Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலையான சீமான் பேச்சு!

Featured Replies

இனப்படுகொலை முதல்வரான கலைஞரின் மனதை மட்டும் காயப்படுத்தவில்லை! விடுதலையான சீமான் பேச்சு!

ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலை யார் யாருக்கெல்லாமோ மனதில் காயத்தை உண்டாக்கியிருக்கிறது. உலகத்தில் உள்ள மாற்று மதத்தவர்களின் மனதை காயப்படுத்தியிருக்கிறது. மாற்று இனத்தவர்களின் மனதை காயப்படுத்தியிருக்கிறது. மாற்று மொழிக்கார்களை காயப்படுத்தியிருக்கிறது. ஆனால் ஆறரை கோடி தமிழர்களின் முதல்வரான கலைஞரின் மனதை மட்டும் காயப்படுத்தவில்லை. சோனியாவின் மனதை காயப்படுத்தவில்லை. ஜெயலலிதாவின் மனதை காயப்படுத்தவில்லை. அதை என் என்று கேட்டால் அவர்களுக்கு குற்றமாகிவிடுகிறது.

இவ்வாறு விடுதலையான, இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான சிறைவாசலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பேசும்போது தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது:

நீதிபதி தர்மாராவுக்கு நான் தலை வணங்குகின்றேன். ஏனென்னறால் என்னை விடுதலை செய்தமைக்காக அல்ல. அதைவிட மேலக சிங்கள வெறியர்களின் இனப்படுகொலை பற்றி அவர் அறிந்து வைத்திருக்கிறார் என்பதற்காகதான்.

எனது விடுதலையை மறுத்த அரச தரப்பு வழக்கறிஞர், இனி ஒரு தமிழக மீனவன் தாக்கினால் இங்கிருக்கம் ஒரு சிங்களவனும் உயிரோடு திரும்ப முடியாது என்று நான் பேசியதை சுட்டிக்காட்டி, எனவே வெளியில் விடுவது கலவரத்தை ஏற்படுத்த வாய்ப்பாக அமைந்துவிடும். எனவே எனது விடுதலையை எதிர்ப்பதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி அவர்கள் இசைப்பிரியாவின் படுகொலை குறித்த தகவல்களை வீடியோவில் பார்த்தீர்களா. அதைப் பார்க்கும்போதே கோபம் கொந்தளிப்பை எற்படுத்துமே. மக்கள் கோபத்தை வெளிப்படுத்தும்படி இருக்கிறதே. அதற்காக அந்த வீடியோ காட்சிகளை ஒளிபரப்பிய தொலைக் காட்சிகள் மீது கலவரத்தை தூண்டினார்கள் என்று வழக்கு போடுவிர்களா? என்று திருப்பி கேட்டிருக்கிறார். அந்தளவிற்கு விடுதலை இயக்கத்தின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த இசைப்பிரியாவின் படுகொலை, அப்பாவி இளைஞர்களின் படுகொலை நீதிபதி அவர்களின் மனதில் காயத்தை உண்டாக்கியிருக்கிறது. அதற்காக நான் அவருக்கு தலை வணங்குகின்றேன்.

இப்படி யார் யாருக்கெல்லாமோ அந்த இனப்படுகொலை மனதில் காயத்தை உண்டாக்கியிருக்கிறது. உலகத்தில் உள்ள மாற்று மதத்தவர்களின் மனதை காயப்படுத்தியிருக்கிறது. மாற்று இனத்தவர்களின் மனதை காயப்படுத்தியிருக்கிறது. மாற்று மொழிக்கார்களை காயப்படுத்தியிருக்கிறது. ஆனால் ஆறரை கோடி தமிழர்களின் முதல்வரான கலைஞரின் மனதை மட்டும் காயப்படுத்தவில்லை. சோனியாவின் மனதை காயப்படுத்தவில்லை. ஜெயலலிதாவின் மனதை காயப்படுத்தவில்லை. அதை என் என்று கேட்டால் அவர்களுக்கு குற்றமாகிவிடுகிறது என்ற கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

