Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா ஆளும்கட்சி தமிழர்களை மையப்படுத்தி அவதூறான விளம்பரம் தயாரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Tuesday, 29 March 2011 00:07

கனடா ஆளும்கட்சி தமிழர்களை மையப்படுத்தி அவதூறான விளம்பரம் தயாரிப்பு

கனடாவின் ஆளும்கட்சியான கொண்சவேட்டிவ் கட்சி தற்போதைய தேர்தலில் தயாரித்துள்ள ஒரு விளம்பரம் கனடாத் தமிழர்களிடைய பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கனடாவிற்கு அகதிகளாக வருகை தந்த கப்பல்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த விளம்பரம் மேற்படி கட்சி இப்படியான அகதிகளைக் கொண்டுவரும் குற்றச்செயல்களிற்காக சீ-49 என்ற சட்டத்தை தயாரிக்க முற்பட்டதாகவும் அதனை எதிர்க்கட்சிகள் தடுத்துவிட்டன என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த விளம்பரத்தில் தமிழ் அகதிகள் வருகை தந்த கப்பல்களின் படங்கள் உபயோகிக்கப்பட்டிருப்பதுடன் இன்னொரு கப்பல் வருவதற்குத் தயாராக உள்ளது என்று இந்த வருட முற்பகுதியில் வந்த ஒரு செய்தியையும் குறிப்பாகப் போட்டுள்ளது.

பல்லின சமூகத்தைச் சார்ந்தவர்களின் வாக்குக்களை கவர்வதற்காக சீனர்கள், இந்தியர்கள் குறிப்பாக சீக்கியர்களுடன் நல்லுறவைப் பேணுவது போன்ற விளம்பரங்களை வெளியிட்டுள்ள மேற்படி கட்சி வெள்ளையின, இனத்துவேச வாக்குக்களை கவர்வதற்காக ஈழத்தமிழர்களை பலிக்கடாவிக்கியுள்ளதாகவே கருதப்படுகிறது.

சர்ச்சைக்குரிய விளம்பரம்: http://www.youtube.com/watch?v=N1eoGi5omvU

இந்த மாத முற்பகுதியில் அமைச்சர் ஒருவரால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அனுப்பப்பட்ட ஆவணம் ஒன்று எதிர்க்கட்சிகளால் வெயிடப்பட்டிருந்தது. எந்தத் தொகுதிகளில் கண்சவேட்டிவ் கட்சி வெற்றியை எதிர்பார்க்கிறது என்றும் எந்த இனங்களை அது குறிவைக்கிறது என்ற விபரமும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சீனர்கள், இந்தியர்கள் ஆகியோரையே கொண்சவேட்டிவ் கட்சி குறிவைத்துள்ளது என்ற விபரமும் தமிழர்களின் வாக்குகளை கொண்சவேட்டிவ் கட்சி எதிர்பார்க்கவில்லையென்பதையும் அந்த ஆவணம் மூலம் தெரியவந்தது. அதேபோலவே தற்போது தமிழர்களை இழிவான பிரச்சாரமொன்று அக் கட்சி பாவித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் கசிய விட்ட ஆவணம்: http://www.theglobeandmail.com/news/politics/read-the-tory-ethnic-outreach-strategy/article1929269/?from=1933501

sankathi.com

  • கருத்துக்கள உறவுகள்

என்றுமே யாரையும் மன்னிக்கலாம்.. ஆனால் அவர்தம் செயல்களை ஒருநாளும் மறக்கக் கூடாது. :unsure:

2006 இல் பதவிக்கு வந்த மறுகணமே சமாதானப் பேச்சுவார்த்தையில் இருந்த புலிகள் அமைப்பைத் தடை செய்தது யார் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அச்செயல்மூலம் சிறிதளவிலேனும் போரை ஊக்குவித்து இன்று முள்ளிவாய்க்கால் அவலம் வரை கொண்டுசென்றதில் கனேடிய பழமைவாதக் கட்சிக்கும் ஒரு சிறு பங்குள்ளது. :rolleyes:

