Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண் பருவமடைந்தால்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பருவம்டையும் வயதில் ஆண் பிள்ளைகளோ அல்லது பெண் பிள்ளைகளோ ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுப்பது அவசியம். எம்மவர்கள் இயற்கை உணவுகளான உளுந்து, நல்லெண்ணெய் போன்றவற்றை தருவதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. வீடுகளில் இவ்வகை உணவுகளை அளவாகவே தருகிறார்கள். உணவே மருந்து என்பது அளவாக உண்ணும்போது மட்டுமே.

எங்கள் சமூகக் கட்டமைப்பில் பொதுவாகவே ஆண்பிள்ளைகளுக்கு நல்ல கவனிப்பு இருக்கும். பெண் பிள்ளைகளுக்கு அப்படி அல்ல. எனவே பூப்படையும் காலங்களில் அவர்களை விசேடமாக கவனித்துக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. இது அவர்களுக்கு ஒருவித மனத்திருப்தியை தரக்கூடும். மேலும் பெண்கள் ஆரோக்கியமாக (உடல், உள) இருந்தால் மட்டுமே குடும்பம் சிறக்கும். இதற்காகவாவது அவர்களை சிறப்பாக கவனிக்கலாம் அல்லவா?

வளரும் பதின்ம வயதில் பையன்கள் தாமாகவே புஷ்ட்டியான உணவுகளை தேடிக்கொள்கிறார்கள். முட்டை/இறைச்சி கொத்து சாப்பிடாத பதின்ம வயது இளைஞன் யார்? :lol: :lol: பெண்களுக்கு அவ்வாறான சந்தர்ப்பம் குறைவு. எனவே இது தவறல்ல. தவிர்க்கப்பட வேண்டியதும் அல்ல.

பெண் பிள்ளைகளுக்கு நல்ல போதுமான நிறை உணவு கிடைப்பதில்லை என்பதை வறிய நாடுகளில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களிடத்தில் காட்டலாம். அபிவிருத்தி அடைந்த மேற்கு நாடுகளில் மற்றும் வறிய நாடுகளில் வறுமைக் கோட்டுக்கு மேல் வாழ்பவர்களிடம் அப்படியான நிலை இருப்பதாகத் தெரியவில்லை. மேற்கு நாடுகளில் கூட விசேட கவனிப்பு என்று உணவுகளை பிள்ளைகளின் விருப்பத்துக்கு மாறாக திணிப்பதை எம்மவர்கள் செய்து வருகின்றனர். வறிய மாணவர்களுக்கு நிறைவான பாடசாலை உணவு.. கிரமமாம மருத்துவப் பரிசோதனைகள் ஆலோசனைகள் என்று மேற்கு நாடுகளில் பெண் பிள்ளைகளின் மீதான கவனிப்பு ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் அதிகம் வழங்கப்படும் நிலையில் எம்மவர்களின் உணவுத் திணிப்புக்கள் அவசியமற்றனவாகவே இருக்கின்றன..! எம்மவர்கள் வழங்கும் உணவு நிறை உணவாக அன்றி.. கூடிய காபோவைதிரேற்று மற்றும் கொழுப்புணவாக அமைகின்றன. இவை பக்க விளைவுகளுக்கு இட்டுச் செல்லக் கூடியன. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்ததையும் எழுதுவம் என்று பார்கின்றேன்.

பருவமைடைதல் என்பது ஒரு "பல படிகொண்ட செயற்பாடு" எப்ப தொடங்கி எப்ப முடிகிறது என்று சொல்லத்தெரியவில்லை. நாங்கள் இங்கே பேசுவது தனியே மாதவிடாய் தொடங்குவது உடன் சம்பத்தப்பட்டது. பெண்பிள்ளை பிறக்கும் போது முட்டைக்குரிய அணுக்கள் சுலகத்தினுள் இருக்கும். சூலகம் வெளியே தெரியும் உறுப்பல்ல, அடிவயிற்றில் -ஆண்களுக்கு விதைகள் உள்ளமாதிரி- இடுப்பு பகுதியில் இருக்கும். இந்த ஒவ்வொரு அணுவும் 2 தடைவை பிரிய வேண்டும் ஒரு முட்டையை தர, முதலாவது பிரிவு கிட்டத்தட்ட 3 - 4 - 5 வயதில் நடக்கும்..வெளியில் ஒன்றும் தெரிவதில்லை..இரண்டாவது பிரிவு ஒவ்வொரு மாதவிடாயின் போதும் நடக்கும். நான் நினைக்கிறன் கிட்டதட்ட 600 வளமான முட்டைகள் ( ஒருக்கா பிரிந்த முட்டைகள் ) இந்த முட்டைகளில் ஒவ்வொன்றாக விருத்தியடைந்து (2 வது பிரிவு நடந்து ) மாதவிடாயின் போது வெளிவரும்.

