Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா ஐ.நாவுக்கு எதிராக 10இலட்சம் கையொப்பம் திரட்ட முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா ஐ.நாவுக்கு எதிராக 10இலட்சம் கையொப்பம் திரட்ட முடிவு

April 20th, 2011 nila

சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாகவும் சிறிலங்காவின் தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பி.ரத்நாயக்கா அறிவித்துள்ளார்.

கொழும்பில் நாளை பத்து மணியளவில் இந்த எதிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் நாடு தழுவிய ரீதியில் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

http://thaynilam.com/?p=767

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ

எத்தனை கொலையோ அதற்கேற்ப கையெழுத்து வாங்கினால் விடுதலையென்றால்......

எத்தனைபேர் உள்ளே இருப்பார்....? :(:(:(

இதே போன்ற ஒன்றை தமிழ் நாட்டு தமிழர்களின் உதவியுடன் நாம் ஒற்றுமையாக நடத்தினால் ஆகக் குறைந்தது ஐம்பது இலட்சம் பெற முடியும். நாம் தமிழர் அமைப்புடன் இணைந்து புலம்பெயர் அமைப்பு ஒன்று நடத்த முன்வரவேண்டும்

இன்னொரு முக்கியமான கேள்வி...

50 லச்சமில்லை... 50 கோடி கையெழுத்து சேர்த்தாச்சு எண்டு வைப்போம்.............. பிறகு?

எமது நேர, பொருள் விரயமே தவிர வேறு ஒன்றுமில்லை

ஐ.நா. நிபுணர் குழுவுக்கு விடுதலைப் புலி ஆதரவாளர்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்துள்ளார்கள்: அமைச்சர் விமல் வீரவங்ச

[ புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011, 03:42.56 PM GMT ]

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களிடமிருந்து கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டே ஐ.நா. நிபுணர் குழு தனது அறிக்கையைத் தயாரித்துள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டுகின்றார்.

கெஸ்பாவை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வீடமைப்பு வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குற்றம் சாட்டியுள்ளார்.

ஐ.நா. நிபுணர் குழுவின் மூன்று அதிகாரிகளுக்கும் விடுதலைப் புலிகளின் சர்வதேச மட்டத்தில் செயற்படும் ஆதரவாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆகிய தரப்புகளிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது.

அதனைப் பெற்றுக் கொண்டு நிபுணர் குழுவும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்குத் தேவையான முறையில் தமது அறிக்கையை இலங்கை அரசாங்கத்தைக் குற்றம் சாட்டும் வகையில் தயாரித்துள்ளனர் என்றும் அவர் தொடர்ந்தும் குற்றம் சாட்டியுள்ளார்

http://www.tamilwin.com/view.php?222IBJ300jjQA4eeGGpVcbb992Eddd2292bccppG3e44QQj3023LLc32

இதே போன்ற ஒன்றை தமிழ் நாட்டு தமிழர்களின் உதவியுடன் நாம் ஒற்றுமையாக நடத்தினால் ஆகக் குறைந்தது ஐம்பது இலட்சம் பெற முடியும். நாம் தமிழர் அமைப்புடன் இணைந்து புலம்பெயர் அமைப்பு ஒன்று நடத்த முன்வரவேண்டும்

காலத்தின் தேவையும் கூட...

இன்னொரு முக்கியமான கேள்வி...

50 லச்சமில்லை... 50 கோடி கையெழுத்து சேர்த்தாச்சு எண்டு வைப்போம்.............. பிறகு?

எமது நேர, பொருள் விரயமே தவிர வேறு ஒன்றுமில்லை

முதலில் செய்து போட்டு பிறகு எதுவும் நடக்காவிட்டால் கவலைப் பாடலாமே?

ஏன் செய்ய முதலே கவலைப் படுவான்?? :rolleyes:

முதலில் செய்து போட்டு பிறகு எதுவும் நடக்காவிட்டால் கவலைப் பாடலாமே?

