Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்வாணியின் சத்திய கடிதத்தின் அடிப்படையிலேயே பிரித்தானிய தமிழர் பேரவை மேஜர் ஜெனரல் சாகி கால்லகேவை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுத்தது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்குதான் எல்லாம் தெரியுமே ,பிறகேன் சர்வதேசத்தை பற்றிய அக்கறை.நாங்கள் சொல்வதை அவர்கள் கேட்கவேண்டுமே ஒழிய அவர்கள் சொல்வதை நாங்கள் கேட்கமாட்டோம் ஏனெனில் நாங்கள் தமிழர்.

அரசு கேள்வி-பதில்.

ஈழப்போராட்டம் வீழ்ந்ததற்கான உண்மையான காரணம் என்ன?

விடுதலைப்புலிகளின் உலகம் அறியாமை.

இதை தன் மனதால் உணர்ந்து சொன்னால் அவன் உலகப்போக்கின் அறியாமை வாதி என்றேதான் சொல்ல வேண்டும்.

ஒரு அரசு இன்னொரு அமைப்பை ஆதரிக்க அந்த அமைப்பு நல்லதா என்று பார்பது கிடையாது தனக்கு எவளவு நன்மை என்றுதான் பார்க்கப் படுவது உலகப் போக்கு.

பனங்காய் வீழ்ந்த பிறகு அது காகத்தால் வீழ்ந்ததா இல்லை, அவன் தன் மந்திரத்தால் தான் வீழதினேன் என்றால் அதை புத்தியே இல்லாதவன் நம்பித்தானே ஆகவேண்டும்!

Edited by தேவன்

  • Replies 80
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோமாலிலாந்து என்ற நாடு முப்படைகளுடனும் எந்த ஒரு நாட்டின் உதவியுமின்றி தனிநாடாக கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. சர்வதேச நாடுகள் சோமாலிலாந்தை அழிக்க முயற்சிக்கவில்லை. விடுதலைப்புலிகளுக்கும் தமிழீழத்துக்கும் சர்வதேச நாடுகள் எதிராக செயற்பட்டதற்கு நீங்கள் சொல்லும் காரணம் பொருந்துமானால், சோமாலிலாந்தையும் சர்வதேச நாடுகள் அழித்திருக்க வேண்டும். ஆகவே உங்கள் காரணம் பொருத்தமானதாக தெரியவில்லை.

நீங்கள் சொல்லும் காரணம் சரியானதென்றே வைத்துக்கொண்டால், சர்வதேச நாடுகள் எதிர்க்கும் நிலையில் அவை அனைத்துக்கும் தாக்குபிடித்துக் கொண்டு தமிழ்மக்கள் நிம்மதியாக வாழ தாம் வழிசெய்ய முடியும் என்று விடுதலைப்புலிகள் நினைத்திருந்தால், அது சாத்தியமற்ற ஒன்றல்லவா? ஆகவே விடுதலைப்புலிகள் சர்வதேச அரசியலை சரிவர புரிந்து கொள்ளவில்லை என்பதை உங்கள் கருத்து உறுதிப்படுத்துகிறது.

ஐயா jude! தங்கள் பதிவின் ஆரம்பத்தில் ஜீவன்கூலுக்காய் எவளவு கூலாய் விளம்பரவேலை செய்தீர்கள் இந்தக் களத்தில், களத்தின் பெரும்பான்மை அவன் ஒரு பூல் என்று அடித்துச் சொன்னோம், இப்ப அவன் பச்சையாய் தன் சிங்கள விசுவாசத்தைக் கொட்டிக் கொண்டிருக்கின்றான்!

தங்கள் மாற்றுக்கருத்தியலில் துளிகூட தமிழ் உணர்வு கொண்டவர்கு இசைவாக இல்ல்லையே ஏன் என்று சொல்ல முடியுமா?

எல்லாவற்றிற்கும் விமர்சனமும், எப்படி நடந்தது என்றும் விளக்கம் எழுதிக்கொண்டிருக்க முடியாது.காரணம் நாங்கள் இப்போ பயணிப்பது 90 களுக்கு பிறகு ஊடகங்களால் எமது போராட்டம் பற்றிஅறியப்பட்டு விமர்சிப்பவர்களே அதிகம்.அவர்களுடன் நேரம் செலவழிக்கமுடியாது.

நடந்து முடிந்தவை பற்றி கதைக்கத்தான் வேண்டும், ஆனால் அதை மட்டுமே கதைப்பதால் நடக்கப்போவதை கோட்டை விட்டுவிடுவோம்.

எனவே தயவு செய்து நாங்கள் எவ்வாறான பாதையில் பயணிக்க வேண்டும், புலம்பெயர் தமிழர் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி உங்கள் கருத்துக்களை முன்வைத்தால் கூடுதலாக ஆரோக்கியமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீட் சிங்களத்துடன் நாம் ஒன்றாக வாழ முடியாது என்ற படியால் தானே போராட தொடங்கினோம்.புலிகள் போராட தொடங்கும் முன்னே தமிழனுக்கு பிரச்சனை இருந்தது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.சிங்களவன் கூட எங்களோடு ஒற்றுமையாக வாழ விரும்பினால் இப்ப கூட அவனால் நல்லதொரு தீர்வை தர முடியும்.[இப்ப தான் புலி முற்றாக அழிந்து முடிந்து விட்டதே!] ஆனால் காலம்,காலமாய் எங்களை அடிமையாய் வைத்திருந்து கொஞ்சம்,கொஞ்சமாய் கொண்று கடைசியாய் எங்கள் இனமே இல்லாமல் அழித்து விடுவான்.இது தான் உங்கள் விருப்பமா?

எங்கள்லிட‌மிருக்கும் வளங்களை கொடுத்து அமெரிக்காவிற்கும்,இந்தியாவிற்கும் அடிமையாய் இருப்பதை விட சிங்களவனோடு சேர்ந்து வாழலாம்.

அர்ஜீன் அண்ணா புலிகள் தங்கள் பக்க நியாயத்தை எந்த வகையில் சரிவர செய்யவில்லை என நினைக்கிறீர்கள்?[எந்த வகையில் சர்வதேசத்திற்கு எடுத்துரைத்திருக்க வேண்டும்]...புலிகள் சில பிழைகள் விட்டுள்ளார்கள் அதற்காக முழுப் பழியையும் தூக்கி புலிகள் மீது போடுவது நியாயமில்லை.எங்கள் வயது உங்கள் அனுபவமாய் இருக்கும் உங்களுக்கு தெரிந்ததை எங்களுக்கு சொன்னால் அது பிர‌யோச‌னமாய் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாடுகளை தாக்குப்பிடித்துக்கொண்டு மக்களை காப்பாற்றுவோம் என்று புலிகள் உறுதியளித்ததாக நான் அறியவில்லை.

தனது மக்களை காப்பாற்றுவது ஒரு நாட்டினதும், அரசினதும் முக்கியமான கடமையாகும். சர்வதேச நாடுகளின் எதிர்ப்பிற்கு மத்தியில் ஒரு நாடும் அதன் அரசும் இயங்கும் போது, அது தனது மக்களை காப்பாற்றும் கடமையை உறுதிப்படுத்த தவறியிருந்தால், அந்த அரசு ஒரு பொறுப்புள்ள அரசா என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறாக தாம் தமது மக்களை காப்பாற்றுவோம் என்று விடுதலைப்புலிகள் உறுதியளிக்காத நிலையில், மக்கள் மரணத்தையும் அழிவையும் எதிர்பார்த்து விடுதலைப்புலிகளின் அரசை விரும்பியிருந்தார்கள் என்றால், அது பொது அறிவுக்கு ஏற்றுக்கொள்ள தக்கதாக தெரியவில்லை.

இது எனது கருத்து மட்டுமே.

புலிகள் மிகப் பெரிய ஒருவரும் நினைக்க முடியாத அளவிற்கு இராணுவ கட்டமைப்பை உருவாக்கியிருந்தார்கள் என்பது சர்வதேசமே வியக்கும் உண்மை.

.ஆனால் ஒரு விடுதலை அமைப்பு என்ற ரீதியில் பார்த்தால் இராணுவக்கட்டைமைப்பு எனது அதன் வெற்றிக்கு இரண்டாம் பட்ச தேவையே.சரியான அரசியல் பார்வையே முதன்மையானது.அதற்கு புலிகள் பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை,தலைவர் அதை விரும்பவும் இல்லை காரணம் நம்பிக்கையீனம்,அவர்கள் முதன்மைபடுத்துபட்டுவிடுவார்களோ என்ற சந்தேகம்.

அய்.ஆர்.ஏ போல் ஒரு இராணுவக்கட்டமைப்பும் ,சின் பெயின் போல் ஒரு அரசியலமைப்பையும் எமது போராட்டவடிவிற்கு அமைய ஏற்படுத்தியிருக்க வேண்டும்.முடிந்த அளவிற்கு உலகநாடுகளெங்கும் அந்த அரசியலமைப்பிற்கு அலுவலகம் அமைத்து எமது போராட்டத்தின் தன்மையை,நியாயத்தை சர்வதேசமயப்படுத்தியிருக்கவேண்டும்.இராஜதந்திரிகள்,அரசியல்வாதிகள்,பத்திரிகையாளர்கள் இவர்களுடன் நேரடிதொடர்பில் இருந்திருக்க வேண்டும்.இவர்கள் உலகின் பார்வையில் எமது போராட்டம் எப்படி பார்க்கப்படுகின்றது என தொடர்ந்து தலைமைக்கு அறிக்கைகள் கொடுத்துக்கொண்டிருந்தால் அதற்கேற்ப தலைமையும் முடிவுகளை எடுப்பது சுலபமாக இருந்திருக்கும்.

புலிகளைசர்வதேசம் வெறுத்ததற்கு முதல் காரணம் கொலை அரசியல்.ஆரம்பம் துரையப்பாவில் இருந்தாலும் பெரிய அமைப்பாக உருவெடுத்தபின்பும் அந்த கொலைஅரசியலில் இருந்து அவர்களால் விடுபடமுடியாமல் போய்விட்டது.இதனால் தான் போராட்டத்திற்கு புறப்பட்ட மற்ற போராளிக்குழுக்கள் அரசுடன் இணைந்ததும்,வெளிநாடுகளுக்கு ஓடியதும்.எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனல் பொது எதிரியை சேர்ந்து எதிர்திருக்க வேண்டும்.இந்த ஏகப்பிரநிதித்துவத்திற்கு இவர்கள் கொடுத்தவிலை மிக அதிகம்.இந்தியாவுடனான ஆரம்பகட்ட பேச்சுவார்தைகளிலும் தங்களுடம் மாத்திரம் பேசவேண்டுமென ஒரே குறியாக இருந்தார்கள்.

மிகுதி பின்னர்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொருவர் திம்புவுக்கு போன உங்களுக்கே என்று என்னை விழிக்கின்றார்.யார் யார் திம்புவிற்கு போனதென்றே தெரியாதவர்களும் இருக்கின்றார்கள்(ஆய்வாளர் திருச்செல்வம் பாலசிங்கம் திம்பு போனதென கதை அளக்கின்றார்)எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டியதில்லை ஆனால் நான் ஒரு 80 களில் இருந்து இதே தொழிலாக இருப்பவன்.30 வருட அனுபவத்தை ஒரு பந்தியில் எழுத முடியாது.

