Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தீபம் தமிழர்களின் ஊடகமா? – சவுத் பேங்க் பல்கலைக்கழக மாணவர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதிந்தவர்: ஈழப்பிரியா வெள்ளி, 10 ஜூன், 2011

அன்புடையீர்.

07/06/2011 நாள் ஒளிபரப்புச் செய்யப்பட்ட தேசியக்கொடி பற்றிய விவாதத்தின் மூலம் தீபம் தொலைக்காட்சி தனது ஊடகதர்மத்தைக் கைவிட்டுள்ளதோடு தமிழரின் தேசியக்கொடியின் புனிதத்தன்மையையும் புறக்கணித்து, தடம்மாறியவழியில் பயணிக்கிறது என்பதோடு இது தமிழர்களின் ஊடகமா? என்பதில் பெரும் சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது.

நாம் ஒரு தேசிய இனம். எமக்கென்று தனித்துமான அடையாளங்களையும், பாரம்பரிய தாயகபூமியையும் கொண்டவர்கள் மட்டுமல்ல கடந்த முப்பத்து மூன்று ஆண்டுகள் எந்த நாட்டின் ஆதரவுமின்றி சுயமாகவே தேசியத்தலைமையின் கீழ் தமிழீழ அரசை நிறுவி, சிறந்ததொரு கட்டுமானத்தினூடக உலகின் பார்வையை எம்பக்கம் திருப்பிய ஆளுமைமிக்க இனம்.

அந்தவகையில் தமிழினத்தினை அடையாளப்படுத்த சான்றோர்கள் கூடி ஆராய்ந்து தெரிவு செய்ததே புலிச்சின்னத்தைத் தாங்கிய எமது தேசியக்கொடி.

தேசியக்கொடியென்பது தனிமனிதர்களதோ அன்றி தனியமைப்பினதோ அல்ல. அது அந்நாட்டின் மக்களையே குறிப்பது. அந்தக் கொடியினை இழிவு செய்;வது என்பது அந்நாட்டு மக்களையே இழிவுபடுத்துவதற்குச் சமனானது. தேசியக் கொடியினை பாதுகாப்பதற்காகவே பல வீரர்கள் தமது உயிரையே ஈகம் செய்துள்ளார்கள் என்பது நாம் கண்முன்னே கண்ட வரலாறு.

தமிழீழத்தின் தேசியக்கொடியானது பல அளவிடமுடியாத அர்ப்பணிப்புக்களையும், தியாகங்களையும் மட்டுமன்றி சமுதாயத்தில் வேரூன்றிய பல அடிமைத்தளைகளை அகற்றி, புதிய புரட்சிகர சமுதாயத்தினையும் வழிப்படுத்திய சாதனைக்கொடி. கடைசித்தமிழன் இவ்வுலகில்வாழும் வரை அந்தக் கொடியே தமிழரின் தேசியக்கொடி. எமது முன்னைய தலைமுறை எமக்கு அடையாளப்படுத்திய கொடியை இளையோர்களாகிய நாங்கள் அதன் முதன்மைத்தன்மையை புரிந்தே போற்றிக் காத்துவருகின்றோம்.

ஆகவே போற்றுதலுக்குரிய எமது தேசியக் கொடியினை விவாத மேடைக்குக் கொண்டு சென்று இழிவுபடுத்தியமையானது தமிழினத்தினையே இழிவுபடுத்தியமைக்கு ஒப்பானது. சிங்களத்துடன் இணைந்து நின்று எம்மவர்களே எமது கொடியை விமர்சிக்கும் செயலை எந்த மானமுள்ள தமிழனும் பொறுத்துக்கொள்ளமாட்டான்.

அன்பான எமது தமிழீழமக்களே!

எங்களை இழிவு செய்யும் விவாதத்தினை நிகழ்த்திய ஊடகத்தினை வன்மையாகக் கண்டிப்பதுடன், அவ்வூடகத்தினைப் புறக்கணிப்புச் செய்வதன் மூலம் இனிவரும் காலங்களில் இவ்வாறான இரண்டகச் செயல்களை எந்த ஊடகங்களும் செய்யத் துணியாதவகையில் அமையக் கூடியவாறான செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

தீபம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தேசியக் கொடி பற்றிய விவாதம் - காணொளி இணைப்பு.

நன்றி.

London South Bank Tamil Society

N Sivendran

S sivatharsan

Contact: lsbutamilssociety@gmail.com

source:vannionline.

Edited by தமிழ் அரசு

திருந்தாத நாங்கள் ஒரு நாய்கள்.

தமிழ்நாடு பொருளாதார தடை கொன்டு வர வாழ்த்துகிறோம் கை தட்டுகிறோம்.

நாங்கள் ஒன்றும் செய்ய மட்டோம்.

இப்படிதான் எத்தனையோ போராளிகள் மடிய எங்களை இங்கே வளர்த்து கொண்டோம்.