பருவமடைவது என்பது தனியே இந்த முட்டை உருவாவது மாத்திரமல்ல. பெண்ணை அடுத்த சந்ததியை விருத்தி செய்வதரற்கு ஏற்றமாதிரி தயார் செய்வதும் ஆகும்.

இதை படிப்பவர்கள் நினைப்பார்கள்.. பெண்கள் ஒரு முட்டை கலத்தை உருவாக்க.. பெரிய சக்தியை.. உணவை செலவு செய்கிறார்கள் என்று. இதே போல.. மில்லியன் கணக்கான பிரிவுகள் ஆண்களில் நிகழ்கின்றன. பெண் ஒரு முட்டையை உருவாக்க இவ்வளவு சக்தி தேவை என்றால் ஒரு ஆண் மில்லியன் கணக்கான ஆண் அணுக்களை உருவாக்க எவ்வளவு சக்தி அவசியம்...?????! பெண் குழந்தைகள் பிறக்கும் போதே முதிராத முட்டைகளோடு தான் பிறக்கின்றன. அவை முதிர் வடைவது மட்டும் தான் பின் வாழ்க்கைக் காலத்தில் நிகழ்கிறது. ஆண் குழந்தைகள் அப்படியல்ல. அவர்கள் பருவ வயதை அடைந்த பின் தான் மில்லியன் கணக்கான கலங்களில் கலப்பிரிவு நிகழ்கின்றன.

ஒரு முட்டையின் முதிர்ச்சிக்கு தேவையான உணவு அதிகமா..??! மில்லியன் கணக்கான கலங்கள் பிரிய அதுவும் வளமான கலப்பிரிவுகளுக்கு அதிக உணவும் சக்தியும் அவசியமா...???!

இவர்கள் எந்த உலகில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனரோ...?????????!

பெண்களில் பருவ வயதை அடையும் போது கருப்பையில் நிகழும் புதுப்பிப்பு நிகழ்வே மாதவிடாய். அதுதான் எம்மவர்களால் சாமத்தியம் என்று அடையாளம் காணப்படுகிறது என்று நினைக்கிறேன். அதன் போது சிறிதளவு இரத்தம் மற்றும் கலச் சிதைவுகள் வெளியேறுவதை வைச்சுக் கொண்டு.. அதையே காரணம் காட்டி.. பெண் பிள்ளைகளுக்கு செய்யப்படும் திணிப்புக்கள் ஏராளம். அவற்றில் பல அநாவசியமானவை. பருவமடைந்த பெண் பிள்ளைகள் கிரமமாக குடும்ப நல வைத்தியரை அணுகி ஆலோசனைகள் பெற்றுக் கொண்டாலே போதும். அவர்கள் சரியான வழிகாட்டலை வழங்குவார்கள். மாறாக எம்மவர்களின் உள்ளூர் பத்தியம்.. வைத்தியம்.. பெண் குழந்தைகளுக்கு அவசியமா என்பதை மேற்குலகில் உள்ள உணவு வழக்கத்தோடு ஆராய்ந்த பின் செய்யப்பட வேண்டிய ஒரு முடிவாகும். ஆனால் எம்மவர்கள் ஊரில் அந்த காலநிலைக்கு என்ன செய்தார்களோ அதையே எல்லா இடமும் கொண்டு திரிகிறார்கள். ஒரு வகையான அறிவியல் சிந்தனையோ.. உறுதிப்படுத்தல்களோ அவற்றில் இல்லை. எல்லாம் ஆளாளுக்கு எழுதி வைக்கிறதுதான் சட்டம். இது எம்மவர்கள் மத்தியில் இருக்கும் ஒரு கொடுமையான வழக்கமும் கூட. இந்த விடயத்தில் மட்டுமன்றி பல விடயங்களில்... இது தொடர்கிறது.

மேற்குலகில் தெற்காசிய ஆசிய குழந்தைகள் மத்தியில் இருக்கும் பல விதமான குறைபாடுகள்.. மேற்குலக பூர்வீக பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளிடத்தில் குறைவாக இருக்கின்றன. இவற்றில் பல மரபணு மற்றும் உணவு வழக்கம் சார்ந்தவை. மரபணுக்களின் வெளிப்பாடு அல்லது செயற்பாடு உணவு வழக்கத்திலும் தங்கியுள்ளது. எனவே உணவு வழக்கம் என்பது வெறும் உணவை அள்ளி வயிற்றை நிரப்புவது என்றதாகாது. அந்தந்த சூழலுக்கு ஏற்ப.. அவரவருக்கு ஏற்ப உணவு வழக்கம் அவசியம். இதை முதலில் எம்மவர்கள் புரிந்து கொண்டு.. சரியான வைத்திய ஆலோசனைகளைப் பெற்று அவர்கள் சொல்லும் உணவு வழக்கத்தைக் கடைப்பிடிப்பதே நன்று. ஊர் பத்தியம்.. கசாயம்.. எல்லாம் இங்கு சரி வரும் என்று கணிக்கக் கூடாது. சரியும் வரலாம்.. வராமலும் விடலாம். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தம்பதியர் திருமணம் செய்து....

