Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா பயங்கரவாத நாடா? இல்லை அங்குள்ள கிரிக்கெட் வீரர்கள் விடுதலைப்புலிகளா? மாவை

Featured Replies

இந்தியா ஒரு பயங்கரவாத நாடா? இல்லை அங்குள்ள கிரிக்கெட் வீரர்கள் புலிப் பயங்கரவாதிகளா? ஐ.நா.பிரதிநிதியின் கூற்று அரசியல் நாகரிகமற்ற ஒன்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கண்டித்துள்ளார்.

மல்லாகத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டு அரங்குகளின் மூலம்தான் நல்லிணக்கம் ஏற்படும் என்ற சித்தாந்தத்தையே சிதைத்து விட்டார் ஐ.நாவின் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கிரிக்கெட் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்து விட்டால் அது பயங்காரவாதத்தை வெற்றி கொண்டதற்கு ஒப்பாகும். இந்த வெற்றியை இராணுவத்தினருக்கு கௌரவமளித்து சமர்ப்பணம் செய்வோம் என யுத்த வெறியூட்டும் வகையில் கூறி உள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறையில் இருந்துகொண்டு கிரிக்கெட் வெற்றி பிரபாகரனைத் தோற்கடித்தமைக்குச் சமமாகும் என கூறுகின்றார்.

இங்கே இவர்கள் இருவருமே உலகமே ஆவலுடன் அவதானித்த விளையாட்டுப் போட்டியை ஒரு யுத்தகளமாக்கி வெறியூட்டும் வகையில் பேசுகின்றனர். அப்படியானால், இந்தியா ஒரு பயங்கரவாத நாடா? இல்லையென்றால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் புலிப் பயங்கரவாதிகளா? என்று கேட்கின்றேன். அரசியல் நாகரிகமற்ற இக்கூற்றை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

அண்மையில் இங்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, 13 ஆவது அரசியல் திருத்தத்துக்கு அப்பால் சென்று நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என, இங்குள்ள சிரேஷ்ட அமைச்சர்கள் முன்னிலையிலேயே கூறினார் அரசும் அமைச்சர்களும் அப்போது தலையாட்டிக் கொண்டிருந்தனர். ஆனால், ஜனாதிபதியோ காவற்துறை அதிகாரம் வழங்கப்படமாட்டாது; வழங்கமாட்டேன் என தன்பாட்டில் கூறிக் கொண்டு போகிறார்.

அதிகாரப் பரவல் எல்லாவற்றையும் தன் கையில் வைத்துக் கொண்டுள்ள அரசு, எல்லா வகையிலும் எம்மை ஓரம் கட்டுகின்றது. கல்வித்துறை என்றால் என்ன, ஏனைய எமது விடயங்கள் என்றால் என்ன மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்துகின்றனர்.

தென்பகுதியில் உள்ள ஏழு பல்கலைக்கழகங்களை சர்வதேச தரத்துக்கு அபிவிருத்தி செய்வதாகக் கூறிய ஜனாதிபதி, யாழ்.பல்கலைக்கழகத்தை ஒதுக்கிவிட்டார். உயர் கல்வி அமைச்சுடன் பேசியதன் பயனாகவே இந்திய அரசின் உதவியுடன் யாழ்.பல்கலைக்கழகம் சீரமைக்கப்படவுள்ளது.இன்று உலக நாடுகளில் கல்வித்துறை பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. அனைத்தும் கணினிமயமாகிவிட்டன. ஆனால், பெரிதும் பாதிக்கப்பட்ட பின் தங்கிய எமது கிராமங்களுக்கு அந்த வசதிகள் இல்லை.

