Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுவிசில் இருந்து மகிந்தவிற்கு கடிதம் எழுதிய ஈனத்தமிழன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுவிசில் இருந்து மகிந்தவிற்கு கடிதம் எழுதிய ஈனத்தமிழன்

Wednesday, May 11, 2011, 17:55

சிறீலங்கா

புலிப் பயங்கரவாதிகளை அழித்ததற்கு நன்றி தெரிவித்து, சுவிற்சர்லாந்தில் இருந்து தமக்கு மின்னஞ்சல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு இன்று (11-05-2011) அறிவித்துள்ளது.

சூசை அருளானந்தம் என்ற பெயரில் இந்தக் கடிதம் தமக்கு கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ள சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு, அந்தக் கடிதத்தில் விடுதலைப் புலிகளை அழித்ததற்கு, போர்க்குற்ற நபர்களான சிறீலங்கா அரச அதிபரும், முப்படைத் தளபதியுமான மகிந்த ராஜபக்ச, மற்றும் பாதுகாப்புச் செயலர் கொட்டாபய ராஜபக்ச ஆகியோருபக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் இவ்வாறான ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு அப்பால், ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையும், அதனைத் தொடர்ந்து கிலிகொண்டுள்ள சிறீலங்கா அரசாங்கமும், குறிப்பிட்ட கடிதத்தை ஒரு செய்தியாக்கி வெளியிட்டதன் பின்னணி என்ன என்பது பற்றி புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஆராய வேண்டும்.

உண்மையில் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தால், அனுப்பியவர் ஒரு ஈழத்தமிழனா? அல்லது ஈனத்தமிழனா என்பதையும் கண்டறிய வேண்டும்.

சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு தமக்கு கிடைத்ததாகக் கூறி வெளியிட்டுள்ள கடிதத்தின் தமிழாக்கம்:

மேன்மை தங்கிய சிறீலங்கா அரச அதிபருக்கு,

அன்புள்ள ஐயா, அருளானந்தம் ஆகிய நான் மன்னாரில் பிறந்து, பின்னர் கந்தானை நாகொடவில் வசித்திருந்தேன். திரு. ஜோர்ஜ் ராஜபக்ச மீன்பிடி அமைச்சராக இருந்த காலத்தில் நான் மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி இருக்கின்றேன். 66 அகவையுடைய நான் தற்பொழுது சுவிசில் வசித்து வருகின்றேன்.

பயங்கரவாதிகளிடம் இருந்து எனது சகோதரர்களையும், சகோதரிகளையும், உறவினர்களையும் மீட்டதற்காக நன்றி தெரிவிக்கும் நோக்கில் இந்த உளமார்ந்த மடலை வரைகின்றேன். கடந்த அரசாங்கங்களால் செய்ய முடியாது எனக் கூறியதைச் செய்துமுடித்த படையினக்கும், உயிரிழந்த வீரர்களுக்கும், கால்களை இழந்த வீரர்களுக்கும் எனது தலைசாய்த்த வணக்கங்கள்.

மிக்க நன்றி ஐயா, தாங்கள் ஒருவர்தான் இந்தப் பணியைச் செய்து முடிக்கும் சக்தி கொண்டவர். நீங்கள் உங்கள் கடமையைச் செய்துள்ளீர்கள். ஐரோப்பாவில் வாழும் குட்டிநாய்களைப் பற்றி அசட்டை செய்ய வேண்டாம். குரைக்கிற நாய் கடிக்காது. எனது அம்மா எனக்கு தமிழில் சொல்வார், எப்பொழுது நாய் குரைக்கின்றதோ அது ஒன்று செய்யாது என.

அத்துடன், உங்களது இந்த சிறந்த பணிக்கு உதவிய திரு. கோட்டாபய ராஜபக்சவிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். வாழ்த்துக்கள் ஐயா. ஏனது இதயம் நிறைந்த தலைசாய்த்த வணக்கங்கள். நான் இப்பொழுது நிம்மதியாகச் சாக முடியும், காரணம் எனது ஒருயொரு வாழ்நாள் கனவை நீங்கள் நிறைவேற்றி இருக்கின்றீர்கள். அதுதான் புலிப் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட, எப்பொழுதும் எதனையும் ஏற்றுக்கொள்ளாத அரசியல்வாதிகளிடம் இருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றியுள்ளீர்கள்.

நான் ஐயா தங்கள் உண்மையுள்ள,

சூசை அருளானந்தம்

சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள கடிதத்தின் ஆங்கில வடிவம்:

Hon. President of Sri Lanka,

Dear Sir, I am Arulanantham a Sri Lankan born at Mannar lived at Nagoda Kandana and worked at the Fisheries Horbour corporation when Mr.George Rajapakse was the Minister of fisheries. I am now 66 years of age living in Switzerland. Through this e-mail comes my sincere thanks for saving my brothers and sisters and my relatives from the terrorist. I also wish to salute our heroes who lost their lives and limbs in this mission which was declared impossible by those past Governments.

