Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள்

Featured Replies

ஈழத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் - பாகம்-1

– ஈழத் தமிழர்கள் - குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் தம்மை அறியாமலேயே ஒரு மிகப்பெரிய உளவியல் போருக்கு உள்ளாகிக்கொண்டு இருப்பதாக அண்மையில் என்னுடன் பேசிய ஒரு தென்னிலங்கை இராணுவ ஆய்வாளர் தெரிவித்தார்.

தென்னிலங்கையில் செயற்பட்டு தற்பொழுது அமெரிக்காவில் வசித்துவரும் அந்த சிங்கள இராணுவ ஆய்வாளர் குறிப்பிடும்பொழுது, ஈழத் தமிழர்களை -குறிப்பாக புலம்பெயர் தமிழர்களைக் குறிவைத்து சிறிலங்கா இராணுவத்தின் உளவியல் பணியகம் ( Directorate of psychological Operations) ஏற்கனவே உளவியல் யுத்தத்தை ஆரம்பித்துவிட்டதாகவும், எதிர்வரும் காலங்களில் அந்த நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகவும் கூட அந்த ஊடகவியலாளர் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருந்துவருவதாகவும், புலம்பெயர் தமிழர்களின் ஒருமித்த செயற்பாடுகள் எதிர்காலத்தில் சிறிலங்கா தேசத்திற்கும் இந்தியாவின் இறையாண்மைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் அபாயம் இருப்பதாக இந்த இரண்டு நாடுகளும் சந்தேகிப்பதால், புலம்பெயர் தமிழர்களின் ஒற்றுமையையும், அவர்களது உளவியல் பலத்தையும் குறிவைத்து இந்த இரண்டு நாடுகளும் மிகப்பெரிய அளவில் உளவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக வெளிவருகின்ற செய்திகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கின்ற பொழுது, அந்த ஊடகவியலாளரின் கூற்றில் நிறைய சாத்தியப்பாடுகள் இருப்பதை உணக்கூடியதாகவே இருக்கின்றது.

புலம்பெயர் தமிழர் தொடர்பாக சிறிலங்கா அமைச்சர்கள் தொடர்ச்சியாக வெளியிட்டுவருகின்ற கருத்துக்கள், இந்தியாவில் சில தலைவர்களைக் கொலை செய்யப் புலிகள் திட்டமிட்டுவருவதாக வெளியிடப்பட்டுள்ள கட்டுக்கதைகள், கே.பி. என்கின்ற விடுதலைப் புலி முன்னாள் முக்கிஸ்தரை சிறைப்படுத்தி, நிர்கதியாக நிற்கும் அவரை வைத்து மேற்கொள்ளப்படுகின்ற சதிகள் - இதுபோன்ற பல விடயங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கின்ற பொழுது, புலம் பெயர் தமிழர்களின் உளவியலைக் குறிவைத்து ஒரு மிகப் பெரிய சதி நடைபெற இருப்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் உணரக்கூடியதாகவே இருக்கின்றது.

இந்த இடத்தில் சிலருடைய மனங்களில்; சில கேள்விகள் எழலாம். புலம்பெயர் தமிழர்களைக் குறிவைத்து எப்படியான உளவியல் நடவடிக்கையை எமது எதிரிகள் மேற்கொள்ளக்கூடும்?

அந்த உளவியல் நடவடிக்கைகள் எப்படியான விளைவினை ஈழத் தமிழர் மத்தியில் ஏற்படுத்தக்கூடும்?

இதனால் ஈழத் தமிழினத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் என்ன? எதிரிகளின் இந்த உளவியல் நடவடிக்கையைத் தடுப்பதற்கு ஈழத் தமிழர்கள் என்ன செய்யவேண்டும்?

இவ்வாறு பல கேள்விகள் உங்களுடைய மனங்களில் எழலாம். புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி அவர்களை பல பிரிவுகளாகப் பிரிக்கும் நோக்கம், எதிரிகளின் அந்த உளவியல் நடவடிக்கையின் பிரதான உள்நோக்கமாக இருக்கலாம். புலம்பெயர் தமிழர்கள், உலகத் தமிழர்கள் இனி ஒரு விடுதலைப் போராட்டம் பற்றிச் சிந்தக்க முடியாத அளவிற்கு உளவியல் ரீதியாக அவர்களைப் பலவீனப்படுத்துவதென்பது, சிறிலங்கா-இந்திய உளவியல் நடவடிக்கைகளின் மற்றொரு நோக்கமாக இருக்கலாம்.

இவற்றை விட மற்றொரு குறிக்கோளும், இந்த உளவியல் நடவடிக்கைக்கு இருக்கின்றதாக, என்னுடன் பேசிய அந்த தென்னிலங்கை ஊடகவியலாளர் தெரிவித்தார்.

அதாவது, விடுதலைப் புலிகளையும், அந்த அமைப்பின் தலைமையையும் ஈழத் தமிழர் மற்றும் உலகத் தமிழர் மனங்களில் இருந்து முற்றாகவே அகற்றிவிடும் நோக்கம் சிறிலங்கா மற்றும் இந்தியா மேற்கொண்டு வருகின்ற உளவியல் நடவடிக்கைகளின் பின்னணியில் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகள் பற்றியும், புலிகளின் தலைவர் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பற்றியும் உலகத் தமிழர் மனங்களில் இருக்கின்ற பிரமாண்டத்தை, ஈடுபாட்டை, நம்பிக்கையை, ஆர்வத்தை, அன்பை சுக்குநூறாக உடைத்தெறிவதென்பது எதிரியின் இன்றைய முக்கிமானதொரு நகர்வாக இருக்கின்றது.

மாவீரர் துயிலும் இல்லங்களை அழிப்பதென்பதில் ஆரம்பமான இந்த முயற்சி, பல்வேறு ஊடகங்களை உருவாக்குவது, குழப்பங்களை ஏற்படுத்துவது, பல்வேறு வதந்திகளைக் கட்டவிழ்த்துவிடுவது என்பதினூடாகப் பயணித்து, இன்று திட்டமிட்ட உளவியல் போர் என்கின்ற அளவிற்கு முன்னேறி இருக்கின்றது.

உலகத் தமிழர்கள் தங்களது கதாநாயகர்களாக, மிகப் பெரும் தியாகிகளாக நினைக்கும் மாவீர்களையும், தங்களது உன்னதமானதும் ஒப்பற்றதுமான தலைவனையும் அவர்களது மனங்களில் இருந்து அழிப்பதென்பது எவராலும் முடியாத காரியம் என்று எங்களில் பலர்; கூறலாம்.

'ஈழத் தமிழர்களுக்கு உலகில் ஒரு முகவரியைத் தந்த அந்த உன்னதத் தலைவரை அந்த மக்கள் மறப்பதா- அது முடியவே முடியாது.."- இவ்வாறு பலர் வாதிடலாம்.

ஆனால் psychological operations என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற உளவியல் நடவடிக்கை என்கின்ற ஒரு மிகப் பெரிய ஆயுதத்தைக் கொண்டு, முடியாது என்று நினைக்கின்ற பல விடயங்களை சாதித்துக்காட்டிய வரலாறு உலகில் நிறையவே இருக்கின்றன.

உதாரணத்திற்கு ஹிட்லர் என்கின்ற ஒரு மிகப் பெரிய தலைவனை உலகமும், அவனது சொந்த ஜேர்மணிய மக்களும் முற்றாகவே நிராகரிக்கும்படியான உளவியல் நடவடிக்கையை அமெரிக்காவும், மேற்குலகும் மேற்கொண்டு அதில் இன்று மிகப் பெரிய வெற்றியையும் அடைந்திருக்கின்றது.

முதலாம் உலகப் போரில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்த ஜேர்மனி, தனது பிரதேசங்கள் பலவற்றையும் அயல்நாடுகளிடம் ஒப்படைத்து, மீளமுடியாத பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி, உலகத்தின் மத்தியில் கூணிக் குறுகி நின்று கொண்டிருந்தது. அப்படியான நிலையில் இருந்த ஜேர்மணியை மீண்டும் ஒரு உன்னத ஸ்தானத்திற்கு உயர்த்திய ஒருவர்தான் ஹிட்லர்.

பாலங்கள், கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், ஆட்டோ மொபைல் தொழில்நுட்பம், என்று ஜேர்மனியை உலகமே பார்த்து வியக்கும் அளவிற்கு நடாத்திச் சென்றவர் ஹிட்லர்.

தொழில்துறையில் ஜெர்மணியை அவர் ஒரு உச்சத்திற்கு கொண்டுபோயிருந்தார்.

ஒரு காலகட்டத்தில் ஜேர்மணியில் வேலையில்லாத ஒருவர் கூட இல்லை என்கின்ற அளவிற்கு அந்த தேசத்தை உலகின் தரவரிசையில் அனைத்து விடயங்களிலும் ஒரு உன்னத ஸ்தானத்திற்குக் கொண்டு சென்றவர்தான் ஹிட்லர். உலகின் நெருக்குவாரங்கள் அனைத்தையும் மீறி ஜேர்மணியின் இராணுவத்தை உலகமே வியக்கும் அளவிற்கு கட்டியமைத்தார். முதலாம் உலகப் போர் தோல்வியால் கிட்டத்தட்ட அநாதையாக விழுந்துகிடந்த ஜேர்மன் தேசத்தை, மீண்டும் நிமிர்ந்து உற்காரவைத்த- அதுவும் ஒரு உயரிய சிம்மாசனத்தில் உற்கார வைத்த ஒரு சிறந்த தலைவர்தான் ஹிட்லர்.

ஆனால் அந்த ஹிட்லர் என்கின்ற தலைவனை இன்று உலகம் முற்றாகவே நிராகரித்துவிட்டுள்ளது. உலகம் மாத்திரமல்ல ஹிட்லர் எந்த சேத்திற்காக பாடுபட்டாரோ, எந்த தேசத்தை உலகின் தரத்திற்கு உயர்த்தினாரோ, எந்த தேசத்திற்கு உலகில் ஒரு முகவரியைப் பெற்றுக்கொடுத்திருந்தாரோ, அந்த தேசமே இன்று ஹிட்லர் என்கின்ற தனது தலைவனை நிராகரித்து விட்டுள்ளது. ஹிட்லர் பல நாடுகளை ஆக்கிரமித்தார் என்ற குற்றச்சாட்டு மேற்குலகால் அல்லது அவர் பற்றி அவதூறு பேசுபவர்களால் முன்வைக்கப்படுகின்றது.