தொடர்ந்து பேசும்போது நாம் தமிழர்கட்சி என்பது ஏதோ தமிழர்களுக்கு மட்டுமேயான கட்சி என்றளவில் பார்க்க கூடாது சிலர் தவறாக அப்படி கருதுகிறார்கள். இந்த தமிழ் மண்ணில் பிறந்து வளர்ந்த மாற்று மொழிக்காரர்களும் மாற்று இனத்தவர்களும் இந்த கட்சிக்கு உரிமையுடைவர்கள்தான். மாற்று மொழி, மாநிலம், என்ற அமரர் எம்.ஜி. ஆரை விட தமிழினத்திற்கு அதிகம் நன்மையை செய்தவர்கள் யாரும் இருக்க முடியாது. என்றும் பேசினார்.

சீமானின் விடுதலையின் போது லேசான மழை இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் ஆயிரம் கணக்கான இளைஞ்ர்கள் பொதுமக்கள் கட்சியின் தொண்டர்கள் என காத்திருந்து வரவேற்ற விதம் விழாக்கோலம் போன்று இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

http://www.ponguthamil.net/news/contentnews.asp?sectionid=1&contentid={04668B1D-C82E-4C06-AF8A-ECB210C4B84C}

Edited by akootha

சீமானின் இக்கருத்து தவறானது!! ... கலைஞர், இறுதிக்காலங்களில் மிக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்ததை பலர் பார்த்ததாக சொல்கிறார்கள், அக்காலங்களில் கலைஞரின் மகள் கனிமொழி, புலம்பெயர் நாடுகளில் இருக்கும் ஊடகவியலாளர்கள் உட்பட பலருடன், ஈழத்தமிழர் விடயமாக தொடர்பில் இருந்தார். அத்தொடர்புகள் கலைஞரின் வேண்டுகோளுக்கு அமையவே இருந்ததாக சொல்கிறார்கள்!

இக்காலங்களில் கலைஞரின் கேள்விக்களுக்கும் பதிலளிக்க முடியாமல் மத்தி இருந்ததையும், மத்தி கேட்கும் கேள்விகளுக்கு உடன் கலைஞரின் பதில்களையும் புரட்டிப் பார்க்களாம்!! ... மத்தி ஒருதரம் கலைஞரின் கோரிக்கைக்கு, ஈழத்தமிழர் பிரட்சனை உள்நாட்டுப் பிரட்சனை, அதில் தலையிட முடியாது என கூற ... கலைஞர் உடனடியாக, அப்படியாயின் எவ்வாறு பங்காளதேச பிரட்சனையில் இந்தியா தலையிட்டது என பகிரங்கமாகவே கேள்வி எழுப்பி மத்தியை திணற வைத்தார் ...

அப்படியான கலைஞர் பின் ஏன்????

இக்கேள்விக்கு பதில் மத்திய அரசு கொடுத்த பதில் ... கலைஞருக்கு அதிர்ச்சி வைத்தியம் ... ஸ்பெக்ரம் ஊழல் ...!!!!

... மத்திய அமைச்சர் ராஜாவின் துணையுடன் நடைபெற்ற இக்கோடானு கோடி ஊழலில், கலைஞரின் மகள் கனிமொழியின் பெயரில் சுவிஸ் வங்கிக்கணக்கில் பல கோடிக்களாம்!!! ... இதற்கான ஆவணங்களுடன், ஈழத்தமிழர் பிரட்சனை தொடர்பாக, கலைஞருடன் உரையாட என்ற பெயரில் சென்ற நாராயணன், கலைஞரை நேரடியாகவே மிரட்டினாராம்!!! இலங்கை பிரட்சனை தொடர்பாக கேள்விகள் கேட்பீர்களாயின், இவ்வூழல்கள் சம்பந்தமான அனைத்தையும் வெளியிடுவோம்!!!! ... அது கலைஞரின் அரசியல் வாழ்வை மட்டுமல்ல, கலைஞர் குடும்பத்தையே அஸ்தமனமாக்கி விடும்!!

