Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரச ஆதரவுப் போக்காளர்களின் “சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்” மாநாட்டு ஆதரவு அறிக்கை

Featured Replies

இலங்கை அரச துணைக்குழுக்களைச் சார்ந்தோரும், ஏனைய இலங்கை அரச சார்பு அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் பெரும்பான்மையாகக் கொண்ட குழுவினர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுமையும் இங்கு தரப்படுகிறது. இலங்கையில் நடைபெறும் “சர்வதேச எழுத்தாளர் மாநாட்டிற்கு” சார்பு நிலை கொண்டுள்ள இக்குழுவினரின் அணிசேர்க்கையை இவ்வறிக்கை வெளிக்கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்கிறோம்!

இலங்கை மற்றும் புகலிடத்தில் வாழும் சமூக அக்கறையாளர்களான நாங்கள் எதிர்வரும் சனவரியில் இலங்கையில் நடக்கவிருக்கும் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்று இந்த அறிக்கையின் கீழே கையொப்பமிட்டுள்ளோம்.

கடந்த முப்பது வருடகால யுத்தத்தால் உறவுகள் சீர்குலைந்து போயிருக்கும் தமிழ் – முஸ்லிம் – மலையக -சிங்கள எழுத்தாளர்களிடையே ஒரு பகைமறுப்புக் காலத்தைத் தோற்றுவிக்கவும் இலங்கையில் தமிழ்மொழி இலக்கியத்தைச் செழுமைப்படுத்துவதற்கான ஓர் எத்தனமாகவும் பல்வேறு கருத்து – அரசியல் நிலைப்பாடுகளிலிருக்கும் எழுத்தாளர்களிடயே ஓர் ஆரோக்கியமான உரையாடலை ஏற்படுத்திக்கொடுக்கும் களமாகவும் நாங்கள் இந்த மாநாட்டைக் கருதுகிறோம்.

அயல்நாட்டு மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களுக்கும் இலங்கையிலிருக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையே சிந்தனைப் பரிமாறலை சாத்தியப்படுத்துவதோடு அவர்கள் எதிர்காலத்தில் இணைந்து பல்வேறு இலக்கியப் பணிகளை முன்னெடுக்கவும் இந்த மாநாடு வாய்ப்பளிக்கும் எனக் கருதுகிறோம்.

மாநாட்டு அமைப்பாளர்கள் முன்வைத்திருக்கும் 12 முன்னோக்குகளும் மிகச் சரியானவை எனவும் அவை இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களிற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் நன்மைகளைச் சாதிக்கவல்லவை என்றும் கருதுகிறோம்.

இந்த மாநாடு இலங்கை அரசால் நடத்தப்படவில்லை என மாநாட்டு அமைப்பாளர்கள் பலதடவைகள் ஊடகங்களில் உறுதிமொழிகளை அளித்துள்ளார்கள். இம்மாநாட்டிற்கும் இலங்கை அரசுக்குமான தொடர்புகள் இதுவரை எவராலும் நிரூபணம் செய்யப்படவில்லை. மாநாடு மீது இவ்வாறு ஆதாரமில்லாத அவதூறுகளைச் சுமத்திய எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையையும் ‘குமுதம் ரிப்போர்டர்’ இதழையும் ‘புதிய ஜனநாயகம்’ இதழையும் வன்மையாகக் கண்டனம் செய்கிறோம்.

இந்த மாநாட்டை நிராகரிக்கக்கோரி “சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் -கலைஞர்கள்” என்ற பெயரால் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையை நாங்கள் முற்று முழுவதுமாக நிராகரிக்கிறோம். இந்த மாநாட்டை இலங்கை அரசு பயன்படுத்திக்கொளளக் கூடும் என்ற ஊகமே அவர்களது அறிக்கையின் மையம். இந்த ஊக அரசியல் மலிவானது. ஊகத்தை முன்னிறுத்தியே ஒரு ஆக்கபூர்வமான மாநாட்டை அவர்கள் நிராகரிக்கக் கோருவது அநீதியானது. மாநாடு அரசு சார்பாக மாறாதவரை ஊகத்தின் அடிப்படையில் அதை நிராகரிக்கக் கோருவது நியாயமற்றது எனக் கருதுகிறோம்.

இன்று இலங்கையில் ஊடகச் சுதந்திரம் அரசால் கடுமையாக அச்சுறுத்தலிற்கு உள்ளாகியிருக்கும் நிலையில் இவ்வாறான ஒரு மாநாடு தேவையா என எழுப்பப்படும் எதிர்ப்புகளையும் நாம் நிராகரிக்கிறோம். இந்த அச்சுறுத்தல் சூழலுக்குள்ளும் அதை எதிர்கொண்டு மாநாடு நடத்தப்படுவதையும் குழு நிலை மோதல்களிற்கு அப்பால் அரசியல் உண்மைகளைப் பேசுவதற்கு மாநாட்டில் தடையில்லை என அறிவித்திருக்கும் மாநாட்டு அமைப்பாளர்களின் நிலைப்பாட்டையும் வரவேற்கிறோம்.

