Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மதிப்புக்குரிய திருவாளர்களின் தரிசனம் கிடைத்த பொழுது

Featured Replies

சூரியன் மறையாத தேசம் என்று ஒருகாலத்தில் சொல்லப்பட்ட நாட்டுக்கு வந்து கொஞ்சகாலம் தான் ஆகிறது . இதற்க்கு முன்பு ஜரோப்பாவில் ஒரு நாட்டில் ஒரு குக் கிராமத்தில் நீண்ட காலம் நாட்களை கடத்தி துரத்தி ஏனோ தானோ வாழ்ந்து கொண்டிருந்தேன்.இந்த லண்டனில் செட்டில் ஆக வேண்டும் என்ற எனது குடும்பத்தினரின் நச்சரிப்பு காரணமாக ஆங்கில கால்வாயை கடந்து வந்த காலம் . அங்கை இடது இங்கை வலது கார்கள் ஓட்டும் முறை மட்டுமல்ல செல்லும் பாதை வழி முறைகளிலும்...பாதையை கடப்பது கூட மிகவும் கடின முயற்ச்சி எடுத்து தான் கடக்க வேண்டும். றோட்டில் எழுதி இருக்கும் வலது பக்கம் பார்த்து கடக்கவும் என்ற வாசகத்தை பார்த்து கடக்க வேண்டிய காலம். அந்த காலம் எப்பவென்றால் பன்னிரண்டு பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர்.

இந்த நாட்டு சூழ்நிலைக்கு உடனடியாக மாற முடியாமால் திண்டாடி கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள் , வெளியில் உலாவ சென்றேன் உடல் ஆரோக்கியத்துக்கு மன்றி மன ஆரோக்கியத்துக்கு நல்லது என்று கூறிக்கொண்டு .ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல இந்த திருவாளர்களை எங்கையாவது சந்தித்தால் எப்படி இருப்பார்கள் என்று பார்ப்பம் என்று,

. பொழுது போகாமால் இருந்த படியால் பொழுது போக்க அன்று முதல் நாள் இரவு ஒரு வீடியோ கசட்டை போட்டு பார்த்ததிலிருந்து அவர்களை பார்க்க வேணும் என்ற விபரீத ஆசை ஏற்பட்டு இருந்தது ,அது ஏன் ஏற்ப்பட்டது என்று நினைத்து எனக்கே சங்கடமாயிருந்தது. லண்டனில் பார்க்க எவ்வளவு விசயங்கள் இருக்கும் போது அதை விட்டுட்டு இதை என்று.

சரத்குமார் ராதிகா விவேக் மற்றும் தென்னிந்திய கலைஞர்கள் பங்கு பற்றிய நிகழ்ச்சி அந்த வீடியோவில் .அந்த நிகழ்ச்சி லண்டனில் உள்ள பிரபலமான வெம்பிளி ஸ்டேடியத்திலுள்ள மண்டபத்தில் நடைபெற்றது.அந்த நிகழ்ச்சியில் இடையிடையே வந்து விவேக் விதூசகனாக வந்து சிரிப்பூட்ட முயற்சி செய்து விட்டு போவார் . சிரிக்க தெரியாத இளைஞர்களோ அல்லது மற்றவர்களை எப்பவும் குழப்பத்தில் ஆழ்த்துவதில் சந்தோசமடையும் சில இளைஞர்களோ தெரியவில்லை

கூக்குரல் போட்டு குழ்ப்பி கொண்டே இருந்தார்கள். ஆனால் இந்த நடிகர் விவேக் இந்த நிகழ்ச்சிக்கு வரும் முன்பே இவர்களை பற்றி விபரம் சேகரித்து விட்டார் போலும். வெம்பிளி ஓகேயா , ஹரோ ஓகேயா ஈஸ்ட்ஹாம் ஓகேயா, மற்றும் வேறும் சிலவற்றைக் கூறி அவர்களை குளிர்ச்சீயூட்டி மகிழ்வூட்டி சாந்தப் படுத்தி கொண்டிருந்தார் .விவேக் இந்த நாட்டிற்க்கு வந்து இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து மதித்து போற்றியது யாரை என்று நினைக்கிறீர்கள் ? அவர்கள் தான் லண்டன் வாழ் திருவாளர் தமிழ் இளைஞர் கோஸ்டியினர்.

