Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எகிப்தில் மக்கள் போராட்டம்

Featured Replies

  • தொடங்கியவர்

  • அதிபர் ஒபாமா இன்றைய நாளின் பெரும் பகுதியை தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் (national security advisers) மந்திர ஆலோசனை நடாத்தினார்
  • எகிப்திய அதிபர் முபாராக் அவர்களின் பேச்சின் பின், ஒபாமா அரை மணித்தியாலம் அவருடன் பேசினார்
  • ஒபாமா அமெரிக்க மற்றும் மத்திய கிழக்கு மக்களுக்கு உரையாற்றினார்
  • அமெரிக்கா தனது செல்வாக்கை மத்திய கிழக்கில் தக்க வைக்க முனைகின்றது
  • அமெரிக்கா எகிப்தில் தனக்கு ஆதரவான ஒரு ஆட்சியை எதிர்பார்க்கின்றது

Edited by akootha

  • Replies 146
  • Views 9.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

  • அமெரிக்கா எகிப்தின் இராணுவ அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி வருகின்றது
  • அமெரிக்கா எகிப்துக்கான தனது முன்னாள் தூதுவரை சிறப்பு பிரதிநிதியாக அனுப்பி வைத்துள்ளது
  • இராணுவம் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களை கலைந்து செல்ல கோரியுள்ளது
  • எவ்வாறு ஈரானில் அமெரிக்க தனது கைப்பொம்மை சர்வாதிகாரியை இழந்த போது, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஆட்சியை கைப்பற்றிய தவறை தவிர்க்க முனைகின்றது
  • எகிப்திய அதிபர் முபாரக் தன்னை உடனடியா கலைத்தால் நாட்டில் பெரும் குழப்பம் ஏற்படும் என சொல்லியுள்ளார்
  • முபாரக்கின் ஆதரவாளர்களுக்கும் அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களுக்கும் இடையில் கலகலப்பு

  • தொடங்கியவர்

அமரிக்கா யேமனை அல்-கைடாவிடம் இழக்காமல் இருக்க நகர்வுகளை மேற்கொண்டுள்ளது

  • யேமன் அதிபர் மீண்டும் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என அறிவிப்பு
  • அமெரிக்காவின் கைப்பொம்மையாக இவர் 32 வருடங்கள் ஆட்சி செய்து வருகின்றார்
  • முன்பும் ஒருமுறை போட்டியிட மாட்டேன் என சொல்லி ஏமாற்றினார்
  • இவரின் மகன் யேமனின் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட "ரிப்பப்ளிக்கன் கார்ட்" இன் தலைவர், அவரும் போட்டியிட மாட்டார்
  • வியாழக்கிழமை மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்

Yemen’s Leader Pledges Not to Seek Re-election

http://www.nytimes.com/2011/02/03/world/middleeast/03yemen.html?_r=1&hp

Edited by akootha

  • தொடங்கியவர்

  • அமைதியாக இருந்த அதிபர் முபாரக் இன்று தனது ஆதரவாளர்கள் ஊடாக ஆர்ப்பாட்ட மக்களை அடக்க முயற்சி
  • ஒரு நாள் "சண்டையில்", குறைந்தது 600 பேர் காயம், ஒருவர் பலி
  • இதுவரை மக்களை அடக்க முடியவில்லை
  • கத்திகள், பொல்லுகள், பெற்றோல் போத்தல் நெருப்புகள் பாவிக்கப்படுகின்றன
  • வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர்
  • அமெரிக்கா இந்த வன்முறைக்கு "கண்டனம்"
  • வரும் நாட்களில் இந்த போராட்டம் எங்கே செல்லும் என்பது கூறமுடியாதுள்ளது

Edited by akootha

இந்தப் பதிவை ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் அன்றைய எகிப்தில் மக்கள் போராட்டம் செய்தியினை சுருக்கமாகப் பதியும் akootha விற்கும் ஏனையோருக்கும் நன்றிகள் :)

  • தொடங்கியவர்

Prime Minister Bibi Netanyahu of Israel is in danger of becoming the Mubarak of the peace process.