தமிழர்கள் சகல துறைகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். எமது சக்தியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் எமது சக்தியைப் பலப்படுத்திக் கொண்டதால்தான் இன்று அரசாங்கம் எம்முடன் பேச்சுகளை ஆரம்பித்துள்ளது என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

globaltamilnews

தென்பகுதியில் உள்ள ஏழு பல்கலைக்கழகங்களை சர்வதேச தரத்துக்கு அபிவிருத்தி செய்வதாகக் கூறிய ஜனாதிபதி, யாழ்.பல்கலைக்கழகத்தை ஒதுக்கிவிட்டார். உயர் கல்வி அமைச்சுடன் பேசியதன் பயனாகவே இந்திய அரசின் உதவியுடன் யாழ்.பல்கலைக்கழகம் சீரமைக்கப்படவுள்ளது.இன்று உலக நாடுகளில் கல்வித்துறை பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. அனைத்தும் கணினிமயமாகிவிட்டன. ஆனால், பெரிதும் பாதிக்கப்பட்ட பின் தங்கிய எமது கிராமங்களுக்கு அந்த வசதிகள் இல்லை.

தமிழர்கள் சகல துறைகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். எமது சக்தியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் எமது சக்தியைப் பலப்படுத்திக் கொண்டதால்தான் இன்று அரசாங்கம் எம்முடன் பேச்சுகளை ஆரம்பித்துள்ளது என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மல்லாகத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

globaltamilnews

ஜனாதிபதி யாழ். பல்கலைக்கழகத்தை ஒதுக்கிவிட்டார். சரி. ஐயா மாவை... நீங்களும் நீண்ட காலமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறீர்கள். வடபகுதி மக்களுக்கு என்ன தேவை என்பதை அரசுக்கு எடுத்துக்கூறத்தானே வடபகுதியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறீர்கள். யாழ். பல்கலைக்கழகம் பற்றி எப்போதாவது நாடாளுமன்றத்தில் வாய் திறந்ததுண்டா? நாடாளுமன்றப் பதிவுகளில் அப்படியாக ஏதும் தென்படவில்லையே!

நாங்கள் கேட்டால் அரசு செய்துவிடுமா என்று பதில் வரும். தெரியும். ஆனால் நீங்கள் கேட்டீர்களா? கேட்கத்தானே நாடாளுமன்றம் சென்றீர்கள். இதை ஸ்ரீஜயவர்தனபுரவில் கேட்காமல், மல்லாகத்தில் நின்று கேட்டுவிட்டு ஒன்றுமே நடக்கவில்லை என்றால் எப்படி?

அரசு செய்யாது என்று நீங்கள் 100 சதவீதம் நம்பினாலும் கேட்கவேண்டும். ஏன் தெரியுமா? நீங்கள் கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அரசு செய்யவில்லை. அதன்பின் செய்யக்கூடிய வேறு தரப்பைக் கேட்கலாம் அல்லவா?

வேறு யாரையும் செய்ய அரசு விடாது என்று சொல்லாதீர்கள். நீங்களே கூறுகிறீர்கள் இந்திய அரசின் உதவியுடன் யாழ். பல்கலைக்கழகம் சீரமைக்கப்படுகின்றது என்று. வடபகுதி மக்களின் பிரதிநிதியாக வேறு நாடு எதனிடமாவது அபிவிருத்திக்கு உதவுமாறு கேட்டீர்களா? கேட்க முடியாது. காரணம், சர்வதேச ராஜதந்திர நடைமுறையில் இது ஒரு சங்கிலித் தொடர்போல. நீங்கள் முதலில் உங்கள் நாட்டு அரசிடம் கேட்கவேண்டும். அவர்கள் அதை மறுத்தால்தான் மற்றய நாடுகளிடம் சென்று அதை அடிப்படையாக வைத்துக் கேட்க முடியும்.

எத்தனைபேருக்குத் தெரியும் யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடகப்படிப்பு ஒன்றை நடாத்துவதற்து 100 சதவீதம் டென்மார்க் அரசு உதவுகின்றது என்ற விடயம்?

அதுகூட எமது யாழ். மாசட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் கிடைத்த உதவியல்ல.

கல்வித்துறை கணணிமயப்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டுகிறீர்களே... எத்தனையோ புலம்பெயர் பழைய மாணவர் சங்கங்கள் தத்தமது பாடசாலைகளுக்கு கணணிகள் வாங்கிக் கொடுத்துள்ளன. இதையே விரிவுபடுத்தி புலம்பெயர் அமைப்புக்களைக் கேட்கலாமே.. தருகிறார்களோ இல்லையோ.. கேட்டாவது பார்த்தீர்களா?