ஆனால் ஹிட்லர் நாடுகள் பலவற்றை ஆக்கிரமித்ததாகக் குற்றம்சாட்டப்படும் அதே காலப்பகுதியில், பிரித்தானியா உலகின் பல நாடுகளை ஆக்கிரமித்து தன்வசம் வைத்திருந்தது என்கின்ற உண்மையை ஹிட்லரை தூற்றும் யாவரும் கருத்தில் எடுக்கத் தவறுகின்றார்கள்:.

அதைவிட ஜேர்மனி அயல்நாடுகள் மீது படைநடவடிக்கைகளை எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட அதே காலப்பகுதியில், இத்தாலி (07.04.1939இல்)அல்பேனியாவைக் கைப்பற்றியது, ரஷ்யா பின்லாந்தை ஆக்கிரமித்தது(30.11.1939), பிரித்தானிய நோர்வேயை ஆக்கிரமித்தது(08.04.1940), இத்தாலி எகிப்தை ஆக்கிரமித்தது(28.10.1940), பிரித்தானிய எத்தியோப்பியாவை ஆக்கிரமித்தது(07.03.1941), பிரிட்டனும் பிரான்சும் சிரியாவை ஆக்கிரமித்தது(08.06.1941), ஈரானை பிரித்தானியா ஆக்கிரமித்தது(25.08.1941), பின்லாந்து, ஹங்கேரி, ருமெனியா போன்ற நாடுகள் மீது பிரித்தானியா போர்தொடுத்தது (05.12.1941), துனீஷியாவை அமெரிக்கா ஆக்கிரமித்தது(08.11.1942), மலேசியா, பர்மா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், போன்ற நாடுகளை ஜப்பான் ஆக்கிரமித்தது(டிசம்பர் 1941).

இப்படி உலகின் பல நாடுகள் மாறி மாறி மற்றைய நாடுகளை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில்தான் ஜேர்மனி ஐரோப்பிய நாடுகள் சிலவற்றை ஆக்கிரமித்திருந்தது. யூதர்களை இனப்படுகொலைக்கு உட்படுத்தினார் ஹிட்லர் என்றொரு குற்றச்சாட்டு…

உக்ரேனில் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியன் 76 இலட்சம் மக்களைப் படுகொலை செய்து இனஅழிப்பொன்றை மேற்கொண்ட, சீனாவின் நான்கிம் பிரதேசத்தில் ஜப்பானியப்படைகள் இலட்சக்கணக்கான சீனர்களை படுகொலை செய்த காலப்பகுதியில்தான், ஹிட்லர் பல இலட்சம் யூதர்களையும், கமியூனிஸ்டுக்களையும் படுகொலை செய்திருந்தார். இனப்படுகொலைகளிலும், ஆக்கிரமிப்புப் போர்களிலும் உலகின் பல நாடுகளுமே சாதாரணமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் ஹிட்லர் என்கின்ற தலைவன் இதுபோன்ற காரியத்தைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால் ஹிட்லர் மாத்திரம் உலகினாலும், அவரது சொந்த மக்களினாலும் இன்று ஓரம்கட்டுப்பட்டதற்கு அவருக்கு ஏற்பட்ட தோல்வியும், அந்தத் தோல்வியைத் தொடர்ந்து அமெரிக்காவும், அதனது நேச நாடுகளும் மேற்கொண்ட உளவியல் போரும்தான் காரணம்.

இன்று ஜேர்மனியர்கள் ஹிட்லரை முற்றாகவே மறந்துவிட்டார்கள். கொஞ்சம் நினைவு வைத்திருப்பவர்கள் கூட அவரைப்பற்றிய வெறுப்புடன்தான் ஹிட்லரை நினைவு வைத்திருக்கின்றார்கள். இத்தனையையும் சாதித்தது pளலஉhழடழபiஉயட ழிநசயவழைளெ என்று அழைக்கப்படுகின்ற உளவியல் நடவடிக்கைகள்தான். இன்று உலகத் தமிழர்களைக் குறிவைத்து எதிரிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் உளவியல் நடவடிக்கைகள், இதனைத்தான் சாதிக்க நினைக்கின்றது.

இப்படியான ஒரு விளைவைத்தான் புலிகளுக்கும், அதனது தலைமைக்கும் ஏற்படுத்த நினைக்கின்றது சிங்கள தேசமும், இந்தியாவும்.

புலிகளின் தலைவர் ஒரு கதாநாயகனாக, விடுதலை வீரனாக, உதாரண புருஷனான தமிழ் மக்கள் மனங்களின் நீண்டகாலம் வலம் வருவதை சிறிலங்காவும், இந்தியாவும் விரும்பவில்லை. அவர் அஞ்சா நெஞ்சம் கொண்ட, யாருக்கும் அடிப்பணியாத ஒரு வீரனாக சரித்திரத்தில் வலம்வருவதை இந்த தேசங்கள் விரும்பவில்லை. புலிகளின் தலைவர் பற்றி ஒரு கோளையான, கொடுரமான ஒரு கொலைகாரணான, ஒரு சமூக விரோதியான ஒரு பிம்பமே உலகத் தமிழர் மனங்களில் நிரந்தரமாக இருக்கவேண்டும் என்பதுதான் இந்த தேசங்களது விருப்பமாக இருக்கின்றது.

இப்படியான ஒரு பிம்பத்தை உலகத் தமிழர் மனங்களிலும், உலகின் சரித்திரத்திலும் ஏற்படுத்தும் நோக்கத்தோடுதான் உளவியல் யுத்தம் ஒன்றை உலகத் தமிழரைக் குறிவைத்து இந்த நாடுகள் மேற்கொள்வதற்குத் தலைப்படுகின்றன.

இப்பொழுது உள்ள முக்கியமான கேள்வி இதுதான். ஒரு உளவியல் யுத்தத்தை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோமா?

இரண்டு பெரும் தேசங்கள் தனித்தனியாகவும், கூட்டாகவும் மேற்கொள்ள இருக்கின்ற மாபெரும் உளவியல் யுத்தங்களை எதிர்கொள்ள புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்கின்றார்களா? என்னைப் பொறுத்தவரையில் உளவியல் யுத்தங்களை எதிர்கொள்ளுகின்ற பலம் பெரிய அளவில் எம்மிடம் கிடையாது என்றுதான் நான் கூறுவேன்.

ஏன் என்றும், எதிரியின் உளவியல் யுத்தங்களை எதிர்கொள்ள நாம் என்ன செய்யவேண்டும் என்றும் அடுத்த வாரம் முதல் விரிவாக ஆராய்வோம்.

ஆக்கம்: நிராஜ் டேவிட்

  • தொடங்கியவர்

உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் - பாகம் - 2

புலம்பெயர் தமிழரைக் குறிவைத்து தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற, தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட இருக்கின்ற மிகப் பெரிய உளவியல் யுத்தங்களை எதிர்கொள்வதற்கு உலகத் தமிழினம் தயாராக இருக்கின்றதா?

என்னிடம் யாராவது இந்தக் கேள்வியைக் கேட்டால், சிறிது நேரம் யோசித்துவிட்டு 'இல்லை" என்றுதான் பதில் கூறுவேன்.

ஏனென்றால், எம்மில் அனேகருக்கு இந்த உளவியல் நடவடிக்கை என்கின்ற விடயம் பற்றிய தெளிவு சரியாக இல்லை. நான் பேசிய பல தமிழ் ஊடகவியலாளர்கள், பல ஊடக நிறுவனங்களை நடாத்துபவர்கள், சமூகத் தலைவர்கள் இந்த உளவியல் நடவடிக்கைகள் பற்றிய அறிவையும், தெளிவையும் கொண்டிராதவர்களாகவே இருக்கின்றார்கள்.

இன்றைய நவீன உலகைப் பொறுத்தவரையில் psychological operations என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற உளவியல் நடவடிக்கைகளை ஊடகங்களைப் பாவித்துதான் உலகின் பெரும் சக்திகளான அமெரிக்கா முதற்கொண்டு தமிழர்களின் எதிரிகளான சிறிலங்கா இந்தியா போன்றதேசங்கள் வரை மேற்கொண்டு வருகின்றன.

எனவே ஈழத் தமிழரது ஊடகங்கள் உளவியல் நடவடிக்கைகள் என்கின்ற விடயம் பற்றி அதிக கவனத்தை தமதாகக் கொண்டிருப்பது காலத்தின் தேவையாக இருக்கின்றது.

உளவியல் நடவடிக்கைகள் அல்லது உளவியல் போர் என்கின்ற விடயத்தில் பல அங்கங்கள், வகைகள் இருந்தாலும் முக்கியமான இரண்டு வகையான உளவியல் போர்கள்தாம் உலகத் தமிழரைக் குறிவைத்து தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த இரண்டு வகையான உளவியல் போர்கள் பற்றித்தாம் நாங்கள் தற்பொழுது அதிக அக்கறையைச் செலுத்தவேண்டிய நிலையிலும் இருந்துகொண்டிருக்கின்றோம்.

1. தமிழர்களின் உளவியலை உற்சாகப்படுத்தி, அவர்கள் உற்சாக மனநிலையில் இருக்கும் பொழுது அவர்களது திசையை அவர்களறியாமலேயே மாற்றிவிடுவது. (உள்ளூர் பாஷையில் கூறுவதானால்: 'தமிழர்களைப் பப்பாசி மரத்தில் ஏற்றிவிட்டு, அடி மரத்தை வெட்டிவிடுவது…')

2. தமிழ் மக்களின் உளவியலை ஒருவித அச்ச நிலைக்குக் கொண்டு சென்று, அந்த அச்ச நிலையில் பலவிதமான தடுமாற்றங்களை அவர்களுக்கு ஏற்படுத்தி, ஒரு பலவீனமான, விரக்தியான மனநிலையில் அவர்களை வைத்திருப்பது.

இந்த இரண்டு வகையான உளவியல் நடவடிக்கைகள் பற்றித்தான் நாம் முதலில் ஆராய இருக்கின்றோம்.

2006ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 30ம் திகதி சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷ 3 நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரித்தானியா வந்திருந்தார். அந்த நேரத்தில் செஞ்சோலைப் பாடசாலை மாணவிகள் படுகொலை, கொழும்பில் தமிழர்கள் கடத்தல், யாழ்குடாவில் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் என்று மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக புலம்பெயர் தமிழர்களும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துக்கொண்டிருந்தார்கள்.

