Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியாவில் இந்து ஆலயத்தின் மீது தாக்குதல் _

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் இந்து ஆலயத்தின் மீது தாக்குதல் _

வீரகேசரி இணையம் 3/31/2011 10:40:21 AM Share

அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்து கோயில் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அவுபர்ன் மாகாணத்தில் ஸ்ரீ மந்திர் எனும் கோயில் அமைந்துள்ளது.

மேற்படி கோயிலுக்கள் நுழைந்த முகமூடி அணிந்த 2 மர்ம நபர்கள் கையில் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் கடந்த 19ம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.

இத் துப்பாக்கிச் சூட்டில் அதிர்ஷ்டவசமாக யாரும் பலத்த காயமடையவில்லை.

கோயில் சுவரில் துப்பாக்கி ரவைகள் துளைத்துக் கொண்டு சென்றதற்கான அடையாளங்கள் மட்டும் உள்ளன.

இதே கோயிலை கடந்த 2004ம் ஆண்டு முதல் குறி வைத்து மர்ம கும்பல் தாக்கி வருவதாக கோயில் நிர்வாகத்தினர் ‌தெரிவித்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேவேளை இக்கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட காட்சி பாதுகாப்பு கமெராக்களில் பதிவாகியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில இருக்கிற எனக்கு தெரியவில்லை சிறிலங்காவில் இருக்கும் வீரகேசரிக்கு தெரிந்துவிட்டது.......

விமானத்தில் வந்து குண்டு போட்டவர்கள் என்று போடுங்கோ .....

கோவில் இருக்கும் பகுதியில் துருக்கி மற்றும் அர‌புக்களே பெருமளவில் வசிக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியைப் பார்த்தபின்புதான் இன்னொரு சம்பவமும் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

அண்மையில் சிட்னி முருகன் ஆலயத் திருவிழா மிகவும் அமோகமாக நடந்தேறியது பலருக்கும் தெரிந்திருக்கும். என்றுமில்லதளவிற்கு இம்முறை கூட்டம் களை கட்டியதாக திருவிழாவுக்குச் சென்றவர்கள் புளகாங்கிதப்பட்டதும் பலரும் அறிந்ததே.

அந்த ஆலயத்தில் இம்முறைத் திருவிழ்ழவின்போது நடைபெற்ற ஒரு சம்பவத்தைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

திருவிழாவின் இறுதி நாட்களில் எனது நண்பன் ஒருவனும் அவனது இரு குழந்தைகளையும் மனைவியையும் கூட்டிக்கொண்டு போயிருந்தான். அங்கே திருவிழா நிகழ்வுகள் முடிவுறும் தறுவாயில் ஒவ்வொரு நாளும் பக்தர்களுக்கு அன்னதானம் கொடுப்பதுபோல இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது(இங்கு அவுஸ்த்திரேலியாவில் எவருமே உண்ண உணவின்றி அங்கே பிச்சை கேட்டுப் போகவில்லை என்பதை திருவிழா நடத்துனர்கள் ஒருமுறை தெரிந்து வைத்திருப்பது நல்லதென்று நான் நினைக்கிறேன்).

வழக்கம் போல அன்றும் இந்த "அன்னதானத்துக்கு" பெரும் கூட்டம். அன்னதானம் வழங்குபவர்களின் கட்டளைக்கு ஏற்றவாறு சனமெல்லாம் நீண்டதொரு வரிசையில் நிற்கவைக்கப்பட்டார்கள். பக்தர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட உணவுப் பொதிகளைப் பெற்றுக்கொண்டு வீட்டிற்கும் கொண்டுபோவது அன்னதான நிர்வாகத்திற்கு தெரிந்து விட்டதால் ஒருவருக்கு ஒரு பொதிதான் என்று சட்டம் கொண்டுவந்திருந்தார்கள்.

வழக்கம்போலவே அன்னதானத்துக்குப் பொறுப்பாக இருக்கும் ஓபனைச் சேர்ந்த அந்தப் பெரியவரும் தனக்கே உரிய மிடுக்குடன் அன்னதானம் வாங்கக் காத்திருந்த கூட்டத்தை தனக்கே உரிய பாணியில் நெறிப்படுத்திக்கொண்டிருந்தார்." எல்லாரும் வரிசையில வரவேணும், ஆரும் வெளிக்கிட்டால் ஒருத்தருக்கும் இண்டைக்குச் சாப்பாடில்லை", பெரியவரின் உத்தரவு பறந்து வந்து சேர்ந்தது.

