Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொஞ்சம்.. கொஞ்சமாக.. எப்படி கிட்ட வந்தார்கள்?

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதா!

நெடியவன் போராளி என்கிறீர்கள். அப்படியானால் கே.பி. போராளி இல்லையா?

அப்பு, நெடியவன் என்கிற பால்குடி வரமுன்னரே கே.பி. விடுதலைப் புலிகள் அமைப்பு தொடங்கிய காலத்திலேயே இணைந்து இருந்தார் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்க வேண்டும்.

கே.பி.யை சிறிலங்கா அரசு கைது செய்தது என்பதுதான் பலதரப்பட்டோரால் அறியப்பட்ட விடயம். ஆனால், உங்களைப் போன்றவர்கள் அவர் சரண் அடைந்துவிட்டார் என்பது வாதம்.

இங்கே நான் உங்களிடம் கேட்க விரும்புவது இதுதான்.

நெடியவனை ஒரு நாட்டு அரசு கைது செய்து சிறிலங்கா அரசிடம் ஒப்படைத்துவிட்டால் பிறகு எவ்வாறு நீங்கள் கதை அளப்பீர்கள்? எல்லோரும் கைது என்று போடும் போது நீங்கள் மட்டும் இல்லை, இல்லை அவர் சரண் அடைந்துவிட்டார் என்று கூறுவீர்களா?

இல்லை கைது செய்து கொடுத்த நாட்டை திட்டுவீர்களா? இல்லை உங்களுக்கு அப்போது என்ன தோன்றுகின்றதோ அவ்வாறு உரையாட முற்படுவீர்களா?

கே.பி.க்கு ஒரு நீதி; நெடியவனுக்கு ஒரு நீதியா?

ஒரு விடயத்தினைப் புரிந்து கொள்ளுங்கள். ஒருவர் கைதானால் அவர் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளவே முற்படுவார்.

முன்னர் எனில் வீறாப்பாக இருக்கலாம். ஏனெில், விடுதலைப் புலிகள் பலமாக இருந்தனர். இப்போது அவர்கள் இல்லாத நிலையில் நெடியவன் சரி அவருக்குப் பின்னர் செயற்படக்கூடியவர்கள் யாராவதாக இருந்தாலும் கைதானாலோ சரண் அடைய வேண்டி ஏற்பட்டாலோ இசைந்து செயற்படவே விரும்புவார்கள்.

உங்களைப் போன்று (எனக்கும் பொருந்தும்) கணனிக்கு முன்பாக தட்டச்சிட்டுக் கொண்டிருப்பது அல்ல வீரம். நடைமுறை யதார்த்தம் என்ற ஒன்று உள்ளது என்பதனையும் மறந்துவிடக் கூடாது.

கே.பி. ஆயுத வழங்கல் செய்த காலத்தில்தான் விடுதலைப் புலிகளின் பலம் உச்சத்தில் இருந்தது. அதனை நீங்கள் மறுத்தாலும் வரலாறு அதனைத்தானே பதிவு செய்கின்றது.

ஆகவே, கே.பி.யை விட எல்லாம் நெடியவன் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

பலர் விறுவிறுப்பு கட்டுரையைப் போட்ட என்னைத் திட்டி எழுதியிருக்கின்றீர்கள்.

உங்களைப் போன்றவர்களுக்கு நெடியவன் கைது பொய்யான செய்தியாக இருக்கலாம். ஆனால், கட்டுரையாளர் நோர்வேஜிய ஊடகத்தினை மேற்கோள் காட்டித்தான் கட்டுரையை எழுதியிருக்கின்றார். பிபிசி சிங்கள சேவையும் நெடியவன் கைது தொடர்பான செய்தியினை வெளியிட்டிருக்கின்றது. அச்செய்தியினைப் பார்க்க: Call for LTTE ban in Norway

