Jump to content

நீ அங்கே நான் இங்கே


Recommended Posts

பதியப்பட்டது

நீ அங்கே நான் இங்கே

-சினேகிதி-

அம்மா அப்பான்ர கடிதம் வந்திருக்கு இந்தாங்கோ.

கொண்டா கொண்டா என்னடா இன்னும் இந்த மாசம் கடிதம் வரேல்ல எண்டு பார்த்தன்.சுஜி கவி இங்க பாருங்கோ அப்பா கவிக்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியிருக்கிறார்.

அம்மா முதல் என்னட்டதான் தரோணும்.

இன்னொரு சந்தோசமான செய்தி என்னெண்டால் அப்பா வாற மாசம் ஸ்பெயின்ல இருந்து இங்க வாறாராம்ம்ம்ம்.

ஐ ஜாலி.

சின்னவா கவி அப்பாட்ட என்னத்துக்கெல்லாம் சொல்லிவிடலாம் என்று அம்மாட்ட நச்சரிக்க மூத்தவ சுஜி 10ம் வகுப்புக்குப் பரீட்சைக்குப் படிக்கப் போட்டா.அப்பா வரப்போறார் என்று தெருவால போற வாற எல்லாருக்கும் சொல்றதுதான் கவின்ர வேலை.

அப்பா வந்தவுடனே அம்மா ஓடிப்போய் அப்பாவைக் கட்டிப்புடிச்சிட்டா.சுஜி அப்பாக்கு தேசிக்காய் தண்ணி கொண்டு வந்து கொடுக்கத்தான் அப்பா சுஜியை பார்த்திட்டுச் சொன்னார் இவளென்ன என்னவிட வளத்தி போல…ஆமா எங்க கவி ஆளைக் காணவே இல்லை.கவி வெக்கப் பட்டுக்கொண்டு வந்து நிண்டா முன்னால. கவியைத் தூக்கி மடில இருத்தி இதென்ன 9 வயசாச்சு தாத்தா போல நுள்ளான் என்று சொல்ல அம்மம்மா சித்தியவை எல்லாம் சிரிக்க கவிக்கு கோவம் … நுள்ளான் கடிச்சா எப்பிடி வலிக்கும் தெரியும்தானே. கவிக்கு வாய் எண்டு அம்மா எழுதினவாதான் ஆனா இனி நான் வந்திட்டன் தானே எல்லாம் றிப்பியர் பண்றன்… கவி கொடுப்புக்க சிரிச்சுப்போட்டு நான் என்ன றேடியோவே றிப்பியர பண்ண…

அப்பா வந்து நிண்ட 3 மாதமும் கவிக்கு ஒரே கொண்டாட்டம் தான.றஞ்சன் சித்தப்பா பூங்கா,கிட்டு பூங்கா ,தனங்கிழப்பு பெரியப்பா வீடு நவக்கிரில அப்பம்மாவேன்ர தோட்டம் இன்னும் நிறைய இடங்கள் ஒரே சுற்றுலாதான்.வீட்டுக்கு paint அடிச்சு சுஜிக்கு பூப்புனித நீராட்டு விழாவும் செய்து போட்டு அப்பா தான் திரும்பப் போற அலுவல்களைப் பார்க்கத் தொடங்கிட்டார்.கவிக்கு அப்பாவோட ஊர் சுத்தினதே பெரிய சந்தோசம் அப்பா போறதைப் பற்றி கவலையில்லை.சுஜியும் ழுஃடு பரீட்சை வருதெண்டு பள்ளிக்கூடம் ரியூசனுமாய் திரிய அம்மாக்குத்தான் ஒரே கவலை.தான் ஸ்பெயினுக்குப் போய் எல்லாரையும் கெரியா கூப்பிடறன் என்டு சொல்லிட்டுப் போன கவின்ர அப்பா ஒரு மாதிரி ஐந்து வருசத்தால அமெரிக்காவுக்கு வந்து குடும்பத்தை ஸ்பொன்ஸர் பண்ணினார்.

