Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேஸ் புக் மூலம் புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் வரை மோசடி செய்த யாழ். யுவதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ் புக் மூலம் புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் வரை மோசடி செய்த யாழ். யுவதி! Top News

[Monday, 2011-07-04 05:19:36]

வெளிநாடுகளில் குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்து வருகின்ற இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி தாயகத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரால் பேஸ் புக் சமூக இணைப்பு இணையத் தளம் மூலமாக குறைந்தது ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய்வரை பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது அம்பலமாகியுள்ளது.

ஏமாற்றுப் பேர்வழியின் உண்மையான பெயர் கந்தையா தர்ஷனா. சொந்த இடம் யாழ். சாவகச்சேரியில் கல்வயல் கிராமம். 1986 ஆம் ஆண்டு செப்டெம்பர் 25 ஆம் திகதி பிறந்தவர். தற்போது கொழும்பில் இருக்கின்றார். இவர் பல பெயர்களிலும் பேஸ் புக்கில் நடமாடுகின்றார். யது கார்த்தி என்கிற பெயரிலும் பேஸ் புக் கணக்கு வைத்து இருக்கின்றார்.

பேஸ் புக் பாவனையாளர்களான புலம்பெயர் தமிழர்களில் பல வயதுக்காரர்களையும் கைக்குள் போட்டுக் கொள்வார். இவர் அழகான தோற்றம் உடையவர். குழைந்து பேசுவார். அனுதாபத்தை பெறுதல், கவர்ச்சி காட்டுதல் ஆகிய உத்திகளைக் கையாண்டு பணம் பறிக்கின்றமை இவரின் வாடிக்கை.

பெற்றோர் இறந்து விட்டனர் என்பார், வெளிநாட்டில் படிக்க பெருந்தொகை நிதி தேவை என்பார், மன பாதிப்பு உடையவர் போல கைகளை சவர அலகால் அறுத்துக் காண்பிப்பார். - இவையெல்லாம் அனுதாபம் பெறுகின்றமைக்காக.காதலிக்கின்றமை போல் நடிப்பார், செக்ஸியான தோற்றத்தில் தோன்றுவார். கிளுகிளுப்பு ஊட்டுகின்ற வார்த்தைகள் பேசுவார். - இவையெல்லாம் கவர்ச்சி காட்டுதல் என்கிற உத்தியின் கீழ்.

ஸ்கைப், தொலைபேசி ஆகியவற்றின் மூலமாக தொடர்புகளை நெருக்கமாக்கிக் கொள்வார். பணம் கிடைத்தமையுடன் அனுப்பியவருடனான தொடர்பை அறுத்துக் கொள்வார். சாவகச்சேரியின் கொமர்ஷல் வங்கியில் உள்ள இவரின் கணக்கு ஒன்றுக்கு மாத்திரம் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது.

மகளின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டு இருக்கின்ற பணத் தொகையை பார்த்தபோது வங்கியிலேயே தாய் மயங்கி விழுந்த சம்பவமும் இடம்பெற்று உள்ளது. யுவதியின் மோசடி நடவடிக்கைகளுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒருவர்தான் சூத்திரதாரி . இந்நபரின் பெயர் ஜெய்சன். யுவதியின் கணக்குக்கு வருகின்ற பணத்தை சொந்தக் கணக்குக்கு இவர் மாற்றிக் கொள்வார்.

தற்போது யுவதியின் கையடக்கத் தொலைபேசி இவரின் பாவனையில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தொலைபேசி அழைப்பு விடுக்கின்றபோது இவர் படுகொலை அச்சுறுத்தல் விடுத்து வருகின்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=45896&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தச் செய்தி தொடர்பான ஒரு உரையாடலை முகநூலில் பார்த்தேன், கேட்டேன். அதில் போராட்டத்தை புலம்பெயர் மக்களை கீழ்த்தரமான கொன்னைத் தமிழில் சிங்களம் கலந்து ஏசுவதையும்.. கொலை மிரட்டல்.. எச்சரிக்கை விடுவதையும் அவதானித்தேன்.

தவறான வழிக்கு இட்டுச் செல்லப்படும் இந்த யுவதிகளின் பின்னால் (உண்மையில் இவர் தமிழா சிங்களமா முஸ்லீமா என்பதும் தெரியவில்லை) சிங்கள அல்லது முஸ்லீம் நபர்கள்.. அல்லது சிறீலங்கா சிங்களப் படைகள் அல்லது அதனுடன் இணைந்து பணிபுரியும் கும்பல்கள் செயற்படுவதாகவே தெரிகிறது.

எனவே தாயகத்தில் இருந்து முகநூல் வழியோ வேறு வழிகளிலோ.. அறிமுகமாகி.. எந்த ஆதார அடிப்படைகளும் இன்றி உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்வதை நிறுத்திக் கொள்வது நன்று. :unsure::o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன புது வித கொள்ளை ?

இதென்ன புது வித கொள்ளை ?