Israel has never had more leverage vis-à-vis the Palestinians and never had more responsible Palestinian partners. But Netanyahu has found every excuse for not putting a peace plan on the table. The Americans know it. And thanks to the nasty job that Qatar’s Al Jazeera TV just did in releasing out of context all the Palestinian concessions — to embarrass the Palestinian leadership — it’s now obvious to all how far the Palestinians have come.

http://www.nytimes.com/2011/02/02/opinion/02friedman.html

பாலஸ்தீனம் - இஸ்ரேல் உடன்படிக்கை உடன் தேவை

  • இனிமேலும் பாலஸ்தீனியர்களை ஏமாற்றுவது ஆபத்தானதாக அமையலாம்
  • அல்சசீர வெளியிட்ட தகல்களின் படி, பாலஸ்தீன தலைவர்கள் பல படிகள் கீழே இறங்கி வந்துள்ளனர்
  • இஸ்ரேல் தனது நீண்ட கால நண்பனை, எகிப்தின் தலைவரை, இழப்பது நிச்சயம் ஆகிவிட்டது
  • இந்தவேளையில் இஸ்ரேல், பாலஸ்தீனத்துடன் ஒரு நியாயமான ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவது சாதுரியமானது
  • இல்லாவிடில், இஸ்ரேல் அதிபர் (நெத்தனியாகூ) நாளைய முபாரக்காக வரும் அபாயம் உள்ளது

  • தொடங்கியவர்

  • காய்ரோவின் (எகிப்தின் தலைநகர்) "லிபரேசன்" சதுக்கத்தில் தொடர்ந்து பதினைந்து மணித்தியாலத்திற்கு மேலாக துப்பாக்கிச்சத்தம் கேட்கின்றது (வியாழக்கிழமை காலை5:13)
  • அடுத்த 24-48 மணி நேரங்கள் எகிப்தின் மக்கள் போராட்டத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் - அமெரிக்க இராஜங்க திணைக்களம்
  • இராணுவம் தொடர்ந்தும் நடுநிலைமை காக்குமா? இல்லை மக்களுக்கு ஆதரவாக செயல்படுமா? என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது
  • இதுவரை நான்கு பேர் இறந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
  • அமெரிக்கா "நேற்றே" முபாரக் பதவியை விட்டு போயிருக்க வேண்டும் என சொல்லுகின்றது
  • அமேரிக்கா வெளிவிவகார அமைச்சு சகல தனது பிரசைகளையும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்தியுள்ளது
  • முபாரக்கின் அமைச்சர் ஒபாமா நிர்வாகத்தின் மீது கோபமாக அறிக்கை

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

எகிப்திய போராட்டத்தில் புதிய திருப்பம்: முபாரக் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர் _

வீரகேசரி இணையம் 2/3/2011 9:32:57 AM

எகிப்தில் தொடர்ந்து வரும் அரச எதிர்ப்பு போராட்டத்தில் புதிய திருப்பமாக ஜனாதிபதி முபாரக் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதனால் அரச எதிர்ப்பு மற்றும் ஆதரவான அணிகளுக்கிடையே பயங்கர மோதல் மூண்டுள்ளது.

மேலும் இப் புதிய மோதல் சம்பவத்தில் 13 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் போராட்டங்களில் உயிர் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு அதிபர் ஒஸ்னி முபாரக்கிற்கு எதிரான போராட்டத்துக்கு சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் முன்னாள் தலைவரும், நோபல் பரிசு பெற்றவருமான மொஹமட் எல்பராடி தலைமை தாங்கியுள்ளார்.

போராட்டங்கள் உக்கிரமடைந்து வரும் நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ஹொஸ்னி முபாரக் நேற்று முன் தினம் அறிவித்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதி முபாரக்கின் ஆதரவாளர்கள் நேற்று திடீர் எனப் போராட்டத்தில் குதித்தனர்.

