Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படுகொலைகள்

Featured Replies

இந்தக்கொடுமைகளை எல்லாம் செய்துவிட்டு புலிகள் செய்ததாக டெயிலி நியுூஸில் செய்தி போட்டுள்ளார்கள்.

  • Replies 126
  • Views 24.6k
  • Created
  • Last Reply

டெயிலி நியுஸ் நிறுவணம் கண்தெரியாதவர்களை தான் வேலையில் அமர்த்திஉள்ளார்கள். நாம் பலம் பெறும்போது அவர்களுக்கு கண்தெரியவரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக்கொடூரங்களைச் செய்தவர்களுக்கும், அவர்களது குடும்பத்தவர்களுக்கும் எப்பிறப்பிலும் விமோசனம் கிடைக்காது.

ஆங்கிலத்தில் "Rot in Hell" என்று கூறுவார்கள். அப்படி நரகத்தில் கிடந்து அழுந்துவதே இனி அவர்களுக்கு வாழ்கையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் படையினர் கொலை வெறியாட்டம் - 5பொதுமக்கள் பலி

http://sankathi.com/content/view/3487/26/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி கடற்பரப்பில் கடற்புலிகளின் படகுகள் மீது சிறீலங்கா கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலை கடற்புலிகள் வெற்றிரகமாக முறியடித்துள்ளனர். இதன்போது சிறீலங்கா கடற்படைக்கு கடுமையான இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த கடற்புலிகளின் படகுகள் மீது சிறீலங்கா கடற்படைக் கலங்கள் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து கடற்புலிகள் கடுமையான பதில் தாக்குதலை நடத்தினர். இதனையடுத்து இரு தரப்பினருக்குமிடையே கடுமையான மோதல் நடைபெற்றது.

கடற்புலிகளின் தாக்குதல்களிற்கு ஈடுகொடுக்க முடியாத சிறீலங்கா கடற்படை தனது கட்டுப்பாட்டுப் பகுதிகள் நோக்கி தப்பியோடியது.

இச்சம்பவம் குறித்து சிறீலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளதாவது:

பேசாலையில் உள்ள கடற்படை மற்றும் காவல்துறை நிலை மீது படகுகளில் வந்து விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் வான்படை மற்றும் ஆட்டிறி பிரிவினரின் உதவியுடன் கடற்படை கடற்புலிகள் மீது பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

தமது தரப்பில் ஆறு பேர் இச்சம்வத்தில் கொல்லப்பட்டுள்ளதாகவும், மூன்று கடற்கலங்கள் சிறியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால் இச்சம்பவம் குறித்து ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை இராணுவ வட்டாரம் ஒன்றை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள தகவலில் கடற்படைக்கு ஏற்பட்டுள்ள இழப்பு படைத்தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளதைவிட அதிகமெனவும் கடற்படையின் சிறப்பு தாக்குதல் அணியைச் சேர்ந்த எண்மர் இச்சம்பவத்தில் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து விடுதலைப் புலிகளின் உத்தியோகபுூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை

தகவல் மூலம்: சங்கதி

ÁýÉ¡÷ ¸¡ð¼¡ŠÀò¾¢¡¢ì ¸¼ü¸¨Ã¢ø ¿¡ýÌ §À÷ ÍðÎ즸¡¨Ä.

ÁýÉ¡÷ ¸¡ð¼¡ŠÀò¾¢¡¢ì ¸¼ü¸¨Ã¢ø ¿¡ýÌ ¬ñ¸û ¾¨Ä¢§Ä ͼôÀð¼ ¿¢¨Ä¢ø º¼ÄÁ¡¸ Á£ð¸ôÀðÎûǾ¡¸ «í¸¢ÕóÐ ¸¢¨¼ìÌõ ¾¸Åø¸û ¦¾¡¢Å¢ì¸¢ýÈÉ. þÄí¸û ÁýÉ¡÷ ¨Åò¾¢Âº¡¨ÄìÌì ¦¸¡ñÎÅÃôÀðÎûÇÉ. ¦¸¡øÄôÀð¼Å÷¸û À¨¼Â¢Éáø À¢Êì¸ôÀðÎ À¢ýÉ÷ ÍðÎ즸¡øÄôÀðÊÕì¸Ä¡¦ÁÉ «ôÀ̾¢ Áì¸û ¦¾¡¢Å¢ì¸¢ýÈÉ÷.

