Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கு போனீர்கள் இங்கு நாம் சாகையிலே.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கு போனீர்கள் இங்கு நாம் சாகையிலே....

மூச்செடுத்து விட்டதுபோல்-வருசங்கள்

முடிந்தோடி விட்டாலும்

நேற்றுப்போல் இருக்கிறது-நெஞ்சில்

நெருப்பெரிக்கும் நினைவுகள்

ஊற்றுப்போல் மனதில்தோன்றி-ஓயாது

உள்ளத்தைக் குடைந்தெடுக்கும்

தோற்றுப்போன நாட்களின் -மாறாத்

தொடரும் உயிர்வலிகள்

மண்ணிண் காவலர்கள்-விடுதலைக்காய்

மரணித்த தேசத்தில்

இன்னும் புல்பூண்டு-முளைத்து

இயற்கை சிரிக்கவில்லை

கண்ணில் நெருப்பெடுத்து-மதுரையைக்

கண்ணகி எரித்தகதை

இன்னும் சரித்திரத்தில்-படிக்க

இலக்கியப் புத்தகத்தில்

எண்ணுக் கணக்கற்று-கண்ணகிகள்

எங்கள் தேசத்தில்

மண்ணுக்கு இரையானார்-மதுரைகள்

இன்னும் எரியவில்லை

வருசம் விழாஎடுத்து-நேர்த்திக்கு

வளர்த்த கடாவெட்டி

புருசனுக்காய் நோன்பிருந்த-பெண்கள்

பூவிழந்து போயினரே

கொழுத்த அரக்கர்கள்-எங்களை

கொன்று புதைக்கையிலே

பழுத்த தேவர்கள்-ஞானப்

பால் குடிக்கப்போயினரோ

கற்பூரச் சட்டிகளை-கைகளில்

கடவுளர்க்காய் ஏந்தியோர்கள்

கற்பழித்துக் கொல்லப்பட- சாமிகள்

கண்மூடிச் சயனத்திலோ

சூரனை வதம்செய்ய-தேவர்களைச்

சூழ்ந்த துயர்துடைக்க

கையில் வேலெடுத்த-காக்கும்

கதிகாமக் கந்தனே

வற்றாப்பளை அம்மனே-நல்லூரில்

வரம்தரும் முருகனே

நற்தாயே நம்பினோரின் - தீவமர்ந்த

நயினை நாகபூஷனியே

இன்னும் பெயர்தெரியாத-எண்ணிக்கையில்

பல்கிப் பெருகிநிற்கும்

எங்கள் தமிழர்கள்-நம்பிய

ஏராளம் சாமிகளே

செத்துக் கிடக்கையிலே-எம்முடல்

தீயில் எரிகையிலே

வன்னியின் வானம்விட்டு-நீங்கள்

வனவாசம் சென்றீரோ

செல்விழுந்து பிளக்கையிலே- சிதறி

செங்குருதி தெறிக்கையிலே

கத்திய கூக்குரல்கள்-உங்கள்

காதில் விழவில்லையோ

தாயை இழந்ததினால்-காட்டில்

தவித்த குட்டிகட்காய்

பன்றி வடிவெடுத்து-அன்றொருநாள்

பாலூட்ட வந்தசிவன்

செத்த தாய்முலையில்-எம்குழந்தை

ரத்தம் குடிக்கையிலே

முக்திப் பரவசத்தில்- சக்தியுடன்

மூழ்கிக் கிடந்தீரோ

இங்குநாம் இறக்கையிலே-உயிர்க்காய்

இரந்து கிடக்கையிலே

எங்குநீர் போனீரோ-இன்று

பொங்கலுக்கு வந்தீரோ

கொலுவுற்று எதற்காக-இன்னும்

கோவிலில் வீற்றிருந்து...?

வலுவற்ற கற்களுக்கு-யாரும்

வாழ்வு கொடுக்காதீர்

இன்னும் எதற்காக-கோவிலில்

பென்னம் பெருஞ்சிலைகள்

எல்லாம் மண்ணாக-எம்

சாபம் பலிக்கட்டும்

சிவனுமில்லை சக்தியில்லை-எங்களுக்குச்

சீரழிவு இனியுமில்லை

கண்ணில் தெளிவுகொண்டோம்-எங்களுக்குக்

கடவுள் எவனுமில்லை

***

Edited by ந.சுபேஸ்

அவர்களும் மேல் லோகத்தில் கொடியை பிடித்துவிட்டு தண்ணியடிச்சுவிட்டு படுத்திட்டினம் போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கு போனீர்கள் இங்கு நாம் சாகையிலே....