எனது நண்பனும் தனது குடும்பத்தோடு பொறுமையாக வரிசையிஉல் நின்றிருந்தான். ஒருவாறு அவனது முறை வந்தது. ஒரு தட்டை தனக்கும் மனைவிக்கும் எடுத்துக்கொண்டு, இன்னொரு தட்டு தனது பிள்ளைகளுக்கு வேன்டுமென்று அந்தப் பெரியவரைக் கேட்டான். கோபமடைந்த பெரியவர் அவனை வரிசையிலிருந்து தள்ளிவிட்டார். அவன் வைத்திருந்த உணவுத்தட்டு கையிலிருந்து விழுந்து உணவெல்லாம் சிதறிபோனது. "போ.போ, உனக்கு எத்தினை தரம் சொல்லுறது" என்று பெரியவர் சீறி விழுந்தார்.

நண்பனுக்கு கோபம் வர, "எதற்கு என்னைத் தள்ளினீர்கள்" என்று கேட்டான். பெரியவர் பதில் சொல்லவில்லை, "போ. போ" என்பதுடன் தனது பேச்சை முடித்துக்கொண்டார்."ஏன் என்னைத் தள்ளினீர்கள்?" ந்ண்பன் திருப்பிக் கேட்டான். பெரியவர் தெரிந்தும் தெரியாதவர் போல இருக்க எங்கோ கோயிலின் மூளையில் நின்றிருந்த இன்னொருவர்(பெரியவரின் நண்பர்) இவ்விடத்திற்கு ஓடிவந்து, "நான் எல்லாத்தையும் பாத்துக்கொண்டிருதுதான் இருக்கிறன், ஏண்டா சாப்பாட்டைக் கீழே கொட்டினாய்?" என்று சத்தம்போடத் தொடங்கினார். நண்பனும், "நான் சாப்பட்டைக் கொட்டவில்லை, இவர் என்னைப்பிடித்துத் தள்ளி விட்டதால்தான் அது கீழே விழுந்தது" என்று கூறினான். அதற்கு அந்த பெரியவரின் எடுபிடி, "உன்னைத் தெரியும், சாப்ப்ட்டௌ திருட வந்தவன் தானெ?, உனக்கெல்லாம் சரியான பாடம் படிப்பிக்க வேணும், உன்னை இண்டைக்கு வெளுக்காமல் விடமாட்டன்" என்று நண்பன் மேல் பாயத் தொடங்க அருகிலிருந்தவர்கள் அவரையும் நண்பனையும் விலக்குப் பிடித்தனர். ஒருவாறு இந்தப் பிணக்கிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட நண்பனும் தனது குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு ஒரு ஓரத்தில் அமர, அங்கும் தொடர்ந்து வந்த அந்த பெரியவரின் எடுபிடி, "உனக்கொரு பாடம் படிப்பிக்காமல் இண்டைக்கு விடப்போறதில்லை, உனக்கு நடக்கப்பொறதைப் பார்" என்று சொல்லிக்கொண்டே நண்பனை அடிக்க நெருங்கியிருக்கிறார். நண்பனும் சுதாரித்துக்கொண்டு எழுந்திருக்கவே பிள்ளைகளிம் மனைவியும் அழத்தொடங்க அருகிலிருந்த சனம் விலக்குப்பிடிக்க பெரிய அல்லோல கல்லோலம். நண்பனை ஒரு வழிப்பண்ண அந்த எடுபிடி முயற்சிக்க நண்பன் வேண்டாமடா இந்த ச் சாமியும் கோவிலும் என்று வீடு வந்து சேர்ந்தான்.

அந்த எடுபிடிக்கு வயது 55 இலிருந்து 60 இருக்கும். நண்பனுக்கு 30 வயது. அவன் ஒரு அடி அடித்திருந்தால் பெரியவர் வேரோட சாய்ஞ்சிருப்பார். ஆனால் நண்பன் படித்தவன், இங்கு மிகவும் உயர்வான தொழிலில் இருப்பவன், தனது படிப்பிற்கேற்றவாறு தனது மரியாதையைக் காத்துக்கொண்டான். ஆனால் அந்த எடுபிடிப் பெரியவர் எதையும் யோசிக்காமல் தனது கோயில் அரசியலை நடத்திக்கொண்டிருந்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த எடுபிடிக்கு வயது 55 இலிருந்து 60 இருக்கும். நண்பனுக்கு 30 வயது. அவன் ஒரு அடி அடித்திருந்தால் பெரியவர் வேரோட சாய்ஞ்சிருப்பார். ஆனால் நண்பன் படித்தவன், இங்கு மிகவும் உயர்வான தொழிலில் இருப்பவன், தனது படிப்பிற்கேற்றவாறு தனது மரியாதையைக் காத்துக்கொண்டான். ஆனால் அந்த எடுபிடிப் பெரியவர் எதையும் யோசிக்காமல் தனது கோயில் அரசியலை நடத்திக்கொண்டிருந்திருக்கிறார்.