கடந்த முப்பது வருட யுத்தத்தில் இலங்கை அரசு செய்த அனைத்துக் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியும் இழப்பீடுகளும் வழங்கப்பட வேண்டும். ஆனால் அதற்காக இலங்கையில் எந்த நிகழ்வுகளையுமே நடத்தக் கூடாது எனச் சொல்லப்படும் கருத்துகளை நாங்கள் மறுக்கிறோம். குறிப்பாகத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை நோக்கி நடத்தப்படும் மாநாட்டை நடத்தக்கூடாது எனச் சட்டாம்பிள்ளைத்தனம் செய்பவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இலங்கையில் மாநாடு நடத்துவது எமது பிறப்புரிமை. முப்பது வருடகால யுத்தத்தில் எழுத்தாளர்கள் கலைஞர்களிடமிருந்து இலங்கை அரசாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் இன்னபிற ஆயுதக் குழுக்களாலும் பறிக்கப்பட்ட கருத்து – எழுத்து உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய நெடிய போராட்டம் எம்முன்னே உள்ளது. அந்த நெடிய பாதையில் இவ்வாறான ஒரு மாநாடு நடைபெறுவது ஒரு முன்னேற்றகரமான புள்ளியென்றே கருதுகிறோம்.

இலங்கையின் எல்லாச் சமூகத்தளங்களிலும் இருந்தும் எழுத்தாளர்களை இந்த மாநாடு ஒன்றிணைக்க வேண்டுமென விரும்புகிறோம். குறிப்பாக தலித்துகள், பெண்கள், முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் போன்ற விளிம்புநிலையினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் எழுத்தாளர்கள் மாநாட்டில் முன்நிலைப்படுத்தப்பட வேண்டுமென மாநாட்டு அமைப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த மாநாட்டிற்குப் புலமைசார் பங்களிப்பையும் தார்மீக ஆதரவையும் வழங்குமாறு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

-28 டிசம்பர் 2010.

அறிக்கையில் இலங்கையிலிருந்து கையொப்பமிடுபவர்கள்:

தெணியான் (எழுத்தாளர், சிறுபான்மைத் தமிழர் மகாசபை)

கவிஞர் சோ.பத்மநாதன்

சுமதி சிவமோகன் (பேராசிரியை, பேராதெனியா பல்கலைக்கழகம்)

ரியாஸ் குரானா (எழுத்தாளர்)

பெர்னாண்டோ ஜோசப் (பத்திரிகையாளர்)

தமிழழகன் (சிறுபான்மைத் தமிழர் மகாசபை)

மஜீத் (எழுத்தாளர்)

மு.மயூரன் (எழுத்தாளர்)

தேவராஜன் ரெங்கன் (சட்டத்தரணி, சமூகவியலாளர், பத்திரிகையாளர்)

ஏ.சி.ஜோர்ஜ் (ஆசிரிய ஆலோசகர், சமூகவியலாளர், எழுத்தாளர்)

சே.சிவபாலன் (மனித உரிமை செயற்பாட்டாளர்)

பூபாலசிங்கம் சிறீதர்சிங் (பதிப்பாளர்)

கிருஸ்ணசாமி கிருபானந்தா (எழுத்தாளர்)

சிவநாமம் சிவதாசன் (எழுத்தாளர்)

பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா (யாழ் பல்கலைக்கழகம்)

கே.வி.குணசேகரன் (ஓய்வு நிலை கல்விப் பணிப்பாளர்)

வை.சிவசுப்பிரமணியம் (எழுத்தாளர்)

த.பாலதயானந்தன் (ஊடகவியலாளர்)

மதுரகவி காரை எம்.பி.அருளானந்தம்

ந.சதீஸ் (ஊடகவியலாளர்)

ஜெ.பாலகுமரன் ( ஊடகவியலாளர்)

பா.கலைவாணி (பத்திரிகையாளர்)

க.சோபனா (பத்திரிகையாளர்)

வல்லி தாமோதரராஜா (பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர், பளை)

சின்னத்தம்பி தங்கராசா (உதவி அரச அதிபர், சாவகச்சேரி)

தியாகராஜா சண்முகவடிவேல் (ஊடகவியலாளர்)

செல்லத்துரை நவநாதன் (பத்திரிகையாளர்)

செல்லத்தம்பி மாணிக்கம் (விரிவுரையாளர்)

அறிக்கையில் புகலிடத்திலிருந்து கையொப்பமிடுபவர்கள்:

வி.ரி. இளங்கோவன் (எழுத்தாளர்)

சரவணன் நடராசா (ஊடகவியலாளர்)

கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன்

சுமதி ரூபன் (எழுத்தாளர்)

ஹரி இராசலட்சுமி (எழுத்தாளர்)

த. அகிலன் (எழுத்தாளர், வடலி பதிப்பாளர்)

கரவைதாசன் (எழுத்தாளர்)

நிர்மலா ராஜசிங்கம் (இலங்கை ஜனநாய ஒன்றியம்)

சந்துஷ் (எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்)

நட்சத்திரன் செவ்விந்தியன் (எழுத்தாளர்)

ரவிநேசன் பொன்னுத்துரை (பத்திரிகையாளர்)

உதயகுமார் (ஊடகவியலாளர்)

ஜீவமுரளி (எழுத்தாளர்)