விவேக் கூறிய ஓகேயா ஓகேயா என்றது லண்டனிலுள்ள இடங்களின் பெயர்கள் என்றாலும் அவை அந்த இளைஞர்கள் கோஸ்டியினர்களுக்கு உரித்தான பெயர்கள். இந்த நாட்டில் முடியாட்சி முறை முற்றும் இல்லாமால் போகவில்லை உணர்த்துவதுக்காவோ என்னவோ தெரியவில்லை. அவர்கள் லண்டனிலுள்ள மேற்கூறிய ஊர்களில் எல்லைகளை வகுத்து சேர சோழ பாண்டியர்களாக அரசோட்சி கொண்டிருந்தார்கள்.அவ்வளவுக்கு அவர்களின் ஆதிக்கம் நிலவி வந்தது .அரசோட்சுபோது படைகள் வேண்டாமா ? ஒவ்வொரு குழுவும் எவ்வளவுத்துக்கு தங்கள் குழுக்கு ஆட்களை சேர்க்க முடியுமோ அவ்வளவு இளைஞர்கள் இளைஞிகளை சேர்த்தார்கள் .படைகள் இருந்தால் மட்டும் போதுமா ஆயுதங்கள் வேண்டாமா ?வைத்திருந்தார்கள் அவர்களுக்கு இந்த நவீன ஆயுதங்களில் நம்பிக்கையுமில்லை விரும்பமில்லையும் போலும் .கத்தி அரிவாள் கோடாரி போன்ற பாரம்பரிய ஆயுதங்களை அதிகம் கைவசம் வைத்திருந்தார்கள்

அரசர்கள் மாதிரி இருந்தால் போதுமா? அதை மாதிரியான அல்லது ஒத்த தன்மையான அணிகலன்கள் அணிய வேண்டாமா?..அணிந்திருந்தார்கள் காதிலை மூக்கிலை வாயிலை உடையிலை எல்லாத்திலையும் வித்தியாசம் காட்டி கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு குழுவுக்கு இடையில் இந்த விசயத்தில் கூட குறைய என போட்டி இருப்பதால் காலத்து காலம் வித்தியாசமாக தோற்றமளித்து கொண்டிருந்தார்கள். இளைஞர் கோஸ்டியினரின் அங்கம் வகிக்கும் தனி உறுப்பினர் எதோ விசயத்துக்காக எல்லையை தாண்டி வந்து மற்றவர்களிடம் மாட்டுப் பட்டால் ஒற்றனோ என ஜயப்பட்டு படுமோசமாக நையபுடையப் படுவார்கள்

.இவர்களின் குழுவில் சேருவதுக்காகவே நன்கு படித்த இளைஞர்கள் கூட படிப்பை நிற்ப்பாட்டிய சம்பவம் கூட நடந்து இருக்கிறது .பெரியவர்கள் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று எல்லா வகைப்பட்டவரும் இவர்களைக் கண்டால் மூக்கை பொத்தி வாயை மூடி பவ்வியமாக நடக்க வேண்டி இருந்தார்கள். காளை அடக்குபவன் தான் வீரன் அவனில் தான் பெண்கள் விருப்ப படுவார்கள் என தமிழ் சமூகத்தில் ஒரு காலம் இருந்ததாம். லண்டன் வாழ் டீன் ஏஜ் பெண்களும் எந்த இளைஞர் கோஸ்டியினர் மிகவும் வலுவாக இருக்குதோ அதில் மயங்குபவர்களாக இருந்திருக்கிறார்கள் .இதன் மூலம் கல்வி செல்வம் வீரம் எது சிறந்தது என்றதுக்கு லண்டன் வாழ் இளைஞிகள் சிலர் வீரம் என்ற விடையை செலுத்தி கொண்டிருந்தார்கள்.