இப்ப இன்னும் அசுரத்தனமாக வளர நினக்கிறோம் கொஞ்சம் கூட கிலேசம் இல்லை.

சிங்கள உற்பத்தி பொருட்கள் குவிகின்றன கடைகளில். 3 எடுத்தால் 1 ப்வுன் என்று கூவி விற்கிறார்கள்.

சிங்களவன் சொந்த மொபைல் கம்பனி (டயலாக் விச்) கொண்டு வந்து தமிழன் கடை மூலம் தமிழனிடம் விற்று காசு உழைக்கிறான்.

ஏயர் லங்கா ரிக்க்ட வாங்கி போனால் தான் சொகுசா இருக்குமாம் என்று பிரயாண முகவரிடம் கேட்டு வாங்குகினம்.

இப்படி சீரழிவு நிலக்கு வந்து விட்டோம்.

இப்ப சிங்களவினின் கிரிக்கெட் விளையாட்டு விழாவை சிங்களவனின் என்று தெரியப்படுத்தாமல் தீபம் ரி.வி வஞ்சகமாக மறைமுக விளம்பரம் செய்கிறார்கள்.

இந்த விளையாட்டு சிரிலங்கன் தூதுவராலயதின் ஆதரவில் சிங்களவருக்கான கிரிக்கெட்.

ஆனால் தீபம் பொய்த்தனமாக 2012 கப்பை வெல்ல போவது யார் என்று பொய் விளம்ரம் செய்கிறார்கள்.

ஏனெனில் தமிழர் வர வேன்டும் என்ற கள்ள உத்தி.

தீபத்துக்கு காசு கட்டி அங்கத்தவர் ஆகி அதை வளர்ப்பது வீண்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீபத்துக்கு காசு கட்டி அங்கத்தவர் ஆகி அதை வளர்ப்பது வீண்.

தீபம் கொஞ்சம் கொஞ்சமாக புலத்து மக்களுக்கு விசத்தை ஏத்துகிறது. நாளை மறுதினம் ஜெர்மனி கம் கோவிலில் தமது சந்தாவிற்கான விற்பனை என்னும் போர்வையில் வருவார்கள். மக்களே புறக்கணியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான்முன்பு TTNக்கும்

தற்போது GTVக்கும்

வருடாவருடம் சந்தாவாக நூற்றுமுப்பது ஈரோக்கள் கட்டிவருகின்றேன். இத்தனைக்கும் அது எனக்கு வேலை செய்வதில்லை.

அதைத்தவிர இதுவரை வேறு எந்த தொலைக்காட்சிக்கும் பணம் கட்டியதில்லை.

TTN இற்கு பின் அது போல் ஒரு தொலைக்காட்சியும் இதுவரை ஐரோப்பாவில் வரவில்லை.

கவலையை விடுங்கள். இன்றைய காலத்தில் தமிழ்த்தேசியத்தின் ஊடாகப்பயணிக்க விரும்பாத எந்த தமிழ் ஊடகமும் நிலைத்து நிற்காது என்பதை எம் மக்கள் உணர்ந்து விட்டனர்.இவையும், இவை சார்ந்தவர்களும் காலப்போக்கில் காலாவாதியாகிவிடுவார்கள். இது இன்றைய காலத்தின் கட்டளை.

  • கருத்துக்கள உறவுகள்

கவலையை விடுங்கள். இன்றைய காலத்தில் தமிழ்த்தேசியத்தின் ஊடாகப்பயணிக்க விரும்பாத எந்த தமிழ் ஊடகமும் நிலைத்து நிற்காது என்பதை எம் மக்கள் உணர்ந்து விட்டனர்.இவையும், இவை சார்ந்தவர்களும் காலப்போக்கில் காலாவாதியாகிவிடுவார்கள். இது இன்றைய காலத்தின் கட்டளை.

உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை தமிழ்ச்சூரியன்!

இவர்கள் சூரபத்மன் மாதிரி!

வெட்ட வெட்டப் புதிய தலைகளுடன் வருவார்கள்!

சந்தாப் பணத்தை விட இவர்களுக்கு வேறு விதமான வருமானங்கள் அதிகம் இருக்கும்!

மனங்களை நஞ்சாக்குவதே இவர்களது ஒரு குறிக்கோள்.அதற்குத் தொலைக்காட்சியை விட வலிமை வாய்ந்த சாதனம் வேறு கிடையாது!!!