§Àº¡¨ÄôÀ̾¢Â¢ø ÀÄ¢Â¡É ã¾¡ðÊ ´ÕÅ¡¢ý º¼ÄÓõ ÁýÉ¡÷ ¨Åò¾¢Âº¡¨ÄìÌì ¦¸¡ñÎÅÃôÀðÎûÇÐ. þ¨¾Å¢¼ ¸¼üÀ¨¼Â¢É÷ ãÅÃÐ º¼Äí¸Ùõ «íÌ ¦¸¡ñÎÅÃôÀðÎûÇÉ.

தகவல்: சங்கதி

மன்னார் சம்பவம் தொடர்பாக விடுதலைப்புலிகள் விடுத்துள்ள செய்தி.

இன்று 17.06.2006 மன்னார் பேசாலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி. இன்று காலை மன்னார் பேசாலைக் கடற்பரப்பில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளின் படகுகளை சிறிலங்கா கடற்படையினர் இடைமறித்த போது மோதல் ஏற்பட்டுள்ளது.

இம் மோதலில் சிறிலங்கா கடற்படையினருக்கு உயிரிழப்புடனான சேதம் ஏற்பட்டுள்ளது. மோதலின் விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

இதேவேளை பேசாலைக் கடற்பரப்பில் ஏற்பட்ட மோதலையடுத்து கடற்றொழிலாளர்களின் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் சரமாரியாகச் சுட்டத்தில் நான்கு கடற்றொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்;ந்து அருகில் தேவாலயம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் கைக்குண்டுத் தாக்குதலை நடத்தி ஒரு பெண்ணைக் கொன்றதுடன் 45 மக்களை காயப்படுத்தியுமுள்ளனர்.

பின்னர் கடற்றொழிலாளர்களின் குடியிருப்புக்குள் நுழைந்த சிறிலங்கா கடற்படையினர் 25 மீனவ குடில்களை தீயிட்டுக் கொழுத்தினர்.

அதேநேரம் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி மன்னார் தள்ளாடி சிறிலங்கா படைத்தளத்திலிருந்து தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

நன்றி- மட்டு-ஈழநாதம்

மட்டக்களப்பில் பிச்சை எடுத்து வந்த முதியவர் சுட்டுக்கொலை

[திங்கட்கிழமை, 19 யூன் 2006, 17:32 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்]

மட்டக்களப்பில் பிச்சை எடுத்து வந்த முதியவர் ஒருவர் சிறிலங்கா இராணுவத்தினரால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு விஜயா திரையரங்கிற்கு அருகில் இன்று திங்கட்கிழமை காலை 8.45 மணியளவில் இந்த முதியவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அப்பகுதியில் வழமையாக பிச்சை எடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் அவருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நேற்று வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அவர் வழமையாக இன்று பிச்சை எடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கி வேட்டுக்களை இராணுவத்தினர் தீர்த்ததாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு, புளியந்தீவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

http://www.eelampage.com/?cn=26975

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைக்கார வேடத்தில் திரிந்த கருணா குழு உளவாளி கொலை! மட்டு. நகரில் "பிஸ்ரல் குழு' கைவரிசை

பிச்சைக்காரராக வேடமிட்டு மட்டக்களப்பு நகரில் நீண்டநாள் திரிந்து வந்த கருணா குழு வின் உறுப்பினரான உளவாளி ஒருவர் நேற் றுக்காலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு "லொய்ட்' வீதியில் சென்று கொண்டிருந்த இவர் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் சுடப்பட் டார் என மட்டக்களப்பு பொலீஸார் தெரிவித் தனர். இவரின் தலை மற்றும் மார்பில் நான்கு துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்திருந்தன எனக் கூறும் பொலீஸார் 9 மில்லிமீற்றர் ரக கைத்துப் பாக்கியே இந்தச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வும் தெரிவித்தனர்.

சுடப்பட்ட நபரின் சட்டைப் பையிலிருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்றையும் பொலீ ஸார் மீட்டுள்ளனர். பிச்சைக்காரர் என்ற போர் வையில் மட்டக்களப்பு நகரில் பல மாதங்க ளாகச் சுற்றித் திரிந்த இந்த நபர் கருணா குழு வினரின் உளவாளியென்பது விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாம்.

இந்தச் சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலீஸார் விசாரணைகளை நடத்தி வருகின் றனர்.

புலிகளின் "பிஸ்ரல் குழு' இத் துப்பாக் கிப் பிரயோகத்தை மேற்கொண்டிருக்கலாமெ னக் கருதப்படுகிறது.