மூச்செடுத்து விட்டதுபோல்-வருசங்கள்

முடிந்தோடி விட்டாலும்

நேற்றுப்போல் இருக்கிறது-நெஞ்சில்

நெருப்பெரிக்கும் நினைவுகள்

ஊற்றுப்போல் மனதில்தோன்றி-ஓயாது

உள்ளத்தைக் குடைந்தெடுக்கும்

தோற்றுப்போன நாட்களின் -மாறாத்

தொடரும் உயிர்வலிகள்

மண்ணிண் காவலர்கள்-விடுதலைக்காய்

மரணித்த தேசத்தில்

இன்னும் புல்பூண்டு-முளைத்து

இயற்கை சிரிக்கவில்லை

கண்ணில் நெருப்பெடுத்து-மதுரையைக்

கண்ணகி எரித்தகதை

இன்னும் சரித்திரத்தில்-படிக்க

இலக்கியப் புத்தகத்தில்

எண்ணுக் கணக்கற்று-கண்ணகிகள்

எங்கள் தேசத்தில்

மண்ணுக்கு இரையானார்-மதுரைகள்

இன்னும் எரியவில்லை

வருசம் விழாஎடுத்து-நேர்த்திக்கு

வளர்த்த கடாவெட்டி

புருசனுக்காய் நோன்பிருந்த-பெண்கள்

பூவிழந்து போயினரே

கொழுத்த அரக்கர்கள்-எங்களை

கொன்று புதைக்கையிலே

பழுத்த தேவர்கள்-ஞானப்

பால் குடிக்கப்போயினரோ

கற்பூரச் சட்டிகளை-கைகளில்

கடவுளர்க்காய் ஏந்தியோர்கள்

கற்பழித்துக் கொல்லப்பட- சாமிகள்

கண்மூடிச் சயனத்திலோ

சூரனை வதம்செய்ய-தேவர்களைச்

சூழ்ந்த துயர்துடைக்க

கையில் வேலெடுத்த-காக்கும்

கதிகாமக் கந்தனே

வற்றாப்பளை அம்மனே-நல்லூரில்

வரம்தரும் முருகனே

நற்தாயே நம்பினோரின் - தீவமர்ந்த

நயினை நாகபூஷனியே

இன்னும் பெயர்தெரியாத-எண்ணிக்கையில்

பல்கிப் பெருகிநிற்கும்

எங்கள் தமிழர்கள்-நம்பிய

ஏராளம் சாமிகளே

செத்துக் கிடக்கையிலே-எம்முடல்

தீயில் எரிகையிலே

வன்னியின் வானம்விட்டு-நீங்கள்

வனவாசம் சென்றீரோ

செல்விழுந்து பிளக்கையிலே- சிதறி

செங்குருதி தெறிக்கையிலே

கத்திய கூக்குரல்கள்-உங்கள்

காதில் விழவில்லையோ

தாயை இழந்ததினால்-காட்டில்

தவித்த குட்டிகட்காய்

பன்றி வடிவெடுத்து-அன்றொருநாள்

பாலூட்ட வந்தசிவன்

செத்த தாய்முலையில்-எம்குழந்தை

ரத்தம் குடிக்கையிலே

முக்திப் பரவசத்தில்- சக்தியுடன்

மூழ்கிக் கிடந்தீரோ

இங்குநாம் இறக்கையிலே-உயிர்க்காய்

இரந்து கிடக்கையிலே

எங்குநீர் போனீரோ-இன்று

பொங்கலுக்கு வந்தீரோ

கொலுவுற்று எதற்காக-இன்னும்

கோவிலில் வீற்றிருந்து...?

