Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாரும் சொல்லித் தந்து நாங்கள் இதை சொல்லேல...!

Featured Replies

யாரும் சொல்லித் தந்து நாங்கள் இதை சொல்லேல...!

sontha_moolais8ig.jpg

from : Facebook

Edited by தமிழ்நேசன்

Baby_cries_2.giftamilnet.pngBaby_bottle.gif

தயவுசெய்து, இப்படியான பால்குடிகளை பிழையான வழியில் இட்டுச் செல்லாதீர்கள்!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் தமிழ்த்தேசியத்தை நீண்டகால குத்தகைக்கு எடுத்த அறிவுசாராரே:

.... நீங்கள் விரும்பின், இந்தப் பால்குடிகளுக்கு, நாலு விளையாட்டுச் சாமானுகளையோ, நாலு பால்ப்போச்சிகளையோ அதுக்கு மேல் நாலு நப்பிகளையோ வாங்கிக் கொடுத்து மகிழ்வியுங்கள்!!!!

... அதை விடுத்து நடனம் பழக்கிவிச்சுப் போட்டு, உங்கள் ரியூன்களுக்கு ஆட சொல்லி ஆட்டுவிக்காதீர்கள்!!! ...

இந்த இனம் இனி வாழப்போகிற இனமே அல்ல. ......................................

இந்த இனம் இனி வாழப்போகிற இனமே அல்ல. ......................................

யாராவது, உந்த அனைத்துலக செயலகத்தார், முள்ளிவாய்க்காலுக்கு பின்னம் புலத்தில் செய்த ஓர் நல்ல விடயத்தையாவது பட்டியலிடுங்களேன்???? ..

1. புலத்தில் உள்ள எம் மக்களுக்கு முள்ளிவாய்கால் அவலத்துக்கு பின் ஏற்பட்ட குழப்பங்கள், சந்தேகங்களை தீர்த்தனர்?

2. கடந்த காலங்களில் விடப்பட்ட தவறுகளை மீளாய்வு செய்து, சரியான பாதையில் செல்ல முற்படுகின்றனர்?

3. புலத்தில் புலிகளின் கட்டமைப்புகளை ஓர் அணியில் திரட்டியோ, ஓர் புரிந்துணர்வு உடன்பாட்டை எட்டியோ, .... இலக்கை நோக்கி செயற்படுகின்றனர்?>

4. சிறிலங்கா அரசின் போர் குற்றங்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளனர்?

5. புலத்தில் மக்களால் கடந்த காலங்களில் அள்ளிக் கொடுக்கப்பட்ட பணம், சில பினாமிகளின் கைகளில் சிக்கி உள்ளது. அவைகளை மீட்டு தாயக மக்களின் அவலங்களை துடைக்கவோ அல்லது சிங்களத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான செயற்பாட்டில் ஏற்படும் செலவீனங்களுக்கோ பாவிக்கின்றனர்?

6. முள்ளிவாய்க்கால் தாண்டி ஏறக்குறைய மூன்று வருடங்கள் ஆகின்றன. புலமெங்கும் இன்னும் புலிகளுக்கு தடை! அவைகளை நீக்க, அத்தடைகளுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உறுதியாக செயற்படுகின்றனர்?

7 .......... .......

... ஆக வருடத்துக்கு ஒருதரம் மாவீரர் நாள் செயற்பாடுகளை செய்கின்றனர், அதுவும் பணவேட்டைக்காக என்கின்றனர்??????

இவைகளுக்கு மேலாக இந்த மூன்று வருடங்களும் செய்தவைகள் ...

1. கேட்டவன், நின்றவன், சொன்னவனுக்கு எல்லாம் "துரோகி" பட்டம் அளித்து கவுரவித்தனர்.

2. வதந்திகளையும், பொய்ப்பரப்புரைகளையும் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடுகின்றனர்.

3. ...

4. எல்லாவற்றுக்கும் மேலாக சிங்களம் நினைப்பதை .. செய்து கொடுக்கின்றனர்.

... இவர்களின் செயற்பாடுகள் எமக்கு கண்டிப்பாக தேவைதான்?????

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது, உந்த அனைத்துலக செயலகத்தார், முள்ளிவாய்க்காலுக்கு பின்னம் புலத்தில் செய்த ஓர் நல்ல விடயத்தையாவது பட்டியலிடுங்களேன்???? ..

... இவர்களின் செயற்பாடுகள் எமக்கு கண்டிப்பாக தேவைதான்?????

உங்களது கேள்விகளுக்கு பதில் எழுதத்துடிக்கின்றேன். ஆனால் என்னை இதிலுள்ள சில உண்மைகள் தடுக்கின்றன.

பாப்பா தலையாட்டினால் புலிகள் எல்லோரும் தலையாட்டிகள் என்றரீதியில் நாம் சிந்திக்க தொடங்கினால் சிங்களவனின் திட்டத்தை நாமே செயற்படுத்துவோர் ஆவோம். அமைதி காப்போம். தேவையானபோது மௌனமாக இருப்போம். அவரவர் முகங்கள் தெரியும் வேளையிது.

Baby_cries_2.giftamilnet.pngBaby_bottle.gif

தயவுசெய்து, இப்படியான பால்குடிகளை பிழையான வழியில் இட்டுச் செல்லாதீர்கள்!!!

புலத்தில் படித்த இளம் சமுதாயம் கூட சுயமாக செயற்படாமல் போக பன்னுகிறார்கள். இதற்க்கு இவர்களின் பெற்றோர்களும் ஆதரவு என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சிங்களவன் கூட இவளவு வேகமாக எதிர் பிரச்சாரத்தை ஆரம்பிக்க முடியாமல் தின்றுகிறான்.

சிங்களவ்னுக்கு சின்ன பயம் இருக்கு படித்த புலம் பெயர் மக்களோடு அவசரப்பட்டு மூக்கு உடைபடக்கூடாது என்று ஆனால் நாம் அவனுக்கு வேலையை சுலபமாக்கி கொண்டு இருக்கோம்.