-உதயன்

´ñϧÁ Ò̢夀 ¯Ä¸ò¾¢§Ä

±ýɧÁ¡ ¿¼ìÌÐ Á÷ÁÁ¡Â¢ÕìÌÐ......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிச்சைக்காரங்களையும் விட மாட்டீங்களாடா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் மூவர் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினராலும், இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக் குழுவினராலும் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தில் நேற்று புதன்கிழமை உந்துருளி திருத்துனர் ஒருவரை துணை இராணுவக்குழுவினரான ஈ.பி.டி.பி.யினர் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

ஜெயந்திபுரம் பகுதியில் உந்துருளி திருத்தும் கடை ஒன்றின் உரிமையாளரான றோய் வெல்ட் (வயது 39) சுட்டுக்கொல்லப்பட்டவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நகரிலிருந்து வடபகுதியில் 1.5 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஜெயந்திபுரம் சேமக்காலை வீதியில் அவரது வீட்டுக்குச் சென்ற ஈ.பி.டி.பி.யினர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் றோயின் தந்தை மில்ரெட் வெல்ட் படுகாயமடைந்துள்ளார்.

சுட்டுக்கொல்லப்பட்ட றோய் பேர்கர் இனத்தைச் சேர்ந்தவர்.

மட்டக்களப்பில் உள்ள பேர்கர் இன மக்களில் பெரும்பான்மையோர் தச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மட்டக்களப்பு வாழைச்சேனையில் துணை இராணுவக் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட சண்முகம் விஜயரட்ணம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை துணை இராணுவக் குழுவினரால் அவர் கடத்திச் செல்லப்பட்டார்.

வாழைச்சேனையில் உள்ள பாடசாலைக்கு அருகாமையிலிருந்து நேற்று சண்முகம் விஜயரட்ணத்தின் சடலம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டது.

இதனிடையே மட்டக்களப்பு சந்திவெளிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சந்திவெளிப்பகுதியில் உள்ள அரவை ஆலை ஒன்றுக்குள் நேற்று இரவு 11 மணியளவில் உள்நுழைந்த இராணுவத்தினர் அங்கிருந்தவர்களை கடும் விசாரணைகளுக்கு உட்படுத்தினர்.

அதில் அங்கிருந்தவர்களுடன் நின்ற கண்ணன் (வயது 23) என்பவரை சுட்டுக் கொலை செய்தனர்.

சம்பவம் இடம்பெற்ற போது துணை இராணுவக்குழுவினரும் அப்பகுதியில் நின்றதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

நீர்கொழும்பில் தமிழ் வர்த்தகர் சுட்டுக்கொலை; கடையை மூடிவிட்டு வீடு திரும்புகையில் சூடு

நீர்கொழும்பு நகரில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு தமிழ் வர்த்தகரொருவர் இனந்தெரியாத ஆயுதபாணிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு நகரிலுள்ள தனது இரு சப்பாத்துக்கடைகளை மூடிவிட்டு இரவு 9 மணியளவில் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கையிலேயே தலாதுவ ஜுட் தேவாலயத்துக்கு முன்பாக வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.

`ரெய்லர்' ரக மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவரே இவர் மீது கைத் துப்பாக்கியினால் சுட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். கழுத்திலும் மார்பிலும் கையிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் இவர் நீர்கொழும்பு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ராகம ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் நேற்று அதிகாலை அங்கு மரணமானார்.

1983 ஆம் ஆண்டிலிருந்து நீர்கொழும்பில் வசித்துவரும் சீவரத்தினம் சிவகுமார் (36 வயது) என்ற இளம் வர்த்தகரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார். இவர் யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாயைச் சேர்ந்தவர்.

இவர் நீர்கொழும்பு நகரிலுள்ள இரு பிரபல காலணி விற்பனை நிலையங்களின் உரிமையாளராவார்.

கடந்த சில தினங்களாக நீர்கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டு வருகையிலேயே இந்தப் படுகொலையும் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-தினக்குரல்

  • 1 month later...