குழந்தை பெற்று, அதற்கு பல்லுக் கொழுக்கட்டை, போன்ற கொண்டாட்டங்கள் யாவும்..... அந்தக் குழந்தையின் மூன்று வயதுக்குள் முடிந்து விடும்.

பின் அந்தப் பெண் குழந்தை பருவமடையும் போது.... தான், சாமத்தியச் சடங்கு என்று உற்றார், உறவினர் கூடி அடுத்த மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடக்கும். அதாவது பத்து வருடத்தின் பின் நடக்கும் சுப நிகழ்ச்சி என்பதால்..... பலர் அதனை பெரிதாகவும் செய்கிறார்கள். சிலர் வெளிநாட்டில் சொல்லும் காரணம்....

இப்பவாவது செய்யாவிட்டால்.... கலியாணத்தை பெண் தானாக விரும்பி, வேற்று நாட்டவருடனோ... அல்லது பெற்றோருக்கு விருப்பமில்லாத இடத்திலோ..... அல்லது பெண் பிள்ளை வளர்ந்து கலியாணம் கட்டும் மட்டும் தாங்கள் உயிருடன் இருப்போமோ..... தெரியாத நிலையில் சாமத்தியப் பட்டதை பெரிது படுத்துகின்றார்கள்.

சிலர் குடுத்த காசை திரும்ப எடுப்பதற்கும்.... சாமத்தியச் சடங்கை ஊர், உலகம் எல்லாம் தம்பட்டம் அடித்து செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதெல்லாம் நாம் வாழக்கூடிய நாடுகளில் பெண் பிள்ளை பருவமடைந்தால் எத்தகைய பலவீனங்களுக்கும் உள்ளாகும் சாத்தியங்கள் குறைவு. இப்பருவமடைதல் இயல்பான வளர்ச்சியில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஊரிலெல்லாம் குழந்தை பெற்றால் தண்ணீர் குடிக்க மிகவும் கட்டுபாடு வைப்பார்கள் ஆனால் மிகவும் தவறானது என்று இன்றைய நாட்களில் அறியமுடிகிறது. குடலில் சேரும் அழுக்குகள் வெளியேறாமல் போகும்போது கால ஓட்டத்தில் அவை கர்ப்பப்பைப்புற்றுநோயைத் தோற்றுவிக்கிறது என்று அறியக் கூடியதாக இருக்கிறது. அடுத்து இன்றைய நாட்களில் அதுவும் புலம்பெயர் தேசங்களில் வாழும் எம் பெண் பிள்ளைகளுக்கு ஊரில் பார்த்ததுபோல் பத்தியம் தேவையில்லை என்பது எனது கருத்து. தண்ணீர் குடித்தால் வயிறு உப்பும் என்று தண்ணீரை குறைவாகக் குடிக்கவிடுவார்கள் தண்ணீர் குடிப்பதனால் வயிறு உப்பும் என்பது பொய்கதை வயிறு உப்புதல் குடும்பப் பின்னணி மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை தகுந்த உடற்பயிற்சி இல்லாமை ஆகியனவே பலரை பேத்தைகளாக உருவாக்கியிருக்கிறது. பத்தியம் என்று பெண்பிள்ளைகளை இம்சை செய்யாமல் நேரந்தவறாத ஆரோக்கியமான உணவு, நல்ல உடற்பயிற்சி இவை இரண்டையும் பெற்றோர் சரியாக கொடுத்து வந்தால் அந்தப் பெண்பிள்ளைக்கு உடல் வலிமை மட்டுமல்ல மனவலிமையும் கூடும்

கொசுறாக நெடுக்குத் தம்பி இனி உங்கள் அதாவது ஆண்களின் பருவமடைதலை வீட்டில் யார்டமாவது சொல்லுங்கள் காய்ம் காய்ச்சிக் கொடுக்க சிபார்சு செய்கிறோம் :D

இது நல்ல கருத்து. நம்ம வல்வை அக்காவிற்கு நடப்புச் சூழலை சரியாக அளவிடும் தன்மை இருக்கு என்பதை இக்கருத்து வெளிக்காட்டி நிற்கிறது. நன்றி அக்கா. இருந்தாலும் இடைக்கிடை சில திருப்திப்படுத்தலுக்காக மிச்சத்தை எழுதி இருக்கீங்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. :D:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த திரியை ஆரம்பிக்க காரனமாக இருந்தது.அணமையில் ஒரு பிளளை பருவம் அடைந்தா.அவரின் வயதும் எனது மகளின் வயதை ஒட்டியதே. அந்தப்பிள்ளையை பத்தியம் என்று ரொமப கொடுமைப்படுதியமாதிரி இருந்துச்சு. அதுதான் இங்குள்ளவர்களின் கருத்துக்களை அறியதான்.இங்கு கருத்து எழுதிய அனைவருக்கும் நன்றிகள்.உங்கள் கருத்துக்களால் பலரும் பயனடைவார்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தம்பதியர் திருமணம் செய்து....