காலம் காலமாகவே புலம்பெயர் நாட்டில் இதுதானே நடந்து வருகிறது. இவர்களால் எத்தனை இளையவர்களின் வாழ்க்கை பாழாய்ப் போனது. பலர் இன்னும்கூட மீளமுடியாமலே இருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்திலாவது அவர்கள் எல்லோரினதும் முகமூடிகள் கலையவேண்டுமென வேண்டுகிறேன். இவ்வாறான பச்சோந்திகள் இருக்கும்வரை யாராலும் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யமுடியாது. எனது விருப்பமெல்லாம் இந்த சந்தர்ப்பத்தோடாவது அனைவரினதும் முகமூடிகள் கலைய வேண்டுமென்பதே. என்னைப் பொறுத்தவரை, இவர்கள் பின்னால் நிற்கும் அனைவரும் முட்டாள்களே. இவர்களை எல்லாம் படித்தவர்கள் பட்டியலில் சேர்க்க முடியாது. சுயமாக சிந்திக்கமுடியாதவர்கள் என்னத்தைக் கிழித்துவிடப் போகிறார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில என்ன பிரச்சினை இருக்கு என்று எனக்கு விழங்க இல்லை, அவர்கள் மக்களால் தேர்ந்து எடுக்க பட்ட பிரதி நிதிகள், வாkகளித்த மக்களுக்கே பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு நாடுகடந்த அரசுக்கு இருக்கும் போது, தமது உறுப்பினர்களின் சந்தேகங்களை களைந்து குறைகளை நிவர்த்தி செய்து அவர்கLaiயும் அரவனைத்து செல்ல வேண்டிய கடப்பாடு நாடுகடந்த அரசுக்கு இருக்கிறது அல்லவா? உங்கள் உறுப்பினர்களுக்கே சரியான விளக்கம் கொடுத்து ஒன்றினைக்க முடியாதவர்கள், எல்லோரையும் எப்படி ஒன்றினைக்க போகிறீர்கள், நீங்கள் ஜனநாயகரீதியில் இயங்கும் அரசுதானே நடத்துகிறீகள், அல்லது ஏதாவது ரகசிய இயக்கம் நடத்துகிறீகளா?

அல்லது யாரும் கேள்வி கேட்கமுடியாது, பதில் சொல்ல மாட்டோம், என்றால் அதையாவது வெளிப்படையாக சொல்லி விடுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது, உந்த அனைத்துலக செயலகத்தார், முள்ளிவாய்க்காலுக்கு பின்னம் புலத்தில் செய்த ஓர் நல்ல விடயத்தையாவது பட்டியலிடுங்களேன்???? ..

அனைத்துலக செயற்பாட்டாளர் களத்தில் இறங்காவிட்டால் முக்கால்வாசி இடத்தில் நாடுகடந்த அரசின் தேர்தல்களே நடந்து இருக்காது :lol: :lol: :lol:

இதில் பிரட்சனை என்னவென்றால் .....

... நேற்று எகிப்தில் பதவி விலகிய முபாரக், பல ஆர்ப்பாட்டங்கள், உயிரிழப்புக்கள், போன்ற பலவற்றுக்கு பின் தான்! ... இன்று லிபியாவில் கடபி, இரத்த ஆறு ஓடியும் இன்னும் இல்லை!!!!! ... ஏன்????? ........... முப்பதோ, நாற்பதோ, பல வருடங்கள் பதவி, பணம், இராஜபோகம் அனுபவித்ததை விட்டுப்போவது என்பது இலகுவான காரியமல்ல!!!!!!

.... ஏறக்குறைய ஆதே நிலைதான் எங்கள் புலத்து இராஜக்களுக்கும்!!!!!! ... 1983இற்கு பின்னம் ... கேட்பாரில்லாமல் ... பணம், பதவி அனுபவித்து வந்த கூட்டம் .... விலகுவது சுலபமா????????????

... இனம் இல்லாமல் போகும் நிலை வந்தாலும் ... விலக மாட்டார்கள்!!!!!!!!!!!!!!!!

அனைத்துலக செயற்பாட்டாளர் களத்தில் இறங்காவிட்டால் முக்கால்வாசி இடத்தில் நாடுகடந்த அரசின் தேர்தல்களே நடந்து இருக்காது :lol: :lol: :lol:

ம்ம்ம்ம்ம்ம்.......... இறங்கியதே. அதனுள் உள் நுளைந்து குழப்பங்களை ஏற்படுத்தவே ஒழிய, நல்ல காரியத்துக்கு அல்ல!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பிரட்சனை என்னவென்றால் .....

... நேற்று எகிப்தில் பதவி விலகிய முபாரக், பல ஆர்ப்பாட்டங்கள், உயிரிழப்புக்கள், போன்ற பலவற்றுக்கு பின் தான்! ... இன்று லிபியாவில் கடபி, இரத்த ஆறு ஓடியும் இன்னும் இல்லை!!!!! ... ஏன்????? ........... முப்பதோ, நாற்பதோ, பல வருடங்கள் பதவி, பணம், இராஜபோகம் அனுபவித்ததை விட்டுப்போவது என்பது இலகுவான காரியமல்ல!!!!!!

.... ஏறக்குறைய ஆதே நிலைதான் எங்கள் புலத்து இராஜக்களுக்கும்!!!!!! ... 1983இற்கு பின்னம் ... கேட்பாரில்லாமல் ... பணம், பதவி அனுபவித்து வந்த கூட்டம் .... விலகுவது சுலபமா????????????

... இனம் இல்லாமல் போகும் நிலை வந்தாலும் ... விலக மாட்டார்கள்!!!!!!!!!!!!!!!!

ம்ம்ம்ம்ம்ம்.......... இறங்கியதே. அதனுள் உள் நுளைந்து குழப்பங்களை ஏற்படுத்தவே ஒழிய, நல்ல காரியத்துக்கு அல்ல!!!!!!

நெல்லையன்............

தொண்டாற்றுவது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால் சேறுவாரி வீசுவது (நீங்கள் செய்வது) மிகவும் இலகுவானது அதை இன்னமும் முப்பது வருடம் தொடர்ந்து வெற்றிநடை போடலாம்.

அவர்கள் என்ன செய்தார்கள்?

நானும் நீங்களும் என்ன செய்தோம்? அங்கே இன்னமும் எத்தனையோ வெற்றிடங்கள் உள்ளன ஏன் என்னாலும் உங்களாலும் அது நிரவபட கூடாது? உண்மையான உழைப்பை ஏன் நானும் நீங்களும் செய்ய கூடாது?

