Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா வரும் என புலிகளை நம்பவைத்த மர்ம நபர்: வழுதி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா வரும் என புலிகளை நம்பவைத்த மர்ம நபர்: வழுதி.

இறுதிக்கட்டப் போரின்போது அமெரிக்க கப்பல் ஒன்றுவந்து, மக்களையும் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களையும் காப்பாற்றும் என புலிகள் நம்பியது உண்மை. ஆனால் அப்படி ஒரு கப்பல் வரவில்லை, அவ்வாறு புலிகளுக்குச் சொல்லியது யார் என்று தெரியாத ஒரு நிலை கடந்த 20 மாதங்களாக நீடித்துள்ளது. ஆனால் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. புதினம் இணையத்தில் கட்டுரைகள் எழுதி, அதனூடாக தமிழ் மக்களுக்கு நன்கு பரீட்சையமான வழுதி எனப்படும் பரந்தாமே ஆவார். இவரே புலிகளின் அரசியல் தலைவர்களிடம், அமெரிக்காவின் கப்பல் அல்லது, உலங்குவானூர்தி ஒன்று வர இருப்பதாகச் சொல்லி புலிகளை நம்பவைத்தவர் ஆவார்.

மேலும் வழுதி தனக்கு அமெரிக்க பேராசிரியர் ஜேம்ஸ் கிளாட்டின் (Prof. James Clad) சிந்தனை மையத்துடன் (think tank) மிகவும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகத் தெரிவித்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆசிய, பசுபிக் பிராந்தியத்தின் அமெரிக்க பாதுகாப்புத் துணைச் செயலராகப் பணியாற்றியுள்ள பேராசிரியர் ஜேம்ஸ் கிளாட் (Prof. James Clad), சிறீலங்கா அரசாங்கத்தின் நெருங்கிய நண்பன் என த நியூயோர்க்கர் (The New Yorker) பத்திரிகையின் ஊடகவியலாளர் ஜொன் லீ அன்டெர்சனால் (Jon Lee Anderson) வர்ணிக்கப்பட்டிருந்தவர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

2009ஆம் ஆண்டு மே 16ஆம் நாள் இரவு நோர்வேயிலுள்ள பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரைத் தொடர்புகொண்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், அமெரிக்க கப்பல் வருவதாகக் கூறப்படும் செய்தியை உறுதிப்படுத்தித் தருமாறு கேட்டிருக்கின்றார். குறிப்பிட்ட பேராசிரியர் கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்தின் துணைத் தூதுவரை நள்ளிரவு நேரத்தில் தொடர்புகொண்டு வினவியபோது, துணைத் தூதுவர் இது ஒரு முக்கியமான பிரச்சனை என்பதால் பின்னர் தூதுவரைத் தட்டி எழுப்பி, அவர் ஊடாக அமெரிக்காவின் மத்திய-தெற்காசிய விவகாரங்களுக்கு துணைச் செயலரும், முன்னாள் சிறீலங்கா தூதுவருமான றொபேட் ஓ பிளேக்கை (றொபெர்ட் Bலகெ) தொடர்புகொண்டு கேட்டபோது அவ்வாறான ஒழுங்குகள் எதுவும் இல்லை என றொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணையின் முக்கிய அங்கமான வெள்ளைக்கொடி விவகாரத்திற்கு முக்கிய சாட்சியாக விளங்கும் இந்த ஊடகவியலாளர் மட்டுமன்றி, ஐரோப்பிய நாடுகளிலுள்ள வேறு சிலரும் அமெரிக்காவில் இருந்த வழுதியால் சொல்லப்பட்ட கப்பல் கதைக்கு சாட்சியாக இருப்பதாக நம்பபப்படுகின்றது. அமெரிக்காவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்களையும் தான் பார்வையுற்றிருப்பதாக குறிப்பிட்ட மூத்த ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். போர்க்குற்ற விசாரணை அனைத்துல ரீதியாக சுயாதீனமாக நடத்தப்பட வேண்டும் என புலம்பெயர்ந்த மக்களால் வலியுறுத்தப்பட்டுவரும் பின்புலத்தில், அதனைத் தடுக்கும் முயற்சிகளில் இறுதிக்கட்டப் போரின்போது மேற்குல நாடுகளில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு பொய்வாக்குறுதி வழங்கிய பலர் முனைந்து வருகின்றனர் என்பதே அப்பட்டமான உண்மையாகும்.

இதேவேளை, றொபேட் ஒ பிளேக் சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் சொந்த இடமான ஹம்பாந்தோட்டைக்கு குடும்பத்துடன் சென்று விருந்திரனராகத் தங்கியிருந்தார் என்பதை எவரும் மறந்துவிட முடியாது. பான் கி மூனின் மருமகன் முன்னாள் இந்தியப் படை அதிகாரி என்பதும், பான் கி மூனின் அலுவலக அதிகாரி விஜய் நம்பியாரின் சகோதரரும், இந்திய முன்னாள் புலனாய்வு அதிகாரியுமான சதீஸ் நம்பியார் இறுதிப்போர் காலத்தில் சிறீலங்கா படைகளுக்கு உத்தியோகபூர்வ ஆலோசகராக இருந்தவர் என்பதும் புலம் பெயர் சமூகம் நிச்சயம் அறிந்திருக்கவேண்டிய விடையமாகும்.

