Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊழல் மன்னா நீ நீடூழி வாழி வாழி....

Featured Replies

கருணாநிதிக்கு பல்வேறு தலைப்புகளில் பாராட்டு விழா நடத்தியாகி விட்டது. சமீப காலமாக பாராட்டு விழா நடத்தி நீண்ட நாட்கள் வேறு ஆகி விட்டன. அதனால் என்ன செய்யலாமென்று, திமுகவினர் யோசித்த போது அவர்களுக்கு வந்த திடீர் யோசனைதான், “ஊழல் மன்னன்“ என்ற பட்டத்தை கருணாநிதிக்கு வழங்கலாம் என்ற யோசனை. இதையொட்டி, நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு நம்ப தமிழ்நாடு சினிமா ராஜ்ஜியத்தின் ஆஸ்தான கவிஞர்கள் வைரமுத்துவும் வாலியும் கவிதை வாசித்தால் எப்பிடி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை....இதை நீங்கள் யாரவது கண்டினியூ பண்ணவும்...

வைரமுத்து…

அன்று சர்க்காரியா சொன்னார்.

நீ விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவன் என்று.

ஆனால் இன்று விஞ்ஞானத்திலேயே நீ ஊழல் செய்திருக்கிறாய்.

வானில் உள்ள தேவர்களின் எண்ணிக்கை கூட முப்பத்து முக்கோடி தான்.

நீ ஒரே தவணையில் அடித்ததோ ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி.

ஊழல் செய்வதில் நீ ஒரு எட்டமுடியாத சிகரம்.

ஊழலுக்கே உன் குடும்பம்தான் தலைநகரம்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் தலைவன் நீ..

உன் குடும்பம் வழி வந்தாரை வாழ வைக்கும் தலைவன் நீ…

ஆம் குடும்பத் தலைவன் நீ..

நான் கட்டியதோ பொன்மணி மாளிகை….

நீ கட்டியதோ பத்மாவதி, தயாளு மற்றும் ராசாத்தி…

சர்காரியாவையே சாக்கு மூட்டையில் கட்டியவன் நீ….

உன்னிடம் சுண்டைக்காய் சிபிஐ எம்மாத்திரம்…..

உனக்குப்புகழ்ச்சி அறவே புடிக்காது..

இவாறு கூட்டங்களில் வந்திருக்கும் நேரத்தில் கூட

எவ்வாறு கோடிகள் கிடைக்குமென்று சிந்திப்பவன் நீ...

இந்தியாவின் தலைசிறந்த ஊழல் மன்னன் பட்டத்திற்கு

என்றுமே திட்டமிட்டு நீ செயலாற்றியது கிடையாது...

நீ ஊழல் மன்னன் ஆகியது காலத்தின் கட்டாயமென்றால்

அது மிகையாகாது...

ஒருகோடி ஊழல் செய்வோரே

ஓயாது உழைக்கும்போது

ஓரயிரம் கோடி ஊழல் செய்யும் பெருந்தலைவன் நீ

ஓயாது ஓராயிரம் ஆண்டுகள் உழைக்க வேண்டுகிறேன்...

அடுத்து கவிஞர் வாலி.

கொற்றவனே… கொற்றவனே….

ஸ்பெக்ட்ரத்தை விற்றவனே…

தறுதலைகளை பெற்றவனே…

சூடு சொரணை அற்றவனே…

கொற்றவனே.. கொற்றவனே..

உன்னால் அடைய வேண்டியது ஏற்றம்.

தமிழகத்துக்கு கிடைத்ததோ ஏமாற்றம்.

மக்களுக்கு மிஞ்சியதோ முற்றம்.

உனக்கு அள்ளித் தந்தது ஸ்பெக்ட்ரம்.

தமிழில உனக்கு புடிச்ச வார்தை கோடி

நீ பெத்து வச்சுருக்க புள்ளைங்களோ கேடி

தள்ளு வண்டில போனாலும் தளராது உன் பாடி..