குழந்தை பெற்று, அதற்கு பல்லுக் கொழுக்கட்டை, போன்ற கொண்டாட்டங்கள் யாவும்..... அந்தக் குழந்தையின் மூன்று வயதுக்குள் முடிந்து விடும்.

பின் அந்தப் பெண் குழந்தை பருவமடையும் போது.... தான், சாமத்தியச் சடங்கு என்று உற்றார், உறவினர் கூடி அடுத்த மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடக்கும். அதாவது பத்து வருடத்தின் பின் நடக்கும் சுப நிகழ்ச்சி என்பதால்..... பலர் அதனை பெரிதாகவும் செய்கிறார்கள். சிலர் வெளிநாட்டில் சொல்லும் காரணம்....

இப்பவாவது செய்யாவிட்டால்.... கலியாணத்தை பெண் தானாக விரும்பி, வேற்று நாட்டவருடனோ... அல்லது பெற்றோருக்கு விருப்பமில்லாத இடத்திலோ..... அல்லது பெண் பிள்ளை வளர்ந்து கலியாணம் கட்டும் மட்டும் தாங்கள் உயிருடன் இருப்போமோ..... தெரியாத நிலையில் சாமத்தியப் பட்டதை பெரிது படுத்துகின்றார்கள்.

சிலர் குடுத்த காசை திரும்ப எடுப்பதற்கும்.... சாமத்தியச் சடங்கை ஊர், உலகம் எல்லாம் தம்பட்டம் அடித்து செய்வார்கள்.

தமிழ் சிறி கூறுவது உண்மையெனினும், இந்தச் சாமத்தியச் சடங்கிற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது. அந்த நாட்களில் ஆண்களைப் போல பெண்கள் வெளியில் செல்வது மிகவும் குறைவு. அத்துடன் மிகவும் சிறிய வயதில் அவர்களைத் திருமணம் செய்து கொடுப்பார்கள்.ஆண்கள் பெண்கள் சந்திக்கும் வாய்ப்புக்கள் மிகவும் அரிதாக இருந்ததனால், தங்கள் வீட்டிலும் கலியாணத்துக்குத் தயார் நிலையில் ஒரு பெண் இருக்கின்றது என்பதை ஊருக்கும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் தெரியப் படுத்தவே இதை ஒரு விழாவாகச் செய்வார்கள். அதே வேலை தங்கள் ஆள் பலத்தையும், பண பலத்தையும் வெளிக்காட்டும் ஒரு கொண்டாட்டமாகவும் இது அமைந்திருந்தது.ஆனால் இப்போது இதன் உண்மையான நோக்கம் மறைந்து போக, இது ஒரு பணச் சடங்காக மாறி விட்டது.இதன் தேவை காலப் போக்கில் மறைந்து விடக் கூடும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நல்ல கருத்துக்களை அறியக்கூடியதாக இருந்தது.

நன்றிகள்

முக்கியமாக திரியைத்தொடங்கிய சஜீவனுக்கும் நெடுக்ஸ் மற்றும் சகாரா அக்காவுக்கு

ஏனெனில் இங்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு அதிகம் இவற்றை ஊட்டுகின்றோம் என்ற கணிப்பு எனக்கும் அதேநேரம் எனது குடும்ப பெண் பிள்ளைகளுக்கும் இருந்தது. அதற்கான தெளிவு இதில் மேலும் மேலும் கிடைத்துள்ளது.

பெண் பருவமடையும் போது வெளி நாட்டை பொறுத்தவரை இந்த பத்தியம் பணிகாரம் எல்லாம் தேவையற்ர ஒன்று தான் உண்மையில்

இந்த பத்தியம் கொடுப்பதால் தான் பெண்கள் வயிற்று வலி இன்றி இருக்கிறார்கள் என்பது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று

ஏனெனில் பத்தியம் பார்க்கப் பட்ட பெண்களும் கடுமையான வயிற்று வலியால் அவதிப்படுகிறார்கள்.............பின்னர் அந்த வலி என்பது

திருமணத்தின் பின் காணாமல் போய் விடுகிறது................

முன்னய காலத்தில் பல பேர் ஏற்கனவே எழுதியபடி வறுமை காரணமாக குறிப்பாக பெண்களுக்கு சத்துணவு கிடைப்பதில்லை அதனால் இந்த சந்தர்ப்பத்தை

பயன்படுத்தி நல்ல உணவுகளை செய்து கொடுப்பார்கள்................

இங்கே புலத்தை பொறுத்வரை 1500 கலோரி சாதாரண தேவை என்றால் 3000 கலோரிக்கு உண்ணுகிறோம்

பின்னர் எதற்கு இந்த ஆர வாரம் எல்லாம் ஒரு மனிதனின் உடல் ஆரோக்கியம் என்பது அவன் சிறுவயதில்

குடித்த தாய் பாலின் அளவிலும் பின் அன்றாடம் உண்ணும் நிறை உணவிலும் தான் இருக்கிறது..............

