Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதலமைச்சர் ஜெயலலிதா ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் ஜெயலலிதா ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி..

http://www.youtube.com/watch?v=nj_zuE8sN80&feature=feedf

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் கூறிய இந்த இரண்டு விடயங்களையும் செய்தீர்களென்றால்........

தமிழினம் தங்கள் பெயரையும் வரலாற்றில் பொறித்துக்கொள்ளும்.

1. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் டெல்லி நினைத்தால் நிச்சயம் செய்யலாம்.

2. பொருளாதார தடை கூட சாத்தியம், அதன் மூலம் தமிழ் மக்கள் ஏற்கக்கூடிய அரசியல் தீர்வு கிடைக்கும். மாற்றாக அவர்களுக்கு பொருளாதார, இராணுவ நலன்களுக்கு உதவலாம்.

மத்திய அரசு தமிழருக்கு, அவர் நலன்கள் சார்பாக நல்லது செய்ய விரும்பின், புதிய மாநில அரசு குறுக்கே நிற்காது என்பதை மட்டும் நம்பலாம்.

இணைப்புக்கு நன்றி

Edited by akootha

அவரின் அடிப்படை நிலையில் இன்னும் மாற்றம் வரவில்லை.

ஈழத்தமிழர் என்பதை தொடர்ந்தும் இலங்கைத் தமிழர் என்றே உரைக்கிறார்.

ஆனாலும்

ஈழத்தமிழர் ஈழத்தமிழர் என்றே கூறிக்கொண்டு தமிழின அழிவுக்குத் துணைபோன அந்த கிழத்தைவிட இவர் பரவாயில்லை.

நம்புவோம் இவர் தமிழின விடியலுக்கு உதவுவார் எண்டு!!

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா முழுமையாக நம்பக் கூடிய ஒருவர் அல்ல..!

1996 கலைஞர் பதவிக்கு வரும் முன்.. இவரின் செயற்பாடுகள் சந்திரக்காவோடு சேர்ந்த ஒன்றாக இருந்தது. இவை இலகுவில் மறக்கக் கூடிய விடயங்கள் அல்ல. இருந்தாலும்...

இன்றைய தேவை ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் மீதான அக்கறையைப் பயன்படுத்தி தமிழக மக்களின் தார்மீக ஆதரவை வளர்த்துக் கொள்வதுதான். அதைவிடுத்து ஜெயலலிதா எமக்காக துணிந்து பல விடயங்களை செய்ய முன்வருவார் என்பது போல படம் காட்டுவது தற்போதைய சூழலில் ஆபத்தானது.

ஜெயலலிதாவை பகைத்துக் கொள்ளாத வகையில் சில நெருக்காமான உறவாடல்களை அவரோடு பேணி அவரின் கடந்த கால நிலைப்பாடுகளில் இருந்த தவறுகளைச் சுட்டிக்காட்டினால்.. ஒருவேளை அவர் தனது நிலைப்பாடுகளை திருத்தக் கூடும். அதற்கான வாய்ப்பை ஆராய்ந்து பார்த்து அதனை மேற்கொள்ள வேண்டும்.

ஜெயலலிதா உண்மையில் திருந்தா விட்டாலும்.. அவர் திருந்தியவராக நடிக்க வேண்டிய தேவையை.. தமிழக மக்களின் ஈழத்தமிழர் மீதான அனுதாபம் அவருக்கு இன்று ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமன்றி ஈழத்தமிழர்கள் மீதான தமிழக மக்களின் அனுதாபத்தை தனது அரசியல் முதலீடாக பயன்படுத்தி ஜெயலலிதா மத்தியில் தான் பிரதமராக அமரும் வாய்ப்பையும் தேடிக் கொள்ள முனைவார். அந்த வகையில் தான் நான் முதல்வராக ஒரு எல்லைக்குள் தான் செயற்பட முடியும் என்பதை கோடிட்டு காட்டியுள்ளார். என்னை மத்தியில் செல்வாக்குச் செய்ய வாக்களியுங்கள் நான் ஈழத்தமிழர்களுக்கு வேண்டியதை பெற்றுக் கொடுப்பேன் என்றும் நாளை அவர் சொல்வார்.

நாம் விரும்பியோ விரும்பாமலோ எமது துயரம் தமிழக திராவிட அரசியல்வாதிகளின் முதலீடாகியுள்ளது. அந்த முதலீட்டினை அவர்கள் பாவிக்கும் போது நாமும் அதனூடு எமக்கான பயனைப் பெற முனைய வேண்டும்.

கருணாநிதியின் வீழ்ச்சி எமக்கு சாதகமற்ற அவரின் அணுகுமுறைக்கு கிடைத்த தோல்வி மட்டுமன்றி.. ஈழத்தமிழர்களின் துயர் என்பது மீண்டும் 80களின் பின் தமிழக அரசியலில் செல்வாக்குச் செய்யும் அளவிற்கு அது தமிழக மக்களின் இதயங்களில் வலியை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வலியை தமிழக மக்கள் உணரச் செய்த இனக் கடமையை செய்தவர்கள்.. அண்ணன் சீமான்.. வைகோ.. நெடுமாறன் ஐயா போன்றவர்களும்.. இன்னும் பல ஈழத்தமிழின ஆதரவாளர்களுமாவர். அவர்களின் தொடர்ச்சியான அரசியல் மக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் ஒத்துழைப்புக்களும் எமக்கு அவசியம்... அவையே எமது பலம்.