போர் உக்கிரமடைந்திருந்த சமயத்தில் தமிழர் போராட்டங்களை மழுங்கடிக்கச் செய்யும் விதமாக பெவ் ஓடா என்கிற அமைச்சரை இலங்கைக்கு அனுப்பி ஒரு ஒப்புக்குச் சப்பாணி அறிக்கையையும் விட வைத்து தமிழர்களை ஏமாற்றிய அரசு ஹார்ப்பர் அரசு. :rolleyes:

இதே பெவ் ஓடா போனமாதம் அதிகாரிகள் தயாரித்துக் கொடுத்த அறிக்கையை மாற்றினார் என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு கண்டனங்களுக்கு உள்ளானவர். இவர் இலங்கைக்குச் சென்று என்ன திருகுதாளங்களில் ஈடுபட்டிருப்பார் என்பதை நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பெவ் ஓடாவை பதவியில் இருந்து அகற்ற ஹார்ப்பர் மறுத்துவிட்டார் என்பதையும் நாம் சிறிது எண்ணிப் பார்க்க வேண்டும்..! :wub:

இரண்டு தமிழர்கள் கொன்சவேட்டிவ் கட்சிசார்பில் போட்டியிடுகின்றார்கள்.முன்னாள் வால்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு தமிழர்கள் கொன்சவேட்டிவ் கட்சிசார்பில் போட்டியிடுகின்றார்கள்.முன்னாள் வால்கள்.

எனது சில நண்பர்களும் பழமைவாதக் கட்சியில் இணைந்திருக்கிறார்கள்..! காரணம் எல்லாக் கட்சியிலும் கால் பதித்திருக்க வேண்டும் என்கிறதுதான்.. :rolleyes:

அதுதான் கருணாவும் செய்தாரோ?

அதுதான் கருணாவும் செய்தாரோ?

உங்களுக்கு காலை பிடிக்கிறதுக்கும் கையை குலுக்கிறதுக்கும் வித்தியாசம் தெரியாது எண்டு விளங்குது.... :D

உங்களுக்கு பிடிச்ச ஆட்களென்றால் கையை குலுக்குவதுமாதிரியும் பிடிக்காத ஆட்களென்றால் காலைபிடிப்பதுவும் மாதிரித்தான் இருக்கும்.

கொன்சவேட்டிவில் தமிழர்கள் கட்டாயம் இருக்கவேண்டும் ஆனால் அது இவர்களல்ல.

உங்களுக்கு பிடிச்ச ஆட்களென்றால் கையை குலுக்குவதுமாதிரியும் பிடிக்காத ஆட்களென்றால் காலைபிடிப்பதுவும் மாதிரித்தான் இருக்கும்.

கொன்சவேட்டிவில் தமிழர்கள் கட்டாயம் இருக்கவேண்டும் ஆனால் அது இவர்களல்ல.

இருக்க வேணும் ஆனா இருக்க கூடாதோ....??? :D உது தான் காச்சல்... யார் இருக்க வேணும் யார் இருக்க கூடாது எண்டு சொல்ல நீங்கள் என்னத்தை இதுவரைக்கும் கிளிசனியள்....?? அப்படி ஒரு தகுதி உங்களிட்டை இருக்கிறதாக நீங்கள் மட்டும் நினைச்சால் அதுக்கு அவர்கள் என்ன செய்ய முடியும்...???

என்ன தான் குளிக்க வாத்து நடுவீட்டுக்கை வைச்சாலும் உங்களை மாதிரி பண்ணி சகதியை நோக்கி தான் ஓடும்...

காலை பிடிக்கிறதுக்கும் கையை குலுக்குறதுக்கும் உள்ள வித்தியாசம் மிகவும் வித்தியாசமானது... வேணும் எண்டால் உதாரணம் சொல்லுறன்...

இந்தியாவை வெறுத்த பிரேம தாசாவுடன் இந்திய படைகளை விரட்ட புலிகள் ஒப்பந்த போட்டுதங்களது பகுதிக்குள் இருந்து ஒரு சம தரப்பாக நடந்து கொண்டனர்... இது கையை குலுக்குறது....! பிறகு சந்திரிக்காவோடையும் , இரணிலோடையும் கை குலுக்கினவை....!