யாழ்ப்பாணத்தில் பொன் கணேசமூர்த்தி சுட்டுக் கொலை

யாழ்ப்பாணம் தபாற்கட்டைச் சந்தியில் வைத்து இனந்தேரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொன் கணேசமூர்த்தி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று காலை 8.10மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர் பொன். கணேசமூர்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தனது வீட்டிலிருந்து உந்துருளியில் பணிக்காக சென்ற போது இவரைப் பின்தொடர்ந்த ஆயுததாரிகள் இவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்து விட்டுச் தப்பிச் சென்றுள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட பொன் கணேச மூர்த்தி அவர்கள் தமிழீழத்தின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழீழத்தில் வெளியான “மண்ணுக்காக” என்ற திரைப்படத்தையும். பொன்பரப்புத் தீவு, இலங்கை மண், எடுக்கவோ தொடுக்கவோ, என்ற நூல்களையும், விடுதலைக்கு வலுச்சேர்க்கும் பிரபல்யமான இசைப் பாடல்களையும் பல தொடர்நாடகங்களையும் எழுதி நெறிப்படுத்திய ஒரு பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளி ஆவார்.

சங்கதி

என் இனமே என் சனமே என்னை உனக்கு தெரிகிறதா..?? எண்ற பாடல் அவரால் முதல் முதல் பாடப்பட்டபாடல் அருமையாக கலைஞர்... உயிர்ப்பான குரல்வளம் கொண்டவரை தேசம் இளந்துவிட்டது...!

எத்தனை கலைஞர்கள், புத்திஜீவிகள்,தேசப்பற்றாளாக

இவை சகோதரப்படுகொலைகளின் தொடர்ச்சி...! துரோகிகளை அழிக்க நீங்கள் குரல் கொடுக்கும் போது..இராணுவத்தின் துணைக்குழுக்களும்..இராணுவத்த

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலியொரு காலமும் பணியாது " போனற பல

தாயகப்பாடல்களை எழுதியவர் பிரபல தமிழத் தேசியக் கலைஞர் பொன். கணேசமூர்த்தி

"புலியொரு காலமும் பணியாது " எனும்பாடல் யாழ்ப்பாணம் சிங்களப்படைகளிடம் இழக்கப்பட்ட காலத்தில் வெளிவந்தது.

பாடியவர்: மேஜர் சிட்டு

புலியொரு காலமும் பணியாது -எந்த

படைவந்த போதிலும் சலியாது

திசைமாறிடுமோ ஒளிரும் சூரியன்

அலையாதிடுமோ கிடையாது -எங்கள்

நிலைமாறிடுமோ நடவாது

எல்லை தாண்டி வந்து உருவாகும் -பகை

எம்மை ஆளவென்று சதிபோடும்

முள்ளை மலரென்று கதைபேசும் -சில

மந்திகள் கொடிதாவும்

கொட்டிலுக்கு கூரையில்லை

கொண்டுவந்த தேதுமில்லை

கட்டுதற்கு ஆடையில்லை

மானமின்னும் சாகவில்லை.

பட்டினிக்கு வட்டியில்லை

வாவா... -இனி

குட்டநின்று வாழ்வதில்லை வாவா.

பகைவந்து பிடித்தது சுடுகாடு -அதைப்

பறிப்போம் திடமாய் நடைபோடு

மறுபடி செய்வோம் பூக்காடு -வெள்ளி

மலந்திடும் கூத்தாடு

நாம் பிறந்த ஊருமில்லை

நட்டுவந்த தேதுமில்லை

ஆதரவுக்காருமில்லை

ஆறுதற்கு நேரமில்லை

ஓருயிர்தான் யாவருக்கும்

வாவா... -இனி

சாவதேனும் ஓய்வதில்லை வாவா.

கண்ணில் பாய்கிறது நீரோட்டம் -தமிழ்

களத்தில் கயவரது தேரோட்டம்

மண்ணில் நடத்துறோம் போராட்டம் -புலி

மறுபடி கொடியேற்றும்

பள்ளியில்லை தேதியில்லை

சொல்லியள யாருமில்லை

உள்ளமின்றி மிச்சம் இல்லை

உயிர்துறக்க அச்சம் இல்லை

போரெடுத்து வெல்வதற்கு

வாவா... -எங்கள்

ஊர்பிடித்துச் செல்வதற்கு வாவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்த கலைஞனுக்கு..அஞ்சலிகள்..!

செய்விப்பவன் இருக்கும் வரை செய்பவனை தடுக்க முடியாது...

அதைத்தான் முன்னோர்கள் எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன் எண்று சொல்வார்கள்...! இதை செய்தவர்கள் இரானுவத்தினராகத்தான் காணப்படுகுன்றனர்...! அதாவது அரசாங்கத்திடம் காசு வாங்கும் கூலிகள் அல்லது சிப்பாய்கள் அவர்கள் போராடப்புறப்பட்டவர்களானால் அதாவது அரசின் குத்தகையில் இருப்பவர்கள் இதன் எதிர்விளைவுகளை இராணுவத்தோடு சேர்ந்து சந்திக்க வேண்டியவர்களாவர்...

