Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டிமன்றம் தொடர்வோமா???

Featured Replies

ஈஸ்வருக்கு அடுத்ததாக ( மதிரனுக்குப்பிறகு) எங்கள் அணிசார்பில் என்ன வாதத்தை வைக்க விடுங்கோ....! ரமாவை என் இடத்தில் மாற்ற முடியுமானால் மகிழ்ச்சி... 8) 8) 8)

எப்பிடி பார்த்தாலும் உங்கள் வாதம் போஸ்ட் பண்ண 2 கிழமை ஆகும் தல... ஏனெண்டால் எங்கட அணியில உள்ளவங்க உடன வந்து வாதாடிட்டாலும் .. :roll: :(:(

  • Replies 1.5k
  • Views 106.3k
  • Created
  • Last Reply

எப்பிடி பார்த்தாலும் உங்கள் வாதம் போஸ்ட் பண்ண 2 கிழமை ஆகும் தல... ஏனெண்டால் எங்கட அணியில உள்ளவங்க உடன வந்து வாதாடிட்டாலும் .. :roll: :(:(

தொடங்கின வேகத்தைப் பாத்துப் பயந்து முதலிலேயே முக்கால்வாசி தட்டச்சு பண்ணிப் வச்சிட்டன். இப்ப பாத்தா சுத்தமாய் படுத்திட்டுது. தள்ளித்தள்ளி தான் ஸ்ராட் பண்ணனும் போல கிடக்கு.... அதான் வெறுப்பாய் போய். என்னை இப்பவே விடுங்கோ எண்டு ஒப்பாரி வைக்கத் தொடங்கீட்டன்.... எங்கட ஆத்தா ராக்கம்மா( ரசிகை) மனசுவைச்சாத்தான் சரிவரும்.... :P :P :P

ம்ம்ம் பாப்பம்........... :wink:

மேற்கோள்:

தொடங்கின வேகத்தைப் பாத்துப் பயந்து முதலிலேயே முக்கால்வாசி தட்டச்சு பண்ணிப் வச்சிட்டன்.

அடங் கொக்கா மக்கா :shock:

அப்பவே நினைச்சன் தல வாதத்தை வைச்சே ஆவேன் எண்டு அடம்பிடிகேக்க :(

ஏதோ என்னால இயன்றது. ஏழைக்கேத்த எள்ளுருண்டை எழுதி இருக்கிறன். பாருங்கோ.

அட ஈஸ்வரன் அட்டகாசமா ஒரு போடு போட்டிருக்கிறாரப்பா....! வாழ்த்துக்கள் ஈஸ்வர் பின்னால வாறவை சொல்ல விசயம் கொஞ்சம் விடுவம் எண்டு பெரிய மனதோட கொஞ்சம் விட்டுருக்கிறீங்கள் போலகிடக்கு.... நண்றிங்கோ.... :wink: :P :P

ஆஹா- போச்சு- திரும்பவும்- அதே பிழை விட்டுடன் :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா- போச்சு- திரும்பவும்- அதே பிழை விட்டுடன் :cry: :cry:

ரெம்பத்தான் உணர்ச்சி வசப்படுகின்றீர்கள் போல!! :wink: :P

ரெம்பத்தான் உணர்ச்சி வசப்படுகின்றீர்கள் போல!! :wink: :P

அப்பிடி இல்ல தூயவன்.. உண்மையிலயே

கொஞ்சம் குழப்பம் தான் - 3 கிழமைதானே இங்க வந்து- போதிய அனுபவம் - தகவல் அனுப்புறதில இல்ல எனக்கு ! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி இல்ல தூயவன்.. உண்மையிலயே

கொஞ்சம் குழப்பம் தான் - 3 கிழமைதானே இங்க வந்து- போதிய அனுபவம் - தகவல் அனுப்புறதில இல்ல எனக்கு ! :lol:

சின்னப்பு கூட இவ்வளவு நாள் இருந்தும் போதிய அனுபவம் இல்லை என்பதால் தான் அத்தலைப்பினுள் எழுதவில்லையாம்.