ஏன் செய்ய முதலே கவலைப் படுவான்?? :rolleyes:

சரி செய்யலாம்...

இதற்கு ஒரு புலம்பெயர் அமைப்பு வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு வீதியில் இறங்கி செயல்படவேண்டும்... ரேடியோ தொலைக்காட்சி விளம்பரம்.... இன்டெர்நெட் விளம்பரம்.. தொண்டர்களின் நேரடி மக்கள் தொடர்புள்ள செயற்பாடுகள்.. நாம் தமிழர் போன்ற இதர அமைப்புக்களுடன் கலந்துறையாடல்கள், கருத்தரங்குகள், கூட்டங்கள்..

நடக்கிற காரியமா இது...

  • கருத்துக்கள உறவுகள்

இதே போன்ற ஒன்றை தமிழ் நாட்டு தமிழர்களின் உதவியுடன் நாம் ஒற்றுமையாக நடத்தினால் ஆகக் குறைந்தது ஐம்பது இலட்சம் பெற முடியும். நாம் தமிழர் அமைப்புடன் இணைந்து புலம்பெயர் அமைப்பு ஒன்று நடத்த முன்வரவேண்டும்

நல்ல யோசனை நிழலி. அதுகும் தமிழ்நாட்டு தேர்தல் முடிவு வர முன்னர் இந்த கையெழுத்து வேட்டையை ஆரம்பிக்க வேண்டும்.தேர்தல் முடிவு வெளியாகினால் வழக்கம் போல்.... ஆட்சியிலிருக்கும் கட்சி ஈழத்தமிழரின் நலனுக்கு எதிராகவே... செயல்படும்.

அவன் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல நடவடிக்கையில் இறங்கிவிட்டான், நாங்கள் என்ன செய்யபோகிறோம் ? இதையும் கேளுங்கள் http://yarl.com/files/kiruba_200110419.mp3

சரி செய்யலாம்...

இதற்கு ஒரு புலம்பெயர் அமைப்பு வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு வீதியில் இறங்கி செயல்படவேண்டும்... ரேடியோ தொலைக்காட்சி விளம்பரம்.... இன்டெர்நெட் விளம்பரம்.. தொண்டர்களின் நேரடி மக்கள் தொடர்புள்ள செயற்பாடுகள்.. நாம் தமிழர் போன்ற இதர அமைப்புக்களுடன் கலந்துறையாடல்கள், கருத்தரங்குகள், கூட்டங்கள்..

நடக்கிற காரியமா இது...

ஒருவர், இருவர் அல்ல பலர் மனம் வைத்தால் நடைமுறைப் படுத்தலாம் அண்ண...

சிங்கள அரசின் போர் குற்றங்களை ஆதாரங்களுடன் ஐ.நா வரைக்கும் எடுத்து சென்று இப்படி ஒரு அறிக்கை வர வைத்தார்கள். இணையங்களில் நாம் எமக்குள்ளே கடிபட்டு அடிபடுவதை தவிர்த்து எமது ஆதரவையும் வழங்குவது தான் இபோதைய தேவை. இளையோர் அமைப்பு, புரச்சிகர மாணவர் அமைப்பு, BTF, நாடு கடந்த தமிழீழ அரசு இப்படி இன்னும் உலக அளவில் உள்ள தமிழ் அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஆரம்பிக்கும் போது தமிழ்நாட்டில் உள்ள நாம் தமிழர் அமைப்பினரும் அதற்கு ஆதரவு அளிக்கக் கூடும்...