எதிர்ப்பு அணியைச் சேர்ந்தவர்களுக்குப் போட்டியாக அவர்களும் முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். இதில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். ஏற்கனவே, எகிப்து கலவரத்துக்கு 150 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல் நிலையால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

  • தொடங்கியவர்

  • தொடர்ந்தும் "லிபரேசன்" சதுக்கத்திலும் பல வீதிகளிலும் முபாரக் ஆதரவாளர்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் சண்டை தொடருகின்றது
  • இதுவரை ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்
  • முபாரக் ஆதரவாளர்கள் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்
  • மனித உரிமையாளர்கள், சாட்சிகள் அகற்றப்பட்டு வருகின்றனர்
  • எகிப்திய பிரதம மந்திரி ஆர்ப்பாட்ட வன்முறைகளுக்கு மன்னிப்பு கேட்டார்
  • எகிப்திய சனாதிபதியின் மகன் வரும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என அறிவிப்பு
  • யேமனில் ஆர்ப்பாட்டம் அமைதியாக முடிவு பெற்றது

  • தொடங்கியவர்

  • எகிப்திய இராணுவம் அதன் அதிபர் முபாரக் பக்கம் சாய்வதாக இராணுவத்தால் கைதாகி விடுதலையான வெளிநாட்டு ஊடகவியலளர்கள் கூறியுள்ளனர்.
  • விரைவில் மக்கள் "எழுச்சி" ஒடுக்கப்படும் என நம்பப்படுகின்றது.
  • இதற்கு எகிப்திய மக்கள் ஒரு பெரிய விலையை கொடுக்ககூடும்
  • இதற்கு பின் சர்வதேசம்-மேற்குலகம் என்ன செய்யும் என்பதும் கேள்வியாக உள்ளது

When the Canadian reporters asked why they were being detained, they were told it was because the military was "planning a large operation," Ms. Verma said. Soldiers also said they were keeping their passports because they were looking into their backgrounds.

http://www.theglobeandmail.com/news/world/crisis-in-egypt/globe-reporters-released-by-egyptian-military/article1892801/

ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஒளிவு மறைவற்ற அறிக்கையில்:

மின்வலையில் "எகிப்து" சொல்லுக்கு தேட சீனாவில் தடை: http://www.dinakaran.com/worlddetail.aspx?id=28280&id1=7

எகிப்து எழுப்பும் எச்சரிக்கை! : http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=369879&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

.

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் உடனடி செய்திகளுக்கு நன்றி akootha. உங்கள் செய்திகளை வாசிப்பதில் நானுமொருவன்.

  • தொடங்கியவர்

  • அமெரிக்கவின் எ.பி.சி. தொலைக்காட்சிக்கு முபாரக் பேட்டியளித்தார்: "நான் பதவியை விட்டு விலக தயார். ஆனால், எகிப்துக்கு நான் தேவைப்படுகின்றேன் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு"
  • அரச தடையை மீறி மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு முனைகிறார்கள்
  • வெள்ளைமாளிகை "முபாரக் பதவியில் இருந்து விலக வேண்டும்" என கூடிய "அழுத்தம் கொடுப்பதாக" செய்திகள் வெளியாகியுள்ளன
  • ஒரு அரச தொலைக்காட்சி பெண் ஊடகவியலாளர் "அரச பிரச்சாரம்" என்று கூறி தனது பதிவியை துறந்தார்
  • எதிர்க்கட்சிகள் முபாரக்கை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்படல் வேண்டும் என கோரியுள்ளன

தொடரும் "உலகத்தின் கண்களை கட்டும் முயற்சியில்" இன்று அம்னெஸ்டி இன்டர்நசனல் உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். கையெழுத்து இட விரும்பினால்: http://takeaction.amnestyusa.org/c.jhKPIXPCIoE/b.6546669/k.F3A4/Egyptian_Government_Must_Release_International_Human_Rights_Observers_Stop_Crackdown_on_Civil_Society/siteapps/advocacy/ActionItem.aspx?ICID=E1102A01&tr=y&auid=7722157

Edited by akootha

  • தொடங்கியவர்

வெள்ளிக்கிழமை தாரிக் (லிபரேசன்) சதுக்கம் இன்னுமொரு சீனாவின் தீனமேன் (படுகொலை) சதுக்கம் போல் ஆகுமா?