பிரித்தானியா வந்த மகிந்தவை பீ.பீ.சி உட்பட சர்வதேச ஊடகங்கள் செவ்வி கண்டன. விடுதலைப் புலிகளே சமாதானத்தை முறித்து யுத்தத்தை ஆரம்பித்தாகத் தெரிவித்த மகிந்த வேறு வழியில்லாமல் தாம் பயங்கரவாதத்தை ஒழிக்க முன்வந்ததாகத் தெரிவித்தார். விடுதலைப் புலிகளை மிகவும் கொடுரமான பயங்கரவாதிகளாக வர்ணித்த அவர், ஒரு விடயத்தை மாத்திரம் நேரடியாகவே ஒப்புக்கொண்டிருந்தார். அதாவது வெளிநாடுகளில், குறிப்பாக மேற்குலக நாடுகளில் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை சீரமைப்பதிலும், சிறப்பானதொரு ஊடக வலையமைப்பை உருவாக்கி பிரச்சாரம் செய்வதிலும் அவர்கள் சிறப்பாகச் செயற்பட்டுவருகின்றதை அவர் தனது செவ்விகளில் ஒப்புக்கொண்டிருந்தார்.

புலம்பெயர் மக்களைத் திரட்டி பல்வேறு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதிலும் புலிகள் அமைப்பின் வெளிநாட்டுப் பிரிவினர் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு வருவதாகவும் மறைமுகமாகப் பாராட்டி இருந்தார். சர்வதேச சமூகத்தைக் குறிவைத்த பிரச்சார விடயத்தில், வெளிநாடுகளில் உள்ள சிறிலங்காவின் தூதரகங்கள் சரியாகச் செயற்படத் தவறி இருந்தன என்று குற்றம் சுமத்திய மகிந்த, இந்த விடயத்தில் வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் வலைப் பின்னல் பாரிய வெற்றி பெற்றுவருவதாகத் தெரிவித்திருந்தார்.

அடுத்த வருடமும் மகிந்த பிரித்தானியா வந்திருந்தார்.

பிரித்தானிய கடற்படைத் தளபதி Admiral Jonathan Band இனது அழைப்பின் பெயரில் Dartmouth இல் உள்ள Britannia Royal Naval College இல் 13.12.2007 இல் நடைபெற்ற Devon passing out parade இல் கலந்து கொள்வதற்காக மகிந்த பிரித்தானியா வந்திருந்தார்.

அந்த நேரத்திலும் சந்வதேச ஊடகங்கள் மத்தியில் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பிரச்சாரப் பலத்தைப் பாராட்டும் விதமாக மகிந்த கருத்துத் தெரிவித்திருந்தார்.

புலம்பெயர் செயற்பாட்டாளர்களுக்கோ இருப்புக் கொள்வில்லை. வானத்திற்கும் பூமிக்குமாகத் துள்ளிக் குதித்தார்கள் சந்தோஷத்தால். எதிரியியே எங்களைப் பாராட்டும் அளவிற்கு நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்ற பெருமிதம் அவர்களுக்கு. தமது செயற்பாட்டு வெற்றியை அறிக்கைகளாக எழுதி வன்னிக்கு அனுப்பி வைத்தார்கள்.

ஆனால் உண்மையில் மகிந்த சர்வதேச ஊடகங்களைப் பாவித்து ஒரு வகையிலான உளவியல் யுத்தத்தை நடத்திவிட்டுச் சென்றுள்ளார் என்கின்ற உண்மையை புலம்பெயர் தமிழர்கள் உணர்ந்து கொள்ள நீண்ட நாட்கள் எடுத்தன.

இலங்கையில் தமிழ் மக்கள் கொலை செய்யப்படுவதாக, இன அழிப்பொன்று சிறிலங்காவில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக கூறுவது சாதாரண புலம்பெயர் தமிழர்கள் அல்ல. மாறாக விடுதலைப் புலிகளே அவ்வாறு பொய்யாகக் கூறுகின்றார்கள். மேற்குலகால் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பு வெற்றிகரமாகச் செய்துவரும் பிரச்சாரம் மாத்திரமே அது என்று சொல்லாமல் சொல்லிவிட்டுச் சென்றிருந்தார்; மகிந்த. புலிகள் தமது திறமையான வலைப்பின்னலைப் பாவித்து சிறிலங்காவிற்கு எதிராக வெற்றிகரமாகப் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், அப்படியான பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்கக் கூடிய அளவிற்கு வெளிநாடுகளில் உள்ள சிறிலங்காத் தூதரங்களால் வெற்றிகரமாகச் செயற்பட முடியாமல் போயிருந்தது என்றும் மகிந்த ஒருவிதமான உளவியல் வாதத்தை முன்வைத்து விட்டுச் சென்றார்.

அதாவது புலம் பெயர் தமிழர்கள் மிகவும் கஷ்டப்பட்டு, மிருந்த பிரயாசைகளுடன், உணர்சிகரமாக மேற்கொண்ட அத்தனை போராட்டங்களையும், ஒரு சில வார்த்தைகளினாலேயே சுக்குநூறாக்கிவிட்டுச் சென்றிருந்தார் மகிந்த.

அந்த நேரத்தில் பல மில்லியன் டொலர்கள் செலவில் சிறிலங்கா அரசாங்கத்தால் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த வெளிநாட்டு பரப்புரை(உளவியல் நடவடிக்கை) நிறுவனம் ஒன்றே மகிந்தவை இவ்வாறு செவ்வி கொடுக்கும்படி ஆலோசனை வழங்கியிருந்ததாக பின்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

கடைசிவரையில்- அதாவது முள்ளிவாய்கால் சம்பவம்வரையில் புலம்பெயர் தமிழர்களது போராட்டங்கள் அனைத்தையும் புலிகளே நெறிப்படுத்தினார்கள் என்கின்ற மகிந்தவின் வாதத்திற்கு வலுச்சேர்ப்பது போலவே எங்களுடைய புலம்பெயர் தமிழ் ஊடகங்களும், பணியாளர்களும், செயற்பட்டார்கள். மகிந்த தலைமையிலான இராணுவத்தின் கொடுரச் செயல்கள் பற்றி புலம்பெயர் நாடுகளில் வெளிவந்த அனைத்து ஆதாரங்களுமே, செய்திகளுமே விடுதலைப் புலிகள் அமைப்பின் வெற்றிகரமான பிரச்சாரங்கள் என்ற மகிந்தவின் கூற்றை நிரூபிப்பது போலவே புலம்பெயர் அமைப்புக்களும், புலம்பெயர் தமிழ் ஊடகங்களும் செயற்பட்டன. அதவது உலகின் 32 நாடுகளில் பயங்கரவாதிகள் என்று கூறித் தடைசெய்யப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக மேற்கொண்ட பிரச்சாரங்களே அவைகள் என்று உலகம் நினைக்கும் வகையில் நாம் நடந்துகொண்டுள்ளோம்.(அந்தக் காலகட்டத்தில் உலகில் 32 நாடுகள் விடுதலைப் புலிகளை பயங்கவாதிகள் என்று கூறி அந்த இயக்கத்தை தடை செய்திருந்ததால், புலிகளின் பிரச்சாரம் என்ற அடையாளத்துடன் வெளிவந்த பல விடயங்களை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை.)

எங்களை உற்சாகப்படுத்துவதாக, எங்களுக்கு ஒரு கம்பீரத்தை வழங்குவதாக நாங்கள் நினைத்துக்கொண்டிருக்கின்ற பல விடயங்கள், உண்மையிலேயே எமக்கு எம்மையறியாமலேயே பின்னடைவை ஏற்படுத்துகின்ற சதிகள் என்பதற்கு, இந்தச் சம்பவம் ஒரு சிறிய உதாரணம் மாத்திரமே.

அண்மையில் மகிந்த ராஜபக்ஷ மறுபடியும் பிரித்தானியா வந்த பொழுது இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தையும் இங்கு நாம் கவனத்தில் எடுப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

அந்த நேரத்தில் இசைப்பிரியா என்கின்ற தமிழ் ஊடகவியலாளர் சிறிலங்காப் படைகளால் மிகவும் கொடுரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சர்வதேச ஊடகங்களில் வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. சண்டைகளின் பொழுது தம்மால் கொல்லப்பட்டவராக சிறிலங்கா இராணுவத் தலைமையால் உரிமை கோரப்பட்ட இசைப்பிரியா என்கின்ற ஊடகவியலாளர், உண்மையிலேயே சிறிலங்கா இராணுவத்தால் நிராயுதபாணியாகக் கைதுசெய்யப்பட்டு, மிக மோசமாகச் சித்திரவதை செய்யப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய ஆதாரங்களை வெளியிட்ட பிரபல்யமான ஒரு சர்வதேச செய்தி தாபணம், சிறிலங்கா மேற்கொண்ட ஒரு மிகப் பெரிய போர் குற்றமாக அதனை அடையாளப்படுத்தியிருந்தது.

ஆனால் சர்வதேச ஊடகங்களில் இந்தச் செய்தி வெளிவந்த மறுதினம் எங்களுடைய புலம்பெயர் தமிழ் இணையத்தளங்கள் இசைப்பிரியா தொடர்பான ஒரு பரபரப்புச் செய்தியை வெளியட்டிருந்தார்கள். அதாவது, இசைப்பிரியா சிறிலங்கா இராணுவத்தின் சினைப்பர் வீரனொருவனை சுட்டுக்கொன்றுவிட்டதாகவும், அதற்கு பழிதீர்க்க கொல்லப்பட்ட சிறிலங்கா வீரனின் சகாக்கள் ஒரு சதி செய்ததாகவும், தம்மிடம் சரணடைந்திருந்த சாதாரண பெண் ஒருவரை மிரட்டி காயம்பட்ட நிலையில் தவிப்பவர் போன்று நடிக்க வைத்து, முன்னரங்க காவல் நிலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த இசைப்பிரியாவை தந்திரமாகத் தமது எல்லைக்குள் வரவளைத்து, சற்றும் எதிர்பாராத முறையில் அவரை சிறிலங்காப் படைத்தரப்பு கைது செய்ததாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இசைப்பிரியாவினால் கொல்லப்பட்ட சிறிலங்காப் படை வீரனின் நன்பர்கள் கோபத்தில் இசைப்பிரியாவைத் தாக்கி பழிவாங்கியதாக அந்தச் செய்தி மேலும் தெரிவித்தது.