அர்ஜுன், முன்பு இதே களத்தில் திம்பு பேச்சுவார்த்தையில் நீங்கள் தகவல் பரிமாறியதாக.அதனை தான் குறிப்பிட்டு உங்களுக்கு தமிழரில் கொடி புலிக்கொடி தெரியாதா எனக்கேட்டேன். விட்டால் தலையில் அரைத்து விடுவீர்கள் போல ...சம்பலைத்தான்.

பிழையான புரிதலுக்காக யாழ் களம் சார்பில் உங்களுக்கு காதில் ஒரு முறுக்கு தரப்படும். :icon_idea::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் மாற்றுக்கருத்தியலில் துளிகூட தமிழ் உணர்வு கொண்டவர்கு இசைவாக இல்ல்லையே ஏன் என்று சொல்ல முடியுமா?

“துளி கூட” என்று சொல்லியிருக்கிறீர்கள். உண்மையாக தெரியவில்லையே? அர்ஜூன் எழுதியவற்றை படித்து பார்த்தீர்களா? பெரும்பாலான இலங்கை தமிழர்கள் தனி நாடு தான் தமது பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று நினைக்கிறார்கள். இதற்கு காரணம், தமிழர் தலைவர்கள் மக்களுக்கு வேறு சாத்தியமான தீர்வுகள் பற்றி, தனி நாட்டுக்கு கொடுத்த முக்கியத்துவத்துடன் அறிவுறுத்தவில்லை.

தனி நாடு சிறப்பான ஒரு தீர்வு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது சாத்தியமான தீர்வா என்பது தான் முக்கியான கேள்வி. சாத்தியான தீர்வு என்றாலும் அதற்கு கொடுக்க வேண்டிய விலை எத்தனையாயிரம் உயிர்கள், எத்தனை கோடி முதல் என்பது அடுத்த கேள்வி. ஆக, சாத்தியம் குறைந்த, எல்லையில்லாத உயிர்ப்பலி கேட்கும் இந்த தீர்வுக்கு மாற்றான எந்த தீர்வு பற்றியும், தனி நாட்டுக்கு கொடுத்த அதே அளவு முக்கியத்துவத்துடன் எமது தலைவர்கள் ஆராய்ந்தார்களா என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இன்றைய நிலைக்கு, சாத்தியமற்ற, அளவுக்கதிகமான உயிர்ப்பலி கேட்கும் ஒரு தீர்வில் மட்டும் எமது மக்கள் பற்றுவைத்து செயற்பட்டதும் ஒரு காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

ஜீட் சிங்களத்துடன் நாம் ஒன்றாக வாழ முடியாது என்ற படியால் தானே போராட தொடங்கினோம்.புலிகள் போராட தொடங்கும் முன்னே தமிழனுக்கு பிரச்சனை இருந்தது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.சிங்களவன் கூட எங்களோடு ஒற்றுமையாக வாழ விரும்பினால் இப்ப கூட அவனால் நல்லதொரு தீர்வை தர முடியும்.

சிங்களவர்களுக்கு தீர்வு தேவையில்லை. நமக்கு தான் தீர்வு தேவை. நாம் தான் சாத்தியமான தீர்வை கண்டுபிடித்து சிங்களவர்களுடன் உடன்பாட்டுக்கு வரவேண்டும்.

[இப்ப தான் புலி முற்றாக அழிந்து முடிந்து விட்டதே!] ஆனால் காலம்,காலமாய் எங்களை அடிமையாய் வைத்திருந்து கொஞ்சம்,கொஞ்சமாய் கொண்று கடைசியாய் எங்கள் இனமே இல்லாமல் அழித்து விடுவான்.இது தான் உங்கள் விருப்பமா?

எமது மக்கள் அழிவது நிறுத்தப்பட சாத்தியமான ஒரு தீர்வு தேவை. தனிநாட்டுக்கான போராட்டம் மக்கள் அழிவதை பலமடங்கு அதிகரித்திருக்கிறது.

எங்கள்லிட‌மிருக்கும் வளங்களை கொடுத்து அமெரிக்காவிற்கும்,இந்தியாவிற்கும் அடிமையாய் இருப்பதை விட சிங்களவனோடு சேர்ந்து வாழலாம்.

யாரும் எதையும் எமக்கு இலவசமாக தரப்போவதில்லை. எமக்கு ஒரு தீர்வு வேண்டுமென்றால் அதற்கு தேவையான விலையை நாம் கொடுத்தாக வேண்டும். தனிநாட்டுக்காக எவ்வளவு வளங்களையும், அதற்கு மேலாக ஆயிரம் ஆயிரம் உயிர்களையும் நாம் கொடுக்கவில்லையா?

மற்ற நாடுகள் இவ்வாறாக உரிய விலை கொடுத்து தான் தமது பிரச்சினைகளை தீர்த்திருக்கின்றன. கனிய வளங்களும், எண்ணையும் இல்லாமல் நாடுகள் முன்னேற முடியாதென்று நாம் கருதக்கூடாது. சிங்கப்புர் உலகின் முதல் பத்து பணக்கார நாடுகளுள் ஒன்று. சிங்கப்பு+ரில் இருப்பது மக்களின் அறிவு வளம் மட்டுமே.

நாம் விடுதலை பெற விலையா கொடுக்க விரும்பாத எண்ணை வளத்தையும், கனிய வளத்தையும் சிறிலங்கா அரசு விற்றுத்தான் எமது மக்களை கொல்ல ஆயுதங்களை வாங்கி குவித்தது. நாம் இதே வளங்களை விற்று எமது மக்களுக்கு விடுதலை பெற்றிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது எனது கருத்து மட்டுமே.

புலிகள் மிகப் பெரிய ஒருவரும் நினைக்க முடியாத அளவிற்கு இராணுவ கட்டமைப்பை உருவாக்கியிருந்தார்கள் என்பது சர்வதேசமே வியக்கும் உண்மை.

.ஆனால் ஒரு விடுதலை அமைப்பு என்ற ரீதியில் பார்த்தால் இராணுவக்கட்டைமைப்பு எனது அதன் வெற்றிக்கு இரண்டாம் பட்ச தேவையே.சரியான அரசியல் பார்வையே முதன்மையானது.அதற்கு புலிகள் பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை,தலைவர் அதை விரும்பவும் இல்லை காரணம் நம்பிக்கையீனம்,அவர்கள் முதன்மைபடுத்துபட்டுவிடுவார்களோ என்ற சந்தேகம்.

அய்.ஆர்.ஏ போல் ஒரு இராணுவக்கட்டமைப்பும் ,சின் பெயின் போல் ஒரு அரசியலமைப்பையும் எமது போராட்டவடிவிற்கு அமைய ஏற்படுத்தியிருக்க வேண்டும்.முடிந்த அளவிற்கு உலகநாடுகளெங்கும் அந்த அரசியலமைப்பிற்கு அலுவலகம் அமைத்து எமது போராட்டத்தின் தன்மையை,நியாயத்தை சர்வதேசமயப்படுத்தியிருக்கவேண்டும்.இராஜதந்திரிகள்,அரசியல்வாதிகள்,பத்திரிகையாளர்கள் இவர்களுடன் நேரடிதொடர்பில் இருந்திருக்க வேண்டும்.இவர்கள் உலகின் பார்வையில் எமது போராட்டம் எப்படி பார்க்கப்படுகின்றது என தொடர்ந்து தலைமைக்கு அறிக்கைகள் கொடுத்துக்கொண்டிருந்தால் அதற்கேற்ப தலைமையும் முடிவுகளை எடுப்பது சுலபமாக இருந்திருக்கும்.

புலிகளைசர்வதேசம் வெறுத்ததற்கு முதல் காரணம் கொலை அரசியல்.ஆரம்பம் துரையப்பாவில் இருந்தாலும் பெரிய அமைப்பாக உருவெடுத்தபின்பும் அந்த கொலைஅரசியலில் இருந்து அவர்களால் விடுபடமுடியாமல் போய்விட்டது.இதனால் தான் போராட்டத்திற்கு புறப்பட்ட மற்ற போராளிக்குழுக்கள் அரசுடன் இணைந்ததும்,வெளிநாடுகளுக்கு ஓடியதும்.எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனல் பொது எதிரியை சேர்ந்து எதிர்திருக்க வேண்டும்.இந்த ஏகப்பிரநிதித்துவத்திற்கு இவர்கள் கொடுத்தவிலை மிக அதிகம்.இந்தியாவுடனான ஆரம்பகட்ட பேச்சுவார்தைகளிலும் தங்களுடம் மாத்திரம் பேசவேண்டுமென ஒரே குறியாக இருந்தார்கள்.

மிகுதி பின்னர்

2002 ல் இருந்து கிளிநொச்சியில் அலுவலகம் அமைக்கப்பட்டு உலகில் உள்ள பலர் வந்து கதைத்து தான் போனார்கள். கடைசியில் தான் தெரிந்தது காலை வாரவென.நடுநிலையாளர்களாக வந்த நோர்வே அரசின் போர்நிறுத்த மீறல்களை கண்டிக்காமல் கண்டும் காணாமல் இருந்து விட்டு புலிகளின் போர்நிறுத்த மீறல்களை படம் போடு காட்டியவர்கள் இவர்கள். கடைசியில் போர் நிறுத்தம் இருந்த நிலையில் நோர்வே காரர் மீது ஸெல் விழுந்த போது (மயிரிழையில் தப்பியது வேறு கதை) உணர்ந்து இருக்க வேண்டும். இடையில் அமெரிக்கா தானும் ஓராள் என்று சிவ பூசையில் கரடி புகுந்தது போல் புகுந்து புலிகள் அமெரிக்காவுக்கு வரமுடியாது என கூறியதோடு மட்டுமல்லாமல் அரசுடன் தனிய பேசியது இவர்களின் நடுநிலைமை எந்தளவில் இருந்தது என்பதை சாமானிய மனிதனே அறிந்து இருக்க முடியும்.இவர்களை நம்பி இருந்தால் நோர்வேயினது ஜாசிர் அரபாத்தின் நயவஞ்சக கொலை (மயிரிழையில் கெலிகொப்டரில் இருந்து உயிர் தப்பியது) போல் நடந்து இருக்கும். இப்படியானவர்களை நம்புவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலாகும் என்பதை சாமானிய மக்களே பேசிக்கொள்ளும் போது புலிகள் மட்டும் இவர்களை நம்பி போவார்களா?

பத்திரிகையாளர்கள்,மர்றும் ராஜதந்திரிகள் பேச்சுவார்ந்தை நேரம் வந்து போகவே இலங்கை அரசு அனுமதி அளிக்க மறுத்தது. அந்நேரம் நடுநிலை வகிக்கும் நோர்வே தலையை ஆட்டிதே தவிர (கோயில் மாடு போல்) ஒரு உறுதியான நடுநிலைமையை வகிக்கவில்லை.புலிகளே நேரடியாக பல முறை எரிக் சொல்கைமுடன் சொல்லியும் எல்லாம் சிறிலங்கா அரசு விரும்பிய படியே நடந்தது.

