Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழகர்சாமியின் குதிரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அழகர்சாமியின் குதிரை

as-03.jpg

எப்படிப்பட்ட ஜாம்பவான் எடுத்த படமென்றாலும், அடுத்தடுத்த காட்சிகளை ஒரு சினிமா ரசிகன் எளிமையாக யூகித்துவிட முடிவதாக இருப்பதுதான் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட். டைட்டிலிலேயே இதை அடித்து நொறுக்கியிருக்கிறார் சுசீந்திரன். உணவு உபசரிப்பாளர்களின் பெயர்தான் முதலில் வருகிறது. சூப்பர் ஸ்டார், யுனிவர்சல் ஸ்டார், யங் சூப்பர் ஸ்டார் என்று கந்தாயத்து கிராஃபிக்ஸில், காதை கிழிக்கும் சத்தத்தில் டைட்டில் தொடங்காதது பெரிய நிம்மதி.

தமிழில் கதை இல்லையென்று இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஹைதராபாத் மற்றும் மும்பையில் தெருத்தெருவாக அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். ரீமேக் அப்பாடக்கர்களே! பாஸ்கர் சக்தி என்றொரு எழுத்தாளர் சென்னை கே.கே.நகரில் குடியிருக்கிறார். தமிழின் அச்சு அசலான கவுச்சி வாசத்தோடு மண்ணின் மனிதர்களையும், கலாச்சாரத்தையும் எழுத்தில் செதுக்கிக் கொடுக்கிறார். இவரையும் கொஞ்சம் கவனிங்க. இந்தப் படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார். (இன்று காலை தினகரனில் இயக்குனர் தரணியின் பேட்டி “தெலுங்கு ஒக்கடுவின் ஒன்லைனரை மட்டும் வைத்துக்கொண்டு, தமிழுக்கு ஏற்றவாறு கில்லியை புதுசாக உருவாக்கினேன்” – இவருக்கு மனச்சாட்சியே இல்லையா?)

சினிமாவாசம் சிறிதுமில்லாத சிறுகதை ஒன்றினை, படத்துக்கு கதைக்களனாக தேர்ந்தெடுத்த இயக்குனர் ஒரு இமாலய ஆச்சரியம். எப்படியெல்லாம் ஒரு ஹீரோ இருக்கக்கூடாது என்று தமிழ் சினிமா வரையறுத்து வைத்திருக்கிறதோ, அப்படியெல்லாம் இருக்கிறார் அழகர்சாமியின் அப்புக்குட்டி. குண்டு, கறுப்பு, குள்ளம்.

as-01.jpg

வண்ணத்திரை பளபளப்பே சற்றும் தெரியாத இயற்கையான ஒளியமைப்பில் கேமிரா. தேனீ ஈஸ்வருக்கு இது முதல் படமென்று சொன்னால் தேனீ குஞ்சரம்மா கூட நம்பமாட்டார். பாஸ்கர் சக்தி போலவே விகடனில் இருந்து சினிமாவுக்கு வந்த இன்னொரு மாணிக்கம். (அதே விகடனில் இருந்து சினிமாவுக்கு வந்த இன்னுமொரு மாணிக்கம் வின்செண்ட் பால் – உதவி ஒளிப்பதிவாளர்)

வசனகர்த்தா நாத்திகராக இருக்கவேண்டும். சாமி சம்பந்தப்பட்ட காட்சிகளில் கேலியும், கிண்டலும் நுரைபொங்க காட்டாறாக ஓடுகிறது. இயக்குனர் அல்லது வசனகர்த்தா, ஒருவரில் ஒருவர் மிகப்பெரிய பரோட்டா ரசிகர். விசாரித்ததில், ஏழுமலை ஏழுகடல் தாண்டி கிளியின் கண்ணில் அரக்கனின் உயிர் இருந்ததைப்போல இயக்குனரின் உயிர் பரோட்டாவிலும், தண்ணி சால்னா மற்றும் டபுள் ஆம்லெட், ஹாஃப் பாயிலில் அடங்கியிருப்பதாக தெரியவருகிறது.