விஜி (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

தேவதாசன் (தலைவர் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி, இணைப்பாளர் சிறுபான்மைத் தமிழர் மகாசபை)

நோயல் நடேசன் (எழுத்தாளர்)

அசுரா (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

அன்ரன் (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

சிவசாமி சிவராசன் (புலம் பெயர்ந்த இலங்கையர்களிற்கான வலையமைப்பு)

எஸ்.சுந்தரலிங்கம் (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

அருந்ததி (திரைப்பட இயக்குனர், தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

எஸ். காசிலிங்கம் (இலங்கை கிராம அபிவிருத்திச் சங்கம்)

யோகரட்ணம் (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

ப.பகீரதன் (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

தர்மினி ( ‘தூமை’ இணையத்தளம்)

தேவகாந்தன் (எழுத்தாளர்)

எம்.ஆர்.ஸ்டாலின் (ஜனநாயத்திற்கான கிழக்கிலங்கை முன்னணி)

ஷோபாசக்தி (எழுத்தாளர்)

உமா (எழுத்தாளர்)

கற்சுறா ( ‘மற்றது’ இணையத்தளம்)

ராமமூர்த்தி ராஜேந்திரன் (முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்)

ச.வாசுதேவன் (நாடகக் கலைஞர்)

செ.கிருஸ்ணமூர்த்தி (எழுத்தாளர்)

டி.பி.எஸ்.ஜெயராஜ் (பத்திரிகையாளர்)

நா. ஸ்ரீ கெங்காதரன் (சமூக சேவையாளர்)

அகிலன் கதிர்காமர் ( இலங்கை ஜனநாயக ஒன்றியம்)

நஜா முகமட் (இலங்கை இஸ்லாமியர் முன்னணி)

மாணிக்கம் நகுலேந்திரன் (ஆசிரியர் -தாகம், நிரூபம்)

ராகவன் ( (இலங்கை ஜனநாய ஒன்றியம்)

http://inioru.com/?p=19097

முன்னதாக எழுத்தாளர் மாநாட்டை எதிர்த்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கை:

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு: கூட்டு அறிக்கை.

http://inioru.com/?p=18509

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலா அக்கா இப்பவும் செல்வியா :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை கையெழுத்திட்டுள்ளவையில சில பேரை எனக்குத் தெரியும். அவை எல்லாம்.. ஊரில இருந்து போரை சாட்டி கொழும்புக்கு வந்த ஆக்கள். உண்மையில போர் சாட்டு.. புலிகள் காசு கேக்கினம்.. அதுஇதெண்டு சொல்லிக் கொண்டு தான் வந்தவை. அவை இவ்வளவு நாளும் மதில் மேல் பூனையா இருந்தவை. இப்ப சிங்கம் புலியை அடிச்சிட்டுது என்ற துணிவில சிங்கத்தின்ர குகைக்குள்ள பாய்சிட்டினம். ஒரு நாளைக்கு சிங்கம் கூட்டா இவையை அடிக்கேக்க தெரியும்.. தமிழ் புலியா.. சிங்களச் சிங்கமா நல்லமென்று.

அது சரி.. கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் இவருடைய ஆக்கங்கள் யாழிலையும் மிளிர்ந்தனவோ. எங்கையோ கண்ட பெயராக் கிடக்குது..??! :huh::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கனடியத் தமிழர் விழிப்புணர்வு மன்றம்;

உரையாடல் களம் குறித்த பதிவு

கற்சுறா

கனடியத் தமிழர் விழிப்புணர்வு மன்றம்; இன்றைய அரசியலும் தமிழ் மக்களது நிலவரமும் எனும் தலைப்பில் உரையாடல் களம் ஒன்றை ஏற்படுத்தியிருந்தார்கள். நிகழ்வு 19 டிசம்பர் 2010 ஞாயிறு காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது. நிகழ்வில் மிகக் குறைந்தளவு நண்பர்கள் கலந்து கொண்டபோதும் அங்கு சில கவனிக்கத்தக்கதான விடையங்கள் பேசப்பட்டன.

தோழர்கள் தர்மராசா, தவபாலன் ஆகியோர் நிகழ்விற்கு தலைமை தாங்கினார்கள்.

உரையாடல் களத்தில் தவபாலன் அவர்கள் கடந்த காலங்களில் நம்மில் பலர் ஈழச் சேற்றில் புதைந்து கிடந்தவர்கள். இன்றும் அதன் தொடர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கின்றது. இதனால் இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த மக்களுகம் மிகுந்த பாதிப்புக்கள்ளாகிறார்கள். ஒடக்கப்பட்ட சமூகங்களின் பக்கம் நின்று நம்பிக்கை தரக்கூடிய பாட்டாளி வர்க்ககட்சி இன்று உலகம் ப+ராவும் இல்லை. புலிகளின் தோற்கடிப்பிற்குப் பின் தெற்காசியவில் இம்பிறியலிசம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. அதன்பின்னணியில் இலங்கையிலுள்ள நிலைப்பாடுகள் குறித்து இங்கு உரையாட இருப்பதாகத் தெரிவித்ததார்.