ஜெயலலிதா சில விடயங்களில் கொண்டிருக்கும் தெளிவின்மையை போக்க வேண்டியதில்.. தாயக கட்சிகளுக்கும்.. புலம்பெயர் அமைப்புக்களுக்கும்.. தமிழக ஈழ ஆதரவு அரசியல் தலைவர்களுக்கும் அமைப்புக்களுக்கும் ஒரு கடமை உள்ளது. அவர் அவற்றை கேட்டு தெளிகிறாரோ இல்லை நடிக்கிறாரோ நாம் அதனை இட்டு முயற்சிக்க வேண்டும். அவரின் உண்மைச் சொரூபத்தையும் தமிழக மக்கள் முன் தோலுரித்துக் காட்டும் இராஜதந்திரம் மூலம் அவரை எம் ஜி ஆர் போன்றவர்கள் ஈழத்தமிழர்களின் நிலைப்பாட்டோடு இணைந்து எடுத்த பொது முடிவுக்கு இணக்க நகர்த்தி வர வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் பெரு வீழ்ச்சி.. அதுவும் ஈழத்தமிழர்களின் துயர் தொடர்பில் ஒரு நீலிக்கண்ணீர் வடிக்க வகை செய்தாக வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது. திமுக விற்கும் அதே நிலை. இந்தச் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி தமிழக மக்களின் மனங்களில் இடம்பிடித்து.. ஈழத்தமிழர்கள் தங்கள் அரசியல் உரிமைகளை நிலைநாட்ட அவர்களின் பேராதரவை தமதாக்கிக் கொள்வதே பிராந்தியத்திலும் சர்வதேசத்திலும் எமது குரலுக்கு அங்கீகாரம் கிடைக்கக் கூடிய ஒற்றுமையை வாங்கித் தரும்.

அதன் மூலமே சிங்களத்திடமிருந்து சர்வதேசத்தை எமக்கு நாம் விரும்பும் வடிவில் ஆகக் குறைந்த ஒரு தீர்வையாவது நாம் நிம்மதியாக எம் மண்ணின் மைந்தர்களை தொழுது வாழ பெற்றுத் தர வகை உந்தச் செய்ய முடியும்..!

சிந்திப்போம் செயற்படுவோம். வெறும் உணர்ச்சிப் பெருக்குகளால் உந்தப்பட்டு இருப்பதிலும்.. சரியான சூழலை சரியாக பாவிக்கும் திறனே எமக்கு இன்று அவசியமாக உள்ளது. மற்றவர்களை நம்பி நடப்பதிலும் அவர்கள் நம்மை நம்ப நடப்பது எமக்கு பலம்..!

Edited by nedukkalapoovan

ம்ம்ம்..... கட்டக் கச்சையும் இல்லாத நிலையில் .... நாம் காஞ்சிபுரம் வைத்திருப்பதாக நினைப்பு ....

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்..... கட்டக் கச்சையும் இல்லாத நிலையில் .... நாம் காஞ்சிபுரம் வைத்திருப்பதாக நினைப்பு ....

எமது இன மானத்தை மாவீரர்கள் தான் இத்தனை ஆண்டுகளாக காத்து நின்றார்கள். இன்று அவர்கள் விதையாகித் தான் எமக்கு போர் குற்ற விசாரணை அறிக்கையையும் பெற்றுத் தந்திருக்கிறார்கள். அதுவும் அவர்கள் உயிர் கொடுத்து எமக்கு மானம் காக்க போட்ட பிச்சை தான் இந்தக் கச்சை. அதையும் அவுத்துப் போட்டு அம்மணமா போய் கூனிக் குறுகி நிற்போம் என்ற நிலையில் இருந்தால்.. நிச்சயம் எமக்கு யாரும் விடிவு தேடித்தரமாட்டார்கள். எமது நிலையை அவர்கள் பாவித்துக் கொண்டு தம் விடிவை உறுதிப்படுத்திக் கொள்வார்கள். அப்போது நாம் இன்றுள்ளதை விட கேவலமான நிலையில் இருக்க வேண்டிய நிலைதான் வரும். அது குறித்தும் சிந்திக்க வேண்டும். நமக்கு புரிஞ்சது மட்டுமல்ல.. அறிவு. நமக்குப் புரியாத பல விடயங்களையும் புரிய வேண்டியதே அறிவு.

Edited by nedukkalapoovan

வீரத்தமிழன் பரம்பரை மீசை துடிக்கின்றது.

இம்சை அரசன் புலிகேசியை பல தரம் பார்த்துவிட்டார் போல.

  • 2 months later...

இலங்கைக்கு மின் சப்ளை: ஆந்திராவுக்கு மாற்றம்

தமிழகம் வழியாக இலங்கைக்கு கடல் மார்க்கமாக மின் வினியோகப்பணி ஆட்சி மாறியவுடன் ரத்து செய்யப்பட்டு,ஆந்திரா வழியாக பணி துவங்க உள்ளது. மத்திய அரசின் "பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' நிறுவனம்,பாக் ஜலசந்தி கடல்பகுதியில் மின் வினியோகத்திற்காக மண் ஆய்வுப்பணியை 16.12.2010ல் மண்டபம் பகுதியில் துவங்கியது. ஆய்வு முடிந்த பின்னர், திட்ட மதிப்பீடு ஒதுக்கப்பட்ட உடன் இந்தியாவிலிருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு மின்சார வினியோகம் மேற்கொள்ளப்பட இருந்தது.

இந்நிலையில், சட்டசபை தேர்தலுக்குப்பின் ஆட்சி மாறிய பின் தற்போது இலங்கைக்கு மின் வினியோக திட்டம் நிறுத்தப்பட்டு, தற்போது, ஆந்திரா மாநிலம் கடல் வழியாக இலங்கைக்கு மின்வினியோகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=292956

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.