Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தெரியாத பாதை தெளிவானபோது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளிற்கு வணக்கம். யாழ் களத்திலை இந்திர ஜித்தின்ரை தொடர் கதையை பாத்த உடைனை நானும் ஒரு தொடர் கதை எழுதுவம் எண்டு நினைச்சன். இதுவும் நடந்த ஒரு உண்மை சம்பவம்தான் சம்பவத்துடன் சம்பந்த பட்டவரின் அனுமதியுடன் கதை எழுதபடுவதார் கதையில் வருபவர்களின் பெயர்கள் மட்டும் மாறியிருக்கிறது.

அதே நேரம் கதையை படித்து விட்டு அடுத்த தொடர் எப்படியிருக்கும் எண்று உங்கள் ஊகங்களையும் இங்கு தெரிவியுங்கள். உண்மை சம்பவம் எண்ட படியால் கதையின் போக்கை மாத்த முடியாது.சரியாக ஊகிப்பவருக்கு இராவணணிட்டை சொல்லி ஏதாவது பரிசு தர சொல்லுறன் சரி கதைக்கு போகலாம்

தெரியாத பாதை தெளிவானபோது

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் ஓர் தங்கு விடுதி

கோயிலுக்கு போன சாந்தியும் தாயாரும் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்குள் நுளைந்தனர்.விடுதியின் பொறுப்பாளர் சாந்தி உங்கடை பேருக்கு ஒருகடிதம் வந்திருக்கு என்றவாறு ஒருகடிதத்தை கொடுத்தார். அவசரமாக அக்கடிதத்தை பிரித்த சாந்தியின் முகத்தில் மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை அம்மா பிரான்ஸ் எம்பசியிலை இருந்து ஸ்பொன்சர் கடிதம் வந்திருக்கு எம்பசிக்கு விசாவுக்கு வரசொல்லியிருக்கு

சந்தோசத்தால் துள்ளி குதித்தாள்.

அப்பனே பிள்ளையாரே அம்மாளாச்சி ஒருமாதிரி ஒருவருசமா காத்திருந்த பலன் கிடைச்சிட்டுது அவளின் தாயார் ஊர் தெய்வத்தையெல்லாம் அழைத்து நன்றி சொல்லிவிட்டு பிள்ளை அப்பாக்கு உடைனை ரெலிபோன் அடிச்சு தங்கச்சியையும் கூட்டிகொண்டு உடைனை வரச்சொல்லு பிள்ளை அவர்வந்தால்தான் உந்த பயண ஒழுங்குகள் செய்யலாம்.

உன்ரை பிரச்சனை முடிஞ்சுதெண்டால் அடுத்தவருசம் உன்ரை தங்கச்சியையும் படிப்பை நிப்பாட்டிபோட்டு எங்கையாவது உன்னை மாதிரி ஒரு வெளி நாட்டிலை கட்டி குடுத்திட்டனெண்டால் நிம்மதி.கடைசி காலத்திலை நானும் கொப்பரும் நிம்மதியா இருக்கலாம். என்று ஒரு சராசரி அம்மாவின் எதிர் பார்ப்புக்களே அவளின் தாயாருக்கும்.

சாந்தி தந்தைக்கு விபரங்களை தெலைபேசியில்சொல்லி விரைவில் வருமாறு சொல்லியிருந்தாள்.

கட்டுநாயக்கா விமான நிலையம்

சந்தோசமா துக்கமா எனசொல்லமுடியாத ஒருவித இரண்டும்கலந்த நிலையில் சாந்தியின் குடும்பம் விமானநிலையத்தில். பிள்ளை போய் சேந்ததும் உடைனை ரெலிபோன் எடு பிள்ளை நாங்களும் நிம்மதியா ஊருக்கு போய்சேந்தஉடைனை கன நேத்திகடன் இருக்கு அதைவிட கன கோயிலுக்கும் நீ சுகமா போய் சேந்ததும் பொங்கிறதெண்டு வோறை நேந்தனான்.

எல்லாம் செய்து முடிக்கவே ஒருமாதமாகும்.

என்று சாந்தியின் தலையை தடவியபடி தாயின் கரிசனை .