... விளைவு???

... ஈழத்தமிழர்களை கொன்றொழிக்க கலைஞர் சிங்களத்துடன் கையை கோர்த்தார் ....

  • கருத்துக்கள உறவுகள்

... விளைவு???

... ஈழத்தமிழர்களை கொன்றொழிக்க கலைஞர் சிங்களத்துடன் கையை கோர்த்தார் ....

பின்பு, ஏன் கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக..... கவிதையும், கடிதமும், தந்தியும் சும்மா..... அடிச்சுக் கொண்டிருக்கிறார்.

:(:(

நெல்லையன் உங்கள் பதிலை பார்க்கும் போது "ஐயோ பாவம் நெல்லையன்" என்று சொல்லத் தோன்றுகின்றது... உங்களை போன்று தமிழகத்தில் 6 கோடிப் பேர் இருப்பதால் தான் கலைஞர் போன்ற அற்ப பதர்கள் எல்லாம் ஆட்சி செய்ய முடிகின்றது

கலைஞரின் உண்மை முகத்தை காட்ட அவரின் மூண்று மணிநேர உண்ணாவிரதமே போதுமானது... ! அதன் பின்னர் அவரது ஊடகங்களான சண், கலைஞர் தொலைக்காட்ச்சிகள் எல்லாமே ஈழத்தில் போர் நிறுத்தம் வந்து விட்டதாக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தன... இது திட்டமிட்டு தமிழக மக்களை குழப்ப எடுக்க பட்ட நடவடிக்கை...

அதன் பின்னர்... பாலு தலைமையில் இலங்கை போன குழு ராஜபக்ஸ்சவுடன் கொஞ்சிக்குலாவியது தமிழர்கள் அனைவரும் அறிவர்...

கனிமொழி, கஸ்பர் , சிதம்பரம், KP பேச்சுவார்த்தைகள் எல்லாம் புலிகளின் தலைமை , நிலைப்பாடுகள் பற்றிய உளவு நடவடிக்கையாக மட்டுமே இருந்தது...

நம்பி வந்து காயம் அடைந்த 5000 அண்மித்த போராளிகளும், ஊனமுற்று இருந்த இன்னும் சில போராளிகளையும் விட்டு விட்டு செல்ல முடியாத நிலையில் தலைமை இருந்ததை அந்த கூட்டம் நன்கு பயன் படுத்திக்கொண்டது... அதன் காரணமாக இவர்களின் முன்னரான அறுவுரையின் படி சரண் அடைய போன போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதையும் அறிவோம்...

அனைத்தும் கலைஞரும் கனிமொழியும் அறிவார்கள்.... அவர்கள் தான் சூத்திரதாரிகள்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மே 18 க்கு முன்னர் கனிமொழியினை இரண்டு முறை தொடர்புகொண்ட பொழுது இது தொடர்பாக பேச்சை எடுத்தாலே தொடர்பை துண்டித்துவிட்டார்...

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரின் உண்மை முகத்தை காட்ட அவரின் மூண்று மணிநேர உண்ணாவிரதமே போதுமானது... ! அதன் பின்னர் அவரது ஊடகங்களான சண், கலைஞர் தொலைக்காட்ச்சிகள் எல்லாமே ஈழத்தில் போர் நிறுத்தம் வந்து விட்டதாக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தன... இது திட்டமிட்டு தமிழக மக்களை குழப்ப எடுக்க பட்ட நடவடிக்கை...

அதன் பின்னர்... பாலு தலைமையில் இலங்கை போன குழு ராஜபக்ஸ்சவுடன் கொஞ்சிக்குலாவியது தமிழர்கள் அனைவரும் அறிவர்...

கனிமொழி, கஸ்பர் , சிதம்பரம், KP பேச்சுவார்த்தைகள் எல்லாம் புலிகளின் தலைமை , நிலைப்பாடுகள் பற்றிய உளவு நடவடிக்கையாக மட்டுமே இருந்தது...