இங்கே ரகுநாதனுக்கும் அந்த பெரியவருக்கும் என்ன வித்தியாசம்? யாராவது கண்டு பிடியுங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

. அந்த எடுபிடி முயற்சிக்க நண்பன் வேண்டாமடா இந்த ச் சாமியும் கோவிலும் என்று வீடு வந்து சேர்ந்தான்.

ரகு என்ன எடு பிடி எண்டு சொல்லி போட்டியள்...அவர் தொண்டர் படையை சேர்ந்தவர்கள்.....அவையளுக்கு கோயிலில் நல்ல சலுகைகள் உண்டு.....

நாங்கள் குணடர்கள் என்று சொன்னால்

முருகன் சொல்லுறார்: டேய் அவன் தொண்டன்டா .....என்று... :D:D:D ..

இங்கே ரகுநாதனுக்கும் அந்த பெரியவருக்கும் என்ன வித்தியாசம்? யாராவது கண்டு பிடியுங்கள்?

பெரியவரும் ,ரகுநாதனும் நண்பர்களுக்காக குரல் கொடுக்கினம்...அதாவது நண்பன்டா....என்ற தியரி..... :D

.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சக்கரையாம் என்பது போல் முருகன் கோயிலில் வேலை செய்யும் ஒரு சிலருக்கு தலை கால் தெரிவதில்லை. அதே நேரம் தமது சொந்த நேரத்தை கோயிலுக்கு ஒதுக்கி தொண்டு செய்பவர்களும் இருக்கிறார்கள். நேரம் கிடைப்பது என்பது எல்லாருக்குமே பிரச்சனை.

அது சரி.. கையேந்தி நின்ற அந்த "அப்பாவி" நண்பர் மேல் கோவில் "தொண்டருக்கு" ஏன் இவ்வளவு....

காண்டா ?

:D :D

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன்பு முருகன் கோவிலுக்கு ஒவ்வொரு சனிக்கிழமை அதி காலையில் போய் முருகனை எழுப்பி விடுவது வழக்கம்.இந்த முருகன் தொண்டர்களின் அட்டகாசம் தாங்கமுடியாமல், அவர்கள் சிட்னியின் அதி காலைக் குளிரில் இருந்து விடு படு முன் போய் வந்து விடுவேன். ஒரு நாள் நான் என்னுடைய பாட்டில் கோவில் வீதியை வலம் வரும்போது ஒரு வயதான தொண்டர் என்னிடம் வந்தார். தம்பி எங்க இருக்கின்றீர்? எவ்வளுவு சம்பளம்? ........ எல்லா விசாரணையும் முடிந்த பின் சொன்னார். தம்பி இண்டைக்கு மத்தியானம் அன்ன தானம். கட்டாயம் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த நேரம் ஊரிலை சாப்பாட்டுக்கு வழியில்லாமச் சனம் கஷ்டப்பட்ட நேரம். நானும் நண்பர் ரகுநாதன் கூறியது போல, பெரியவரே இங்க அன்னத்துக்கு வழியில்லாமலா சனம் இருக்குதுகள்? என்று கேட்க அந்தப் பெரியவர், அப்படியில்லத் தம்பி. நாங்கள் எங்கட பழக்க வழக்கங்களை மாத்தக் கூடாது. ஊரில செய்த மாதிரி இங்கயும் எல்லாத்தையும் செய்ய வேணும் எண்டு சொன்னார்.அப்படியெண்டால் நீங்கள் நாங்கள் ஊரில இருக்கிற காலத்தில பாவிச்ச 'நாடா போட்ட' உள்ளாடைகளோ இப்பவும் பாவிக்கிறீர்கள் எண்டு நான் கேட்க, அவர் முறைத்த அந்த முறைப்புக்குப் பிறகு, முருகனிட்டை அவசியம் இல்லாமப் போறது கிடையாது.

இங்கே ரகுநாதனுக்கும் அந்த பெரியவருக்கும் என்ன வித்தியாசம்? யாராவது கண்டு பிடியுங்கள்?