அறிக்கை இலங்கை அரசுக்கு எவ்வளவு பாதகமானது என்பதற்கான உதாரணங்கள்

1 இலங்கை தொடர்பான ஐ.நாவின் அறிக்கைக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு

2. ராஜீவ் காந்தியையும் பிரேமதாசவையும் படுகொலை செய்யுமாறு விடுதலைப் புலிகளைத் தூண்டியது அமெரிக்காவும் பிரிட்டனுமே: அமைச்சர் சம்பிக்க ரணவக்க

3.ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கெதிராக சஜித் குழுவினர் அரசாங்கத்துடன் கைகோர்ப்பு

4 ஐ.நா. நிபுணர் குழுவுக்கு விடுதலைப் புலி ஆதரவாளர்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்துள்ளார்கள்: அமைச்சர் விமல் வீரவங்ச

5. சிங்கள-தமிழ் நல்லிணக்கத்தை வெளிக்காட்டும் வகையில் ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

6. மஹிந்த அன் கோ மின்சாரக் கதிரைக்கு அனுப்பப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை: சரத் பொன்சேகா

7 . ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக பத்து லட்சம் கையெழுத்து வேட்டை

இப்படி செய்திகள் வரும் போது நாம் போராடாமல் இருக்கமுடியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

இங்க சொல்லப்படும் கையெழுத்து வேட்டை, வேறுவழியிலான போராட்டங்கள் எல்லாம் முக்கியம் அதை விட சில உள் வேலைகள் செய்வது இன்னும் முக்கியம் என நான் நினைக்கிறேன். புலிகள் இல்லாத படியால் தமிழர் தரப்புக்கு இந்த அறிக்கையால் பெரிய பாதகம் இல்லை. எல்லாத் தலைவர்களும் sitting duck மாதிரி உயிரோடு இருப்பதால் சிங்களவர்களுக்கு இந்த அறிக்கை முழுமையாகப் பாதகமானது. இந்த நேரத்தில் நாங்கள் தெருவுக்கு இறங்கிப் போராட வேண்டிய தேவைகள் இல்லையென நினைக்கிறேன் (மறுபக்கம், தெருவில் இறங்கிப் போராடிய போதும் உலக நாடுகள் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதையும் கவனிக்க வேணும்). எனவே சில நாசூக்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க வேண்டும்:

1. ஆங்கில பிறமொழிப் பத்திரிகைகளில் கட்டுரைகள் கடிதங்கள் எழுதக் கூடியவர்கள் எழுத வேண்டும். இனியும் தமிழில் எழுதி தமிழ் நாட்டுப் பத்திரிகைகளிலும் இணையங்களிலும் குதிரையோட்டுவது பயன் தராது. ஆங்கிலம் சரளமாகத் தெரியாத அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவருக்கு பல அமெரிக்கப் பத்திரிகைகளில் (வேறு ஆளை வைத்து) கட்டுரை/கடிதம் எழுத முடியுமானால், எங்களிடம் ஆட்கள் இல்லையா?

2. ஒவ்வொரு இன அழிப்பைப் பற்றியும் பல பத்து அல்லது நூறு நூல்கள் வந்து விட்ட நிலையில் முள்ளிவாய்க்கால் அவலம் பற்றி எத்தனை நூல்கள் ஆங்கிலத்தில் வந்தன என்று தெரியவில்லை.எழுத வேண்டும். மொழி உதவி தேவையெனில் ஒரு ஒப்பந்தம் போட்டு வேலை செய்யக் கூடிய நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருக்கின்றன.

3. ராஜதந்திரம் என்பதை நா.க. அரசு பரீட்சித்துப் பார்க்க வேண்டிய நேரம் இது. குறைந்த பட்சம் நாட்டுத் தூதுவர்களுடனாவது சந்திப்புகளுக்கு நேரம் ஒதுக்கும் படி கேட்டு முயல வேண்டும். நா,க அமைப்பை ஏற்றுக் கொள்ளாமல் போகக் கூடிய தேசங்களின் பிரதிநிதிகளை மற்றைய அமைப்புகள் அணுகலாம்.