தமிழ் ஊடகங்கள் சில போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்ட இந்தச் செய்தியானது, சிறிலங்கா இராணுவத்தின் ஒரு மிகப் பெரிய மனித உரிமை மீறலுக்கான ஆதாரத்தை, ஒரு கொடுரமான போர்குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை சில நொடிகளிலேயே சுற்குநூறாக்கிவிட்டிருந்தது.

இசைப்பிரியா ஒரு ஊடகவியலாளர் அல்ல அவர் ஒரு ஆயுதம் தாங்கிய போராளி என்கின்ற ஒரு செய்தி தமிழ் இணையத்தளங்கள் வெளியிட்ட செய்திகளில் கூறப்பட்டிருந்தது. அவர் ஒருவரை படுகொலை செய்தார் என்கின்ற ஒரு தகவலும் வழங்கப்பட்டிருக்கின்றது. அவர் சிறிலங்காப் படைகளிடம் சரணடையவில்லை என்கின்ற ஒரு தகவலும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருக்கின்றது. அடுத்ததாக, சில இராணுத்தினர் தமது நன்பன் கொல்லப்பட்டதால் உணர்ச்சிவசப்பட்டு செய்த ஒரு கொலையே அது என்ற நியாயப்பாட்டையும், எமது ஊடகங்கள் வெளியிட்ட செய்தியினுடாக நாம் வழங்கியிருந்தோம்.

அதாவது நிராயுதபாணியாக சிறிலங்காப் படைகளிடம் சரணடைந்த ஒரு ஊடகவியளாளரை, சிங்கள இராணுவம் கொடுரமாகப் படுகொலை செய்தது என்ற குற்றச்சாட்டை, தமிழ் இணையத்தளங்கள் வெளியிட்ட செய்தி முற்றாகவே பலமிழக்கச் செய்திருந்தது.

இத்தனைக்கும், இப்படியான தகவலை எதிரியின் ஊடகங்களோ., அல்லது நடுநிலையான சர்வதேச ஊடகங்களோ வெளியிடவில்லை. முழுக்கமுழுக்க ஈழத் தமிழர்களால் நடாத்தப்படுகின்ற, தமிழ் தேசிய ஊடகங்கள் என்று தம்மை பெருமையுடன் கூறிக்கொள்கின்ற ஊடகங்களே இந்தத் தகவல்களை வெளியட்டிருந்தன.

எதிரி மிகவும் கவனமாக இதுபோன்ற தகவலை தமிழ் ஊடகங்களுக்கு கசிய விட்டிருந்தான். எமது ஊடகங்களுக்கும் இதுபோன்ற செய்திகள் மிகவும் கவர்ச்சிகரமாகவே தோன்றின. இசைப்பிரியாவையும், அவரது வீரத்தையும், விடுதலைப் புலிகளின் பெருமையும் உயர்த்துவதாக நினைத்துத்தான் எம்மவர்கள் இந்தச் செய்தியை முக்கியத்துவம் கொடுத்து வெளிட்டும் இருந்தார்கள். 'நாமாவது சரணடைவதாவது.." என்ற வெட்டி வீரத்துக்கு வலுச் சேர்ப்பதாக இருந்ததால்தான், அவர்கள் இந்தச் செய்தியை உற்சாகத்துடன் பிரசுரித்தும் இருந்தார்கள்.

ஆனால், தம்மை அறியாமலேயே எதிரியின் ஒரு மிகப் பெரிய உளவியல் போருக்கு எமது ஊடகங்கள் அந்தச் சந்தர்பத்தில் அனியாயமாகப் பலியாகிப் போயிருந்தன.

தமிழர்களின் உளவியலை உற்சாகப்படுத்தி, அவர்கள் உற்சாக மனநிலையில் இருக்கும் பொழுது அவர்களது திசையை அவர்களறியாமலேயே மாற்றிவிடுவது என்பது எம்மைக் குறிவைத்து எதிரி இன்று மேற்கொண்டு வருகின் ஒரு முக்கியமான உளவியல் நடவடிக்கை.

இதற்கு நம்மை அறியாமலேயே நாம் அடிக்கடி பலியாகிவிடுகின்றோம் என்பதூன் சோகம்.

'விடுதலைப் புலிகள் திரள்கின்றார்கள்.. லட்சத் தீவுகளில் நான்காயிரம் பேர் இருக்கிரார்கள், முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியேறிய புலிகள் வன்னிக்காட்டுக்குள் தாக்குதலுக்குத் தயாராக இருக்கின்றார்கள்.. இதோ வருகிறார்.. அதோ அடிவிழப் போகிறது…" - எமது ஊடகங்களில் அடிக்கடி வெளிவருகின்ற இது போன்ற செய்திகள் எமக்கு உற்சாகம் அழிப்பதாக இருப்பது உண்மைதான். ஆனால் இந்தச் செய்திகள் எமக்கு தருகின்ற மகிழ்சியை விட எதிரிக்கு அளிக்கின்ற பலன் மிக மிக அதிகமாக இருக்கின்றது என்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் உணரத் தவறிவிடுகின்றோம். இன்று பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும், அவசரகாலச் சட்டத்தையும் தொடர்ந்து நீடித்துவைத்திருப்பதற்கும், சரணடைந்த போராளிகளை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பதற்கும், ஒரு இன அழிப்பை தொடர்ந்து மேற்கொள்வதற்கும், வன்னியில் ஒரு இலட்சம் படையினரை தொடர்ந்து தங்கவைப்பதற்கும், அவர்களது குடும்பங்களை வன்னியில் நிரந்தரமாகக் குடியேற்றுவதற்கும்.. இதுபோன்ற செய்திகள் எமது எதிரிக்கு மிகவும் பயன்படுகின்றன.

சற்று ஆராய்ந்து பார்த்தால் இதுபோன்ற செய்திகளை ஈழத் தமிழ் அமைப்புக்கள் எதுவுமே வெளியிட்டிருக்காது. சிறிலங்கா தரப்பில் இருந்தோ அல்லது இந்திய தரப்பில் இருந்தோதான் இதுபோன்ற செய்திகள் வெளியே கசியவிடப்பட்டிருக்கும். ஆனால் ஈழத் தமிழருக்கு இனிப்பான செய்திகள் போலவே இவை தெரிவதால், இந்தச் செய்திகள் ஈழத் தமிழ் ஊடகங்களில்தாம் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்பட்டிருக்கும்.

தமிழர்களின் உளவியலை உற்சாகப்படுத்தி, அவர்கள் உற்சாக மனநிலையில் இருக்கும் பொழுது அவர்களது திசையை அவர்களறியாமலேயே மாற்றிவிடுவதான இந்த உளவியல் நடவடிக்கைகள் பற்றி நாம்- குறிப்பாக புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எதிரிகளின் இந்த வகையான உளவியல் நடவடிக்கை தொடர்பாக பல உதாரணங்களை என்னால் காண்பிக்க முடியும். ஆனால் அதற்கு முன்னதாக மற்றொரு முக்கிய உளவியல் நடவடிக்கை பற்றி நாம் எமது பார்வையைச் செலுத்தியாகவேண்டிய ஒரு அவசியம் இருக்கின்றது.

அதாவது, தமிழ் மக்களின் உளவியலை ஒருவித அச்ச நிலைக்குக் கொண்டு சென்று, அந்த அச்ச நிலையில் பலவிதமான தடுமாற்றங்களை அவர்களுக்கு ஏற்படுத்தி, ஒரு பலவீனமான, விரக்தியான மனநிலையில் அவர்களை வைத்திருக்கும் நோக்கோடு மேற்கொள்ளப்படுகின்றதான உளவியல் நடவடிக்கைகள்.

இந்தவகையான உளவியல் நடவடிக்கைகள்தாம் எதிர்காலங்களில் உலகத் தமிழரைக்; குறிவைத்து மிகவும் மும்முரமாக மேற்கொள்ளப்பட இருப்பதாக நம்பப்படுகின்றது.

எனவே, இந்த வகை உளவியல் நடவடிக்கைகள் பற்றி தொடர்ந்து வரும் வாரங்களில் விரிவாகப் பார்ப்போம்.

  • தொடங்கியவர்

உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் - பாகம் - 3

உலகத் தமிழரைக் குறிவைத்து சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற உளவியல் நடவடிக்கைகள் பற்றி தற்பொழுது அமெரிக்காவில் வசித்துவருகின்ற ஒரு சிங்கள ஊடகவியலாளருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, அவர் ஒரு உதிரித் தகவலைத் தெரிவித்திருந்தார்.

அவர் தெரிவித்த அந்தத் தகவல் எந்த அளவிற்கு ஏற்புடையது என்று தெரியவில்லை.

ஆனால் அவர் கூறிய அந்தத் தகவல் பற்றி நாம் எமது அக்கறையைச் செலுத்துவது தவறல்ல என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

அண்மையில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளுள் ஒருவரான கேணல் ரமேஷ் சிறிலங்காப் படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதான ஒரு காட்சி ஊடகங்களில் வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது அல்லவா? –

ரமேஷ் விசாரணைக்கு உற்படுத்தப்படும் காட்சியை சிறிலங்காவின் உளவியல் நடவடிக்கைப் பிரிவினர் (Directorate of Psychological Operation – DPO) வேண்டுமென்றே ஊடகங்களுக்கு கசியவிட்டதாக அந்த ஊடகவியலாளர் தெரிவித்திருந்தார்.