பெரியவர் தான் கொண்ட 'கொள்கையில்' உறுதியாக நிற்கின்றார். அவருடைய கொள்கை 'ஒருவருக்கு ஒரு தட்டு மட்டும்'. அதாவது 'வயது வந்தவர்களிட்கு மட்டும்'

நண்பர் ரகுநாதனுடைய ஆதங்கம், அப்படியாயின் அவர்கள் ஏன் 'வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று சொல்லவில்லை என்று.

இரண்டு பக்கமும் நியாயம் இருக்கின்றது. எங்கேயோ உதைக்குது? வித்தியாசம் இல்லையே.ஒற்றுமை தானே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

:( இதில் என்ன பிரச்சனை என்றால்,

முதலாவதாக அந்த நண்பன் நானில்லை. அவன் உண்மையிலேயே எனது நண்பன் தான். புரிகிறதா கு.சா

ரெண்டாவது, அன்னதானத்திற்கு வருபவர்கள் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் பிச்சை கேட்டு வரவுமில்லை, அன்னதானத்திற்குப் பொறுப்பாக இருந்த பெரியவர் தனது சொந்தக் காசில் அன்னதானம் போடவுமில்லை.

மூன்றாவது ஒருவர் இரண்டு தட்டுக்கள் எடுக்கிறார் என்றால் ஏனென்று கேட்டுவிட்டு பதில் சொல்ல வேண்டும் அதை விடுத்து அவரைக் கீழே தள்ளி வீழ்த்துவது எதைக் காட்டுகிறது? ஊரில் கூட இப்படிச் செய்ய மாட்டார்களே??

நான்காவது, பெரியவருக்கும் நண்பனுக்கும் இடையிலேதான் பிணக்கே ஒழிய மூன்றாவது எடுபிடிக்கு அங்கே என்ன வேலை??

இறைவனை வழிபடுவதற்குத்தானே கோயில், ஊரில் உள்ளவர்கள் தங்களது மவுசையும், சண்டித்தனத்தையும் காட்டுவதற்கு அல்லவே??!!!

தேவையானவர்கள் புரிந்துகொண்டால்ச் சரி !

பக்கத்து வீடு பத்தி எரியுது காப்பாற்றுங்கோ, என்று கத்திறது சுகம். தண்ணி எடுத்துக் கொண்டு அணைக்கிறது கஸ்டம். எங்கள்ள பெரும் பான்மையானவருக்கு, கத்த தான் விருப்பம் பாருங்கோ..

அன்னதானம் தேவையா இல்லையா என்பது விவாத்துக்கு உடைய விடயம். உண்மையை சொல்லப்போனால், அந்த பத்து நாளும், எங்கட வீட்டில அடுப்பு எரியேல்ல..ரகு வீட்டை பற்றி எனக்கு தெரியாது, சிட்னி பெரும் பாலன வீடுகளில் அதே கதை தான். சாப்பாடும் அந்த மாதிரி தான் இருந்தது.

போன முறை திருவிழாவுக்கு சனம் வந்து வரிசையில நிண்டு கொண்டு அன்ரி, தம்பி ஜிம்மி ( நாய்) உறைப்பு சாப்பிட மாட்டன், சோறும் பருப்பு மட்டும் தாங்கோ எண்டு கேட்டவா.. அப்ப உதுகளை என்ன செய்யிறது. 5,000 சனத்துக்கு சமைத்து சாப்பாடு பொடுகிறது ஒரு சின்ன வேலையே. ஒருக்கால் கோயில் குசினிக்க போய் பாருங்கோவன். உந்த பழசுகள் படுகிற கஸ்டம் தெரியும். தண்ணி வெண்ணியில்லாமா, நாலு மணிக்கு வந்து சமைத்து.. முதல் நாள் இரவு நிண்டு மரக்கறி வெட்டி...மனிசி பிள்ளையளிட்ட பேச்சு வேண்டி, அடுப்பில ஏத்தி இறிக்கி பாத்தால் தான் தெரியும்.