பாலகுமார் அண்ணாவின் ஈரோஸ் இயக்கம், ரெலோவில் சிலர் என புலிகளுடன் இணைந்து போராடினார்கள்.இந்தியாவின் கைப்பொம்மைகள் தான் புலிகளுடன் சேர விரும்பியும் சேரமுடியாமல் திரிசங்கு நிலையில் இருந்தார்கள்.இந்தியாவின் சொல்லைக்கேட்டு (சொந்த முடிவு எடுக்க முடியாமல் தத்தளித்தவர்கள்) புலிகளை அழிக்க ,காட்டிக்கொடுக்க சற்றும் தயங்காமல் இருந்தவர்கள்.புலிகள் இவர்களை மன்னித்தால் தாங்கள் தான் அழிந்திருப்பார்கள்.புலிகளை பிடிக்காவிட்டால் எப்படி அரசுடன் (தமிழ் மக்களின் எதிரியுடன்) சேர முடியும்.இவர்களை எப்படி போராளிகள் என அழைக்க முடியும்.அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களையும், புலிகளையும் அழிக்க துணிந்தவர்களுடன் என்ன பேச்சு வார்ந்தை? இவர்களை புலிகள் உள்வாங்கி மேலும் எதிரிகளை தன்னகத்தே வைத்திருக்க கேணையர்கள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

“துளி கூட” என்று சொல்லியிருக்கிறீர்கள். உண்மையாக தெரியவில்லையே? அர்ஜூன் எழுதியவற்றை படித்து பார்த்தீர்களா? பெரும்பாலான இலங்கை தமிழர்கள் தனி நாடு தான் தமது பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று நினைக்கிறார்கள். இதற்கு காரணம், தமிழர் தலைவர்கள் மக்களுக்கு வேறு சாத்தியமான தீர்வுகள் பற்றி, தனி நாட்டுக்கு கொடுத்த முக்கியத்துவத்துடன் அறிவுறுத்தவில்லை.

தனி நாடு சிறப்பான ஒரு தீர்வு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது சாத்தியமான தீர்வா என்பது தான் முக்கியான கேள்வி. சாத்தியான தீர்வு என்றாலும் அதற்கு கொடுக்க வேண்டிய விலை எத்தனையாயிரம் உயிர்கள், எத்தனை கோடி முதல் என்பது அடுத்த கேள்வி. ஆக, சாத்தியம் குறைந்த, எல்லையில்லாத உயிர்ப்பலி கேட்கும் இந்த தீர்வுக்கு மாற்றான எந்த தீர்வு பற்றியும், தனி நாட்டுக்கு கொடுத்த அதே அளவு முக்கியத்துவத்துடன் எமது தலைவர்கள் ஆராய்ந்தார்களா என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இன்றைய நிலைக்கு, சாத்தியமற்ற, அளவுக்கதிகமான உயிர்ப்பலி கேட்கும் ஒரு தீர்வில் மட்டும் எமது மக்கள் பற்றுவைத்து செயற்பட்டதும் ஒரு காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழீழம் தனிநாடு புலிகளின் கோரிக்கையாக எண்ணிக் கொண்டு நீங்களும் அர்ச்சுன் என்பவரும் கருத்தாடி வருகிறீர்கள்.

ஆனால் வரலாற்றுப் பக்கங்களோ வேறு வித உண்மையைச் சொல்கின்றன.

வரலாற்றில் தனிநாட்டுக்கான கோரிக்கை செல்வநாயகம் ஐயா காலத்தில் முளைத்து அமிர்தலிங்கம் காலத்தில் மக்களிடம் உறுதிமொழி பெறப்பட்டு ஜேஆர் காலத்தில் பாராளுமன்றக் கதிரைகளுக்காக தாரை வார்க்கப்பட்டது. புலிகள் பிறப்பெடுக்க முதலே தனிநாட்டுக்கான கோரிக்கை புறந்துவிட்டது.

சிங்களத்திடம் இருந்து தமிழ் தலைவர்கள் எதிர்பார்த்த எந்தக் குறைந்த பட்ச உரிமையும் அவர்களுக்கு கிடைக்காத நிலையில் தான் யோகேஸ்வரன் 5000 இளைஞர்களைத் தாருங்கள் நான் சிங்களப் படைகளை விரட்டி அடித்து தமிழீழம் அமைக்கிறேன் என்று அறைகூவல் விடுத்தார்.

இதன் பின்னர் தான் சிவக்குமாரன் போன்ற போராளிகள் தோன்றி இறுதியில் கொண்ட இலட்சியத்திற்காக நஞ்சுண்டு மடிந்தார்கள். அந்த வரிசையில் வந்தவர்கள் தான் புலிகள். அவர்களும்..தமிழ் இளைஞர்கள்.. தமிழ் தாய் பெற்ற பிள்ளைகள் தான்.

பின்னர் இந்திரா காந்தியின் தலையீடு காரணமாக இந்தியா தமிழர்களுக்குள் நிரந்தரப் பிரிவினையை உருவாக்க ஒரே இலட்சியத்துக்காக பல குழுக்களை ஆரம்பிக்க இடமளித்தது. ஆனால் அவை அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து தான் நினைத்ததை இலங்கைத் தீவில் நிறைவேற்ற இந்தியா முனைந்தது. இன்றும் அதுதான் நடக்கிறது.

ஆரம்பத்தில் புளொட்டும் பின்னர் புலிகளும் இந்தியாவின் பிடியில் இருந்து விலகிப் போக முற்பட்டாலும் புலிகளால் தான் அது முடிந்தது. இந்தியாவின் நேரடி ஆதரவில்லாமல் புலிகள் 1987 இல் இருந்து இந்தப் போராட்டத்தை நகர்த்தி வந்துள்ளனர். அந்தக் காலத்தில் புலிகள் பலமோடு இந்த வேளைகளில் வந்த பேச்சுக்களின் போது கூட இந்த மாற்றுக் கருத்து ஆயுத தாரிகள் புலிகளோடு இணைந்து தமிழ் மக்களின் தீர்வுக்கு போகவில்லை. மாறாக தமிழ் மக்கள் விரும்பாத தீர்வுகளை எதிரிகள் வழங்கிய ஆயுத பலத்தை பிரயோகித்து எதிரிகளின் நோக்கங்களுக்காக திணிக்க முற்பட்டனர்.

பின்னர் அவை எல்லாம் தோல்வியில் முடிந்து விட்டன. இந்தக் குழுக்கள் தாமும் கொள்கையில் நிலையாக நின்றதில்லை.. மக்களையும் காத்ததில்லை.. மாறாக புலி விரோதம் என்ற அநாவசிய நிலைப்பாட்டை எதிரிகளுக்கு காவடி தூக்கப் போய் எடுத்து இறுதில் புலிகள் உயிர் தியாகம் செய்து கட்டியமைத்த போராட்டத்தையும் சிதைத்து இன்று அந்த இரத்த சகதியில் நின்று கொண்டு ஆயுத அரசியல் செய்கின்றனர்..!

இந்த நிலையில்.. யூட் ஆகிய நீங்களும் அர்ச்சுன் ஆகிய மற்றவரும் தமிழ் மக்களின் தலைவர்கள் என்று எவரை இனங்காண்கிறீர்கள்.. அவர்களால் சிங்களத்திடம் இருந்து தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கக் கூடிய குறைந்த பட்ச தீர்வு தான் என்ன.. இவர்களை சிங்களத்தோடு ஒட்டிக்கொண்டு இந்தியா ஏனோ தானோ என்று நடத்தும் நிலையில் சிங்களத்தோடு பேசி இவர்கள் பெற்றுத்தரக் கூடிய தீர்வு தான் என்ன..??!

கண் முன்னேயே ஆயுதப் போராட்டத்தில் இருந்து தந்திரமாக விலகி இருந்து கொண்ட மலைய மக்களில் அநேகர் இன்றும் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்க முன்னர் இந்த அதே யலங்களில் அதே வறுமைக் கோட்டில் தான் வாழ்கின்றனர். அவர்களுக்கு அவர்களின் தலைவர்கள் சிங்களத்தோடு இணக்க அரசியல் செய்து பெற்றுக் கொடுத்த விடிவு என்ன..??! தாய்ப்பாலில் விசம் கலந்திருப்பதும்.. கருத்தடைகளும் தான்.

இதையே தான் இன்று நீங்கள் குறிப்பிடும் தமிழ் தலைவர்கள் சிங்களத்திடம் இருந்து பெற்றுக் கொடுக்க முடியும். அல்லது ஒரு கோவில் அல்லது ஒரு வாசியசாலை கட்டிக் கொடுக்க முடியும். இதற்காகவா செல்வநாயகம் தனிநாட்டுக் கோரிக்கையை முன்னிறுத்தினார். செல்வநாயகம் ஐயா காலத்தில் இன்றைய நிலையை விட தமிழர்கள் அதிகம் அரசியல் செல்வாக்குப் பெற்றிருந்தும் ஏன் அவர் அப்படி ஒரு கோரிக்கையை முன் வைத்து... தமிழர்களை இனி கடவுள் தான் காக்க வேண்டும் என்றார்..???!

தனிநாட்டுக்கான கோரிக்கை என்றளவில் இருந்த ஒன்று.. இன்று தனிநாடு ஒன்றிருந்தது என்ற அடையாளத்தோடு தமிழர்கள் தனி நாடு கேட்டு 35 வருடங்கள் போராடினார்கள் என்ற வரலாற்றை புலிகளும் மக்களும் தங்கள் உயிர் தியாகங்கள் மூலம் பெற்றுத்தந்துள்ளனர். அதன் பெறுமதி உதாசீனம் செய்யப்பட்டக் கூடிய ஒரு கருத்தியலுக்குரிய தல்ல.

ஆயுதப் போராட்டம் மூலம் வெல்ல முடியாததை ஆனால் ஆயுதப் போராட்டம் மூலம் உயிர்ப்பிக்கப்பட்ட கருத்தியலின் அடிப்படையில் வெல்லப்பட்ட போராட்டங்கள் பல. இந்த வரிசையில் இறுதியில் கொசவாவின் விடுதலை. அங்கும் போர்க்குற்றவாளி.. மனித உரிமை மீறல்கள்.. புதைகுழிகள் தான் விடுதலைக்கும் நேட்டோ தலையீட்டுக்கும் வித்திட்டன.( நேட்டோ தலையீட்டு வேறு காரணங்கள் இருந்தாலும்.. வெளியில் சொல்லப்பட்ட காரணங்கள் இவை. அங்கும் போராளிகள் மீது போர் குற்ற குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் மிலேசவிச்சும்.. அவரின் படைகளுமே அதிகம் போர்க்குற்ற குற்றச்சாட்டு இலக்காகினர்.)