நியுயெர்சிக்கு கவியாக்கள் வந்து சேர்ந்தண்டு அப்பா சமைச்ச பசுமதி அரிசிச் சோறும் முருங்கைக்காய் கறியும் தான் சாப்பாடு.

அம்மா அம்மா….

என்ன கவி?

அம்மா நான் நினைச்சன் வெளிநாட்டில ஆக்கள் சோறு சாப்பிட மாட்டினம் எண்டு.

கவி பேசாம சாப்பிட்டால்தான் அப்பா வாங்கி வைச்சிருக்கிற சொக்லட் எல்லாம் தருவன்.

ஓ பதினாலு வயசிலயும் சின்ன பிள்ளையள் மாதிரி சொக்லட் வாங்கி திண்டுதான் பல்லு இந்த நிறத்தில இருக்கு.

எல்லாரும் கெரியாச் சாப்பிட்டுட்டு போய்ப்படுங்கோ நாளைக்குக் காலம கோயிலுக்குப் போவம்.

அப்பா..

என்ன சுஜி?

நாங்கள் எப்ப Statue of liberty பார்க்கப் போப்போறம்?

நாளக்கு எட்வட் வரப் போலாம்.

நியுயெர்சிக்கு வந்து ஒரு கிழமையிருக்கும் பின்னேரம் ஆறு மணிக்கு போன் அடிக்குது.

Hello...

Hello நான்தான் ....

இப்ப ஏன் இங்க எடுத்தனீ?

வீட்டில எங்கட விசயம் இவற்ற அண்ணாவைக்குத் தெரிஞ்சிட்டுது.என்ன வீட்ட விட்டுப் போகச் சொல்லிட்டனம்.எனக்கு கொஞ்சம் காசு வேணும்.

வையடி போனை.நீயெல்லாம் ஒரு பொம்பிளை சீ.

சுஜிஜிஜிஜி…..நீ முதல்ல போனை வை.

ஒட்டுக்கேக்கிற நாய்ப் பழக்கம்.

ஓ நீங்க அம்மாக்குத் துரோகம் செய்ததை விட நான் ஒட்டுக்கேட்டது பெரிய விசயமில்லை.முதல்ல அவளை போனை வைக்கச் சொல்லுங்கோ.நல்லகாலம் அம்மாவும் தங்கச்சியும் மாமாவோட கோயிலுக்குப் போனது.அம்மாக்கு மட்டும் இது தெரிஞ்சா செத்திடுவா.சீ நான் உங்களை எவ்வளவு நல்லவர் என்று நினைச்சனான்.உங்களுக்குப் பிறந்ததை நினைக்க கேவலமா இருக்கு.

எனக்கு அங்க யுனிவசிற்றி கிடைச்சது அதையும் விட்டிட்டு இந்தக் கேவலத்தைப் பார்க்கிறதுக்குத்தான் எங்களை இஞ்ச கூப்பிட்டனீங்களே?இவ்வளவு நாளும் இருந்த மாதிர நாங்கள் அங்க சந்தோசமா இருந்திருப்ம்.நீங்களும் இஞ்ச இவளோட சந்தோசமா இருந்திருக்கலாம.

சுஜி தயவுசெய்து நான் சொல்றதைக் கேளம்மா.

போதும் நீங்க ஒண்டும் சொல்லத்தேவையில்லை.நான் ஒண்டும் சின்னப் பிள்ளையில்லை.

எனக்குப் போன வருசம் அக்சிடன்ற் நடந்தது என்று எழுதினான் தானே அப்ப மாலினிதான் என்னை வடிவாப் பாத்தவா.அவ இங்க இருக்கிற பிறைவற் கிளினிக்ல நர்ஸ்.அந்த நேரம் தான் இது நடந்தது ஆனால் நான் இப்ப அவாவோட கதைக்கிறேல்ல.

நல்லா கதை சொல்றீங்களப்பா.நீங்கள் சொன்னதெல்லாம் உண்மையென்டால் நாங்கள் நாளைக்கே எல்லாரும் கனடாவுக்குப் போறம்.போய் அத்தையோட இருக்கிறம்.இவள் உங்களுக்கு இனிம போனே பண்ணக்கூடாது.

