Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகத்தை நெருக்கும் சீன பேராபத்து : இலங்கையிலிருந்து அதிர்ச்சி ரிப்போர்ட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Saturday, January 15th, 2011 | Posted by admin

தமிழகத்தை நெருக்கும் சீன பேராபத்து : இலங்கையிலிருந்து அதிர்ச்சி ரிப்போர்ட்

ராஜபக்ஷேவால் தென்னிலங்கையில் வலுவாகக் காலூன்றிய சீனா, இப்போது இந்தியாவிற்கு பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. சீனாவின் வல்லாதிக்கம், இப்போது வடக்கு இலங்கையின் வடபகுதி முனைவரையிலும் கூட நெருக்கமாக முன்னேறி இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாகியிருப்பதுதான் இப்போது லேட்டஸ்ட் சர்ச்சை.

இலங்கையின் யாழ் குடாநாட்டின் வடமேற்குப் பகுதியில் வங்காள விரிகுடாவை ஒட்டி அனலை தீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, காரைதீவு, மண்டைதீவு, பாலைதீவு, இரணைதீவு என்று பல சிறிய தீவுகள் சிதறிக் கிடக்கின்றன. இவற்றில் காரை தீவு, மண்டைதீவு போன்றவை யாழ் குடாநாட்டின் பெருநிலப் பரப்புடன் தரைவழிப் பால இணைப்பு மூலம் தொடுக்கப்பட்டமையால் தீவு என்ற நிலையில் இருந்து விடுபட்டுள்ளன.

இத்தகைய தீவுகளில் ஒன்றையே காதும் காதும் வைத்தாற் போல சீனாவுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் கைங்கரியத்தை கொழும்பு இப்போது ஆரம்பித்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. இதனால் புதுடில்லி ஆடிப்போயிருக்கின்றது.

வடக்கு இலங்கையில் – குறிப்பாக யாழ் குடாநாட்டில் – வீதி புனரமைப்பு, ரயில் பாதை புனரமைப்பு என்ற பெயரில் காங்கேசன்துறை துறைமுகம் வரை வியாபித்துள்ள சீன ஆதிக்கம், இப்போது அதையும் தாண்டி இந்தியாவின் தென் கோடி முனை நோக்கியும் விரியத் தொடங்கியிருப்பதுதான் அதிர்ச்சித் தகவலாகும். இந்தியாவின் தென்கோடி முனையிலிருந்து இருபதுக்கும் குறைவான கடல்மைல் தொலைவில் உள்ள ஒரு சிறிய தீவில் சீனா தளம் அமைக்க இட மளித்தால் அதைப்போல பேராபத்து இந்தியாவுக்கு இன்றைய நிலையில் வேறு எதுவுமாக இருக்க முடியாது.

யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் வடமேற்கு பகுதி யில் உள்ளது அனலைதீவு. அதன் வடகோடி முனையில் உள்ளதுதான் பருத்தித் தீவு. சில சதுர கிலோ மீட்டர் பரப்பளவே கொண்ட இந்தத் தீவுத் திடலுக்கு அருகில் உள்ள அனலை தீவிலிருந்தும், எழுவைதீவில் இருந்தும் படகுகள் மூலம் சென்று வர முடியும். எனினும் தீவுகளுக்கு இடையிலான கடல் வற்றும் சமயங்களில் அனலைதீவிலிருந்து பருத்தித்தீவுக்கு நடந்து சென்று வரக்கூடிய நில இணைப்புக் கிட்டுவதாகவும் கூறப்படுகின்றது.

இந்தப் பருத்தித்தீவில் முப்பது, நாற்பது தமிழ்க் குடும்பங்களே உள்ளதாகக் கூறப்படுகின்றது. இங்கு ஆடு வளர்ப்பு மட்டுமே முக்கிய தொழிலாக உள்ளது.

அத்தீவில் பூர்வீகமாக வாழும் தமிழ்க் குடி மக்களை அங்கிருந்து வெளியேற்றும் ‘அழுத்த’ நடவடிக்கை படைத்தரப்பால் ஏற்கனவே ஆரம் பிக்கப்பட்டுள்ளதாகாத் தெரிகின்றது. தனிப்பட்ட விஷயங்களுக்காக அத்தீவில் இருந்து ஏற்கனவே வெளியே சென்ற சில குடும்பங்கள் தமது இடத்துக்கு திரும்ப அனுமதிக்கப்படவில்லை என்றும் ஒரு தகவல்.