இந்த திருவாளர்களின் மகோன்மியத்தை காதுவெளி செவ்வியாக கேள்விபட்டதுவே நான் மேற்கூறியவை ,,அந்த சூப்பர் மார்க்கட்டுக்கு செல்ல அந்த நகரத்திலுள்ள உள்ளூராட்சி சபையால் பேணப்படும் அந்த பார்க்கை பாவிப்பது வழக்கம் .அந்த சன வாகன நெருக்கடி மிகுந்த நகரத்தில் அந்த பார்க்கில் மட்டும் இருக்கும் அந்த தனிமை அந்த ஏகாந்தம் எனக்கு ரம்மியமாக இருக்கும் அந்த பார்க்கோடு சேர்த்து தான் சவக்காலையை வைத்திருக்கிறார்கள் ஏனோ தெரியவில்லை .தூரத்தில் சிறுவர்கள் கோடைக்கால சந்தோசத்தை அனுபவித்து கால் பந்து விளையாடி கொண்டிருக்கிறார்கள் .பார்க்கில் ஒரு சில வயோதிப தம்பதிகள் இருக்கும் சில காலங்களை ஒவ்வொரு கணமாக உலகை ரசித்து கொண்டு இருந்தனர்.பார்க்கை கடந்து அந்த மூலைக்கடையில் பியரை வேண்டிக்கொண்டு அதே பார்க் இட பரப்பூடாக திருப்பி கொண்டிருந்தேன் ,இப்பொழுது பார்க்கின் காட்சியோட்டமே மாறி இருந்தது .அநேகர் இப்ப அங்கங்கே குழுமி இருந்தனர் .

புலம் பெயர்ந்த பின்னர் விஸ்கி பிராண்டி வோட்கா எல்லா வகைகளையும் ஒரு அளவுக்கு மேல் பதம் பார்த்திருக்கிறேன் இப்ப உடலும் வீட்டு சூழ்நிலையும் இடம் கொடுக்காதாதால் கொஞ்சம் காலமாக பியரில் இறங்கி வந்த நிலமை . நாங்கள் விஸ்கி பிராண்டி முழுசாக குடிப்பதை பார்த்து ஒரு வெளிநாட்டு வெள்ளைக்காரனே ஒரு தரம் கூறியது ஞாபகம் .இந்த சிறிலங்காகாரனைப் போல இப்படி முழுசா விஸ்கி குடிக்கிறவனை உலகத்திலை ஒருதரையும் பார்க்கவில்லையென்று. பியர் மட்டுமே குடிக்கிற ஆள் என்று என்னை சீப்பாக நீங்கள் நினைக்க கூடாது என்றதுக்கு தான் மேல் கூறிய எனது மகோன்மியம் .

ரம்மியமாக வீசும் இந்த காற்றை அனுபவித்துக்கொண்டு இந்த பியரையும் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து குடிப்பம் என்று ஒரு மரத்துக்கு கீழுள்ள ஒரு தனி இருக்கையில் அமர்ந்து இருந்தேன்,இருக்கையோடு அண்மித்து மூன்று பக்கம் மூடி ஒரு பக்கம் திறந்த இருக்கைகள் அமைந்த கட்டிடம் இருந்தது, நான் இருக்கும் இடத்தில் இருந்து பார்த்தால் அங்கால் பக்கத்தில் நடப்பது தெரியாது .ஆனால் சில தமிழும் ஆங்கிலமும் கலந்த குரல்கள் கேட்க தொடங்கின. அந்த குரல்களின் வகைகள் அதிகாரம், குழைவு, நமுட்டு சிரிப்பு, நளினம், நக்கல் எல்லாம் கலந்தனவையாக இருந்தன.அந்த குரல்கள் ஆண்களினதும் பெண்களினதும் உடையதாகவும் இருந்தது, நான் பார்க்கவேண்டும் ஆவலோடு இருந்த மதிப்புக்குரிய திருவாளர்களோ என்ற ஜயமும் சந்தோசமும் ஏற்பட்டது.

ஜெர்மன் ஊடகவியளார் ஒருவர் ஜெர்மனில் வாழும் கறுப்பினத்தவர்களின் வாழ்க்கை முறையை அறிவதற்க்கு தன்னை கறுப்பு இனத்தவன் மாதிரி உருமாற்றி அவர்களோடு இணந்து தகவல்களை அறிந்திருந்தார் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள் . நானும் சிலவேளை இந்த இளைஞர் கோஸ்டியில் சேர்ந்து இவர்களின் மகோன்மியத்தை அறிய வேணுமெண்டும் ஆசைப்பட்டதுண்டு, இந்த எனது மனசு இருக்கே நடைமுறைக்கு உதவாத விசயத்தையும் சில வேளை கற்பனை செய்வதுண்டு .இளைஞனை கடந்து இப்ப் இருக்கும் எனது நடுத்தரவயது தோற்றம் பொருத்தமாயிருக்காது என்று எனது மனசுக்கு சொல்லி சமாதானம் சொல்லிய காலங்களுமுண்டு.