ஏன் நேற்றைய தினம் காஷ்மீருக்கு தனிநாட்டு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று இந்திய ஆளும் கட்சி காங்கிரஸ் எம்பி பேசி இருக்கிறார். இந்திய ஆக்கிரமிப்பில் இருக்க்கும் காஷ்மீர் தனி நாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை.

ஆனால் உங்கள் போன்ற சிலர் ஆயுதப் போராட்டத்தின் மெளனிப்போடு தனி நாட்டு கோரிக்கைகான நியாயத்தையும் ஒருங்கிணைத்து அதனையும் சிங்கள பேரின தேசிய அரசியல் நிகழ்ச்சி திட்டத்துக்கு அமைய மெளனிக்க விளைகிறீர்கள். இதற்கு யாழ் களம் தெரிந்தோ தெரியாமலோ உங்களுக்கு உதவி இருப்பது கவலைக்குரிய விடயம்.

ஆயுதப் போராட்டம் மூலம் வெல்லப்படாத தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டம்.. ஆயுதப் போராட்டம் மூலமே உயிர்ப்புப் பெற்று பின்னர் வேறு வடிவில் விடுதலைக்கு வித்திட்டப்பட்டது. பிரிட்டோரியா அரசின் பலத்தின் முன் தென்னாபிரிக்க காங்கிரஸ் ஒரு துரும்பு. இருந்தும்.. போராட்டம் வெற்றி கொள்ளப்பட்டது. காரணம் மக்களிடம் இருந்த விடுதலை மீதான பற்றுறுதிதான்.

நாம் தனிநாட்டுக் கோரிக்கையை எழுப்ப சிங்களம் தான் முழு முதற்காரணம். அதை செல்வ நாயகம் ஐயா வரைந்துவிட்டு சென்றுள்ளார். புலிகள் அதனை ஆயுதப் போராட்டம் மூலம் உயிர் கொடுத்து உயிர்ப்பித்துள்ளனர். அதற்கு சுருக்கிட்டு சாவு மணி அடிக்க என்று இன்றும்.. தமிழ் மக்களின் நலனில் அக்கறையில்லாது.. சிங்கள பேரின தேசியத்தின் அரசியல் நிகழ்ச்சி திட்டத்துக்கு உதவி நிற்பதன் மூலம் தங்கள் பதவிகளை காத்துக் கொள்ள விளையும் மாற்றுக் கருத்து ஆயுதக் கும்பல்கள்.. விளைவது தான் வேதனையிலும் வேதனை.

40,000 மக்கள் கொல்லப்பட்ட போது ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதவன்.. டக்கிளஸ் தேவானந்தா.. ஆனந்த சங்கரி.. வரதராஜப் பெருமாள் என்று எல்லாரும். அப்படிப்பட்ட தலைமைகளை வைத்துக் கொண்டு தமிழ் மக்கள் தனிநாட்டை அடைவது அவ்வளவு இலகு அல்ல. இந்த தடைகளை புலிகள் ஆயுத வழியில் சரியான நேரத்தில் நீக்கி இருந்தால் ஒருவேளை தனி ஈழம் கிடைத்திருக்கக் கூடும்.

அமெரிக்கா ஒரு காலத்தில் ஆயுதப் புரட்சி மூல விடுதலை அடைந்தது. இன்றைய எமக்கு அதற்கான காலமாக இருந்தது. இருந்தாலும் ஆயுதப் போராட்டம் மூலம் விடுதலை பெற்றவர்கள்.. ஆயுதப் போராட்டங்களை எல்லாம் பயங்கரவாதமாக சித்தரித்ததுதான் எங்களின் இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு காரணம். அதிலும்.. தற்கொலைத் தாக்குதல்களை இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் மதவெறியை நிலைநாட்ட பாவிக்க வெளிக்கிட்டதும் தான் எமக்கு இந்த முடிவு வரக்காரணம்.

புலிகள் எந்த ஒரு நேர்மையான அரசியல் தலைவரையும் கொல்லவும் இல்லை தண்டிக்கவும் இல்லை. அப்படி கொல்லப்பட்டிருந்தால் அவர்கள் சிங்கள இந்திய மற்றும் இதர தமிழ் ஆயுத சன நாயகக் கும்பல்களால் கொல்லப்பட்டு பழி புலிகள் மீது போடப்பட்டதாகவே இருக்கும். இதுதான் வரலாற்று உண்மை. இதை மறைத்துவிட்டு.. இப்போ சாத்தான் வேதம் ஓதுவது தமிழ் மக்களுக்கு இருக்க ஒரு நிம்மதி காணித்துண்டைக் கூட பெற்றுத் தராது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் தனிநாடு புலிகளின் கோரிக்கையாக எண்ணிக் கொண்டு நீங்களும் அர்ச்சுன் என்பவரும் கருத்தாடி வருகிறீர்கள்.

ஈழம் என்ற தனிநாட்டு கோரிக்கை அடங்காத்தமிழர் சுந்தரலிங்கம் அவர்களால் முதன் முதலில் முன்னெடுக்கப்பட்டது. ஆயுதப்போராட்டத்துக்கான பயிற்சிகளும் சுந்தரலிங்கம் அவர்களாலேயே முதன்முதலில் வழங்கப்பட்டது. 1958 தமிழருக்கு எதிரான கலவரத்தின் போது வவுனியா எல்லையில் வைத்து சிங்கள காடையரை விரட்டியடித்த பெருமை சுந்தரலிங்கம் அவர்களால் பயிற்றப்பட்ட போராளிகளுடையதாகும்.

இந்த நிலையில்.. யூட் ஆகிய நீங்களும் அர்ச்சுன் ஆகிய மற்றவரும் தமிழ் மக்களின் தலைவர்கள் என்று எவரை இனங்காண்கிறீர்கள்..

இன்று ஈழத்தமிழரின் தலைவர்களாக கருதப்படக்கூடியவர்கள்:

  • நாடு கடந்த அரசின் பிரதமர் ருத்திர குமாரன் அவர்கள்.
  • உலகத் தமிழர் பேரவை தலைவர் இம்மானுவல் அடிகளார்.
  • மறைவாக இருக்கும் விடுதலைப்புலிகளின் தலைமை.

prabaanna_ruthrakumaran.jpgfr_s_j_emmanuel_71495_200.jpg

அவர்களால் சிங்களத்திடம் இருந்து தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கக் கூடிய குறைந்த பட்ச தீர்வு தான் என்ன..

நீங்கள் சிங்களம் என்று குறிப்பிடுவதை நாம் இங்கு விளக்கமாக பார்க்க வேண்டியிருக்கிறது. பின்வரும் “சிங்களத்தோடு” நாம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கலாம்.

  • பிரையன் செனவிரத்தின
  • விக்கிரமபாகு கருணாரத்தின
  • ஜெயலத் ஜெயவர்த்தன

இவர்களை சிங்களத்தோடு ஒட்டிக்கொண்டு இந்தியா ஏனோ தானோ என்று நடத்தும் நிலையில் சிங்களத்தோடு பேசி இவர்கள் பெற்றுத்தரக் கூடிய தீர்வு தான் என்ன..??!

தனிநாட்டுக்கு மாற்றீடான திட்டம் என்றவுடனேயே “சிங்களத்துடன் பேச்சுவார்த்தை” என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாமா? வேறு மாற்றுத்திட்டங்களே கிடையாதா?

சீனாவுடன் ஜனநாயக நாடான ஹொங்கொங் எப்படி இணைந்து கொண்டது தெரியுமா? இன்றும் சீனர்கள் ஹொங்கொங் செல்ல பிரத்தியேக விசா பெறவேண்டும் என்று தொpயுமா?

hong-kong2.jpg

அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் தமது சொந்த நாடுகளை வைத்திருக்கிறார்கள் என்பதை அறிவீர்களா? அந்த நாடுகளுள் பெருமளவிலான அமெரிக்க சட்டங்கள் செல்லாது என்பதை அறிவீர்களா? எனது இருப்பிடத்தில் இருந்து கூப்பிடு தொலைவில் இவ்வாறான செவ்விந்திய நாடு ஒன்று இருக்கிறது. ஈழத்தமிழர் தலைவர்கள் இவ்வாறான அமைப்பு பற்றி சிந்தித்து பார்த்திருக்கலாம் அல்லவா?

native-american-dancers-perform-at-dedication-of-new-native-american-village-at-this-is-the-place-heritage-park.jpg

சரி, இவை நடைமுறை சாத்தியமா என்று கேட்பீர்கள். தனிநாட்டிலும் பார்க்க குறைந்த உயிர்ச் செலவில் இந்த அமைப்புகள் சாத்தியமா என்று ஆராயக்கூடாதா?

யார் இந்த தீர்வை பெற உதவுவார்கள் என்று கேட்பீர்கள். இசுரேல் என்ற நாடு உருவாக அமெரிக்கா ஏன் உதவியது தெரியுமா? இவ்வளவுக்கும், கிறிஸ்தவர்கள் வெறுக்கும் இனம் யுத இனமாகும். காரணம் யுதர்கள் கிறிஸ்துவை கொன்றவர்கள் என்று கிறிஸ்தவர்களுக்கு குழந்தைப்பருவத்தில் இருந்தே சொல்லிக் கொடுக்கப்படுவதாகும்.

இரண்டாம் உலக போரின் போது அகதிகளாக ஓடி வந்த யுதர்களுக்கு அமெரிக்கா புகலிடம் அளித்தது. அதற்கு நன்றியாக அவர்கள் அணுக்குண்டு செய்து கொடுத்தார்கள். அமெரிக்கா யுதர்கள் கேட்ட இசுரேலை பிரித்து கொடுத்தது.

18574-bigthumbnail.jpgeinstein.jpg

தமக்கு புகலிடம் தந்த கனடா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஈழத்தமிழர்கள் எதை கொடுத்தார்கள் ஆதரவு கேட்க?

இனியும் காலம் போய்விடவில்லை. இன்று அமெரிக்காவுக்கு என்ன தேவை? அணுக்குண்டாலும் செய்ய முடியாதது என்ன? பின் லாடனை அணுக் குண்டு பிடித்து கொடுக்குமா?

பின் லாடனை பிடிப்பதற்கு அமெரிக்க சட்டப்படி தனியார் இராணுவ நிறுவனங்கள் அமைக்கப்பட்டு அவை முயற்சிக்க முடியும். விடுதலைப்புலிகள் இவ்வாறான இராணுவ அமைப்பொன்றை நிறுவி அமெரிக்காவுக்கு உதவ முன்வந்தால் அமெரிக்கா அதனை கருத்தில் எடுத்து நட்புறவை ஏற்படுத்த விரும்பலாம் அல்லவா? பின் லாடனையோ, அல்லது அவர்களுடன் சம்பந்தப்பட்டவர்களையோ பிடித்து கொடுத்தால் அமெரிக்கா இசுரேலை உருவாக்கியது போல தமிழருக்கும் ஒரு தீர்வுக்கு உதவலாம் அல்லவா? தமிழர் தலைவர்கள் (ருத்திரா, இம்மானுவல் அடிகளார், விடுதலைப்புலிகளின் தலைமை) அமெரிக்காவுடன் இது பற்றி பேசக்கூடாதா?

osama-bin-laden.jpeg

ஏன் இன்னமும் ஈழத்தமிழர்கள் தமிழ்நாடு தேசியவாதிகளுடன் இணைந்து செயற்படுகிறார்கள்? இந்தியா ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயற்படுவதற்கு இது முக்கியமான காரணம் அல்லவா? இந்திய தேசியவாதிகளுடன் பேசி, அவர்களின் உண்மையான தேவையை அறிந்து அதனை பாதிக்காத வகையில் ஈழத்தமிழருக்கான தீர்வு பற்றி தமிழர் தலைவர்கள் (ருத்திரா, இம்மானுவல் அடிகளார், விடுதலைப்புலிகளின் தலைமை) சிந்திக்க கூடாதா?

