Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு சர்வதேச கண்காணிப்பிலான அதிகார அலகு வேண்டும்: ஐ.நா. நிபுணர் அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு சர்வதேச கண்காணிப்பிலான அதிகார அலகு வேண்டும்: ஐ.நா. நிபுணர் அறிக்கை..

ஞாயிற்றுக்கிழமை சித்திரை மாதம் 17ம் நாள், 2011.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு சர்வதேச கண்காணிப்பிலான அதிகார அலகொன்று வழங்கப்பட வேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் உட்பட முறையற்ற சம்பவங்கள் அனைத்துக்கும் அதிகார சமப்பகிர்வின்மையே காரணம் என்பதைக் கண்டறிந்துள்ள ஐ.நா. நிபுணர் குழு அதனை எதிர்காலத்திலும் தொடரவிடாமல் தடுக்கும் வகையில் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

அதில் முக்கியமானது தமிழ் மக்களுக்குத் திருப்திப்படத்தக்க வகையில் அதிகாரப் பகிர்வொன்றை வழங்கி, தமிழ் மக்கள் உள்ளடங்கும் அதிகார அலகு தொடர்பில் சர்வதேசத்தின் கண்காணிப்பு அவசியம் என்று அது பரிந்துரைத்துள்ளது.

அதன் பிரகாரம வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு கணிசமான அதிகாரங்களுடன் கூடிய அதிகார அலகொன்று வழங்கப்படுவதுடன், அதன் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை விட சர்வதேசத்தின் கண்காணிப்புக்குழுவொன்றுக்கு தலையிடுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பது நிபுணர் குழுவின் பரிந்துரையின் சாராம்சமாகும்.

அத்துடன் அங்கு அமையும் உருவாக்கப்படும் அதிகாரப் பிரிவு (மாகாண சபை அல்லது சமஷ்டி அரசாங்கம்) சர்வதேசத்துக்குப் பொறுப்புக் கூறுவதாக அமைந்திருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

http://thamilarasu.com/

நுணா அண்ணா

அவர்களின் பரிந்துரை மிகவும் மகிழ்ச்சி தருகிறது. ஐநா அமைதி படையை அனுப்பி வட கிழக்கு இணைந்த ஒரு சமஷ்டி அரசாங்கத்தை உருவாக்கி சிங்கள ராணுவத்தை வெளியேற்றி ஒரு நிரந்தர தீர்வை ஐநாவால் அமுல் படுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா? அதை அவர்கள் செய்வார்கள? அதனை மஹிந்த எதிர்க்கும் போது ஐநா சட்டப்படி வட கிழக்கில் பொதுசன வாக்கெடுப்பு நடத்தி தமிழ் மக்கள் விருப்பபடி பிரிந்து சென்று தனியரசு அமைக்க அனுமதிப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் அங்கு அமையும் உருவாக்கப்படும் அதிகாரப் பிரிவு (மாகாண சபை அல்லது சமஷ்டி அரசாங்கம்) சர்வதேசத்துக்குப் பொறுப்புக் கூறுவதாக அமைந்திருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

எதிர்பார்த்து எதிர்பார்த்தே தன் வாழ்கையில் பெரும் பகுதியை வீணடித்தவன் தமிழன். எதிர் பார்த்தது நிறைவேறாத போது, அதற்குப் பழக்கப் பட்டவன் போல புதிய எதிர்பார்ப்புக்களை வளர்த்துக் கொள்வதும் அவன் இயல்பு, இந்த முறை அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டுமென ஆசைப் படுகின்றேன்!!!

இணைப்புக்கு நன்றிகள் நுணா.

இன்று எமக்கு கிடைத்த அனுகூலங்களை வைத்து நாம் காய்களை நகர்த்தவேண்டும். எமது முதன்மை இலக்கு எமது மக்களின் விடுதலை.

எம்மில் பலர் நம்பி இருக்கவில்லை போர்க்குற்ற விசாரணைகள் இந்த அளவுக்கு கூடவரும் என்று. பான் கி மூன், நம்பியார் என பலர் உள்ளுக்குள்ளேயே இருந்து சிங்களத்திற்கு உதவினார்கள் என்பதும் ஒரு காரணம். சிங்களத்திற்கு இந்தியாவை மீறி உதவ மறுத்த மேற்குலகம் உதவுமா?, என்பதும் ஒரு கேள்வியாக இருந்தது. முள்ளிவாய்க்காலுடன் எல்லாமே முடிந்து விட்டது என்று ஒரு சோகமும் இருந்தது.

தோல்வியில் இருந்து நாம் மீளவேண்டும், அதற்கு ஒரு ஒப்பீட்டுக்கு ஜெர்மனி இல்லை ஜப்பான் (அணுக்குண்டு அமெரிக்கா போட்டது) நாடுகளை பார்க்கலாம். யூத இனத்தை பார்க்கலாம்.