பிள்ளை மருமகனை சுகம் கேட்டதா சொல்லு பிள்ளை போற இடத்திலைதெரியாத ஊர் தெரியாத ஆக்கள் ஏதும் சின்ன சின்ன பிரச்சனையள் வரப்பாக்கும் நீதான் புத்திசாலித்தனமா சமாளிச்சு நடக்க வேணும். என்று தந்தையின் அறிவுரை. அக்கா அத்தானை கேட்டதா சொல்லு முடிஞ்சா என்னையும் கூப்பிட சொல்லு நான் அங்கை வந்து படிக்கபோறன் இஞ்சையிருந்தா அம்மா கலியாணம் கட்டி வைச்சிடுவா என்று தங்கையின் சிணுங்கல் இப்படியெல்லாம் முடிய சாந்தியை சுமந்தவாறு ஏயாலங்கா விமானம் வானில் கிளம்பியது

விமானத்திலிருந்தவாறு சாந்தி தனது கணவன் ரவியின் நினைவுகளை கொஞ்சம் மீட்க தொடங்கினாள்.

இப்பமாதிரியிருக்கு ஒருவருசமாச்சு திருமணம் நடந்து. ஊரில் சாந்தியின் குடும்பம் ஒரு நடுத்தர குடும்பம் தந்தை ஒரு யாழ் நவாலியிலை தமிழ் வாத்தியார் தமிழ் வாத்தி தம்பையா எண்டால் ஊரிலை எல்லாருக்கும் தெரியும் அவர் காசு பணத்தை விட ஊரில் நல்ல பெயரையே அதிகம் சம்பாதித்து வைத்திருந்தார்.

சாந்தி படித்து விட்டு மேலதிக படிப்பிறகாய்: பல்கலைகழக அனுமதிக்காக காத்திருந்த போதே உறவினர் ஒருவரால் சாந்திக்கு ரவியை திருமணம் செய்ய ஒழுங்குகள் செய்ய பட்டது.வழைமையான் குறிப்பு சாதகம் எண்டு எல்லாம் பாத்து நல்ல பொருத்தம் என்றதன்பின்னரே சாந்திக்கு விடயம் தெரியும் சாந்திக்கு மேலே படிக்கதான் ஆசை ஆனால் கலியாணம் பேசி வந்த உறவினரோ வெளி நாட்டு சம்பந்தம் பெடியன் நல்ல பெடியன் வீட்டு காரர் சீதனம் கூட பெரிசா எதிர் பாக்கேல்லை சந்தர்ப்பத்தை தவற விட்டிடாதேங்கோ எண்டு வற்புறுத்த சாந்தியின் குடும்பமும் சாந்தியை வற்புறுத்தி சம்மதிக்க வைத்து விட்டனர்.

சாந்திக்கு ரவியின் படமும் காட்டப் பட்டது பாக்க வடிவாதான் இருந்தான்.குறுகிய காலத்திலேயே திருமண நாளும் குறித்து ரவிக்கும் சாந்திக்கும் இந்தியாவில் திருமணம் நடந்தது.இரண்டு வாரத்தில் ரவி பிரான்ஸ் திரும்பிவிட சாந்தி கொழும்பு திரும்பி பரான்ஸ் விசாவுக்காக ஒரு வருடங்கள் காத்திருந்து இன்று இதோ விமானத்தில்.

விமானம் பாரிஸ் விமான நிலையத்தில் தரையிறங்கி கொண்டிருந்தது

அடுத்த பாகத்தில் புதிய திருப்பங்களுடன் தொடரும்

:arrow:

  • Replies 189
  • Views 26k
  • Created
  • Last Reply

சாத்திரி புதிய தொடர் நல்லாய் இருக்கு. ம்ம் பல ஏக்கங்களுடன் பிரான்ஷ்க்கு பயணிக்கும் சாந்தியின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை வாசிக்க ஏதிர்பார்க்கின்றோம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியாரே தொடருங்கோ உங்கள் கதையையும் வாசிக்க ஆவலுடன் இருக்கிறம். இங்க ரவி விளையாட்டுக்காட்டப்போறாரே