ஐயன்ஸ்ரைன் சொன்ன ஒரு கருத்தை இவ்விடத்தில் சொல்வது பொருத்தமானது:

"திரும்ப திரும்ப ஒரே போக்கில் செயற்பட்டுக்கொண்டு வித்தியாசமான முடிவை எதிர்ப்பார்ப்பது பைத்தியக்காரத்தனமாகும்.”

Edited by Jude

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

“துளி கூட” என்று சொல்லியிருக்கிறீர்கள். உண்மையாக தெரியவில்லையே? அர்ஜூன் எழுதியவற்றை படித்து பார்த்தீர்களா? பெரும்பாலான இலங்கை தமிழர்கள் தனி நாடு தான் தமது பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று நினைக்கிறார்கள். இதற்கு காரணம், தமிழர் தலைவர்கள் மக்களுக்கு வேறு சாத்தியமான தீர்வுகள் பற்றி, தனி நாட்டுக்கு கொடுத்த முக்கியத்துவத்துடன் அறிவுறுத்தவில்லை.

தனி நாடு சிறப்பான ஒரு தீர்வு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது சாத்தியமான தீர்வா என்பது தான் முக்கியான கேள்வி. சாத்தியான தீர்வு என்றாலும் அதற்கு கொடுக்க வேண்டிய விலை எத்தனையாயிரம் உயிர்கள், எத்தனை கோடி முதல் என்பது அடுத்த கேள்வி. ஆக, சாத்தியம் குறைந்த, எல்லையில்லாத உயிர்ப்பலி கேட்கும் இந்த தீர்வுக்கு மாற்றான எந்த தீர்வு பற்றியும், தனி நாட்டுக்கு கொடுத்த அதே அளவு முக்கியத்துவத்துடன் எமது தலைவர்கள் ஆராய்ந்தார்களா என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இன்றைய நிலைக்கு, சாத்தியமற்ற, அளவுக்கதிகமான உயிர்ப்பலி கேட்கும் ஒரு தீர்வில் மட்டும் எமது மக்கள் பற்றுவைத்து செயற்பட்டதும் ஒரு காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

"கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் மலை ஏறி வைகுண்டம் போன கதை" என்ற ஒன்று எமது நடைமுறைப் பேச்சுவழக்கில் உள்ளது.

நான் யூட்டின் பல பதிவுகளைப் பார்த்திருக்கின்றேன் அவை ஒவ்வொன்றுமே என் அறிவுக்கு சரி என்று போற்றப்படுபவைகளின் மேல் வீழ்ந்த கற்களாகவே உணர்ந்திருக்கின்றேன்.

இங்கே கூரை ஏறல் என்பது என் அறிவுக்கு எட்டிய இடங்கள் என்பதே பொருந்தும்.

நீங்கள் அனைவருக்குமாக இட்ட மொத்த பதிவுகளுக்குமாயே பதில் இடுகின்றேன்!

அமெரிக்காவுக்கு யூதர்கள் அணுகுண்டைக் கொடுத்தார்கள் எனவே நாம் ஐதரசன் குண்டையாவது கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவசியமானதல்ல.

குடியேற்ற யூதர்களின் சனத்தொகைப் பலம் அமெரிக்கா, ஐரோப்பா எங்கும் பொருளாதாரத்தால், வாக்குகளால் அவர்கள் அரசியலுக்குள் செல்வாக்கு செலுத்தத் துவங்கியமையே முக்கிய காரணம். இரண்டாவது அவர்கள் யேசுவின் இனம் என்பதால் அந்த இனமும் இறிஸ்தவர்களை அன்போடு நோக்கச் செய்தது. இவையே அவர்கள் தம் நாட்டை நிறுவுவதற்கு அடித்தளமானது.

மேலும் இலங்கை அரசியல் தன்மையினை மேற்கு நாடுகளுடன் ஒப்பீடு செய்வது துளியும் பொருந்தாத விடயம்.

அங்கே தமிழனின் அதிக இரத்தம் தோய்ந்த வாளுக்குத்தான் அதிகாரப் பதவி கிடைக்கும் வகையில் தோற்றுவிக்கப்பட்ட அரசியல்.

ஒட்டு மொத்த தமிழர்களின் அழிவினூடுதான் புலி அழிக்கப்பட முடியும் என்று அந்த காரியத்திற்கு பொறுப்பெடுத்தவன் சிங்கள மக்களிடம் அநுமதி தருவீர்களா என்றால் 90 விழுக்காடு ஆம் என்றே சொல்லிக் கொள்வார்கள், இந்த எனது கருத்தை நிரூபிக்க ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம், சிலவற்றைச் சொல்கின்றேன். மிகப் பரிதாபகரமாக பலதடவைகள் அப்பாவிகள் கொல்லப்படும் போது சிங்கள் ஊடகங்கள் தெரிந்தே அவற்றை புலியாக்கி மகிழ்ந்தார்கள். இவை சிங்களவர்களுக்கு நிகழ்ந்திருந்தால் பொறுத்துக் கொண்டிருப்பார்களா?

முள்ளிவாய்க்கால் அவலம் எவையும் மூச்சு விட்டார்களா? தங்கள் தேசத்து மிருகங்களின் உரைமைக்காக போராடுகின்றவர்கள் மிருக்கங்கள் கொல்லப்படுவதை விரும்பாதவர்கள் எம்மினத்தின் படுகொலைகளை விரும்பி இருக்கின்றார்களே! இவை மக்களின் பிழையாக இருந்தால் கூட திருந்த இடம் உண்டு ஆனால் இந்தக் குறை திருத்த முடியாத இடத்தில் இருக்கின்றது. அரசியல் அதிகாரம் என்ற இரதத்தை வெற்றியை நோக்கி இழுப்பதற்கு இனத்துவேசம் என்ற பிசாசைத்தான் நம்பி இருக்கின்றது சிங்களம். இந்தப் பிசாசுகளின் கைவண்ணம்தான் தொடர்ந்து வந்த தமிழினப் படுகொலைகள்.

தமிழ் நாட்டில் பார்ப்பான் துவேசம் எப்படி திமுக வாக்கு வங்கியின் செலாவணி அகின்றதோ அப்படியே ஆன ஒன்று,

புலிகளை வெறுப்பது என்பதை தமிழ் உணர்வை வெறுப்பது என்று கொள்ளலாமா? இல்லைத்தான் ஆனால் தமிழ் உணர்வை வெறுப்பவன் கட்டாயம் புலிகளையும் வெறுப்பான் ஆனால் அதற்கான காரணப் பழியை புலிகளின் தலையில் சுமத்திவிடுவான் அல்லவா?

கூரை ஏறுகின்ற வரை வலி உள்ள எனக்கே றாயன்கூல் சிங்களத்தின் கூலி எனத் தெரிந்தது!

தனி நாடு சிறப்பான ஒரு தீர்வு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது சாத்தியமான தீர்வா என்பது தான் முக்கியான கேள்வி. சாத்தியான தீர்வு என்றாலும் அதற்கு கொடுக்க வேண்டிய விலை எத்தனையாயிரம் உயிர்கள், எத்தனை கோடி முதல் என்பது அடுத்த கேள்வி. ஆக, சாத்தியம் குறைந்த, எல்லையில்லாத உயிர்ப்பலி கேட்கும் இந்த தீர்வுக்கு மாற்றான எந்த தீர்வு பற்றியும், தனி நாட்டுக்கு கொடுத்த அதே அளவு முக்கியத்துவத்துடன் எமது தலைவர்கள் ஆராய்ந்தார்களா என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இன்றைய நிலைக்கு, சாத்தியமற்ற, அளவுக்கதிகமான உயிர்ப்பலி கேட்கும் ஒரு தீர்வில் மட்டும் எமது மக்கள் பற்றுவைத்து செயற்பட்டதும் ஒரு காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தனி நாட்டுக்கான சாத்தியத்தை புறநிலைச் சக்திகளே தீர்மானிக்கும். அகநிலையில் சாத்தியமில்லை.

1) அகநிலையில், இலங்கையில் தமிழர்களுக்கு வடகிழக்கு பூர்வீக பூமியாக இருந்தபோதும் தமிழர்கள் தமது பூர்வீக பூமியை விட்டு சிங்களவர்களின் இடங்களில் பெருளாதார ஆதராத்துடன் பெருமளவில் வாழ்கின்றனர். மலயக தமிழர்கள் மற்றும் தென்னிலங்கையில் வாழும் தமிழர்கள்.

2) தற்போது தனிநாடு என்ற கொள்கை சாரந்த தமிழ்த்தேசிவாதம் இஸ்லாமியத்தமிழ் மக்களுக்கு உடன்பாடற்றது. இஸ்லாமியத்தமிழர்கள் எண்ணிக்கை மிகப் பெரியது.

தனிநாட்டுக்கான சாத்தியத்தின் முன்னால் இந்த இரண்டு கூறும் மிகப் பெரிய கேள்விக்குறிகள்.

3)புலம்பெயர் தமிழர்கள் தனிநாடு தேசியவாதம் குறித்து பற்றும் உணர்ச்சியும் கொண்டிருப்பினும் அவர்கள் பூர்வீக நிலங்களில் இருந்து பொருளாதரா ரீதியில் விடுபட்டவர்கள். இவர்களின் தனிநாட்டுக்கான முயற்ச்சி வலுவற்றது.

4) ஒரு நாட்டை ஆழும் அளவுக்கு இந்த இனம் நாகரீகம் அடைந்ததில்லை. பண்பட்ட சமூக ஆழுமை அற்ற இனம். தனிநாடு கூட குரங்கின் கையில் பூமாலையாக அற்தமற்றதாக அமைந்துவிடவே அதிக சாத்தியக் கூறுகள் இருக்கின்றது. உதாரணமாக தனிநாடு என்ற கொள்கையும் அது சார்ந்த தேசியவாத எழுச்சியும் எமக்குள் எத்தனை மேதல்களை மதப் பிளவுகளை உயிர்ப்பலிகளை பிரதேசவாத பிளவுகளை வர்க்க ஒடுக்குமுறையை புதிய பரிணாமத்தில் தோற்றுவித்தது !! ஒப்பீட்டளவில் தேசியவாத எழுச்சிக்குப் முன்னரான இனச் சிதைவு எழுச்சிக்குப் பின்னரான இனச்சிதைவு என்று ஆராய்ந்தால் பின்னரான இனச்சிதைவே பல பத்து மடங்கு அதிகமாக காணப்படுகின்றது.