அல்லது பிபிசி தமிழில் படிக்க: நெதர்லாந்து விசாரணையில் நெடியவன்

நெடியவன் கைது தொடர்பான சம்பவங்களை அவர் விபரித்து எழுதியிருக்கின்றார். கட்டுரையாளர் ஒன்றும் நேரடியாகக் கண்டு எழுதியதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லையே. இவ்வளவு காலமும் வெளிவந்த செய்திகளை அடிப்படையாக வைத்து அவர் கட்டுரையை எழுதியிருக்கின்றார்; அவ்வளவுதான். (இது தொடர்பான விபரங்களை கூகிள் ஊடாக நீங்கள் ஆங்கிலத்தில் தட்டசிட்டு தேடுங்கள்)

அதனை விட்டுவிட்டு கட்டுரையை தடை செய்ய வேண்டும்; ஆளைத் தடை செய்ய வேண்டும். அட நீங்கள் இன்னும் திருந்தவே இல்லையா?

எதற்கு எடுத்தாலும் புலிகளின் குணம்தான் இங்கே கருத்துக்களைப் பதிவிடுகின்றவர்களுக்கும் இருக்கின்றது. அவர்கள் தமக்குப் பிடிக்காதவர்களை துரோகிகள் என்றும் இதனைவிட ஒரு நல்ல தமிழ் வசனம் பாவிப்பார்கள். அதாவது, தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர் என்றும் கூறி தண்டனைகளை வழங்கியிருந்தனர்.

எல்லோரையும் துரோகியாக்கி கடைசியில் கண்ட மிச்சம்தான் என்ன? உங்களுக்குப் பதில் தெரியாது விட்டால் நான் கூறுகின்றேன்.

அந்தப் பதில்: முள்ளிவாய்க்கால்.

என்னை நீங்கள் திட்டினால் நான் கவலைப்படப் போவதில்லை.

ஏனெனில், 'யதார்த்தவாதி வெகுஜன விரோதி' என்பது காலாகாலமாக தமிழர்களால் பாவிக்கப்பட்டு வரும் ஒரு சொல் இருக்கின்றது என்பதனை அனைவரும் மறந்துவிடாதீர்கள்.

Edited by nirmalan

Tamil Tiger faction head questioned in Norway - media

COLOMBO | Fri May 20, 2011 10:49pm IST

(Reuters) - The leader of a powerful faction of Sri Lanka's separatist Tamil Tigers has been questioned in Norway as part of a probe into extortion by the group, Sri Lankan media reported on Friday.

Norwegian officials confirmed a man had been questioned in a Norwegian court, on the request of Dutch authorities carrying out an investigation, but declined to name him.

http://in.reuters.com/article/2011/05/20/idINIndia-57169320110520

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடியவன் விசாரணை: மர்மக் கதை போன்ற உளவுத்துறை பின்னணி!

வெளிநாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தற்போதைய #1 தலைவராக ஊடகங்களில் வர்ணிக்கப்பட்டுவந்த நெடியவன், நோர்வேயில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். நெடியவனின் இயற்பெயர் பேரின்பநாயகம் சிவபரன்.

நெடியவன் விசாரணை செய்யப்பட்டுள்ள விபரத்தை நோர்வேயின் தொலைக்காட்சி சேவையான TV-2 இன்று காலை உறுதிப்படுத்தியிருக்கின்றது. நோர்வேயில் வைத்து விசாரிக்கப்பட்டாலும், நெதர்லாந்து உளவுப் பிரிவினரின் வேண்டுகோளின் பேரிலேயே நெடியவன் விசாரிக்கப்பட்டுள்ளார். நோர்வே பொலீஸ் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

அகூதா,

நீங்கள் கூறியதனைத்தானே 'விறுவிறுப்பு' கட்டுரையாளரும் எழுதியிருக்கின்றாரே. கைது செய்யப்பட்டதாக எந்த இடத்திலும் கட்டுரையாளர் குறிப்பிடவில்லையே.

முதலில், Friday 20 May 2011, 02:00 GMT, "கைது !" எனத்தான் இந்த "பத்திரிகையும்" எழுதியது.

பின்னர், Friday 20 May 2011, 08:15 GMT, செய்தியை "மர்மக்கதையாக்கி" விட்டது. பத்திரிக்கை தர்மப்படி குறைந்தபட்சம் தங்கள் செய்தியை திருந்தி மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும்.