ம்ம் நல்லது கதை எழுதுவது தொடருங்கள் வாழ்த்துகள் எந்த உண்மைகதைகளையும் அப்படியே எழுத கூடாது வேறு நாடுகள் கதையின் களங்களை மாற்ற வேண்டும் மற்றவர்களோ சில வேளைகளில் அருகில் இருப்பவர்களால் சம்பந்தபட்டவர்களுக்கு அவமானம் வராமல் தவிர்க்கவேண்டும்

ஏன் சாத்திரி இதுவும் நீங்கள் செய்து வைத்த திருமணமோ?? அப்ப திருப்பங்கள் இருக்கத்தான் செய்யும். எனக்குத் தெரியும் இனி எப்படி கதை போகும் என்று. எதற்கும் தொடர்ந்து எழுதுங்கோ நான் சரி பார்த்துக் கொள்கின்றேன்.

சாஸ்த், எழுதுறது நல்லா இருக்கு. அதில பிரச்சனை இல்லை. அதுக்கில ஏன் அண்ணாச்சியை இழுக்கிறிங்க ;)

சாத்திரி என்ன ரிவிக்காரங்களைப் போல புது திருப்பங்கள் எண்டு போட்டிருக்கிறாய் எதுக்கும் பெடியன் ஏமாந்த மாதிரி எழுதிப்போடாதை (ஆட்கள் எழுதுற கதை எல்லாம் பாத்தா பெடியங்கள்தான் பாவமாக் கிடக்கு)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வந்திட்டாய்யா வசம்பு வந்திட்டாய்யா ஊர் வம்பை விட்டிட்டு பேசாமல் ஒரு கதை எழுதுவமெண்டால் இஞ்சையும் அப்புகாத்து (வக்கீல்)மாதிரி ஆதாரம் கேக்க வந்திட்டாய்யா. மற்றும் டமில் டுயா ரமா முகத்தார் வசம்பு இந்திர யித் ஆதரவுக்கு நன்றிகள் இதோ

பாரிஸ் விமான நிலையம் சாந்தி தனது வழைமையான விமான நிலைய சடங்குகளை முடித்து கொண்டு தனது இரண்டு பெரிய பொதிகளையும் ஒரு வண்டிலில் வைத்து தள்ளியவாறு வெளியே வர வெளியே காத்து நின்ற ரவி போய் அவளின் வண்டிலை வாங்கிய படி.

எப்பிடி பயணம் பிரச்சனையில்லையே பயப்பிடேல்லையோ அது சரி நெத்தியிலை என்ன மாட்டுக்கு அடிச்ச மாதிரி குறி அடிச்சிருக்கிறீர் உதை முதலிலை அழியும் என்றான்.

அது நான் நல்லபடியா வந்து சேர வேணுமெண்டு அம்மா வெள்ளவத்தை பிள்ளையார் கோயிலிலை அரிச்சனை செய்து பூசி விட்டவாஉங்களிற்கும் கொண்டு வந்தனான் தரவோ என்றவாறு சாந்தி தனது கை பையை திறக்க போனாள்

ம் பத்து மணித்தியாலத்துக்கு மேலை விபுதி குறி அழியாமல் கிடக்கெண்டா நல்லா தண்ணியிலை குளைச்சு பூசியிருக்கிறீர் போலை ஏன் ஒரு பூவையும் காதிலை வைச்சு கொண்டு வந்திருக்கலாமே இன்னும் நல்லா இருந்திருக்கும்.

ஒம் எப்படியப்பா கண்டு பிடிச்சனீங்கள் அம்மா தீர்த்தத்திலை நனைச்சு புசி விட்டவா போய் சேருமட்டும் அழியாமல் இருக்கட்டுமெண்டு பூவும் கொண்டந்தனான் வாடி போச்சு கை பையிக்கை இருக்கு பொறுங்கோ எடுத்து தாறன்

ரவி சிரித்தபடியே ம் நான் கொஞ்ச காலம் அமெரிக்காவிலை நாசா விலை விஞ்ஞானியா இருந்தனான் அதுதான் கண்டு பிடிச்சனான் பேசாமல் நடவும் இதிலை நீர் விபுதி சரையை பிரிக்க பொலிஸ் காரன் வந்து துள் வியாபாரம் நடக்குதெண்டு தூக்கி கொண்டு போக போறான். என்றவாறு காரை நோக்கி நடந்தான்.