மல்லாகத்தை விட்டு வெளியே வாருங்கள் ஐயா!

இந்தியா ஒரு பயங்கரவாத நாடா? இல்லை அங்குள்ள கிரிக்கெட் வீரர்கள் புலிப் பயங்கரவாதிகளா? ஐ.நா.பிரதிநிதியின் கூற்று அரசியல் நாகரிகமற்ற ஒன்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கண்டித்துள்ளார்.

அதிகாரப் பரவல் எல்லாவற்றையும் தன் கையில் வைத்துக் கொண்டுள்ள அரசு, எல்லா வகையிலும் எம்மை ஓரம் கட்டுகின்றது. கல்வித்துறை என்றால் என்ன, ஏனைய எமது விடயங்கள் என்றால் என்ன மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்துகின்றனர்.

அனைத்து மக்களும் பார்த்த இல்லை கேட்ட விளையாட்டை வைத்து, சிங்களம் தொடர்ந்தும் தமிழரை அடிமைகளாகவே நடாத்தி வருகின்றது என்பதை கூறியுள்ளார் த.தே.கூ. உறுப்பினர். மேலும், தமிழர்கள் தமது படிப்பை முதன்மையாக கொண்டவர்கள் என்பதால் அதை ஒரு முன்னுதரணமாக எடுத்து விளங்கப்படுத்தியுள்ளார். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

புலிப் பயங்கரவாதிகளா?

ஊர் நாட்டில் அகண்டா.. உகண்டா.. கொல்கொய்தா.. பொல்கொய்தா ..என இருக்கும் போது :(

  • கருத்துக்கள உறவுகள்
<_<இந்தியா ஒரு பயங்கரவாத நாடுதான், அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். அதன் கிரிக்கெட் அணி அதன் பயங்கரவாத முகத்தினை மறைக்கும் ஒரு வேஷம் மட்டுமே !!!!!
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பயங்கரவாத நாடா? இல்லை அங்குள்ள கிரிக்கெட் வீரர்கள் அல்கொய்தா தீவிரவாதிகளா? -மாவை
:rolleyes:

டிஸ்கி:

இங்கிட்டு புலிகளை பயங்கரவாதிகள் என்பதை எடு கோளாக காட்டுவதற்கு நம் கண்டங்கள்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

இரகுநாதா, ... இந்தியா ஓர் பயங்கரவாத நாடு, அது நமக்கு மட்டுமல்ல சிங்களவனுக்கும்தான்!!! எந்த ஒரு சிங்களவனுக்கும் இந்தியா என்பது ஓர் எதிரி நாடுதான்!!! அதுதான் உண்மையும்!!!

... 87ம் ஆண்டுக்கு முன் நிகழ்ந்தவைகளை பார்த்தால் உண்மைகள் புரியும்! ... எம் இயக்கங்களை பாவித்து இந்தியா இலங்கையில் செய்தவைகள் கொஞ்சமல்ல .. குண்டு வெடிப்புகள் ஆகட்டும், கொலைகளாகட்டும் ... இவைகள் எம்மை பாவித்து! ... ஆனால் அதற்கு முன்பே இந்த விரோதம் ... இந்திய/பாகிஸ்தானிய, இந்திய/சைனா யுத்தங்களில் இலங்கை பாகிஸ்தானுடனும், சைனாவுடனும் தான் நின்றது!!! ... அதற்கு மேல் 70களில் சேகுவேரா கிளர்ச்சியை அடக்க இலங்கை அரசு அழைப்பதற்கு முன்பே இந்தியா இலங்கையில் கால் பதித்து கொன்று விட்ட சிங்களவர்களின் தொகையும் இதுவரை சரியான கணக்குகள் இல்லை!!!

... அப்படி எல்லாம் இருக்க சிங்களவன் ஏன் இந்தியாவுடன் உறவு வைத்திருக்க முற்பட்டான்???? ... அதை அப்போது சிங்கள ஜனாதிபதியாக இருந்த ஜேஆரே சொன்னான், ... கூடி எம்மை அடித்தவர்களை பிரித்து, அடிபட விட்டு விட்டு கூத்துப் பார்க்கிறேன் என்று!!!!!! ....