  • வெள்ளிக்கிழமை பல நாட்களுக்கு முன்னரே திட்டமிட்ட ஆர்ப்பாட்டம் நடக்குமா?
  • அவர்கள் திட்டமிட்டபடி அவர்கள் ஆறு மைல்கல் தூரத்தில் உள்ள முபாரக்கின் மாளிகை நோக்கி நடக்க அனுமதிக்கப்படுவார்களா?
  • இதை முபாரக் நடாத்தவிடுவாரா? இராணுவம் மக்களை கொல்லுமா??


  • மக்கள் ஆர்ப்பாட்டம் முறியடுக்கப்பட்டால், எவ்வளவு காலம் முபாரக் பதிவியில் இருப்பார்? இதை எவ்வாறு மேற்குலகம் அணுகும்?
  • பிரதி சனாதிபதியை, முபாரக்கின் வாரிசை, எகிப்தின் தலைவராக உலகம் ஏற்குமா?
  • அமெரிக்கா தனது 1.5 பில்லியன் உதவியை தொடருமா?
  • முக்கியமான உல்லாசப்பிரயாணம், சர்வதேச முதலீடு தொடருமா?


  • இன்று பதினோராம் நாளாக நடக்கும் மக்கள் போராட்டம்
  • மூன்றாம் நாளாக முபாரக் ஆதரவாளர்கள் (அரசுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள்) குழப்பத்தில் ஈடுபட்டுள்ளார்கள்
  • இதுவரை 12 பேர் கொல்லப்பட்டும் 800 க்கும் மேல் காயமடைந்தும் உள்ளனர் இந்த இருநாள் சதுக்க கைகலப்பில் / துப்பாக்கி பிரயோகித்தல்


  • பல அரபுநாட்டு மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள்-மனித ஆர்வலர்கள் கைதுசெய்யப்பட்டு, மிரட்டப்பட்டு, நாடுகடத்தப்பட்டு உள்ளனர்
  • பல "நேரடி ஒலிபரப்பு - ஒளிபரப்பு" சாதனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன - பறிக்கப்பட்டுள்ளன
  • பலரும் ஒளித்திருந்து தமது பணிகளை தொடருகின்றனர்

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

எகிப்தின் மக்கள் போராட்டத்தை அடக்குவதற்கு,

ஸ்ரீலங்கா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஆலோசனை பெற்று....

மல்ரிபரல், நச்சுவாயு, விமானக் குண்டுவீச்சு போன்றவற்றை நடத்தலாம்.

கொஞ்ச ஒட்டுக் குழுக்களையும் எகிப்தில் தேடிப்பிடிக்க வேண்டும்.

தமிழனுக்கு கிடைத்த ஒட்டுக் குழுக்கள் போல... எகிப்தில் ஒட்டுக்குழு கிடைக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

எகிப்தின் மக்கள் போராட்டத்தை அடக்குவதற்கு,

ஸ்ரீலங்கா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஆலோசனை பெற்று....

மல்ரிபரல், நச்சுவாயு, விமானக் குண்டுவீச்சு போன்றவற்றை நடத்தலாம்.

கொஞ்ச ஒட்டுக் குழுக்களையும் எகிப்தில் தேடிப்பிடிக்க வேண்டும்.

தமிழனுக்கு கிடைத்த ஒட்டுக் குழுக்கள் போல... எகிப்தில் ஒட்டுக்குழு கிடைக்குமா?