ஆனால் நீங்கள் 3கிழமைக்குள் அங்கே எழுதியதைப்பார்க்கும் போது போதிய அனுபவம் அப்படியே வெளிச்சமாகத் தெரிகின்றது. :wink: :P

ஈஸ்வருக்கு அடுத்ததாக ( மதிரனுக்குப்பிறகு) எங்கள் அணிசார்பில் என்ன வாதத்தை வைக்க விடுங்கோ....! ரமாவை என் இடத்தில் மாற்ற முடியுமானால் மகிழ்ச்சி... 8) 8) 8)

வணக்கம் தலா.. நீங்கள் என்னுடைய இடத்தில் உங்கள் வாதத்தை முன் வைப்பது என்றால் வையுங்கள். எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் நானோ நீங்களோ வாதத்தை முதல் வைப்பது என்று அறியத்தாருங்கள்.

வணக்கம் தலா.. நீங்கள் என்னுடைய இடத்தில் உங்கள் வாதத்தை முன் வைப்பது என்றால் வையுங்கள். எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் நானோ நீங்களோ வாதத்தை முதல் வைப்பது என்று அறியத்தாருங்கள்.

இதுதான் அணிக்குள் இருக்கும் புரிந்துணர்வு........... எதிர்அணியினர் வாதாடமுன்னம் இதுகளை கொஞ்சம் புரிஞ்சு கொள்ளுங்கோ........

ஈஸ்வரின் வாதத்தைப் பாத்து வாயடைச்சுப் போயிட்டன் இதைவிட விளக்கமா சீரழிவைப் பற்றி எடுத்துச் சொல்லுறதெண்டால் வலுகஷ்டம் (நல்ல காலம் வேளைக்கு நான் கருத்தை வைச்ச படியாலை தப்பினன் கடைசிலை எண்ட எழுத ஒரு பொயின்ஸ்சும் இருந்திராது)

என்ன மாதிரி எதிரணியினரே ஈஸ்வருடைய வாதத்துக்கு பின்னரும் வாதாட வரப்போறியளே. நடுவரிடம் தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கோ.

நீங்கள்தான் சொல்லித் திருந்துகிற சாதியில்லையே. ஒப்புக்காக உங்கடை ஆட்கள் வாதாடியமாதிரி தலைப்பை விட்டு இணையம் நல்லது என்று வாதாடுங்கோ. அதுதான் உங்களுக்கு கைவந்த கலையாச்சே

அப்பு ஈஸ்வர் என்ன விவாதஅப்பு என்னமாதிரி கருத்துக்கள் நடுவரே அரண்டுபோயிருப்பார். எதிரணியிலிருந்து முணுமுணுக்க யார் வாறார்கள் என்று பார்ப்போம். பாருங்கோ ஒருதரும் வராயினம். எல்லாரும் தலைமறைவாகப்போயினம் :lol::lol::lol:

கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈஸ்வரண்ணா நல்லா கருத்து வச்சிருக்கிறீங்ள்.......................

இங்க நான் சில சந்தேகங்கள கேக்க விரும்புறன்...................................யாரா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனா தமிழனியக்காக்கா நடுநிலமை தவறுற மாதிரி இருக்கு.............தன்ர கருத்துக்கள சொல்றதெண்டா அவா பட்டிமன்றத்தில கலந்துகொள்ளலாமே........... இருந்தாலும் இது அவான்ர முதலிதெண்டுற படியா நடுநிலமை தவறாம நடுவர் பணிய தொடந்து செய்ய பழகட்டும்