தொடர்ந்து தோழர் மணியம் அவர்கள் உரை நிகழ்த்தினார். மணியம் பேசுகையில்,

ஒருகாலத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நிலைப்பாடுகளை கடுமையான முறையில் இலங்கை அரசுகள் ஏற்படுத்தியிருந்தன. அதன் தாக்கங்களாகத்தான் பண்டாரநாயக்காவின் கொலையின் பின்னணி அமைந்தது. ஏகாதிபத்தியத்தின் பின்னணியில் தான் ஜே.வி.பி.யினது அழிப்பு நடைபெற்றது. சந்திரிகா அரசினது வீழ்ச்சிக்குப் பின்னாலும் ஏகாதிபத்தியத்தின் பின்னணி இருந்தது. இன்று இருக்கின்ற அரசு மீதான ஏகாதிபத்தியத்தினது எதிர்ப்பு என்பது தங்களது செல்லப்பிள்ளையான புலிகளை இந்த அரசு தோற்கடித்தது என்ற பின்னணியே காரணமாக அமைகிறது. அதனால் தான் ராஜபக்ஸவுக்கு எதிராக இந்த ஏகாதிபத்தியம் பொன்சேகாவை முன்நிறுத்தியது. இதனை இன்று விக்கிலீக் ஊர்சிதம் செய்திருக்கிறது. அதே நேரம் இன்றைய இலங்கை அரசு ஒரு முன் மாதிரியான அரசு என்றோ ஜனநாயகம் தழும்பிய அரசு என்றோ நாம் சொல்லவில்லை. நாம் நமது சுவரைப் பாதுகாக்க வேணும் பின் சித்திரம் வரையலாம் என்றே சொல்கிறோம். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நகர்வுகள் மூலமோ அல்லது யுத்தத்தில் வெற்றியீட்டிய கதை மூலமோ ராஜபக்ஸ தனது அரசை தொடர்ச்சியாகத் தக்க வைக்க முடியாது. தென்னிலங்கை மக்களது தொழில்கள் இலங்கையின் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்து தீர்க்கமான திட்டமிடல் வேண்டும் இல்லையேல் அவர் தனது ஆட்சியைத் தொடரமுடியாது.

இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது இலங்கை சுதந்திரம் அடைய முன்பிருந்தே வைக்ப்பட்டு வந்தது. ஆனால் அவை எதுவும் பரீட்சிக்கப்படவில்லை. அதன்பிறகு வந்த எல்லாவிதமான தீர்வுகளும் ஐக்கிய தேசியக் கட்சியாலும் ஜே.வி.பி யாலும் புலிகளாலும் கிழித்தெறியப்பட்டுக் கொண்டு வந்தது. பண்டா -செல்வா, வடக்குக் -கிழக்கு, சந்திரிகா அவர்களது தீர்வு என எல்லாமே தட்டிக்கழிக்ப்பட்டது. சந்திரிகா அவர்களது திர்வில் வடக்கக் கிழக்கு மாகாணங்கள் அதாவது தமிழர்தாயகம் என்பது மத்திய அரசால் என்றும் கலைக்க முடியாது என்பதும் மலையக மக்களது பிராஜா உரிமை நிரந்தரமானது என்பது அடங்கலாக தமிழர்களது உரிமைகள் பரவலாக உறிதிப்படுத்தப்பட்டது. அது திட்டமிடப்பட்டு புலிகளாலும் ஐக்கியதேசியக்கட்சியாலும் நிராகரிக்கப்பட்டது.

இனப்பிரச்சனைக்கான தீர்வை எங்கிருந்து தொடங்குவது என்பது மிக முக்கியமானது. என்னைப் பொறுத்தளவில் இலங்கை போன்ற சிறிய நாட்டினுள் மகாணசபை முறைதான் பொருந்தும் என நினைக்கிறேன். மகாணசபையின் அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டு பின் அதனை மேம்படுத்த வேண்டும். இனப்பிரச்சனையின் தீர்வில் மக்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் நாம் முழுதாக இணைவோம் என்று தனது உரையை முடித்தார்.

அடுத்து தோழர் மித்திரன் அவர்க்ள் பேசும் போது இலங்கையின் நலன் சார்ந்த விடையத்தில் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன் அது நடந்து விட்டது அதை செயற்படுத்திய இந்த அரசை நான் அதற்காக வரவேற்கிறேன். ஆனால் இந்த அரசு முழுமையான நம்பிக்கையான முற்போக்கான அரசு என்று நான் சொல்லவில்லை. சிறு நம்பிக்கை இருந்தது அவ்வளவுதான். தமிழர் விடுதலைக் கூட்டணிகூட சந்திரிகாவின் திர்வை எதிர்த்தது. நமது விருப்பம் என்பது வேறு யதார்த்தம் என்பது வேறு. அதனை உணர்ந்து நாம் செயற்படவேண்டும். என்றார்.