முன்பு புலிகளை பயங்கரவாத பட்டியலில் சேர்க்காது விட்டாலும் இனத்தை காட்டிகொடுத்து நக்கிவாழும் நாய்களின் பொய்தகவல்களால் பலபேர் கைதாகி இருந்தார்கள் பின்பு விடுதலை ஆனர்கள் என்பது வேறுவிடயம்........... ஆனால் கைதாகும் சாத்தியம் அவர்களுக்கு இருந்தும் அதை அலட்சியபடுத்தியே உழைத்தார்கள் என்ற உண்மையை ஏன் புதைக்க வேண்டும். ஏன் நானும் நீங்களும் அதை செய்வில்லை.

இன்னமும் எத்தனையோ பேர் சிறைகளில் (வெளிநாடுகளில்) இருக்கின்றார்கள். நாடுகடந்த அரசும் தமிழ் ஈழம் நோக்கி வீறுபோட தொடங்கினால் இந்த பொய்ஜனநாயக வாதிகளின் சோடிப்புக்கு ஆளாகி உள்ளே போவார்கள் என்பது எனக்கும் உங்களுக்கும் தெரிந்துதான் நாம் வெளியிலே இருக்கிறோம். சும்மா இருந்தால் கூடபராவியில்லை.............. அதிலும் ஒரு மேன்மைநிலை தேடுவது என்பது அழுக்கினும் அழுக்கு!

நாடுகடந்த அரசிற்கு உழைக்க உங்களால் முடிந்தால் மறுநிமிடமே அதில் சேரலாம்...............

அதைவிடுத்து சேறு பூசிகொண்டே இருப்பது என்பது இலங்கை புலானாய்வே அதை பகுதி நேரமாகத்தான் செய்கிறது. அதை முழுநேர வேலையாக செய்யதால் சிங்களவனிலும் விட தமிழனின் பெரியதொரு எதிரியாகத்தான் இருக்கவேண்டும்!

ஒற்றுமை கோரும் “பிரதிப் பிரதமரிமரின்” வேண்டுகோள் : அஜித்

ஆண்ட பரம்பரை மீண்டும் தன்மானத்துடன் வாழ, நாதியற்று வாழும் எம்மக்களுக்கு நீதி கிடைக்க ஓவ்வொரு தமிழனும் தனது பங்கைத் தவறாமல் செலுத்தி இறைமையும், சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை மீளமைப்போம் என சூளுரைத்துத் தொடங்கிய நாடுகடந்த தமிழீழ அரசை, ஈழத்தமிழர்களின் கனவை,உலகத் தமிழரின் விருப்பை ஊதாசீனம் செய்து பிரிந்து செய்வது சரியா, பிழையா, முறையா, நேர்மையானதா என ஒரு கணம் சிந்தியுங்கள்”.

இவ்வாறு அதிரடியாக ஆரம்பிக்கிறது கலாநிதி ராம் சிவலிங்கத்தின் உடகங்க்ளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கை. கலாநிதியைத் தவிர, நாடுகடந் தமிழீழத்தின் பிரதிப் பிரதமர் என்பது ராம் சிவலிங்கத்தின் மற்றொரு தகமை.

நாடுகடந்த தமிழீழத்தின் அதிகாரப் போட்டிக்காக பிரிந்து சென்று, நாடுகடந்த தமிழீழம் – (ஜனநாயக அணி)- என்ற பெயரில் ஆரம்பித்திருக்கும் புதிய குழுவிற்கு எதிரான ஒற்றுமையை கோரும் அவரின் அறிக்கையின் ஆரம்பமே அழிவரசியலின் ஆரம்பத்தைப் போன்றது.

எந்த அணியானாலும் முடிந்துபோனவற்றிலிருந்து கற்றுக்கொள்ளாமல் வெற்று முழக்கங்களோடு எமது நட்புசக்திகள் மத்தியில் பிளவுகளை நிரந்தரமாக்கும் “ஆண்ட பரம்பரை” கருத்தோடு மறுபடி அரசியலை ஆரம்பிப்பதே அபாய ஒலி.

ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதாலா நாம் இப்போதும் தன்னுரிமை கேட்கிறோம்? நாம் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் எம்மீதான ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடத் துணிகிறோம் என்று நெஞ்சை நிமிர்த்திப் பெருமையோடு கூறுவதற்குக் கூட நாம் இன்னமும் கற்றுக்கொள்ளவில்லையா?

அவுஸ்திரேலியாவில் அப்ரோஜின் இன மக்களே ஆண்ட பரம்பரை. அமரிக்காவில் செவிந்தியர்களே ஆண்ட பரம்பரை. இன்னும் பின்னோக்கிச் சென்றால் இலங்கையில் இயக்கர்களும் நாகர்களும் அல்லவா ஆண்ட பரம்பரை. இந்தியாவில் பிராமணர்கள் கூட நாம் தான் ஆண்ட பரம்பரை என்கிறார்களே.

மக்களின் இடப்பெயர்வுகளும், குடியேற்றங்களும், இனக்கலப்பும், புதிய இனங்களின் உருவாக்கமும் சமூக நியதி. வரலாறு முழுவதும் இதனை பதிவு செய்திருக்கிறது.

தேசிய இனங்களின் உருவாக்கம் வரலாற்றின் ஒரு குறித்த காலப்பகுதிக்கே உரித்தானது. சந்தைப் பொருளாதாரம் உருவான அந்தக் காலப்பகுதி, தேசங்களின் உருவாக்கத்தையும் தேசிய இனங்களின் தோற்றத்தையும் தோற்றுவிக்கிறது. இலங்கையில் தேசிய இனங்களின் ஆரம்பம் 18 ம் நூற்றாண்டிலிருந்தே ஆரம்பமாகிறது. முதலில் ஆண்ட பரம்பரை குறித்த பழமைவாதக் கருத்திலிருந்து முன்னேறிய காலப்பகுதிக்குரிய பார்வையை முன்வைப்பதே உரிமைப் போரின் ஆரம்பப் புள்ளியாக அமைய முடியும்.