இந்தத் தீவை சுற்றுலா மையமாக்கும் நோக்குடன் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு அதைத் தாரை வார்க்க அரசு முயல்கின்றது என்ற பேச்சே இப்போது கொழும்பு அதிகார வர்க்கத்தினால் கசிய விடப்பட்டிருக்கின்றது. சில வெளிநாட்டுத் தரப்புகளும் இந்தத் தீவுக்கு நேரடியாக விஜயம் செய்து சாதக, பாதகங்களை ஆராய்ந்து சென்றிருப்பதாகவும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

தீவுகளைப் பயன்படுத்தி உல்லாசப் பயணத்துறையை வெற்றிகரமாக முன்னெடுக்கும் நாடு மாலத்தீவு. அதன் நிறுவனம் ஒன்றுக்கு பருத்தித்தீவில் இடமளிப்பதன் மூலம் யாழ் குடாநாட்டை ஒட்டி உல்லாசப் பயணத்துறையை இலங்கை அரசு விஸ்தரிக்க முனைகின்றது என்றே வெளியே காட்ட எத்தனிக்கப்படுகிறது. ஆனால், அங்கு சீன ஆதிக்கத்துக்கு சந்தர்ப்பம் அளிப்பதே கொழும்பு அதிகாரத் தரப்பின் உள்நோக்கம் என சில உளவு வட்டாரங்கள் சந்தேகம் தெரிவிக்கின்றன.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ் குடாநாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகள் என்ற பெயரில் இந்தியா¬யுயம் மீறிப் பல்லாயிரம் கோடி ரூபாய் பெறுமதியான பல்வேறு திட்டங்கள் சீன நிறுவனங்களிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு விட்டன என்பது தெரிந்த விஷயம்தான். இந்தத் திட்டங்களில் பணியாற்றுவதற்காக ஏற்கனவே தென்னிலங்கையில் சீனர்கள் குவிந்து கிடக்கின்றமை போல – யாழ் குடாநாட்டிலும் பல்லாயிரக்கணக்கான சீனர்கள் வந்து இறங்குவார்கள் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இந்த அபிவிருத்தித் திட்டங்களில் பணியாற்றும் சீன அதிகாரிகளுக்கு உல்லாசப் பயண வாய்ப்பு அளிக்கவே பருத்தித்தீவு சுற்றுலா மையமாக்கப்படுகின்றது எனக் காட்டிக் கொண்டு அங்கு சீன அதிகார வர்க்க நுழைவுக்கு இடமளிப்பதே கொழும்பின் உள்நோக்கம் எனக் கருதப்படுகின்றது.

எது எப்படியாயினும், இந்தியாவின் தென்கோடி முனை எல்லையில் இருந்து சில கடல்மைல் தொலைவே உள்ள இந்தத் தீவில் சீன நுழைவுக்கு இடமளிப்பது இந்தியாவின் ஸ்திரப்பாட்டுக்கு பெரும் அச்சுறுத்தல் என்பதை உணர்ந்துள்ள இந்திய அதிகார வர்க்கம், இதனை முளையிலேயே கிள்ள துடியாய்த் துடித்து நிற்கின்றது.

ஏற்கனவே தென் எல்லைக் கடல்பிராந்தியத்தில் கச்சதீவு மீதான ஆதிக்கத்தை இழந்ததால் உள்நாட்டில் அரசியல் பிரச்சினைகளையும், சர்வதேச மட்டத்தில் இராணுவ உறுதிப்பாட்டுக்கான வாய்ப்பையும் இழந்து நிற்கும் இந்தியாவுக்கு பருத்தித்தீவு விவகாரம் பெரும் சவாலாக மாறும் என்பதற்கான அறிகுறிகளே இப்போதைக்குத் தெரிகின்றன.

சுமார்; முப்பது ஆண்டுகளுக்கு மேல் தனது அரசுக்கு எதிராக நீடித்து வந்த ஆயுதப் போராட்டம் என்ற ‘தலைவலிக்கு’ விடுதலைப் புலிகளை யுத்தத்தில் தோற்கடித்ததன் மூலம் இலங்கை அரசு தீர்வு கண்டுவிட்டது. ஆனால், எண்பதுகளின் முற்பகுதியில் கொழும்பு ஆட்சிப் பீடத்துக்குத் ‘தலையிடி’ கொடுப்பதற்காக இலங்கைத் தமிழ் இளைஞர்களைத் தன் மண்ணுக்கு தருவித்து, ஆயுதப் பயிற்சி கொடுத்துத் தூண்டி விட்ட புதுடில்லி நிர்வாகமோ, பின் நாட்களில் தனது போக்கை மாற்றிக் கொண்டு, ஈழத் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை அடக்கி ஒடுக்க -வரிந்து கட்டிக் கொண்டு கொழும்புக்கு உதவி செய்து, அதில் வெற்றியும் கண்டதன் மூலம் இப்போது தனக்குத் தானே நிரந்தரத் தலைவலியை வாங்கிக் கட்டிக் கொண்டு நிற்கிறது.

தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்ட அச்சுறுத்தல் என்ற பெரும் ‘தலைவலி’யை இலங்கை அரசுக்குக் கொடுக்கும் நோக்கோடு வகுக்கப்பட்ட புதுடில்லியின் அரசியல் இராஜதந்திர நகர்வு, பாரதத்தின் தென்கோடி முனையிலும் சீன அச்சுறுத்தல் என்ற நிரந்தர தலையிடியாக உருமாற்றம் கொண்டிருப்பது புதுடில்லியின் வெளிவிவகாரக் கொள்கை வகுப்பின் வியூகத்தில் இடம்பெற்ற குளறுபடித்தனத்துக்குக் கிடைத்த பெரும் தோல்வியன்றி வேறில்லை.

விடுதலைப் புலிகள் மீதான யுத்த வெற்றி என்ற மமதையில் மார்தட்டி, அதன் மூலம் நாட்டின் பெரும் பான்மையினரான சிங்கள பௌத்த மக்களிடையே பேரினவாத மேலாண்மைச் சிந்தனையைத் தூண்டி விட்டு, அதன் பெறுபேறாக தன்னை அரசியல் ரீதியாகவும் இந்தப் பிராந்தியத்தின் மிகப் பலமான அரசாக மாற்றிக் கொண்டிருக்கும் ராஜபக்ஷே நிர்வாகம், இப்போது புதுடில்லிக்குச் சவால் விடும் வகையில் இராஜதந்திர காய் நகர்த்தல்களை முன்னெடுக்கத் தொடங்கியிருப்பது வெளிப்படையானது.

அடங்க மறுக்கும் குறுநில மன்னர்போல, சீனப் பூதத்தைக் காட்டித் துள்ளிக் குதிக்கும் இலங்கை ஆட்சிப் பீடத்தை, சமாளித்து வழிக்குக் கொண்டுவர வகை தெரியாமல் விழிபிதுங்கி தடுமாறித் திணறுகின்றது இந்திய உபகண்டப் பேரரசு.

இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு பிரதான தரப்பு சிங்கள அரசு என்றால் எதிர்த்தரப்பில் இன்று எஞ்சி, மிஞ்சி நலிவுற்றுக் கிடப்பது ஈழத் தமிழர் சமூகம். அச் சமூகத்தின் ஆயுதப் போராட்ட சக்தியான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவின் பூரண ஆசியுடனும் முழு ஒத்துழைப்புடனும் அடியோடு அழித்தொழிக்கப்பட்டு விட்ட நிலையில், இன்று தமிழர் தரப்பில் ஓரளவேனும் வலுவாகவும் உறுதியாகவும் தப்பி நிற்பது புலம்பெயர் தமிழ் சமூகம்தான்.

மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் லட்சக் கணக்கில் சிதறி வாழும் ஈழத் தமிழர்கள், விடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியில் தோற்கடிக்கப் பட்ட போதிலும் கூட, சுதந்திரத்திற்காக உணர்ச்சிபூர்வ குரல் எழுப்பி வருகின்றனர் என்பது உண்மை.

இச் சமூகத்தின் வலிமையைப் புரிந்து கொண்டுள்ள புதுடில்லி நிர்வாகம், இப்போது சீனப் பூச்சாண்டியைக் காட்டி எகிறும் ராஜபக்ஷே ஆட்சிப் பீடத்தைத் தனது வழிக்குக் கொண்டு வர இவர்களை நோக்கித் தனது கடைக்கண் பார்வையைத் திருப்பி நேசக்கரம் நீட்ட எத்தனிக்கின்றது எனத் தகவல்கள் கசியத் தொடங்கியிருக்கின்றன.