இப்படி எனது மதிப்புக்குரிய திருவாளர்களுக்கு மிகவும் அண்மையில் நிற்கிறேன் என்று உணரும் போது புளகாங்கிதமாக இருந்தது.இருக்கும் இடத்தில் இருந்து அவர்களை பார்க்க முடியாமால் இருந்தாலும் அவர்கள் என்ன கதைக்கிறார்கள் என்று அறிய எனது காதை நீட்டினேன் .அவர்கள் ஆங்கிலத்தை தவிர்த்து பேசும் தமிழ் வார்த்தைகள் சாதாரணமாக மக்கள் பாவிக்காதவை .ஆனால் நடிகர் வடிவேலு அறிமுக படுத்தும் வசனங்கள் மாதிரி அவர்கள் பயன் படுத்தும் சொற்றொடர்கள் ரசிக்க கூடியதாகவும் இருந்தது. இப்படி புதிய தமிழ் சொற்களை எல்லாம் அறிமுகபடுத்தி இந்த தமிழ் மொழியை செழுமை படுத்தும் இந்த திருவாளர்களை தரிசித்து செல்வதென்றே முடிவு கட்டி விட்டேன். எழுந்து பார்ப்போம் என்று ஒரு கணம் யோசிப்பேன் மறுகணம் இருந்து விடுவேன் அது நாகரிகமில்லை என.

தீடிரென பேசி கொண்டிருந்தவர்களிடையே தீடிரென ஒரு அமைதி பின் ஓர் இரு வார்த்தைகள் அதில் மாமா நிற்கிறார் . தமிழ் மூன்று எழுத்து ஒன்று அங்காலை நிற்குது போலை என்று வார்த்தைகள் அடிபட்டன.இன்னொரு குரல் ஒன்று கேட்டது இப்ப இங்கத்தை பொலிசிலை-தமிழ் ஆக்களும் இருக்கினம் எங்களை பலோ பண்ண ,அவனோ தெரியாது அங்காலை இருக்கிறது என

ஒரு அதிகார குரல் விம்பி வெடித்தது யாரது பார்ப்பம் தூக்கத்தான் இருக்கு; .தூக்கிறது எல்லாம் இயக்க காலத்திலை உருவான சொற்கள் எனக்கு பழக்கமான சொற்களும் கூட. .ஆனால் என்னை பற்றித்தான் பேசுகிறார்கள் என இந்த ரூயூப் லைட்டுக்கு ஒரு கணம் பிந்தி தான் விளங்கியது .அந்த கணம் முடிவதற்க்குள் திருவாளர் கோஸ்டி தலைவர் தீடிரென்று என் முன்னே காட்சியளித்தார்.நான் கேள்விபட்டு மனம் கண்ணால் உருவகபடுத்தி வைத்திருந்ததிலும் பார்க்க மிகவும் கம்பீரமாகத் தான் இருந்தார் .குரலில் மிகவும் கடுமை இருந்தது ,பியர் அடிக்கிற சாட்டிலை எங்களை பலோ பண்ணிறீரோ ,நீர் மாமாவோ மூன்று எழுத்தோ யாராக இருந்தாலும் பரவாயில்லை .எங்களை ஒன்றும் செய்ய இயலாது ஏன் என்றால் இந்த நாட்டில் பிறந்தவர்கள் .வேணுமெண்டால் மாமி வீட்டுக்கொண்டு போய் மூன்று நாள் அல்லது மூன்று மாதம் வைத்திருந்தீர்களில்லை என்று சொல்லி கெக்கரித்து சிரித்தான்..