சாந்தி ஒண்டும் புரியாமடல் பேசாமல் பின்னால் போய்கொண்டிருந்தாள்.ரவி பொதிகளை காரில் ஏத்தியபடி. என்ன இந்த கனம் கனக்கிது ஊரிலை இருந்து பிணம் கொண்டந்தனீரோ?

சாந்தி காரில் ஏறியபடி அம்மாதான் தன்ரை மருமகன் இவ்வளவு நாளும் தனியா இருந்து சமைச்சு சாப்பிட்டிருப்பார் நிபோய் வாய்க்கு ருசியா சமைச்சு போடு எண்டு இடியப்ப உரல் புட்டு குழல் இட்டலிசட்டி எண்டு எல்லாம் வாங்கி தந்து விட்டவாஅதுதான் பாரம்.

பாத்த உடைனை யேசிச்சனான் இப்பிடி ஏதாவது இருக்குமெண்டு பேசாமல் ஊரிலைஇருந்து ஒரு ஆட்டுகல்லும் ஒரு அம்மியையும் கொண்டுவந்:திருந்தா தோசையும் சுட்டு சம்பலும் அரைச்சு சாப்பிட்டிருக்கலாமே. எப்பதான்: திருந்த போறீங்களே என்று சலித்தவாறு வண்டியை வீடுநோக்கி ஒட்ட தொடங்கினான்.

சாந்தி பாதையின் இருபக்கமும் அதிசயமாய் பாத்தபடி இருக்க ரவி ஒரு ஆங்கில பாடல் ஒன்றை போட்டு விட்டு என்ன சுத்தி சுத்தி பாக்கிறீர் கவனம் தலை சுழுக்க போகுது.

இல்லை எவ்வளவு பெரிய பெரிய கட்டிடங்கள். அகலமான நேரான றோட்டுகள் சோறு போட்டு சாப்பிடலாம் அவ்வளவு சுத்தமான றோட்டு அதுதான் பாக்கிறன்.

ஏன் எங்கடை ஊர் றோட்டுக்கு என்ன குறை சோத்தோடை சொதியும் விட்டு சாப்பிடலாம் அவ்வளவு கிடங்கு பள்ளம் இருக்கு என்று ரவி கூறவும் விழுந்து விழுந்து சிரித்த சாந்தி உங்கடையம்மா சொன்னவா நீங்கள் சரியான பகிடி காரணெண்டு உண்மைதான் என்றாள்.

ஓ அப்பிடியோ அம்மா வேறை என்ன சொன்னவா என்னை பற்றி வேறை என்ன புதினங்கள் நாட்டிலை சொல்லும் என்று சாந்தியிடம் புதினங்களை கேட்டபடி வீட்டை அடைந்தார்கள்.

ரவி காரை நிறுத்தி விட்டு இற்ங்கும் இதுதான் நாங்கள் இருக்கபோற பில்டிங் இதிலை நாலாம் மாடியிலை எங்கடை வீடு சாமான்களை எடும் பயப்பிடாதையும் மேலை போக லிப்ற் இருக்கு என்றவாறு சாமான்களை எடுத்தான்.

என்ன நாலாம் மாடியோ பெரிய பில்டிங்தான் உங்களை ஒண்டு கேக்க வேணுமெண்டு நினைச்சனான் இங்கை வேறை தமிழாக்கள் யாரும் இதிலை இருக்கினமோ??

சாந்தியை சிறிது உற்று பார்த்த ரவி உம்மட்டை சொல்லவேணுமெண்டுதான் நினைச்சனான் பக்கத்திலை பெரிசா தமிழாக்கள் இல்லை நானும் பெரிதா தமிழாக்களோடை பழகிறேல்லை. ஆனால் எங்கடை பில்டிங்கிலை இரண்டாம் மாடியிலை இரண்டு பெடியள் இருக்கிறாங்கள் என்று ரவி முடிக்கமுதல்.

ஓ இரண்டு பேர் இருக்கினமோ எந்த ஊர் எப்பிடி ஆக்கள் உங்களோடை நல்ல பழக்கமோ??என்று சாந்தி கேள்விகளை அடுக்கவே ரவிக்கு சிறிய சினத்துடன்.