இதற்கு இரு அணியிலும் பங்கு பற்றும் உறுப்பினர்கள் தான் கருத்துச்சொல்ல வேணும். நான் முடிந்தவரை நடுநிலையாக தான் கருத்து வைத்துள்ளேன். ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன் ஆசிரியருக்கு உதவி செய்வதாகவே.. பட்டிமன்ற அனுபவம் இருந்தும் நடுவர் அனுபவம் என்பது புதிது என்பதால் பயிற்சியாக எடுத்துக்கொண்டேன். தவிர்க்க முடியாத காரணங்களினால் நான் தனியாகவே சிலரது கருத்துக்களுக்கு கருத்து வைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. மறுபடி ஆசிரியர் வந்த உடன் ஒதுங்கிக்கொண்டேன் உதவியாளராக. மீண்டும் இருமுறை ஆசிரியரின் வேண்டுகோலிற்கிணங்கவே கருத்தை வைத்தேன். பூனைக்குட்டி சொல்லும் குற்றச்சாட்டு உண்மை எனின் தாராளமாக பட்டிமன்றத்தில் இருந்து விலகிக்கொள்ள நான் தயாராக உள்ளேன். நடுநிலை தவறின் அங்கு நடுவர் என்ற பெயரில் நான் எதற்கு?? ரசிகை மற்றும் உறுப்பினர்கள் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். பூனைக்குட்டி ஒரு கருத்துக்கு தொகுப்புரை வழங்கும் போது எனது கருத்தையும் இடைக்கிடை சேர்க்கவேண்டிய தேவை ஏற்பட்டதால் இணைத்தேன். இயலுமானவரை இரு பகுதியிலும் எனது கருத்தை இணைத்திருக்கிறேன். உங்களது குற்றச்சாட்டு மற்றைய மன்றங்களின் தொடர்ச்சியோ என்று எண்ணத்தோன்றுகிறது. எது எப்படியோ விலகிக்கொள்ள நான் தயார். இந்த குற்றச்சாட்டு உண்மை எனின் தொடர்ந்து நான் பங்குபற்றுவது நன்றாக இருக்காது என்று நினைக்கிறேன். :lol: :P

வணக்கம்...

கள உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, யாழ் களத்தில் ஒரு பட்டிமன்றத்தை ஒழுங்கமைத்து தனது பள்ளி வேலைகளுக்கு மத்தியிலும் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் இரசிகை இந்த பட்டிமன்றத்தை நெறிப்படுத்துகிறார். தமிழர்களை ஒருங்கிணைத்து ஒருவேலையைச் செய்வது எவ்வளவு சிரமமான வேலையென்பது இந்தப் பட்டிமன்றத்திலும் தெளிவுபடத் தெரிகிறது. ஒரு பயனுள்ள விடயத்துக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குவதை விடுத்து ஆளாள் ஒவ்வொரு திக்கில் நிப்பது வருத்தமளிக்கிறது. எனவே அனைவரும் தயவுசெய்து ஒன்றிணைந்து பட்டிமன்றத்தை பயனுள்ளதாக நிறைவுசெய்ய பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இரசிகை ஆரம்பத்தில் பட்டிமன்றத்தை ஒழுங்கமைக்கும் பொழுதே எந்த அணியில் கருத்தாட விரும்புகிறீர்கள் என்று கேட்டிருந்தார். அவரவர் விரும்பிய அணியிலேயே விடப்பட்டனர். யாரையும் வற்புறுத்தி இரசிகை அணிபிரிக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தும் இப்படி பட்டிமன்றம் முடிவுறும் தருணத்தில் அவர் மாறுகிறார், இவர் மாறுகிறார் நானும் மாறவேண்டும் என்று கருதுவது அழகல்ல.

அதேபோல் நடுவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் பலரிடம் இரசிகை கேட்டிருந்தார். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கடமைகளை காரணம் காட்டி ஒதுங்கிக் கொண்டார்கள். தமிழினியும் தனது பள்ளிவேலைகளுக்கும், பரீட்சைகளுக்கும் நடுவில் தயங்கித் தயங்கி இரசிகையின் வெண்டுகோளுக்கு சம்மதித்தார். ஆரம்பத்திலேயே இது தனது முதல் முயற்சி/பயிற்சி என்றும் தெரிவித்திருந்தார். மற்றும், செல்வமுத்து அவர்கள் நடுவராக பங்குகொள்ள முடியாமல் இருந்த சந்தர்ப்பத்தில் தனியாக நின்று பொறுமையாக தனது கருத்துக்களை தமிழினி முன்வைத்திருந்தார். எனவே, அவரது இந்த ஒத்துழைப்புக்கும், சிறப்பாக அனைவரது கருத்துக்களையும் வாசித்து விளங்கிக்கொண்டு தொகுத்து வழங்குகிற திறனுக்கும் உரிய மரியாதையை அளியுங்கள்.