இதே போன்ற ஒன்றை தமிழ் நாட்டு தமிழர்களின் உதவியுடன் நாம் ஒற்றுமையாக நடத்தினால் ஆகக் குறைந்தது ஐம்பது இலட்சம் பெற முடியும். நாம் தமிழர் அமைப்புடன் இணைந்து புலம்பெயர் அமைப்பு ஒன்று நடத்த முன்வரவேண்டும்

நிழலி, ... இதனைப் போல் பலவற்றைச் செய்யலாம்!!! ... எம்மவர்கள் புலத்தில் போராட்டம் என்றால், அது வீதிகள் மறிப்போ அல்லது தீயிட்டு நடு வீதியில் துடிக்க துடிக்க சாவதுகளையே நினைக்கிறார்கள்!!! ...

... கேட்டால் உன்னிப்பாக அவதானிக்கிறார்களாம்????? அல்லது சிலவற்றை வெளியில் கூற முடியாத நிலையில் இருக்கிறார்களாம்???? .... யாரை ஏமாற்றுகிறார்கள்??? ....

.... உண்மையைச் சொன்னால் ... இங்கு எங்கள் பிரதிநிதிகள் என விளம்பரங்களில் வந்தவர்களுக்கு, இப்படியானவற்றை விவாதித்து/கேட்டு/கூடிச் செய்ய நேரமே இல்லையாம்!!!!!!! ... அவர்களின் வேலைகள், குடும்பங்கள் என்பவற்றை கவனிக்க நேரமில்லாது இருக்கிறார்கள் என சிலரின் மனைவிமார் கூறுகிறார்களாம்!!!! .... அப்போ, ஏன் இவர்கள் செய்வோம்/செய்து காட்டுகிறோம் என கூறி சந்திக்கு வந்தார்கள்????????

நியாயமான கேள்வி தான். ஆனால் இது ஒரு உண்மையான பிரச்சினை. வெளிநாட்டில் குடும்பம் இருந்தால் இந்த மாதிரியான வேலைகள் பார்க்க நேரம் இருக்காது. அப்படியானால் இந்த வேலை செய்பவர்களுக்கு ஊக்கத் தொகை மாதிரி அல்லது அவர்களது நேரப் பயன்பாட்டுக்கு ஏற்றமாதிரியான ஒரு தொகையைக் கொடுப்பனவாக வழங்கலாமா? நிதி மூலம் எங்கே? இப்ப பலர் ஒடி வந்து கோபப் படுவார்கள் இந்த யோசனை பற்றி. ஆனால் இது நாங்கள் தீர்வு காண வேண்டிய ஒரு விஷயம். நா.க. அரசு போன்ற அமைப்புகள் இன்னும் பல வருடங்களுக்குச் செயல் பட வேண்டியிருப்பதால் இந்த மாதிரி விஷயங்கள் அதைப் பலவீனப் படுத்தாமல் தீர்வு காண வேண்டும்!

... ...

... கேட்டால் நாங்கள் பிரதிநிதிகள் என்றாலும், பகுதிநேரமாகத்தான் வேலை மக்களுக்காக உழைக்கிறோம்(தமக்கும் குடும்பங்கள் இருக்கின்றனவாம்) ... அதற்கு நேற்று ஓர் வானொலியில் ... உங்களுக்கு பகுதி நேரமாகத்தான் உழைக்க முடியும் என்றால், உங்களைப்போல் பலரை, பகுதி நேரமாகத்தான் உழைக்க முடியும் என்பவர்களை, இணைத்து இரவு பகலாக உழையுங்கள்!!! உங்களிடம் பொறுப்பு கையளிக்கப்பட்டிருக்கிறது, அதனை செய்வோம் என்றும் கேட்டுப் பெற்றீர்கள் ... செய்யுங்கள்!!! ... உங்களிடம் பொறுப்புக்கள் ஒப்படைத்தது ஒரு நாலைக்கு சில மணி நேரம் கணனி முன் இருந்து அறிக்கைகள் விடவல்ல, அல்லது மாதமொருமுறை நாலு பேர் சேர்ந்து கதைத்துப் போட்டுப் போகவல்ல!!!! .