அது ஐநாசாசனப்படியும் போர்க்குற்றமாக இல்லை எண்று சொன்னார் ஒரு சட்டவாளர்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுட்டுக்கொல்லப்பட்ட தமிழத் தேசியக் கலைஞர் பொன். கணேசமூர்த்தி எழுதிய விடுதலைக்கு வலுச்சேர்க்கும் படைப்புகள் சில

Kadal Karum Pulikal 4

http://www.eelamstore.com/shop/product_inf...products_id=240

Kadal Karum Pulikal 5

http://www.eelamstore.com/shop/product_inf...products_id=345

இங்கே படுகொலைகளைச் செய்து கொண்டிருப்பது இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு.இதனை இங்கு ஒருவர் சகோதரப் படுகொலை என்று சிங்கள அரசாங்க்கத்தின் கயமைத் தனத்தை மூடி மறைக்க கூறி வருகிறார்.இவ்வாறான படுகொலைகள் இராணுவத்திற்கு முன்னாலயே இராணுவப்புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப் படுகிறது.இதனை மறைப்பதற்காக சகோதரப் படுகொலைகள் என்னும் வண்ணம் பூசுகிறார்கள்.இந்தக் கொலைகளை நிகழ்த்துபவர்கள் இராணுவத்தினர். கருணா குழு என்று படுகொலைகளை நடதுபவர்களும் இராணுவத்தினர் தான்.இங்கே சகோதரம் என்று சிங்கள இராணுவத்தையா சிலர் குறிப்பிடுகின்றனர்?

இங்கே படுகொலைகளைச் செய்து கொண்டிருப்பது இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு.இதனை இங்கு ஒருவர் சகோதரப் படுகொலை என்று சிங்கள அரசாங்க்கத்தின் கயமைத் தனத்தை மூடி மறைக்க கூறி வருகிறார்.இவ்வாறான படுகொலைகள் இராணுவத்திற்கு முன்னாலயே இராணுவப்புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப் படுகிறது.இதனை மறைப்பதற்காக சகோதரப் படுகொலைகள் என்னும் வண்ணம் பூசுகிறார்கள்.இந்தக் கொலைகளை நிகழ்த்துபவர்கள் இராணுவத்தினர். கருணா குழு என்று படுகொலைகளை நடதுபவர்களும் இராணுவத்தினர் தான்.இங்கே சகோதரம் என்று சிங்கள இராணுவத்தையா சிலர் குறிப்பிடுகின்றனர்

தேசப்பற்றில் இலங்கை குடியுரிமை வாங்கி வைத்திருப்போரை பாராட்டியதில் தெரிய வில்லையா யார் அவர்களுடைய சகோதரர்கள் எண்று....!

Bank Manager shot dead in Jaffna, employees protest

[TamilNet, August 04, 2006 05:03 GMT]

A well-known literary figure and General Manager of People's Bank, KKS Branch, was shot at point blank range allegedly by the Intelligence operatives of the Sri Lanka Army (SLA), at Thirunelvely, a suburb of Jaffna, around 7:45 a.m., Friday. Pon. Ganeshamoorthy, 56, killed when he was getting ready to go to work from his residence at the Post office junction in Thirunelvely, according to sources in Jaffna.

Most of the banks in Jaffna were closed and bank employees took to the roads in protest of the killing.

Jaffna Aditional Magistrate inspects the murder site in Thirunelvely

Bank employess gathered in front of People's Bank Jaffna Branch office and marched through the town centre.

The protestors shouted slogans and carried placards as they marched through Stanley road, KKS road and Powerhouse road.

Later they picketed outside the KKS Branch Office of Peple's Bank, which is currently functioning in Jaffna centre because KSS (Kankesanthurai) is demarcated by the Sri Lanka Army as High Security Zone (HSZ).