இந்திய இராணுவத்தோடை இருந்து கட்டுப்பாட்டுக்கை வைத்து இருந்த பகுதிகளுக்கை இருந்து புலிகளை விரட்ட முடியாதவை இந்திய இராணுவம் போன பிறகு புலிகளின் கட்டுப்பாட்டுக்கை இருந்து ஓடிப்போய் பிரேமதாசாவின் காலை பிடிச்சு பாதுகாப்பு தேடிக்கொண்டது காலை பிடிக்கிறது... ( உங்கட ஆக்கள் இந்த ரகம் அண்ணை )

விளக்கம் போதுமோ இல்லை இன்னும் வேணுமோ ....??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு பிடிச்ச ஆட்களென்றால் கையை குலுக்குவதுமாதிரியும் பிடிக்காத ஆட்களென்றால் காலைபிடிப்பதுவும் மாதிரித்தான் இருக்கும்.

கொன்சவேட்டிவில் தமிழர்கள் கட்டாயம் இருக்கவேண்டும் ஆனால் அது இவர்களல்ல.

புலிகள் பன்மைத்துவம் பேணவில்லை என்று முழங்குவதும் நீங்கள் தான். பிறகு வந்து யார் எந்த அமைப்பில் இருக்கலாம் இருக்கக் கூடாது என்று நீதி கூறுவதும் நீங்கள் தான். ஏன் இப்படி முரண்பாடு? உங்களுக்கெல்லாம் புலிகளை குறை சொல்ல தகுதி இருக்கா சொல்லுங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பன்மைத்துவம் பேணவில்லை என்று முழங்குவதும் நீங்கள் தான். பிறகு வந்து யார் எந்த அமைப்பில் இருக்கலாம் இருக்கக் கூடாது என்று நீதி கூறுவதும் நீங்கள் தான். ஏன் இப்படி முரண்பாடு? உங்களுக்கெல்லாம் புலிகளை குறை சொல்ல தகுதி இருக்கா சொல்லுங்கள்?

ஹிஹி.. நல்ல கேள்வி.. :D பதில் வருமா? :rolleyes:

உங்கள் அளவிற்கு கீழ்த்தரமாக இறங்க என்னால் முடியாது.30 வருடமாக இதனால் தான் உங்களால் ஊர்வாயை மூட முடிந்தது.

விஜயகாந்த் காங்கிரசுடன் இணவதற்கும் சீமான் போய் காங்கிரசுடன் இணைவதற்கும் வித்தியாசம் உண்டு.

அடிக்கடி நான் உபயோகிக்கும் வசனம் தான் மீண்டும்.தயவுசெய்து போய் கொஞ்சம் எதாவது பிரயோசனமாக படியுங்கோ.ஊர் உலகத்தை விளங்க முயற்சியுங்கோ.உங்களுக்காக உலகமே வளையவேண்டுமென நினைத்து அது கைகூடாமல் போகமற்றவர்களை திட்டுவதிலேயே வீணே உங்கள் காலத்தை கழிக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அளவிற்கு கீழ்த்தரமாக இறங்க என்னால் முடியாது.30 வருடமாக இதனால் தான் உங்களால் ஊர்வாயை மூட முடிந்தது.

விஜயகாந்த் காங்கிரசுடன் இணவதற்கும் சீமான் போய் காங்கிரசுடன் இணைவதற்கும் வித்தியாசம் உண்டு.

அடிக்கடி நான் உபயோகிக்கும் வசனம் தான் மீண்டும்.தயவுசெய்து போய் கொஞ்சம் எதாவது பிரயோசனமாக படியுங்கோ.ஊர் உலகத்தை விளங்க முயற்சியுங்கோ.உங்களுக்காக உலகமே வளையவேண்டுமென நினைத்து அது கைகூடாமல் போகமற்றவர்களை திட்டுவதிலேயே வீணே உங்கள் காலத்தை கழிக்காதீர்கள்.

யாரும் உங்களைத் திட்டவில்லை. சக உறுப்பினர்களைச் சீர்திருத்துகிறேன் பேர்வழி என்று நீங்கள் கொடுக்கும் ஆலோசனைகள் அனேகமாக வெற்றுத் தகரப் பேணிகள் என்பதைக் காட்டுவதற்காகவே நானுட்பட பலர் உங்களிடம் கேள்வி கேட்கிறோம்.நீங்களும் "போய் படித்து விட்டு வாங்கோ" என்று எல்லாவற்றையும் நீங்கள் "படித்து முடித்து" விட்ட மாதிரி தொடர்ந்து பதி தருவீர்கள். எனக்குத் தெரிந்தவரை படித்துத் தீர்ந்த மேதாவிக்கு படிக்காதவனுக்குச் சொல்லிக் கொடுக்கும் கடமை ஒன்றுண்டு. கேட்பவன் முட்டாளாக இருந்தாலும் இந்தக் கடமை படித்தவனுக்கு உண்டு. செய்வீர்களா?

