Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்கள் தமிழக மக்களின் தொப்புள் கொடி உறவுகள். போர் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர்களை தாக்கியவர்கள் போர்க் குற்றவாளிகள்: சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம்.

jayalalitha-real-1.jpg

தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா ஒரு தனி தீர்மானத்தை தாக்கல் செய்து முன்மொழிந்து பேசினார். அதன் விவரம் வருமாறு:

தமிழனின் பண்பு யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பதல்ல. யாரையும் தாழ்த்துவதல்ல என்றார் பேரறிஞர் அண்ணா. இப்படிப்பட்ட உயரிய எண்ணத்தைக் கொண்ட தமிழர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள். மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி உறவு அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

இலங்கைக்கு விடுதலை கிடைத்து விட்டாலும், அங்கு வாழும் தமிழர்கள் அவர்கள் நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படு வதை எதிர்த்து, இலங்கைத் தமிழர்கள் பல்லாண்டு காலமாக போராடி வந்தனர். இவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து தேவையான அரசமைப்புச் சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து, தமிழர்கள் கவுரவத்துடனும், சம உரிமையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அவர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது.

பரவலாக குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது. மனிதர்கள் வாழும் இடங்களின் மீதும், மருத்துவ மனைகள் மீதும் குண்டுகளை வீசியது. மனிதாபிமான முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது. உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படக்கூடியர்கள் உள்பட இந்தச் சண்டையில் பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது.

இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உள்பட போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது. போன்ற கடுமையான, நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்களை உள்நாட்டுப்போரின் போது இலங்கை அரசு நிகழ்த்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்து இருக்கிறது.

எனவே, இத்தகைய போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழவகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமை களையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பதில் உரைக்கு பிறகு தீர்மானம் நிறைவேறியது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=55603

-------------------------------------------------------------------

இந்த அம்மா இந்தளவுக்காவது ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து இயற்றி இருப்பது பாராட்டத்தக்கது. அந்தக் கிராதகன் கருணாநிதி இன்று கூட ராஜபக்ச அரசை அது செய்த போர்க்குற்றம் தொடர்பில் கண்டித்ததும் இல்லை.. முள்ளிவாய்க்காலில் பலியான ஈழத்தமிழர்களுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவித்ததில்லை.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரியான நேரம் பார்த்து இந்தத் தீர்மானத்தை ஜெயலலிதா கொண்டு வந்துள்ளதாகவே தெரிகிறது...! பொறுத்திருந்து பார்ப்போம் சோனியா அரசு இதனை எப்படி கையாளப் போகிறது என்று...! இதன் மூலம் ஜெயலலிதாவை நோக்கி சோனியா நெருங்கி வர முயலலாம். அல்லது...???!

முன்னராகவே கொழும்பு விரையும் டில்லி உயர்மட்ட குழு

புதன்கிழமை, யூன் 8, 2011

டில்லி உயர்மட்ட குழு திட்டமிட்டதற்கு முன்னராகவே கொழும்பு வருகின்றது. இலங்கை இந்திய புதிய புரிந்துணர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவின் உயர்மட்டக் குழுவொன்று எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது என கூறப்பட்டது ஆனால் இப்போ நாளை மறுதினமே வருவதாக பீரிஸ் தெரிவித்துள்ளார்.

.

இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் கடந்த காலங்களில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் இணக்கப்பாடுகள் தொடர்பாக இதன் போது பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

.

எதிர்வரும் 10ஆம் திகதி இலங்கை வரவுள்ள இந்திய உயர்மட்டக் குழுவில் இந்திய பிரதமரின் செயலாளர் கே.நாயகர், பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் ஆகியோர் அடங்குகின்றனர்.

.

கடந்த காலங்களில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸும் இந்திய வெளிவிகார அமைச்சரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக இந்த உயர்மட்டக் குழுவினர் தீர்க்கமாக ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஈழநாதம்.

Edited by nedukkalapoovan

அப்படியே என்ன தீர்வு கொடுக்க பட வேண்டும் என்பதை தாங்கள் எதிர்பார்ப்பதாக முதல் அமைச்சர் அறிவித்து விட்டால் இறுதி தீர்வு இலகுவாகி விடும்.

கருநாநிதி போல் ஈழம் தான் தீர்வு ஆனால் அதை அடைய விடமாட்டேன் என்ற மாதிரி இல்லாமல் ஒரு தீர்வை ஈழத்திற்கு குறைந்ததாக அல்லது அதற்கு சமமானதான சாத்தியமான தீர்வை முன் வையுங்கள்.