புறநிலையில், சர்வதேச நாடுகளின் பாதுகாப்பு பொருளாதரப்போட்டிகள் அடிப்படையில் தேவைப்படின் சம்மந்தப்பட்ட நாடுகளின் நலன்சார்ந்து தனிநாடு அமைவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றது. ஆனால் அவ்வாறான சாத்தியக் கூறுகள் நடைமுறைக்கு வருவதற்கான இன ஒற்றுமையோ தளமோ தமிழர்களிடம் இல்லை. ஆகவே சிங்களத்துடன் முடிந்தவரை புறநிலைச்சக்திகள் அனுசரித்தே செல்லவே முற்படும்.

பூர்வீக நிலங்களில் தமது பொருளாதார ஆதாரத்தை கொண்டுள்ள மக்களின் கைகளில் தமிழ்த்தேசியவாதம் முதலில் எழுச்சிபெறவேண்டும்.அது விரிவாக்கமடையவேண்டும். தற்போது தேசியவாதம் என்றபோர்வையில் இருப்பது மையவாதம். இது தமிழர்களை ஒடுக்கும் என்னுமொரு ஒடுக்குமுறைக் கருவி. நேற்று இஸ்லாமியத் தமிழர்களையும் இன்று வன்னி வறிய மக்களையும் பலியாக்கிய சிந்தனை முறை. இந்தச் சிந்தனை முறை ஒருபோதும் மக்களை இனமாக ஐக்கியப்பட விடாது. மதவாரியாகவும் மாற்றுக் கருத்து துரோகியாகவும் பிரதேசவாரியாகவும் மக்களை பிளந்துகொண்டே இருக்கும். எந்த வித அனுசரிப்புக்கும் இந்தச் சிந்தனை முறையில் இடமில்லை. இவைகளை நிராகரித்து தாயக மக்களை பலப்படுத்துவதிலும் மக்கள் ஐக்கியமாவதற்கு துணை நிற்பதிலும் பங்களிப்பதன் ஊடாக தேசியவாதம் என்ற போர்வையில் இருக்கும் மையவாதத்தை தோற்கடிப்பதே பிரதானமானது. அதன் பிறகே எந்த ஒரு பாதையிலும் பயணிக்க முடியும்.

வாதங்கள் எக்கச்சக்கமாய் உள்ள வாதமாய் இருக்கின்றது உங்கட வாதம்!

பொருளாதார பலத்தில் மூப்பாய் உள்ள ஒரு நிறுவனம் அதற்கு இளபப்மாய் உள்ளதை ஒழிப்பதற்கான வேலை மிக இலகுவானாது. ஆனால் இளைத்தது அதை மிஞ்ச மிக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும் ஏன் என்றால் தனக்கும் மேலால வலி யை எதிர்த்து போராடவும் வேண்டும்!

இதை இப்படியும் சொல்லலாம் வெறும் தண்ணீருக்குள் நின்று படகில் நிற்பவனுடன் போர் புரிவதைப் போன்றது.

படகில் நிற்பவனுக்கும் படகில் நிற்பவன் பலத்தில் குறைவான நிலையில் நின்றாலும் அவனுடைய எதிர்ப்பு பெரிதானது. இந்த இரண்டு அடிப்படையும் கருத்தில் எடுக்காது படகில் நிற்பவனின் வலி மிக அதிகமானது என்று சொல்லி வெறும் தண்ணீரில் எதிர்த்து போர்புரிபவனை மிரட்டுவது போன்றது சுகனின் கருத்து. கிட்டத்தட்ட பழைய சமாதானத்தைப் போன்றே!

எம்முடைய குறைபாடுகளாக தாங்கள் சொல்லிக் கொள்கின்ற அனைத்துமே எதிரியின் பணபலத்துக்கும், அதிகாரபலத்துக்கும் கையாலாகாக் காரியங்கள் இல்லை. எம்முடைய ஒற்றுமையை, நம்பிக்கை உணர்வை கூறு போடுகின்ற சதிமுயற்சியை சிங்களம் எப்போதுமே செய்து கொண்டே இருக்கும். இதன் சேதாரங்களுக்கான பழியை எமது தலைமீதே போட இவர்கள் கூலிகள் முயற்சியும் செய்வார்கள். இது ஒரு கல்லில் இரண்டு மாங்காய் போன்ற வித்தையும் கூட!

  • கருத்துக்கள உறவுகள்

இது எனது கருத்து மட்டுமே.

புலிகள் மிகப் பெரிய ஒருவரும் நினைக்க முடியாத அளவிற்கு இராணுவ கட்டமைப்பை உருவாக்கியிருந்தார்கள் என்பது சர்வதேசமே வியக்கும் உண்மை.

.ஆனால் ஒரு விடுதலை அமைப்பு என்ற ரீதியில் பார்த்தால் இராணுவக்கட்டைமைப்பு எனது அதன் வெற்றிக்கு இரண்டாம் பட்ச தேவையே.சரியான அரசியல் பார்வையே முதன்மையானது.அதற்கு புலிகள் பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை,தலைவர் அதை விரும்பவும் இல்லை காரணம் நம்பிக்கையீனம்,அவர்கள் முதன்மைபடுத்துபட்டுவிடுவார்களோ என்ற சந்தேகம்.

அய்.ஆர்.ஏ போல் ஒரு இராணுவக்கட்டமைப்பும் ,சின் பெயின் போல் ஒரு அரசியலமைப்பையும் எமது போராட்டவடிவிற்கு அமைய ஏற்படுத்தியிருக்க வேண்டும்.முடிந்த அளவிற்கு உலகநாடுகளெங்கும் அந்த அரசியலமைப்பிற்கு அலுவலகம் அமைத்து எமது போராட்டத்தின் தன்மையை,நியாயத்தை சர்வதேசமயப்படுத்தியிருக்கவேண்டும்.இராஜதந்திரிகள்,அரசியல்வாதிகள்,பத்திரிகையாளர்கள் இவர்களுடன் நேரடிதொடர்பில் இருந்திருக்க வேண்டும்.இவர்கள் உலகின் பார்வையில் எமது போராட்டம் எப்படி பார்க்கப்படுகின்றது என தொடர்ந்து தலைமைக்கு அறிக்கைகள் கொடுத்துக்கொண்டிருந்தால் அதற்கேற்ப தலைமையும் முடிவுகளை எடுப்பது சுலபமாக இருந்திருக்கும்.

புலிகளைசர்வதேசம் வெறுத்ததற்கு முதல் காரணம் கொலை அரசியல்.ஆரம்பம் துரையப்பாவில் இருந்தாலும் பெரிய அமைப்பாக உருவெடுத்தபின்பும் அந்த கொலைஅரசியலில் இருந்து அவர்களால் விடுபடமுடியாமல் போய்விட்டது.இதனால் தான் போராட்டத்திற்கு புறப்பட்ட மற்ற போராளிக்குழுக்கள் அரசுடன் இணைந்ததும்,வெளிநாடுகளுக்கு ஓடியதும்.எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனல் பொது எதிரியை சேர்ந்து எதிர்திருக்க வேண்டும்.இந்த ஏகப்பிரநிதித்துவத்திற்கு இவர்கள் கொடுத்தவிலை மிக அதிகம்.இந்தியாவுடனான ஆரம்பகட்ட பேச்சுவார்தைகளிலும் தங்களுடம் மாத்திரம் பேசவேண்டுமென ஒரே குறியாக இருந்தார்கள்.

மிகுதி பின்னர்

தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா அரசியல் ரீதியாக எவ் வகையில் புலிகள் பின் தங்கி உள்ளார்கள்?...நூனாவிலான் எழுதிய மாதிரி சமாதான காலத்தில் பேச்சு வார்த்தைக்கு புலிகள் முன் உரிமை கொடுத்தார்கள் தானே! ஆனால் அப்படிப் கொடுத்தும் என்ன பயன்? சமாதான காலம் என்டு ஒன்டு வந்த படியால் தான் புலிகள் அழிய நேரிட்டது...நீங்கள் முதலில் எழுதியது மாதிரி புலிகள் இரானுவ கட்டமைப்பை முதன்மையாக கொண்டே போராட தொடங்கினார்கள் ஆனால் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின் அவர்கள் முற்றாக பேச்சு வார்த்தை மூலம் தான் ஒர் முடிவுக்கு வர முடியும் என நம்பி பேச்சு வார்த்தையை ஆரம்பித்து அதன் மூலம் அழிந்தார்கள் என்பது கருத்து.சமாதான காலம் என்டு ஒன்டு வராமல் இருந்திருந்தால் அவர்கள் தம்மை மேலும் பலப்படுத்தி இருப்பார்கள்.

துரையப்பா தொடங்கி பலரை புலிகள் அழிக்க காரணம் புலிகள் அவர்களை அழிக்கா விட்டால் அவர்கள் புலிகளை அழித்திருப்பார்கள்...மாற்றுக் கருத்துக்காரர் புலிகள் மேல் உள்ள கோபத்தால் புலம் பெயர் நாட்டில் இருந்து கொண்டு ஒன்டை பத்தாக்கி சொல்லியது ...அரசியல் தஞ்சம் கோரிய மக்கள் புலிகளையும் குற்றம் சாட்டியது போன்றனவாகும்....ஏன் தனிநாடு கேட்டு போராடிய மற்ற நாடுகளில் அரசியல் படுகொலையே இடம் பெறவில்லையா என்ன?

ஆரம்பத்தில் நான் சொன்னதுபோல 90 பிறகு பெரும்பாலான ஊடகங்கள் புலிசார்பாக சொன்னவைகளை மாத்திரமே பலரும் வாசித்ததால் அவைதான் உண்மையென்று ஆகிவிட்டது.புலி விடும் பிழைகளை சொல்ல முயற்சித்தவர்களை துரோகிகள்,அரச கைகூலிகள் ,அதைவிட கீழ்த்தரமாகவும் விமர்சித்து தனிமைப்படுத்திவிட்டார்கள்..ஒரு சிலர் அப்படியாக இருந்திருக்கலாம் ஆனால் தமிழனின் விடிவிற்காய் விமர்சனம் வைத்த எல்லோரையும் அந்த பட்டியலில் இட்டுவிட்டார்கள்.

மற்ற இயக்கங்களின் செயற்பாடுகள் ஓரளவிற்கு 87 களில் முடிவடைந்துவிட்டன.பின்னர் சும்மா பேருக்கு இருந்தனவே ஒழிய அவர்களால் ஒன்றையும் செய்திருக்கமுடியாது.இருந்தும் மாற்று இயக்க்ங்களில் இருந்து விலகி இருந்தவர்களை கூட புலிகள் விடவில்லை.பெண்கள் உட்பட.இதில் கவிஞர் செல்வியும் அடக்கம்.ஓரிருவர் புலியில் சேர்ந்த்தும் இருந்தார்கள்.