வேளாள மேலதிக்க சகதி பூசிய ஆண்ட பரம்பரை என்ற வாதம் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதற்கு எதிரான அப்பட்டமான குறுகிய எல்லைகளைக் கொண்ட தேசிய வாதமாகும். இலங்கையில் ஏனைய ஒடுக்கபடும் தேசிய இனங்களான முஸ்லீம்களையும், மலையக மக்களையும் “ஆளாத பரம்பரை” என அவமானப்படுத்தும் அயோக்கியத்தனமான கருத்தாகும். எமது பிரதான நட்புசக்திகளான சிங்கள் ஒடுக்கப்படும் மக்களை அன்னியமாக்கும் ஆபத்தான வாதமாகும். இந்தியாவிலும், உலகெங்கிலும் தம்மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் தேசிய இனங்களையும், மக்களையும் பயமுறுத்தும் அகங்காரமாகும். நந்திக்கடலில் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவிகளை இலங்கை அரச பாசிசத்திற்குப் பலிகொடுத்த போராட்டத்தின் அரசியல் ஆண்ட பரம்பரை என்பதிலிருந்தே ஆரம்பமாகியிருந்தது.

முஸ்லீம்களை எதிரிகாளக்கியதும், மலையக மக்களை அன்னியர்களாக்கியதும், ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களை அறுத்தெறிந்ததும் இதே ஆண்ட பரம்பரை வாதம்தான்.

ஐரோப்பிய அரசுகளை அடிபணிய வைக்கும் அத்தனை போராட்ட அமைப்புக்களும் அப்பாவிகள் சாரி சாரியாகக் கொல்லப்பட்ட போது இணைந்து கொள்ள மறுத்ததும் இந்த ஆண்ட பரம்பரைகளோடு தான்.

சந்தர்ப்பவாதிகளையும், அரசியல் வியாபாரிகளையும் அரவணைத்துக்கொண்டு உறுதி மிக்க நண்பர்களைத் தூரே துரத்தியதும் ஆண்ட பரம்பரைதான்.

நாம் ஆண்ட பரம்பரையாக இல்லாமல் ஒடுக்கப்பட்ட புதிய வீரம் செறிந்த பரம்பரையாக முன்னெழுந்திருந்தால் முள்ளிவாய்க்காலில் ராஜபக்ச குடும்பம் இரசாயனக் குண்டுகளை மக்கள் குடியிருப்புக்களில் வீசியெறிந்து கொசுக்களைப் போல் எமது பரம்பரையை கொலை செய்திருக்க முடியாது. உங்கள் பார்வையின் வீச்சை குறுகிய தேசிய வாத வட்டத்திற்கு வெளியால் செலுத்துங்கள் தோல்வி கற்றுத்தரும். நண்பர்களை அறிமுகம்செய்யும். எமக்காக, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்திற்காக, தெருக்களில் போராட தமிழ் நாட்டிலிருந்து, மத்திய இந்தியாவிலிருது, காஷ்மீரிலிருந்து, நேபாளம் வழியாக, அரபு நாடுகளைக் கடந்து ஐரோப்பாவரை குரல் கொடுக்க சாரி சாரியாக மக்கள் தெருவிற்கு வருவர்.

அறிக்கையின் முழுமை:

ஆண்ட பரம்பரை மீண்டும் தன்மானத்துடன் வாழ, நாதியற்று வாழும் எம்மக்களுக்கு நீதி கிடைக்க ஓவ்வொரு தமிழனும் தனது பங்கைத் தவறாமல் செலுத்தி இறைமையும், சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை மீளமைப்போம் என சூளுரைத்துத் தொடங்கிய நாடுகடந்த தமிழீழ அரசை, ஈழத்தமிழர்களின் கனவை,……….உலகத் தமிழரின் விருப்பை ஊதாசீனம் செய்து பிரிந்து செய்வது சரியா, பிழையா, முறையா, நேர்மையானதா என ஒரு கணம் சிந்தியுங்கள்.

தமிழரின் ஒற்றுமையை, அதன் தேவையை எடுத்துக்காட்டும் விதத்தில் நடக்கவேண்டிய நாமே பிரிவினைக்குக் காரணமாகலாமா? பிரிவினை என்ற சொல்லை தமிழ் அகராதியில் இருந்து அகற்றவேண்டிய நாமே பிரிவிணைக்கு வழிவகுக்கலாமா? தேசியம் பேசிய நாம் இன்று பிரிந்து நின்று எம்மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையைச் சிதைக்கலாமா?

பிரிந்து சென்ற்தோடு நிறுத்தாமல், நாடுகடந்த தமிழீழ அரசு – ஜனநாயக அணி என்ற பெயருடன் ஏட்டிக்குப் போட்டியாக நீங்கள் தொடங்கியிருப்பது ஒற்றுமையை வேண்டி நிற்போருக்கு ஒரு சவுக்கடியாகவும், எம் இனத்தின் எதிர்காலத்துக்கு ஒர் தடைக்கல்லாகவும அமைந்துவிட்டதே.

எமக்குள் யார் பிரிந்தாலும் இழப்புத் தமிழருக்கே என்ற உண்மையை உணர்ந்தல்லவா நீங்கள் செயற்பட்டிருக்க வேண்டும். பேசித் தீர்க்க்க வேண்டிய விடயத்தை பிரிந்து சென்று எதிரி விரிக்கும் வலைக்குள் நீங்களாகவே விழுந்து விட்டீர்களே. பிரிந்து செல்லும் உங்கள் செயலுக்கும், ராஜபக்சவின் விருப்பத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லையே. இருவரும் வேண்டிநிற்பதும் தவமிருப்பதும் நாடுகடந்த தமிழீழ அரசை அழிப்பது அல்லது பலவீனப்படுத்துவது ஒன்றுமட்டுமே.

ஜனநாயகம் பற்றிப் பேசுகிறீர்களே, எது ஜயா ஜனநாயகம்? பிரிந்து நிற்கும் முப்பது பேர் கூறுவதை மற்றைய அறுபத்தட்டுப்பேரும் ஏற்றால்தான் ஜனநாயகமா? அல்லது, அவர்கள் ஏற்கமறுததால் நீங்கள் பிர்ந்து செல்வதுதான் ஜனநாயகமா? நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’ உடையாமல் காப்போம்! சரியாயின் தட்டிக்கொடுப்போம். தவறாயின் சுட்டிக்காட்டுவோம் என்கிறீர்களே. நல்ல விடயம். ஆனால் முதலில் பெரும்பான்மைக்கு மதிப்புக் கொடுத்து நடவுங்கள்.