பிரெசிடெண்ட், எலெக்‌ஷனில் இவரிடம் தோற்றுப்போன அவரது சொந்தக்காரர், பிரெசிடெண்ட் மகன், மைனர், மைனரின் வப்பாட்டிகள், திருப்பூர் பனியன் ஃபேக்டரிக்கு மகளை அனுப்பிவைக்கும் அம்மா, தச்சுவேலைக்காரர், வாத்தியார், கோடங்கி, அவருடைய அழகான மகள், அராத்து பொண்டாட்டி, அழகர்சாமி, அழகர்சாமியின் குதிரை, அழகர்சாமியின் வருங்கால பொண்டாட்டி, வருங்கால மாமனார், போலிஸ் இன்ஸ்பெக்டர், சி.ஐ.டி. வேலை பார்க்கவரும் திக்குவாய் கான்ஸ்டபிள்.. என்று படம் நெடுக வரும் பாத்திரங்கள் அசலாய் மனதை கொள்ளை கொள்ளுகிறார்கள். பாத்திரத்தேர்வுக்கான ஆஸ்கர் விருது இருக்குமேயானால், சுசீந்திரனுக்கு தாராளமாக தரலாம்.

as-02.jpg

குறைகளும் இல்லாமல் இல்லை. முதல் குறை, இளையராஜாவின் பின்னணி இசை. இசையென்று பார்த்தால், வழக்கம்போல உலகத்தரம்தான். ஆனால் 1982ல் நடக்கும் கிராமியக் கதைக்கு நவீன இசையை ஏன்தான் இசைஞானி முயற்சித்தாரோ தெரியவில்லை. அலைகள் ஓய்வதில்லைக்கு எப்படி இசையமைத்தாரோ, அதேமாதிரி (அந்தகாலத்து கருவிகளை பயன்படுத்தி) இசையமைத்திருந்தால், கிளாசிக் ஆக இருந்திருக்கும். பாரதிராஜா படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை தாமரை இலை மீது ஒட்டாத தண்ணீர் மாதிரி இருக்குமல்லவா? பல காட்சிகளில் இசைஞானியின் இசையும் அப்படித்தான், அழகர்சாமியின் குதிரைக்கு பொருந்தவேயில்லை. இந்தக் குறையை பாடல்களில் போக்கியிருக்கிறார் இளையராஜா. குறிப்பாக ‘குதிக்கிற குதிக்கிற குதிரைக்குட்டி’. இளையராஜா பாத்திரத்தோடு ஒன்றிப்போய் பரவசமாக பாடியிருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்தில் வரும் ‘டூயட்’ ஒன்றும், கதையின் வேகத்துக்கு பெரிய ஸ்பீட் பிரேக்கர். தவறான இடத்தில் பொருத்தப்பட்ட பாடல். யதார்த்தமாக பயணிக்கும் படத்துக்கு க்ளைமேக்ஸ் மிகப்பெரிய பெரிய திருஷ்டிப் பொட்டு. ‘பதினாறு வயதினிலே’ பாரதிராஜா மாதிரி படத்தை இயக்கிவந்த சுசீந்திரன், உச்சக்கட்ட காட்சியில் இராம.நாராயணன் ஆகிவிட்டார். அந்தகாலத்து ‘செல்வி’ பட ஸ்டைலில், குதிரை ‘ஸ்டண்ட்’ எல்லாம் செய்து ஹீரோவின் உயிரைக் காப்பாற்றுகிறது.

இம்மாதிரி சிறுசிறு குறைகள் தென்பட்டாலும் அழகர்சாமியின் குதிரை ஒரு ஃபீல் குட் மூவி. படம் முடிந்து வெளியே வரும்போது ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டு, 420 பீடா போட்ட திருப்தி ஏற்படுகிறது.

அழகர்சாமியுடையது அழகான குதிரை. அம்சமாக ஓடும்.

http://www.luckylookonline.com/2011/05/blog-post_11.html

  • கருத்துக்கள உறவுகள்

குறைகளும் இல்லாமல் இல்லை. முதல் குறை, இளையராஜாவின் பின்னணி இசை. இசையென்று பார்த்தால், வழக்கம்போல உலகத்தரம்தான். ஆனால் 1982ல் நடக்கும் கிராமியக் கதைக்கு நவீன இசையை ஏன்தான் இசைஞானி முயற்சித்தாரோ தெரியவில்லை. அலைகள் ஓய்வதில்லைக்கு எப்படி இசையமைத்தாரோ, அதேமாதிரி (அந்தகாலத்து கருவிகளை பயன்படுத்தி) இசையமைத்திருந்தால், கிளாசிக் ஆக இருந்திருக்கும். பாரதிராஜா படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை தாமரை இலை மீது ஒட்டாத தண்ணீர் மாதிரி இருக்குமல்லவா? பல காட்சிகளில் இசைஞானியின் இசையும் அப்படித்தான், அழகர்சாமியின் குதிரைக்கு பொருந்தவேயில்லை. இந்தக் குறையை பாடல்களில் போக்கியிருக்கிறார் இளையராஜா. குறிப்பாக ‘குதிக்கிற குதிக்கிற குதிரைக்குட்டி’. இளையராஜா பாத்திரத்தோடு ஒன்றிப்போய் பரவசமாக பாடியிருக்கிறார்.