மன்னிக்கவும், யாழ் கருத்துக்கள தர்மத்தின் படி மேலே குறிப்பிட்ட தளங்களின் இணைப்புக்களையும் இம்முறை இணைத்துள்ளேன்.

முதலில், Friday 20 May 2011, 02:00 GMT, "கைது !" எனத்தான் இந்த "பத்திரிகையும்" எழுதியது.

- http://viruvirupu.com/2011/05/20/2100/

பின்னர், Friday 20 May 2011, 08:15 GMT, செய்தியை "மர்மக்கதையாக்கி" விட்டது. பத்திரிக்கை தர்மப்படி குறைந்தபட்சம் தங்கள் செய்தியை திருந்தி மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும்.

- http://viruvirupu.com/2011/05/20/2096/

  • கருத்துக்கள உறவுகள்

தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனின் ஜகத்தினை அழித்திடுவோம்! - மகாகவி பாரதியார்.

தனியொரு மனிதனுக்கு பணம் வருமெனில் எம் இனத்தினை அழித்திடுவோம்!- சில தமிழ் உறவுகள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கு எடுத்தாலும் புலிகளின் குணம்தான் இங்கே கருத்துக்களைப் பதிவிடுகின்றவர்களுக்கும் இருக்கின்றது. அவர்கள் தமக்குப் பிடிக்காதவர்களை துரோகிகள் என்றும் இதனைவிட ஒரு நல்ல தமிழ் வசனம் பாவிப்பார்கள். அதாவது, தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர் என்றும் கூறி தண்டனைகளை வழங்கியிருந்தனர்.

எல்லோரையும் துரோகியாக்கி கடைசியில் கண்ட மிச்சம்தான் என்ன? உங்களுக்குப் பதில் தெரியாது விட்டால் நான் கூறுகின்றேன்.

அந்தப் பதில்: முள்ளிவாய்க்கால்.

என்னை நீங்கள் திட்டினால் நான் கவலைப்படப் போவதில்லை.

ஏனெனில், 'யதார்த்தவாதி வெகுஜன விரோதி' என்பது காலாகாலமாக தமிழர்களால் பாவிக்கப்பட்டு வரும் ஒரு சொல் இருக்கின்றது என்பதனை அனைவரும் மறந்துவிடாதீர்கள்.

யாழ்களத்தின் ஊடாக ஒரு யாதார்த்தவாதியை காண்பதில் மிக்க மகிழ்ச்சி!

நான் புலம்பெயாந்த காரணத்தால் பல விடயங்களை அறிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.................

தமிழினத்திற்கு துரோகம் இழைக்காத யாரை புலிகள் துரோகி என்றார்கள் என்பதை நீங்கள் எழுதினால் வாசித்து அறிந்துகொள்ளலாம் என்று ஆவலாக உள்ளேன். தாங்கள் ஒரு யதார்த்தவாதியக இருப்பதால் எதார்த்தமாக கேள்விகளை புறக்கணிக்காது யாதார்த்மாக பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன். ஆதாவது தம்மை நடுநிலையாளர்கள் என்று தமக்குதாமே பட்டம் சூட்ட நினைப்பவர்கள் புலிகள்......... கல்விமான்களையும் தமிழ்அறிவாழிகளையும் இலக்கியவாதிகளையும் சுட்டதன் காரணமாகவே தோற்றார்கள் என்று எழுதுவார்கள் அது ஒரு ப்ஸன் ஆனால் யார் அந்த கல்விமான்கள் இலக்கியவாதிகள் என்று இதுவரையிலும் யாரும் எழுதியதில்லை. ஆனால் நீங்கள் அப்படி இல்லை என்ற எதிர்பார்ப்பு என்னிடம் உள்ளது. உண்மைகளை தெரிந்துகொண்டால்தானே நாமும் சில உண்மைகiளாயவது எதிகாலத்தில் எழுதலாம்??

ரிஷியை பிழை சொல்ல வேண்டாம். ரிசி ஒரு வியாபாரி. இந்த சாக்கடைகளின் செய்திகளுக்கு இவ்வளவு விளம்பரம் தேவையா? வியாபாரிகள் எந்தச் சூழ்நிலையையும் மூலதனமாக்கக் கூடியவர்கள்.