பெண் வயதிற்கு வருவது சாதாரண பருவ மாற்றம் இந்த நேரத்தில் இந்த விடயத்தை தாயும் தந்தையும் தமக்குள் மட்டும்

வைத்திருப்பதோடு பருவ மாற்றத்தால் பல மனக் கஸ்டங்களில் தவித்துக் கொண்டிருக்கும் தங்கள் பெண் குழந்தைகளுக்கு நிறைய

மன ஆறதல்களையும் அறிவுரைகளையும் அளவு கடந்த அன்பையும் கொடுத்து அவர்களை வழமையான வாழ்க்கைக்குள்

அழைத்து வந்தாலே அவர்கள் வாழ்க்கை புhராவும் சந்தோசமாகவும் நோய் இன்றியும் வாழுவார்கள். எத்தனையோ எங்களின் பெண்பிள்ளைகள் இந்;த

கோதாரி போன பத்தியம் சாமத்தியவீடு போன்ற முhட சம்புறுதாயங்களால் மன சோர்வுக்கும் மன பாதிப்புக்கும்

உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்........................

எம்மவர்கள் கள் வடிக்கும் பன்னாடை போன்றவர்கள்............அதாவது அறிந்து தெரிந்து கொள்ள வேண்டிய எவ்வளவோ நல்ல விடயங்கள்

இருக்கும் போது எதற்கும் பிரியோசனப் படாத குப்பைகளை இன்னும் காவிக் கொண்டு திரிகிறார்கள்................

நல்ல வேளை பெண் பிள்ளைகளை ஒவ்வொரு மாதமும் பேய் பிடிக்குமெண்டு பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்திருக்க ஆரம்பிக்கவில்லை

நான் உறுதியாகவும் அறுதியாகவும் சொல்லுகிறேன் பத்தியம் என்பது தேவை அற்ற ஒன்று.................

ஏற்கனவே மன குழப்பத்தில் கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த சிறுமிளை உயிரோடு வைத்து வதைக்காதீர்கள்

அன்பையும் அரவணைப்பையும் இனி உடலில் ஏற்படும் மாற்றங்களையும் தெளிவாக விளங்கப்படுத்துங்கள்

அதுவே உங்கள் பெண் பிள்ளைகளுக்கு நீங்கள் செய்யும் பெரு உதவி....................

அன்புடன்

தமிழ்மாறன்

எம் இன பெண் ஒருவர் தான் சாமத்திய வீட்டிற்கு போவதாகவும் அந்த சடங்கின் விளக்கத்தையும் வேற்று இன பெண்ணுக்கு சொன்ன

போது அந்த வேற்று இன பெண் கேட்டாளாம் அப்ப என்ன ஒவ்வொரு மாதமும் இந்த சடங்கு செய்வியளோ எண்டு!!!!!!!

வெள்ளைக்கார பெண்கள் எல்லோரும் பத்தியம் சாப்பிடுகிறார்களா?? அல்லது பத்தியம் சாப்பிட்ட எங்கள் பெண்கள் வயிற்று வலியால் துடிக்கவில்லையா??

ரதி மாற்று இனத்து பெண்கள் எவ்வளவு சுறுசுறுப்பாகவும் உடல் நலத்தோடும் வாழுகிறார்கள்...............என்பதை நீங்கள் பார்த்ததில்லையா (விகிதாசாரத்தில்)

Edited by thamilmaran

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாக எல்லோரும் என்ன முடிவுக்கு வந்துள்ளீர்கள்? பெண்கள் புலம் பெயர் நாட்டில் பருவமடைந்தால் அவர்களுக்கு பத்திய சாப்பாடு கொடுக்க வேண்டுமா? இல்லையா? இல்லை என சொல்லுபவர்கள் தங்கள் பெண்ணோ அல்லது சகோதரியோ பருவமடைந்தாலும் வழமையாக அவர்கள் என்ன சாப்பிடுவார்களோ அந்த சாப்பாட்டை தான் தொடர்ந்து கொடுப்பீர்களா? சாப்பாட்டில் ஒரு வித்தியாசமும் காட்ட மாட்டீர்களா? உண்மையை எழுதவும்...நன்றி.