ஆனால் 2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் வன்னியில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொலைவெறி யுத்தம் மூர்க்கத்தனமாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட போது, புலம் பெயர் சமூகம் உதவி கோரி உச்சஸ்தாயில் எழுப்பிய குரலை புதுடில்லி உதாசீனம் செய்து குரூரத்தனமாக நடந்து கொண்டமை ஈழத் தமிழர்களின், – குறிப்பாகப் புலம் பெயர் தமிழர்களின் – நெஞ்சில் வெஞ்சினம் ஆழப் புதைந்து கிடக்கிறது. பாரதத்தின் தற்போதைய புதிய ‘பாசப் பார்வைக்கு’ ஈழத் தமிழரின் புலம் பெயர் சமூகம் இலகுவாக ஆட்பட்டுவிடுமா என்பது சந்தேகமே.

எனினும், இலங்கை அரசுக்கு எதிராக புலம் பெயர் ஈழத் தமிழர்கள் சார்பிலான போராட்டங்களையும் பிரச்சாரங்களையும் முன்னெடுக்கும் தரப்புகள், கட்டமைப்புகள், சங்கங்கள் போன்றவற்றின் முக்கிய பிரமுகர்களை இலக்காக வைத்துத் தனது வலையில் வீழ்த்தும் நோக்குடன் புதுடில்லியின் உறவுக் கரங்கள் நீட்ட ஆரம்பித்திருக்கின்றன.

இலங்கைத் தீவில் சீனாவின் நிரந்தர ஆதிக்கத்துக்கு இடமளிக்கும் விதத்தில் நடந்து கொள்ளும் இலங்கையின் ‘மிதப்பு’ போக்குக்கு ‘ஆப்பு’வைக்கும் பாரதத்தின் கனவு பலிக்குமா? – மேற்கு நாடுகளின் புலம்பெயர் தமிழர்களைத் தனது வலைக்குள் வளைத்துப் போடுவதற்கு தற்போது இந்தியாவின் உளவுப் பிரிவு ஆரம்பித்திருக்கும் காய் நகர்த்தல்களின் வெற்றிகளில்தான் இதற்கான பதில் தங்கியுள்ளது.

இந்தியப் பகுதிக்குள் சீனப்படையினர் அத்துமீறி நுழைவது அடிக்கடி நடந்துவருகிறது. லடாக் பகுதியில் சாலை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய தொழிலாளர்களை அவர்கள் மிரட்டினர். பின்னர், அதே ஆண்டில் நமது எல்லைக்குள் சிலவகைப் பயிற்சி களையும் மேற்கொண்டனர். இந்தியப்பகுதியில் இருந்த தூண்கள் மற்றும் பாறைகளில் சிவப்பு வண்ணங்களையும் அடித்துச் சென்றனர். சீனராணுவத்தினரின் இந்த நடவடிக்கைக்கு இந்திய அரசு சார்பில் அப்போதே கண்டனம் தெரிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்நிலையில், இந்தியப் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் அத்துமிறீ நுழைந்து கான்ட்ராக்டர் ஒருவரை மிரட் டியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் பீதியடைந்த இந்தியத் தொழிலாளர்கள் உடனடியாக ராணுவ முகாமிற்கு சென்று உதவிவியும் கோரி உள்ளனர்.

இந்திராகாந்தி இருந்திருந்தால் இந்தப் பிரச்னையை ராஜ தந்திரத்தோடும், தொலைநோக்குப் பார்வை யோடும்மாக அணுகி இருப்பார். ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக இந்தியாவின் பாதுகாப்பிற்காகவும், தமிழர் களின் நலன் கருதியும் திட்டங்களை வகுத்திருப்பார். இந்தியா தொலைநோக்குப் பார்வை மற்றும் ராஜ தந்திரத்தில் இருந்து விலகியதால்தான் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையை சந்திக்க வேண்டிய அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இனிமேலாவது இந்திய அரசு, இலங்கை விவகாரத்தில் தனது வெளியுறவுக் கொள்கையில் விழித்துக் கொள்ளாவிட்டால் இந்திய பாதுகாப்பிற்கும், தமிழர்களின் நலன்களுக்கும் தமிழ் நாட்டிற்கு மட்டுமல்ல, அது இந்தியாவிற்கே பேராபத்தாக முடியும் என்கிறார்கள்.

- சூரியக்கதிர்

Short URL: http://thaynilam.com/tamil/?p=1943

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது துயிலெழுமா

இந்திய ராஜதந்திரம்.............???