முன்பு சிறிலங்காவில் 'மித்திரன்' என்னும் ஊடகம் தலைப்புச் செய்திகளுக்காகவே மிகப் பிரபலம். விற்பனையும் அதிகம். உதாரணமாக

'ஹெமமாளினியிற்கு பூனாவில் சத்திர சிகிச்சை' (பூனா என்பது இந்திதிய நகர் ஒன்றின் பெயர்).

இதைபோலவே மே 2009 மட்டும் புலம்பெயர்ந்த ஆய்வாளர்கள் என்ற பெயரில் இராணுவ, அரசியல் ஆய்வுக் கட்டுரை (கற்பனையில்) எழுதி காசு பார்த்தார்கள். யாழில் இதனை சுட்டிக்காட்டியவர்களுக்கு (முக்கியமாக குறுக்காலபோவான்) துரோகிப் பட்டம்தான் கிடைத்தது.

இந்தச் சாக்கடைகளின் செய்திகளால் கவரப்படுமளவு புலம்பெயர்ந்த தமிழன் பலகீனமானவா?

பலயீனம் என்றுதான் சொல்லுவேன்.. பொழுதுபோக்கிற்காக வரும் செய்திகலை படித்து விட்டு பொழுதை போக்குவதை தவிர்த்துவிட்டு அதனை ஓர் ஆரோக்கிய கருத்தாக மாற்ற முயற்சி செய்வதும் அதனை சீரியஸ் ஆக எடுப்பதும்.. என்னைப்பொறுத்தவரையில் புகைப்பிடித்தல் மது அருந்துதலை நியாயபடுத்த எடுக்கும் முயற்சிக்கு சமன்.

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாம் தரப் பத்திரிகைகள் பரபரப்பு, விறுவிறுப்பு. தமிழர்களில் மூன்றாம் தர வாசகர்கள் இருக்கும்வரை அவர்களை நம்பியே பணம்பார்க்கும் ரிஷி கொழுகொழுப்பாக இருப்பார்.

பலர் விறுவிறுப்பு கட்டுரையைப் போட்ட என்னைத் திட்டி எழுதியிருக்கின்றீர்கள்.

உங்களைப் போன்றவர்களுக்கு நெடியவன் கைது பொய்யான செய்தியாக இருக்கலாம். ஆனால், கட்டுரையாளர் நோர்வேஜிய ஊடகத்தினை மேற்கோள் காட்டித்தான் கட்டுரையை எழுதியிருக்கின்றார். பிபிசி சிங்கள சேவையும் நெடியவன் கைது தொடர்பான செய்தியினை வெளியிட்டிருக்கின்றது. அச்செய்தியினைப் பார்க்க: Call for LTTE ban in Norway

அதனை விட்டுவிட்டு கட்டுரையை தடை செய்ய வேண்டும்; ஆளைத் தடை செய்ய வேண்டும். அட நீங்கள் இன்னும் திருந்தவே இல்லையா?

எதற்கு எடுத்தாலும் புலிகளின் குணம்தான் இங்கே கருத்துக்களைப் பதிவிடுகின்றவர்களுக்கும் இருக்கின்றது. அவர்கள் தமக்குப் பிடிக்காதவர்களை துரோகிகள் என்றும் இதனைவிட ஒரு நல்ல தமிழ் வசனம் பாவிப்பார்கள். அதாவது, தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர் என்றும் கூறி தண்டனைகளை வழங்கியிருந்தனர்.

எல்லோரையும் துரோகியாக்கி கடைசியில் கண்ட மிச்சம்தான் என்ன? உங்களுக்குப் பதில் தெரியாது விட்டால் நான் கூறுகின்றேன்.

என்னை நீங்கள் திட்டினால் நான் கவலைப்படப் போவதில்லை.

ஏனெனில், 'யதார்த்தவாதி வெகுஜன விரோதி' என்பது காலாகாலமாக தமிழர்களால் பாவிக்கப்பட்டு வரும் ஒரு சொல் இருக்கின்றது என்பதனை அனைவரும் மறந்துவிடாதீர்கள்.