... நாம் ஏன் இதனை செய்யக்கூடாது?????? .... இன்று எம் முக்கிய எதிரி சிங்களவனே!!! ... அவனது நண்பர் குலாமென்று ஒரு பெரிய வட்டம்!!! ... எதிரிக்கு எதிரி நண்பன் என்பார்கள் ... அது எம்மில் மட்டும் விதிவிலக்கு!!! ...எமக்கு எல்லோரும் எதிரிகளே!!.... இப்படியான அரசியல் எம்மை வாழ வைக்குமா??? எமக்கொரு விடிவை தருமா???

... நாம் கடந்த காலங்களை மறக்க வேண்டாம் ... சிங்களவர்களைப் போல் ... ஆனால் எமது தேவைகளுக்காக ஏன் இராஜதந்திரமாக காய்களை நகர்த்தக் கூடாது??????????? ... அவை தற்காலிகமாகவென்றாலும்????? ....

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

நெல்லை சொல்வது கசப்பான ஒன்றாயினும், நியாயமான ஒன்றுதான்...ஒரு பச்சையும் குத்தியாச்சு... (ஆனாலும், என் காலத்தில் இந்தியாவுடனான எத்தகைய உறவுகளும் (தமிழகம் நீங்கலாக) வெறுப்பேத்துவதாகத் தான் எனக்கிருக்கும்)

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் இதய சுத்தியாக இந்தியாவை நட்பு நாடாக நோக்குவதில்லை. தமிழர் அழிப்பு அரசியல்.. பிராந்தியம்.. பொருளாதாரம்.. மற்றும் சில பெளத்தமத கலாசார பின்னணி கருதி இந்தியாவை அணைப்பது போல அணைந்துக் கொண்டது.

ராஜீவ் காந்தியின் தவறான சிறீலங்கா கொள்கையே இந்தியா அண்டையில் இருந்த இதய சுத்தியாக நட்பர்களாக இருந்த தமிழர்களை பகைக்கத் தூண்டியது. இப்போ சோனியா அதை இன்னும் வலுப்படுத்தி இருக்கிறார். மற்றும்படி சிங்கள தேசத்தின் உண்மை முகத்தை ராஜீவோ.. நாராயணனோ.. சிவ சங்கர் மேனனோ.. சோனியாவோ.. கருணாநிதியோ.. ஜெயலலிதாவோ மாற்ற முடியாது.

இந்தியா இன்று பிராந்தியத்தில் தனக்கிருந்த நம்பிக்கைக்குரிய ஒரே ஒரு நண்பனான தமிழர்களையும் இழந்து நிற்கிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவர் அப்ரிடி சொன்னார்.. இந்தியாவோடு நட்பு பாராட்டுவதிலும் அதனோடு எதிரியாக இருப்பது மேல் என்று. இதே தான் சிங்களவர்களின் நிலையும். இந்தியாவைச் சுற்றி ஒரு தேசமும் அதற்கு இதய சுத்தியுள்ள நண்பனாக இன்றில்லை. இதற்குக் காரணம்.. நேரு குடும்பமும்.. அதன் வழி வந்த காங்கிரஸின் தவறான குடும்ப நலன் சார்ந்த வெளிவிவகாரக் கொள்கைகளும்.. இந்து போன்ற இந்திய மீடியாக்களுமே ஆகும்.

அதேபோல்.. பாரதிய ஜனதாக் கட்சி.. கற்பனையில் மிதக்கும் ஒரு கட்சி. அதற்கு தமிழர்களை அணைக்கவும் தெரியாது... எதுவும் தெரியாது. இந்திய மத்திய ஆளும் வர்க்கத்தில் வி பி சிங்கிற்குப் பிறகு..ஒரு உருப்படியான தலைவர் இருக்கவில்லை என்பதுதான் உண்மை. அதுதான் இந்தியாவை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது.