அண்மையில் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.. இந்தக்காலத்தில் வயலின் வாத்தியத்தை திறம்படக் கற்றுக்கொண்டு ஒருவன் இசைத்துறையில் காலத்தைப் போக்கலாம் என்று நினைத்தால் அது வெறும் கனவுதான் என்று. அதற்குக் காரணம் இலத்திரனியல் சத்தங்களின் வருகைக்குப் பின் இத்தகைய கலைஞர்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. இதன் தாக்கம் தற்காலப் பாடல்கள் முதற்கொண்டு பின்னணி இசைவரை தெரிகிறது. :(

இசைஞானியின் 70, 80 களில் வந்த பாடல்களின் பெருவெற்றிக்குக் காரணங்களுள் ஒன்று அவற்றின் பின்னணி இசையை அவர் செதுக்கிய விதமே. இன்று அவையெல்லாம் செயற்கை ஒலிகள் ஆகிவிட்டன. படத்தின் கருவுடன் ஒட்டுவதில்லை..! :unsure:

நல்லதொரு சினிமா என்று கேள்வி. பார்க்க வேண்டும்.

420 பீடா சாப்பாட்டுக்குமேல் போட்டமாதிரி என்றால் நல்லாத்தான் இருக்கும்.

பார்க்க வேண்டும் என இருக்கும் படம் .... இங்கு கோ, எங்கேயும் காதல் போன்ற குப்பைகளை வெளியிடும் திரையரங்குகள் (விநியோகஸ்தர்கள்) இப்படியான படங்களை வெளியிட மாட்டார்கள்; Star value இல்லையென

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தரமான டிவிடி வந்தால் பார்க்கவுள்ளேன். தரமில்லாத கொப்பிகளில் பார்த்து நல்ல படங்களையும் வெறுக்கவேண்டிவந்திடக்கூடாது!

பாஸ்கர்சக்தியின் ...சிறுகதையான அழகர்சாமியின் குதிரையை .மூலக்கதையின் தாக்கம் ...திரையில் சிறிதும் குறையாமால் நன்றாக காட்சிப்படுத்திள்ளார் டைரக்டர் சுசீந்திரன் ,,,,,நீண்ட காலத்துக்கு பிறகு நல்லதொரு படம் பார்த்த திருப்பதி .....இந்த திரைபடத்தின் மூலக்கதை பாஸ்கர் சக்தியின் சிறுகதையாகும் .அந்த சிறுகதையை வாசிக்க விரும்பின் . http://www.aganazhigai.com/2011/04/blog-post_03.html இந்த இணைப்பை அழுத்தி பார்க்கவும்

----

Edited by sinnakuddy

  • 2 weeks later...

நல்ல படம். ஆனால் முடிவு மட்டும் \இராம நாராயணன்' தனம் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

விஜய் தொலைக்காட்சி என்று நினைக்கின்றேன், அதில் படத்தின் இயக்குனர், கதாநாயகன் போன்றோருடனான ஓர் உரையாடலை பார்த்தேன், பின்னர் படத்தையும் பார்த்தேன். ஆகா ஓகோ என்று சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. வழமையான பாணி தமிழ்சினிமா; கலவையில்/தோற்றங்களில் மாத்திரம் சில வேறுபாடுகளை புகுத்தியுள்ளார்கள். படத்தின் பிரதான பாடலை கேட்டும்போது வேறோர் படத்தின் பாடல் நினைவில் வந்து இணைகின்றது, சரியாக அந்தப்பாடலை இனங்காணும் அளவிற்கு ஞாபகம் வரவில்லை.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

வழமையான சினிமா பாணிகளில்இருந்து விலகி இருக்கிறது அழகர்சாமியின் குதிரை. மூடத்தனத்தின் உச்ச நிலை குதிரையை வைத்து இலாவகமாக கதையை நகர்த்தப்பட்டிருக்கிறது. அழகர்சாமியின் அப்பாவித்தனமான நடிப்பு அழகு கவர்ச்சி என்பதையெல்லாம் சாப்பிட்டு ஏப்பவிட்டிருக்கிறது. நல்ல படம் எல்லோரும் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படம் எனக்குப் பிடித்திருந்தது...வழமையான தமிழ் சினிமாக்களில் இருந்து மாறுபட்ட கதை...நான் பாஸ்கர்சக்தியின் நாவல் படிக்கவில்லை ஆனால் அதை திரைப்படமாக சுசிந்திரன் நன்றாக எடுத்து உள்ளார்...ஒன்றிரண்டு குறைகள் காணப்படுகின்றன...இளையராஜாவின் பின்னனி இசை பரவாயில்லை ஆனால் பாடல்களோ அதற்கான இசையோ சரியில்லை என்பது என் கருத்து இத்தனைக்கும் இசைஞானி தான் எனக்கு பிடித்த இசை அமைப்பாளர் :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.