உங்கள் விருப்பு நிறைவேறாததால் உண்மையைக் கூறமுடியாமல், வலுவில்லாத காரணங்களை உலகுக்குக் கூறி, நாடுகடந்த தமிழீழ அரசை பலவீனப்படுத்தும் நோக்குடன் நீங்கள் செயற்படுவது எந்த விதத்தில் எம் இனத்துக்கு நன்மை தரும் என்பது எமக்கு விளங்கவில்லை.

சிறிய விடயங்களை பெரிதாக்கி, நாடுகடந்த தமிழீழ அரசை அழிக்க முயலும் உங்கள் பரிதாப நிலை கண்டு வெட்கப்படுகிறேன், வேதனையடைகிறேன். நீங்கள் நினைப்பது நடக்கவில்லை என்பதற்காக எம் இனம் பலியிடப் படவேண்டுமா என்பதை எண்ணிப் பாருங்கள்.

உங்களைத் தேர்வு செய்த எம் மக்களைப் பற்றியோ, ஈழத்தில் வாடும் எம் உறவுகளைப் பற்றியோ சிந்திக்காது நீங்கள் இப்படி நடப்பது தவறல்லவா? எம் மக்கள் முட்டாள்களல்ல அரசியலை நன்கறிந்தவர்கள். எம் ஒவ்வொருவரையும் மயிரிடை கூடத் தவறாமல் எடைபோட வல்லவர்கள். நானும் உங்களில் ஒருவன் என்பதை மற்ந்துவிடாதீர்கள். எமது மக்கள் உங்களை வெறுப்பதை நான் ஒருபோதும் விரும்பமாட்டேன்.

கனிவான உள்ளமும், பணிவான குணமும் கொண்ட உருத்திரகுமாரன் தேசியத் தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். நாடுகடந்த தமிழீழ அரசை வழிநடத்தவல்ல அந்த உத்தமரை, திறமைசாலியை நீங்கள் கே. பி யுடன் இணைத்து அவரை கேவவலப்படுத்துவது நீதியும், நியாயமுமற்ற செயலல்லவா? தலைமையை அகற்றி, நாடுகடந்த தமிழீழ அரசைச் செயலிழக்க வைத்தால் அதனால் யார் நன்மை அடைவார்கள் என்பது கூட உங்களுக்கு விளங்கவில்லையா?

தமிழினத்தை அழிக்கக் கங்கணம் கட்டி நிற்கும் சிங்களத் தலைவர்களின் ஒற்றுமையைப் பாருங்கள். அதேவேளை வாழ்வாதாரங்களை எல்லாம் இழந்து அல்லல் படும் எம் உறவுகளின் வாழ்வை ஒர் முறை சிந்தித்துப் பாருங்கள், ஆண்டுக்கணக்காக சிங்களச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எம் உறவுகளை ஒரு தரம் நினைத்துப் பாருங்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டுப் பிரிந்து சென்று தனித்துப் போட்டியிட்ட கஜேந்திரகுமாரின் தோல்வி எமக்குத் தந்த பாடத்தை மறவாதீர்கள்.

வரலாறு படைத்தவர்கள் சண்டாளர்களின் கையில் சிக்கி சிறைகளில் அல்லல் படும்போது, நாட்டை ஆளும் வல்லமை படைத்தவர்கள் நரக வாழ்க்கை வாழும்போது நீங்கள் அணிகளை உருவாக்கி தமிழினத்தைக் கூறு போடுகிறீர்களே. இது சரியென உங்களுக்குப் படுகிறதா?

எம் வீரத்தைக்கண்டு வியந்த உலகம் எமது ஒற்றுமை கண்டும் வியக்கவேண்டும். ஒன்றில் எம் இனத்தின் மானத்தைக் காக்க, அவர்களின் எதிர்காலத்தை வளமாக்க, தேசியத் தலைவரின் இலட்சியத்தை தலைமேல் வரித்துச் செயற்படும் நாடுகடந்த தமிழீழ அரசுடன் இணைந்து செயற்படுங்கள். அல்லது குழப்பம் விளைவிக்காது அவர்களையாவது நிம்மதியாகச் செயற்பட விடுங்கள்.

எமது உற்வுகள் கோரமான சுனாமியால் பாதிக்கப்பட்டு, கொடிய போரை எதிர்கொண்டு, தாங்கொணா வெள்ளத்தால் தாக்கப்பட்டு மூன்று ஜென்மங்களை இந்தத் தலைமுறையில் கடந்தவர்கள். எம் மக்களுக்குப் பிரிவும், வெளிநடப்பும் புதிதுமல்ல, பெரிதுமல்ல. அவர்கள், ஒரு பலமான அரசியல் தளத்தை நாடுகடந்த தமிழீழ அரசுக்கு நிச்சயம் தருவார்கள்.

எம் மக்களின உதவியுடனும் ஒத்தாசையுடனும் இறைமையும், சுதந்திரமும் கொண்ட தனிநாடு விரைவில் மலரும். அந்த வேளை, நீங்கள் பார்வையாளர்களாக அல்லாது அங்கு பங்காளிகளாக இருக்கவேண்டும். இதுவே என் ஆசை.

ஊடகங்கள் உங்களுக்கு சாதகமாக இருந்தால் மட்டும் போதாது. அவர்கள் ஆதரவு தந்தால் பொய் உண்மையாகிவிடுமா? எமது மக்களை எவரலும் ஏமாற்ற முடியாது என்ற உண்மையை டக்ளசும் கருணாவும் உணர்ந்தது போல் நீங்களும் உணரவேண்டுமா? எம் இனத்தின் நன்மை கருதி நாடு கடந்த தமிழீழ அரசைத் தூற்றுவதை நிறுத்துங்கள். அது எதிரிக்குத்தான் நன்மையாக முடியும்.

காலத்தைக் கடத்தாமல், நாடுகடந்த தமிழீழ அரசு பெருந்தன்மையுடன் நீடித்த மூன்று கிழமைக்குள் யாப்பினை ஏற்று, பராளுமன்ற சட்டதிட்டங்களுக்கு அமைய நடப்போம் என்று கையொப்பமிட்டு ஒன்றிணைந்து செயற்படுங்கள்.