உலகத் தமிழர் மனங்களில் அச்சத்தை ஏற்படுத்தவும், விடுதலைப் புலிகள் தொடர்பாக உலகத் தமிழர் மனங்களில் காணப்படுகின்ற பிரமாண்டத்தை உடைக்கவும், சிறிலங்கா இராணுவத்தின் மேலான்மையை வெளிப்படுத்தவும் இந்த வீடியோக் காட்சியை சிறிலங்கா இராணுவத்தின் உளவியல் பிரிவினர் வெளியிட்டிருக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராகப் பாரிய அளவில் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஆதாராமாக அமைந்துவிடக்கூடிய ரமேஷின் விசாரணை வீடியோக்காட்சியை, சிறிலங்கா இராணுவமே வேண்டுமென்று ஊடகங்களுக்கு கசியவிட்டிருப்பார்;களா? இது எப்படிச் சாத்தியம்?- இவ்வாறு நான் எழுப்பிய கேள்விக்கு அவர் புன்னகைத்தபடி பதில் வழங்கினார்: 'ஒரு நாட்டின் புலனாய்வுப் பிரிவைப் பொறுத்தவரையில் அந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் மகிந்த என்ற அரசியல்வாதிதான் இருக்கவேண்டும் என்ற எண்ணத்திற்கு அப்பால், அந்தத் தேசத்தின் நீண்ட கால வெற்றிதான் அதற்கு முக்கியம். ஒரு ஆட்சி அதிகாரத்திற்கு ஏற்படக்கூடிய சங்கடங்களை விட, உளவியல் ரீதியாக உலகத் தமிழரைப் பலவீனமடைய வைப்பது இன்றைய காலகட்டத்திற்கு சிறிலங்கா தேசத்திற்கு அவசியமாக இருக்கின்றது. எந்த ஒரு இராணுவ புலனாய்வுப் பிரிவும், ஒரு தனி நபரை அல்லது சிலரது தனிப்பட்ட நலன்களை விட, தனது தேசத்தின் எதிர்காலம் பற்றித்தான் அதிகம் சிந்தி;த்துச் செயற்படும். இந்த நோக்கத்தை அடிப்படையாக வைத்துத்தான் ரமேஷின் விசாரணை வீடியோவை சிறிலங்கா உளவியல் பணியகம் வெளியிட்டது. இதே போன்று, உலகத் தமிழர் உளவியலில் பலவீனத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள், அதுவும் புலிகள் அமைப்பின் மிக மிக முக்கியமான ஒருவர் சம்பந்தமான வீடியோ காட்சிகளையும், அந்தப் பிரிவு வெளியிடுவதற்கு திட்டமிட்டு வருகின்றது“ இவ்வாறு தெரிவித்திருந்தார்.

என்றுடன் பேசிய அந்த பத்திரிகையாளரின் கருத்து உண்மையானதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.

ஆனால் அவர் கூறியபடி நடைபெற்;றிருப்பதற்கான சாத்தியப்பாட்டை நாம் இலகுவில் ஒதுக்கிவிடவும் முடியாது.

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பணியத்தின் சில செயற்பாடுகள் , சாதாரணமாக இராணுவத் தலைமைக்கோ, அல்லது சிறிலங்கா ஜனாதிபதிக்கோ கூடத் தெரியாமலேயே நடைபெறுவது வளக்கம். முள்ளிவாய்க்கால் சண்டைகளின் இறுதியில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட இரகசியச் சதி நடவடிக்கைகள்;, அப்பொழுது சிறிலங்கா இராணுவத்தின் தளபதியாக இருந்த சரத் பொண்சேகாவுக்கே தெரிந்திருக்கவில்லை. (அந்த நேரத்தில் ராஜபக்ஷ-பொண்சேகா மோதல்கள் ஆரம்பமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

அதேபோன்று விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் கே.பி.யை கைதுசெய்த இரகசிய நடவடிக்கையை சிறிலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவினரே நேரடியாகக் கையாண்டிருந்தார்கள். இந்தச் சம்பவம் பற்றி சிறிலங்காவின் அரச தலைவரோ அல்லது இராணுவத் தலைமைப் பீடமோ அறிந்திருக்கவில்லை என்றே கூறப்படுகின்றது.

சாதாரணமாகவே, ஒரு நாட்டின் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்கின்ற இரகசியச் சதி நடவடிக்கைள் அனைத்துமே, அந்த நாட்டின் தலைமைக்கோ அல்லது இராணுவத் தலைமைக்கோ தெரிந்துதான் இருக்கவேண்டும் என்ற நியதி கிடையாது. தேசத்தின் நன்மை கருதி சில சந்தர்ப்பங்களில், அவர்கள் தனியாகவும் இயங்கிவிடவேண்டி இருக்கும். ஒரு நாட்டின் புலனாய்வுப் பிரிவினருக்கு இருக்கின்ற விசேட சலுகை இது.

ரமேஷினுடைய வீடியோ காட்சி விவகாரம் கூட, இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையாக இருப்பதற்கான சாத்தியத்தை நாம் முற்றாக நிராகரித்துவிடவும் முடியாது.

ரமேஷ் மீதான விசாரணை வீடியோக் காட்சியைப் பொறுத்தவரையில், அந்தக் காட்சி (முன்னர் வெளிவந்த காட்சிகளில் சிலது போன்று) படைவீரர்களின் கையடக்கத் தொலைபேசியின் ஊடாக எடுக்கப்பட்ட காட்சிகள் போன்று இருக்கவில்லை. அந்தக் காட்சியின் சநளழடரவழைn இனைப் பார்க்கும் பொழுது, இது உயர் தொழில்நுட்பத்தினாலான வீடியோக் கமெராவினால் ஒளிப்பதிவு செய்பட்டுள்ளது உறுதியாகத் தெரிகின்றது. அப்படியானால் இந்தக் காட்சிகளை- ஒன்று இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபணம் ஒளிப்பதிவு செய்திருக்கவேண்டும். அல்லது சிறிலங்கா இராணுவத்தின் மீடியா யூனிட் ஒளிப்பதிவு செய்திருக்கவேண்டும். அல்லது சாதாரணமாக முக்கிய விசாரணைகளை பதிவு செய்து வைத்திருக்கும் புலனாய்வுப் பிரிவினர் ஒளிப்பதிவு செய்திருக்கவேண்டும்.

யுத்தம் முடிவடைந்த ஓரிரு தினங்களிலேயே ரூபவானி கூட்டுத்தாபனத்தினரால் ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அனைத்துமே சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருந்ததானச் செய்திகள் வெளியாகி இருந்தன.

சிறிலங்கா இராணுவத்தின் மீடியா யுனிட் வசமிருந்த யுத்தம் சம்பந்தப்பட்ட முக்கியமான ஆதாரங்களையும், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே கைப்பற்றியிருந்ததாகவும் பின்னர் செய்திகள் வெளியாகி இருந்தன. எனவே, யுத்தம் முடிவடைந்து சுமார் ஒன்றரை வருடங்களின் பின்னர் யுத்தம் தொடர்பான காட்சிகள் வெளிவருவதானால், அது நிச்சயம் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தரப்பில் இருந்து வெளிவருவதற்கான சாத்திமே அதிகம் இருக்கின்றது.

ரமேஷ் மீதான விசாரணைக் காட்சியைப் பார்க்கின்ற பொழுது, அந்த விசாரணையை மேற்கொள்கின்ற நபர்கள் காட்சிப்படுத்தப்படுவது கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கின்றது. அல்லது விசாரணை செய்யும் அதிகாரிகள் உள்ள காட்சிகள் கவனமாக அகற்றப்பட்டு அதன் பின்னரே அந்த வீடியோ காட்சி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அதாவது சிறிலங்கா இராணுவம்தான் ரமேஷை விசாரணைக்கு உட்படுத்துகின்றது என்பதற்கு, பின்னணியில் பேசப்படுகின்ற சிங்கள ஆங்கில வாக்கியங்களை(ஒலிகளை) தவிர வேறு ஆதாரங்களை அங்கு காண முடியவில்லை.

இந்தக் காட்சி பற்றிக் கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய சட்ட வல்லுனர் ஒருவர், இந்தக் காட்சி போர் குற்ற விசாரணைகளுக்கான ஒரு supportive documentடே தவிர நல்லதொரு documental evidence அல்ல என்று கூறியிருந்தார். ஒரு சாட்சி என்பது- அதுவும் சர்வதேச அளவில் ஒரு விசாரணைக்கு சாட்சியாக அமைய இருக்கும் ஆதாரம் என்பது, எந்த இடத்தில், என்ன சம்பவம், யாரால், எப்படி மேற்கொள்ளப்பட்டது என்பதை ஓரளவாவது நிரூபிப்பதாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் ரமேஷ் தொடர்பான காட்சியில் அப்படி எதுவும் பெரிதாக இல்லை. அந்தக் காட்சியை வெளியட்டவர்களுக்கு அந்த நோக்கமும் பெரிதாக இருந்திருப்பதாகத் தெரியவில்லை.

ரமேஷ் என்ற புலிகளின் தளபதி சிங்களப் படையினரிடம் சடணடைந்திருப்பது, அந்தப் படையினரைப்; பார்த்து மிரளுவது, சிங்களப் படையினரிடம் கெஞ்சுவது, இதுபோன்ற காட்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்துத்தான் அந்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டிருக்கின்றது.

இவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கின்ற பொழுது, சிறிலங்காப் புலினாய்வுப் பிரிவின் கீழ் செயற்படுகின்ற சிறிலங்காவின் உளவியல் நடவடிக்கைப் பிரிவினர் (Directorate of Psychological Operation – DPO) இந்தக் காட்சியைக் கசிய விட்டிருக்கலாம் என்கின்ற சந்தேகம் மேலும் உறுதியாகின்றது.

ஸ்ரீலங்கா இராணுவத்தில் பின்னர் தளபதியாக பதவிவகித்த லெப்டினன்ட் ஜெனரல் லயனல் பல்லேகல்ல தலைமையின் கீழ், 1984ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த உளவியல் நடவடிக்கைப் பிரிவு இரண்டாம், மூன்றாம், நான்காம் கட்ட ஈழ யுத்தங்களின் பொழுது மிகப் பெரிய வெற்றியை சிறிலங்கா அரசுக்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றது.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்ற காலத்தில் அமெரிக்க இராணுவத்தின் உளவியல் நடவடிக்கைப் பிரிவு (US Army Psychological Operation Group) ,இனால் நேரடியாகப் பயிற்சிகள் வழங்கப்பட்டு தன்னை மேலும் விஸ்தரித்துக்கொண்ட ஒரு பிரிவாகக் கூறப்படும் சிறிலங்காவின் உளவியல் பணியகம், 4ம் கட்ட ஈழ யுத்த காலகட்டத்தின் பொழுது களமுனைகளிலும், பின்களச் செயற்பாடுகளிலும் மிகப்பெரிய பங்கிளை ஆற்றியிருந்தது.

யுத்தம் முடிவடைந்த இந்த நேரத்திலும் சிறிலங்காவின் இந்த உளவியல் பிரிவினது செயற்பாடானது, சிறிலங்கா தேசம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை முறியடிக்கும் விதமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட இந்த உளவியல் பிரிவே, ரமேஷ் தொடர்பான விசாரணைக் காட்சிகளை வெளியிட்டிருக்கலாம் என்று தற்பொழுது கூறப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் வேறு சில முக்கியஸ்தர்கள் தொடர்பான மேலும் சில காட்சிகளையும் இந்தப் பிரிவினரே தொடர்ந்து வெளிவிடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

எனவே இந்தக் கூற்றினை நாம் முற்றாக ஒதுக்கிவிட முடியாது.