ஈழம் பெற்று தாருங்கள் என்று ஒரு போதும் உங்களிடம் நாங்கள் கேட்க மாட்டோம்.. தற்பாதுகாப்புக்கான ஒரு அரசியல் தீர்வை வலியுறுத்தும் படி எதிர் பார்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனவே, இத்தகைய போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழவகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமை களையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பதில் உரைக்கு பிறகு தீர்மானம் நிறைவேறியது.

காலத்திற்கு மிகவும் தேவையான முடிவு!

மத்திய அரசு என்ன முடிவெடுத்தாலும் பரவாயில்லை!

ஒரு முதலமைச்சராக இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்த ஜெயலலிதாவைப் பாராட்டியாகியே வேண்டும்!

தொடரட்டும் உங்கள் பணி!!!

நீங்கள் தொடக்கி வையுங்கள்! உங்கள் உறவுகள் முடித்து வைப்பார்கள்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரே வழி பொருளாதாரத் தடைகள்தான்: ஜெயலலிதா

தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா ஒரு தனி தீர்மானத்தை தாக்கல் செய்து முன்மொழிந்து பேசினார். அதன் விவரம் வருமாறு:

இலங்கையில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழவகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமை களையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். பின்னர் முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசுகையில்,

இங்கே பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சௌந்தரராஜன் அவர்கள், பொருளாதாரத் தடையைக் கொண்டு வர வேண்டுமென்ற வரிகளை விலக்கிக் கொண்டால் என்ன என்ற ஒரு கருத்தை இங்கே தெரிவித்தார். இதனால் அப்பாவித் தமிழ் மக்களும் பாதிக்கப்படுவார்களே என்ற ஒரு கருத்தைச் சொன்னார். இப்போதே இலங்கை அரசு யாருக்கும் பணியவில்லை. அங்கே வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களர்களோடு அனைத்து உரிமைகளையும், குடியுரிமைகளையும் வழங்க வேண்டுமென்று இந்தியா சொன்னாலும், யார் சொன்னாலும், அவர்கள் அதை மதிக்கவில்லை. அதனால், அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது, அவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரே வழி பொருளாதாரத் தடைகள்தான். இதுவொரு தற்காலிகமான ஒரு முறைதான். இந்திய அரசும், இன்னும் சில நாடுகளும் இணைந்து, இலங்கை அரசின்மீது ஒரு பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்தால், குறுகிய காலத்திற்குள்ளேயே நாம் சொல்வதை இலங்கை அரசு கேட்டுத்தான் ஆக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்படும். வேறு வழியில்லை என்பதற்காகத்தான் இதைச் சேர்த்திருக்கிறோம்.

இந்தத் தீர்மானத்தின்மீது இங்கே கருத்துத் தெரிவித்து உறுப்பினர்கள் பேசுகின்றபோது, ஐ.நா. சபை ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என்று அறிவித்து விட்டதாக இங்கே தெரிவித்தார்கள். அப்படியில்லை. ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் ஒரு குழுவை அமைத்து, அவர்கள் அங்கே நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களைப் பற்றி ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று தெரிவித்தார்.

அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில், இப்படிப்பட்ட போர்க் குற்றங்களெல்லாம் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது; அங்கே வாழ்கின்ற தமிழ் மக்கள் மீது இத்தகைய குற்றங்களெல்லாம், கொடுமைகளெல்லாம் நிகழ்த்தப்பட்டன என்பதையெல்லாம் தெரிவித்துவிட்டு, இதனை இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்களே தவிர, இதை உறுதியும் செய்யவில்லை – ராஜபங்கசேவோ, மற்றவர்களோ போர்க் குற்றவாளிகள் என்று ஐ.நா. சபை அறிவிக்கவும் இல்லை. அதனால்தான் இந்தத் தீர்மானத்தில் இந்திய அரசு போர்க் குற்றம் புரிந்தவர்களை, போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த வேண்டும், இதற்கு ஐ.நா. சபையை வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம்.

எனவே, மனிதாபிமானமற்ற முறையில் ஈவு இரக்கமின்றி பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும்; இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழு மறுவாழ்வு அளித்து, அவர்கள் வசித்த இடங்களிலேயே அவர்களை மீண்டும் குடியமர்த்தி; சிங்களர்களுக்கு உரிய அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கும் வரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி, அரசு சார்பில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தினை இந்த மாமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலலிதா பேசினார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=55604

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர்களை தாக்கியவர்கள் போர்க் குற்றவாளிகள்: சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம்.

...போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழவகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமை களையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பதில் உரைக்கு பிறகு தீர்மானம் நிறைவேறியது.

தமிழர் நலன்களுக்கு எதிரான பல்வேறு குழிபறிப்புகளுக்கும், சூழ்ந்துள்ள பிராமணீய கும்பல்களின் எதிராலோசனைகளுக்கும் நடுவே இந்தளவுக்கு விரைவாக செயல்பட்டு எங்கள் எதிர்பார்ப்பை ஓரளவாவது செய்ததற்கு அம்மணியை பாராட்டலாம். இந்தப் பற்றுதல் நீர்த்துப் போகாமல் தொடர்ந்து நீடிக்க வேண்டும்.

.

  • கருத்துக்கள உறவுகள்

சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா இலங்கை தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானத்தை கொண்டு வந்தார். இதன் மீதான விவாதத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

தி.மு.க. சார்பில் துரைமுருகன் பேசினார். அவரும் இந்த தீர்மானத்தை வரவேற்பதாக கூறினார். அவரை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசும் போது தி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றியும், தி.மு.க. ஆட்சியைப் பற்றியும் சில கருத்துக்களை கூறினார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.

விஜயகாந்த் கருத்துக்கு பதில் அளிக்க வாய்ப்பு தர வேண்டும் என்று தி.மு.க. உறுப்பினர் துரைமுருகன், சபாநாயகர் ஜெயக்குமாரிடம் கோரிக்கை வைத்தார். விஜயகாந்த் பேசி முடிந்த பிறகும் துரைமுருகனுக்கு பதில் அளிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையடுத்து துரைமுருகன் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நக்கீரன்.

Edited by தமிழ் அரசு

திருத்த முடியாத ழுதைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தீர்மானத்தை நிறைவேற்றிய ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள்.கொண்ட கொள்கையில் நிலைதளராது தொடர வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

TN seeks economic sanctions

Tamil Nadu Assembly today adopted a unanimous resolution seeking imposition of economic sanctions against Sri Lanka by India on issues concerning Tamils in the island nation, including alleged human rights violations.

The resolution moved by Chief Minister Jayalalithaa also wanted India to press the United Nations to declare as “war criminals” those who committed alleged crimes during the conflict in Sri Lanka.

Ms. Jayalalithaa said only economic sanctions would “rein in” Sri Lanka, which she said, “did not heed the global opinion when it came to the Tamils issue”.

“If India and other countries impose sanctions, Sri Lanka has to listen to what we say”, she said replying to the debate on the resolution.

She said there were allegations about Sri Lanka committing human rights violations and preventing humanitarian aids from reaching the suffering Tamils, the issues which prompted her to move the resolution.

The Chief Minister said Tamils had been struggling against being treated as “second class citizens in their own country” even after Sri Lanka got independence from the British.

She, however, said terrorism had crept in the name of Tamil Eelam which had even resulted in fratricide.

She recalled that after the assassination of Rajiv Gandhi in 1991 on Tamil soil, the sympathy here towards LTTE had turned into an anger against them.

Ms. Jayalalithaa said it was on her insistence that the Centre had first banned LTTE in India in 1992.

She also recalled that it was her government in 2002 which passed a resolution in the assembly demanding the arrest and extradition of slain LTTE leader V Prabhakaran in connection with Rajiv Gandhi’s assassination.

Taking a dig at her party’s main rival the DMK, she said that it failed to do anything for the welfare of Sri Lankan Tamils and took potshots at party president M Karunanidhi for organising a fast as Chief Minister demanding ceasefire after having “breakfast and calling it off later in the day”.

She alleged that he had betrayed the Tamils by announcing that a ceasefire was on which made scores of people to come out from the bunkers but they were killed in aerial bombings.

Ms. Jayalalithaa said she did not intend to level charges against DMK but insisted that it was “selfish nature and helplessness of the previous DMK regime” which resulted in the death of Tamils. PTI

http://www.dailymirror.lk/news/11818-tn-assembly-seeks-economic-sanctions.html

இந்த தீர்மானம் தொடர்பில் டெயிலிமிரர் எனும் சிங்கள தேச ஆங்கில இதழின் இணையச் செய்தி மேலே தரப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா அரசியலில் முன்பை விட மிகவும் முதிர்ச்சி அடைந்தவர் போல் பேசுகிறார்.சகல விடயங்களையும் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார.;நான் நினைக்கிறேன் முன்பு போல் மேலோட்டமாக எமது பிரச்சனையை அணுகாமல் ஆழமாக அணுகுகிறார்.கம்னியூஸ் கட்சி உறுப்பினருக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.