உன் புள்ளைங்களுக்கு நீதான் சரியான டாடி

எக்கச்சக்கமா சேத்துருக்க துட்டு

நீ கதை வசனம் எழுதுனா சூப்பர் ஹிட்டு

உன்னால தமிழகம் போனது கெட்டு

உனக்கு மக்கள் அடிக்கப் போறாங்க ரிவிட்டு

:D

பின்னீட்டீங்க நெருப்பு

எதுக்கும் கவனமாக இருங்கோ

உங்கள தூக்கினாலும் தூக்கீருவாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து கவிஞர் வாலி.

கொற்றவனே… கொற்றவனே….

ஸ்பெக்ட்ரத்தை விற்றவனே…

தறுதலைகளை பெற்றவனே…

சூடு சொரணை அற்றவனே…

கொற்றவனே.. கொற்றவனே..

உன்னால் அடைய வேண்டியது ஏற்றம்.

தமிழகத்துக்கு கிடைத்ததோ ஏமாற்றம்.

மக்களுக்கு மிஞ்சியதோ முற்றம்.

உனக்கு அள்ளித் தந்தது ஸ்பெக்ட்ரம்.

தமிழில உனக்கு புடிச்ச வார்தை கோடி

நீ பெத்து வச்சுருக்க புள்ளைங்களோ கேடி

தள்ளு வண்டில போனாலும் தளராது உன் பாடி..

உன் புள்ளைங்களுக்கு நீதான் சரியான டாடி

எக்கச்சக்கமா சேத்துருக்க துட்டு

நீ கதை வசனம் எழுதுனா சூப்பர் ஹிட்டு

உன்னால தமிழகம் போனது கெட்டு

உனக்கு மக்கள் அடிக்கப் போறாங்க ரிவிட்டு

:D

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உன்னால தமிழகம் போனது கெட்டு

உனக்கு மக்கள் அடிக்கப் போறாங்க ரிவிட்டு(revert)

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீ போட்டிருக்கும் கண்ணாடி கருப்பு

நீ இருக்கும் வரை தமிழகம் இருட்டு

நீ இறந்தால் உன் கட்சி உடையும் பதினெட்டு

அந்த நாளே தமிழனுக்கு புத்தாண்டு :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:D
  • கருத்துக்கள உறவுகள்

வானில் உள்ள தேவர்களின் எண்ணிக்கை கூட முப்பத்து முக்கோடி தான்.

நீ ஒரே தவணையில் அடித்ததோ ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி.

ஊழல் செய்வதில் நீ ஒரு எட்டமுடியாத சிகரம்.

ஊழலுக்கே உன் குடும்பம்தான் தலைநகரம்.

:lol:

  • தொடங்கியவர்

பின்னீட்டீங்க நெருப்பு

எதுக்கும் கவனமாக இருங்கோ

உங்கள தூக்கினாலும் தூக்கீருவாங்கள்

அய்ய்ய்யே... நானெல்லாம் அம்புட்டு வொர்த் இல்லீங்னா!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல, கவிதை நெருப்பு நீலமேகம். :D

என்னுடைய பங்கிற்கு கவிதை எழுத, முயற்சிக்கின்றேன்....

நீ, மெரினாவில் மூண்டு மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்தால்.....

இலங்கையில் போர் ஓயும்.

அதற்கு நன்றியாக ராசபக்சவுக்கு பொன்னாடை போர்த்தும்.....

பன்னாடையே......

சொறி, எனது முதல் கவிதை என்ற படியால்... நாக்கு ஸ்லிப் பண்ணிப் போட்டுது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நெருப்பு நீலமேகம் நீர் ஒரு காளமேகம்.

எதுகை மோனையில் ரீ.ஆர்.

அதுதான் உமது அவதார்.

கையில் வீச்சு அரிவாள்

கருத்தில் பாயுது போர்வாள்.