..அதை விட பெரிய வேலை குடுக்கிற வேலை. எல்லாரும் சட்டம் பேசிவினம். .ஆனால் இந்த் முறை ஒருவனுக்கு ஒரே கோப்பை... நல்லாய் வேலை செய்தது. 5,000 சனம் வரிசையில சாப்பாட்டுக்கு மழைக்கே நிக்கேக்க ஒருதரையும் தூக்கி பிடிக்கேலாது பாருங்கோ...சின்ன சின்ன தப்பு நடக்கத்தான் செய்யும். என்னை பொறுத்த வரையில், 5000 பேர் சாப்பிட்டு சந்தோசமாய். போகினம். ஒரு சிலருக்குத்தான் இந்த பிரச்சனை..அவை கரிஸ் பார்க்கில் ரெஸ்ரொன்டில போய் காசை குடுத்து சாப்பிடுங்கோ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன அமைதியை தேடும் இடங்களிலேயே????? ஒழுங்காக அமைதியாக வரிசையில் நின்று பொறுமையை கடைப்பிடிக்க முடியாதவர்களும்...........

அன்னதானம் என்பது ஏழை எளியவர்களுக்குத்தான் என கொள்கை உடையவர்களும்........

வீட்டிலேயே இருக்கும் சாமிப்படத்தை கும்பிட்டுவிட்டு நிம்மதியாக இருக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

கஸ்ரபட்டுதான் சமைக்கிறார்கள்...................

கஸ்ரபட்டு சமைப்பதால் அடுத்தவனை அடிக்கலாமா?

இப்போதுதான் ஒரு சிலருக்கு இந்துசமய அடிப்படை புரிய தொடங்கி இருக்கிறது...............

எத்தனை பேரை சாதியை சொல்லி ஊரிலே வெளியிலே தள்ளினீர்கள்? அவர்களை மனிதர்களாக தெரியவில்லையா?

அல்லது கடவுளின் பிள்ளைகளாக இருக்க ஏதாவது ஒரு உயாந்த அந்தஸ்த்து உங்களிடம் இருந்ததா?

எதுவே இல்லை அடிப்பதற்கும் உதைப்பதற்கும் ஒருவன் தேவைபட்டடான் ஒரு பலமற்ற சிறிய குழுமத்தை தேடிபிடிக்க தொழில்முறை வசமாக வந்தது உடனே ஒரு தொழிலுக்கு ஒரு சாதியை பிரித்துவிட்டு ஆள் ஆளுக்கு போட்டு தாக்கினீர்கள்.

இன்று எல்லாம் கைகடந்துபோய் தாங்கள் வரிசை கட்டிநிற்க வேண்டீவந்ததும் அராஜகம் புரிகின்றது.

அந்த பெரியவரை பொறுத்தவரையில் முருகன் அவர்களுக்கே சொந்தம். கிட்டதட்ட இப்படிதான் ஊரிலேயும் சாதி வெறிபிடித்து திரிந்தார்கள். கடைசியில் முள்ளிவாய்க்காலில் வைத்து முருகன் ஆணிதரமாக சொல்லிவிட்டார்.............. தானும் ஒரு சாதார மணிதனாக பிறந்து தமிழனுக்காக போராடினேன். பின்பு என்னை கடவுள் ஆக்கிவிட்டார்கள் தொடர்ந்துவந்த தமிழர்கள்.

என்னை நீங்கள் தொழலாம் ஆனால் என்னால் உங்களுக்கு எதுவும் செய்யமுடியாது காரணம் நான் மரணித்துவிட்டேன் என்று.

இனியும் ஏன் பாலை அனியாயமாக ஊற்ற வேண்டும்?

யாராவது ஏழைபிள்ளைகளின் வாயில் ஊற்றலாமே? சிட்னியில் யார் பசியோடு இருக்கிறார் அன்னதானம் அவித்துபோட............. அதற்கு செலவாகும் பணத்தை யாராவது எழைக்கு கொடுத்து புண்ணியம் தேடலாமே? தவறி ஒரு கடவுள் இருந்துவிட்டால் உங்களுக்குதானே புண்ணியம். முருகனை சாட்டி நடப்பதெல்லாம் அடாவடிதனங்களும் ஆழுமைக்கான போட்டிகளும்.............. இதில் யாரும் நெரிபடுவதும் அடிபடுவதையும் உட்காந்திருந்து யோசிக்க என்ன இருக்கிறது??

  • கருத்துக்கள உறவுகள்

அன்னதானம் கொடுக்கப்படுவதன் நோக்கமென்ன?/

அந்தச் சிறு காலத்திலாவது அந்த ஊரிலிருக்கும் ஏழை எளியவர்கள் வயிறார உண்ணட்டும் என்று தானே?? அப்படிப்பார்த்தால் இங்கே அன்னதானம் வழங்கப்படவேண்டியது வீடில்லாமல் வீதிகளில் வசித்து வரும் ஏழகளுக்குத்தான். அப்படிப்பார்த்தால் இங்கே தமிழரில் அப்படியானவர்கள் யாருமில்லை. அப்போது எதைக் காட்டுவதற்கு இந்த தமிழர்களுக்கான அன்னதானம்?