நான் சொல்லுறதை வடிவா கேளும் அவங்கள் மானிப்பாய் பெடியளாம் நான் பெரிசா கதைக்கிறேல்லை எனக்கு ஆக்களை பிடிக்கிறேல்லை கண்டா தலையாட்டிட்டு போவன் அவ்வளவுதான் நீரும் கதை பேச்சு வைச்சு கொள்ளாதையும். ஆக்கள் ஒரு மாதிரி.விழங்குதோ??

என்றவாறு சாமான்களை லிப்ரில் ஏத்திவிட்டு சாந்தியை பாத்து உள்ளை ஏறும் நாலாம்மாடி வடிவா பாத்து வையும் பிறகு மாறிபோய் வெள்ளை காரனின்ரை கதவை தட்டுறேல்லை.

சாந்தி லிப்ரில் நுளைந்தவாறே சரியபப்பா அந்த பெடியள் மானிப்பாய் எண்டா சில நேரம் எங்கடை அப்பாவை தெரிஞ்சிருக்கும் எண்டாலும் எனக்கு தெரியாத ஆக்களோடை எனக்கேன் தேவையில்லாத கதை அதைவிட அவங்கள் ஒரு மாதிரியெண்டுறியள்.........

அதைதான் சொன்னனான் அவங்கடை போக்கு வரத்துகள் சரியில்லை அதுவும் பொம்பிழையை கண்டா போதும் பல்லை ஈஈஈஈ எண்டு இழிச்சு கொண்டு வருவாங்கள் கவனமாயிரு எண்றபடி வீட்டினுள் நுளைந்தார்கள்.

சாந்திக்கு புதிய நாடு புதிய வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக பழகி கொண்டாள் எதையும் அனுசரித்து போகும் பழக்கம் அவளிற்கிருந்தது அதனால் சாதாரண ஆண்களிடம் இருப்பதைர போலவே ரவியிடம் இருந்த மதுவருந்தும் புகைபிடிக்கும் பழக்கங்களையும் அவள் சாதாரணமாக எடுத்து கொண்டாள்.

இரண்டு வாரங்கள் கழிந்து விட்ட நிலையில் ரவி அவளை பிரெஞ்சு மொழி படிப்பதற்காக் ஒரு பாட சாலையில் சேர்த்து விட்டான்வழைமைபோல சாந்தி பாடசாலைக்கு புறப்பட்டு லிப்ரில் இறங்கி கொண்டிருந்தாள் லிப்ற்இரண்டாம் மாடியில் நிற்க ஒருவர் ஏறினார் வணக்கம் என்ற குரலை கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் . :arrow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

து நான் நல்லபடியா வந்து சேர வேணுமெண்டு அம்மா வெள்ளவத்தை பிள்ளையார் கோயிலிலை அரிச்சனை செய்து பூசி விட்டவாஉங்களிற்கும் கொண்டு வந்தனான் தரவோ என்றவாறு சாந்தி தனது கை பையை திறக்க போனாள்

ம் பத்து மணித்தியாலத்துக்கு மேலை விபுதி குறி அழியாமல் கிடக்கெண்டா நல்லா தண்ணியிலை குளைச்சு பூசியிருக்கிறீர் போலை ஏன் ஒரு பூவையும் காதிலை வைச்சு கொண்டு வந்திருக்கலாமே இன்னும் நல்லா இருந்திருக்கும்.

ஒம் எப்படியப்பா கண்டு பிடிச்சனீங்கள் அம்மா தீர்த்தத்திலை நனைச்சு புசி விட்டவா போய் சேருமட்டும் அழியாமல் இருக்கட்டுமெண்டு பூவும் கொண்டந்தனான் வாடி போச்சு கை பையிக்கை இருக்கு பொறுங்கோ எடுத்து தாறன்

ரவி சிரித்தபடியே ம் நான் கொஞ்ச காலம் அமெரிக்காவிலை நாசா விலை விஞ்ஞானியா இருந்தனான் அதுதான் கண்டு பிடிச்சனான் பேசாமல் நடவும் இதிலை நீர் விபுதி சரையை பிரிக்க பொலிஸ் காரன் வந்து துள் வியாபாரம் நடக்குதெண்டு தூக்கி கொண்டு போக போறான். என்றவாறு காரை நோக்கி நடந்தா