அதிர்ச்சிக்கு பிறந்தவன்கள்... :wub:

இந்தியாவை சுற்றி சீனா பல காலமாக ஒரு சுருக்கை போட்டுவருவது ஒரு பரகசியம். முள்ளிவாய்க்கால் வரை "பிறகு பார்ப்போம்" என்ற கொள்கையில் இந்தியா இருந்தது. இதை வலுவாக உணர்ந்த சீனா, இந்தியாவுக்கு எதிராக எப்பொழுதுமே கொள்கை கொண்ட சிங்களம் தொடர்ந்தும் தமது இலக்கை நோக்கி நகருகின்றன. நிலமையை இந்தியா உணர்ந்தாலும் அதன் முக்கிய பார்வை பொருளாதார வளர்ச்சியில் உள்ளதாக தெரிகின்றது. மேலும் அரசியல் ரீதியில் இலங்கையில் அதன் கைகளையும் மீறி விடயங்கள் அரங்கேறுகின்றன போலுள்ளது.

இந்தியாவின் அரசியல் பொருளாதார நலன்களில் மேற்குலகமும் அக்கறை கொண்டுள்ளது. சீனாவின் அதி கூடிய வளர்ச்சியை மேற்குலகம், ஜப்பான் விரும்ப மாட்டார்கள். அமெரிக்காவும், மேற்குலகமும், ஜப்பான் மற்றும் உருசியாவும் இணைந்தால் மட்டுமே சீனாவை எதிர்கொள்ளலாம்.

இப்படியான ஒரு நிலை உருவாகையில் தமிழர் தரப்பு ஒற்றுமையாக இருந்தால் எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

Saturday, January 15th, 2011 | Posted by admin

தமிழகத்தை நெருக்கும் சீன பேராபத்து : இலங்கையிலிருந்து அதிர்ச்சி ரிப்போர்ட்

யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் வடமேற்கு பகுதி யில் உள்ளது அனலைதீவு. அதன் வடகோடி முனையில் உள்ளதுதான் பருத்தித் தீவு. சில சதுர கிலோ மீட்டர் பரப்பளவே கொண்ட இந்தத் தீவுத் திடலுக்கு அருகில் உள்ள அனலை தீவிலிருந்தும், எழுவைதீவில் இருந்தும் படகுகள் மூலம் சென்று வர முடியும். எனினும் தீவுகளுக்கு இடையிலான கடல் வற்றும் சமயங்களில் அனலைதீவிலிருந்து பருத்தித்தீவுக்கு நடந்து சென்று வரக்கூடிய நில இணைப்புக் கிட்டுவதாகவும் கூறப்படுகின்றது.

இந்தப் பருத்தித்தீவில் முப்பது, நாற்பது தமிழ்க் குடும்பங்களே உள்ளதாகக் கூறப்படுகின்றது. இங்கு ஆடு வளர்ப்பு மட்டுமே முக்கிய தொழிலாக உள்ளது.

இந்த தீவுகள் ஒன்றில் பிறந்தவன் என்கின்றரீதியில்

எமது ஊரிலிருந்து புதுப்படம்பார்க்க படகில்காலையில் சென்று இரவில் வீடு திரும்புபவர்களைப்பார்த்திருக்கின்றேன் என்பதால்

எமக்கெல்லாம் தமிழகம் கூப்பிடுதூரம் போன்றது. எனவே இந்தியா இன்னும்தூங்கினால் சீனா இலங்கையை மட்டுமல்ல இந்தியாவையும் விழுங்கும் காலம்வெகுதூரத்தில்இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தை நெருக்கும் சீன பேராபத்து : இலங்கையிலிருந்து அதிர்ச்சி ரிப்போர்ட்- சூரியக்கதிர்

Parotta3.jpg

இன்றைய புரோட்டாவை ....இங்கு நேற்றைய பேப்பர் தாங்கி புடிக்கும்... அந்தே காதா? :(

இந்தியாவின் அடுத்த நரித்தனம் ஆரம்பம்.

புலம் பெயர் தமிழர்கள் புத்திக் கூர்மையுடன் நடப்பது நல்லது. இந்தியா தன் கொள்கைகள் பிழைத்துப் போனதாக உணருமாயின் முதலில் அதற்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்த நாராயணன், மேனன் போன்றோரை பகிரங்க விசாரணைக்கு உட்படுத்துதல் நல்லது. அதை விடுத்து இன்னொரு நாடகத்துக்கு ஈழ்த்தமிழர் வாழ்வை பணயம் வைப்பது சரியல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் புலம்பெயர் தமிழ்மக்கள் மிகமிக முக்கியமானவர்கள்.