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் தமிழன் 'சர்வதேச கூலி'.இண்டைக்குத் தமிழன் 'சர்வதேச ஏணி'.

எல்லாரும் தங்கட தேவைகளுக்காக எங்களைப் பாவிச்சு மேலே மேலே போறாங்கள்.நாங்கள் மட்டும் ஏணி மாதிரி அந்த இடத்திலேயே இருக்குறம். எல்லா ஆப்கானிஸ்தான் காரனும் அவுஸ்திரேலியாவுக்கு களவா வாறாங்கள். தமிழன் மட்டும் எங்கட 'எதிர்கட்சிக்கு' படு பயன்கரவாதிகளாத் தெரியுது.

ஜஸ்டின் சும்மா எழுதுவதே இங்கு பலருக்கு விளங்குகின்றதில்லை.நான் அதிகம் படித்த ஆசான் இல்லை கொஞ்சம் உலகம் அடிபட்டபேர்வளி அதுவும் தமிழனை முற்றும் முழுதும் அறிந்தவன்.

தனது சுய அடையாளத்திற்கு இனத்தையே விற்கின்றான், இன்னமும் இது விளங்காமல் என்னுடன் மல்லுக்காட்டுவதில் பயனில்லை.அடுத்தது நீரோ எனக்கு தெரியாது.

கொன்சவேட்டிவின் விளம்பரம் பார்த்து கொதித்து போனவர்கள் மத்தியில் இருவருக்கு சீட் என்றால் டக்கிளசும்,கருணாவும் தானே அவர்கள்.

திரும்ப திரும்ப படிப்பு பற்றி ஏன் எழுதுகின்றேன் என்றால் நடப்பது எதுவும் அறியாமல் எழுந்தமானமாக பலர் இங்கு எழுதிக்கொண்டே இருக்கின்றார்கள்.

உதாரணம் வேண்டுமெனில் எழுதுகின்றேன்.

பிழைப்புக்காக வாழும் கூட்டத்தில் கொள்கைகாக வாழும் ஒருவன் கருத்தெழுத வந்தது தப்புத்தான்.

எமது மக்கள் கனேடிய பழமைவாத கட்சியை ஆதரிப்பது ஏன்?

- அந்த கட்சிக்கு பெரும்பான்மை கனேடியர்கள் ஆதரவு

- "நண்பர்களை உனக்கு கிட்ட வைத்திரு, எதிரிகளை அதிலும் நெருக்கமாக வைத்திரு"

- இன்று எமக்கு அரசியல் செல்வாக்கு தேவை

- ஒரு தொகுதியில் பழமைவாத கட்சியில் இருக்கும் தமிழர்கள் இன்னொரு கட்சிக்கு வாக்கு நிலைமைக்கு ஏற்ப போடலாம்

- இன்னொரு தொகுதியில் உள்ள பழமைவாத கட்சியில் இல்லாத தமிழர்கள் பழமைவாத கட்சிக்கு, நிலைமைக்கு ஏற்ப போடலாம்

ஏன் இவர்கள் நிற்கிறார்கள்? ஏன் இப்படியான கட்சிக்கு ஆதரவு?

- நாங்கள் இப்படி செய்தால் "ஏன் இப்படி" என்பார்கள் சிலர்

- நாங்கள் இப்படி செய்யாவிடால் " இதுகளுக்கு அரசியலே தெரியாது" என்பார்கள் அதே சிலர்

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தோற்கடிக்கும் விதத்தில் எப்படியான விளம்பரம் தயாரிக்கலாம்??

1.ஸ்ரீபன் காபர் அரசு இவர்களை நாட்டுக்குள் அனுமதித்தது தனது அரசியல் இலாபத்துக்காகவா??