அடுத்த கிழமையே அத்தையைப் பார்க்கப் போவம் என்று சொல்லி குடும்பத்தோட கனடாவுக்கு வந்த சுஜி அப்பாவுக்கு மரியாதை குடுக்கிறேல்ல.முந்தியைப் போல இல்லாம அப்பாவோட என்னத்துக்கெடுத்தாலும் வாய் காட்டிறது.

அம்மா நினைக்கிறது சுஜிக்கு நண்பர்களை விட்டிட்டு வந்திட்டம் என்ற கவலை அதான் அப்பாவோட சண்டை பிடிக்கிறாள் எண்டு.

சுஜிக்கு மாலினின்ர நினைவு வந்தா அப்பாட்ட போய் அவளுக்கும் பிள்ளைகள் இருக்குதோ?காசு அனுப்பிறனீங்களோ?அவளுக்குப் போன் பண்றனீங்களோ எண்டெல்லாம் கேக்கோணும் போல இருக்கும் பிறகு ஒருவேளை அப்பாவே மறந்து போயிருக்க நானே ஏன் ஞாபகப் படுத்துவான் என்று கேக்கிற எண்ணத்தையே விட்டிடுவாள்.

Posted

சிநேகிதி கதை நன்றாய் இருக்கிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் முடிவை விபரித்து எழுதியிருக்கலாம். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்

Posted

தாங்ஸ் றமாக்கா...அடுத்த கதையை வடிவா எழுதுவம்.

Posted

அட கதை இவ்வளவும் தானா, நான் தொடரும் என்று நினைச்சிட்டன். ஒரு வித்தியாசமான கதையை இன்று வாசித்துள்ளேன்.

Posted

கதையை தொடரலாம் பிரச்சனையே இல்லை.நீர் தொடர்ந்து எழுதிறீரா?? என்ன வித்தியாசம்??

Posted

கதை--- அனுபவம் உள்ள எழுத்தாளர் எழுதியதை போல இருக்கு .. ஆனால் என்னை போல ஓராம் வகுப்பு பெயில் ஆன கேசுகளுக்கு --- சின்னதொரு முன்விபரணம் கொடுக்காமல் கதையை தொடங்கி முடிச்சது ... கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் உங்கள் எழுத்து நடையை புரிந்து கொள்ள வைக்கும் சிக்கலை விட்டு வைக்கிறது! 8)

Posted

வர்ணன் அனுபவம் எல்லாம் இல்லை.நானே தத்தக்க பித்தக்க..கஷ்டப்பட்டு வாசிக்க வேண்டியிருக்கா?ம் ம் என்ன சிக்கல் என்று குறிப்பிட்டு சொன்னா திருத்திக்கொள்வேன்.மற்ற கதைகளையும் வாசிச்சு பாருங்க.

Posted

அப்பா வந்தவுடனே அம்மா ஓடிப்போய் அப்பாவைக் கட்டிப்புடிச்சிட்டா.சுஜி அப்பாக்கு தேசிக்காய் தண்ணி கொண்டு வந்து கொடுக்கத்தான் அப்பா சுஜியை பார்த்திட்டுச் சொன்னார் இவளென்ன என்னவிட வளத்தி போல…ஆமா எங்க கவி ஆளைக் காணவே இல்லை.கவி வெக்கப் பட்டுக்கொண்டு வந்து நிண்டா முன்னால. கவியைத் தூக்கி மடில இருத்தி இதென்ன 9 வயசாச்சு தாத்தா போல நுள்ளான் என்று சொல்ல அம்மம்மா சித்தியவை எல்லாம் சிரிக்க கவிக்கு கோவம் … நுள்ளான் கடிச்சா எப்பிடி வலிக்கும் தெரியும்தானே. கவிக்கு வாய் எண்டு அம்மா எழுதினவாதான் ஆனா இனி நான் வந்திட்டன் தானே எல்லாம் றிப்பியர் பண்றன்… கவி கொடுப்புக்க சிரிச்சுப்போட்டு நான் என்ன றேடியோவே றிப்பியர பண்ண…