பொன்னியின் வீட்டில் மூன்று நேரமும் அடுப்பெரியவில்லை என்பதற்காக எல்லோரும் எப்படா கோயில் திறக்கும் போய்ச் சாப்பிடுவதற்கு என்று காத்திருப்பதாக அர்த்தம் கொள்வதா??

பணம் படைத்தவர்களுக்கு அன்னதானம் கொடுத்தால் "ஜிம்மிக்கு: அந்தக்கறி பிடிக்காது, இந்தக்கறி போடு என்றுதான் கேட்பார்கள்.

அன்னதானம் வழங்குவதன் பின்னாலுள்ள கஷ்ட்டத்தை நான் புரியாதவனல்ல, இந்தக் கோயில் உற்சவ காலத்தில் இரவுபகலாக தனது வீட்டையும் மறந்து சேவைசெய்த நண்பர்களும் எனக்கு இருக்கிறார்கள். விடிகாலை 2, 3 மணிக்கே வீடு வந்து 2 - 3 மணிநேரம் மட்டுமே தூங்கிவிட்டு வேலைக்குப் போன நண்பர்களையும் எனக்குத் தெரியும். அவர்களைக் கொச்சைப்படுத்துவது எனது நோக்கமல்ல.

நான் சொல்ல வந்தது, இந்த அன்னதானத்தை நடத்தியவர்களின் அசமந்தப் போக்கைத்தான். ஒரு சாப்பாடுக் கோப்பைக்காக ஒருவரைத் தள்ளிவிடும் இந்த அசட்டு அதிகாரத்தைத்தான். ஆயிரம்பேர் சாப்பிடும்போது ஒருவர் இருவருக்கு இப்படி நடக்கும்தான், அது சாதாரணம் என்று சொல்லும் இந்த அதிகாரத்தை யார் உங்களுக்குத் தந்தது ? முடிந்தால் இதையே பாதிக்கப்பட்டவனிடன் சொல்லிப் பாருங்கள், என்ன செய்கிறான் என்று பார்க்கலாம்.

சரி, வாக்குவாதமும் இழுபறியும் முதியவருக்கும், நண்பனுக்கும் மட்டும்தானே?? மூன்றாவது எடுபிடிக்கு அங்கு என்ன வேலை?? அடிக்குமளவிற்கு யார் அதிகாரம் கொடுத்தது??

இவர்களெல்லாம் எந்த அதிகாரத்தில் இப்படி நடந்துகொள்கிறார்கள்?? கோவில் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்கிற தடிப்பிலா??

உந்த அதிகாரமெல்லாம் பல நாளுக்குச் செல்ல முடியாது. ஒரு காலம் வரும், பதவி அந்தஸ்த்து எல்லாம் கழன்று பெட்டிப்பாமபாய் மாறுவீர்கள். அப்போது உங்கள் கதையை நாய் கூட மதியாது. ஏதோ ஆடும்வரை ஆடுங்கள். கடவுள்பெயரால் மனிதனால் கடவுள் ஆலயத்திலேயே நடத்தப்படும் சண்டித்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னதானம் என்று சொல்லாமல் முருகனின் வீட்டில இன்று lunch எண்டு போய் சாப்பிடுங்கோ :D:D

யரோ சமைத்து போடுகிறார்கள், சனம் சந்தொசமாய் வந்து சாப்பிட்டு விட்டு போகுது. இடையில என்ன விவாதம் வேண்டி கிடக்கு. விரும்பினால் சாப்பிடுங்கோ, இல்லாட்டி போங்கோ..

என்ர விவாதம் என்னவேன்றால், வரிசையில் வந்து நிண்டால், ஒழுங்கு முறைகளை கட்டுப்பட்டு நடவுங்கோ..பிடிக்கேல்லே என்றால் விலகுங்கோ...ஆயிரமாய் சனம் சந்தோசமாய் சாப்பிட்டு விட்டு போகுது, என்னை பொறுத்த வரையில், இந்த முறை அன்னதானம் வெகு சிறப்பாக நடந்தது. சட்ட திட்டங்களை போட்டு, அதை செம்பட நடத்திய பெருசுகளுக்கு எனது வயிறார்ந்த பாராட்டுக்கள்.