2. உயிர்களோடு அரசியல் விளையாடும் ஸ்ரீபன் காபர் என்ற மாதிரி ஏதாவது நல்ல விளம்பரங்கள் செய்து எதிர் பிரச்சாரமாக வெளியிடத் தான் வேண்டும். அப்போது தான் அடங்குவார்கள்.

ஆனால் அதற்கு பொருத்தமான விளம்பரம் அவசியமாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Thursday, 31 March 2011 00:34

எந்த நிலை வந்தாலும் கப்பல் விளம்பரத்தை அகற்ற மாட்டோம் - கனடா கண்சவெட்டிக் கட்சி

கனடாவில் வெளியிடப்பட்ட அகதிகளை குற்றவாளிகளாகக் காட்டும் விளம்பரத்தை கனடா கண்சவெட்டிக் கட்சி அகற்ற வேண்டுமென்றும் கனடியப் பிரதமர் இந்த விளம்பரத்திற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கனடிய தமிழ்த் தேசிய மக்களவை கண்சவெட்டிக் கட்சியை நிர்ப்பந்தித்திருந்தது.

இந்த விளம்பரம் அகதிகளைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்கிறது என்பதை பலரும் ஏற்றுள்ள நிலையில் கனடிய தமிழ்த் தேசிய மக்கள் அவை இது தொடர்பான பத்திரிகை அறிக்கையை நேற்று வெளியிட்டது. இந்த விளம்பரத்திற்கு தமிழர்கள் கனடாவிற்கு வந்த “சண் சீ” கப்பல் பயன்படுத்தப்பட்டதையும் அது தனது அறிக்கையில் காட்டியிருந்து.

ஆனால் இன்று இது தொடர்பாக இன்று கனடாவின் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு தகவல் தெரிவித்த கண்சவேட்டிக் கட்சி “யாரே விளம்பரத்தை நிறுத்த வேண்டும் என்று கேட்டார்கள், ஆனால் அது எப்போதுமே நடக்காது” என்று உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்த விளம்பரம் இனவாத, நிறவாத நோக்கம் கொண்டது, கப்பலில் வந்த 491 அகதிகளையும் அது குற்றவாளிகளாகச் சித்தரிக்கிறது என்றும் பிரதமர் ஸ்ரீபன் காப்பர் இந்த விளம்பரத்தை வெளியிட அனுமதித்திருக்கக்கூடாது என்றும் மக்கள் அவையின் பேச்சாளர் தெரிவித்தார்.

கனடியத் தமிழ் தேசிய மக்கள் அவை கனடாவின் சகல கட்சிகளையும், கண்சவெட்டிவ் வேட்பாளர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும், கனடா யூதர்கள் காங்கிரஸ், சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியவற்றையும் தங்களுடன் இணைந்து இந்த விவகாரத்திற் குரல் கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.

கண்சவெட்டிவ் கட்சியின் விளம்பரத்தை அகற்ற மாட்டோம் என்ற அறிக்கையை ஆமோதித்து கண்சவெட்டிவ் குடிவரவு அமைச்சர் ஆட்க்கடத்தல் சம்பந்தமான பத்திரிகையாளர் மாநாட்டை கப்பல் வந்தடைந்த வன்கூவரில் நகரில் இன்று நடத்தியுள்ளார்.

அந்த மாநாட்டில் மேற்படி அமைச்சர் தாங்கள் அடுத்த முறை பதவிக்கு வந்ததும் சீ-49 என்ற அகதிகளை கடுமையாகப் பாதிக்கும் சட்டத்தை “எந்தவித மாற்றமுமில்லாமல்” நிறைவேற்றியே தீருவோம் என்றும், கனடா லிபரல் கட்சி ஆட்கடத்தல் குற்றங்களிற்கு ஆதரவாக மென்மையாகச் செயற்படுதாகத் தெரிவித்து லிபரல் கட்சி தமிழர்களுடன் நெருக்கமாக நிற்கிறது என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சங்கதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுககுத் தெரியுமா? பிரிட்டிஷ் கிங்டொம் இங்கிலாந்தில் சிறையில் இருந்தவர்களையும், வேண்டப்படாதவர்களையும் தான் கனடாவிற்குக் கொண்டு வந்து றெட் இந்தியனுடன் போர் புரியவைத்தது. இவர்கள் யாருடைய பிள்ளைகள் ஒரு கணம் சிந்தியுங்கள். ஒப்பீட்டளவில் கப்பலில் வந்தவர்கள் வாழ இடம் தேடி வந்நதவர்கள். நடந்து வந்த பாதையை மறந்துவிட்டவர்கள் தான் இன்று தேர்தலில் நிற்கும் கட்சிகள். கனடாவில் எல்லோருடைய வருகைக்குப்பின்னாலும் கதைகள் உண்டு. யாரும் யாரையும் குற்றம் கூறிவிட முடியாது,