முபாரக் கொஞ்சம் கூலிய கூட்டி கொடுப்பேன் என உத்தரவாதம் தந்தால் இஞ்ச யாழ்களத்தில வந்து ஒட்டியிருக்கிற சிலதுகள கொண்டுபோய் ஒட்டிவிடலாம். அதுகளுக்கும் பிழைப்பு ஜாஸ்தியாகும்.

  • தொடங்கியவர்

- பல்லாயிரக்கணக்கான மக்கள் மதிய நேர தொழுகையை முடித்து போராட்டத்தில் இணைந்துள்ளனர்

- "முபாரக் - இன்றே வெளியேறு!" என பலத்த கோசம் போட்டவண்ணம் உள்ளனர்

- முன்னர் திட்டமிட்டபடி முபாரக் வசிக்கும் மாளிகை நோக்கி போவார்களா என்பது தெளிவாக இல்லை

- இன்று முபாரக் பதவியை துறக்கவிடின் நாட்டில் "உள்நாட்டு சண்டை" உருவாகலாம் என அச்சம்

எகிப்தின் மக்கள் போராட்டத்தை அடக்குவதற்கு,

ஸ்ரீலங்கா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஆலோசனை பெற்று....

மல்ரிபரல், நச்சுவாயு, விமானக் குண்டுவீச்சு போன்றவற்றை நடத்தலாம்.

கொஞ்ச ஒட்டுக் குழுக்களையும் எகிப்தில் தேடிப்பிடிக்க வேண்டும்.

தமிழனுக்கு கிடைத்த ஒட்டுக் குழுக்கள் போல... எகிப்தில் ஒட்டுக்குழு கிடைக்குமா?

ஒட்டுக்குழு கிடைக்குமோ தெரியவில்லை... ஆனால் ஒட்டக குழு கிடைச்சு இருக்கு....

சரியான பாதையில் போன போராட்டம் ஆனால் மேற்குலகம் மீண்டும் தங்களுக்கு ஏற்ற ஒரு அரசை தான் இருந்த போகிறது.

அதை விட எகிப்த் இராணுவத்தை காட்டுப்படுத்தும் சக்தி( அமெரிக்கா சொல்லும் பக்கம்) அமெரிக்காவிடம் என்று சொல்கிறார்கள்.

அகூதா சொன்னது போல எகிப்த் இராணுவம் யார் அகையிலோ அவர் தான் வெற்றி பெறுவார் அதை விட எகிப்த் இராணுவம் அமெரிக்காவின் கையை விட்டு போகுமாக இருந்தால்? இஸ்ரேலுக்கு தலைவலியாக மாறும் ஆனால் அந்த அளவுக்கு எகிப்த்தின் மேல்நிலை தளபதிகள் விட மாட்டார்கள். ஆனால் இளம்வயது அதிகாரிகள் செல் கேக்க மறுப்பதாக கூறுகிறார்கள்.

சரியான பாதையில் போன போராட்டம் ஆனால் மேற்குலகம் மீண்டும் தங்களுக்கு ஏற்ற ஒரு அரசை தான் இருந்த போகிறது.

அதை விட எகிப்த் இராணுவத்தை காட்டுப்படுத்தும் சக்தி( அமெரிக்கா சொல்லும் பக்கம்) அமெரிக்காவிடம் என்று சொல்கிறார்கள்.

அகூதா சொன்னது போல எகிப்த் இராணுவம் யார் அகையிலோ அவர் தான் வெற்றி பெறுவார் அதை விட எகிப்த் இராணுவம் அமெரிக்காவின் கையை விட்டு போகுமாக இருந்தால்? இஸ்ரேலுக்கு தலைவலியாக மாறும் ஆனால் அந்த அளவுக்கு எகிப்த்தின் மேல்நிலை தளபதிகள் விட மாட்டார்கள். ஆனால் இளம்வயது அதிகாரிகள் செல் கேக்க மறுப்பதாக கூறுகிறார்கள்.