யாப்பில், தமிழருக்கு நன்மைதரும் வேறு விடங்களும் சேர்க்கப்பட வேண்டுமாயின் அடுத்த அமர்வில் அதையும் சேர்த்துச் செயற்படுவோம். அதற்கான ஒத்துழைப்பை நான் உங்களுக்குத் தவறாது தருவேன். பாராளுமன்றம் தொடங்கி 50 ஆண்டுகள் சென்றாலும் தேவை வரும்போது யாப்பைத் திருத்துவதும் மாற்றுவதும் வழமையான விடயம்தானே.

எம் இனத்தின் பெயரால் உங்களிடம் அன்பாகக் கேட்கிறேன், தயவாக வேண்டுகிறேன், மன்றாடி நிற்கிறேன் நீங்கள் தவறான பாதையில், தப்பாகச் செயற்படுவது முறையல்ல.

இறைமையும், சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை அமைக்கவல்ல நிலையில் எம்மிடம் உள்ளது நாடுகடந்த தமிழீழ அரசு ஒன்றே. அதையும் அழித்துவிட்டால் அல்லது பலவீனப் படுத்தினால் எம் உறவுகளின் நிலை என்ன என்பதை மீண்டும் ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்.கலாநிதி ராம் சிவலிங்கம்

பிரதிப் பிரதமர் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

email: r.sivalingam@tgte.org

http://inioru.com/?p=20208

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் எத்தனையோ பேர் சிறைகளில் (வெளிநாடுகளில்) இருக்கின்றார்கள். நாடுகடந்த அரசும் தமிழ் ஈழம் நோக்கி வீறுபோட தொடங்கினால் இந்த பொய்ஜனநாயக வாதிகளின் சோடிப்புக்கு ஆளாகி உள்ளே போவார்கள் என்பது எனக்கும் உங்களுக்கும் தெரிந்துதான் நாம் வெளியிலே இருக்கிறோம். சும்மா இருந்தால் கூடபராவியில்லை.............. அதிலும் ஒரு மேன்மைநிலை தேடுவது என்பது அழுக்கினும் அழுக்கு!

நாடுகடந்த அரசிற்கு உழைக்க உங்களால் முடிந்தால் மறுநிமிடமே அதில் சேரலாம்...............

அதைவிடுத்து சேறு பூசிகொண்டே இருப்பது என்பது இலங்கை புலானாய்வே அதை பகுதி நேரமாகத்தான் செய்கிறது. அதை முழுநேர வேலையாக செய்யதால் சிங்களவனிலும் விட தமிழனின் பெரியதொரு எதிரியாகத்தான் இருக்கவேண்டும்!

தங்களைப்போன்றோர் தற்போது எழுதுவதைக்கூட குறைத்துக்கொண்டதும் இதற்கு ஒரு காரணம். :(

நெல்லையன்............

தொண்டாற்றுவது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால் சேறுவாரி வீசுவது (நீங்கள் செய்வது) மிகவும் இலகுவானது அதை இன்னமும் முப்பது வருடம் தொடர்ந்து வெற்றிநடை போடலாம்.

மருதங்கேணி, கிட்டத்தட்ட நீங்கள், நான் சொல்லுவதை, இப்போ சொல்கிறீர்கள்!!!!! ... அண்ணோய் ... முள்ளிவாய்க்கால் முடிந்ததும் புலத்தில் ... பதிவாம், ஈழநாடாம், ஈழமுரசாம், என்றெல்லாம் சேறுகளும் குவிக்கப்பட்டு, சகதிகள் கிளறுப்பட்டு, பவ்வி அள்ளி எறிந்து கொண்டிருக்க எங்கிருந்தனீர்கள்?????????? ... ஓஓஓஓ... சேர்ந்து கொட்டினனீங்கள்,.... துரோகப்பட்டம் கட்டி பறக்க விட்டுக் கொண்டிருந்தனீங்கள்! ... நீங்கள் எல்லாம் கதைக்கிறீர்கள் ... சேறுவாரி வீசுவதை!!!!!!!!!!!!

... நெடியமானின் அதியமான்களும், சேரமான்களும், அகஸ்தியர்களும் ... மல வாந்தி எடுத்துக் கொண்டிருக்க ... இந்த யாழ்தான் அவர்களை நிறுத்தப்பண்ணியது!! ....இன்று ... நாடு கடந்த அரசாங்கம் மீது .... சிங்களத்தின் ஏவலில் குழப்ப செயற்படும் (செய்வதைப் பார்க்க, உந்த தண்டச்சோறுகள் சிங்களத்தின் புலனாய்வுத்துறையாக மாறி விட்டார்களோ என பலருக்கு ஐயம்) ... நெடியமான்களுக்கு உதை விட ஆப்பு வைக்க வழி தெரியவில்லை!!!!!!!!!

Edited by Nellaiyan

சித்தன் உங்களை மாதிரி பலருக்கு இதே கேள்வி இருக்கிறது.

எல்லோருக்குமாக

நியூயோரக்கில் மூன்று நாட்களாக நடந்த அமர்வில் ஒவ்வொரு சரத்தாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டு பின்னர் ஒவ்வொரு சரத்துக்களும் வாக்களிக்கப்பட்டு கூடிய வாக்குகள் பெற்ற பின்னர் தான் சட்டவாக்கம் செய்யப்பட்டது.

அத்தோடு இனிமேலும் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்னும் பட்சத்தில் மீண்டும் நாம் கூடி முடிவுகளை எடுக்கலாம் என்று தான் முடிவெடுத்தார்கள்.

இப்போ என்ன பிரச்சனை என்றால் ஆரம்பத்தில் இருந்தே ஒரு சாரர் இந்த அமைப்பை தமது கட்டுப்பாடுக்குள் கொண்டு வர முழு முயற்சி செய்து முடியாமல் போகவே வேறு வழியில்லாமல் தனி அமைப்புத் தொடங்குகின்றனர்.

உண்மையிலேயே கூடிய அங்கத்தவர்கள் அவர்களுடன் சேர்ந்திருந்தால் அவரகள் பக்கம் நியாயம் இருப்பதாக கூறலாம்.

நியூயோர்க்கில் வாக்களிப்பு நடக்கும் போதே பலர் வெளியில் யாரிடமோ தொடர்பு கொண்டு அவர்கள் வழி நடத்தலில்த் தான் செயல்ப்பட்டுக் கொண்டிருந்தனர்.

இப்போதும் பல இளையவர்களை பின் நின்று யாரோ வழி நடத்துகிறார்கள் போல் உள்ளது.