அடுத்ததாக, ஊடகங்களில் வெளியான ரமேஷ் தொடர்பான காட்சிகள் உலகத் தமிழர் மனங்களில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்கள் பற்றி ஆராய்கின்ற பொழுது, இந்த காட்சிகள் தொடர்பாக நாம் அதிக சிரத்தை எடுப்பது அவசியம் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

அத்தோடு, உளவியல் நடவடிக்கை நோக்கத்தை அடிப்படையாக வைத்து, உலகத் தமிழர் உளவியலைக் குறிவைத்து இதுபோன்ற ஒரு யுத்தம் எதிரிகளால் மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பங்களில் உலகத் தமிழ் ஊடகங்கள் எப்படிச் செயற்படுவது அவசியம் என்பது பற்றியும் நாம் ஆராய்வது அவசியம் என்றே நான் நினைக்கின்றேன்.

இதுகளை எங்கட ஆக்கள் படிக்க கூட மாட்டினம் என்டது தான் உண்மை... அரூசும் , அதியமானும் ஏதும் வெடி கொழுத்துற மாதிரி எழுதினால் தான் படிச்சு போட்டு ஒரு பக்கம் வெடியும் மற்றப்பக்கம் சேறும் அடிப்பினம்...

எல்லாம் காலம்...

.

இந்த உளவியல் நடவடிக்கைகளை தமிழ்நெட் அறிந்து கொள்வது நல்லது.

Psy Ops ஐ பொறுத்த‌ வ‌ரை த‌மிழ்நெட்டுக்கு கிலோ என்ன‌ விலைதான்.

ச‌மாதான‌ கால‌த்தில் கிழ‌க்கு மாக‌ண‌த்தில் கில்ம‌ன் 5000 பேருக்கு ப‌யிற்சி அளிக்கிறார் என்று ப‌ட‌ங்க‌ளோட‌ போட்ட‌து.

பின் ஆனையிற‌வை குறிவைக்கிறார்க‌ள் என்று குறிபார்த்துச் சுடும் போட்டி ப‌ட‌ங்க‌ளைப் போட்ட‌து. ( ஆனையிற‌வு வெற்றி நாளில்).

சமாதான காலம் தமிழர்களுக்கு நாசமாக மாறியதற்கு தமிழ்நெட்டும் தன்னால் முடிந்தளவிற்கு இப்படியாகப் பங்களிப்பு செய்தது.

இப்ப‌ பிர‌பாக‌ர‌னின் புலிக‌ள் அமைப்பிற்கும் த‌ன‌க்கும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லை என்று போடுகிற‌து.

இறுதி வ‌ரை த‌ன் செய்தியாள‌ர் அங்கிருந்த‌தாக‌ச் சொல்லும் த‌மிழ்நெட் இறுதி மாதங்களில் ம‌க்க‌ள் பேர‌ழிவைப் ப‌ற்றி போட்ட‌ செய்திகள், ப‌ட‌ங்க‌ள் குறைவு.

ஆனால் புலிக‌ள் ஒரு சிறிய‌ தாக்குத‌ல் ந‌ட‌த்தினால் அந்த‌ப் ப‌ட‌ங்களை உட‌ன‌டியாக‌ப் போட்டுவிடும்.

ஈழ‌த்த‌மிழ‌ர் த‌மிழ்நெட்டை ஒரு ஊட‌கமாக‌ப் பார்க்க‌வில்லை. அதைவிட‌ மேலாக‌வே பார்க்கிறார்க‌ள்.

இன்றைய‌ கால‌க‌ட்ட‌த்தில் தமிழ்நெட் ஒரு மூன்றாம் ம‌னித‌னாக‌ செய‌ல்ப‌டுவ‌தை விட (வெறும‌னே செய்திக‌ளைப் போடாம‌ல்), ஆக்க‌பூர்வ‌மாக‌ வ‌ழிக‌ளை ஆராய்ந்து த‌மிழ‌ரை ஒன்றிணைத்து, ம‌ண்ணின் விடுத‌லைக்கு ஒரு ஊட‌க‌ம் என்ன‌ செய்ய‌ முடியுமோ அத‌னைச் செய்ய‌ வேண்டும்.

‍ ‌

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பெரும் தேசங்கள் தனித்தனியாகவும், கூட்டாகவும் மேற்கொள்ள இருக்கின்ற மாபெரும் உளவியல் யுத்தங்களை எதிர்கொள்ள புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்கின்றார்களா? என்னைப் பொறுத்தவரையில் உளவியல் யுத்தங்களை எதிர்கொள்ளுகின்ற பலம் பெரிய அளவில் எம்மிடம் கிடையாது என்றுதான் நான் கூறுவேன்.

ஏன் என்றும், எதிரியின் உளவியல் யுத்தங்களை எதிர்கொள்ள நாம் என்ன செய்யவேண்டும் என்றும் அடுத்த வாரம் முதல் விரிவாக ஆராய்வோம்.

ஆக்கம்: நிராஜ் டேவிட்

பல விடயங்களை ஆராய்ந்துள்ள, பயனுள்ள கட்டுரை.

உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள்

அவதானமாக, விழிப்பாக இருக்கவேண்டியது தான். அதுவே பயமாக மாறிவிடக் கூடாது.

தொடர்ந்து கவனம், கவனம், கவனம், கவனம் என்பதுவும் ஒரு உளவியல் தாக்குதல் தான்.

  • 2 years later...
உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் (பாகம்-4) – நிராஜ் டேவிட்
 
 
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளுள் ஒருவரான கேணல் ரமேஷ் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளால் விசாரிக்கப்படுவதான வீடியோ காட்சி பற்றி கடந்த வாரம் ஆராய்ந்திருந்தோம்.
 
உலகத் தமிழர் மத்தியில் ஒருவகை உளவியல் பீதியை ஏற்படுத்தும் நோக்கத்தோடே அந்த காட்சி சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவின் உளவியல் நடவடிக்கைப் பிரிவினரால் வெளியே கசியவிடப்பட்டதற்கான சாத்தியம் பற்றியும் கடந்த வாரம் ஆராய்ந்திருந்தோம்.
 
ரமேஷ் என்ற புலிகளின் முக்கிய தளபதி சிங்களப் படையினரிடம் சடணடைந்திருப்பது, அந்தப் படையினரைப்; பார்த்து மிரளுவது, சிங்களப் படையினரிடம் கெஞ்சுவது, இதுபோன்ற காட்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்துத்தான் அந்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கின்றது.
 
ரமேஷ் தொடர்பான அந்த வீடியோக் காட்சி உலகத் தமிழர் மனங்களில் ஏற்படுத்தியிருந்த உளவியல் தாக்கம் பற்றிப் பார்ப்பதற்கு முன்னதாக, ரமேஷ் என்ற போராளி தொடர்பான ஒரு சில விடயங்களை இந்தச் சந்தர்ப்பத்தில் பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
 
இந்தியப் படையினருடைய ஆக்கிரமிப்பு காலம் முதற்கொண்டு மட்டக்களப்பு வாழ் மக்கள் மத்தியிலும் போராளிகள் மத்தியிலும் மிகவும் பிரபல்யம் பெற்ற ஒருவராகவே ரமேஷ் இருந்து வந்துள்ளார்.
 
ரமேஷ் இந்தியப் படை காலத்தில் ரீகன் என்ற தளபதியின் தலைமையிலான அணியில் இருந்தபடி போராடிக்கொண்டிருந்தார்.
 
ரமேஷ் மட்டக்களப்பின் படுவான்கரையிலுள்ள அரசடித்தீவைப் பிறப்பிடமாக் கொண்டவர். மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் க.பொ.த. உயர் தரம் படித்துக்கொண்டிருக்கையில் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். படுவான்கரை பிரதேசத்தில் இந்தியப் படையினருக்கு சிம்மசொப்பனமாக இருந்த பல போராளிகளுள் ரமேஷூம் ஒருவர்.
 
ஒரு சந்தர்ப்பத்தில் மண்முனைத்துறையில் முகாம் அமைத்துத்தங்கியிருந்த இந்தியப் படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ரமேஷ் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்த அவரைப் போராளிகள் வயல் பிரதேசங்களுக்குள் நகர்த்தினார்கள். திக்கோடைப் பிரதேசத்தில் வைத்து அவரது காயங்களுக்கு முதலுதவி அளித்துவிட்டு வாவி ஓரத்தில் அமைந்துள்ள கண்ணாக் காடுகளுக்குள் அடைக்கலம் புகுந்தார்கள்.
 
 
 
ரமேஷின் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட அந்தப் படுகாயம் சரியாக பராமரிக்கப்படவில்லை. பராமரிக்கும் வசதிகளும் அப்பொழுது புலிகளிடம் இருக்கவில்லை. நாளாந்த உணவிற்கும், அப்பிரதேசம் முழுவதும் பரவியிருந்த இந்திய ஜவான்களின் கண்களில் இருந்து தப்புவதற்கும் அதிக கரிசனை செலுத்தவேண்டி இருந்ததால், அவர்கள் தமது உடலில் ஏற்பட்ட காயங்கள் பற்றி சிந்திப்பதற்கு நேரம் இல்லாமல் இருந்தது.
 
கண்ணாக் காடுகள் என்பது மூன்று முதல் ஆறு அடிகள் மட்டுமே உயரமான, செறிவான பற்றைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பின் வாவியை அண்டிய பகுதிகளில் இந்தக் கண்ணாக்காடுகள் பரந்து காணப்படுகின்றன. இந்தப் பற்றைகளின் மத்தியிலேயே அக்காலப்பகுதியில் விடுதலைப் புலிப் போராளிகள் மறைந்திருந்து செயற்படுவது வழக்கம்.
 
இந்தியப் படையினருக்கும் இந்த விடயம் நன்றாகத் தெரியும்.
 
அவர்களுடன் கூடத்திரிந்த தமிழ் இயக்க உறுப்பினர்கள் இதனை அவர்களுக்கு தெரிவித்திருந்தார்கள்.
 