இவர்களின் ப+ர்வீகம் எப்படிக்கனடாவில் ஆரம்பமானது. என்று ஆராய்ந்து எழுதுங்கள். அப்போது தெரியும் இவர்களின் வண்டவாளம். காப்பரின் பெற்றோரோ அல்லது பெற்றோரின் பெற்றோரோ அல்லது அவர்களின் பெற்றோரோ எப்படிக் கனடா வந்தார்கள்? அது போலத்தான் லிபரல் லீடரும்.

தமிழன் ஒரு மாபெரும் சக்தி ஆனால் அவன் ஒரு குடையின் கீழ் ஒற்றுமைப்பட்டால் தான்.

கெவின் கோஸ்னரின் " டான்சஸ் வித் தெ வூல்ப்ஸ்" படம் இவர்களை பற்றியது.நல்ல படம் கூட.

கனடாவில் மட்டுமல்ல உலகில் எந்த நாட்டிலும் புலம்பெயர்ந்த தமிழன் ஒரு முற்போக்கான நாகரீகமடைந்த இனமாக தன்னை காட்டிக்கொள்ளவில்லை.ஒரு ஒழுங்காண அமைப்பு எங்கும் இல்லை.பிரச்சனைகள் எங்கும் உண்டு ஆனால் இவ்வளவு கேவலமாக காட்டிக்கொடுப்புகளும்,கழுத்தறுப்புகளும் எங்கும் இல்லை.

இதற்கு காரணம் தான் எல்லோருக்கும் தெரியுமே.நாட்டுப்பிரச்சனையை முன்நிறுத்தி அனைத்து அமைப்புகளுக்குள்ளும் புகுந்து அது வியாபாரம் தொடங்கி,புலம் பெயர் அரசியல்,பழையமாணவர் அமைப்புகள்,விளையாட்டு சங்கங்கள்,வழிபாட்டுத் தலங்கள் எல்லாம் அவர்கள் வசம்.காரணம் அதிகாரமும் பணமும் ஊடக பலமும்.

இதையே சாட்டாக வைத்து உள்ள கள்வர்,காடையர்கள் எல்லாம் பதவியில் வந்துவிட்டார்கள்.உதாரணமாக கனடாவிற்கு வந்த ஒரு மாபெரும் உலகம் அறிந்த கள்வன் தான் எந்த ஊடகத்தை திறந்தாலும் தேசியபேச்சாளர்.ஆரம்பத்தில் கொஞ்சம் எதிர்ப்பு காட்டியவர்களும் காலப்போக்கில் அவரின் விருதுகளால் தாமும் அள்ளுண்டு இப்போ அவர் ஒரு தேசியத்தலைவர் ஆகாத குறை.இப்படி பல.இதனால் பல சமூகசேவை மனப்பான்மை கொண்டவர்கள் துட்டடைகண்டால் தூரவிலகு என ஒதுங்கிக்கொண்டார்கள்.

இப்போது தான் கொஞ்சம் வெளிச்சம் தெரிய ஆரம்பித்திருக்கின்றது.இளைய தலைமுறையினர் இவ்வளவு கீழ்த்தரமாகபோகமாட்டார்கள். எமது ஆயுதப்போராட்டம் முடிவிற்கு வந்ததில் பல நன்மையான விடயங்களில் இதுவும் ஒன்று.

"படித்த பொறுக்கிகளும் படிக்காத ரவுடிகளும்" இவ்வளவு காலமும் பொறுப்பில் இருந்ததால் தான் எமக்கு இந்த நிலை.