யரோ சமைத்து போடுகிறார்கள், சனம் சந்தொசமாய் வந்து சாப்பிட்டு விட்டு போகுது. இடையில என்ன விவாதம் வேண்டி கிடக்கு. விரும்பினால் சாப்பிடுங்கோ, இல்லாட்டி போங்கோ..

என்ர விவாதம் என்னவேன்றால், வரிசையில் வந்து நிண்டால், ஒழுங்கு முறைகளை கட்டுப்பட்டு நடவுங்கோ..பிடிக்கேல்லே என்றால் விலகுங்கோ...ஆயிரமாய் சனம் சந்தோசமாய் சாப்பிட்டு விட்டு போகுது, என்னை பொறுத்த வரையில், இந்த முறை அன்னதானம் வெகு சிறப்பாக நடந்தது. சட்ட திட்டங்களை போட்டு, அதை செம்பட நடத்திய பெருசுகளுக்கு எனது வயிறார்ந்த பாராட்டுக்கள்.

நீங்கள் வீண் விதண்டாவதம் பிடிப்பது போல் இருக்கு.

கோவில் மனைவி பிள்ளைகளுடன் வரும் ஒரு ஆணை தள்ளுவது என்பது கிழவினி படிப்பறிவில்லாத செயல்.

அதே அந்த 30 வயது இளைஞன் செய்தால்??

கஷ்டப்பட்டு சமைக்கிறம் என்பதுக்காக சீறி சினந்து உணவு கொடுக்கலாமோ?

  • கருத்துக்கள உறவுகள்

<_<"பிடிச்சால் சாப்பிடு, இலாட்டிப் போ!"...நீங்கள் யாரென்பதைக் காட்டி விட்டீர்கள்.

உங்கள் போன்ற பெரிசுகளின் சேவை நாட்டுக்குத் தேவை.

வாழ்த்துக்கள், இன்னும் எத்தினை காலத்துக்கு ??

ஆடும்வரை ஆடுங்கள், பார்க்கலாம் !

<_< வரிசையில நிக்கிறதில யாருக்கும் பிரச்சனையில்லை. தேவையில்லாமல் ஒரு பெரிசு ஆளைக் கீழே தள்ளிவிட்டுச் சாப்பாடுத் தட்டையும் கீழே தட்டிவிட்டதைக் கேட்டால், வக்காலத்து வாங்கிக்கொண்டு நீங்கள் பாய்கிறதைப் பார்க்கும்போதே தெரிகிறது, ஒன்றில் நீங்கள் அந்தப் பெரிசு அல்லது அவரின் எடுபிடியென்பது.

கோவில் மனைவி பிள்ளைகளுடன் வரும் ஒரு ஆணை தள்ளுவது என்பது கிழவினி படிப்பறிவில்லாத செயல்.

அதே அந்த 30 வயது இளைஞன் செய்தால்??

இங்கு படித்தை வைத்துக்கு கொண்டு, முடிவு எடுக்க முடியாது..தீர விசாரியங்கள் உண்மை தெரியும்.

வரிசையில நிக்கிறதில யாருக்கும் பிரச்சனையில்லை. தேவையில்லாமல் ஒரு பெரிசு ஆளைக் கீழே தள்ளிவிட்டுச் சாப்பாடுத் தட்டையும் கீழே தட்டிவிட்டதைக் கேட்டால், வக்காலத்து வாங்கிக்கொண்டு நீங்கள் பாய்கிறதைப் பார்க்கும்போதே தெரிகிறது, ஒன்றில் நீங்கள் அந்தப் பெரிசு அல்லது அவரின் எடுபிடியென்பது.

எடு பிடி அல்ல, அவர்கள் படும் கஸ்டத்தை உண்ர்ந்தவன். நீங்களும் ஒருக்கால் போய் நிண்டு பாருங்கோ..உங்களுக்கும் கோவம் வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எடு பிடி அல்ல, அவர்கள் படும் கஸ்டத்தை உண்ர்ந்தவன். நீங்களும் ஒருக்கால் போய் நிண்டு பாருங்கோ..உங்களுக்கும் கோவம் வரும்.