வலுவற்ற கற்களுக்கு-யாரும்

வாழ்வு கொடுக்காதீர்

இன்னும் எதற்காக-கோவிலில்

பென்னம் பெருஞ்சிலைகள்

எல்லாம் மண்ணாக-எம்

சாபம் பலிக்கட்டும்

சிவனுமில்லை சக்தியில்லை-எங்களுக்குச்

சீரழிவு இனியுமில்லை

கண்ணில் தெளிவுகொண்டோம்-எங்களுக்குக்

கடவுள் எவனுமில்லை

***

சித்தம் அறியாரோ நம் சிவனார்

அத்தனையும் வேண்டும் நம்கேலொரம் பாவாய்.

நேர்த்திக்கு இன்னமும் கூத்தாடும்

கூட்டம் கொண்டதெங்கள் தமிழ் சனம் காண்!

இந்த

விட்டங்கள் காணுமா?

விதி மறைந்து போகுமா?

சட்டங்கள் படைத்தது எம்

"சா"மகளல்லவா?இவை

விதி வழி போனெதென்று போர்த்தி விட்டு

அதோ ஐயர்

வருகின்றார் நான் ஆலயம்

செல்ல வேண்டும்.கனடாவில்

இருந்து கனகய்யாவும் வந்துள்ளான்.

கற்களை கடவுளாக்கி விட்டு -எம்

கார்த்திகர்களை கற்களாக்கிய -இந்த

கலிகாலச் செல்வர்கள்.

போலிகளா இல்லை.தமிழர் வேலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் உங்கள் கவிதை ஆற்றாமை பொங்க வலிகளைப் பேசிநிற்கிறது. உங்கள் எழுத்துக்கள் சிறந்த படைப்பாளியாக உங்களை இனங்காட்டுகிறது. கடவுளரிடம் சண்டை போடுதல் என்பது கவிஞர்களுக்கே உரித்தான சிறப்பம்சம்.

கருங்கற்களை வழிபாடு செய்வது சில வலிமைகளை பெறுவதற்கே.. பலர் ஒன்றுபட்டு கருங்கல்லை நோக்கும்போது அச்சக்தியானது அக்கருங்கல்லில்பட்டு மீண்டும் நோக்குமிடம் பன்மடங்காக அதிகரித்து வருகிறது என்று கூறுகிறார்கள். அமைதியாக மனதை ஒடுக்கி வழிபாடு செய்பவர்களுக்கு அதன்மூலம் ஒருவகையான மனோபலம் அதிகரிப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். கண்ணுக்குப் புலப்படாத வலிமையே கடவுள். இதிலிருந்து கடவுள் வேறெங்கும் இல்லை நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இயங்கு சக்தியே கடவுள். சுபேஸ் நாங்கள்தான் உருவங்களைச் செய்து கொழுபொம்மைகளாகவும் காட்சிப் பொருட்களாகவும் அந்த சக்தியை உருவகப்படுத்திவிட்டு அவர்கள் எழுந்துவரவில்லை காப்பாற்ற மறந்துவிட்டார்கள் என்று கூப்பாடு போடுகிறோம். கொஞ்சம் எங்களை மாற்ற வேண்டும்.

இன்றைய நாட்களில் உங்களைப் போன்ற கவிஞர்கள் பேசவேண்டும். அள்ளி இழுத்துவந்து அனைத்தையும் கொட்டி துரோகத் தனங்களுக்கெல்லாம் கொள்ளி வைக்கவேண்டும். உங்கள் கவிதைகளை தொடர்ந்தும் இந்தக் களத்தில் எதிர்பார்க்கிறேன்

  • தொடங்கியவர்

நன்றி..அர்ஜுன்,யாழிவன்

நன்றி அக்கா..உங்களின் அன்பைப்பெறுவேன் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை..இது இன்னும் எழுதவேண்டும் என்ற விதையை என்னுள் வீழ்த்திவிட்டிருக்கிறது..உங்கள் வரிகளைப்படித்து தமிழ் வளர்த்தவன் நான்..யாழிழ் உங்கள் கவிதைகளையும் புதுவையின் கவிதைகளையும் வாசித்துதான் நான் கவி எழுதக்கற்றுக்கொண்டேன்..நீங்கள் இருவரும் என் மானசீகக்குருக்கள்...

Edited by ந.சுபேஸ்

  • 1 year later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி .

மணற்கேணியாய் நினைக்க நினைக்க பொங்கி எழுந்து தாளாமல் சாயும் எமது துயரத்தில் நணைந்தே வழிந்தேன். உந்தன் இந்த கண்ணீர் நதி என் கண்ணில் ஊடி வழிந்தபோது நான் துயரங்கள் நெஞ்சுக்குழியில் மலையென கொட்டிகிடந்த மே2009-- மாதத்தின் இறுதி வாரத்தில் நான் எழுதிய ஆதங்க வரிகளை உங்களொடு பஹிர்ந்துகொள்கிறேன்

கடவுளை நான் கொலைசெய்தேன்
profile_mask2.png
Raj kumar <rajk2500@gmail.com>
5/26/09
cleardot.gif
 
cleardot.gif
cleardot.gif
to adview.gk, Bathuvai, rkthiruppavai
cleardot.gif
 
                  கடவுளை  நான் கொலை செய்தேன்

      ஆண்டவன் செத்துப் போய்விட்டான்.
      நான் தான் அவனைக்கொலை செய்தேன்.
     நேற்றுவரை யாரும் சொல்லியிருக்கத்தேவையில்லை.

     கடவுள் இல்லையென்று..

    இன்று முதல் உறுதியாகச் சொல்லலாம்.
    இப்போதுதான் அந்த அயோக்கியனை நான் கொன்றேன்.
    என் வார்த்தைகளில் வழியும் ரத்தம் அவனுடையதுதான்.
    உறுதி.. அவன் செத்தே போய்விட்டான்.

    பதறப் பதற நான் அவனைக்கொன்றேன்.
    பார்த்தவர்கள் யாரும் மனம் இரங்கவில்லை.மாறாக ரசித்தார்கள்.

    கதறக் கதற அவன் உயிரை எடுத்தேன்.
   கண்டவர்கள் அதை இசைபோலவே ரசித்தார்கள்.
   ..............................

......................................................

  வெண்புறாக்குஞ்சுகள்-தர்மங்கள்
  கசக்கியெறியப்பட்டன-எம் ஈழ மண்ணில்...
  காவலன் இவன் கண்டுகொள்ளாமல் இருந்தானே?!

  ரோஜா மலர்க்குழவிகள்-நியாயங்கள்  அங்கே
  கழுத்து நெறிக்கப்பட்டன..
  முகம் திரும்பி நின்றவன் தானோ இவன்?!

எம் ஈழக்கூரைக்குள் எமன்கள்-க்ஃபிர் விமனங்கள்;
பத்திரமாய் ஷெல்லடிக்க பார்த்துக்கொன்டான்.
யாம் பெற்ற பிள்ளைகள் ஓடி ஒளிந்த
பதுங்கு குழியைக்கூட காட்டிக்கொடுத்தான்.

அண்டமே அதிர்ச்சியுற எம் தாய்மார் அலறிக்குரலெடுக்க..
செவிட்டு பேயாக சிரித்தானோ?

திசைகள் வழிவிடச்சொன்னான் செறிவாய் விழ எறிகணைகள்.
வான் சற்றே விலகியிருக்கச்சொன்னான் வந்து விழ பாஸ்வரங்கள்

பிஞ்சுகளும் பெண்டுகளும் எமை பெற்ற தாவரமும்
வந்துவிழும் பசும் சிசுவும் வாய்த்திருந்த கருவறையும்
செந்தழலில் நெய்யாக சதைத்தீய்ந்து உயிர் உருக
உருகுமுயிர் வழிந்தோட...
கால் நனைக்க குருதி நதி மேல் நனைக்க உயிராவி
நின்ற சீர் நெடுமாலே நெடுமரமாய் வீற்றிருந்தான்.
அவன் தன்
விண்டதொரு கழலிணைகள் வெட்டிக் கடையெறிந்தேன்.