சர்வதேசத்தின் ஊடாக சிங்களம் விரும்பியோ விரும்பாமலோ, எமது விடுதலையை வென்றெடுக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

ஜ.நா. முன்றலில் ஜரோப்பிய தமிழர் திரளவேண்டிய நேரம் வந்துவிட்டது. அனைவரும் பங்கு பற்றக்கூடிய நாளைத்தெரிவு செய்து ஏற்பாடுகளை மக்களவைகளோ நா.க. அரசோ செய்ய வேண்டும். இனிமேல் இது போன்ற நிகழ்வுகளை எவர் உடனடியாக செய்வது திறம்பட நடாத்தி மக்களின் ஆதரவைப் பெறுவது என்பதிலேயே இவர்களது போட்டிகள் இருக்கவேண்டும்.

"ஜ.நா. முன்றலில் ஜரோப்பிய தமிழர் திரளவேண்டிய நேரம் வந்துவிட்டது. அனைவரும் பங்கு பற்றக்கூடிய நாளைத்தெரிவு செய்து ஏற்பாடுகளை மக்களவைகளோ நா.க. அரசோ செய்ய வேண்டும். இனிமேல் இது போன்ற நிகழ்வுகளை எவர் உடனடியாக செய்வது திறம்பட நடாத்தி மக்களின் ஆதரவைப் பெறுவது என்பதிலேயே இவர்களது போட்டிகள் இருக்கவேண்டும்."

இந்த கருத்தை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

தனி நாடு பெறுவதற்கு காலமும் நேரமும் கனிந்து வந்துள்ளதாகவே எண்ணி நாம் செயல்பட வேண்டும். அண்மையில் தமிழ்நெட்டில் புரபெசர் போயில் கூறியது போல 'தனி நாடு தான் ஒரே தீர்வு' என உலகிற்கு கூறவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா முன்றலில் ஏற்பாடு செய்யும் போராட்டமானது உரிய கால அவகாசத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும் .குறைந்தது 2 கிழமைக்கு முதலாவது திகதி அறிவிக்கப்பட்டால்தான் விடுமுறை எடுத்து வர வசதியாக இருக்கும்.எல்லோரும் பங்குபற்றுவதற்கு வசதியாக இருக்கும் .பெரிய ஒரு சனத் தொகையைத் திரட்டிக்காட்டலாம்.

முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிந்துவிடவில்லை.

எமது விடுதலைக்கான வாசலை அந்தப் பேரவலம் தற்போது திறந்துவிட்டிருக்கிறது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவோம். எமது விடுதலையை வென்றெடுப்போம்.

அனைத்துலக தொடர்பகத்தினரே!

தலைமைச் செயலகத்தினரே!

நாடு கடந்த தமிழீழ அரசினரே!

தமிழீழ மக்களவையினரே!

உலகத் தமிழர் பேரவையினரே!

உங்களிற்குள் இருக்கும் புடுங்குப் பாடுகளை கொஞ்சக்காலம் ஒதுக்கி வையுங்கள்.

எதற்காக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் உயிரைக் கொடுத்தனர்...?

எதற்காக 2 இலட்சம் வரையான மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன...?

என்பதை உணர்ந்து இந்த சரியான வாய்ப்பை பயன்படுத்தி ஒற்றுமையாக உழையுங்கள். மக்கள் உங்களிற்கு பின்னால் அணி திரள்வார்கள்.

இனிவரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு போராட்டத்தையும் ஒரு அமைப்பின் பலத்தைக் காட்டுவதற்காக நடத்தாதீர்கள்.

தமிழரின் ஒருமித்த குரலை ஓங்கச் செய்ய நடத்துங்கள்.

ஒரு அமைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தால் ஏனைய அமைப்புக்கள் மக்களைத் திரட்டிக் போராட்டத்தை வெற்றியடைய வையுங்கள்.

ஒற்றுமையுடன் செயற்படுங்கள்.

நான் பெரிது நீ பெரிதென்று வாழாது

நாடு பெரிதென்று வாழுங்கள்.

தலைவரின் இந்த வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்துச் செயற்படுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிந்துவிடவில்லை.

எமது விடுதலைக்கான வாசலை அந்தப் பேரவலம் தற்போது திறந்துவிட்டிருக்கிறது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவோம். எமது விடுதலையை வென்றெடுப்போம்.

ஆயுதத்தை மொனித்ததுடன்

அடுத்த கட்டத்திற்கான திறவுகோலாகவே முள்ளிவாய்க்கால் அவலம் எடுக்கப்பட்டது. எனவே அதனை செய்து முடிக்கவேண்டியவர்கள் புரிந்து கொண்டு நடவடிக்கைகளில் இறங்கவேண்டும். இல்லாது விடில் மின்னல் எழுதியதன் அடுத்தபடியாக எல்லாத்தியாகங்களும் வீணாகிவிடும்.

இறுதிப் போரின் முடிவில் வெளிநாட்டுக்கு பாதுகாப்பாகச் சென்றவர்கள்,

தமது அவலங்களை,

தாம் கண்டவற்றை - படுகொலைகளை, குண்டுவீச்சுக்களை. ஆவணப் படுத்தி,

சர்வதேச நீதிமன்று, ஐ. நா. சபைகள், போன்றனவற்றுக்கு தொடர்ந்து அனுப்புவது வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.