கோவம் வந்தால் உடன கையை வைக்கிறதோ? எங்கட சில விசுகோத்துகளுக்கு வயசு வளந்த அளவுக்கு அறிவு வளர இல்லை, முருகனுக்கு காவடி எடுக்க தெரிந்தவர்களுக்கு ஒருவனை அடிப்பது பண்பாடு அல்ல என்று தெரிவதில்லை, சொந்த பிள்ளைகளையே அடிப்பதை குற்றமாக கருதும் நாடுகளில் இருந்து கொண்டு, ஒருவர் இன்னொருவருக்கு அடிக்கலாமா? சில நல்ல விசயங்களை இந்த விசுகோத்துகள் கற்று கொள்ள முன் வரவேண்டும், பொது பணிக்கு வருபவர்களுக்கு பொறுமை முக்கியம்.ஆத்திரத்தை அடக்கமுடியாத சுண்டெலிகள் வீட்டில இருந்து மாவை போட்டு கிண்டிகொண்டு இருக்கிறதை விட்டுட்டு வெளியில ஏன் வெளிக்கிடுகினம்.

  • கருத்துக்கள உறவுகள்
:D:lol:
  • கருத்துக்கள உறவுகள்

<_< உங்களுக்குக் கோபம், நீங்கள் அடிப்பீர்கள்...பிறகு நாங்கள் கைய்யை வைத்தால் வயசு போன ஆளெண்டும் பாக்கமல் அடிச்சுப் போட்டாங்கள் எண்டு ஒப்பாரியும் வைப்பீர்கள்.

ஏனெங்களுக்குப் பிரச்சனை.

உங்கள் கோயிலை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.

சந்தோஷம் !!

.

பத்து வருடங்களிற்கு மேல் சிட்னியில் வசிக்கிறேன். ஒரு நாள் கூட இந்தக் கோவில் திருவிழாவிற்கு போனது கிடையாது. சில சமயம் திருவிழா நடப்பது கூடத்தெரியாமல் வந்து பின் போய்விடும்.

சனி அல்லது ஞாயிறு மத்தியானம் 2 மணிக்குப் பின் தான் அப்படிக் கோவிலுக்குப் போவதென்றால் போவேன். ஒரு சனம் கோவில்லில் இருக்காது. அமைதியாகக் கும்பிட முடியும்.

இப்படி ஒரு மத்தியானம் நாங்கள் அங்கு வழிபட்டுக் கொண்டிருந்தோம். என்னுடைய மகள் (சிறுமி) தூண்களிற்கிடையே நடனமாடிக் கொண்டிருந்தாள்.

கவுன்டரில் புதிதாக ஒரு கிழவர் நின்று கொண்டிருந்தார். அவரை அன்று தான் புதிதாகப் பார்த்தோம். அவர் கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு மகளிடம் வந்து ஆங்கிலத்தில் நடன மாட வேண்டாம் என்று கடுந்தொனியில் சொன்னார்.

மகள் பயந்து விட்டாள்.

பெற்றோர் இருக்க நாலு வயதுச் சிறுமியிடம் கதைப்பது தவறு. அதுவும் கடுந்தொனியில் கதைப்பது மகா தவறு. ஆங்கிலம் பேசத் தெரிந்த இந்த முட்டாளுக்கு இது தெரியவில்லை.

இதே மாதிரியாக ஒரு வெள்ளைக்காரனிடம் இவர் வாயைக் கொடுத்திருந்தால், அவன் இவரிடம் உன் ஆத்தை என்ன வள் வள் என்று குலைக்கு நாலு கால் மிருகத்தோடு களவிற் கூடியா நீ பிறந்தாய் என்று கேட்டிருப்பான்.

நாங்கள் அமைதியாத் திரும்பி வந்து விட்டோம்.

நடராசரே கூத்தாடுகிறார். ஆடல் கூட ஒரு வழிபாட்டு முறை தான். ஆடல் அரங்கேறும் இடமே கோவில் தான். இறுக்கமான விதிமுறைகள் இந்து சமயத்திற்குக் கிடையாது. இந்து சமய‌ விளக்கங்கெட்ட அறளைபேந்த ஆத்துமாவை கொண்டுவந்து கவுன்டரில் இருத்தியவர்களைத்தான் நோக வேண்டும்.

கோவம் வந்தால் உடன கையை வைக்கிறதோ? எங்கட சில விசுகோத்துகளுக்கு வயசு வளந்த அளவுக்கு அறிவு வளர இல்லை, முருகனுக்கு காவடி எடுக்க தெரிந்தவர்களுக்கு ஒருவனை அடிப்பது பண்பாடு அல்ல

யார் யாருக்கு கையை வைச்சார்? வாக்கு வாதம், எங்களுக்கு தான் சட்டம் பிடிக்காதே...அதானால் வந்த முறுகல். அதுக்கேன் நீங்கள் சோடிக்கிறியள்?

Edited by பொன்னி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.