ரதி மாற்று இனத்து பெண்கள் எவ்வளவு சுறுசுறுப்பாகவும் உடல் நலத்தோடும் வாழுகிறார்கள்...............என்பதை நீங்கள் பார்த்ததில்லையா (விகிதாசாரத்தில்)

தமிழ்மாறன் வெள்ளைக்காரன் 16 வயது வந்தவுடன் வீட்டில் வைத்து சாப்பாட்டோடு வைன்,அற்ககோல் முதலியவற்றை பாவிக்க அனுமதிக்கிறான்...அந்த பெண்களுக்கு வலி வந்தால் குடிப்பார்கள் வலி குறையும்...ஒவ்வொரு நாளும் சாப்பாட்டில் மிளகு தூவாமல் சாப்பிட மாட்டார்கள்...கோழியையோ,மீனையோ முழுசா சாப்பிட்டு விட்டு போவார்கள்...சுருக்கமாக சொல்லப் போனால் அவர்களது சாப்பாட்டுக்கும் எங்கள் சாப்பாட்டுக்கும் வித்தியாசம்

  • கருத்துக்கள உறவுகள்

அறிந்த ஒருவரின் மகள் சாமத்தியமாகிய பின் 42 நாட்கள் பாடசாலைக்கு அனுப்பவில்லையாம்.இப்படியானவர்களை நினைக்கும் போது ............................ :o:(

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாக எல்லோரும் என்ன முடிவுக்கு வந்துள்ளீர்கள்?

தமிழ்மாறன் வெள்ளைக்காரன் 16 வயது வந்தவுடன் வீட்டில் வைத்து சாப்பாட்டோடு வைன்,அற்ககோல் முதலியவற்றை பாவிக்க அனுமதிக்கிறான்...அந்த பெண்களுக்கு வலி வந்தால் குடிப்பார்கள் வலி குறையும்...ஒவ்வொரு நாளும் சாப்பாட்டில் மிளகு தூவாமல் சாப்பிட மாட்டார்கள்...கோழியையோ,மீனையோ முழுசா சாப்பிட்டு விட்டு போவார்கள்...சுருக்கமாக சொல்லப் போனால் அவர்களது சாப்பாட்டுக்கும் எங்கள் சாப்பாட்டுக்கும் வித்தியாசம்

ரதி

தங்களது கேள்விக்கான பதிலை நான் ஏற்கனவே மேலே எழுதியுள்ளேன். அதை தங்களால் ஒத்துக்கொள்ள முடியவில்லை என்று நினைக்கின்றேன். இந்த சாமத்தியத்தின்போது நாம் செய்யும் இது போன்ற அசாத்திய உணவு மாற்றங்களால் பெண்களுக்கு திடீரென உடம்பில் பெரும் மாற்றம் ஏற்படுவதை நாம் அவதானித்திருக்கின்றோம். அது பிற்காலத்தில் பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று வைத்தியத்துறையில் உள்ளவர்கள் சொல்லும்போது நாம் அதை ஏற்காது மீண்டும் மூதாதையர் பழக்கம் என்பதற்காக அதை புலம் பெயர்ந்த வளர்ச்சியடைந்த நாடுகளிலும் தொடரத்தான் வேண்டுமா...? என்பதற்கு எனக்கு தெளிவு கிடைத்துள்ளது.

அதேநேரம் இந்த பிரச்சினையை ஆண்களால் உணரமுடியாது என்பதையும் ஒத்துக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி

தங்களது கேள்விக்கான பதிலை நான் ஏற்கனவே மேலே எழுதியுள்ளேன். அதை தங்களால் ஒத்துக்கொள்ள முடியவில்லை என்று நினைக்கின்றேன். இந்த சாமத்தியத்தின்போது நாம் செய்யும் இது போன்ற அசாத்திய உணவு மாற்றங்களால் பெண்களுக்கு திடீரென உடம்பில் பெரும் மாற்றம் ஏற்படுவதை நாம் அவதானித்திருக்கின்றோம். அது பிற்காலத்தில் பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று வைத்தியத்துறையில் உள்ளவர்கள் சொல்லும்போது நாம் அதை ஏற்காது மீண்டும் மூதாதையர் பழக்கம் என்பதற்காக அதை புலம் பெயர்ந்த வளர்ச்சியடைந்த நாடுகளிலும் தொடரத்தான் வேண்டுமா...? என்பதற்கு எனக்கு தெளிவு கிடைத்துள்ளது.

அதேநேரம் இந்த பிரச்சினையை ஆண்களால் உணரமுடியாது என்பதையும் ஒத்துக்கொள்கின்றேன்.

எனக்கு புலம் பெயர் நாட்டில் இது பற்றி தெரியாது அண்ணா...சில வேளை நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கும்...இது பற்றி அறிந்து கொள்ளலாம் என்டு தான் நானும் கேட்டேன்.