பூனைக்குட்டி, தயவுசெய்து குழப்பம் விளைவிக்காமல் உங்கள் அணியின் சார்பில் உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். மற்றவர்கள் அணிமாறுவதை குறைசொல்லும் நீங்களே அணிமாறப்போவதாக சொல்வது சிரிப்பாக உள்ளது. மற்றும் நீங்கள் பட்டிமன்றத்தில் கருத்து வைப்பதும் வைக்காததும் உங்கள் பிரச்சனை. அதை நீங்கள் தான் தீர்மானிக்கவேண்டும். ஆனால் அதனை ஆரம்பத்திலேயே தீர்மானித்திருந்தால் இரசிகைக்கு சிரமங்கள், சிக்கல்கள் இல்லாமல் இருந்திருக்கும். நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.

தமிழினி, களத்தில் இறங்கிய பின் மற்றவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சாமல், உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்கள் கருத்துக்களைத் தொடருங்கள். நாம் ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் பாராட்டுகள், குறைகூறல் எல்லாம் வந்துகொண்டுதான் இருக்கும். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடருங்கள். இப்படிப் பார்த்தால் இன்று மட்டுறுத்துனர்களாக களத்தில் பணியாற்றுபவர்கள் எல்லோரும் எப்போதோ வெளியேறி இருக்கவேண்டும். தயங்காமல், பின்வாங்காமல், குறைகண்டு சோராமல் நடுவராக உங்கள் கருத்துக்களை முன்வைத்து பட்டிமன்றத்தை நிறைவுசெய்து வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் உங்கள் சிறப்பான நடுவர் பணிக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

  • தொடங்கியவர்

இங்க நான் சில சந்தேகங்கள கேக்க விரும்புறன்...................................யாரா

  • தொடங்கியவர்

பூனைக்குட்டி சொல்லும் குற்றச்சாட்டு உண்மை எனின் தாராளமாக பட்டிமன்றத்தில் இருந்து விலகிக்கொள்ள நான் தயாராக உள்ளேன். நடுநிலை தவறின் அங்கு நடுவர் என்ற பெயரில் நான் எதற்கு?? ரசிகை மற்றும் உறுப்பினர்கள் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

தமிழினி மிக கஸ்டமான பணியை தனியே வெற்றிகரமாக செய்திருக்கிறீர்கள். மற்றவர்களின் குற்றச்சாட்டில் சோர்ந்துவிடாது பட்டிமன்றம் நிறைவு செய்யும் வரை உங்கள் கருத்தை தயங்காது முன் வைக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் வணக்கம்

பட்டிமன்றம் சிறப்பாகப் போய்க்கொண்டு இருக்கிறது. தமிழினியும் சிறப்பாகச் செய்கிறார். இருவரும் நடுவர்கள்தானே. எல்லோரும் இரசிகை பிரித்த அணியிலேயே இருந்துகொண்டால் நல்லது.

நன்றி.

  • தொடங்கியவர்

ஓ ஈஸ்வர் அண்ணா வாழ்த்து சொல்ல மறந்துட்டன்.

பிரமாதம் அண்ணா நன்றாக உங்கள் கருத்தை ஆணித்தரமாக முன் வைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

அடுத்ததாக மதுரன் நன்மை அணியில் கருத்து வைக்கவும்.

நன்றி

வணக்கம்

ரசிகை... குருவிகள் நாங்கள் ஆரம்பத்திலையே பட்டிமன்றத்தில் கலந்துக்க விருப்பம் சொல்லவில்லை. நீங்களேதான் பெயர் போட்டிங்கள்.. அதுவும் அணித்தலைவரா..! அணித்தலைவர் பதவில இருந்திருந்தாலும் இதே கதிதான் வந்திருக்கும். அதனால் தான் விலகினம். அப்புறம் மாற்ற வசதி என்றால் தான் மாற்றக் கேட்டம் ஆட்சேபனைகளும் கேட்டம். அப்போ மெளனமாக இருந்துவிட்டு..இப்ப ஏன் பிரச்சனை கொடுக்கினம். வரிஞ்சுகட்டிட்டு..! அது உங்களால் முடியாது என்றிருந்தால் பிரச்சனையே இல்லை. இப்போ ஒரு முடிவு செய்யுங்கோ..எல்லாரும் குருவிகளை வைத்து தங்களை உயர்த்தவும் எங்களை மட்டம் தட்டவும் அனுமதிக்க முடியாது. நாங்கள் செய்த தவறு டன் சின்னப்பு செய்தது போல உதுகளில இருந்து விலகி இருந்திருக்க வேண்டியது. அதுக்காக மன்னிச்சுக் கொள்ளுங்கோ..! நீங்கள் எங்களை பட்டிமன்றத்தில் இருந்து விலக்கினால் நல்லது என்று நினைக்கின்றோம். அநாவசியமாக மற்றவர்களிடம் குறை கேட்ட நமக்கு விருப்பமில்லை. தயவுசெய்து..நாங்களா தேடாததுக்கு நாங்கள் பழி சுமக்க வேண்டி இருப்பதுக்கு மிக வருந்துகின்றோம்..! :lol::lol:

வணக்கம் எல்லோருக்கும்.