கொத்துக் கொத்தாய் கொத்துக்குண்டுகள்...
வெடித்து சிதறி--சிதறிவெடித்து...
கொலை கொலையாய்..... கொலைகள்.... கொலைகள்...
தலைகள்,கைகள், திருமுகஙகள், பால்கொடுத்த தாய்முலைகள்.
சதைகள் மேல்வழிய பதுங்கு குழிகள்.
குப்பைக்கூளமென குற்றுடல்கள்..
பீறிட்ட ரத்தம்.. பிளிறித்தெறித்த மரணங்கள்.
மரணத்தின் முதுகேறி மரணித்த மரணங்கள்

எமன் மலைத்த தருணங்கள் என பகல்கள்
அவனே மயங்கிய தருணங்கள் ஆன இரவுகள்.
பார்த்திருந்த பாதகத்தான் பரம்பொருள் என்னும் மதிகேடன்.

அம்மட்டோ?!!
மனவெறி சீக்காள சிங்கள ஓநாய்கள்
மதலை குடித்த தாய்மார்பு  சிதைக்க
இளம் தளிர்கள்.. எம் குல தீப கொழுந்துகள்..
செண்டுகளழிய சீரழிய .. பெண்டுகளழிய பெண்ணழித்து.....அந்தப்
பேய்க்கூட்டம்  ஆடியதை கண்டிருந்த கடவுளைத்தான்
அவன் கண்களைக்குடைந்தெடுத்து
நட்ட நடு வீதியிலே நசுக்கிப் புழுவெனவே வெந்தீயில் பொசுக்கி எறிந்துவிட்டேன்.
கண்ணெதற்கு கயமைக்கு?!

இனி இந்தப் பூமியிலே இவனுக்கு இடமில்லையென்றே இடுப்பொடித்து

பட்டப்பகலிலேயே நான் அவனை படுகொலையே செய்துவிட்டேன்

முத்துக்குமரதாசன்
(ராஜ்குமார்)

முத்துக்குமாரதாசன் நீங்கள் யாழ்க்கருத்துக்களத்திற்கு புதியவர்போல உள்ளது. உங்களுடைய கவிதையையும் தனித்திரிமூலம் இணையுங்கள். அரிச்சுவடியில் உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு எல்லா இடங்களிலும் எழுதுங்கள்.

அரிச்சுவடி - http://www.yarl.com/forum3/index.php?showforum=27

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு ஆக்கம்,சுபேஸ்!

ஆர,அமர இருந்தி சிந்தித்துப் பார்க்கையில், எமது இனத்தை,சாதிகளாகப் பிரித்துப் பலவீனமடையச் செய்ததில், எங்கள் கடவுளர்களுக்குப் பெரும் பங்கு உண்டு!

தமிழ்ச் சர்க்கரவர்த்தி, ராஜ ராஜ சோழனின் சாம்ராச்சியம் அழிந்து போனதும், இந்த மதவாதிகளின் ஊடுருவலினால் தான்!

சேர, சோழ பாண்டியர்களுக்கிடையில், போர்களை மூட்டிவிட்டுக் குளிர் காய்ந்தவர்களும், இந்த மதத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களே!

இன்று கூட எமது போராட்டத்தைத் திசை திருப்பி, அதை வலுவிழக்கச் செய்தவையும் இந்தத் தெய்வங்களும், தேவதைகளுமே! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி .

மணற்கேணியாய் நினைக்க நினைக்க பொங்கி எழுந்து தாளாமல் சாயும் எமது துயரத்தில் நணைந்தே வழிந்தேன். உந்தன் இந்த கண்ணீர் நதி என் கண்ணில் ஊடி வழிந்தபோது நான் துயரங்கள் நெஞ்சுக்குழியில் மலையென கொட்டிகிடந்த மே2009-- மாதத்தின் இறுதி வாரத்தில் நான் எழுதிய ஆதங்க வரிகளை உங்களொடு பஹிர்ந்துகொள்கிறேன்

கடவுளை நான் கொலைசெய்தேன்
profile_mask2.png
Raj kumar <rajk2500@gmail.com>
5/26/09
cleardot.gif
 
cleardot.gif
cleardot.gif
to adview.gk, Bathuvai, rkthiruppavai
cleardot.gif
 
                  கடவுளை  நான் கொலை செய்தேன்

      ஆண்டவன் செத்துப் போய்விட்டான்.

      நான் தான் அவனைக்கொலை செய்தேன்.

     நேற்றுவரை யாரும் சொல்லியிருக்கத்தேவையில்லை.