இந்தியாவோடு நட்பு பாராட்டிய பிரபாகரனை இந்தியா எதிரியாக்கிக் கொண்டது தான் இந்தியா இன்று பிராந்தியத்தில் தனிமைப்பட்டுக் கிடக்க முக்கிய காரணம். பிரபாகரனை அணைத்து 1987 இல் தமிழீழ தனி இராட்சியம் உருவாக இந்தியா ஒத்துழைத்திருக்கும் என்றால் இன்றும் இந்தியாவின் தென்பகுதி மிகவும் பாதுகாப்பான ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் இன்று அது சீன ஆதிக்கத்துக்குள் இருக்கிறது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இவர்கள் இருவருமே உலகமே ஆவலுடன் அவதானித்த விளையாட்டுப் போட்டியை ஒரு யுத்தகளமாக்கி வெறியூட்டும் வகையில் பேசுகின்றனர். அப்படியானால், இந்தியா ஒரு பயங்கரவாத நாடா? இல்லையென்றால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் புலிப் பயங்கரவாதிகளா? என்று கேட்கின்றேன். அரசியல் நாகரிகமற்ற இக்கூற்றை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

தமிழர்கள் சகல துறைகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். எமது சக்தியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் எமது சக்தியைப் பலப்படுத்திக் கொண்டதால்தான் இன்று அரசாங்கம் எம்முடன் பேச்சுகளை ஆரம்பித்துள்ளது என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழினம் சில காலத்துக்கேனும் இதுபோன்று பேச்சுக்களில் மற்றும் பேட்டிகளில் பாவிக்கப்படும் சொற்களை எடுத்துக்கொண்டு எமது கொள்கைகளை வகைப்படுத்துவதை தவிர்க்கணும். இன்றைய சூழ்நிலையில் இது மேலும் மேலும் எம்மை பலவீனப்படுத்தும். :(:(:(

Edited by விசுகு

(ஆனாலும், என் காலத்தில் இந்தியாவுடனான எத்தகைய உறவுகளும் (தமிழகம் நீங்கலாக) வெறுப்பேத்துவதாகத் தான் எனக்கிருக்கும்)

... நெல்லையான்களுக்கும், நிழலிகளுக்கும் குடும்பங்களும் புலத்தில்! உறவுகளும் புலத்தில்! ... நாம் எதையும் சொல்லலாம்! ... ஆனால் அங்கு வாழும் மக்களுக்கு உயிர் பாதுக்காப்பு உத்தரவாதத்துடன் கூடிய ஓர் தற்காலிக தீர்வு அவசியம்! ... அதற்காகவெனும் எதிரியை விடுத்து யார் காலிலாவது வீழ்ந்தால் ... அது கவுரவக்குறைவல்ல மாறாக ராஜதந்திரம்!

Edited by Nellaiyan

எமக்கு இலக்கு என்று ஒன்று இருக்குமேயானால் அதை அடையமட்டும் நாங்கள் யாருடனும் கூடலாம் குலாவலாம்.எதிரி யார் என்பதில் மட்டும் தெளிவு வேண்டும்.

கடைசி, இலக்கை அடையமட்டுமாவது மானம்,ரோசம்,வீரம்,தேசியம் என்ற வீறாப்புகளையும் வாய்சவாடல்களையும் விட்டு விட்டு காய் நகர்த்தி இருக்கலாம்.இதைத்தான் ராஜதந்திரம் என்கின்றார்கள்.அதைவிடுத்து அமெரிக்கா தொடங்கி தமிழ்நாடுவரை வரை துரோகிகள் என வெறும் வாதங்கள் ஒன்றையும் பெற்றுத்தராது.

அதற்கு முதல் உலகம் என்றால் என்ன என புரிதல் அவசியம்.

... அதை 87ல் சிங்கள ஜே.ஆர் மிக சிறப்பாக செய்தான் ... அஸ்டாங்கமாக வீழ்ந்தான் ... சிங்கள நாடே பின் குழம்பியது, இரத்த ஆறு சிங்கள நாடெங்கும் ஓடியது இந்தியனின் காலில் வீழ்ந்ததற்கு ... இன்று அதன் /அந்த இராஜதந்திரத்தின் பலனை நாம் அனுபவிக்கிறோம்!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு யாருமே நண்பர்கள் என்று தற்போதைய நிலையில் இல்லை.அது அவர்களின் இரு வேடங்களால் வந்தது. எமக்கும் தேவை உள்ள போது நாமும் இரட்டை வேடம் போட வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லா விட்டால் இவ்வுலகுடன் வாழவே முடியாது. நீதி, நியாயம் பேசி குட்டிச்சுவர் ஆகி விடுவோம்.