சகோதரி ரதி அவர்களே வெள்ளைக்காரர்கள் 16 வயதில் குடிக்க ஆரம்பித்தாலும் வாழ்க்கை புhராவும்

அளவாகதான் உடல் நலத்திற்கு கேடு வாராத அளவிற்கு குடிக்கிறார்கள். ஆனால் எம்மவர்களோ

16 வயதில் திருட்டுத்தனமாக ஆரம்பித்து பின்னர் அவர்களை குடி குடிக்கும் நிலைக்கு மாறி விடுகிறார்கள்

உணவு முறையை எடுத்துக் கொண்டால் 5 நிமிடம் சமைத்து 5 மணித்தியாலம் சந்தோசமாக ருசித்து உண்ணுகிறார்கள்

ஆனால் நாங்கள் முழுக் கோழியை சிறு துண்டாக வெட்டி 5 மணித்தியாலம் சமைத்து 5நிமிசத்தில சாப்பிட்டு முடிக்கிறோம்

அது சரி சகோதரி எங்கட பெண்கள் குழந்தை பெற்றிருக்கும் போது விஸ்கி போத்தலுக்குள் என்ன தண்ணியா

விட்டு குடிக்கினம்..............கொஞ்சம் ஆ..................ளமாக ஆராய்ந்தால் எங்களை விட இந்த வெள்ளைக்காரர் மேல்

எதையும் வெளிப்படையாக செய்வார்கள் எம்மவர்கள் திருட்டுத்தனமாக செய்து விட்டு நல்லபிள்ளைக்கு நடிப்பார்கள்

அது தான் வித்தியாசம்......................

எங்கள் பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்தால் நாங்கள் யாருக்கும் சொல்லவும் தயார் இல்லை

பத்தியம் பார்க்கவும் மாட்டோம்.......................

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மாறன் நான் இங்கே சொல்ல வந்தது வேற்றினத்தவர் மது அருந்துவதன் மூலமும்[நான் எங்கே சொன்னேன் அவர்கள் அளவுக்கு அதிகமாய் குடிக்கிறார்கள் என்று]அவர்களது உணவுப் பழக்கம் மூலமும் அவர்களால் எம்மை[பெண்களை] விட வலிமை கூடியவர்களாக இருப்பார்கள்...நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உங்கள் பெண் பருவமடைந்தால் வலி நீங்குவதற்காக அற்ககோல் பாவிக்க அனுமதிப்பீர்கள் போல உள்ளது[மன்னிக்கவும் இல்லா விட்டால் உங்கள் பெண் பருவமடைந்து களவாக அற்ககோல் பாவித்தாலும் பேசாமல் இருப்பீர்களா?]...சாப்பாடும் முழுமையாக எங்கள் சாப்பாட்டை தவிர்த்து வெள்ளையளின் சாப்பாட்டை சாப்பிட கொடுப்பீர்களா?[அவர்களது சாப்பாடு சத்தானது என்பது தானே உங்கள் கருத்து.]...நானும் அறிந்து கொள்ளத் தான் கேட்கிறேன்.

அவர்கள் உணவு சத்தானது இல்லாமலா அவர்கள் நீண்காலம் உடல் ஆரோக்கியமாக

வாழுகிறார்கள்???

எங்கள் பெண் பிள்ளைகள் களவாக மது அருந்தும் அளவிற்கு நாம் வளர்கவில்லை

காரணம் அவர்களுக்கு வீட்டிலேயே மது இருக்கிறது விரும்பினால் அவர்கள் குடிக்கலாம் எங்கள் பிள்ளைகள்

திருட்டுத்தனமாக குடிப்பதை விட வீட்டில் நம் கண் குடிப்பது நலம் என எண்ணுகிறேன்

எனக்கு அந்த பழக்கம் இல்லை அதனால் நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை.................

எல்லாவற்றையும் மீறி குடித்தால் என்ன செய்ய முடியும!!!!!; வலிக்கு மாத்திரைகள் அதிகம் இருக்கின்றன

குடித்து தான் வலியை போக்க வேண்டும் என எந்த முட்டாள்கள் சொன்னார்கள்!!!

நாங்கள் தான் குழந்தை பிறந்த பின் தாய்க்கு பிரண்டி குடித்தால் தான் வயிற்று புண் ஆறும் என்று

சொல்லி குடிக்க கொடுக்கிறோம்!!!!

வேற்று இனத்தவரின் உணவு ஒன்றும் தரம் குறைந்ததும் இல்லை நஞ்சு உள்ளதும் இல்லை

எல்லாமே ஒரே வகை பொருள்களைக் கொண்டு தான் தயாரிக்கப்படுகின்றன!!!!!

சுவைதான் வேறு படுகின்றன அவர்களின் நாட்டு கால நிலைக்கு ஏற்றால் போல்

உணவு வகைகளும் இருக்கின்றன

அவர்கள் உணவு சத்தானது இல்லாமலா அவர்கள் நீண்காலம் உடல் ஆரோக்கியமாக

வாழுகிறார்கள்???

எங்கள் பெண் பிள்ளைகள் களவாக மது அருந்தும் அளவிற்கு நாம் வளர்கவில்லை

காரணம் அவர்களுக்கு வீட்டிலேயே மது இருக்கிறது விரும்பினால் அவர்கள் குடிக்கலாம் எங்கள் பிள்ளைகள்

திருட்டுத்தனமாக குடிப்பதை விட வீட்டில் நம் கண் குடிப்பது நலம் என எண்ணுகிறேன்

எனக்கு அந்த பழக்கம் இல்லை அதனால் நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை.................