அப்பா வந்து நிண்ட 3 மாதமும் கவிக்கு ஒரே கொண்டாட்டம் தான.றஞ்சன் சித்தப்பா பூங்காஇகிட்டு பூங்கா இதனங்கிழப்பு பெரியப்பா வீடு நவக்கிரில அப்பம்மாவேன்ர தோட்டம் இன்னும் நிறைய இடங்கள் ஒரே சுற்றுலாதான்.வீட்டுக்கு pயiவெ அடிச்சு சுஜிக்கு பூப்புனித நீராட்டு விழாவும் செய்து போட்டு அப்பா தான் திரும்பப் போற அலுவல்களைப் பார்க்கத் தொடங்கிட்டார்.கவிக்கு அப்பாவோட ஊர் சுத்தினதே பெரிய சந்தோசம் அப்பா போறதைப் பற்றி கவலையில்லை.சுஜியும் ழுஃடு பரீட்சை வருதெண்டு பள்ளிக்கூடம் ரியூசனுமாய் திரிய அம்மாக்குத்தான் ஒரே கவலை.தான் ஸ்பெயினுக்குப் போய் எல்லாரையும் கெரியா கூப்பிடறன் என்டு சொல்லிட்டுப் போன கவின்ர அப்பா ஒரு மாதிரி ஐந்து வருசத்தால அமெரிக்காவுக்கு வந்து குடும்பத்தை ஸ்பொன்ஸர் பண்ணினார்.

இதை கவனியுங்க.. முதல் ஒருவிடயத்தில் தொடங்கி இடையில குழம்பி.. பிறகு 5 வருசம் ஆச்சு எண்டு எங்கயோ போகுது. :roll:

Posted

இதைத்தான் சொன்னன். ஏதோ ஒருவழியில நீங்கள் சொல்லவந்த கருத்தை நிறுவ முற்படலாம் . ஆனா எல்லாராலயும் டக்கெண்டு விளங்கி கொள்வது கஷ்டம் எண்டு நினைக்கிறேன் :roll:

Posted

அப்ப ஐஞ்சு வருசம் நடந்ததையும் விலாவரியாச் சொல்லச் சொல்லுறீங்கள்...அப்பச் சரி அடுத்த கதையை நீட்டி முழக்கிவிடுறன்.:D

Posted

சினேகிதி உங்கட மற்ற கதைகளயும் வாசிச்சன். நல்லா எழுதி இருக்கீங்க. அதிலும்"பொங்குமகிழ்வோடு" எண்ட கதை சூரியகதிர் இராணுவ நடவடிக்கைக்கு பிறகு பல இடத்தில நடந்த உண்மை கதைகளை போல இருக்கு.

தலையாட்டிகள பற்றி கதைச்சு இருந்தியள். அதை பற்றி நானும் ஒரு கதை எழுத முயற்ச்சி செய்ய போறன். ஏனெண்டால் சிங்கள ஆமியால அதுவும் நேரடியா எங்களில பலர் சந்திச்ச அனுபவம் எண்டதால :roll:

Posted

வர்ணன் ஓமோம் நிறைய பேருக்கு அனுபவம் இருக்கு.நேரடி அனுபவம் எண்டால் நல்லது எழுதும்.

Posted

நல்ல கதை.. வாழ்த்துக்கள். இன்னும் பல ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம் :lol:

  • 1 month later...
Posted

நன்றி தூயா அடுத்த ஆக்கம் வாசிச்சீங்கிளா?

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சினேகிதி உங்கட மற்ற கதைகளயும் வாசிச்சன். நல்லா எழுதி இருக்கீங்க. அதிலும்"பொங்குமகிழ்வோடு" எண்ட கதை சூரியகதிர் இராணுவ நடவடிக்கைக்கு பிறகு பல இடத்தில நடந்த உண்மை கதைகளை போல இருக்கு.