  • தொடங்கியவர்

... நெல்லையான்களுக்கும், நிழலிகளுக்கும் குடும்பங்களும் புலத்தில்! உறவுகளும் புலத்தில்! ... நாம் எதையும் சொல்லலாம்! ... ஆனால் அங்கு வாழும் மக்களுக்கு உயிர் பாதுக்காப்பு உத்தரவாதத்துடன் கூடிய ஓர் தற்காலிக தீர்வு அவசியம்! ... அதற்காகவெனும் எதிரியை விடுத்து யார் காலிலாவது வீழ்ந்தால் ... அது கவுரவக்குறைவல்ல மாறாக ராஜதந்திரம்!

என்னையும் என் மனைவி பிள்ளைகளையும் தவிர அம்மா, சகோதரிகளில் இருந்து அனைவரும் இன்னும் இலங்கையில் தான். :)

அதே போல மனைவியின் ஒரு சகோதரியை தவிர மற்ற அனைவரும் இன்றும் இலங்கையில் தான்

ஏதோ புள்ளிகளின் அடிப்படையில் கனடா வரக்கூடியதாக இருந்ததால் தப்பி வந்துவிட்டேன். :)

Edited by நிழலி

மண்ணை நேசிப்பதற்கும் மக்கள்மீது கரிசனை கொள்வதற்கும் அதற்காக உழைப்பதற்கும் அந்த மண்ணில் இருக்கவேண்டும் என்றால் உலகத்தின் பல நாடுகள் விடிவைப்பெற்றிராது. ஏன் நான் வாழும் பிரான்ஸ் இன்றும் ஜேர்மனிக்கு அடிமையாகத்தானிருக்கும். எனது சொந்த சகோதரர்கள் என்னுடன் சேர்த்து ஒன்பது. இதில் ஒருவர் மட்டுமே ஊரில்.

எங்களுக்கு பிறந்தவர்கள் 34.

இதில் ஒருவர் மட்டுமே ஊரில்.

அதற்காக எனக்கு என் மண்ணை நேசிக்க என் மண் பற்றி கதைக்க தகுதியில்லையா.....?

நான் நெல்லையனின் பதில்லுக்கு எழுதிய பதிலுக்கும் நீங்கள் எனக்கு கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்? உறவுகள் முழுதும் புலம் பெயர்ந்தால், மண்ணை நேசிக்க தகுதி இல்லை என்று நெல்லையனின் பதிலிலும் சரி, என் பதிலிலும் சரி எங்காவது; சாடை மாடையாகக் கூட குறிப்பிட்டு இருக்கா?

மீண்டும் வாசிக்கவும்

Edited by நிழலி
வேறென்ன ..எழுத்து பிழைகள்

  • கருத்துக்கள உறவுகள்

நான் நெல்லையனின் பதில்லுக்கு எழுதிய பதிலுக்கும் நீங்கள் எனக்கு கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்? உறவுகள் முழுதும் புலம் பெயர்ந்தால், மண்ணை நேசிக்க தகுதி இல்லை என்று நெல்லையனின் பதிலிலும் சரி, என் பதிலிலும் சரி எங்காவது; சாடை மாடையாகக் கூட குறிப்பிட்டு இருக்கா?

மீண்டும் வாசிக்கவும்

இதுவும் தங்களிடம் கேட்கப்பட்ட கேள்வியல்ல

பொதுவானது.

நீங்கள் தங்களைவிட எல்லோரும் அங்குதான் என்கிறீர்கள்

நான் ஒருவரைவிட அனைவரும் வெளியில் என்கின்றேன்.

எமக்குள் தாயக நேசிப்பு சம்பந்தமாக இரு தரப்பு இருப்பதாக சில திரிகளில் கண்டாதல் எழுப்பப்பட்ட கேள்வியே அது.

கண்டதால் எழுப்பப்பட்ட கேள்வியே அது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.