எல்லாவற்றையும் மீறி குடித்தால் என்ன செய்ய முடியும!!!!!; வலிக்கு மாத்திரைகள் அதிகம் இருக்கின்றன

குடித்து தான் வலியை போக்க வேண்டும் என எந்த முட்டாள்கள் சொன்னார்கள்!!!

நாங்கள் தான் குழந்தை பிறந்த பின் தாய்க்கு பிரண்டி குடித்தால் தான் வயிற்று புண் ஆறும் என்று

சொல்லி குடிக்க கொடுக்கிறோம்!!!!

வேற்று இனத்தவரின் உணவு ஒன்றும் தரம் குறைந்ததும் இல்லை நஞ்சு உள்ளதும் இல்லை

எல்லாமே ஒரே வகை பொருள்களைக் கொண்டு தான் தயாரிக்கப்படுகின்றன!!!!!

சுவைதான் வேறு படுகின்றன அவர்களின் நாட்டு கால நிலைக்கு ஏற்றால் போல்

உணவு வகைகளும் இருக்கின்றன

வேலை இடத்தில் கானா நாடுக்காரி 'மின்ஸ் மீற்' என்று ஒன்றை மைக்ரோவேவில் ஒருதரம் சூடாக்கினாள் கடவுளே........!!!! :o ஒரு வாரத்துக்கு staff room மட்டும் இல்லை அந்த floor முழுக்க நாத்தம். அங்கு இருந்த ஒருத்தன் கேட்டான் உது என்ன சாப்பாடா என்று? அதுக்கு அவள் விளக்கம் சொன்னதும் (பன்னி, ஆடு, மாடு, கோழி எல்லா மின்ஸ் மீற்றையும் சேர்த்து சமைத்ததாம்) அவன் பெரிய சத்தமாக ஓங்காளித்துக் கொண்டு offensive smell என்று போட்டு ஓடிட்டான். இப்ப நினைச்சாலும் குடல் வாயால் வாறது மாதிரி இருக்கு... :blink:

எங்கட எல்லாம் பெரிசு நல்லது எண்டு தம்பட்டம் அடிச்சுக் கொண்டு இருக்க வேண்டியது தான்

எங்கட மிளகாய் தூளை மணக்கச் சொல்லிப் போட்டு அதில கறி சமைத்துக் கொடுத்தால்

வேற்று இனத்தவர்கள் எங்களை புகழுவார்களாக்கும்???

அவங்களும் உங்களிற்கு கறி சோறை விட வேறு ஒண்டும் தெரியாதோ

எண்டு கெக்கினம் பாருங்கோ..............

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தலைப்பு நமது உணவு சிறந்ததா? அல்லது அவர்கள் உணவு சிறந்ததா? என்பது இல்லை என்று நினைக்கிறேன்...இங்கு பிறந்த பிள்ளைகளுக்கு பத்திய சாப்பாடு கொடுக்க வேண்டுமா? இல்லையா? என்பது தான் கேள்வி...உங்களுக்கு பத்திய சாப்பாடு கொடுக்க விருப்பம் இல்லா விட்டால் அதற்குரிய தகுந்த காரணங்களை எழுதுங்கள்...அதை விடுத்து எதற்காக வெள்ளைக்காரன் சாப்பாடு நல்லது எங்களது சாப்பாடு சரியில்லை என எழுதுகிறீர்கள்.பிறகு எதற்கு எங்கள் சாப்பாட்டை சாப்பிடுகிறீர்கள்? சமையல் குறிப்பை இங்கு கொண்டு வந்து இணைக்கிறீர்கள்?...நான் எங்கேயாவது அவர்களது சாப்பாடு சரியில்லை என்று எழுதினேனா?...ஊரிலே உப்பு,காரம் அதிகமாக பாவிப்பார்கள் அதற்காக நாங்களும் இங்கே அதே அளவு உப்பு,காரம் பாவிக்கிறோமா இல்லைத் தானே அதே போல உழுந்தையும்,எள்ளையும் அளவாக பாவித்தால் பிரச்சனை இருக்காது என்பது என் கருத்து...உள்ளி,இஞ்சி சமையலில் நாங்கள் சேர்க்க மாட்டோம் ஆனால் அதையே மருந்தில் சேர்த்து இருந்தாங்கள் என்டால் இரு மடங்கு காசு கொடுத்து வேண்டி விழுங்குவோம்...தமிழன் தான் தன்னை தானே தாழ்த்திகிறதில் முதல் இடத்தில் இருக்கிறார்கள் இந்தியனோ,பாக்கிஸ்தான்காரரோ தங்கள் சாப்பாட்டை எப்பவாவது தாழ்த்தி மற்ற நாட்டுக்காரர் சாப்பாட்டை உயர்த்தி சொல்வதை கேட்டு இருக்கிறீங்களா?...வெள்ளையள் கூட எங்கட சாப்பாட்டை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.