அடுத்துக் தோழர் கதிரவேல் அவர்கள் பேசியபோது

நான் இலங்கையில் திசவிதாரண போன்றவர்களிடம் பேசியிருக்கிறேன் இந்த அரசு யுத்தத்தில் வெற்றி பெற்றது சந்தோசமான விடையம். ஆனால் மக்கள் நலன் சார்ந்த தீர்வு ஒன்றை அவர்கள் முன்வைக்க வேண்டும். அது முக்கியம். அதற்கான அழுத்தங்களை நாம் கொடுக்க வேண்டும்.உங்களுக்குத் தெரியும் சந்திரிகா அவர்கள் தமிழர்கள் சார்பாகப் பேசியபோது பெரும்பாலான சிங்களமக்கள் விரும்பவில்லை. அவரது படத்திற்கு பொட்டுவைத்து தமிழரக அடையாளப்படுத்தினார்கள். என்பதைச் சுட்டிக் காட்டினார்.

அடுத்து தோழர் திருநாவுக்கரசு அவர்கள் பேசும் போது, நான் 5மாதங்கள் இலங்கையில் நின்றேன். அங்கு 30வருசமாக எப்படி இயங்கியதோ அப்படித்தான் எல்லா அரச நிர்வாகமும் இருக்கிறது. யாரும் மக்களுக்காக வேலை செய்வதில்லை. அன்றாட வாழ்வில் மக்கள் எவ்வளவோ துன்பங்களுடன் வாழ்கிறார்கள். மக்களது முன்னேற்றம் பொது வாழ்வு குறித்துப் பேச யாரும் இல்லை. அங்கு 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினாலே மக்களது வாழ்வில் பெரிய மாற்றம் வரும். பாருங்கள் 20 மாதம் யுத்தம் முடிந்து. பெரிய அபவிருத்தி என்கிறார்கள் ஆனால் யாழ்ப்பாணத்திற்கு இன்னும் றெயின் ஓடவில்லை. சொகுசு பஸ் – 150 பஸ்கள் ஒடுகின்றன. றெயின் ஓடினால் அங்கு பொருட்களின் விலை பாதியாகக் குறையும் அதுவே பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும். அங்கு இருக்கின்ற சாதாரணமான சின்னக் கடைகளில் கூடநாளுக்கு 5,6 இலட்சங்கள் புரளுகின்றன. அவர்கள் ஒருபோதும் சிவில் நிர்வாகம் வர அனுமதிக்கமாட்டார்கள். சிவில் நிர்வாகம் வந்தால் வருமானவரிப் பிரச்சனைகள் வரும் அதனால் என்னதான் இந்த அரசுகள் தீர்வுகள் பற்றிப் பேசினாலும் இந்த மாதிரியான நமது தமிழர்கள் விரும்பமாட்டார்கள். எதிர்ப்பார்கள். றெயின் ஓடுவதைக் கூட இந்த சொகுசு பஸ் முதலாளிகள் விரும்பமாட்டார்கள். இதுதான் அங்குள்ள நிலை. என்று தனது அனுபவத்தைக் கூறினார்.

அடுத்து ஜானகி பேசியபோது நான் இலங்கைக் சென்றபோது பல பெண்களுடன் பேசியிருக்கிறேன். நேரடியாகவே சொல்கிறேன். சனியன் தொலைஞ்சது என்று பச்சையாகவே பேசினார்கள். ஒரு தன்நிறைவு வாழ்வைக் கொண்ட மட்டக்களப்பு. தயிரும் சோறும் பழங்களும் என்றிருந்த மண். இன்று எல்லாம் இழந்து போய் நிற்கிறது. பதவிக்காகவும் தொழில் சார் கல்விக்காகவும் ஆசைப்பட்ட பிரதேசமல்ல அது. தற்போது அது பெருவாரியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஒருகாலத்தில் செழித்திருந்த தயிர் வளம் இன்று அங்கு இல்லை. யுத்தத்தால் அழிக்கப்பட்டு விட்டது. அதில் மாற்றம் வரவேண்டும் எனப் பேசினார்.

DSC029221.jpg

அடுத்துத் திலீபன் அவர்கள் பேசும் போது முழத்துக்கு முழம் இராணுவம் உள்ள பிரதேசத்தில் இராணுவ ஆட்சிதானே நடக்கும். நடக்கிறது. புலிகள் தலைமை அழிக்கப்படத்தான் வேணும். ஆனால் அப்பாவிப் பொதுமக்கள், போராளிகள் அழிக்கப்பட்டது கோரமானது. அதை ஏற்கமுடியாது. புலிகள் அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதற்கு கனடியன் போர் பீஸ் என்ற அமைப்பு கணிசமான அளவு வேலை செய்தது. குறைந்த பட்ச உடன்பாடுகளுடன் நாம் சேர்ந்து வேலை செய்ய வேண்டும். எனவும் கூறினார்.

அடுத்து தோழர் சண்முகநாதன் அவர்கள் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்து நீண்ட வாழிவியலுக்கான நம்பிக்கைய+ட்டும் தீர்வை முன்வை என்று அரசினை நிர்ப்பந்திக்க வேண்டும் என்றார்.

அடுத்து சபேசன் குறைந்த பட்சம் தமிழர்களது பிரதிநிதிகள் ஒன்று சேரவேண்டும் என்றும், இங்குள்ள பல அமைப்புக்கள் தற்போது ஒன்று சேர்ந்திருப்பதாகவும் அதனுடன் இந்த அமைப்பும் ஒரு உரையாடலை ஏற்படுத்த வேண்டும் எனவும் சாத்தியமானதைச் செய்யத் தயாராக வேண்டும் எனவும் கூறினார்.