Thank you very much Sir, you are the one who had the courage to do this job, and you have done your duty. Forget about the tiger pups living in Europe. The barking dogs don’t bite. My mother use to tell this in Tamil, “When the dog barks it doesn’t kill the Cow”. I also wish to thanks Mr. Gothabaya Rajapakse who assisted you in this wonderful job. Well done Sir, my heartfull salute for you. I can die now peacefully.

Because you have fulfilled my only dream in my life. That is saving the Tamils from the tiger terrorists and the politicians selected by the same terrorists who will also play the same disk, and they will be never satisfied.

I am Sir Yours Truly

Soosai Arulanantham.

நன்றி : eelamdaily

tamilthai.com

யாரவது சிங்களம் தெறிந்தவர்கள் சிங்களத்தில். தமிழின படுகொலைக்கு காரணமான மகிந்த என் கோவை குற்றவாளிக்கூண்டில் நிருத்தக்கோறி சனல்4 தொலைக்காட்சிக்கு ஒரு கடிதம் எளுதி அணுப்புங்கப்பா.

Edited by கிளியவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கடிதக் கதை" உண்மையானது என்று இருந்தால் கூட அது ஆச்சரியப்படவேண்டிய நிலைக்கு உரியதல்ல!

டக்ளஸ்களும், சங்கரிகளும் புலத்தில் இல்லை என்று எவர் சொன்னது?

  • கருத்துக்கள உறவுகள்

<_< இதென்ன பெரிய விடயம்? இது உண்மையாகக்க்கூட இருக்கலாம். இப்படிப் பலர் எம்மில் இன்னும் இருக்கிறார்கள். 100% போராட்டத்திற்கு ஆதரவு வேன்டும் என்று எதிர்பார்த்தால் நாங்கள் போராடத் தொடங்கியிருக்கவே முடியாது.

என் தந்தை கூட தீவிரச் சிங்கள ஆதரவாளர்தான். அவர் வாழ்நாளில் என்னுடம் தகப்பனாக நடந்துகொண்டதை விட, "பயங்கரவாதி" என்றழைப்பதில்த்தான் இன்பம் கண்டார். இங்கே சொல்லப்பட்டிருக்கிற சொற்களைப்போலவே, "மலையைப் பார்த்து நாய் குரைக்கிற கதை", " சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது", " பயங்கரவாதிகளை ஆமியைச் சொட்டிப்போட்டு ஓட அவன் மழை போல பொழிஞ்சு தள்ளுகிறான்". இப்படி எத்தினையை எனது வாழ்நாளில் கேட்டிருக்கிறேன்.

எனது தம்பி ஆனையிறவுச் சமரில் வீரமரணம் அடைந்த அதே யுத்தத்தில் எனது தந்தையாரின் நண்பன் ஒருவன் (ஆனையிறவுத்தளத்தில் கப்டனாக இருந்தவன்) பலியானதாகச் செய்திகள் வர இவர் அழத்தொடங்கினார். நானும் தம்பி இறந்ததால்த்தான் அவர் கவலைப்படுகிறார் என்று நினைத்தால், இல்லை, "பயங்கரவாதியொருவன் செத்ததற்கு நான் ஏன் அழவேன்டும்? எனது நண்பனும் அல்லவா செத்துவிட்டான்?" என்று என்னைக் கேட்டார். ஒருமாதத்தின் பின்னர் அவரது நண்பன் சாகவில்லை, இவரை வந்து பார்த்துவிட்டுப் போனான். அப்போதுதான் தான் கடவுள் இருப்பதை உண்மையாக நம்புவதாகச் சொல்லிப் புளகாங்கிதப்பட்டார்.

இப்படியும் இருக்கிறார்கள். அவர் எழுதாத கடிதமா??

இந்தக் கடிதத்தை வைத்து தப்பித்துக் கொள்ள நினைக்கிறார்களோ என்னவோ? புலத்தில் சங்கரிகளும் தேவானந்தாக்களும் எண்ணக் கூடிய அளவிற்கு இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
திரு. ஜோர்ஜ் ராஜபக்ச
:rolleyes::unsure: ராஜபக்ச குடும்பம் பௌத்த மதத்தை சார்ந்தவர்கள் அல்லவா?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிசில் இருந்து மகிந்தவிற்கு கடிதம் எழுதிய ஈனத்தமிழன்

மகிந்தவுக்கு நேரைபோய் நன்றி சொல்லேலாமல்...கடிதம் எழுதி நன்றி சொல்லுற அளவுக்கு ஆளாகிட்டியே ஈனத்தமிழன் அருளானந்தம் :D

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes::unsure: ராஜபக்ச குடும்பம் பௌத்த மதத்தை சார்ந்தவர்கள் அல்லவா?

டி.எஸ்.செனநாயகா(ஸ்டீபன்), ஜே.ஆர்.ஜெயவர்த்தன (ரிச்சர்ட்), பண்டாரநாயக்க (சொலமன்), ராஜபக்ச (ஜோர்ஜ்) இவர்கள் எல்லோருமே கிறிஸ்தவர்கள்.