தலையாட்டிகள பற்றி கதைச்சு இருந்தியள். அதை பற்றி நானும் ஒரு கதை எழுத முயற்ச்சி செய்ய போறன். ஏனெண்டால் சிங்கள ஆமியால அதுவும் நேரடியா எங்களில பலர் சந்திச்ச அனுபவம் எண்டதால :roll:

இந்தக்கதையினை தேடிப்பார்த்தேன் . காணவில்லை. ஒரு வேளை பழைய யாழ்களத்தில் இக்கதையினைப் பார்க்கலாமா?

நீ அங்கே நான் இங்கே என்ற இக்கதையின் முடிவை உடனே முடித்துவிட்டீர்கள் போல இருக்குது

Posted

எல்லா ஆக்கங்களையும் மீள்வாசிப்பு செய்தால் இன்னும் வடிவா எழுதியிருக்கலாமோ என்று நினைக்கத்தோணும்.அதே போலத்தான் நீ அங்கே நான் இங்கே கதையும்.என்னுடைய ஆக்கங்களை அடிக்கடி தூசு தட்றீங்களே கந்தப்பு :-)

"பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள்" கதையை நீங்கள் என்னுடைய வலைப்பதிவில் வாசிக்கலாம்.இணைப்பு இதோ.

http://snegethyj.blogspot.com/2005/06/blog-post_25.html

யாழில் பழைய களத்திலிருக்கும் என நினைக்கிறேன்.

Posted

கதை ரொம்ப நல்லா இருக்கு சினேகிதி, உண்மையில் சில ஆண்கள் இப்படித்தான் இருக்கினம் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னுடைய ஆக்கங்களை அடிக்கடி தூசு தட்றீங்களே கந்தப்பு

"பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள்" கதையை நீங்கள் என்னுடைய வலைப்பதிவில் வாசிக்கலாம்.இணைப்பு இதோ.

http://snegethyj.blogspot.com/2005/06/blog-post_25.html

யாழில் பழைய களத்திலிருக்கும் என நினைக்கிறேன்.

நல்லாய் எழுதுகிறீர்கள் என்பதினால் தான் வாசிக்காத கதைகளை தேடி வாசிக்கிறேன். பொங்கு மகிழ்வோடு என்ற கதையினைப் போல பல உண்மைச் சம்பவங்கள் இந்தியன் இராணுவக் காலத்திலும் பல இடங்களில் நடந்தன.

Posted

ஐயோ புல்லரிக்குதே..எனக்குப்போய் இப்பிடி ஒரு வாசகனா?? சரி சரி இந்தாங்ககோ நான் எழுதிய அநேகமான கதைகள் இங்கிருக்கு.

http://snegethyj.blogspot.com/search/label...%AE%B3%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சினேகிதி எல்லோராலும் எழுத முடியாது.ஒரு சிலரால் தான் முடியும்.அதில் நீங்களும் அடக்கம்.தொடரவும்.

Posted

நன்றி துசான்.சில ஆண்கள் தான் அப்பிடி.

Posted

புலத்தின் அவலங்களில் ஒன்றைத் தொட்டிருக்கிறீர்கள். ஆனால் முடிவு சரியாக அமையாதது போல எனக்குப் பட்டது.

ஒரு தொடராய் எழுதக் கூடிய கதையல்லவா. முயற்சிக்கலாமே

Posted

எனக்கும் அப்பிடித்தான் தோணுது மணிவாசன்...என் கதைகளை நானே நிறையத் திருத்தி எழுதவேணும்.முயற்சிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சினேகிதி கதை நன்றாக உள்ளது...தொடர்ந்து உங்கள் படைப்புகளை எதிர்பார்க்கிறோம்......

Posted

சினேகிதி தொடர்ந்து எழுதுங்கோ அனால் யாழ் தளத்திற்கு வாற என்னை மாதிரி சில பேருக்கு கண்பார்வை குறைவுதான் அவை அதுக்கு கண்ணாடி போட்டு பாப்பினம் நீங்கள் எழுத்தை சாதாரணமாவே போடுங்கோ வடிவா இருக்கும் :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.