கலந்துரையாடலில் தேவன,; வீரசிங்கம், மகேஸ்வரன், கற்சுறா மற்றும் பலர் பங்கு பற்றினார்கள்.13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து திவிரமாக உரையாடப்பட்டது.

(இந்த நிகழ்வு பற்றியவிபரம் ஒலிப்பதிவில்லாமல் வெறுமனே குறிப்பு எடுத்து எழுதியதால் உரையாடல்களில் சில விடுபட்டுள்ளது. கற்சுறா)

http://www.matrathu.com/2010/12/19/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae/

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் இப்படி நிறைய கற்சுறாக்கள்.. பாற் சுறாக்கள் இருக்கின்றன.

எனி கூட்டம் போட வேண்டியது தானே.

எழுத்தாளர்கள்.. படைப்பாளிகள்.. இவை எல்லாம் இலகுவாகக் கொடுக்கக் கூடிய பரிமாறக் கூட பட்டங்கள். இதுகளை தாங்கி கொண்டு தாங்கள் சமூகத்தில் பெரிய ஆக்கள் என்ற தோறணையில் பலர் அலையினம்.

அவர்களின் அறிவுக்கு கடந்த 30 வருடம் புலிகள் வளர்த்தது சிங்கள தமிழ் பகை. அதற்கு முதல் அவையின்ர அப்பன் பாட்டன் சிங்களவனோட சந்தோசமா வாழ்ந்தவையல்லோ..!

புலிகளின் தலைமை அழியனும்.. ஆனால் மக்கள் போராளிகள் அழியக் கூடாதாமெல்லே. என்ன கரிசணை...??! புலிகள் மட்டும் வானத்தால விழுந்தவை.. இவை மட்டும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாம் எல்லே..!

கேட்கிறவன் கேணயன் என்றால் எருமை மாடும் ஏரோ பிளேன் ஓட்டும்..! :lol::D

  • தொடங்கியவர்

அறிக்கையில் புகலிடத்திலிருந்து கையொப்பமிடுபவர்கள்:

வி.ரி. இளங்கோவன் (எழுத்தாளர்)

சரவணன் நடராசா (ஊடகவியலாளர்)

கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன்

சுமதி ரூபன் (எழுத்தாளர்)

ஹரி இராசலட்சுமி (எழுத்தாளர்)

த. அகிலன் (எழுத்தாளர், வடலி பதிப்பாளர்)

கரவைதாசன் (எழுத்தாளர்)

நிர்மலா ராஜசிங்கம் (இலங்கை ஜனநாய ஒன்றியம்)

சந்துஷ் (எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்)

நட்சத்திரன் செவ்விந்தியன் (எழுத்தாளர்)

ரவிநேசன் பொன்னுத்துரை (பத்திரிகையாளர்)

உதயகுமார் (ஊடகவியலாளர்)

ஜீவமுரளி (எழுத்தாளர்)

விஜி (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

தேவதாசன் (தலைவர் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி, இணைப்பாளர் சிறுபான்மைத் தமிழர் மகாசபை)

நோயல் நடேசன் (எழுத்தாளர்)

அசுரா (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

அன்ரன் (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

சிவசாமி சிவராசன் (புலம் பெயர்ந்த இலங்கையர்களிற்கான வலையமைப்பு)

எஸ்.சுந்தரலிங்கம் (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

அருந்ததி (திரைப்பட இயக்குனர், தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

எஸ். காசிலிங்கம் (இலங்கை கிராம அபிவிருத்திச் சங்கம்)

யோகரட்ணம் (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

ப.பகீரதன் (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

தர்மினி ( ‘தூமை’ இணையத்தளம்)

தேவகாந்தன் (எழுத்தாளர்)

எம்.ஆர்.ஸ்டாலின் (ஜனநாயத்திற்கான கிழக்கிலங்கை முன்னணி)

ஷோபாசக்தி (எழுத்தாளர்)

உமா (எழுத்தாளர்)

கற்சுறா ( ‘மற்றது’ இணையத்தளம்)

ராமமூர்த்தி ராஜேந்திரன் (முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்)

ச.வாசுதேவன் (நாடகக் கலைஞர்)

செ.கிருஸ்ணமூர்த்தி (எழுத்தாளர்)

டி.பி.எஸ்.ஜெயராஜ் (பத்திரிகையாளர்)

நா. ஸ்ரீ கெங்காதரன் (சமூக சேவையாளர்)

அகிலன் கதிர்காமர் ( இலங்கை ஜனநாயக ஒன்றியம்)

நஜா முகமட் (இலங்கை இஸ்லாமியர் முன்னணி)

மாணிக்கம் நகுலேந்திரன் (ஆசிரியர் -தாகம், நிரூபம்)

ராகவன் ( (இலங்கை ஜனநாய ஒன்றியம்)

4_15_2.gif

.... அடியேனும் வேலை வெட்டி இல்லாமல் உழுது கொண்டு திரிகிறேன், என்னைக் கேட்டிருந்தால் யானும் கைநாட்டு போட்டிருப்பேன்.. :lol:

அதற்கு குறைத்தது ஒரு கதையோ கவிதையோ பத்திரிகையில் வரக்கூடியதாக எழுதியிருக்க வேண்டுமாம்..யாழில எழுதுகிறதுகள் செல்லாதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு குறைத்தது ஒரு கதையோ கவிதையோ பத்திரிகையில் வரக்கூடியதாக எழுதியிருக்க வேண்டுமாம்..யாழில எழுதுகிறதுகள் செல்லாதாம்.