ஆரம்பத்தில் சிறையுடைப்பால் வந்த நித்தியானந்தன்,நிர்மலா இவர்களையெல்லாம் வைத்து ஒரு அரசியல் பிரச்சாரத்திலே இறங்கியிருக்கலாம்.அவர்கள் கூட சுத்த இராணுவ கண்ணோட்டமான இயக்கம் என விமர்சனத்துடன் தான் வெளியேறினார்கள்.

ஜே.ஆர்-ரஜீவ் இன் இலங்கை இந்திய ஒப்பந்தம் கூட கையெழுத்தாவதற்கு முதல் அனைது இயக்கங்களுடனும் ரா இது பற்றி கதைத்திருந்தது.டெல்கி வந்த பிரபாகரன் அசோகா கொட்டேலில் இருக்கும் போது மற்ற இயக்கங்களும்(அமிர் உட்பட) வேறொரு கொட்டேலில் இருப்பது தெரியாது.அது தெரியவந்ததும் பிரபா ஒரேயடியாக வடக்கு கிழக்கை இணைத்த மாகாணசபையை தற்காலிகமாக புலிகளின் பொறுப்பில் மட்டும் விட கேட்டார் அதற்கு ரோ மறுத்துவிட்டது.அதனால் தான் முரண்டுபட்டு கையெழுத்திடாமல் இருந்து பின்னர் ரோ வின் அழுத்தத்தால் கையெழுத்திட்டு நாடு திருமினார்.

பின்னர் இலங்கை வந்து புலி,ஈ.பீ.ஆர்,எல்,எப்,கூட்டணி சேர்ந்த ஒரு மாகணசபை அமையவும் அதன் தலைவராக 3 பெயர்களை தரச் சொல்லி ஜே ஆர் கேட்டிருந்தார் அதில் ஒருவரை தான் தலைவராக நியமனம் செய்வதாக,புலிகள் 3 பெயர்களி கொடுத்தார்கள்.சிவஞானம்,பத்மநாதன்,இன்னுமொருவர். இதில் ஜே ஆர் சிவஞானத்தை தலைவராக தெரிவு செய்தார் புலிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தார்கள்.நீங்கள் தந்த பெயரிலிருந்துதானே தெரிவு செய்தேன் என ஜே ஆர் பிடிவாதமாக நின்றார்.புலிகல் இல்லை பத்மநாதனைதலைவராகவேணுமென நின்றதில் கடைசியில் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது

இன்று மேற்கு நாடுகள் உட்பட இந்தியாவும் புலிகளை ஏன் உள்வாங்கவில்லை என்றால் அது தன்னுடைய நலனை மட்டும் புலிகளை சுமக்க வைக்க்கும் திட்டம் மட்டுமே அவைகளிடம் இருந்தது. அதற்கு புலிகள் தம் அழிவே விலையானாலும் அந்த முயற்சியை நிராகரிக்கும் நிலையில் இருந்தமைதான்.

இங்கே புலிகளின் ஒழுக்கம் பிடிகாமலே இந்தியா புலிகளை வெறுத்ததாக காட்டுவதை போன்று இருக்கின்றது உங்கள் முயற்சி!

ஈழத்தவர்களின் மொத்த அழிவில் புலிகளை அழித்தொழிக்கும் வெறியை இந்தியா கொண்டிருந்தது கண்கூடு. இந்த உண்மைக்கும் பின்பும் புலிகள் இந்தியாவை அணைக்கத்தவறிய நிகழ்சியினால்த்தான் இப்படி என்று வியாக்கியானம் செய்வது அறிவீனமா? இல்லை வேறு எதுவுமா?

நான் நடந்தவற்றை எழுதுகின்றேன்.

நீர் மீண்டும் உங்களுக்கு புலிகளின் ஆய்வாளார்களால் சொல்லப்பட்ட புனைவுகளை நம்பி எழுதுகின்றீர்.

இன்றுவரை தமிழ்பெற்றோர் தமது பிள்ளை படிக்காவிட்டல் சேர்ந்து திரியும் நண்பர்களில் தான் குற்றம் சொல்வார்கள்.அதே கதை தான் இங்கும்.

உலக அரசியல் தெரியாதென்பதுதான் உண்மை.

விலை போகவில்லை என்பது விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பது.

உதாரணமாக, ஜே ஆர் வடமராட்சி அடிக்கத்தொடங்க இந்தியா நிப்பாட்ட சொல்ல கேட்காத ஜே ஆருக்கு விமானம் அனுப்பி சாப்பாடு போட்டு அடுத்தது என்ன என இந்தியா சமிக்கை காட்ட ஒப்பந்தத்திற்கு பயந்து வந்த ஜே,ஆர்

நேவிக்கரனால் ராஜீவிற்கு ஒன்று கொடுத்தார்,அதைவிட இந்து ராமுடனான நேர்கணலில் எனக்கு இருக்கும் அரசியல் அனுபவம் என்று தான் அரசியலுக்கு வந்தாபிறகு தான் ராஜீவ் பிறந்தார் என்றார்.

கடைசியாக இந்தியாவிற்கும் புலிக்கும் இடையில் மோதலை உண்டாக்கினார்.

இன்று புலியால் வென்ற மகிந்த புலியை அழித்தார் .அதுதான் மகிந்த சிந்தனை.அதை என்னவெண்ரு சோதித்து பார்த்த புலிகளுக்கு கிடைத்த பரிசு.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு."தெரிந்த பிசாசு தெரியாத பிசாசிலும் நல்லது" அதை ஏன் புலிகள் ரனில்,மகிந்தா விடயத்தில் பாவிக்கவில்லை

அடிபட தோதான ஆளை தேர்ந்தெடுத்தார்கள்.

கடைசி ஏதாவது ஒரு சிறிய நாடாவது புலிகளை ஆதரித்ததா? அல்லது ஒரு அங்கீகாரம் கொடுத்து தனது நாட்டில் இருந்து அரசியல் செய்யவிட்டதா?

25 வருடமாக என்ன செய்தார்கள்.சிறுவயதில் ஞானப்பழக்கதை படிப்பித்தது என்னத்திற்கு?தேவை வரும் போது பாவிப்பதற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலாவும்,நித்தியானந்தனும் இயக்கத்தை விட்டுப் பிரிந்ததிற்கு வேற பல காரணம் உண்டு என நான் கேள்விப்பட்டேன்...[புலிகள் அடேலை முன் நிலைப்படுத்தியது],இவர்கள் இருவரும் இயக்கத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் பார்த்திருப்பார்கள் நல்ல காலம் அப்படி நடந்திருந்தால் இயக்கம் எப்பவோ அழிந்திருக்கும்...செல்லியை புலிகள் தான் கொலை செய்தார்கள் என உங்களால் நிச்சயமாய் கூற முடியுமா அண்ணா?...செல்வியை செல்வி சார்ந்த இயக்கமே கொலை செய்து விட்டு பழியை புலிகள் மீது போட்டதாக கேள்விப்பட்டேன்.புலிகள் கடுமையாக போராடின படியால் தான் இலங்கை,இந்தியாவும் சேர்ந்து புலிகளுடன் ஓப்பந்தம் செய்ய வந்தது...அதில் மற்றவர்களுக்கு[அமிர் உட்பட]மாக்ண சபையில் பங்கு கேட்க என்ன அருகதை அந் நேரம் இருந்தது?..

சீ.டீ.பீ,சீ யில் பரபரப்பு ஆசிரியர்" ரிசியின் " நேர்காணலை ஒருமுறை கேட்கவும்.

குருசேவின் "தாயகம்" படிக்கவும்.வேறு விளக்கங்கள் தேவை இல்லை.

சீ.டீ.பீ,சீ யில் பரபரப்பு ஆசிரியர்" ரிசியின் " நேர்காணலை ஒருமுறை கேட்கவும்.

குருசேவின் "தாயகம்" படிக்கவும்.வேறு விளக்கங்கள் தேவை இல்லை.

தகவலுக்கு நன்றி.

அப்படி என்னதான் சொல்லுகிறார்கள் என ஒரு ஓரிரு வசனங்களில் நேரமில்லாத உறவுகளுக்காக சொல்லமுடியுமா?

ஆரம்பத்தில் நான் சொன்னதுபோல 90 பிறகு பெரும்பாலான ஊடகங்கள் புலிசார்பாக சொன்னவைகளை மாத்திரமே பலரும் வாசித்ததால் அவைதான் உண்மையென்று ஆகிவிட்டது.புலி விடும் பிழைகளை சொல்ல முயற்சித்தவர்களை துரோகிகள்,அரச கைகூலிகள் ,அதைவிட கீழ்த்தரமாகவும் விமர்சித்து தனிமைப்படுத்திவிட்டார்கள்..ஒரு சிலர் அப்படியாக இருந்திருக்கலாம் ஆனால் தமிழனின் விடிவிற்காய் விமர்சனம் வைத்த எல்லோரையும் அந்த பட்டியலில் இட்டுவிட்டார்கள்.

மற்ற இயக்கங்களின் செயற்பாடுகள் ஓரளவிற்கு 87 களில் முடிவடைந்துவிட்டன.பின்னர் சும்மா பேருக்கு இருந்தனவே ஒழிய அவர்களால் ஒன்றையும் செய்திருக்கமுடியாது.இருந்தும் மாற்று இயக்க்ங்களில் இருந்து விலகி இருந்தவர்களை கூட புலிகள் விடவில்லை.பெண்கள் உட்பட.இதில் கவிஞர் செல்வியும் அடக்கம்.ஓரிருவர் புலியில் சேர்ந்த்தும் இருந்தார்கள்.

ஆரம்பத்தில் சிறையுடைப்பால் வந்த நித்தியானந்தன்,நிர்மலா இவர்களையெல்லாம் வைத்து ஒரு அரசியல் பிரச்சாரத்திலே இறங்கியிருக்கலாம்.அவர்கள் கூட சுத்த இராணுவ கண்ணோட்டமான இயக்கம் என விமர்சனத்துடன் தான் வெளியேறினார்கள்.

ஜே.ஆர்-ரஜீவ் இன் இலங்கை இந்திய ஒப்பந்தம் கூட கையெழுத்தாவதற்கு முதல் அனைது இயக்கங்களுடனும் ரா இது பற்றி கதைத்திருந்தது.டெல்கி வந்த பிரபாகரன் அசோகா கொட்டேலில் இருக்கும் போது மற்ற இயக்கங்களும்(அமிர் உட்பட) வேறொரு கொட்டேலில் இருப்பது தெரியாது.அது தெரியவந்ததும் பிரபா ஒரேயடியாக வடக்கு கிழக்கை இணைத்த மாகாணசபையை தற்காலிகமாக புலிகளின் பொறுப்பில் மட்டும் விட கேட்டார் அதற்கு ரோ மறுத்துவிட்டது.அதனால் தான் முரண்டுபட்டு கையெழுத்திடாமல் இருந்து பின்னர் ரோ வின் அழுத்தத்தால் கையெழுத்திட்டு நாடு திருமினார்.