     கடவுள் இல்லையென்று..

    இன்று முதல் உறுதியாகச் சொல்லலாம்.

    இப்போதுதான் அந்த அயோக்கியனை நான் கொன்றேன்.

    என் வார்த்தைகளில் வழியும் ரத்தம் அவனுடையதுதான்.

    உறுதி.. அவன் செத்தே போய்விட்டான்.

    பதறப் பதற நான் அவனைக்கொன்றேன்.

    பார்த்தவர்கள் யாரும் மனம் இரங்கவில்லை.மாறாக ரசித்தார்கள்.

    கதறக் கதற அவன் உயிரை எடுத்தேன்.

   கண்டவர்கள் அதை இசைபோலவே ரசித்தார்கள்.

   ..............................

......................................................

  வெண்புறாக்குஞ்சுகள்-தர்மங்கள்

  கசக்கியெறியப்பட்டன-எம் ஈழ மண்ணில்...

  காவலன் இவன் கண்டுகொள்ளாமல் இருந்தானே?!

  ரோஜா மலர்க்குழவிகள்-நியாயங்கள்  அங்கே

  கழுத்து நெறிக்கப்பட்டன..

  முகம் திரும்பி நின்றவன் தானோ இவன்?!

எம் ஈழக்கூரைக்குள் எமன்கள்-க்ஃபிர் விமனங்கள்;

பத்திரமாய் ஷெல்லடிக்க பார்த்துக்கொன்டான்.

யாம் பெற்ற பிள்ளைகள் ஓடி ஒளிந்த

பதுங்கு குழியைக்கூட காட்டிக்கொடுத்தான்.

அண்டமே அதிர்ச்சியுற எம் தாய்மார் அலறிக்குரலெடுக்க..

செவிட்டு பேயாக சிரித்தானோ?

திசைகள் வழிவிடச்சொன்னான் செறிவாய் விழ எறிகணைகள்.

வான் சற்றே விலகியிருக்கச்சொன்னான் வந்து விழ பாஸ்வரங்கள்

பிஞ்சுகளும் பெண்டுகளும் எமை பெற்ற தாவரமும்

வந்துவிழும் பசும் சிசுவும் வாய்த்திருந்த கருவறையும்

செந்தழலில் நெய்யாக சதைத்தீய்ந்து உயிர் உருக

உருகுமுயிர் வழிந்தோட...

கால் நனைக்க குருதி நதி மேல் நனைக்க உயிராவி

நின்ற சீர் நெடுமாலே நெடுமரமாய் வீற்றிருந்தான்.

அவன் தன்

விண்டதொரு கழலிணைகள் வெட்டிக் கடையெறிந்தேன்.

கொத்துக் கொத்தாய் கொத்துக்குண்டுகள்...

வெடித்து சிதறி--சிதறிவெடித்து...

கொலை கொலையாய்..... கொலைகள்.... கொலைகள்...

தலைகள்,கைகள், திருமுகஙகள், பால்கொடுத்த தாய்முலைகள்.

சதைகள் மேல்வழிய பதுங்கு குழிகள்.

குப்பைக்கூளமென குற்றுடல்கள்..

பீறிட்ட ரத்தம்.. பிளிறித்தெறித்த மரணங்கள்.

மரணத்தின் முதுகேறி மரணித்த மரணங்கள்

எமன் மலைத்த தருணங்கள் என பகல்கள்

அவனே மயங்கிய தருணங்கள் ஆன இரவுகள்.

பார்த்திருந்த பாதகத்தான் பரம்பொருள் என்னும் மதிகேடன்.

அம்மட்டோ?!!

மனவெறி சீக்காள சிங்கள ஓநாய்கள்

மதலை குடித்த தாய்மார்பு  சிதைக்க

இளம் தளிர்கள்.. எம் குல தீப கொழுந்துகள்..

செண்டுகளழிய சீரழிய .. பெண்டுகளழிய பெண்ணழித்து.....அந்தப்

பேய்க்கூட்டம்  ஆடியதை கண்டிருந்த கடவுளைத்தான்

அவன் கண்களைக்குடைந்தெடுத்து

நட்ட நடு வீதியிலே நசுக்கிப் புழுவெனவே வெந்தீயில் பொசுக்கி எறிந்துவிட்டேன்.

