனத்தையும் பெற வில்லை.ஒரு பத்து இருவர் மட்டுமே கலந்து கொண்ட இத்தகைய போராட்டங்களின் பின்னால் மக்கள் அணி திரளவில்லை.

அதனால் தான் சொல்கிறேன் மக்களைப் போராடாதே மாவீரர் தினத்தைக் கொண்டாடாதே புலிக் கொடி பிடிக்காதே ,சிறிலங்கா அரசுக்கு அது பிடிக்காது என்னும் சூனிய அரசியல் அறிவிலித் தனமானது.

நீங்க வேற, நாங்கள் எங்களுக்குள்ள அதிகாரம் செய்யுறவங்களை எதிர்ப்பம், அந்த "மைய வாதம்" இந்த பாரிச வாதம் எண்டு வார்த்தை ஜாலம் காட்டுவம். வெள்ளைத் தோலோட கொஞ்சப் பேர் வந்து "இது பயங்கர வாதம் இது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை" எண்டு சொன்னால் எல்லா ஒட்டையளையும் பொத்திக் கொண்டு எங்கட நடவடிக்கைகளை மாத்துவம். ஏனெண்டா அது மனித நாகரீகமாம், வெள்ளைக் காரன் சொன்னதால! <_<

எனக்கு விளக்கம் குறைவு தான் கரும்பு, உங்களுக்குத் தெரியாததா? நான் படிக்காத பாமரன். அமெரிக்கத் தேசிய கீதம் பாடும் அமெரிக்கத் தமிழன் அல்ல <_< . ஆனால் கேள்வி உங்கள் அனுபவம் அல்லது அது தரும் செய்தி பற்றியோ இல்லை (உங்கள் அனுபவம் என்ன 2011 almanac ஆ? ). ஒட்டாவாவில் புலிக் கொடி இல்லாமல் போன போதும் நாம் கவனிக்கப் படாதது உங்களுக்கு என்னத்தைச் சொன்னது? அதுக்கு வர மாட்டேனென்கிறீர்கள் இன்னும். கேள்வி உங்களுக்குத் தான் புரியவில்லை. ஆங்கிலத்தில் கேட்க வேண்டுமோ? :D

கொடி விடயத்தில் நான் காவிய கொடி கனேடியக்கொடி. எனது அனுபவங்களை சுருக்கமாக கூறியுள்ளேன். மிகுதி.. உங்கள் புறக்கணிப்புக்கள், உங்களிடையே நடைபெற்ற இழுபறிகள்.. இவைகள் பற்றி... கனேடிய தமிழ் காங்கிரஸ், தமிழ் விசன் தொலைக்காட்சி, வானொலிகள் இவைகளுடன் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால் விரிவாக பதில் கூறுவார்கள். அத்துடன்.. it was a chain of events. ஓட்டாவா விடயத்தை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள் என்றால்.. உதாரணத்திற்கு..

பின்னால வந்த வாகனம் நடுவில் வந்த வாகனத்தை இடித்தால்.. நடு வாகனம் அதற்கு முன்னால் செல்கின்ற வாகனத்த அடிக்கும். நீங்கள் பின்னால் வந்த வாகனம் அடித்தவிடயத்தை தவிர்த்து நடுவில் வந்த வாகனம் முன்னால் சென்று இடிப்பது பற்றி மட்டும் பேசுகின்றீர்கள். ஓட்டாவா விடயத்தை நீங்கள் இப்படித்தான் பார்க்கின்றீர்கள். உங்கள் வினாவின் தொனி அவ்வாறே அமைந்துள்ளது.

மேலும், கனேடிய பாராளுமன்ற முன்றலில் நடைபெற்ற போராட்டத்தில் லிபரல் உறுப்பினர் ஒருவர் ஆர்வமிகுதியில் கலந்து, அதன்பின்னர் அவர்பட்ட அவலங்களை நீங்கள் அறியவில்லை போல.

முதலில் புலிக் கொடி பண்டைய தமிழ் மன்னனான சோழனின் கொடி.அதுக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது.அது தமீழ விடுதலைப் புலிகளின் கொடி அல்ல.புலிக் கொடிக்கும் புலிகள் இயக்கத்துக்கும் இணைப்பை உருவாக்கியவர்கள் நீங்கள்.பிரித்தானியாவில் புலிக் கொடி தமிழரின் கொடி என அங்கீகரிக்கப்பட்டுள்ளது இதன் அடிப்படையில்.இது போராட்டங்கள் மூலம் மட்டுமே சாத்தியமானது.உலகில் போராமல் எதுவும் சாத்தியம் இல்லை.இது எமக்குச் சாத்தியப்படாது என்றால் அது என்றைக்கும் எமக்குச் சாத்தியப்படாது.