இலங்கை அரசு செய்த குற்றத்தை இன்னசிற்ரி சனல் 4 போன்ற ஊடகங்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முற்படும் போது அங்கே செலவு செய்ய வேண்டிய நேரத்தை எப்படியெல்லாம் செலவு செய்து மக்களைக் குழப்பிவிடுகிறார்கள்

இதில என்ன பிரச்சினை இருக்கு என்று எனக்கு விழங்க இல்லை, அவர்கள் மக்களால் தேர்ந்து எடுக்க பட்ட பிரதி நிதிகள், வாkகளித்த மக்களுக்கே பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு நாடுகடந்த அரசுக்கு இருக்கும் போது, தமது உறுப்பினர்களின் சந்தேகங்களை களைந்து குறைகளை நிவர்த்தி செய்து அவர்கLaiயும் அரவனைத்து செல்ல வேண்டிய கடப்பாடு நாடுகடந்த அரசுக்கு இருக்கிறது அல்லவா? உங்கள் உறுப்பினர்களுக்கே சரியான விளக்கம் கொடுத்து ஒன்றினைக்க முடியாதவர்கள், எல்லோரையும் எப்படி ஒன்றினைக்க போகிறீர்கள், நீங்கள் ஜனநாயகரீதியில் இயங்கும் அரசுதானே நடத்துகிறீகள், அல்லது ஏதாவது ரகசிய இயக்கம் நடத்துகிறீகளா?

அல்லது யாரும் கேள்வி கேட்கமுடியாது, பதில் சொல்ல மாட்டோம், என்றால் அதையாவது வெளிப்படையாக சொல்லி விடுங்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் .சொந்தக் காசைக் குடுத்து போட்டியிட்டிருந்தால் தான் அதன் வலி தெரியும்.இவர்களுக்கு நாங்களெல்லோ காசு குடுத்து போட்டியிலை நிக்கவச்சனாங்கள்.பிறகு வாக்கும் போட்டநாங்கள்.எங்கையாவது இவருக்கு வாக்குப் போடுங்கோ எண்டு வாக்குச்சாவடியில் கடமையியிருந்த அலுவலகர் சொன்னதைக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?இவை நாங்கள் கண்ட அனுபவம்.வாசலில் உதாரணத்திற்கு என எழுதி இவர்களுக்கு மட்டும் வாக்களியுங்கோ எண்டு எழுத்திலும் ஒட்டியிருந்தது.இதுவெல்லாம் உங்களுக்குத் தெரியாதோ???

நாடுகடந்த அரசாங்கத்திலை வேலை செய்யிறதெண்டால் இனி இவர்களுக்கு சம்பளமும் நாங்கள் தருவமெண்டு எதிர்பார்க்கின்றார்களோ?உங்களால் முடிந்தால் செய்யுங்கோ இல்லாவிட்டால் விலகி மற்றவனை செய்ய விடுங்கோவன்.

தேர்தலில் போட்டி இட்டவர்களுக்கு நீங்கள் காசு கொடுதனீங்களோ? என்ன இது புது கதையா இருக்கும் எழுந்தமானமாக குற்றம் சாட்டாமல் ஆதாரத்துடன் நிரூபிக்கவும், இந்தியாவில எண்டால் வோட்டு போட போர ஆக்கலுக்குதான் பிரியானியும் குவாட்டரும் கொடுப்பார்கள், இங்கு வோட்டும் போட்டு பிரியானிம் குடுத்து காசும் குடுதனிங்களோ? :lol: :lol: :lol:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் .சொந்தக் காசைக் குடுத்து போட்டியிட்டிருந்தால் தான் அதன் வலி தெரியும்.இவர்களுக்கு நாங்களெல்லோ காசு குடுத்து போட்டியிலை நிக்கவச்சனாங்கள்.பிறகு வாக்கும் போட்டநாங்கள்.எங்கையாவது இவருக்கு வாக்குப் போடுங்கோ எண்டு வாக்குச்சாவடியில் கடமையியிருந்த அலுவலகர் சொன்னதைக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?இவை நாங்கள் கண்ட அனுபவம்.வாசலில் உதாரணத்திற்கு என எழுதி இவர்களுக்கு மட்டும் வாக்களியுங்கோ எண்டு எழுத்திலும் ஒட்டியிருந்தது.இதுவெல்லாம் உங்களுக்குத் தெரியாதோ???

நாடுகடந்த அரசாங்கத்திலை வேலை செய்யிறதெண்டால் இனி இவர்களுக்கு சம்பளமும் நாங்கள் தருவமெண்டு எதிர்பார்க்கின்றார்களோ?உங்களால் முடிந்தால் செய்யுங்கோ இல்லாவிட்டால் விலகி மற்றவனை செய்ய விடுங்கோவன்.

... புலத்தில் மக்களின் பணத்தில் வாழும் கூட்டம் ... "தண்டச்சோறுகள்" ..... எங்கெல்லாம், எதற்கெல்லாம், எப்படியெல்லாம் ... இவர்களால் விரயமாக்கபடுகின்றனவோ ... அவை, இவர்களின் சொந்தப் பணங்கள் அல்ல, அது தமிழ்த்தேசியத்துக்கு புலம்பெயர் மக்களால் அள்ளிக்கொடுக்கப்பட்டவைகளே ... என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்!!! ... நன்றிகள்!!!

Edited by Nellaiyan

இவர்களது தேர்தல் நடந்த அன்று ஒருத்தரையும் காணவில்லை,விஜேயின் குருவிக்கு பெரிய லைன் நிற்கின்றது என உண்மையயை எழுதி வாங்கிக்கட்டிக்கொண்டது இன்னமும் ஞாபகம்.

மற்றநாடுகளில் எனக்கு தெரியாது கனடாவில் இதில் இருப்பவர்களை பார்த்தால் தமிழ்நாடு திறம்.ஆ.ராசா எந்தமூலைக்கு?

உருத்திரகுமாருக்குப் பின்னால் மறைந்திருக்கும் மனிதர்கள்.

வானத்தில் இருந்து குதித்த மனிதர்கள் அல்ல நெல்லையான்.

2002 இற்கு முன்பு புலம் பெயர் தேசத்தில் வாழும் எம்மை ஆட்சி செய்தவர்கள்தான்.