..... ...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=84184&st=0

நாம் எல்லா முயற்சிகளிலும் தொடர்ச்சியாக ஈடுபடல் வேண்டும்.

அதேவேளை இந்த அறிக்கை இவ்வளவு தூரம் 'வெற்றியாக' அமைந்ததற்கு என்ன காரணம்? என்ற கேள்விக்கு நாம் ஒரு பதிலையும் தேடலாம். ஏனெனில் அந்த வழியையும் நாம் தொடரலாம்.

இங்க சொல்லப்படும் கையெழுத்து வேட்டை, வேறுவழியிலான போராட்டங்கள் எல்லாம் முக்கியம் அதை விட சில உள் வேலைகள் செய்வது இன்னும் முக்கியம் என நான் நினைக்கிறேன். புலிகள் இல்லாத படியால் தமிழர் தரப்புக்கு இந்த அறிக்கையால் பெரிய பாதகம் இல்லை. எல்லாத் தலைவர்களும் sitting duck மாதிரி உயிரோடு இருப்பதால் சிங்களவர்களுக்கு இந்த அறிக்கை முழுமையாகப் பாதகமானது. இந்த நேரத்தில் நாங்கள் தெருவுக்கு இறங்கிப் போராட வேண்டிய தேவைகள் இல்லையென நினைக்கிறேன் (மறுபக்கம், தெருவில் இறங்கிப் போராடிய போதும் உலக நாடுகள் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதையும் கவனிக்க வேணும்). எனவே சில நாசூக்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க வேண்டும்:

1. ஆங்கில பிறமொழிப் பத்திரிகைகளில் கட்டுரைகள் கடிதங்கள் எழுதக் கூடியவர்கள் எழுத வேண்டும். இனியும் தமிழில் எழுதி தமிழ் நாட்டுப் பத்திரிகைகளிலும் இணையங்களிலும் குதிரையோட்டுவது பயன் தராது. ஆங்கிலம் சரளமாகத் தெரியாத அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவருக்கு பல அமெரிக்கப் பத்திரிகைகளில் (வேறு ஆளை வைத்து) கட்டுரை/கடிதம் எழுத முடியுமானால், எங்களிடம் ஆட்கள் இல்லையா?

2. ஒவ்வொரு இன அழிப்பைப் பற்றியும் பல பத்து அல்லது நூறு நூல்கள் வந்து விட்ட நிலையில் முள்ளிவாய்க்கால் அவலம் பற்றி எத்தனை நூல்கள் ஆங்கிலத்தில் வந்தன என்று தெரியவில்லை.எழுத வேண்டும். மொழி உதவி தேவையெனில் ஒரு ஒப்பந்தம் போட்டு வேலை செய்யக் கூடிய நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருக்கின்றன.

3. ராஜதந்திரம் என்பதை நா.க. அரசு பரீட்சித்துப் பார்க்க வேண்டிய நேரம் இது. குறைந்த பட்சம் நாட்டுத் தூதுவர்களுடனாவது சந்திப்புகளுக்கு நேரம் ஒதுக்கும் படி கேட்டு முயல வேண்டும். நா,க அமைப்பை ஏற்றுக் கொள்ளாமல் போகக் கூடிய தேசங்களின் பிரதிநிதிகளை மற்றைய அமைப்புகள் அணுகலாம்.

நல்ல கருத்து, யாராவது எமது அவலங்களை ஆங்கில புத்தகமாக வெளியிட்டிருந்தால் அறியத்தரவும், இனி என்ன செய்யலாம் என்ற புத்தகத்தை இணையத்தில் வாங்க முடியவில்லை , அவர்களின் இணையத்தில் ஏதோ பிரச்சனை காட்டுகின்றது; எனது திட்டம் சில புத்தகங்களை வேண்டி நான் இருக்கும் நாட்டின் முக்கிய பிரதிநிகளுக்கு தபாலில் அனுப்புவது, http://www.srilankagenocidealbum.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.