Pon Ganeshamoorthy had won prizes and won accolades from the leader of Liberation Tigers for his literary contributions to Tamil, his relatives said.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19060

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் போராட்டத்தின் நீண்டகால ஆதரவாளர் சிங்களப் படையால் சுட்டுக்கொலை

[வெள்ளிக்கிழமை, 4 ஓகஸ்ட் 2006, 15:31 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக நீண்டகாலமாக தீவிரமாக செயற்பட்டு வந்த படைப்பாளர் பொன் கணேசமூர்த்தி யாழ்ப்பாணத்தில் சிங்களப் படையால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மக்கள் வங்கியின் காங்கேசன்துறைக் கிளையின் முகாமையாளரான இவர் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் வீட்டிலிருந்து பணிபுரியும் வங்கிக்கு உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது பின்தொடர்ந்து சென்ற சிங்களப் படைக் கொலையாளிகள் சுட்டுப்படுகொலை செய்தனர்.

தமிழினத்தை அழித்தொழிக்கும் வகையில் சிறிலங்கா அரசின் படைகள் கொலை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்காக தீவிரமாக உழைப்பவர்களை படுகொலை செய்து வருவதில் அது ஈடுபட்டு வருகின்றது.

இப்படுகொலை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக பொன். கணேசமூர்த்தியை சிங்கள இனவாதம் சுட்டுப்படுகொலை செய்துள்ளது.

பொன். கணேசமூர்த்தி தன் பாடசாலை வயது முதல் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்காக உழைத்து வந்த இவர் சாத்வீகப் போராட்ட காலம் முதல் தமிழீழ விடுதலைப் போராட்டக் குறிக்கோளில் தீவிரமாக இயங்கி வந்தார்.

1965 காலப் பகுதியிலிருந்து விடுதலைப் போராட்டத்துக்கு பங்களிப்பு அளித்து வரும் இவர் நேரடியாகவே சிங்கள இனவாத அரசுக்கு எதிராக தன்னுடைய விடுதலைக்கான செயற்பாடுகளை அன்றிலிருந்து தொடக்கினார்.

அதிலும் குறிப்பாக அன்று முதல் தன் கலைப் படைப்புக்கள் வழியாக மக்களிடம் விடுதலைக்கான கருத்துகளை விதைத்து வந்தார்.

பல்துறை கலை ஆற்றல் கொண்ட இவர் புலிகளின் குரல் வானொலியில் "இலங்கை மண்", "வைகறை" ஆகிய தொடர் நாடகங்களையும் தனி நாடகங்களையும் உருவாக்கி வழங்கியிருந்தார்.

புலிகளின் குரலில் தற்போது "பொன்பரப்பித்தீவு என்ற இலங்கை மண்ணில் தமிழரின் தொன்மையை நிறுவும் இவரின் தொடர் நாடகம் ஒலிபரப்பாகி வருகின்றது.

புலிகளின் குரலில் வில்லிசை, உரைவீச்சு உட்பட்ட பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளை படைத்திருந்த இவர் பெருமளவிலான விடுதலைப் பாடல்களையும் உருவாக்கியுள்ளார்.

விடுதலைக் கருத்துக்களை விதைப்பதற்காக அரங்க நாடகங்களும் பொன். கணேசமூர்த்தியினால் பாடசாலைப் பருவம் முதல் அரங்கேற்றப்பட்டுள்ளதுடன் "தூரம் தொடுவானம்" என்ற நாவல், "துளித்துளியாய் வைரங்கள்" தமிழ்-ஆங்கில கவிதைத் தொகுதி, "எடுக்கவோ தொடுக்கவோ" கவிதைத்தொகுதி ஆகியன இவரால் வெளியிடப்பட்டுள்ளன.

இன எழுச்சி சஞ்சிகையின் ஆசிரியராக செயற்பட்ட இவரின் "இலங்கை மண்" நாடகம் வெளியீட்டுக்காக நூலுருப் பெற்றுள்ளது. "வரலாறு சொல்லும் பாடம் நூலை" உருவாக்குவதில் தீவிரமாக உழைத்து வந்தார்.

நிதர்சனம் தயாரிப்பில் "மண்ணுக்காக" என்ற வீடியோ திரைப்படத்தையும் இவர் உருவாக்கினார்.

வானொலி, அரங்க திரைப்பட நடிகனாகவும் செயற்பட்ட இவர், பாடலாசிரியராகவும் நாவலாசிரியராகவும் கவிஞராகவும் பாடகராகவும் வில்லிசைக் கலைஞராகவும் சிறப்பாக செயற்பட்டு வந்தார்.

தாயக விடுதலைப் ராட்டத்துக்காக தன் சிறுவயது முதல் அயராது உழைத்து வந்து விடுதலை வரலாற்றில் இடம்பிடித்தவர் பொன். கணேசமூர்த்தி.

http://www.eelampage.com/?cn=27985

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.