பொருளாதடை கொண'டு வருவதால் தமிழர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படப்; போவதில்லை. அங்குள்ள தமிழர்கள் இப்பொழுது என்ன தேனும் பாலுமா சாப்பிட்டுக்கொண்'டு இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா இலங்கை தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானத்தை கொண்டு வந்தார். இதன் மீதான விவாதத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

தி.மு.க. சார்பில் துரைமுருகன் பேசினார். அவரும் இந்த தீர்மானத்தை வரவேற்பதாக கூறினார். அவரை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசும் போது தி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றியும், தி.மு.க. ஆட்சியைப் பற்றியும் சில கருத்துக்களை கூறினார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.

விஜயகாந்த் கருத்துக்கு பதில் அளிக்க வாய்ப்பு தர வேண்டும் என்று தி.மு.க. உறுப்பினர் துரைமுருகன், சபாநாயகர் ஜெயக்குமாரிடம் கோரிக்கை வைத்தார். விஜயகாந்த் பேசி முடிந்த பிறகும் துரைமுருகனுக்கு பதில் அளிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையடுத்து துரைமுருகன் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் இருந்து வெளியேறிய பிறகு துரை முருகன் கூறியதாவது:

தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடும் தீர்மானத்தை முதல் அமைச்சர் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை ஆதரிப்பது அனைவரின் கடமை. நாங்களும் ஆதரிக்கிறோம் என்று பேசினேன்.

சிலர் தி.மு.க.வை மறைமுகமாக தாக்கி பேசினார்கள். நான் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். தனிப்பட்ட தாக்குதலை வெளியே வைத்துக் கொள்ளலாம் என்று கூறினேன். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் பேச தொடங்கிய உடனே தி.மு.க. தலைவர் கருணாநிதியையும், தி.மு.க.வையும் சரமாரியாக தாக்கி பேசினார்.

எனக்கு பதில் சொல்ல தெரியும். விளக்கம் அளிக்க அனுமதி வேண்டும் என்று கேட்டேன். எதிர்க்கட்சி தலைவர் பேசி முடித்த பிறகு என்னை பேச அனுமதிப்பதாக கூறினார். ஆனால் அவர் பேசி முடிந்த பிறகும் அனுமதி தரவில்லை. எனவே நாங்கள் வெளிநடப்பு செய்தோம். ஆனால் நாங்கள் இந்த தீர்மானத்தை ஆதரித்தோம் என்றார்.

நக்கீரன்.

Edited by தமிழ் அரசு

TN State Assembly demands New Delhi to indict Sri Lanka, calls for economic sanctions

[Wed, 08 Jun 2011, 08:44 GMT]

Declaring that the Sri Lankan state has acted with an intent of exterminating the Tamils in the island of Sri Lanka, the 14th Assembly of Tamil Nadu State, on Wednesday demanded the Indian Central Government to join other world countries in indicting the Sri Lankan state for its crimes against humanity and war crimes and to impose economic sanctions against Sri Lanka until Tamils rights are ensured with equality and dignity. A resolution to this effect was passed with two thirds majority at zero hour while the DMK was not present at the Assembly.

http://tamilnet.com/art.html?catid=13&artid=34041

Assembly passes resolution seeking imposition of eco sanctions

http://in.news.yahoo.com/assembly-passes-resolution-seeking-imposition-eco-sanctions-073100027.html

ஜெ இன் கருத்துக்கள், நடவடிக்கை சரியான திசையில் உள்ளது.

கம்யூனிஸ்ட் தமக்கும் கதைக்கத் தெரியும் என முயற்சிக்கும் நேரம் இதுவல்ல.

இன அழிப்புக்கு உதவிய உள்ளூர், சிங்கள பயங்கரவாதிகளின் பிடியில் "ஜெ" சிக்காமல் இருக்க வேண்டும்.

ஏற்கனவே 2004 இல் பணிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்ட கேனையன் பத்மநாதன் மூலமாக இன அழிப்புக்கு உதவிய பயங்கரவாதிகள் ஆட்டம் ஆட முயற்சித்தனர்.

ஜெ தனது கொள்கையில் இறுதிவரை, சாதிக்கும் வரை உறுதியாக இருந்தால் முழுமையாகப் பாராட்டலாம்.

சீமான், வைக்கோ போன்றவர்கள் சாதுரியமாக, இதனுள் தலையைச் சொருகாமல், இடையூறுகளை ஏற்படுத்தும் வீர வசனங்களை பேசாமல், உடன் சாத்தியமற்ற கோரிக்கைகளை வைக்காமல்

கீழ்தர அரசியல் செய்யாமல் தங்கள் பாணியில் வேலைகளை செய்யவேண்டும்.