ஆனாலும், கண்ணாக் காடுகளுக்குள் மறைந்திருக்கும் புலிப் போராளிகளைக்; குறிவைப்பதில் இந்தியப் படையினருக்குச் சில சிக்கல்கள் இருந்தன. மட்டக்களப்பு முழவதும் குறுக்கு நெருக்காக ஓடிக்கொண்டிருக்கும் வாவிக்கரையை அண்டி பல மீற்றர்கள் பரந்து காணப்படும் கண்ணாக் காடுகளுள் குறிப்பாக எந்தப் பகுதியில் போராளிகள் மறைந்திருக்கின்றார்கள் என்று அவர்களுக்கு அறிந்துகொள்வது கஷ்டம். அடுத்தது கண்ணாக் காடுகளுக்குள் நுழைந்தால், அங்கு பதுங்கி நிலை எடுத்திருக்கும் புலிகளின் துப்பாக்கிக்கு, அல்லது புலிகள் விரித்து வைத்திருக்கும் பொறிகளுக்கு இலகுவாக இரையாகக் கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தன. அதனால் புலிகள் மறைந்திருந்த பகுதிகளுக்கு சில அடிகள் தொலைவிற்கு வந்தும்கூட, அங்கு பதுங்கியிருக்கும் போராளிகளை எதுவும் செய்யமுடியாமல் திரும்பிச் செல்லவேண்டிய சந்தர்ப்பம் அடிக்கடி ஏற்படுவது வழக்கம்.
 
ஆனாலும் ஒரு வேலையை மட்டும் இந்திய இராணுவத்தினரால் சாதாரணமாகச் செய்யமுடிந்தது. கண்ணாக்காடுகளை அண்டிய பிரதேசங்கள்; வழியாக இந்தியப் படையினர் பயணம் செய்யும் சந்தர்ப்பங்களிலெல்லாம், கண்ணாக்காடுகளை நோக்கி சகட்டுமேனிக்குத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவிட்டு செல்வது வழக்கம். அதிஷ்டவசமாக துப்பாக்கிச் சூட்டில் அப்பட்டு புலிகள் செத்துத் தொலைக்கட்டும் என்பது அவர்களது எண்ணம். சிலவேளைகளில் புலிகள் பதுங்கியிருப்பதாக அவர்கள் சந்தேகித்துவிட்டால், குறிப்பிட்ட அந்தப் பகுதிகளை நோக்கி செல்தாக்குதல்களை மேற்கொண்டு அந்தப் பகுதியையே சுடுகாடாக்கிவிடுவார்கள். இதில் அகப்பட்டு பல போராளிகளும், ஆதரவாளர்களும் கொல்லட்டதும் குறிப்பிடத்தக்கது.
 
இப்படியான ஒரு ஆபத்தான இடத்தில்தான் ரமேஷ் மறைந்திருக்கவேண்டி ஏற்பட்டது.
 
ரமேஷ் மறைந்திருந்த கண்ணாக் காட்டை அண்டிய பிரதேசத்தில் ஒரு இந்தியப் படைப் பிரிவு வந்து முகாம் அமைத்து தங்க ஆரம்பித்தது. சாதாரணமாகவே இதுபோன்று வரும் காவல் உலா அணிகள், ஏதாவது ஒரு பகுதியில் தங்கிவிட்டு பொழுதுபட்டதும் முகாமிற்கு திரும்பிவிடுவார்கள். ஆனால் அன்று அங்கு வந்த காவல் உலா அணி, சிறிய கூடாரம்; ஒன்றை அமைத்து, அங்கேயே தங்க ஆரம்பித்துவிட்டார்கள்.
 
அந்தப் பிரதேசத்தை அண்டிய கிராமத்தில் இந்தியப் படையினர் பாரிய முகாம் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டடிருந்தார்கள். அந்த முகாம் அமைத்து முடிக்கும் வரை, முகாம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்குடன், அண்டைய பிரதேசங்களில் பல படைப்பிரிவினர் சிறிய சிறிய முகாம்களை அமைத்து நிலை கொண்டிருந்தார்கள். ரமேஷின் போதாத காலம், அவர் பதுங்கியிருந்த கண்ணாக் காட்டிற்கு அருகிலும் ஒரு இந்தியப் படைப்பிரிவு கூடாரம் அமைத்து நிலைகொள்ள ஆரம்பித்தது.
 
மிகவும் இக்கட்டான நிலை. சிறிது அசைந்தாலும் இந்தியப் படையினரின் பார்வையில் பட்டுவிடும் அபாயம். உணவு எதுவும் இல்லை. இயற்கை உபாதைகளைக்கூடத் தீர்க்கமுடியாத நிலை. போராளிகள் தமக்குள் பேசிக்கொள்ளமுடியாது. கண்களாலும், சைகைகளினாலும் மட்டுமே தொடர்புகளை பேண முடிந்தது.
 
இந்தியப் படையினர் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிக்கவும் முடியவில்லை. ஏனெனில் புலிகளிடம் கைவசம் சிறிய அளவு அயுதங்களே இருந்தன. ரமேஷ் வேறு படுகாயம் அடைந்து நகர முடியாமல் இருந்தார். அதை விட, இந்தியப் படையினர்மீது தாக்குதல் நடாத்திவிட்டு எங்குமே தப்பிப்போகமுடியாத அளவிற்கு அப்பிராந்தியம் முழுவதும் இந்தியப் படையினர் குவிக்கப்பட்டிருந்தார்கள்.
 
ரமேஷின் காயம் மிகமோசமான கட்டத்தை அடைந்தது. எந்தவித சிக்சையும் அளிக்கமுடியாத இக்கட்டான நிலை.
 
உயிர்போகும் வலி.
 
வாய்விட்டு முனகக்கூட முடியாத அபாயம்.
 
சிறு சத்தம் வெளிவந்தால்கூடப் போதும். கூட இருந்த மற்றய போராளிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
 
அடுத்து என்ன நடக்கும் என்று ஒவ்வொரு கணமும் நகர்ந்துகொண்டிருந்த நேரத்தில், திகைப்பின் உச்சத்திற்கே கொண்டுசெல்லும் மற்றொரு சம்பவம் ரமேஷூக்கு ஏற்பட்டது.
 
எதேச்சையாக தனது காயத்தில் கைவைத்த ரமேஷ் அதிர்ச்சி அடைந்தார்.
 
தனது இடுப்புக் காயத்தில் இருந்து சிறிய சிறிய புழுக்கள் வெளிவருவதை ரமேஷ் உணர்ந்தார்.
 
அவருடன் கூடப் பதுங்கியிருந்த மற்றைய போராளிகளுக்கும் தனது நிலையை சைகையால் தெரிவித்தார்.
 
என்ன செய்வது என்று எவருக்குமே தெரியவில்லை.
 
 
 
இத்தனைக்கும் இந்தியப் படையின் அந்தக் காவல் உலா அணி அந்தப் பகுதியில் கூடாரம் அடித்து தங்க ஆரம்பத்து மூன்று நாட்டகளாகிவிட்டன. பத்துப் பேரடங்கிய அந்த அணி தமது கூடாரத்திற்கு அருகில் தீ மூட்டி சப்பாத்தி தயாரித்து, குறுமா தயாரித்து சாப்பிட்டபடி பொழுதைப் போக்கிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் எப்பொழுது அந்த இடத்தை விட்டு கிழம்புவார்கள் என்பதும் எவருக்கும் தெரியவில்லை.
 
பதுங்கியிருந்த போராளிகளுக்கு உணவு வசதிகள் எதுவும் இல்லை. கைவசம் இருந்த ஓரிரு பிஸ்கட் பக்கெட்டுகளும் எப்பொழுதோ காலியாகிவிட்டிருந்தன. தண்ணீர் போத்தலிலும் ஒரு சொட்டு நீர் கிடையாது.
 
ரமேஷ் ஒரு முடிவுக்கு வந்தார்.
 
சயனைட்டை உட்கொண்டு தன்னை மாய்த்துக்கொள்வதே வலியில் இருந்து மீட்சி பெறுவதற்கும், தன்னுடன் இருந்த மற்றைய போராளிகளைக் காப்பாற்றுவதற்கும் உள்ள ஒரே வழி என்று அவர் நினைத்தார். தனது உயிர்போகும் வலியால் ஒருவேளை தன்னையும் அறியாமல் கத்தித் தொலைத்துவிட்டால், தன்னுடன் தங்கியிருக்கும் மற்றைய போராளிகளின் கதி அதோ கதியாகிவிடும் என்பதே அவரது பிரதான அச்சம்.
 
சையணைட்டை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு கண்களால் விடை கோரினார்.
 
மற்றயப் போராளிகள் அவசரப்படவேண்டாம் என்று சைகையால் கெஞ்சினார்கள்.
 
கண்ணாக் காட்டினுள் இப்படி இழுபறி நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், வெளியே ஒரு அதிசயம் நடைபெற ஆரம்பித்தது.
 
கடந்த மூன்று நாட்களாக அங்கு கூடாரம் அமைத்துத் தங்கியிருந்த இந்தியப் படையினர் தமது மூட்டை முடிச்சுக்கள் சகிதமாக அங்கிருந்து கிழம்ப ஆயத்தமானார்கள். அவர்களது பேச்சிலிருந்து மறைந்திருந்த புலிகளால் இதனை உணரக் கூடியதாக இருந்தது.
 
ரமேசுடன் பதுங்கியிருந்த ஒரு போராளியின் பெயர் முராண்டி (இயற்பெயர் வரதன்). கோவில் போரதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மிகவும் திறமைசாலி. மெதுவாக நகர்ந்து கண்ணாக்காட்டின் எல்லைக்குச் சென்று நிலமையை நோட்டம் விட்டார். திரும்பிவந்து ரமேஷிடம் இந்தியப் படையினர் வெளியேறிக்கொண்டிருக்கும் செய்தியை சைகையால் தெரிவித்தார். ரமேஷிடம் இருந்த சையனைட்டையும் பறித்தெடுத்தார்.
 
ஒருவாறாக இந்தியப் படையினர் அங்கிருந்து கிளம்பினார்கள்.
 
அன்று இரவு ரமேஷூம் மற்றைய போராளிகளும் வெளியேறி மாவட்டத்தின் எல்லைக் கிராமம் ஒன்றிக்கு சென்றார்கள். அங்கு தங்களது ஆயுதங்களை மறைத்து வைத்துவிட்டு, அயலிலுள்ள சிங்களக் கிராமம் ஒன்றிற்கு பொதுமக்கள் போல் சென்றார்கள். ரமேஷிட்கு அங்கு சிகிட்சை அளிக்கப்பட்டது.
 