உங்கள் கவிதைக்கு அடுத்துவரும் கவிதை வீச்சாக இருக்க வேண்டும். என்னால முடியல்ல, அதுதான் உமக்கு ஒரு கவிதை! வாழ்த்துக்கள்!! :lol:

பா. வியையை விட்டுட்டீங்கள்!

  • தொடங்கியவர்

நீ, மெரினாவில் மூண்டு மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்தால்.....

இலங்கையில் போர் ஓயும்.

அதற்கு நன்றியாக ராசபக்சவுக்கு பொன்னாடை போர்த்தும்.....

பன்னாடையே......

சொறி, எனது முதல் கவிதை என்ற படியால்... நாக்கு ஸ்லிப் பண்ணிப் போட்டுது.

சூப்பர் அண்ணா...

நெருப்பு நீலமேகம் நீர் ஒரு காளமேகம்.

எதுகை மோனையில் ரீ.ஆர்.

அதுதான் உமது அவதார்.

கையில் வீச்சு அரிவாள்

கருத்தில் பாயுது போர்வாள்.

உங்கள் கவிதைக்கு அடுத்துவரும் கவிதை வீச்சாக இருக்க வேண்டும். என்னால முடியல்ல, அதுதான் உமக்கு ஒரு கவிதை! வாழ்த்துக்கள்!! :lol:

பா. வியையை விட்டுட்டீங்கள்!

:D
  • தொடங்கியவர்

நீ போட்டிருக்கும் கண்ணாடி கருப்பு

நீ இருக்கும் வரை தமிழகம் இருட்டு

நீ இறந்தால் உன் கட்சி உடையும் பதினெட்டு

அந்த நாளே தமிழனுக்கு புத்தாண்டு :(

அருமை அருமை...

நீ இறந்தால் உன் கட்சி உடையும் பதினெட்டு

அந்த நாளே தமிழனுக்கு புத்தாண்டு :(

அந்த நாள் தமிழனுக்கு புத்தண்டு மட்டுமில்லை தீபாவளி சூரன்போர் சிவராத்திரி நவராத்திரி தைப்பொங்கல் விசயதசமி மாட்டுப்பொங்கல் மற்றும் உள்ள எல்லாமும் அந்நாளே...

Edited by நெருப்பு நீலமேகம்

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றரை யுகங்களின் முன்

ஒன்றும் தெரியவில்லை,

கால கொடுமை கருவாகி

கலியுகத்தின்

மூல முழுமுதலாய்

பாவப் பிடாரி ஒன்று

பிறப்பெடுத்த கதை கேளீர்,

மாலை முடிந் திரவாகி

நடுச்சாமம்

கோட்டன் கூவ,

பேய் உலாவ பிடாரி வழி சந்தித்து

காதலாகி கை கோர்த்து

சூதகத்தில் காமம் தலைக்கேற

சுடுகாட்டில் புணர்ந்தெழுந்து

சுக்கிலம் இடம்மாறி,

காலக் கொடும் பதிவில்

கழகமொன்று குடும்பமாகி

கூடி உலை வைத்து கூறுபோட்ட

வாளும் வள்ளுவனின்

நாசம் பிறந்த கதை.