களஉறுப்பினார் என்றவகையிலும் பட்டிமன்றித்தில் வாதடா போகும் ஒரு உறுப்பினார் என்ற வகையிலும் நானும் எனது கருத்தை முன் வைக்க விரும்புகின்றேன்.

முதலில் தமிழினியின் நடுவர் திறமைக்கு ஒரு சபாஷ் சொல்கின்றேன். ஆசிரியார் அவர்களால் தனது பணியை செய்ய முடியாது போயிருந்த சமயத்தில் கூட மிகவும் திறமையாகவும் எல்லோருடைய கருத்தையும் தெளிவாக்கி தனது நடுவர் பணியை திறம்பட செய்து முடித்தவர் செய்து கொண்டிருக்கின்றார் தமிழினி. ஆகவே அவரின் பணி மேலும் தொடர வேண்டும்.

அடுத்து ரசிகை தனது பாடசாலை வேலைகளுக்கு மத்தியிலும் மிகவும் மனஉளைசலுக்கும் இடையில் இந்த பட்டிமன்றத்தை தொகுத்து வழங்கின்றார். ஆகவே அவரையும் குற்றம் சாட்டாதிருங்கள் புனைக்குட்டி. உங்களின் குற்றம் சாட்டும் நிலை தமிழினி ரசிகை போன்றவர்களுக்கு தயக்கம் நிலையை உண்டுபண்ணுகின்றது. தயவு செய்து ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டமால் இந்த பட்டிமன்றம் வெற்றிகரமாக நடந்து முடிய ஒத்துழைப்போம்.

வணக்கம்...

கள உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, யாழ் களத்தில் ஒரு பட்டிமன்றத்தை ஒழுங்கமைத்து தனது பள்ளி வேலைகளுக்கு மத்தியிலும் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் இரசிகை இந்த பட்டிமன்றத்தை நெறிப்படுத்துகிறார். தமிழர்களை ஒருங்கிணைத்து ஒருவேலையைச் செய்வது எவ்வளவு சிரமமான வேலையென்பது இந்தப் பட்டிமன்றத்திலும் தெளிவுபடத் தெரிகிறது. ஒரு பயனுள்ள விடயத்துக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குவதை விடுத்து ஆளாள் ஒவ்வொரு திக்கில் நிப்பது வருத்தமளிக்கிறது. எனவே அனைவரும் தயவுசெய்து ஒன்றிணைந்து பட்டிமன்றத்தை பயனுள்ளதாக நிறைவுசெய்ய பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தக் கருத்தை இக்களத்தையே உதாரணமாக வைச்சு மறுதலிக்கவும் முடியும். ஏற்கனவே சோழியான் அண்ணா தலைமையில் தூயா பபாவின் வழிநடத்தலில் குறுகிய காலத்தில் ஒரு பட்டிமன்றம் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. அப்பெருமையும் இக் களத்தை சாரும்..! அப்படி இருக்க ஏன் தற்போது இப்படி ஒரு கருத்தை முன் வைத்தீர்கள்..விளக்கம் சொல்ல முடியுமா...??!

இங்கு குழப்பத்துக்கு காரணம் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்காத தன்மை. அது கூடும் கூட்டத்தில் இருப்பவர்களின் தனிப்பண்பைப் பொறுத்தது. அதைச் சுட்டிக்காட்டுவதை விடுத்து தமிழர்களை ஒட்டுமொத்தமாக குறை சொல்லிப் பயனில்லை..!