நான் எழுதி இருக்கிறேன்.. உதயன்.. வீரகேசரி.. தினக்குரல் என்று எல்லாம் வந்திருக்குது. அப்ப நானும் படைப்பாளியா.. எழுத்தாளனா...??!

ஐயையோ என்ன தவற விட்டிட்டு ஒரு மாநாடா...???! :D:lol::D

(பேப்பரில போட ஒண்டும் இல்லை என்றால் சும்மா கிடக்கிற குப்பை தொண்டியைக் கிழறி போடுறதுகள் தான்... இவைட படைப்புகளில் அதிகம். மற்றும் படி செல்வாக்குள்ளவை எழுதினா பேப்பர் தானா மடக்கு மடக்கு எண்டும். அதில கருத்தாளம் இருக்கோ இல்லையோ.... என்றெல்லாம் பார்க்கிறதில்ல. பெயரை மட்டும் தான் பாப்பினம்.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

4_15_2.gif

.... அடியேனும் வேலை வெட்டி இல்லாமல் உழுது கொண்டு திரிகிறேன், என்னைக் கேட்டிருந்தால் யானும் கைநாட்டு போட்டிருப்பேன்.. :lol:

உண்மைதான்

இதிலுள்ள சிலரை எனக்கு தெரியும்

அவர்களது வேலையே சும்மா இருத்தல் தான்.

அகதிக்காசிலிருந்து தற்போது பென்சனுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பக்கத்தில் நின்றால் எவ்வளவு வருகுது அதை எப்படி அதிகரிப்பது என்ற பேச்சுத்தான் இருக்கும்

ஆனால் பெயருக்கு பின் பல பல செயற்கை பதவிகள்

இதிலுள்ள ஒருவர் சில நாட்களுக்கு முன் ஒரு புத்தகத்துக்கு வாழ்த்து எழுதியிருந்தார். கையொப்பத்துடன் சில பதவிகளைச்சேர்த்திருந்தார். பார்த்ததும் அக்கம் பக்கத்தை மறந்து சிரித்துவிட்டேன்.

Edited by விசுகு

  • தொடங்கியவர்

நிர்மலா அக்கா இப்பவும் செல்வியா :unsure:

36_1_19.gif

  • தொடங்கியவர்

அதற்கு குறைத்தது ஒரு கதையோ கவிதையோ பத்திரிகையில் வரக்கூடியதாக எழுதியிருக்க வேண்டுமாம்..யாழில எழுதுகிறதுகள் செல்லாதாம்.

அறிக்கையில் புகலிடத்திலிருந்து கையொப்பமிடுபவர்கள்:

வி.ரி. இளங்கோவன் (எழுத்தாளர்)

சரவணன் நடராசா (ஊடகவியலாளர்)

கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன்

சுமதி ரூபன் (எழுத்தாளர்)

ஹரி இராசலட்சுமி (எழுத்தாளர்)

த. அகிலன் (எழுத்தாளர், வடலி பதிப்பாளர்)

கரவைதாசன் (எழுத்தாளர்)

நிர்மலா ராஜசிங்கம் (இலங்கை ஜனநாய ஒன்றியம்)

சந்துஷ் (எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்)

நட்சத்திரன் செவ்விந்தியன் (எழுத்தாளர்)

ரவிநேசன் பொன்னுத்துரை (பத்திரிகையாளர்)

உதயகுமார் (ஊடகவியலாளர்)

ஜீவமுரளி (எழுத்தாளர்)

விஜி (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

தேவதாசன் (தலைவர் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி, இணைப்பாளர் சிறுபான்மைத் தமிழர் மகாசபை)

நோயல் நடேசன் (எழுத்தாளர்)

அசுரா (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

அன்ரன் (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

சிவசாமி சிவராசன் (புலம் பெயர்ந்த இலங்கையர்களிற்கான வலையமைப்பு)

எஸ்.சுந்தரலிங்கம் (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

அருந்ததி (திரைப்பட இயக்குனர், தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

எஸ். காசிலிங்கம் (இலங்கை கிராம அபிவிருத்திச் சங்கம்)

யோகரட்ணம் (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

ப.பகீரதன் (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

தர்மினி ( ‘தூமை’ இணையத்தளம்)

தேவகாந்தன் (எழுத்தாளர்)

எம்.ஆர்.ஸ்டாலின் (ஜனநாயத்திற்கான கிழக்கிலங்கை முன்னணி)

ஷோபாசக்தி (எழுத்தாளர்)

உமா (எழுத்தாளர்)

கற்சுறா ( ‘மற்றது’ இணையத்தளம்)

ராமமூர்த்தி ராஜேந்திரன் (முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்)

ச.வாசுதேவன் (நாடகக் கலைஞர்)

செ.கிருஸ்ணமூர்த்தி (எழுத்தாளர்)

டி.பி.எஸ்.ஜெயராஜ் (பத்திரிகையாளர்)