நம்பி வந்து காயம் அடைந்த 5000 அண்மித்த போராளிகளும், ஊனமுற்று இருந்த இன்னும் சில போராளிகளையும் விட்டு விட்டு செல்ல முடியாத நிலையில் தலைமை இருந்ததை அந்த கூட்டம் நன்கு பயன் படுத்திக்கொண்டது... அதன் காரணமாக இவர்களின் முன்னரான அறுவுரையின் படி சரண் அடைய போன போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதையும் அறிவோம்...

அனைத்தும் கலைஞரும் கனிமொழியும் அறிவார்கள்.... அவர்கள் தான் சூத்திரதாரிகள்...

முத்துக்குமாரனின் மரணத்தின் பின்பு மாணவர்களின் எழுச்சியை தணிப்பதற்காக தமிழகத்து கல்லூரிகளுக்கு காலவரையிலான விடுமுறை வழங்கியவர். நாடாளுமன்றத்தேர்தலுக்கு முதல் நாள் மக்கள் தொலைக்காட்சியில் ஈழத்து அவலம் பற்றிய நிகழ்ச்சி வரும் போது தமிழகத்தில் மின்சாரத் துண்டிப்பை ஏற்படுத்தியவர் கருணா நிதி. ஆனால் வரும் சட்டசபைத்தேர்தலில் சில வேளை ஜெயலலிதா காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்தால் காங்கிரசின் இன அழிப்பை மேடைகளில் கத்தினாலும் ஆச்சரியப்படுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முத்துக்குமாரனின் மரணத்தின் பின்பு மாணவர்களின் எழுச்சியை தணிப்பதற்காக தமிழகத்து கல்லூரிகளுக்கு காலவரையிலான விடுமுறை வழங்கியவர். நாடாளுமன்றத்தேர்தலுக்கு முதல் நாள் மக்கள் தொலைக்காட்சியில் ஈழத்து அவலம் பற்றிய நிகழ்ச்சி வரும் போது தமிழகத்தில் மின்சாரத் துண்டிப்பை ஏற்படுத்தியவர் கருணா நிதி. ஆனால் வரும் சட்டசபைத்தேர்தலில் சில வேளை ஜெயலலிதா காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்தால் காங்கிரசின் இன அழிப்பை மேடைகளில் கத்தினாலும் ஆச்சரியப்படுவதில்லை.

நெல்லையன் உங்கள் பதிலை பார்க்கும் போது "ஐயோ பாவம் நெல்லையன்" என்று சொல்லத் தோன்றுகின்றது... உங்களை போன்று தமிழகத்தில் 6 கோடிப் பேர் இருப்பதால் தான் கலைஞர் போன்ற அற்ப பதர்கள் எல்லாம் ஆட்சி செய்ய முடிகின்றது

எனது கருத்தும் இது தான்.

நெல்லையன் தமிழ் நாடிலே பிறந்து, தமிழ் சினிமாவிலே மூழ்கி, தமிழ் சினிமாவினால் வழி தவறி மது, மாது, சூது, என அலையும் வாய்ச்சொல்லில் வீரர்களான கணிசமான தமிழ்நாட்டு மக்கள் போல் உள்ளார்.

நாம்தமிழர் இயக்கத்தை பலப்படுத்த உலகத்தமிழர்கள் உதவவேண்டும்,

http://74.53.30.66/~seemaan/welcome.html

Edited by hari

சீமான் தமிழர் விடயத்தில் இந்தியக் குப்பை அரசியலைக் கலக்காமல் விவேகமாக நடந்துகொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம்தமிழர் இயக்கத்தை பலப்படுத்த உலகத்தமிழர்கள் உதவவேண்டும்,

http://74.53.30.66/~seemaan/welcome.html

என்னால் முடிஞ்சளவு உதவுவேன் :(:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம்தமிழர் இயக்கத்தை பலப்படுத்த உலகத்தமிழர்கள் உதவவேண்டும்,

http://74.53.30.66/~seemaan/

http://74.53.30.66/~meenagam/

அப்படியே இதுக்கும் செய்தால் நல்லம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.