தமிழினியும் சரி செல்வமுத்துவும் சரி தங்களால் இயன்ற அளவுக்கு பட்டிமன்றத்தை சிறப்பாகவே எடுத்துச் செல்கின்றனர். அவர்களைக் குறை கூறிப் பயனில்லை. ரசிகையைப் பொறுத்தவரை அவருடைய நெகிழ்வுப் போக்கை உறுப்பினர்கள் தவறுதலாகப் பயன்படுத்த எத்தனிக்கின்றனர். றூல் என்றால் பாரபட்சமின்றி அமுலாக்கப்பட வேண்டும்..! அது குருவியானால் என்ன எவரானால் என்ன..! :P :idea:

பூனைக்குட்டி

முதலில் பெயர் கொடுத்த பலர் பட்டிமன்றம் ஆரம்பித்தபோது விலகிக்கொண்டனர். அதனால் அணிகளுக்கிடையேயான சமநிலை பேணுவது இரசிகைக்கு மிகவும் கடினமாகப் போனது உமக்கும் தெரியும். அதனாலேயே சில மாற்றங்கள் செய்து முன்னெடுக்க முயற்சித்தபோது சிலர் அணிமாறி அதைச் செய்ய முன்வந்தபோது அதை இரசிகையும் ஏற்க வேண்டிய கட்டாயம்.

அதுபோல் பட்டிமன்ற ஆரம்பத்தில் நடுவர்களை தேடுவதில் இரசிகை பட்ட அவலம் எனக்கும் தெரியும். பின்பு வற்புறுத்தியே தமிழினியையும் நடுவராக செல்லமுத்து அண்ணாவிற்கு உதவியாக இரசிகை போட்டார். ஆரம்பித்து சில தினங்களிலேயே செல்லமுத்து அண்ணாவின் தாயார் அமரராகிவிட்டதால் தமிழினி தனித்து விடப்பட்டார். தனியாக தமிழினி என்ன செய்யப் போகின்றா என நாமெல்லாம் பயந்த வேளையில் அவ தைரியமாக எந்தவித பதட்டமும் இல்லாமல் தெளிவாகத் தன் பணியினைத் தொடர்ந்து பாராட்டும் பெற்றார். இந்த நிலையில் நீங்கள் அவரில் இப்படியான ஒரு குற்றச்சாட்டை வைப்பது முறையானதல்ல. அப்படி உங்களுக்கு ஏதாவது சந்தெகம் ஏற்பட்டிருந்தால் அதை உங்கள் அணித்தலைவருக்குத் தெரிவித்து அவரின் விளக்கத்தைப் பெற்றிருக்கலாம். உங்கள் அணியின் அனுபவம் மிக்க தலைவரான சோழியான் கூட உங்கள் குற்றச்சாட்டை நிராகரித்திருப்பார். ஒன்றுமட்டும் நன்றாகத் தெரிகின்றது உங்களுக்கு குருவிமேலுள்ள சில கோபதாபங்களை எல்லா இடங்களிலும் காட்ட முயல்கின்றீர்கள். இதனால் எல்லோரும் பாதிக்கப்படுகின்றார்கள். தயவுசெய்து இப்படியான தனிப்பட்ட விடயங்களால் பிரைச்சினைகளை நீங்கள் தவிர்ப்பது நலம். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

மேற்கோள்:

தமிழினிஇ களத்தில் இறங்கிய பின் மற்றவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சாமல்இ உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்கள் கருத்துக்களைத் தொடருங்கள். நாம் ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் பாராட்டுகள்இ குறைகூறல் எல்லாம் வந்துகொண்டுதான் இருக்கும். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடருங்கள். இப்படிப் பார்த்தால் இன்று மட்டுறுத்துனர்களாக களத்தில் பணியாற்றுபவர்கள் எல்லோரும் எப்போதோ வெளியேறி இருக்கவேண்டும். தயங்காமல்இ பின்வாங்காமல்இ குறைகண்டு சோராமல் நடுவராக உங்கள் கருத்துக்களை முன்வைத்து பட்டிமன்றத்தை நிறைவுசெய்து வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் உங்கள் சிறப்பான நடுவர் பணிக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

எனது கருத்தும் இதுவே! தொடருங்கள் தமிழினி!

பட்டிமன்றத்தை தொடர்வது பற்றி பேசியே இன்னுமொரு பட்டிமன்றத்தை உருவாக்கிவிடுகிறார்கள்!

இதுதான் தமிழனின் அதிவிசேட குணமோ? :roll: :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.