  • கருத்துக்கள உறவுகள்

Tory minister Jason Kenney defends B.C. anti-smuggling ad that Tamil group calls 'xenophobic'

By Douglas Quan,

Immigration Minister Jason Kenney is defending his party's use of an ad that a Tamil group has called 'xenophobic.'Photograph by: Tyler Anderson, Postmedia News filesVANCOUVER — Immigration Minister Jason Kenney is defending his party's use of an ad that a Tamil group has called "xenophobic."

The ad touts the Tories' proposals to crack down on human smuggling and features an image of the cargo ship MV Sun Sea which brought 492 Tamil migrants to B.C. last summer.

"Canada welcomes people who want to build a better future," the announcer says. "But our openness doesn't extend to criminals who target Canadian generosity."

A statement from the National Council of Canadian Tamils on Wednesday said the ad appeals to the "worst instincts of Canadians to score political points and votes" and urged the Tories to remove the ad and to apologize for labelling the asylum-seekers as criminals.

"This election ad is xenophobic and borders on racism," said Krisna Saravanamuttu, a council spokesman.

But Kenney, who spent part of Wednesday morning watching the India-versus-Pakistan cricket match at an East Vancouver restaurant serving South Indian and Sri Lankan cuisine, defended the ad and said the "vast majority" of Canadians support a crackdown on smuggling.

"Anyone who's coming to Canada illegally is breaking our laws. It's illegal migration," he told reporters. "It's not the right way to come to Canada, especially if they're paying a criminal network — a gang of criminals and often thugs — who run the smuggling syndicates.

"We make no apology for making that point in the course of this election campaign," the Conservative candidate added.

Kenney added that there are asylum-seekers around the world waiting to come to Canada through the United Nations Refugee Agency.

"We bring in about 14,000 of those people a year. It's not fair to them if someone in the same region pays a smuggler 50-grand, frankly, to jump the refugee queue."

Following the arrival of the Sun Sea last year, the Tories put forward an anti-smuggling bill, which proposes tougher penalties against human smugglers and more restrictions on migrants who use them. Opposition parties immediately denounced the bill as "draconian" and said it would deprive legitimate refugee-seekers of certain rights.

In the television ad, the Tories accuse the opposition of being "weak on border security."

dquan@postmedia.com

Twitter.com/dougquan

Read more: http://www.canada.com/news/Tory+minister+Jason+Kenney+defends+anti+smuggling+that+Tamil+group+calls+xenophobic/4530494/story.html#ixzz1IHFkWkqW

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Saturday, 02 April 2011 12:10

தமிழர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்கள் கனடாவின் மதிப்பு மிக்க சொத்து - லிபரல் கட்சி

கொன்சவேட்டிவ் கட்சியின் “சன் சீ” கப்பலை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்ட விளம்பரம் வரம்பு மீறிய ஒரு செயல் என கனேடிய லிபரல் கட்சி கண்டித்துள்ளது.

இந்த விளம்பரம் இனவாத விசம் கொண்டது. இது அகற்றப்பட வேண்டுமென என கனடாவின் தமிழ் அமைப்புக்களான கனடியத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசிய மக்களவை என்பன பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்திருந்தன.

இதற்குப் பதிலளித்த கொன்சவேட்டிவ் கட்சி தாங்கள் எந்தக் காரணம் கொண்டும் விளம்பரத்தை அகற்ற மாட்டோம் எனத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் லிபரல் கட்சியின் வெளிவிவகாரக் கொள்கைகளுக்குப் பொறுப்பான லிபரல் கட்சியின் முக்கிய பிரமுகரும், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தடுப்பு முகாம்களுக்கு விஜயம் செய்த போது கொழும்பு விமான நிலையத்தில் வைத்து சிறீலங்காவால் திருப்பி அனுப்பப்பட்டவருமான பொப் ரே இந்த விளம்பரம் பயத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அகதிகள் என்போரைத் தீர்மானிக்கும் நீதித்துறைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் முற்கூட்டிய ஒரு தீர்மானமாக அவர்களை குற்றவாளிகள் என்றும், கடத்தல்காரர்கள் என்றும் குறியிடுகிறது என்றும், சன் சீ கப்பலை இரண்டு முறை விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் மேற்படி உத்தியோகபூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழர்கள் கனடா பெருமைப்படக் கூடிய ஒரு சொத்து என்றும், தமிழர் சமூகம் சார்ந்தோர் கனடாவின் முன்னேற்றத்தில் அளப்பரிய பங்காற்றுகிறார்கள் என்றும், நாற்பது வருடகாலமாக அவர்கள் அனுபவித்து வரும் இனப்பிரச்சினையே அவர்கள் கனடாவிற்கு புலம்பெயர்ந்ததற்கான காரணம் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழர் சமுதாயத்தின் கல்வித் துறையிலான சாதிப்பு, வியாபார மற்றும் தொழில் சார் துறையிலான அதீத வளர்ச்சி, கலாச்சாரப் பங்களிப்பு மற்றும் புலமை வாய்ந்த தொழில்வாய்ப்பு என்பன கனடாவிற்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கிறது என்றும் தமிழர்களின் இந்தப் பெருமைகளை கொன்சவேட்டிவ் கட்சி தனது விளம்பரத்தில் சேர்க்க வேண்டும் என்றும் லிபரல் கட்சி தனது வேண்டுகோளில் தெரிவித்துள்ளது.