ஜெ இன் கருத்துக்கள், நடவடிக்கை சரியான திசையில் உள்ளது.

கம்யூனிஸ்ட் தமக்கும் கதைக்கத் தெரியும் என முயற்சிக்கும் நேரம் இதுவல்ல.

இன அழிப்புக்கு உதவிய உள்ளூர், சிங்கள பயங்கரவாதிகளின் பிடியில் "ஜெ" சிக்காமல் இருக்க வேண்டும்.

ஏற்கனவே 2004 இல் பணிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்ட கேனையன் பத்மநாதன் மூலமாக இன அழிப்புக்கு உதவிய பயங்கரவாதிகள் ஆட்டம் ஆட முயற்சித்தனர்.

ஜெ தனது கொள்கையில் இறுதிவரை, சாதிக்கும் வரை உறுதியாக இருந்தால் முழுமையாகப் பாராட்டலாம்.

சீமான், வைக்கோ போன்றவர்கள் சாதுரியமாக, இதனுள் தலையைச் சொருகாமல், இடையூறுகளை ஏற்படுத்தும் வீர வசனங்களை பேசாமல், உடன் சாத்தியமற்ற கோரிக்கைகளை வைக்காமல்

கீழ்தர அரசியல் செய்யாமல் தங்கள் பாணியில் வேலைகளை செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயலலிதா தமிழர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வினை பெற்று கொடுத்து விட்டால், அவர்தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர், திமுக ஒரு காலத்திலும் எதிர்கட்சியாக கூட வரமுடியாது, இந்த நல்ல சந்தர்பத்தை ஜெயலலிதா புத்திசாதுர்யமாக பயன்படுத்த வேண்டும், கருனாநிதிக்கு இனி ஆட்சியும் இல்லை, மெரீனாகடற்கரையில் சாமதியும் இல்லை. கண்ணாம்மா பேட்டையே இனி அவரது வழி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருக்கிறது பத்தோ, இருபது பேர் தூக்கி போட்டு மிதிக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை, ஜூன் 8,2011

இலங்கையில் போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர்களை, போர்க்குற்றவாளிகளாக பிரகடனப்படுத்த ஐ.நா. அமைப்பை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இன்று இலங்கை பிரச்னை தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இலங்கையில் போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர்களை, போர்க்குற்றவாளிகளாக பிரடகனப்படுத்த ஐ.நா. அமைப்பை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தும் தீர்மானத்தை அவர் கொண்டு வந்தார்.

இதனை முன்மொழிந்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:

"இலங்கை நாட்டுக்கு பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை கிடைத்துவிட்டாலும் அங்கு வாழும் தமிழர்கள், தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட்டனர். இதனையடுத்து, தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் அடக்குமுறைகளை எதிர்த்தும் "சுயாட்சி அந்தஸ்து", "தனி ஈழம்" உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகள் 1980-களில் இருந்து தொடர்ந்து குரல் எழுப்பி போராடியதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

அதிமுக உட்பட தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும், அவர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார்கள். இது மட்டுமல்லாமல், அவர்களுக்கு தங்களுடைய தார்மீக ஆதரவினையும் அளித்தனர்.

இந்தச் சூழ்நிலையில், தமிழீழம் என்ற போர்வையில் தீவிரவாதம் தலைதூக்க ஆரம்பித்து இதன் காரணமாக தமிழ்ச் சகோதரர்களே படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் எல்லாம், நடந்தேறின. இதன் உச்சகட்டமாக இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1991 ஆம் ஆண்டு தமிழ் மண்ணில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது இருந்த அனுதாபம் கடுமையான எதிர்ப்பாக மாறிவிட்டது.

1992-ஆம் ஆண்டு நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது என்னுடைய வற்புறுத்தலின் பேரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை 1967 ஆம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தடை செய்து, அந்தத் தடை உத்தரவு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் முதல் குற்றவாளி பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சார்ந்த எவரையும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி 2002-ஆம் ஆண்டு இந்தச் சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அரசின் அதிபராக மஹிந்தா ராஜபக்ஷே பொறுப்பேற்றுக் கொண்டார். 2006-ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழகத்திலும் துரதிர்ஷ்டவசமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மைனாரிட்டி தி.மு.க. அரசிற்கு மு.கருணாநிதி தலைமை வகித்தார். மத்தியிலும் தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி 2004-முதல் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில், இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் போர்வையில் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட ஆரம்பித்தது.