... தொடர்புள்ள சிலர் கூறுகிறார்கள் ... தீபத்திற்கு மிகுந்த நிதிப்பிரட்சனை இருந்ததாம், அதன் முக்கிய பங்குதாரர் செல்வந்தராக இருந்தாலும், காசை அள்ளி இறைக்க தயாராகவில்லையாம்! ... தற்போது அது தீர்ந்து விட்டதாம்!!!!!!!! ... இன்று தீபத்தின் மிகமுக்கிய பங்குதாரி பசில் என்கிறார்கள், இல்லை இன்னும் சிலரோ கேபியின் முதலீடு என்கிறார்கள் ... எது உண்மை என்று தெரியாவிடினும், இரண்டில் ஒன்றாக கண்டிப்பாக இருக்க வேண்டும் என்கிறார்கள்!!!!!!

.... தீபத்தின் ஓர் பங்குதாரர், ஜேர்மனியில் இருந்து இங்கு வந்து குடியேறியவர், அண்மையில் கேபியின் அழைப்பில் இரகசியமாக சென்று, அங்கு பல சிங்கள தலைவர்களையும் சந்தித்ததை, அங்கு கூட சென்று, பின் குட்டை உடைத்த டாக்டர் ஒருவர் வெளியிட்டு இருந்தார். பின் அந்த பங்குதாரர் தீபத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்படதாக ஒரு நாடகமும் ஆடப்பட்டது!! ...

... குழும்பில் தற்போது தீபத்தின் கலையரங்கம் பொலிஸ் காவலுடன் செயற்படுகிறதாம்!! ... அங்கு நிகழ்ச்சிகளை தயாரிப்பதற்கு மேல், தமிழகம்/இலங்கையில் ஓர் தொலைக்காட்சியை தொடங்கினால் என்ற யோசனையுமாம்?

... அவைகளுக்கு மேல் லண்டனில் இருந்து சிங்கள புலனாய்வுத்துறையாலும்/தூதரகத்தாலும் இயக்கப்படும் ... இராஜேஸ்வரி பாலா, கொன்ஸன்ரைன், வாசுதேவன், ... ... போன்றவர்களுக்கு முன்னுரிமை அழிக்க வேண்டும் என்று அங்கிருந்து கட்டளையாம் ... தெரிகிறது!!!!

.... இன்று தீபம் வைத்திருக்கும் பலரே, தீபத்தின் அரசியல் செயற்பாடுகளை பகிரங்கமாக விமர்சிக்கிறார்கள்!! ... ஆனால் ஏன் அதனை தொடர்ந்து வைத்திருக்கிறார்கள் தெரியவில்லை?????

Edited by Nellaiyan

மாற்றுக்கருத்து/பத்திக்கை சுதந்திரம் என்ற ரீதியில் 'நீ அடிமைதான்' என்று கூறுபவர்களை;

சிங்கள ஆதரவுடன் செயல்படுவர்களை;

எமக்கு ஆதரவில்லாத ஊடகங்களை;

வங்குரோத்து நிலைக்கு தள்ளவேண்டும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

நான் ரீரீஎன்னின் நீண்ட கால உறுப்பினன்.தற்போது ஜீரிவி பார்க்கிறேன்.தீபத்தை ஆரம்ப காலத்திலிருந்து (காசு கொடுத்து) பார்ப்;பதில்லை.அதற்கும் சண்ரிவிக்கும் பெரிய வித்தியாசமில்லை.வியாபாரமே அவர்கள் குறிக்கோள்.தற்போது தமிழ்மக்களைக் கூறுபோடுவதும் அதன் குறிக்கோளாகி விட்டது போலும்.

உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை தமிழ்ச்சூரியன்!

இவர்கள் சூரபத்மன் மாதிரி!

வெட்ட வெட்டப் புதிய தலைகளுடன் வருவார்கள்!

சந்தாப் பணத்தை விட இவர்களுக்கு வேறு விதமான வருமானங்கள் அதிகம் இருக்கும்!

மனங்களை நஞ்சாக்குவதே இவர்களது ஒரு குறிக்கோள்.அதற்குத் தொலைக்காட்சியை விட வலிமை வாய்ந்த சாதனம் வேறு கிடையாது!!!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்

வணக்கம் நண்பர் புங்கையூரான் உங்கள் கருத்திற்க்கு நான் நூறு வீதம் உடன்படுகிறேன் ஆனால் மக்களாகிய நாம் விழித்துவிட்டால் எந்த சூரபத்மனும் தமிழன் முன் தலை வைக்க முடியாது. நம் கையில்த்தான் எல்லாம் உள்ளது . நிச்சயம் மக்கள் விழித்தெழவேண்டும் என்ற ஆதங்கத்தில்த்தான் நான் இப்படியெழுதினேன் உணர்வுள்ள சிந்தனைத்தெளிவுள்ள தமிழருக்கு தீபம் தொலைக்காட்சியைப்பற்றி நன்கு தெரியும். நான் தீபம் இலவசமாக ஒலிபரப்பும்போது கூட நான் பார்ப்பதில்லை. என் மனைவிக்கும் புரிய வைத்துள்ளேன்.இந்த நிலை ஒவ்வொரு தமிழனுக்கும் வரவேண்டும்.வரும்>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.