நிலப்பரப்புகளை இழந்து, போரில் தோல்விகளைச் சந்தித்தும், மனத் தைரியமாக இருந்த புலிகளின் தலைவர்களை நம்பவைத்து கழுத்தறுத்துள்ளார் வழுதி. ஆயுதம் ஏந்தாத அரசியல் தலைவர்களுக்கு பிழையான தகவல்களைக் கொடுத்து புலிகளை வேரோடு கருவறுக்க இந்தியாவுடன் கூட்டுச் சேர்ந்து நிற்கும் வழுதி என்னும் துரோகியை மானமுள்ள எந்தத் தமிழனும் உயிர் பிரிந்தாலும் மன்னிக்க மாட்டான் !

ஊடக நண்பர் ஒருவரின் மின்னஞ்சலிலிருந்து

அன்று கேபி

பின்னர் உருத்திரகுமாரன்

இப்போது வழுதி....

இதுதான் இங்கு தமிழ் தேசியத்தை குத்தகைக்கு எடுத்துள்ள ஊடகங்கள் மற்றும் "தேசிய'வாதிகள் தேசியப் பணி !

தன்னுடைய குற்றங்களை மறைக்க எப்போதும் மற்றவர் மீதே குற்றங்காண்பித்துக் கொண்டிருப்பது ஒரு வித நோய்

அந்த நோயைக் கூர்ந்து கவனி;தால்

அன்று கேபி

பின்னர் உருத்திரகுமாரன்

இப்போது வழுதி....

இது நீடிக்க போகின்ற ஒன்று.

விடுதலைப் போராட்டத்தின் இத்தகைய கையறு நிலை குறித்து சுயவிமர்சனத்துக்கு தன்னை ஆட்கொள்ளாமல் மற்றவர் மீது பழிபோடுவது...குற்றங்காண்பது நல்ல விடுதலைப் பண்பாக அமையாது.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் போராட்டத்தின் இத்தகைய கையறு நிலை குறித்து சுயவிமர்சனத்துக்கு தன்னை ஆட்கொள்ளாமல் மற்றவர் மீது பழிபோடுவது...குற்றங்காண்பது நல்ல விடுதலைப் பண்பாக அமையாது.

நல்ல விடுதலைப் பண்பாக அமையாது.

தனி ஒருவரின் சொல்லைக் கேட்டு, அவரையே முழுமையாக நம்பி முடிவெடுக்கும் நிலைக்கு புலிகளும் அவர்களின் தலைமையும் முட்டாள்தனமாக ஒரு போதும் இருந்ததில்லை. புலிகள் வழுதியை நம்பித்தான் ஏமாந்தார்கள் என்பதே புலிகளையும் தலைமையையும் அவமானப்படுத்தும் ஒரு செயல்

புலிகளின் தோல்வி, அதாவது ஒட்டு மொத்த தமிழர்களின் தோல்வியின் காரணம் என்பது பரந்த தளத்தில் வைத்து விவாதிக்க வேண்டிய ஒன்று. அதை விட்டு தனிநபர்களால் தான் நாம் தோற்றோம் என்பது எம்மை நாமே அவமதிப்பது

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி நானும் ஒரு பச்சை குத்தியுள்ளேன் உங்களுக்கு. :)

இதை வைத்துக் கொண்டு எத்தனை புழுதிகள் கிளம்பப் போகிறதோ?

  • கருத்துக்கள உறவுகள்

தனி ஒருவரின் சொல்லைக் கேட்டு, அவரையே முழுமையாக நம்பி முடிவெடுக்கும் நிலைக்கு புலிகளும் அவர்களின் தலைமையும் முட்டாள்தனமாக ஒரு போதும் இருந்ததில்லை. புலிகள் வழுதியை நம்பித்தான் ஏமாந்தார்கள் என்பதே புலிகளையும் தலைமையையும் அவமானப்படுத்தும் ஒரு செயல்

புலிகளின் தோல்வி, அதாவது ஒட்டு மொத்த தமிழர்களின் தோல்வியின் காரணம் என்பது பரந்த தளத்தில் வைத்து விவாதிக்க வேண்டிய ஒன்று. அதை விட்டு தனிநபர்களால் தான் நாம் தோற்றோம் என்பது எம்மை நாமே அவமதிப்பது

உங்கள் கருத்திற்கு நன்றி நிழலி

சரியான அறிவாளிகளை கொண்டு இயங்குகிறது இந்தக் கட்டுரைக் குழுமம்

அண்ணாந்து பார்த்து எச்சில் துப்புவதைப்போன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுமையை எவ்வளவுக்குக் குறைக்கமுடியுமோ அவ்வளவுக்குக் குறைத்து தங்களின் விண்ணாரத்தனத்தைக் காட்டியிருக்கிறார்கள்.