2008-ஆம் ஆண்டு துவக்கத்தில் இலங்கை ராணுவத்தினர் 100 பேருக்கு அரியானா மாநிலத்தில் இந்திய ராணுவம் ரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாகவும்; இலங்கை ராணுவத்தினருக்கு அதிநவீன ரேடார் கருவிகள் உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களை இந்திய அரசு வழங்கியதாகவும்; இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் இலங்கை சென்று வந்ததாகவும் அப்போது ஊடகங்களில் செய்திகள் வந்தன. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு இவை அனைத்தும் நன்கு தெரிந்திருக்கும்.

திமுக அரசு மீது குற்றச்சாட்டு...

இந்தியாவிடமிருந்து தனக்குத் தேவையான ராணுவ உதவிகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை ராணுவம் 2008-ஆம் ஆண்டு இறுதியிலும், 2009-ஆம் ஆண்டு துவக்கத்திலும், இலங்கைத் தமிழர்களை கடுமையாக தாக்க ஆரம்பித்தது. இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. வலியுறுத்த வேண்டும் என்றும்; இதற்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செவி சாய்க்கவில்லையெனில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவினை தி.மு.க. விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் நான் பல முறை வற்புறுத்தினேன்.

ஆனால், அப்போது மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சராக இருந்த கருணாநிதியோ, அதைச் செய்யவில்லை. மாறாக, "அனைத்துக் கட்சிக் கூட்டம்", "சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம்"; "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்", "மனிதச் சங்கிலி போராட்டம்" "பிரதமருக்கு தந்தி"; "நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு"; "ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது"; "இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு" என பல்வேறு வகையான நாடகங்கள் தான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் நடத்தப்பட்டன.

இவற்றின் உச்சகட்டமாக, காலை சிற்றுண்டியை வீட்டில் முடித்துவிட்டு தலைமைச் செயலகம் செல்லும் வழியில் திடீரென்று "போர் நிறுத்தம் ஏற்படும் வரை உண்ணாவிரதம்" என்று அறிவித்து கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார் கருணாநிதி.

மதிய உணவு வேளை வந்தவுடன் நண்பகல் 12 மணி அளவில் "விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு முடித்துக் கொண்டுவிட்டது" என்ற செய்தியை ஊடகங்களுக்கு அறிவித்துவிட்டு தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு விட்டார். இதன் மூலம் "உண்ணாவிரதம்" என்னும் அறப் போராட்டத்தை கேலிக் கூத்தாக்கிவிட்டார் முன்னாள் முதலமைச்சர்.

"போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது" என்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேச்சைக் கேட்டு பாதுகாப்பாக பதுங்குக் குழிகளில் பதுங்கியிருந்த லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் வெளி வந்தனர். இவ்வாறு வெளிவந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் கொத்து கொத்தாக இடைவிடாது குண்டுகளை வீசி அவர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர்.

இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவ முகாம்களில் கம்பிகளால் ஆன வேலிகளுக்கு பின்னால் அடைத்து வைக்கப்பட்டதாகவும்; முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்கள் இலங்கை ராணுவப் படையினரின் கண் முன்னேயே பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்கக் கூடிய நிலைமைக்கும், குளிக்கக் கூடிய நிலைமைக்கும் ஆளாக்கப்பட்டதாகவும்; தமிழர்கள் குடியிருந்த பகுதிகளில் எல்லாம் சிங்களர்கள் குடியேறி இருப்பதாகவும் செய்திகள் வந்தன.

ஆனால், கனிமொழி உட்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் இலங்கை சென்று இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் சிரித்துப் பேசி; விருந்துண்டு; பரிசுப் பொருட்களை பெற்று சென்னை திரும்பிய நாடாளுமன்றக் குழுவோ, "இலங்கைத் தமிழர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள்" என்று ஒரு உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டது. உண்மை நிலை என்னவென்றால், போரினால் இடம் பெயர்ந்த தமிழர்கள் மறுவாழ்வு பெறாமல் இன்னமும் அவதிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

"போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது" என்ற உண்மைக்கு மாறான தகவலைக் கூறி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்துவிட்டார் கருணாநிதி. "தமிழினப் பாதுகாவலர்" என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டு "தமிழினப் படுகொலை"-க்கு துணை போயிருப்பதை பார்க்கும் போது "உறவு போல் இருந்து குளவி போல் கொட்டுவது" என்னும் பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.