கண்ணெதற்கு கயமைக்கு?!

இனி இந்தப் பூமியிலே இவனுக்கு இடமில்லையென்றே இடுப்பொடித்து

பட்டப்பகலிலேயே நான் அவனை படுகொலையே செய்துவிட்டேன்

முத்துக்குமரதாசன்

(ராஜ்குமார்)

அருமையான கவிதை அண்ணா..எங்குபோனிர்கள் இவளவு நாளும் எம்முடன் இணையாமல்..? ஒரு கனவாகப் போய்விட்ட எங்கள் சுதந்திரத்துக்கான பெரும்போராட்டத்தின் நினைவுடன் எஞ்சியிருக்கும் நாம் காலத்தின் விளிம்பில் குந்தி இருந்தபடி காத்திருக்கிறோம் திசை தொலைத்த ஆடுகளின் பட்டியில் இருந்து சிதறிப்போன தனியன்களாய்...இனி என்ன ஆவோம் என்று எதுவும் தெரியவில்லை...வாள்கொண்டும் வேல்கொண்டும் போர் புரிந்த எங்கள் பரம்பரைகள் வஞ்சகர்களால் வீழ்த்தப்பட்டதை வரலாறுகளில் படித்து கிலிகொண்டிருக்கிறோம் எங்கள் கதையும் வண்ணிமண்ணின் புழுதிகளுக்குள் புதைபடிவங்களாய் மாறிப்போய்விடுமோ என்று..நெஞ்சில் பெருந்துயராய் தங்கி நிற்கும் மே மாதத்தை நினைத்து நினைத்து இன்னும் உலகத்தமிழர்களின் கண்களில் கண்ணீர் ஊறிக்கொண்டிருக்கிறது..செத்துக்கொண்டிருந்த எம் உறவுகளை நினைந்து நினைந்து உங்கள் உயிர் கதறியதை தங்கள் கவிதையின் ஒவ்வொரு வரியிலும் பார்த்தேன்..யாரெல்லாம் அநீதிக்கும் அடிமைத்தனத்துக்கும் எதிராக குரல் கொடுக்கிறானோ அவனெல்லாம் என் தோழனே என்று சே உரைத்து சென்றான்..வாருங்கள் அண்ணா சேர்ந்து பயணிப்போம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் தம்பி. உங்களை ஆற்றுவதற்கும் ஆறுதலுக்கும் மானசீகமாய் அணைக்கிறேன். உணர்வலைகளின் கதகதப்பில், சங்கமத்தில்தான் உயிர்கள் ஜனித்தன. நானோ தமிழகத்து உறவு. நீங்கள் எம் தொப்புள்கொடியின் துடிப்பு. ஈழம் எம் அனைவரின் இழக்க வியலா அடி மடி. எமது உயிர்நாடி. எந்தவொரு தமிழ் ஆன்மாவும் இழக்க சம்மதிக்காத எம்மினத்தின் பண்பாட்டு தொட்டில்.

யாம் அனைவரும் இப்போது உணர்வில் கலந்து ஒன்றாய் இருக்கிறோம். இந்தத்தமிழ் மனங்கள் யாவும் தற்போது ஒரு புள்ளியில் சங்கமித்து நிற்கின்றன. அந்த கூட்டு மனம் அதிர்ந்து போய் இருக்கிறது. அந்த அதிர்ச்சியில் ஒர் சங்கமம் ஒருங்கிணைப்பு.ஓர் தவிப்பு. இவை யாவும்தான்  ஒட்டுமொத்த தமிழினத்தை விடுவிக்கும் திறவுகோல்கள்.

ஈழத்துடன் தாய்த் தமிழகமும் இணைந்த ஒரு பெருந்தேசியத்தை நோக்கிய பயணம் இப்போது சாத்தியப்பட்டுக்கொண்டிருக்கிறது. இங்கு தான் எம் அழிவும் ஆரம்பமும் அருகருகே ஒரே பாதையின் அடுத்தடுத்த மைல் கற்களாய் நிற்கின்றன.