அட பாவி உங்களை தரிசிக்க இவ்வளவு நாள் துடித்த என்னை மூன்று எழுத்து என்று சந்தேகிக்கலாமோ எனது மனது துடித்தது.இப்பொழுது அந்த மற்ற இளைஞர் இளைஞிகள் முற்றும் முழுதுமோ சூழ்ந்து கொண்டார்கள் .மாறி மாறி கேள்விகள் அதற்க்கு எனது அப்பாவித்தனமான பதில்கள் ..இடை இடையே டெலிபோன் அழைப்புகளை மேற் கொள்ளுகிறார்கள் டெலிபோன் அழைப்பை ஏற்று கொள்ளுகிறார்கள் . என்னை என்ன செய்யவேண்டும் என்பதை முடிவு கட்ட மத்திய குழுவோடையோ தலமைபீடத்துடனோ கதைக்கிறார்களோ என ஜயம் ஏற்பட்டது.என்னை அசைய வேண்டாம் உதிலை இரும் என்று கூறி மூன்று பேரை என்னை சுற்றி காக்க வைத்து விட்டு தூரத்தில் நீண்ட விவாதம் செய்து கொண்டிருந்தனர் . முடிவெடுத்திட்டினம் போலை ஒருத்தி எனது அருகில் வந்து ஜயா உங்களை பார்த்தால் அப்பாவி மாதிரி தான் இருக்கு. உங்களுக்கு ஒன்று செய்யவில்லை உங்களை விடுறம் என்று. சொல்லிப்போட்டு ஒரு கண்டிசன் என்றாள் ..நாங்கள் இப்ப இந்த இடத்தை விட்டு போறம் அரை மணித்தியாலத்துக்கு நீங்கள் இந்த இடத்தை விட்டு அசையக் கூடாது கை தொலைபேசி பாவிக்க கூடாது..நீங்கள் இந்த கண்டிசனை மீறுகீர்களோ என ஒரு ஆள் உங்களை தூரத்திலே இருந்து பார்த்து கொண்டிருப்பார் என்று.

எனக்கு அடித்த பியரால் ஏற்படும் உற்சாகம் தீடிரென இறங்கி விட்டது .அந்த அரைமணித்தியாலத்தில் அங்கேயே இருந்து மீண்டும் ஒரு பியர் குடிக்க சந்தர்ப்பம் தந்த திருவாளர்களுக்கு நன்றி சொல்லி கொண்டேன்

இவர்களின் தரிசனம் அருள் கிடைத்த பிறகு இவர்களை பற்றிய பயம் அவ்வளவு இல்லை..ஆனால் இவர்களின் வீர பிரதாபங்கள் அட்டாகசங்கள் அயோக்கியதனங்கள் பற்றி தமிழ் வட்டாரங்களை தாண்டி ஆங்கில ஊடகங்களும் பேச தொடங்கி இருந்தன

லண்டன் பொலிஸ் குற்ற தடுப்பு ஆணையாளர் ஒரு அறிக்கை விட்டார் இந்த இளைஞர் கோஸ்டி பற்றி இந்த நாட்டில் பிறந்தவர்களாயும் இருந்தாலும் இந்த நாட்டு குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும் இவர்கள் தொடர்ந்து இந்த சமூக சீரழிவை செய்வார்களாயிருந்தால் இவர்களை சிறிலங்காவுக்கு எவ்வித தயக்கமின்றி நாங்கள் நாடு கடத்துவோம்

இந்த ஒற்றை அறிக்கை இவ்வளவு பவுர் புல் ஆக இருக்கும் என்று நான் அப்பொழுது நினைக்கவில்லை .இந்த அறிக்கைக்கு பின்னர் இந்த திருவாளர்கள் முடி துறந்து நாடு துறந்து வனவாசம் போவார்கள் என்று . இந்த திருவாளர்கள் இப்ப கூட்டமாக காண கிடைப்பதில்லை ...இவர்களின் அட்டாகசமும் குறைந்த சந்தோசம் லண்டன் வாழ் மக்களிடையே..

அன்றைக்கு ஒரு நாள் என்னை விசாரித்த குழு தலைவர் சிங்களாய் சென்று கொண்டிருந்தார் ,சிங்கமாய் இல்லை .என்னை கண்டவுடன் கூனி குறுகிக் கொண்டு

http://sinnakuddy.blogspot.com/2011/03/blog-post_21.html

\

Edited by sinnakuddy

  • கருத்துக்கள உறவுகள்

சற்று முந்திய காலத்துக் கான பதிவு ...........பகிர்வுக்கு நன்றி .