அடுத்து போர்க் குற்ற விசாரணை பற்றியது.போர்க் குற்றம் புரிந்த தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்பும் அதன் தலைவரும் எங்கே? அவர்கள் உயிருடன் இல்லை என்று சொல்லி இந்திய அரசே அவர்களை ராஜுவ் காந்தியின் படுகொலை வழக்கில் இருந்து விடுவித்து விட்டது.இல்லாதவர்கள் மீது எந்த நீதி மன்றத்தால் வழக்குத் தொடுக்க முடியும்? மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறது சிங்கள இராக்ணுவத்தின் உளவுப் படை.அதனால் இயக்கப்படும் கேபி என்னும் பொம்மையின் வழி தலையாட்டிகள் இங்கு ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

ஜஸ்டின், எனக்கு பலநூறு மூலங்களை காட்டமுடியும். சீ பீ சீ யில் தற்போது தேடல் செய்தபோது உடனடியாக கீழ்க்கண்ட பழைய செய்தி கிடைத்தது. இதற்கு மேல் விண்ணாணம் கதைப்பது என்றால் தாராளமாக கதையுங்கள்.

Tamil Tiger flags at protest give impression terrorist group part of demo: Tories

tamil-cbcw-090510.jpg

The Conservative government says Tamil-Canadian protests, including one that shut down a Toronto highway on the weekend, are giving people the idea that a terrorist group is part of the demonstrations.

Minister of International Co-operation Bev Oda says she noticed red flags being flown at the protests bearing the symbol of the Liberation Tigers of Tamil Eelam, the Sri Lankan guerilla group that has been engaged in a prolonged civil war with government troops in that country on behalf of the ethnic Tamil community.

The Tamil Tigers are considered a terrorist group by the Canadian government.

Oda told CBC Newsworld that the flags being flown "would say to Canadians that ... the terrorist organization is part of the demonstrations that happened."

Some protesters chanted their support for the Tamil Tigers at Sunday's highway protest.

The thousands of people who flooded onto the Gardiner Expressway left only after receiving assurances that the Liberals would raise their plight in Parliament.

Liberal Leader Michael Ignatieff says he will continue to press the Harper Conservatives on the humanitarian crisis in Sri Lanka but is distancing the party from the demonstration itself.

Ignatieff issued a statement urging that future protests be lawful and stressing that Liberal MPs took no part in the protest.

He also says the Liberals unequivocally condemn the Tamil Tigers.

"The Liberal Party of Canada stands firmly against terrorism, and I restate our unequivocal condemnation of the Liberation Tigers of Tamil Eelam," said the statement.

Ontario Premier Dalton McGuinty also assailed the tactics of the protesters who shut down the highway, saying the bloodshed in Sri Lanka does not justify such action.

The rage and frustration over Sri Lanka's civil war boiled over after reports that an all-night artillery barrage in the country's war zone killed more than 370 people and forced thousands to flee to makeshift shelters along a beach.

McGuinty says Sri Lanka should open the northern part of the country to journalists, aid workers and international observers.

The highway protest trapped dozens of motorists and forced police to close the Gardiner and the Don Valley Parkway for up to six hours.

"My daughter worked in Sri Lanka for close to a year as an aid worker, so I have some understanding of the nature of the challenges," McGuinty said.

"I understand the passions which are here, but having said that, there is a right way and a wrong way to protest."

A small handful of Tamil protesters gathered on the front lawn of the Ontario legislature Monday, which is exactly the place McGuinty said they should take their concerns rather than blocking city streets.

"They're always welcome to protest on the front lawn of Queen's Park or Parliament Hill," he said.

McGuinty also said he would not second-guess the police's decision to close the highways for hours Sunday to accommodate the protesters.

"I believe they've made the right kind of decisions to deal with these kinds of issues," the premier said.

The highway protest ended just after midnight after the federal Liberals promised to raise the Tamil concerns in Parliament.

மூலம்: http://www.cbc.ca/canada/toronto/story/2009/05/11/tamil-protest.html

இல்லாதவர்கள் மீது எந்த நீதி மன்றத்தால் வழக்குத் தொடுக்க முடியும்? மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறது சிங்கள இராணுவத்தின் உளவுப் படை. அதனால் இயக்கப்படும் கேபி என்னும் பொம்மையின் வழி தலையாட்டிகள் இங்கு ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

மனித உரிமை அமைப்புக்கள் கேபியின் வழிகாட்டுதலில் இயங்குகின்றன? ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். த.வி.பு போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்று நீங்கள் கூறலாம், நாங்கள் நம்பலாம். ஆனால்.. அதை ஐ.நா விசாரணைக்குழுவும், மனித உரிமை அமைப்புக்களும் நம்பவேண்டும். இதற்கு கேபியை இழுப்பதன் மூலம் ஆகப்போவது ஒன்றும் இல்லை.