தம்பி ரணச்சகதியாய் நொதித்துக்கொண்டிருக்கும் என் நெஞ்சில் துளைத்தெடுக்கும் வலியுடன் நம்பிக்கையும் சேர்ந்தே வளமாய்  வளர்கிறது

முள்ளி வாய்க்காலுக்கு முன் நான் ஒரு உனர்வுள்ள  தமிழ் தொழிலதிபன்.அவ்வளவே.

தற்போது நான் மனத்தளவில் நான் ஒரு போராளி. எனது தினப்படி பிரார்த்தனை திட்டம் இலக்கு அனைத்தும் ஈழம். அனைத்தும் தமிழ் தேசியம். அதன் அடிப்படை யாகங்கள்

உலக வரலாற்றுக்கு  கி.மு  கி.பி என இரு புள்ளிகள். தமிழனின் வராற்றுக்கு மு.மு....மு.பி.

தம்பி தளர வேண்டாமடா. தடந்தோள்கள் இனி நான்கடா

என் கண்ணே மணியே

உன்னை கரத்தில் ஏந்துகிறேனடா. தோளில் தாங்குகிறேனடா.

அண்ணன்

முத்துக்குமரதாசன்

பகிர்வுக்கு நன்றி. நேரம் கிடைக்கும் போது இன்னும் பல கவிதைகள் எழுதுங்கள்.
 
கண்ணில் தெளிவுகொண்டோம்-எங்களுக்குக்
கடவுள் எவனுமில்லை
***

இது தான் உண்மை.

இந்தக்கவிதையை தோண்டியெடுத்து இங்கே காட்டியதற்கு நன்றி காதல் .................அருமையான அற்புதமான வரிகளினால் எம் ஆதங்கத்தை உருத்து கேட்கப்படும் ஓர் சிறந்த கவிதை .தொடருங்கள் சுபேஸ் ..........

இந்தக்கவிதையை தோண்டியெடுத்து இங்கே காட்டியதற்கு நன்றி காதல் .................அருமையான அற்புதமான வரிகளினால் எம் ஆதங்கத்தை உருத்து கேட்கப்படும் ஓர் சிறந்த கவிதை .தொடருங்கள் சுபேஸ் ..........

தோண்டி எடுத்தது நான் அல்ல. முத்துகுமரதாசன் அண்ணா 13 january 2013 பதிலளித்த போது மேலே வந்திருந்தது. அதன் மூலம் தான் நானும் கண்டுகொண்டேன்.

எங்கு போனீர்கள் நாம் இங்கு  சாகையிலே ....
சுபேஸ் உங்கள் ஆதங்கம் , கடவுளை எட்டியிருக்குமா ..? ஆனால் மனிதர்களிடம் நிச்சயம் எட்டியிருக்கும்..
உங்கள் கவிதைகளில் பொங்கியெழும் அத்தனை வார்த்தைகளும் மிக அருமை என்று வெறும் வார்த்தைகளால் பாராட்ட முடியவில்லை. ஏனென்றால் அவ்வளவும் வலிகளின் மேல் நின்று எழுதிய ஒரு இளம் கவிஞனின் வார்த்தைகள் இவை ..  நீங்கள் கேட்டிருந்த அத்தனை கேள்விகளுக்கும் இறைவன் மட்டுமல்ல , அரசியல் நாடகம் நடத்தும் எந்த வாதிகளாலும் பதிலை கூறமுடியாது... இது தமிழினத்தின் சாபம் மட்டுமே ...
தொடருங்கள் இது போன்ற கவிதைகளில் நம் உணர்வுகள் பதியப்படட்டும் ....

Edited by கல்கி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோபத்தின் கொந்தளிப்பு வரிகளில் தெறிக்கிறது!. கனமான வரிகள், கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை.....கொஞ்சம் கொஞ்சமாய் நசிந்து போகையிலே....

இப்படியான கேள்விகள் வேள்விகளாய்த் தொடரும்!.

நல்ல வரிகள். தமிழர் எல்லோரும் 'ஒன்றிணைந்தால் கடவுள் வருவார்"...!....ஆக....முதலில் நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்! பிளவுகள நம்மில் வைத்துக்கொண்டு கடவுளைப் பிழை சொல்லுதல் நியாயமில்லையே!.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.