சாத்திரியாரே இது எந்த ஆண்டுக்கதை..?? இப்பதான் பொட்டே வைக்கிறதில்லை பிறகெப்படி திருநீறு வந்தது. சிரிக்க வைச்சது கதை. சரி தொடரட்டும் பாப்பமே.. :wink: :P

ஆகா சாத்திரியாரும் தொடர் கதையுடன் வந்துவிட்டீங்களா.

நன்றாக இருக்கின்றது அடுத்த பாகங்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

யோவ் சாத்திரி என்ன லொள்ளா. நான் எவ்வளவு ஆவலாய் சாத்திரி கதை விடுதென்று சீ சீ சொல்லுதெண்டு ஓடோடி வந்திருக்கின்றேன். என்னைப் போய் :cry: :cry:

வாழ்த்துக்கள் சாத்திரி.. கதை படு வேகமோ வேகம்.. தொடருங்கள். :lol:

சாத்திரி கதை நல்லா இருக்கு

அடுத்த பாகங்களையும் ஆவலுடன் எதிர்பாக்கிறம்

வாழ்த்துக்கள் சாத்திரி.. கதை படு வேகமோ வேகம்.. தொடருங்கள். :lol:

சோழியன் அண்ணா உங்களின் வேகத்தை விடவா எவ்வளவு காலமா கொஞ்சம் கூட இளைப்பாறாமல் தொடர்ந்து ஓடுறீங்க :wink: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நான் முதலில் நினைத்தேன் நீர் குறிப்பு பாக்கிற சாத்திரி என்று. இப்ப உம்மட கதைய வாசித்தபின், செங்கை ஆழியான்,செம்பியன் செல்வன் போல உம்மிட்ட நல்ல திறமை இருக்குது என்று.3ம் பாகத்தினை வாசிக்க காத்துருக்கிரேன். மிகவும் நல்லாய் இருக்குது

மூன்றாம் பாகத்தினை வாசிக்க காத்துருக்கிறேன். கதை மிகவும் நன்றாக உள்ளது தொடருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா சாத்திரி அண்ணா கதை சூப்பர் தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள் :lol:

சாத்திரியார் உங்கள் தொடர் நன்றாக உள்ளது. வெளிநாட்டு மாப்பிள்ளைகள் சிலர் செய்யும் திருவிளையாடலை உங்கள் நாயகனும் செய்வாரோ????????????

அடே சாத்திரி மானிப்பாய் பெடியளின்ரை மானத்தை வாங்கிப்போடாதை..............(.கதையிலை) தொடர் வாசிக்க ஆவலைத் தூண்டுது........

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் உங்கள் தொடர் நன்றாக உள்ளது. வெளிநாட்டு மாப்பிள்ளைகள் சிலர் செய்யும் திருவிளையாடலை உங்கள் நாயகனும் செய்வாரோ????????????

பின்ன சும்மாவே!

அதுவும் சாத்திரியண்ணாவின் கதையில அது இல்லாமல் விடுமோ :wink: :lol:

சாத்திரி உங்கள் இரண்டாம் பாகமும் சூப்பர். எனக்கு ரவி குழப்புவரார் போல தெரியலை. பக்கத்தில் கூடியிருப்போரில் தான் சந்தேகம். எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்

சாதிதிரியாரே என்ன தொழிலை மாத்திவிட்டீர்களா ஆனால் உங்கள் கதை அருமையாக உள்ளது மிகுதிக் கதையைக் கேட்பதற்க்கு ஆவலாக உள்ளோம்.

ஆம்மாம் றமா அக்கா எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது. ஆனால் பொறுத்திருந்து பார்ப்போம் சாத்திரியார் என்ன சொல்கின்றார் என்று.