இச்செய்தியின் நம்பகத்தன்மை??????!!!!!! ... வழுதி விளையாடினார்??? இல்லை???? என்பதற்கப்பால் ... பல விடயங்கள், முள்ளைவாய்க்கால் இறுதிக்காலங்களில் நடந்தேறியது!!! அவைகளை வெளியே கொணர இன்று ஒருவரும் அங்கு மிஞ்சவில்லை!!!!!!!!

... முள்ளிவாய்க்கால் இறுதிக்காலங்களில் சிதறுண்ட புலிகளின் கட்டமைப்புகள், தளபதிகள், முக்கியஸ்தகர்களுடன் பலர் புலத்திலிருந்து தொடர்ச்சியான தொடர்புகளை வைத்திருந்தனர்!!! ... எல்லாவற்றையும் தடை செய்த சிங்களம், இந்த கைத்தொலைபேசிகளை தங்கு தடையின்றி பாவிக்க வழி செய்து கொடுத்தது!!!!! அதனை அவர்களும் , புலத்தில் இருந்த எம்மவர்களும் எவ்வளவு பாவிக்க முடியுமோ, அவ்வளவு பாவித்தார்கள்!!!!!!

குறிப்பாக இறுதி நாட்களில் அங்கிருந்த தளபதிகள், பொறுப்பாளர்கள், முக்கியஸ்தகர்கள் ... சிறிய பிரதேசத்துக்குள் அடக்கப்பட்டிருந்தாலும் ... தொடர்புகள் அற்றோ, தொடர்ச்சியான தொடர்புகளை பேணமுடியாத நிலையில் தமக்குள்ளேயே இருந்தனர்!!!!

இந்தக்காலங்கள் பல மர்ம மனிதர்கள் அல்லது இதுவரை புலித்தோல் போர்த்து புலத்தில் நடமாடியவர்கள் ... அங்கிருக்கும் பொறுப்பாளர்கள், தளபதிகளின் புலத்தில் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் மூலம் பல பல செய்திகளை அங்கு அனுப்பியபடி இருந்தனர்!!!! ... இச்செய்திகள் ... அமெரிக்கா வரப்போகிறது ... அமெரிக்கா காப்பாற்றப் போகிறது ... இனி ஒன்றும் செய்ய முடியாது, சரணடையுங்கள் ... உலக நாடுகள் நீங்கள் சரணடைய உத்தரவாதம் தந்துள்ளது ... ... என்ன என்ன குழப்பகரமான தகவல்களை அங்கு அனுப்ப முடியுமோ, அங்கு ஏற்கனவே குழம்பியுள்ளவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்!!!! ... முள்ளிவாய்க்காலில் தலைமை முடிவெடுத்து சரணடைய சொல்கிறது என்ற செய்தியும் புலத்தில் இருந்தே சென்றதாக சிலர் கூறுகிறார்கள், தலைமை முடிவெடுப்பதற்கு முன் ... இங்கு புலத்துடன் தொடர்பில் இருந்த சில தளபதிகளுக்கு சரணடையும் முடிபை தலைமை எடுத்ததாக கூறி அவர்களது போரிடும் ஆற்றலை குழப்பியதாக சிலர் உறுதியாக சொல்க்றார்கள்!!!

இந்த நாடகங்கள் புலத்தில் இருந்து தொடர்ச்சியாக கேபி போன்ற புலிகளின் முக்கியஸ்தகர்கள், மிக திறன்பட செய்ததாக உறுதியாக சொல்கிரார்கள்!!!... இந்நாடகத்தில் அமெரிக்காவில் இருந்தவர்கள் மட்டுமல்ல, லண்டனில் இருக்கும் புலிகளின் முக்கியஸ்தகரின் குடும்பத்தையும் வலையில் வீழ்த்தி அரங்கேற்றப்பட்டதாக, குடும்ப உறுப்பினர்களின் கதைகளில் இருந்து தெரிவதாகவும் சிலர் கூறுகிறார்கள்!!!

இத்தகவல்களை சரியா, தவறா என ஆராய்ந்தறிவதற்கு, அங்கு தொடர்புகளில் இருந்தவர்கள் எவரும், இன்று இல்லை!!!!!!!!! ..... பல உண்மைகள் உயிரோடும் புதைக்கப்பட்டும் விட்டது, முள்ளிவாய்க்காலுடன்!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழருடைய குரலை சும்மா அளிக்களை

நஞ்சு அடித்து அளிசிருக்கங்கள்

தனி ஒருவரின் சொல்லைக் கேட்டு, அவரையே முழுமையாக நம்பி முடிவெடுக்கும் நிலைக்கு புலிகளும் அவர்களின் தலைமையும் முட்டாள்தனமாக ஒரு போதும் இருந்ததில்லை.

... வழுதியின் பங்கு தொடர்பாக சரியாக தெரியவில்லை ... ஆனால் தனிநபரல்ல ... பல குழுமங்களாக புலத்தில் இருந்து இய்ங்கியது ... இயக்கப்பட்டது ... இறுதிக்காலங்களில் ... வேறு தெரிவுகள் அற்ற சூழ்நிலையில் ... இப்படியானவைகளாவது நடந்தேறட்டும் என்ற ஏக்கத்தில் ... வலையில் வீழ்ந்தார்கள் !!!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.