கிழக்கைப் பொறுத்தவரையில் ரமேஷ் என்பவன் ஒரு கதாநாயகன்.
 
கருணாவின் பிரிவைத் தொடர்ந்து மட்டக்களப்பை மீட்கும் நோக்கோடு விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்களல்லவா? அந்த படை நடவடிக்கையில் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளான சொர்ணம், பாணு, சூசை, தற்பொழுது புலிகளின் மத்திய குழுவில் அங்கம் வகிக்கின்ற சுரேஷ் போன்றவர்கள் உட்பட பல சிரேஷ்ட தளபதிகள் நேரடியாக பங்குபற்றியிருந்த பொழுதும், அந்த படைநடவடிக்கையின் கட்டளைத் தளபதியாக விடுதலைப் புலிகளின் தலைமையால் அடையாளப்படுத்தப்படும் அளவிற்கு தளபதி ரமேஷ் முக்கியத்துவம் பெற்றிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
அப்படிப்பட்ட ரமேஷ் சிறிலங்காப் படைகளிடம் சரணடைந்து, அந்தப் படையினரிம் கெஞ்சிக்கொண்டிருப்பதான காட்சி நிச்சயம் பாரிய உளவியல் தாக்கத்தினை ரமேஷை அறிந்தவர்களுக்கும், ரமேஷ் சார்ந்த விடுதலைப் புலிகள் அமைப்பை நேசிப்பவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
 
அடுத்ததாக, ஊடகங்களில் வெளியான ரமேஷ் தொடர்பான காட்சிகள் எப்படியான பாதிப்பினை ஏற்படுத்திருந்தது என்பதை அறியும் நோக்கோடு, ரமேஷை அறிந்த, அவருடன் நெருங்கிப் பழகிய, பலரைத் தொடர்புகொண்டு இந்தச் சம்பவம் தொடர்பான ஒரு கருத்துப் பகிர்வை மேற்கொண்டேன்.
 
அவர்களிடம் இணர்டு கேள்விகளைக் கேட்டேன்.
 
1.    ரமேஈ; தொடர்பான வீடியோக் காட்சி உங்களுக்கு எப்படியான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது?
 
2.    எங்கே அந்த வீடியோ காட்சியைப் பார்த்தீர்கள்?
 
இது தொடர்பாக அவர்களுடன் பேசிய பொழுது, அவர்களில் பலரை அந்தக் காட்சி உளவியல் ரீதியாகப் பலவீனமடைய வைத்திருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி என்னால் உணரக்கூடியதாக இருந்தது.
 
பலர் பல நாட்கள் துக்கமின்றி இருந்ததாகத் தெரிவித்தார்கள். அந்த வீடியோக் காட்சியைத் தாம் திரும்பத் திரும்ப பார்த்ததாகவும், பல நாட்கள் அந்தக் காட்சி தமது கண்களை விட்டு அகலாமல் இருந்ததாகவும் தெரிவித்தார்கள்.
 
சிலரோ விடுதலைப் புலிகள் தொடர்பாக தங்களது மனங்களில் இருந்த கம்பீரம், இந்தச் சம்பவத்தைப் பார்த்ததன் பின்னர் சிறிய அளவிலாவது குறைந்துவிட்டிருந்ததை ஒப்புக்கொண்டார்கள். எதிரியிடம் சரணடைந்த பல போராளிகளுக்கு தண்டணை வழங்கிய செயலைச் செய்த தளபதிகளே எதிரியிடம் மண்டியிடுவது போன்ற காட்சி ஒருவகை விரக்தியை ஏற்படுத்தியதாக பலர் கூறினார்கள்.
 
சிலருக்கு இனம் புரியாத அச்சம் ஏற்பட்டதாகக் கூறுகின்றார்கள்.
 
மொத்தத்தில் இந்தக் காட்சி உலகத் தமிழர் மனங்களில் ஒருவித உளவியல் தாக்கத்தினை ஏற்படுத்திவிட்டிருந்தது என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.
 
ஏனென்றால் ரமேஷ் என்கின்ற தளபதியை அறிந்தவர்களுக்கு அவரது கம்பீரம், கட்டுப்பாடு, செயல், போர்குணம் போன்ற விடயங்களில் ஒரு கதாநாயகனாகத்தான் அவர் இருந்திருக்கின்றார். அப்படிப்பட்ட ரமேஷ் கூணிக், குறுகி எதிரியிடம் மன்றாடிக்கொண்டிருக்கும் காட்சியை எவராலும் இலகுவில் ஜீரணிக்க முடியவில்லை.
 
அடுத்ததாக, இந்த வீடியோக் காட்சியை எங்கே பார்த்தீர்கள் என்ற கேள்விக்கு, அனேகருடையது அல்ல – அனைவரது பதிலுமே: தமிழ் தேசிய ஊடகங்கள் என்றே வந்ததே.
 
நான் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அனைவருமே ரமேஷ் தொடர்பான காட்சியை தமிழ் தேசிய ஊடகங்கள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் இணையத் தளங்கள், தமிழருக்குச் சார்பாக, தமிழர் நலனில் அக்கறைப்படும் ஊடகங்கள் என்பனவற்றில்தான் தாம் பார்த்ததாகத் தெரிவித்திருந்தார்கள்.
 
ஆக மொத்தத்தில், ரமேஷினுடைய இந்த வீடியோக் காட்சி விடையத்தில் மூன்று முக்கிய விடயங்களை இங்கு நான் சுட்டிக் காண்பிக்க விரும்புகின்றேன்.
 
முதலாவது: உலகத் தமிழர் மனங்களில் பல்வேறு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கோடு எதிரியானவன் ஒரு வீடியோக் காட்சியை வெளியிட்டுள்ளான்.
 
இணர்டாவது,: அந்த வீடியோக் காட்சி உலகத் தமிழர் மத்தியில் பல்வேறு உளவியல் தாக்கத்தினை ஏற்படுத்தத்தான் செய்தது.
 
மூன்றாவது: எதிரியின் அந்த உளவியல் யுத்தத்தை தம்மை அறியாமல் எமது தமிழ் தேசிய ஊடகங்களே முன்னெடுத்து இருக்கின்றன.
 
நாம் மிகவும் அக்கறைப்பட்டு பார்க்கவேண்டிய விடயம் இது.
 
‘ஊடக தர்மம், அறிந்துகொள்ளும் உரிமை, அறிவிக்கவேண்டிய கடமை, நாம் வெளியிடாவிட்டாலும் எதிரி வேறு வழியாக வெளியிடத்தானே செய்வான்’ -என்பதுபோன்ற பல வாதங்களை நீங்கள் முன்வைக்கலாம்.
 
நானும் அதில் உடன்படுகின்றேன் ஒரு ஊடகவிலயாளனாக.
 
ஆனால் எமது எதிரி எம்மை நாசமாக்கும் நோக்குடன் எமக்கு எதிராக மேற்கொள்ளுகின்ற ஒரு உளவியல் போருக்கு, எமது ஊடகங்களே வலுச்சேர்ப்பது போன்று செயற்படுவது சரியா என்று எழுகின்ற கேள்விக்கு, என்னால் சரியான பதிலைக் கூறமுடியாமலே இருக்கின்றது ஒரு தமிழனாக.
 
இப்படியான ஒரு சூழ்நிலையில் எமது ஊடகங்கள் எப்படிச் செயற்பட வேண்டும்?
 
உலகத் தமிழரைக் குறிவைத்து எதிரிகள் மேற்கொள்ளும் உளவியல் போரை நாம் எப்படி முறியடிக்கலாம்?
 
எதிரி மேற்கொள்ளும் உளவியல் நடவடிக்கைகளுக்கு எமது தமிழ் ஊடகங்களையே அவன் பயன்படுத்துவதை எப்படி நாம் தவிர்க்கலாம்?
 
இதுபோன்று பலரது மனங்களில் எழும்பும் கேள்விகளுக்கு பதிலைத் தேடுவதானால், முதலில் உளவில் நடவடிக்கை என்றால் என்ன என்று எமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
 
ஊடகங்களைப் பாவித்து மேற்கொள்ளப்படும் உளவியல் நடவடிக்கைகள் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றி நாம் சரியாக அறிந்து வைத்திருக்கவேண்டும்.
 
எதிர்வரும் வாரங்களில் இவை பற்றித்தாம் ஆராய இருக்கின்றோம்.
 
உலக சரித்திரித்தில், முக்கியமான யுத்தங்களில் ஊடகங்களைப் பாவித்து மேற்கொள்ளப்பட்ட உளவியல் நடவடிக்கைகள்…..
 
ஈழவிடுதலைப் போராட்டத்தில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள்….
 
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியப் படைகள் மற்றும் அதனது உளவுப் பிரிவான ஆய்வுப் பகுப்பாய்வுப் பிரிவு (Research and Analyze Wing -RAW) மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள்….
 
1ம் கட்டம் முதல் 4ம் கட்டம் வரையிலான ஈழ யுத்தங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள்…
 
இவைகள் பற்றித்தான் அடுத்த வாரம் முதல் சற்று ஆழமாக நாம் பார்க்க இருக்கின்றோம்
 
தொடரும்..
 

http://www.nirajdavid.com/உளவியல்-நடவடிக்கைகள்

இதுவே ஒரு உளவில் தந்திரம்தான்  புரிந்துகொண்டால் சரி!

உலகத் தமிழரைக் குறிவைத்து சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற உளவியல் நடவடிக்கைகள் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பல விடயங்களை ஆராய்ந்துள்ள, பயனுள்ள கட்டுரை. நன்றி இனைப்பிற்க்கு akootha

 

 எதை யார் எழுதினாலும் இனி ஆயுதபோர் இல்லை. இன்றைய ராஜதந்திர போரை தொடர்ந்து தமிழர்கள் இறுக்கிக்கொண்டு போக வேண்டும். இதை தான் முள்ளிவாய்க்கால் கடைசி நாட்களில் தலைவர் சொன்னார். இப்பொது பிரதான பாகம் புலம் பெயர் தமிழர் கையில். கோட்டாவின் திட்டங்களுக்கு இரையாகாமல் போராட்டத்தை கொண்டு போக வேண்டும். 

என்ர அம்மாளே 

 

இவ்வளவத்தையும் வாசிச்சு முடிக்க எனக்கு ஒரு கிழமை எண்டாலும் வேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.