நா. ஸ்ரீ கெங்காதரன் (சமூக சேவையாளர்)

அகிலன் கதிர்காமர் ( இலங்கை ஜனநாயக ஒன்றியம்)

நஜா முகமட் (இலங்கை இஸ்லாமியர் முன்னணி)

மாணிக்கம் நகுலேந்திரன் (ஆசிரியர் -தாகம், நிரூபம்)

ராகவன் ( (இலங்கை ஜனநாய ஒன்றியம்)

இதில் இருப்பவர்களின் பலரின் ... ஆற்றல்கள் ... எழுதி அடங்காது!!!!!!4_11_12.gif

ஆமா, நம்ம யாழ்கள .... வீரதீரர்கள், எனக்கு தெரிந்தது நால்வருக்கு குறையாது இங்குள்ளனர் ... யாரும் அடையாளம் கண்டீர்களா?????4_12_13.gif

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இருப்பவர்களின் பலரின் ... ஆற்றல்கள் ... எழுதி அடங்காது!!!!!!4_11_12.gif

ஆமா, நம்ம யாழ்கள .... வீரதீரர்கள், எனக்கு தெரிந்தது நால்வருக்கு குறையாது இங்குள்ளனர் ... யாரும் அடையாளம் கண்டீர்களா?????4_12_13.gif

1.கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன்

:blink::blink:

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு என்றால் படைப்பிலக்கியம், மற்றும் வெளியீடுகள், வாசகனை தமது வெளியீடுகள் சென்றடையும் முறை, மற்றும் தரமான வாசகர்களை உருவாக்குதல் போன்ற இன்னபிற விடையங்களைத்தான் பேசுபொருளாக எடுத்துக்கொள்வார்கள் என நான் நினைத்திருந்தேன. இது என்னடாவெண்டால் புலிகளையும் அவர்களது பின்னால் நின்ற தமிழர்களையும் வந்தனை செய்யவே ராசபக்சவிடம் மண்டாடி மேடைஅமைத்துவாங்கி அதில மைக்செட் போட்டு தங்கள் வாய்நாத்தத்தை உலகறியச் செய்திருக்கினம். தூ இதுகள் எல்லாம் ஒரு ஜென்மங்கள்? அதுசரி தோழர் அது இது எண்டு கற்சுறா எனும் பிராணி சொல்லிச்சுது ஆனால் தோழர்களுக்கு நடுவிலை சாதிச்சாயம் வேற காணப்படுகுது அதாவது தோழர் எண்டால் கம்யூனிசய சித்தாந்தத்தில சாதி, இனம், சமூக ஏற்றத்தாழ்வு இவைகளை மூட்டை கட்டியவையள் என்பதைத்தான் குறிக்குமென நான் நினைச்சனான் இப்பதான் தெரியுது தலித்து மேல்சாதி கீழ்சாதி இவையள் எல்லாம் இவர்களது வாயிலதான் அம்பிட்டு படாதபாடு படுகுதுஎண்டு. அதுசரி யாழ் களத்திலிருந்து தோழர்கள் பலர் பங்குபற்றியவையள் அல்லது கைநாட்டுப்போட்டவையள் எண்டுறியள், பெயர்களை நேரடியாக அறியத்தரலாம்தானே! பொயட் ஒருவர் அது தெரியும் மற்றவையள் யார் அவர்களது திருநாமங்களை அறியத்தரலாம்தானே!

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது இன்னுமொரு விடையம் ஒருமுறை ஜெயபாலன் அவர்கள் தனது பாடல்களுக்கு இசைவடிவம் கொடுத்து ஒரு இறவட்டு வெளியட்டிருந்தார் அதனை யாழ்கள உறவகள் பதிவிறக்கம் செய்து தங்களால் இயன்ற பணத்தினை அனுப்பிவைக்கும்படியும் வேண்டிநின்றார். அதற்கு யாழகளத்தினின்றும் அனேகர் அஃதே செய்தனர். என்னால் என்னகாரணத்தாலோ பங்களிப்புச் செய்யமுடியவில்லை. ஆனால் அச்சம்பவத்திற்குப்பின்பு கவிஞரது இடுகைகள் ஏதாவதை யாழ்களத்தில் பார்க்கும் பட்சத்தில் எனது செயல் கண்டு குற்றஉணர்வு கொள்வதுண்டு. ஆனால் இப்போது பரவாயில்லையெண்டு நினைக்கிறன். நம்மட கவிஞர்தானே! ஒரு இடத்திலை இழந்தால் இன்னுமொரு இடத்திலை பெற்றுச் சரிக்கட்டிவிடுவார் அவர் மகாபுத்திசாலி.

இதில் இருப்பவர்களின் பலரின் ... ஆற்றல்கள் ... எழுதி அடங்காது!!!!!!4_11_12.gif

ஆமா, நம்ம யாழ்கள .... வீரதீரர்கள், எனக்கு தெரிந்தது நால்வருக்கு குறையாது இங்குள்ளனர் ... யாரும் அடையாளம் கண்டீர்களா?????4_12_13.gif

1.கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன்

:blink::blink:

2. டி.பி.எஸ்.ஜெயராஜ்??? :blink:

Edited by thappili

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.