இவர்கள் தான் மாகவம்சத்தை அலங்கரிக்கின்றார்கள்!

புத்த மதத்தின் தூண்கள்!!!

இவன் நன்றி சொல்ல வேண்டுமானால் முதலில் சரத் பொன்சேகாவுக்கு தானே சொல்ல வேண்டும்.... முள்ளிவாக்கால் வரை தமிழ் மக்களை குதறியது இவன் தலைமையிலான படை தான்..... இதிலிருந்தே தெரிகிறது இது ராசபக்ஷே கூட்டத்தின் அல்லக்கைத் தனம் என்று...

மேலே வெளியிடப்பட்டுள்ள கடிதம் ஒரு 'official proponent ' என்பதை தெளிவாகவே காட்டுகிறது....

ஐ நா அறிக்கைக்கு எதிரான பிரச்சார அம்புகள் இதுபோன்று நிறையவே எதிர்பார்க்கலாம்....

இதில் உண்மைகள் இருக்கலாம் இதற்கு ஒரு உதாரணம்,கனடாவில் டொரொன்டோ நகரில் சிங்கள தமிழ் புத்தாண்டு விழா நடந்தது.இதை இங்கு கம்யூனிஸ்டுகள் தான் எற்பாடு செய்திருந்தார்கள்.அவர்களின் குறிக்கோளே தனிமனித சுதந்திரம் தானே,ஆனபடியால் தான் சிங்களவரையும் இணைத்து செய்கிறார்கள் என்ற எண்ணம்,சும்மா போய் பார்போம் என்று போயிருந்தேன்.(அவர்களின் நோக்கம் என்னை அவர்களின் விழாவில் வைத்து படமெடுப்பது தான் என்பதை பின்பு தெரிந்து கொண்டேன். நியூ யோர்க்கில் ரூபவாகினி படப்பிடிப்பாளர்களுக்கு வடிவாக எடுத்து போ என்று முகத்தையே கொடுத்த எனக்கு இது ஒன்றும் பெரிய விடயமல்ல.ஆனால் இவர் எங்களின் ஆள் தான் அங்கு உள்வீட்டு பிள்ளைமாதிரி இருந்து வேவு பார்கிறார் என்றால் எந்த குட்டையும் குழம்பும் தான்.ஆனால் முன்கூட்டியே அவர்களுக்கு தெரிவித்துவிட்டுதான் போனேன்.

வாசலில் போகும் போதே பொலிஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.குழப்பமாகவிருந்தது என்றாலும் போய்விட்டேன்.அங்கு கூடுதலாகவிருந்தவர்கள் வயதான இலங்கையில் அரச தொழில்களில் இருந்து ஓய்வூதியம் பெறுபவர்கள்.இதிலே இலகுவாக தெரியகூடியவர்கள்,சக்கடத்தார்,சாம் இராசேந்திரன் மற்றும் "மற்றது"(கம்யூனிசம் பேசி தேசிய தலைமையை சாடி எழுதுவது)இந்த குடும்பம் பாரிசில் மக்களால் அடையாளம் காணப்பட்டு உயிரைகையில் பிடித்துகொண்டு கனடா வந்தவர்கள்.சாம் ராசேந்திரன் அவர்கள் அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் தொடர் கவனயீர்பு நடந்தபோது பிற இன மக்களுக்கு தவறான டி வி டிக்களை வினியோகித்தவர்.இங்கு சென்றபடியால் இவர்களை அடையாளம் காண முடிந்தது.இன் நிகழ்வுக்கு பிரதம அதீதியாக கலந்துகொண்டது. சிங்கள தேசத்தின் துணைத்தூதுவர் சித்திராங்கனி அவர்கள்.அவர்கூட புத்தாண்டு விழாவை அதற்குரிய முறையில் சிறிய உரையுடன் முடித்துகொண்டார். இந்த சாம் ராஜேந்திரன் ஒலிவாங்கி கிடைத்ததுதான் இந்த சிறிய நாட்டுக்குள் ஒரு ஈழம் கேட்கிரான்கள். என்று அரசியல் பேசி கைதட்டும் வாங்கி கொண்டார்.அந்த கைதட்டலோடு நான் வெளியே வந்துவிட்டேன் பார்த்தால் என்னை தொடர்ந்து ஒரு பத்து பேர்வரையில் பேசி பேசி வந்தார்கள்.இனியும் இருந்தால் அடிபிடி தான் வரும்.என்று வந்தார்கள்.கனடாவில் பிள்ளைகளை எப்ப மேடையேத்தலாம் என்று காத்திருந்த பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதில் தெரியாமல் மாட்டி கொண்டதாகவும் தகவல்.இதிலிருந்து என்ன தெரிகிறது இலங்கை அரசுடன் தொடர்பிலிருக்கிறார்கள்.அல்லது ஏதோ ஒரு வகையில் பிறப்பால் சிங்களமோ தெரியவில்லை

இப்படிக்கு

ஊர்குருவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.