  • தொடங்கியவர்

சற்று முந்திய காலத்துக் கான பதிவு ...........பகிர்வுக்கு நன்றி .

நன்றி நிலாமதி

ஹி ஹி...

என்னங்க இப்படி வெருட்டீறீங்க. :lol: .மதிப்புக்குரிய திருவாளர்களிலும் பார்க்க

இந்த திருவாளர்கள் தெருவாளர்களாக மாறி கனகாலம். சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்பத்தொடங்கியவுடன் மன்னவர்கள் சின்னவர்களாக மாறி விட்டார்கள்.

அன்றைக்கு ஒரு நாள் என்னை விசாரித்த குழு தலைவர் சிங்களாய் சென்று கொண்டிருந்தார் ,சிங்கமாய் இல்லை .என்னை கண்டவுடன் கூனி குறுகிக் கொண்டு

\

சிங்கம் சிங்கிளாய் போன காரணம் இல்லாளின் தொல்லை தாங்காமல் ஏதும் பச்சை மிளகாய், வெங்காயம் வாங்க கடைக்கு சென்றிருப்பார். வசதியான பெண்ணின் பெற்றோர்களை வெருட்டி கலியாணம் கட்டி, பின் நிஜ வாழ்க்கையை தரிசிக்கும் பொழுது இவர்கள் வெறும் காத்துப் போன பலூனாக ஆகிவிடுகிறார்கள். சிலரைக் கண்டிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹி ஹி கனடாவிலும் இப்படித்தான் கனடிய பொலிஸ் ஆப்பு வைத்தவர்கள்.கொஞ்சப்பேரை பிடித்து அனுப்பியதாகவும் அறிந்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையில் யாழ் போய்விட்டு வந்த ஒரு நண்பன் ஒருவனுடன் பலதும் பத்தும் கதைதித்துப்போட்டு, யாழில் உள்ள திருவளர்களை பற்றியும் கதைத்தோம் - நான் ஒரு ஒபாமா மாதிரியும் அவர் ஒரு காப்பர் மாதிரியும் - என்ன ஒரு நம்பிக்கை இங்கே இப்படி கூத்தாடின கோஸ்டிகள் போல ஒரு கட்டத்தில அங்கேயும் மீண்டு வரலாம் என..ஆனால் ஒரு ஒரு விடயம் அவர்களை கட்டுப்படுத்த ஒரு அலகும் யாழில் இல்லாமையே, அந்த நினைப்பை அல்லது ஆசையை ஒரு நிராசையோ என எண்ண தோன்றுகிறது. உதே மாதிரி திருவாளர் கூட்டம் கனடாவிலும் இருந்தது..ஒருநாளில் 100 அல்லது 200 திருப்பி அனுப்பினவர்கலாம் அதோடோ எல்லாம் கப்சிப் ஆனது..அதே போல யாழ்ப்பாணத்திலும் திவாளராக இருக்கிறவையை என்கேயன் தண்ணி இல்லாத காட்டுக்கு அனுப்பினால் சுகம்வரும். துரதிச்வசமாக யாரும் செய்யப்போவதில்லை....

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த திருவாளர்கள் தெருவாளர்களாக மாறி கனகாலம். சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்பத்தொடங்கியவுடன் மன்னவர்கள் சின்னவர்களாக மாறி விட்டார்கள்.

சிங்கம் சிங்கிளாய் போன காரணம் இல்லாளின் தொல்லை தாங்காமல் ஏதும் பச்சை மிளகாய், வெங்காயம் வாங்க கடைக்கு சென்றிருப்பார். வசதியான பெண்ணின் பெற்றோர்களை வெருட்டி கலியாணம் கட்டி, பின் நிஜ வாழ்க்கையை தரிசிக்கும் பொழுது இவர்கள் வெறும் காத்துப் போன பலூனாக ஆகிவிடுகிறார்கள். சிலரைக் கண்டிருக்கிறேன்.

நம்மட சினேகிதர் ஒருத்தரைக் கண்டிருக்கிறியள் போல. ஒரு நாள் முந்தி செய்த "சேட்டை சுடுதா"க்களைப் பெருமையாச் சொல்லிப் போட்டு, இப்ப மனிசி, பிள்ளையள் என்று போனாப் பிறகு அடங்கிப் போனதுக்காக விக்கி விக்கி அழுதான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.