சாத்திரி அண்ணா கதை அருமையாக இருக்கு .... அடுத்த தொடரையும் வாசிக்க ஆவாலய் இருக்கு... தொடர்ந்து எழுதுங்க ... வாழ்த்துக்கள்...! :P

சாத்திரி அடுத்த பாகத்தை எழுதுங்கள்.. கதை எப்படி

போகும் என்று ஊகிக்க முடிகிறது..ஆனால் உண்மைக் கதை

என்ற படியால் வேறுமாதிரியும் போகக்கூடும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் சாந்தி ஒரு இளைஞன் தலைமுடி தோள்வரை வளர்ந்திருந்தது காதிலே தோடு கழுத்தில் இரண்முன்று சங்கிலிகள் அவன் போட்டிருந்தது கிழிந்த ஜீன்சா அல்லது கிழித்து போட்டிருந்தானா என்று தெரியவில்லை தோளில் ஒரு புத்தக பை காதில் வோக்மன் கொழுவியருந்தான்.

சாந்திக்கு உடல் சாது வாக நடுக்கமெடுத்து இதயதுடிப்பும் அதிகரித்தது பதில் வணக்கம் சொல்லுவமா விடுவமா என்று ஒரு தடுமாற்றம் சே வேண்டாம் என் நினைத்தவள் பேசாமல் தலையை குனிந்த படி எப்படா லிப்ற் கீழேபோய் சேரும் என்று காத்து நின்றவள் லிப்ற் கிழே நின்றதும் விறு விறுவென வெளியேறி பஸ் நிலையத்தை நோக்கி வேகமாக நடந்தாள்.

ஆனாலும் அவளிற்கு ஒரு பிரமை அந்த அவன் தன்னை பின் தொடர்ந்து வருவது போல ஆனாலும் திரும்பி பாக்காமல் நடந்தவாறே நினைத்தாள் ரவி சொன்னது உண்மை தான் அந்த பெடியனை பாத்தாலே ஒரு மாதிரியிருக்கு ஆழும் சடையும் அவனின்ரை கோலமும் பாத்தாலே பயமா இருக்கு என்ற நினைத்தபடி பஸ் நிலையத்தை அடைந்தவள் மெதுவாய் திரும்பி பார்த்தாள்.

அவன் கொஞ்ச தூரத்தில் வோக்மன் பாடலுக்கு தலையை ஆட்டியபடி ஒரு புத்தகத்தை படித்தபடி நின்றிருந்தான் அவனும் பஸ்சிறகாக தான் நிக்கவேண்டும் என்று நினைத்தவள் வேறு பலரும் அங்கு நின்றபடியால் சற்று ஆறுதலடைந்தாள் .

அன்று மாலை வீடு வந்தவள் ரவியிடம் காலைவிடயத்தை கூற நினைத்தவள் பின்னர் எதற்கு அவன் என்ன வணக்கம் தானே சொன்னவன் பிறகு தன்ரை பாட்டிலை போட்டான் இனியேதும் தொந்தரவு தந்தால் சொல்லலாம் என நினைத்து பேசாமல் இருந்து விட்டாள்.

ரவி வேலையால் வந்ததும் சாந்தியிடம் சாந்தி நாங்கள் கலியாணம் செய்ததிற்கு பாட்டி தரேல்லையெண்டு என்ரை சினேதங்கள் ஒரே பிரச்சனை இப்ப நீரும் வந்திட்டீர் வாற சனிக்கிழைமை என்ரை சினேகிதருக்கு ஒரு பாட்டி குடுப்பம் ஒரு பத்து பேரளவிலை வருவினம் கொஞ்ச பலகாரங்கள் செய்யும் .

எல்லாம் வெள்ளையள்தான் அதாலை சாப்பாடுகளை உறைப்பை கனக்க போடாமல் செய்யும் அதோடை மறந்திட்டன் நான் வேலையாலை வந்த உடைனைநாளைக்கு பின்னேரம் டொக்கரிற்டையும் ஒருக்கா போக வேணும் வெளிக்கிட்டு நில்லும் என்ன.

சாந்தி கொஞ்சம் குழம்பியவளாய் டொக்டரிற்ரையோ ஏன் உங்களிற்கு ஏதும் வருத்தமோ என்ன பிரச்சனை.

இல்லையப்பா உமக்குதான்

சாந்தி ஆச்சரியமாய் எனக்கோ எனக்கென்ன பிரச்சனை எனக்கொரு வருத்தமும் இல்லையே.