இவற்றை எல்லாம் நான் இங்கே சுட்டிக் காட்டுவதற்குக் காரணம் முன்னாள் முதலமைச்சரை குற்றம் சாட்ட வேண்டும்; முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. அப்பாவி இலங்கைத் தமிழர்கள் உயிர் இழப்பதற்கு முந்தைய அரசு காரணமாக அமைந்துவிட்டதே என்ற ஆற்றாமையால் தான் இவற்றை நான் இங்கே குறிப்பிடுகிறேன்.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசின் சுயநலப் போக்கு மற்றும் கையாலாகாத்தனம் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் குண்டு மழைக்கு பலியாகி இருக்கிறார்கள்; குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதி மற்றும் மருத்துவமனைகள் மீதெல்லாம் இலங்கை ராணுவம் குண்டுமழை பொழிந்து இருக்கிறது; மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடைவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்தி இருக்கிறது; உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக ஏராளமான தமிழர்கள் மரணமடைந்துள்ளனர்; மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன. இந்தக் காரணங்களுக்காகத்தான் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இலங்கை மீது பொருளாதார தடையின் அவசியம்...

இங்கே பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சௌந்தரராஜன், பொருளாதாரத் தடையைக் கொண்டு வர வேண்டுமென்ற வரிகளை விலக்கிக் கொண்டால் என்ன என்ற ஒரு கருத்தை இங்கே தெரிவித்தார். இதனால் அப்பாவித் தமிழ் மக்களும் பாதிக்கப்படுவார்களே என்ற ஒரு கருத்தைச் சொன்னார். இப்போதே இலங்கை அரசு யாருக்கும் பணியவில்லை. அங்கே வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களர்களோடு அனைத்து உரிமைகளையும், குடியுரிமைகளையும் வழங்க வேண்டுமென்று இந்தியா சொன்னாலும், யார் சொன்னாலும், அவர்கள் அதை மதிக்கவில்லை. அதனால், அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது, அவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரே வழி பொருளாதாரத் தடைகள்தான். இதுவொரு தற்காலிகமான ஒரு முறைதான்.

இந்திய அரசும், இன்னும் சில நாடுகளும் இணைந்து, இலங்கை அரசின்மீது ஒரு பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்தால், குறுகிய காலத்திற்குள்ளேயே நாம் சொல்வதை இலங்கை அரசு கேட்டுத்தான் ஆக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்படும். வேறு வழியில்லை என்பதற்காகத்தான் இதைச் சேர்த்திருக்கிறோம்.

ராஜபக்ஷே போர்க்குற்றவாளியா?

இந்தத் தீர்மானத்தின்மீது இங்கே கருத்துத் தெரிவித்து பேசிய இன்னும் சில உறுப்பினர்கள் பேசுகின்றபோது, ஐ.நா. சபை ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளி என்று அறிவித்து விட்டதாக இங்கே தெரிவித்தார்கள். அப்படியில்லை. ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் ஒரு குழுவை அமைத்து, அவர்கள் அங்கே நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களைப் பற்றி ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று தெரிவித்தார்.

அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில், இப்படிப்பட்ட போர்க் குற்றங்களெல்லாம் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது; அங்கே வாழ்கின்ற தமிழ் மக்கள் மீது இத்தகைய குற்றங்களெல்லாம், கொடுமைகளெல்லாம் நிகழ்த்தப்பட்டன என்பதையெல்லாம் தெரிவித்துவிட்டு, இதனை இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்களே தவிர, இதை உறுதியும் செய்யவில்லை - ராஜபக்ஷேவோ, மற்றவர்களோ போர்க் குற்றவாளிகள் என்று ஐ.நா. சபை அறிவிக்கவும் இல்லை.

அதனால்தான் இந்தத் தீர்மானத்தில் இந்திய அரசு போர்க் குற்றம் புரிந்தவர்களை, போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த வேண்டும், இதற்கு ஐ.நா. சபையை வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம்.

எனவே, மனிதாபிமானமற்ற முறையில் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும்; இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழு மறுவாழ்வு அளித்து, அவர்கள் வசித்த இடங்களிலேயே அவர்களை மீண்டும் குடியமர்த்தி; சிங்களர்களுக்கு உரிய அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கும் வரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி, அரசு சார்பில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தினை இந்த மாமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்று ஜெயலலிதா பேசினார்.

இத்தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு பேசினர். முதல்வரின் பதில் உரைக்கு பின்னர் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.

முன்னதாக, இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்த சில கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

thanks-vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா அவர்கள் வந்து ஒரு மாதத்திற்கிடையில் இந்தத் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றிய ஜெயலலிதாவின் துணிச்சல் பாராட்டுக்குரியது. தமிழ், தமிழ் என்று தவளை மாதிரி கத்திய முன்னாள் முதலைமைச்சர் கருணாநிதி இவரின் கால் தூசிக்கும் பெறமாட்டார்.

தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதியை முதலமைச்சர் ஜெயலலிதா இவ்வளவு கெதியில் நிறைவேற்றுவார் என்று நான் கனவிலும் எதிர் பார்க்கவில்லை.

http://www.youtube.com/watch?v=uLCNWIAERNQ

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா அவர்கள் வந்து ஒரு மாதத்திற்கிடையில் இந்தத் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றிய ஜெயலலிதாவின் துணிச்சல் பாராட்டுக்குரியது. தமிழ், தமிழ் என்று தவளை மாதிரி கத்திய முன்னாள் முதலைமைச்சர் கருணாநிதி இவரின் கால் தூசிக்கும் பெறமாட்டார்.

தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதியை முதலமைச்சர் ஜெயலலிதா இவ்வளவு கெதியில் நிறைவேற்றுவார் என்று நான் கனவிலும் எதிர் பார்க்கவில்லை.

http://www.youtube.com/watch?v=uLCNWIAERNQ

நான் முந்தி பல தடவை சொன்னான் அம்மா குள்ள நரி கருணாநிதி மாரி இல்லை என்று ஞாவகம் இருக்கா சிறி அண்ணா...

நேர்மையானவா தான் இந்த அம்மா...வாய் கூசாமை பொய் சொல்லி சொல்லி பினத்துக்கு மேல் நின்று அரசியல் நடத்தும் கருணாநிதி எங்கை..... :wub: :wub:

மனசில பட்டதை அப்படியே சொல்லும் இந்த அம்மா எங்கை... :):D

அம்மா வாழ்க்க ஜயா நரகத்துக்கு போவ

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

நான் முந்தி பல தடவை சொன்னான் அம்மா குள்ள நரி கருணாநிதி மாரி இல்லை என்று ஞாவகம் இருக்கா சிறி அண்ணா...

நேர்மையானவா தான் இந்த அம்மா...வாய் கூசாமை பொய் சொலி சொல்லி பினத்துக்கு மேல் நின்று அரசியல் நடத்தும் கருணாநிதி எங்கை..... :wub: :wub:

மனசில பட்டதை அப்படியே சொல்லும் இந்த அம்மா எங்கை... :):D

அம்மாக்கு வாழ்த்துக்கள்..

ஓம், பையா... நீங்க சொன்னது ஞாபகமிருக்குது.

நாங்கள் தான் கருணாநிதியை நம்பி, ஏமாந்து விட்டோம்.

இனி. நான் அம்மா கட்சி தான்.

அம்மா என்றால்... அம்மா தான் பையா.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம், பையா... நீங்க சொன்னது ஞாபகமிருக்குது.

நாங்கள் தான் கருணாநிதியை நம்பி, ஏமாந்து விட்டோம்.

இனி. நான் அம்மா கட்சி தான்.

அம்மா என்றால்... அம்மா தான் பையா.

:) :)

  • கருத்துக்கள உறவுகள்

..இனி. நான் அம்மா கட்சி தான்.

அம்மா என்றால்... அம்மா தான் பையா.

கொஞ்சம் பொறுங்கப்பா... ரொம்பவே தூக்கிவைத்து விடவேணாம்... :wub:

வேகத்தைக் குறைத்து திசை திருப்ப பின்னால் பெரிய லாபியே இருக்கு! :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயலலிதா தமிழர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வினை பெற்று கொடுத்து விட்டால், அவர்தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர், திமுக ஒரு காலத்திலும் எதிர்கட்சியாக கூட வரமுடியாது, இந்த நல்ல சந்தர்பத்தை ஜெயலலிதா புத்திசாதுர்யமாக பயன்படுத்த வேண்டும், கருனாநிதிக்கு இனி ஆட்சியும் இல்லை, மெரீனாகடற்கரையில் சாமதியும் இல்லை. கண்ணாம்மா பேட்டையே இனி அவரது வழி.

நூற்றுக்கு நூறுவீதம் உண்மை.ஈழத்தமிழனுக்கு ஒரு நல்ல தீர்வை பெற்றுக்கொடுப்பாரேயானால் ........தமிழ்நாட்டில் இவரை யாராலும் அசைக்க முடியாது.ஈழத்தமிழனும் புலம்பெயர்தமிழனும் இந்த பூமி இருக்கும் வரை ஜெயலலிதாவை நெஞ்சில் நிறுத்தி வணங்குவான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.