எனினும், இலங்கை அரசுக்கு எதிராக புலம் பெயர் ஈழத் தமிழர்கள் சார்பிலான போராட்டங்களையும் பிரச்சாரங்களையும் முன்னெடுக்கும் தரப்புகள், கட்டமைப்புகள், சங்கங்கள் போன்றவற்றின் முக்கிய பிரமுகர்களை இலக்காக வைத்துத் தனது வலையில் வீழ்த்தும் நோக்குடன் புதுடில்லியின் உறவுக் கரங்கள் நீட்ட ஆரம்பித்திருக்கின்றன.

தமிழ் ஒசை,தென்றல் போன்ற சன்சிகைகள், மற்றும் தமுழருவி மணியன் போன்றவர்கள்

இந்தியா தனது அம்மணத்தை மறைக்க முடியாது. ஈழத் தமிழர் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் கோவணம் கட்டிவிடுவதற்கு யாராவது காத்திருப்பார்கள். மேலே தரப்பட்ட விடயங்கள் உண்மையானால் சிங்களவரை விடவும் ஈழத் தமிழராகிய நாம்தான் முதலில் சந்தோஷப்பட வேண்டும்.

இந்தியாவின் தென் கோடியில் சீனத்தின் காலூன்றலால் எவ்வாறு இந்திய இஸ்திரத் தன்மைக்கு ஆபத்து நேரிடும் என்பதைப் பத்தியாளர் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Saturday, January 15th, 2011 | Posted by admin

தமிழகத்தை நெருக்கும் சீன பேராபத்து : இலங்கையிலிருந்து அதிர்ச்சி ரிப்போர்ட்

இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு பிரதான தரப்பு சிங்கள அரசு என்றால் எதிர்த்தரப்பில் இன்று எஞ்சி, மிஞ்சி நலிவுற்றுக் கிடப்பது ஈழத் தமிழர் சமூகம். அச் சமூகத்தின் ஆயுதப் போராட்ட சக்தியான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவின் பூரண ஆசியுடனும் முழு ஒத்துழைப்புடனும் அடியோடு அழித்தொழிக்கப்பட்டு விட்ட நிலையில், இன்று தமிழர் தரப்பில் ஓரளவேனும் வலுவாகவும் உறுதியாகவும் தப்பி நிற்பது புலம்பெயர் தமிழ் சமூகம்தான்.

மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் லட்சக் கணக்கில் சிதறி வாழும் ஈழத் தமிழர்கள், விடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியில் தோற்கடிக்கப் பட்ட போதிலும் கூட, சுதந்திரத்திற்காக உணர்ச்சிபூர்வ குரல் எழுப்பி வருகின்றனர் என்பது உண்மை.

இச் சமூகத்தின் வலிமையைப் புரிந்து கொண்டுள்ள புதுடில்லி நிர்வாகம், இப்போது சீனப் பூச்சாண்டியைக் காட்டி எகிறும் ராஜபக்ஷே ஆட்சிப் பீடத்தைத் தனது வழிக்குக் கொண்டு வர இவர்களை நோக்கித் தனது கடைக்கண் பார்வையைத் திருப்பி நேசக்கரம் நீட்ட எத்தனிக்கின்றது எனத் தகவல்கள் கசியத் தொடங்கியிருக்கின்றன.

ஆனால் 2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் வன்னியில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொலைவெறி யுத்தம் மூர்க்கத்தனமாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட போது, புலம் பெயர் சமூகம் உதவி கோரி உச்சஸ்தாயில் எழுப்பிய குரலை புதுடில்லி உதாசீனம் செய்து குரூரத்தனமாக நடந்து கொண்டமை ஈழத் தமிழர்களின், – குறிப்பாகப் புலம் பெயர் தமிழர்களின் – நெஞ்சில் வெஞ்சினம் ஆழப் புதைந்து கிடக்கிறது. பாரதத்தின் தற்போதைய புதிய ‘பாசப் பார்வைக்கு’ ஈழத் தமிழரின் புலம் பெயர் சமூகம் இலகுவாக ஆட்பட்டுவிடுமா என்பது சந்தேகமே.

இந்திய ஓநாய்களிடம் புலம்பெயர் தமிழர் இனியும் ஏமாறமாட்டார்கள்.

இந்திய அரச பயங்கரவாதிகளின் "நேசக்கரங்களை" பிடிக்குமளவுக்கு ஈழத்தமிழர் ஏமாறமாட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.