:lol: :lol: :lol:

:lol: :lol: :lol:

ஆனால் எகிப்த்தின் போராட்டம் எமக்கு ஒன்றையும் தரமாட்டாது ஏன் எனில் சிங்களவன் யார் ஆட்சிக்கு வந்தாலும் கையை காலைபிடித்து உதவி வாங்கிவிடுவான்.

ஆனால் நாங்கள் வீரபாண்டியகட்டபொம்மன் வரல்லாற்றை சொல்லி சொல்லி உசுப்பேத்து உசுப்பேத்தி வாங்கி கொடுத்துவிடுவோம் :D

ஆனால் எகிப்த்தின் போராட்டம் எமக்கு ஒன்றையும் தரமாட்டாது ஏன் எனில் சிங்களவன் யார் ஆட்சிக்கு வந்தாலும் கையை காலைபிடித்து உதவி வாங்கிவிடுவான்.

ஆனால் நாங்கள் வீரபாண்டியகட்டபொம்மன் வரல்லாற்றை சொல்லி சொல்லி உசுப்பேத்து உசுப்பேத்தி வாங்கி கொடுத்துவிடுவோம் :D

எகிப்தில் நடக்கிறது அரபுக்கள் அரபுக்களோடான பிரச்சினை... ! இதுக்கும் இலங்கைக்கும் சம்பந்தமே இல்லை... ஆனால் தாக்கம் என்பது தவிர்க்க முடியாதது... உலக ஒழுங்கிலும் கட்டாயம் மாற்றம் வரும் என்பதால் இலங்கையிலும் அது தாக்கம் செலுத்தும்...

இப்படி ஒரு சாத்தியம் போர் நிறுத்த்துக்கு முன்னம் கிழக்கிலும் வடக்கிலும் பல்கலைக்களகங்களால் ஒழுங்கு செய்யப்பட்ட மக்கள் எழுச்சியான பொங்கு தமிழ் நடந்தது... அதன் அடிப்படையிலேயே போர் நிறுத்தம் வந்தது...

பின்னர் அந்த எழுச்சியின் வேர்கள் கருணாவாலும் டக்கிளசாலும் களை எடுக்கப்பட்டன...

எகிப்தில் நடக்கிறது அரபுக்கள் அரபுக்களோடான பிரச்சினை... ! இதுக்கும் இலங்கைக்கும் சம்பந்தமே இல்லை... ஆனால் தாக்கம் என்பது தவிர்க்க முடியாதது... உலக ஒழுங்கிலும் கட்டாயம் மாற்றம் வரும் என்பதால் இலங்கையிலும் அது தாக்கம் செலுத்தும்...

இப்படி ஒரு சாத்தியம் போர் நிறுத்த்துக்கு முன்னம் கிழக்கிலும் வடக்கிலும் பல்கலைக்களகங்களால் ஒழுங்கு செய்யப்பட்ட மக்கள் எழுச்சியான பொங்கு தமிழ் நடந்தது... அதன் அடிப்படையிலேயே போர் நிறுத்தம் வந்தது...

பின்னர் அந்த எழுச்சியின் வேர்கள் கருணாவாலும் டக்கிளசாலும் களை எடுக்கப்பட்டன...

எழுச்சிகளை அடக்க கருணா எங்கு கற்று இருப்பான்? :D

எழுச்சிகளை அடக்க கருணா எங்கு கற்று இருப்பான்? :D

அதை என்னை விட சிறப்பாக கருணாதான் சொல்லக்கூடிய ஆள்.... கேட்டு எனக்கு சொல்லுங்கோ... <_<

அதை என்னை விட சிறப்பாக கருணாதான் சொல்லக்கூடிய ஆள்.... கேட்டு எனக்கு சொல்லுங்கோ... <_<

இப்படி தான் கருணாவும் எதை செய்வது என்றாலும் கேட்டு செய்து செய்து பழகிவிட்டது என்பான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.