நிர்மலன்

ரிஷிக்கு பட்டுக் குஞ்சம் சாத்த முயல்கின்றீர்கள்

ரிஷி எவரும் சொல்ல அஞ்ச முற்படும் விடயத்தை சொல்கின்றார் என்பது போலவும், நேர்மையான விமர்சகர் போலவும், அல்லது ஒரு மாற்று கருத்தாளர் போலவும் உருவகப்படுத்தி அவரது கருத்துகளை தாங்க முடியாது அதனை போட்ட உங்களை திட்டுகின்றார்கள் என்பது போல எழுதியிருக்கின்றீர்கள்

சாகரா சொல்வது போல அவர் ஒரு விடுதலை வியாபாரி. அதனால் தான் இன்று அவரால் கொழும்பில் கூட பத்திரியிகை வியாபரத்துக்கு கடை விரிக்க முடிகின்றது

அவ்வளவு தான்

90களில் தினமுரசின் தோற்றம் போல்தான் இந்த பரபரப்பு, விறுவிறுப்பு அல்லது நாளை கிறுகிறுப்பு என்று எங்களது தலையில் அரைப்பதுக்கென்றே புறப்பட்டுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனெனில், 'யதார்த்தவாதி வெகுஜன விரோதி' என்பது காலாகாலமாக தமிழர்களால் பாவிக்கப்பட்டு வரும் ஒரு சொல் இருக்கின்றது என்பதனை அனைவரும் மறந்துவிடாதீர்கள்.

கருணா, டக்ளஸ் இவர்கள் மக்கள் சக்தியை விரோதிப்பது யதார்த்தவாதிகள் இவர்கள் என்பதாலா?

தயவு செய்து உறவுகளே ரிஷியின் இக்கட்டுரையை மறந்துவிடுங்கள்.]மறந்துவிடுங்கள்.ஆனால் ஐ நாவின் அறிக்கைக்குப்பின் நாம் நம் விடிவிற்காய் எடுக்கவேண்டிய நகர்வுகளையும்,

தமிழ் நாட்டு ஆட்சிமாற்றத்தின் பின் நம் தொப்புள்கொடிகள்மூலம் எதனை இன்னும் செய்யவேண்டும்

என்பதையும் மறந்துவிடாதீர்கள். இல்லையேல் எதிரிகள் முந்தி விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தின் ஊடாக ஒரு யாதார்த்தவாதியை காண்பதில் மிக்க மகிழ்ச்சி!

நான் புலம்பெயாந்த காரணத்தால் பல விடயங்களை அறிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.................

தமிழினத்திற்கு துரோகம் இழைக்காத யாரை புலிகள் துரோகி என்றார்கள் என்பதை நீங்கள் எழுதினால் வாசித்து அறிந்துகொள்ளலாம் என்று ஆவலாக உள்ளேன். தாங்கள் ஒரு யதார்த்தவாதியக இருப்பதால் எதார்த்தமாக கேள்விகளை புறக்கணிக்காது யாதார்த்மாக பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன். ஆதாவது தம்மை நடுநிலையாளர்கள் என்று தமக்குதாமே பட்டம் சூட்ட நினைப்பவர்கள் புலிகள்......... கல்விமான்களையும் தமிழ்அறிவாழிகளையும் இலக்கியவாதிகளையும் சுட்டதன் காரணமாகவே தோற்றார்கள் என்று எழுதுவார்கள் அது ஒரு ப்ஸன் ஆனால் யார் அந்த கல்விமான்கள் இலக்கியவாதிகள் என்று இதுவரையிலும் யாரும் எழுதியதில்லை. ஆனால் நீங்கள் அப்படி இல்லை என்ற எதிர்பார்ப்பு என்னிடம் உள்ளது. உண்மைகளை தெரிந்துகொண்டால்தானே நாமும் சில உண்மைகiளாயவது எதிகாலத்தில் எழுதலாம்??

பதில் இல்லை...................... ஓ அப்ப நீங்களும் அந்த நடுநிலையாளரா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.