நடுச்சாமம் இருட்டு மழை

நாய் குரைத்து ஓலமிட

கண்மூடி கைதிறந்து

ஆண் மகவு அண்ணாந்து

வைகறையில்

ஓலமிட்டு அலறியது

புரண்டு படுத்து உடல் புரட்டி

தவழ்ந்து மலம் தின்று

புலைஞனாகி

கவிண்டு கண்ணடித்து

வீராணம் ஏரியிலே

விளையாட்டை முதலாக்கி

காகத்தின் கறுப்பில் கண்ணாடி பூட்டி

சூழ்ச்சி திருவினையாய்

சூது அது திருவிளமாய்

நாற்புறமும் கடை விரித்து

ஊழல் பல கண்டு

உறக்கமின்றி அறம்பாடி,

புறம்போக்கு நிலங்களையும்

பொது சனத்தின் பாதையையும்

கறந்து,

முரசொலிக்கும்,

கோவால புரத்துக்கும்

கொள்ளை கழகம்

அறிவாலயத்துக்கும்

சுரண்டி

குடிலமைத்து,

தினமொரு மகுடி ஊதி

சாரைப் பாம்பின் தலை முழுகி

காகிதப்பூ நாயகியின் கால் தழுவி

சேறெடுத்து குறி புதைத்து

கனிமொழியை பெற்றெடுத்து,

துவண்ட ஒரு பொழுது

தோல்வியை தவிர்ப்பதற்காய்

புறம்போக்கில் அமைந்திருந்த

கோவாலபுரத்து குடி வீட்டை

தானம் என்று சதிராடி,

தொல்காப்பியத்தின் தோளேறி

கண்ணதாசன் கவிதைகளில்

கல்லெறிந்து

போல்லாப் பிழையுடனே

பொய்யுரைத்து நூலெழுதி

நல்லவன்போல்

நாயகன்போல் பாவனாகி

நுண்ணியமாய் பொய்யுரைத்து,

காவலனாம் பெரியார் என்றும்

கண்மணி

அண்ணாவென்றும் கரகரத்து

நாயிற் கேவலமாய் புணர்ச்சி செய்து.

நரியின் குணமெடுத்து

கோடி ஊழல் கொடிகட்ட

கால் முடங்கி கண் அழுகி

நீசனாகி கிடந்தபோதும்

நாற்கடகம் நிறை சுமந்த நாடகத்தை

கூலருடன் குடிலமைத்து

சாகின்றேன் என்று சதிராடி

ஈழத்தமிழினத்தின்

வாழ்வில்

போல்லாத பெருங்கதையாய்

சாவுக்கும்

பிடிபடாமல் சண்டாளன்

மீண்டும் தலை நிமிர்த்தி,

கோரத்தனமான

குதர்க்கம் பேசி

மீண்டும் தேர்தலுக்காய்

வீல் செயரில்

ஆமை உருவத்தில் அமர்ந்திருந்து

காண்டாமிருகம்போல்

பாவாடை பேசும்

பன்னாடை நாயகனே.

நீ

பிறக்காமல் இருந்திருந்தால்...

  • கருத்துக்கள உறவுகள்

-----

சாகின்றேன் என்று சதிராடி

ஈழத்தமிழினத்தின்

வாழ்வில்

போல்லாத பெருங்கதையாய்

சாவுக்கும்

பிடிபடாமல் சண்டாளன்

மீண்டும் தலை நிமிர்த்தி,

கோரத்தனமான

குதர்க்கம் பேசி

மீண்டும் தேர்தலுக்காய்

வீல் செயரில்

ஆமை உருவத்தில் அமர்ந்திருந்து

காண்டாமிருகம்போல்

பாவாடை பேசும்

பன்னாடை நாயகனே.

நீ

பிறக்காமல் இருந்திருந்தால்...

 

ஈழம் கிடைத்திருக்கும்.

என்று.... உங்கள் கவிதையின் கேள்விக்கு, பதில் வைக்கின்றேன். :rolleyes:

 

ஆஹா.... அருமை, சுபேஸ்.....

மிக நீண்ட, நாட்களின் பின்.... ரசித்த கவிதை இது.

உங்கள் வருகையையும், ஆக்கங்களையும்.... ஆவலுடன் யாழில் எதிர் பார்க்கின்றேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பு, ஆரம்பிக்கப் பட்ட வருடம், 2011.
இன்று, கவிதை வந்த ஆண்டு 2015.
என்றும் மாறாமல்... இருப்பவன், மனிதனல்ல.
அது... கருணாவுக்கு, நன்றாகப் பொருந்தும். 

  • கருத்துக்கள உறவுகள்

 

https://www.youtube.com/watch?v=2h15v7g00R4

 

தயவு செய்து.... சவுண்டை, கூட்டி.... பாடலைக் கேட்கவும். :D  :lol: 

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஊழல் மன்னா நீ நீடூழி வாழி வாழி....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.