பின்னர் இலங்கை வந்து புலி,ஈ.பீ.ஆர்,எல்,எப்,கூட்டணி சேர்ந்த ஒரு மாகணசபை அமையவும் அதன் தலைவராக 3 பெயர்களை தரச் சொல்லி ஜே ஆர் கேட்டிருந்தார் அதில் ஒருவரை தான் தலைவராக நியமனம் செய்வதாக,புலிகள் 3 பெயர்களி கொடுத்தார்கள்.சிவஞானம்,பத்மநாதன்,இன்னுமொருவர். இதில் ஜே ஆர் சிவஞானத்தை தலைவராக தெரிவு செய்தார் புலிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தார்கள்.நீங்கள் தந்த பெயரிலிருந்துதானே தெரிவு செய்தேன் என ஜே ஆர் பிடிவாதமாக நின்றார்.புலிகல் இல்லை பத்மநாதனைதலைவராகவேணுமென நின்றதில் கடைசியில் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது

இது சம்பந்தமாய் தெளிவான பிரகடனத்தை வே. பிரபாகரன் அவர்கள் சுதுமலையில் செய்து இருக்கிறார்.... அது என்ன எண்டு கூட உங்களுக்கு தெரிந்து இருக்க மாட்டுது போல கிடக்கே....

உங்களின் கோணத்திலை மட்டுமே பார்க்கும் போக்கு மட்டும் ஆரோக்கியமோ....??? அதிலை ஒண்றை மட்டும் தெளிவாக சொல்லுறீயள் நீங்களும் உங்கட ஆக்களும் அந்தக்காலங்கள் முதல் இண்று வரைக்கும் எவ்வளவு கையாலாதவர்களாக இருந்து இருக்கிறீர்கள் எண்டு...

புலிகள் கையோங்க உங்களை சனம் திரும்பி கூட பாக்காத நிலை, உங்களின் புலம்பல்களை ஏன் காது குடுத்து கேக்காத நிலை வந்தது எண்டு உங்களுக்கு யாருக்காதவது தெரியுமோ.....?? வெறும் புலியின் அடக்கு முறையாலை எண்டு அளக்காதீர்கள்...

மக்களை பொறுத்த வரைக்கும் நீங்கள் எல்லாம் அப்படி ஒரு நம்பிக்கை நச்சத்திரம்கள்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நடந்தவற்றை எழுதுகின்றேன்.

நீர் மீண்டும் உங்களுக்கு புலிகளின் ஆய்வாளார்களால் சொல்லப்பட்ட புனைவுகளை நம்பி எழுதுகின்றீர்.

இன்றுவரை தமிழ்பெற்றோர் தமது பிள்ளை படிக்காவிட்டல் சேர்ந்து திரியும் நண்பர்களில் தான் குற்றம் சொல்வார்கள்.அதே கதை தான் இங்கும்.

உலக அரசியல் தெரியாதென்பதுதான் உண்மை.

விலை போகவில்லை என்பது விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பது.

உதாரணமாக, ஜே ஆர் வடமராட்சி அடிக்கத்தொடங்க இந்தியா நிப்பாட்ட சொல்ல கேட்காத ஜே ஆருக்கு விமானம் அனுப்பி சாப்பாடு போட்டு அடுத்தது என்ன என இந்தியா சமிக்கை காட்ட ஒப்பந்தத்திற்கு பயந்து வந்த ஜே,ஆர்

நேவிக்கரனால் ராஜீவிற்கு ஒன்று கொடுத்தார்,அதைவிட இந்து ராமுடனான நேர்கணலில் எனக்கு இருக்கும் அரசியல் அனுபவம் என்று தான் அரசியலுக்கு வந்தாபிறகு தான் ராஜீவ் பிறந்தார் என்றார்.

கடைசியாக இந்தியாவிற்கும் புலிக்கும் இடையில் மோதலை உண்டாக்கினார்.

இன்று புலியால் வென்ற மகிந்த புலியை அழித்தார் .அதுதான் மகிந்த சிந்தனை.அதை என்னவெண்ரு சோதித்து பார்த்த புலிகளுக்கு கிடைத்த பரிசு.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு."தெரிந்த பிசாசு தெரியாத பிசாசிலும் நல்லது" அதை ஏன் புலிகள் ரனில்,மகிந்தா விடயத்தில் பாவிக்கவில்லை

அடிபட தோதான ஆளை தேர்ந்தெடுத்தார்கள்.

கடைசி ஏதாவது ஒரு சிறிய நாடாவது புலிகளை ஆதரித்ததா? அல்லது ஒரு அங்கீகாரம் கொடுத்து தனது நாட்டில் இருந்து அரசியல் செய்யவிட்டதா?

25 வருடமாக என்ன செய்தார்கள்.சிறுவயதில் ஞானப்பழக்கதை படிப்பித்தது என்னத்திற்கு?தேவை வரும் போது பாவிப்பதற்கு.

நண்பரே! நான் நாட்டில் தான் இருந்து அனைத்தையும் என் அநுபவத்தால் பார்த்துதான் இங்கு கதைக்கின்றேன். புலிகளுக்கு இரண்டு மூன்று வயாதாய் இருக்கும் போதே நாட்டை விட்டு ஓட்டம் எடுத்தவர்கள் அவர்களின் நிர்வாகம் பற்றி விமர்சிக்கும் போது சிரிப்பாக இக்கும் எனக்கு.

எனவே எனக்கு இருக்கும் விமர்சனத்தகுதி உம்மை விட பலமடங்கு இருக்கின்றது. பழைய நிகழ்ச்சிகளைக் கொட்டிப்போட்டு அதிமேதாவி என்ற நினைப்பை வைத்திருக்காதயும்!

இந்திய இராணுவ நிர்வாகம் எத்துணை கீழ்த்தரமாக செயல்பட்டது என்று சொல்ல வேண்டிய அவசியமே எனக்கு இல்லை. ஏன் எனில் இது அனைவரும் உணர்ந்தறிந்த விடயம்.

அப்பன், சுப்பன் என்ற இருவரில் இருவர் இடையான உறவு மிக மோசமாக இருக்கின்றது, சுப்பனுக்கு அப்பன் ஆகாதவனாய் இருக்கின்றான் என்றால் அப்பன் கெட்டவன் என்று முடிவெடுக்க முடியாது, சுப்பன் என்பவன் மனிதப் பண்பே இல்லாத மிருகமாய் விளங்கினால், அப்பன் எப்படிப் பட்டவன் என்ற ஆராட்சியே தேவை இல்லாதது. இதே போலத்தான் புலிகளைப் பற்றிய ஆராட்சி எதுவுமே தேவை இல்லை இந்திய அரசின் அராயகப் போக்கும், நயவஞ்ச்சகத்தனமும் எம் ஒவ்வொருவருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்குகின்ற போது.

சரி உம்முடைய பார்வையின் படியே வருகின்றேன்!

புலிகளுடன் தான் எதிரி இந்தியா தமிழர்களுடன் இல்லை என்கின்றீர். மக்கள் எதை விரும்புகின்றார்களோ அதை ஆதரித்தலே ஜனனாயகக் கடமை. மக்களில் 95 விழுக்காடு புலிகளின் போக்கை ஆதரிப்பவர்கள் (நிட்சயமாக நீர் இதை ஏற்றுக்கொள்ள மாட்டீர், பூனை கண்மூடுவதால் இருட்டிவிடுமா ) எனவே அவர்களை ஆதரிக்க வேண்டியதே இந்தியாவின் கடமை. ஆனால் இந்தியா வன்னிமக்கள் அனைவரின் இறப்பினூடும் புலியின் அழிவையே வேண்டி நின்றது. இந்தச் செயல் தமிழ்நாட்டுக்கே துரோகத்தனமான செயல். இப்படிப் பட்ட இந்தியாவின் துரோகத்தை எப்படிக் மறக்கலாம்!

திமுக விசுவாசம் கொண்ட ஒருவன் புலிகளை விமர்சிக்கின்றான் என்றால் அந்த நியாயம் இலகுவில் தோற்றுவிடும் ஏன் என்றால் அவன் இருக்கின்ற இடமே மிகப்பெரிய பொய்மையின் தளம் எனவே சொல்லவருவதில் எப்படி உண்மை விளங்கும். இப்படியே டக்ளஸின் விசுவாசம் புலிகளை விமர்சிக்கின்றதென்றாலும் இதே நிலைதான். ஆனால் உமது அடிப்படை என்ன வென்று நீரே அறிவிக்காவிடினும் புலிகளை சின்னத்தனம் கொண்டு வெறுப்பதால் நீர் இரண்டாம் நிலைக்குள் இயல்பாகவே பொருந்துகின்றீர், எனவே உமது அக்கறை எல்லாம் மக்களைக் காப்பதற்கா, இல்லை மகிந்தாவை போற்குற்றத்தில் இருந்து காப்பதற்கா என்று புரியவில்லை!

உலகில் எந்தப் பெரிய வலிமை உடையவனும் நாளையை பற்றி வீரம் பேச முடியாது.

நாளை ஒரு வேளை இந்தியாவை சிதறவைத்து சீனா பெரும் தேசமாகலாம் இல்லை இலங்கை இந்தியாவால் கபளீகரம் செய்யப் படலாம்.

ஆனால் வெற்றி என்பது கடைசிவரை தான் கொண்ட உறுதியை தோற்காதிருத்தலாகும்.

எனவே எமது போராட்டம் பணத்தாலோ இல்லை மரணபயத்தாலோ தோற்காது இருக்கின்றது.

ஒரு நொடியையும் வீணடிக்காது பொருளை வாரி உழைத்த ஒருவன் எதிர்பாராதவிதமாய் மாண்டுவிட்டால் அவனைப் பேயன் என்று சொல்லுவதை ஒத்தது நீர் எமது போராட்டத்தின் இழப்பை பரிகசிக்கும் விதம்!

Edited by தேவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது சம்பந்தமாய் தெளிவான பிரகடனத்தை வே. பிரபாகரன் அவர்கள் சுதுமலையில் செய்து இருக்கிறார்.... அது என்ன எண்டு கூட உங்களுக்கு தெரிந்து இருக்க மாட்டுது போல கிடக்கே....

உங்களின் கோணத்திலை மட்டுமே பார்க்கும் போக்கு மட்டும் ஆரோக்கியமோ....??? அதிலை ஒண்றை மட்டும் தெளிவாக சொல்லுறீயள் நீங்களும் உங்கட ஆக்களும் அந்தக்காலங்கள் முதல் இண்று வரைக்கும் எவ்வளவு கையாலாதவர்களாக இருந்து இருக்கிறீர்கள் எண்டு...

புலிகள் கையோங்க உங்களை சனம் திரும்பி கூட பாக்காத நிலை, உங்களின் புலம்பல்களை ஏன் காது குடுத்து கேக்காத நிலை வந்தது எண்டு உங்களுக்கு யாருக்காதவது தெரியுமோ.....?? வெறும் புலியின் அடக்கு முறையாலை எண்டு அளக்காதீர்கள்...

மக்களை பொறுத்த வரைக்கும் நீங்கள் எல்லாம் அப்படி ஒரு நம்பிக்கை நச்சத்திரம்கள்...

மாற்று மருந்தே இல்லாமல் கையில் உள்ள மருந்தைக் குறை குறுபவனிடம் வருத்தத்தை தீர்க்கும் நோக்கம் கிடையாது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.