sankathi.com

Conservative Ad crosses the line

he Conservative Ad on “human smuggling” and refugees crosses an important line.

It is based on fear, and is directly prejudicial to a fair determination of refugee claims that are currently being considered. The use of the picture of the MV Sun Sea – twice – amid statements about “crimes,” “smugglers,” and attacks on the Liberal Party – clearly leads to no other interpretation than that those individuals aboard this boat are criminals and illegitimate refugees.

The use of negative and hateful stereotypes is an age-old technique – but its vintage is no excuse, and does not make it any less prejudicial. The principle that people’s claims have to be considered fairly, and free of any prejudice, is integral to Canada’s commitment to the rule of law.

The Tamil community is a source of pride to Canada – its members continue to make a huge contribution to our country. Difficult conditions in Sri Lanka over forty years have meant that many Tamils have left their homes and come to Canada. The community’s commitment to education, achievement, and success in business, the professions, the arts and in all walks of Canadian life, are well known.

The Conservatives should reflect on their propaganda campaign and what it does to these facts about the Tamil community and Canada. Mr Harper should be ashamed of this ad.

http://bobrae.liberal.ca/uncategorized/conservative-ad-crosses-the-line/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அகதிகளை கொச்சைப்படுத்தும் தேர்தல் விளம்பரத்தை நிறுத்தக்கோரி தேர்தல் ஆணையாளருக்கு கனடியத் தமிழர் பேரவை கடிதம்:

[Tuesday, 2011-04-05 16:59:29]

சமீபகாலமாக ஆட்கடத்தலுக்கு தாங்கள் எதிரானவர்கள் என்ற பாணியில் அண்மையில் வன்கூவர் வந்தடைந்த எம் வி சண் சீ கப்பலின் பின்புலத்துடன் கன்சவேட்டிவ் கட்சியின் தேர்தல் விளம்பரங்கள் ஒலி, ஒளிபரப்பப்படுவது அனைவரும் அறிந்ததே.

தமிழ்க் கனடியர்களை மிக விசனத்துக்கு உள்ளாக்கியிருக்கும் இந்த விளம்பரங்களையிட்டு கனடியத் தமிழர் பேரவையும் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்பதை இங்கு அறியத்தருகிறோம்.

இது ஓர் தேர்தல் விளம்பரமாதலால், இதைக்குறித்து கண்டனத்தினையும் இது ஏன் கனடியத் தமிழர்களையும் கனடா வந்தடைந்த அகதிகளையும் பாதிக்கிறது என்பதையும் விபரமாக விளக்கித் தேர்தல் ஆணையாளருக்கு இவ்விடயத்திற் தலையிட்டு குறிப்பிட்ட விளம்பரங்ளை உடனடியாக அகற்றுமாறு கோரி நாம் கடிதம் எழுதியிருக்கிறோம்.

அதே நேரத்தில் பிரதம மந்திரிக்கும் இதைக் குறித்த விசனத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளோம் என்பதை இதன் மூலம் அறியத் தருகிறோம்.

கூடுதல் விபரங்கட்கு அழைக்கவேண்டிய தொலைபேசி 416 240 0078

seithy.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.