கொடுப்பனவில் கொடிகட்டிப்பறந்தவர்கள்தான்

மீண்டும் எம்மை ஆட்சி செய்யத்துடிக்கின்றார்கள்.

உருத்திரகுமார் ஒரு கருவி.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உண்மையை பலர் உணர்வதாகத் தெரியவில்லை. நாங்கள் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய போராட்டம்.. சிறீலங்காவிலோ அல்லது அதற்கு வெளியிலோ ஜனநாயக அரசியல் செய்வதற்காகவல்ல. நாம் போராடியது எமது பூர்வீக மண்ணில் இழந்த வாழ்வுரிமையை, எம்மை நாமே ஆளும் உரிமையை மீட்பதற்காகத்தான்.

நாடு கடந்த தமிழீழ அரசு ஜனநாயகம் கற்பிக்க உருவாக்கப்பட்டதல்ல. ஜனநாயக உச்சரிப்பை முன் வைத்து உலகை ஏமாற்றி ஏகாதபத்திய அரசியலை தான் அமெரிக்கா உட்பட பல நாடுகள் செய்து வருகின்றன. அந்த ஜனநாயக உச்சரிப்பை காத்துக் கொள்ள அவர்களின் ஆயுத தொழில்நுட்ப பலம் அவர்களுக்கு உதவி நிற்கிறது. உலகில் எத்தனை சதவீதம் மக்கள் உண்மையில் ஜனநாயகம்.. தேர்தல்.. வாக்குச் சீட்டு இவற்றை நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றால்.. அது மிகவும் திடுக்கிடும் அளவிலேயே இருக்கும். அப்படிப்பட்ட ஜனநாயகத்தை பலப்படுத்தவதற்காகவல்ல.. எமது மாவீரர்கள் மக்கள்... உயிர்விட்டுள்ளார்கள். நாடு கடந்த தமிழீழ அரசும் அதற்காக அல்ல உருவாகியுள்ளது.

நாம் 1972 இல் ஆயுதம் தூக்கிய போதும் சிறீலங்காவில் தேர்தல் ஜனநாயகம் இருந்தது. இன்றும் இருக்கிறது. அந்த ஜனநாயகம் இத்தனை ஆண்டு கால இடைவெளியில் செய்த அத்தனை கொடுமைகளும்.. மறைக்கப்பட்டு விடுதலைப் போராட்டம் மட்டும் பயங்கரவாதமாகக் காட்டப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது.. அல்லது ஒடுக்கப்பட்டிருக்கிறது. அதைச் செய்ததும் ஜனநாயக உலகம் தான்.

இன்று எமது தெரிவு எம்மை அழித்த ஜனநாயக உலகை பாதுகாத்து நிற்பதல்ல. ஜனநாயக உச்சரிப்போடு எமது விடுதலைக்கான சாத்தியப்பாட்டை உறுதி செய்து கொள்வது தான்.

அந்த வகையில் ஜனநாயகத்தை நிலைநாட்டிறம் என்ற கோதாவில்.. அமைந்த பேச்சுக்கள் எமக்கு அவசியமில்லை. முரண்பாடுகளுக்கான காரணங்கள் இருந்தால் அதை சம்பந்தப்படவர்களோடு பேசி தீர்த்துக் கொண்டு எமக்குள்ள ஒரு சில தெரிவுகளை பலப்படுத்தி நின்று தேச விடுதலையை போராட்டத்தை பயங்கரவாத முலாமில் இருந்து விடுவித்து.. இந்தப் பூமிப் பந்தில் நாம் தமிழர்கள் நிம்மதியாக.. நாம் விரும்பும் வடிவில் வாழ வழிசமைப்பதே இன்றைய எமது இலக்கு. இதற்காகத்தான் மாவீரர்களும் மக்களும் உயிர் திறந்தனரே தவிர... இத்தனை அழிவுகளை தாங்கி நின்றனரே தவிர.. ஜனநாயகத்தை பலப்படுத்த எமக்கு எந்தத் தேவையும் கிடையாது. ஜனநாயக உலகை நம்ப வேண்டும் என்ற கட்டாயமும் எமக்கு இல்லை.

ஆனால் ஆயுத இராணுவ பொருண்மிய பலம் மிக்க ஜனநாயக உலகின் போக்கோடு சென்று தான் எமது விடுதலையை சாத்தியமாக்க வேண்டும் என்பதால் தான் இந்த நாடு கடந்த முயற்சியும் கூட. அதற்காகத்தான் அங்கு தேர்தல்களும் தெரிவுகளும். அதற்குள் மாற்று அணி.. ஜனநாயகம் செய்யுறம் என்ற போர்வையில்.. பிரச்சனைகளை உருவாக்குவதை தவிர்த்து.. மக்களின் மனம் அறிந்து செயற்பட முனையுங்கள். தாயக நிகழ்வுகளை ஒரு கணம் மனதில் எண்ணி செயற்பட முனையுங்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஜனநாயக சண்டை பிடிக்கும் கட்சித்தளம் அல்ல. நாடு கடந்த தமிழீழ அரசு என்பது.. எமது விடுதலைப் போராட்டத்திற்கான ஜனநாயக உலகை திருப்திப்படுத்தும் வடிவம். அப்படி என்றுதான் மக்கள் நம்பி இருக்கிறார்கள். அதை சிதைக்காதீர்கள்.. எவராக இருந்தாலும் சரி.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பிரிந்து நின்று குரல் கொடுப்பவர்கள் பாரளுமன்றத்துக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள்.அங்கு நின்று தமது ஆதங்கங்களை விவாதிக்கலாம்.எதிராக வாக்களிக்கலாம். சரியான முறையில் வழி நடாத்த உதவி இருக்கலாம். இப்படி வெளியில் வந்து ஊடகங்களில் கூக்குரல் இடுவதன் மூலம் எதனை தமிழ் மக்களூக்காக சாதிக்க முற்படுகிறார்கள்?? உண்மையில் குழப்ப முற்படுகிறார்கள் என்பது போல் தான் உள்ளது.

மேற்படி குழு திருச்செல்வம் (கனடா) தலைமையில் இயங்குவதாக அறிகிறேன்.ஏன் அவர் தனது நிலைப்பாட்டை மக்கள் முன் தெரிவிக்காமல் இப்படி சிறியவர்களை ஏவி விட்டு பின்னால் கூத்து பார்க்கிறார் என விளங்கவில்லை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.