ரவி அவளின் முன்னால் போய் நின்றவாறே இஞ்சை நான் சொல்லுறதை கொஞ்சம் வடிவா கேளும் நீர் இப்பதான் வந்தனீர் கொஞ்சம் பிரெஞ்சு மொழியை படிச்சு ஒரு வேலை ஒண்டு தேடியெடுக்குமட்டும் ஒரு வருசத்திக்காவது எங்களிற்கு பிள்ளை வேண்டாம் அதுமட்டுமில்லை நாங்களும் கொஞ்சம் சந்தோசமா இருக்கலாம் அதாலை நாளைக்கு டொக்ரரிட்டை போய் உம்மை செக் பண்ணி ஒரு கொஞ்ச காலத்திற்கு தற்காலிக தடைஒண்டு செய்யதான் இது இஞ்சை சாதாரணமா செய்யலாம் பயப்பிடாதையும்விரும்பேக்கை எடுத்தா போச்சு என்னு ரவி சாதாரணமாகூற

சாந்திக்கு ரவி சொல்வது கொஞ்சம் நியாயமாக பட்டாலும் பயமாகவும் இருந்தது குழம்பிய மனநிலையில் ரவியை பார்த்து சரி நீங்கள் சொல்றுறீங்கள் பிறகு ஏதும் பிரச்னையள் வராட்டி சரி நாளைக்கு வெளிக்கிட்டு நிக்கிறன்.

மறுநாள் ரவி சாந்தியை அழைத்து சென்று வைத்தியரிடம் காட்டி சாந்திக்கு தற்காலிக குடும்ப கட்டுபாடும் செய்யபட்டது.அவர்கள் தயார் செய்த விருந்து நாளான சனிக்கிழைமையும் வந்தது சாந்தி தாயிடம் கற்று வைத்திருந்த பலகார வகைகள் எல்லாவற்றையும் செய்து முடிக்க ரவி வரேற்பறையில் மேசையை ஒழுங்கு பண்ணி மதுவகைகள் மற்றும் வேண்டிய பொருட்களை ஒழுங்கு படுத்தி முடித்தான்.

வரவேற்பறையில் வந்து பார்த்த சாந்தி என்னப்பா பத்துபேர்தான் எண்டியள் ஆனால் ஒரு அம்பது பேர் குடிக்கிற அளவுக்கு சாராய போத்தல் அடுக்கி வைச்சிருக்கிறியள். இண்டைக்கு திருவிழா போலைதான்.

ரவி தலையை ஆட்டியபடி சாராயம் இல்லை இதுகள் விஸ்கியும் பியரும் உமக்கு எங்கை இதுகளை பற்றி விழங்கபோகுது பேசாமல் சாப்பாடுகளை கொண்டு வந்து அடுக்கும் ஆக்கள் வாற நேரமாகிது.மற்றது இன்னொரு விசயம் இங்கை சினேகிதருக்கு வணக்கம் சொல்லேக்கை கன்னத்திலை கொஞ்சுறதுதான் வழக்கம் பாத்திருப்பீர் வெளியாலை அதாலை வாறவன் யாரும் கொஞ்சவந்தால் வெருண்டடிச்சு மரியாதையை வாங்கி போடாதையும் நீரும் பதிலுக்கு கொஞசும் என்ன.

ம் .......இங்கை வாழவெண்டு வந்திட்டம் ஏதோ இங்கத்தை பழக்க வழக்கங்களையும் அனுசரித்துதானே ஆகவேணும் என்றவாறே செய்த சாப்பாடுகளை அடுக்கி விட்டு அவளது வாழ்வில் முதல் திருப்பத்தை எற்படுத்த போகும் அந்த இரவு விருந்திற்காய் தன்னை அழகுபடுத்தி தயாரானாள். : :arrow:

என்ன உறவுகளே நீங்கள் என்னை நினைத்து பல்லை நறநறவெண்டு கடிக்கிறது விழங்கிது ஏகத்துக்கும் குழப்பி கதையை இழுக்கிறனா ?? தொடர் கதையெண்டா அப்பிடித்தான் அடுத்த தொடரில் சந்திப்போம்: :P :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.