Edited by கரும்பு

ஜஸ்டினின் கேள்வியை மீண்டும் ஒரு முறை கேட்டால் புலிக் கொடி தாங்காது போரடினால் கனடிய பழமைவாதபா கட்ச்சி தமிழர்கள் தொடர்பான தனது கொள்கையை மாற்றிக் கொள்ளுமா? பிரித்தானியாவிலும் இவ்வாறு தான் முன்னர் கொன்சவேடிவ் கட்ச்சி சொல்லிக் கொண்டிருந்தது.இங்கு நாம் எல்லாக் கட்ச்சிகளுக்கும் உள் நுழைந்து வேலை செய்ததால் இன்று கொன்சவேடிவ் கட்ச்சிக்குள்ளும் எமக்கு ஆதரவானவர்கள் இருக்கிறர்கள்.தொழிற்கட்ச்சி போன்ரள்விற்க்கு இல்லை எனிலும்,ஏனெனில் பழமைவாதக் கட்ச்சியினர் பிற்போக்கானவர்கள் மறைமுகமான இனவாதக் கொள்கை உடையோர்.ஆனால் அவர்கள் உள்ளும் எழுந்து வரும் புதிய தலைமுறியிடம் எமக்கு ஆதர்வான போக்கு இருக்கும்.இன்கு புலிக் கொடி அல்ல பிரச்ச் இனை நாம் எவ்வளவு தூரத்துக்கு எமது நேரத்தைச் செலவழித்து வேலை செய்கிறோம் என்பதில் தான் போராட்டத்தின் வெற்றி தோல்வி தங்கி இருக்கிறது.புலிக் கொடிப் பிரச்கினையாக இருப்பது புலத்தில் மக்களை அணிதிரட்ட முடியாமல் இருக்கும் ஒட்டுக் குழுக்களுக்கும் சிறிலங்காவின் அரச உள்வாளிகளுக்கும் அவர்களால் இயக்கப்பட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கும் மட்டுமே.

மனித உரிமை அமைப்புக்கள் அவ் அவ் அரசுகளின் உளவுப் படைகளின் அறிவுறுத்தல்களில் இயங்குகின்றன.அதனால் தான் அவை அவ் அவ் அரசுகளின் மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசா.

Can you please elaborate on this? கள்ளத்தனம் எனும் பதம் எதனை குறிக்கின்றது, பிடித்து உள்ளே போடக்கூடும் எனும் உள்பயத்துடன் கொடியை தூக்குவதா?

பயங்கரவாதிகள் என்று தடைசெய்யப்பட்ட பின்னர் மக்கள் அவலங்களுக்காக குரல்கொடுகின்றோம் என்ற போர்வையிலேயே புலிக்கொடியை பிடிக்கின்றனர். நாம் இறுதியில் கேட்டது படுகொலைகளை நிறுத்து என்பதே தவிர எங்களுக்கு உரிமைகள் தா தனிநாடுதா என்றல்ல. உரிமை தனிநாடு என்பன பயங்கரவாதமாக்கப்பட்டபின்னர் படுகொலைகளை நிறுத்து என்று முனைந்தோம். இந்த முனைவில் புலிக்கொடியை பிடித்தல் என்பது நேர்மையற்ற ஒரு செயலே.

போர்க்குற்றங்கள் பற்றிய அனைத்து மனிதவுரிமை அமைப்பு அறிக்கைகளிலும் இருதரப்பினரையும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. த.வி.பு போர்க்குற்றங்கள் செய்தார்கள் என்று நிரூபிக்கப்படும்போது புலிக்கொடியை தூக்குவது எவ்விதமான அரசியல் அனுகூலங்களை தமிழருக்கு ஏற்படுத்தி தரும்?

இங்கே புலிகள் தலமை அழிந்ததால் இலங்கை அரசை போர்க்குற்றவாளியாக முன்நிறுத்துகின்றோம். ஆனால் இந்த உலகம் தலமை அழியும் வரை பிரதான போற்குற்றவாளியாகவும் பயங்கரவாதியாகவும் புலிகளையே முன்நிறுத்தியது. மக்களை கேடயமாக பயன்படுத்தி அவர்களை மகிந்தர் மீட்ட காட்சிகளுடன் தான் போர் முடிந்தது. இறுதியில் இரண்டுதரப்பும் தவறு விட்டிருக்கின்றது. புலிகள் சற்று அதிகமாகவே விட்டிருக்கின்றார்கள். இனி ஒற்றுமையா போங்கள் என்றுதான் சொல்வார்கள். புலிக்கொடி பிடித்தால் கொடிக்குப் பதில் இதுதான். கொடி பிடிக்க விடுவதன் சுட்சுமமும் இதுதான். மக்கள் அவலத்திற்கு நியாயம் கேட்டால் கொடிக்கு பதில் சொல்வார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.