பெண் என்று விட்டு கொடுத்த ஏமாளிகள் தான். பெண் என்றால் பேயும் இரங்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனைபேர் ஏமாறிக்கொண்டு இருக்கினமோ தெரியல

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் பகிரங்கமாக எழுதி சில உதவிகளை நான் செய்ததன் பின்

இது போன்று பல தனிப்பட்ட அழைப்புக்கள் எனக்கு வந்தன.

அதன் பின் இங்கு அது பற்றி எழுதுவதைத்தவிர்த்து வருகின்றேன்.

இது போன்ற நிகழ்வுகளால் புலம் பெயர்மக்கள் சந்தேகங்கொள்ள வேண்டும் இதைப்போல்தான் தாயகத்தவருக்கு உதவுபவர்கள் எல்லோருமே இருப்பார்கள் என்ற நஞ்சையும் இச்செய்தி காவிவருகிறது.

செய்வதற்கு முன் ஆராயுங்கள். தயவுசெய்து இது போன்றவற்றை எடுத்துக்கொண்டு அந்த மக்களிலிருந்து விலகிவிடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தினம் இந்த செய்தி பற்றி எனது முகநூலிலும் படங்கள் மற்றும் நிறைய விபரங்களை இணைச்சு இருந்தேன். அந்த செய்தி போட்டு ஒரு குறிப்பிட நேரத்திற்குள் என்னுடைய உறவுக்காரர் ஒருவரிடம் வாங்கி கட்ட வேண்டி வந்துட்டு...ஆகவே அந்த செய்தியை எடுத்து விட்டேன் காரணம் உறவுகளாகிய எங்களுக்குள் பிடுங்குப் பாடு வரக் கூடாது என்று..ஆனால் இப்படி நிறையவே மோசடிகள் நடக்கிறது வெளிக் கொண்டு வரப்படுவதில்லை.. :( :(http://www.thedipaar.com/news/news.php?id=30426 :(:(

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மொத்த குடும்பமுமே தற்கொலை செய்கிற எண்ணத்தில் - தர்ஷனாவின் அண்ணா

[எங்கள் மொத்த குடும்பமுமே தற்கொலை செய்கிற எண்ணத்தில் - தர்ஷனாவின் அண்ணா] 2011-07-05 22:26:42 [views = 545]நீங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சில இணையத்தளத்தில் செய்திப்பக்கத்தில் போட்டிருந்த யாழ் யுவதி( கந்தையா தர்ஷனா ) பற்றிய செய்தி சம்பந்தமாக அறிந்திருப்பீர்கள். அந்த யுவதியின் அண்ணன் என்ற வகையில் சில முக்கிய விடயங்களை பகிர்ந்துகிள்ள நினைக்கிறேன்.

) எந்த ஆதாரத்தினை வைத்து இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தார்கள்?

ஏனென்றால் இணையத்தளங்களிட்கு இந்த செய்தியை கொடுத்தவர் என்னுடன் 2 நாட்களுக்கு முன்னர் நேரில் சந்தித்து இந்த பிரச்சனையை என்னிடம் சொன்னார்.

அதாவது தான் அந்த யுவதிக்கு 15 லட்சம் இலங்கை காசு கொடுத்ததாகவும், தற்போது அந்த யுவதி எந்த தொடர்புமில்லாது இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதற்கு நான் சொன்னேன் நீங்கள் காசு கொடுக்கமுதல் என்னையோ எங்கள் குடும்பத்தையோ விசாரிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இப்போ தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன் எங்களை தொடர்புகொள்ரிங்க என்று. நான் சொன்னது சரியா தவறா?

2 ) அவர் என்ன நோக்கத்திற்காக அந்த காசு கொடுத்ததென்று சொன்னாரெண்டு உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

அதாவது எனது தங்கையை எங்கள் குடும்பம் யாருக்கும் தெரியாமல் லண்டனுக்கு மாணவர் விசாவில் எடுப்பதற்காக அந்த காசை அனுப்பினாரெண்டு சொல்கிறார். அப்படியெண்டால் அவர் செய்த காரியம் சரியானதா?

எங்கள் குடும்பத்திற்கு தெரியாமல் அவர் யுவதியை லண்டனுக்கு எடுக்க முயற்சி செய்திருக்கிறார். அதை எங்களுக்கு தெரிந்து செய்ய முயற்சி செய்திருக்கலாமே?

3 ) இன்று எங்கள் வீட்டிற்கு cid பொலிசார் வந்து விசாரித்தார்கள். அவர்கள் commercial bank கணக்கை check பண்ணியபோது தங்கையின் கணக்கில் 10 லட்சத்துக்கும் குறைவான தொகையே இருந்திருக்கிறது.. எனவே குறித்த நபர் அந்த கணக்கிற்கு தான் 15 லட்சம் போட்டதாக எப்படி சொல்கிறார்.. மேலும் 1 கோடியே 40 லட்சம் அந்த கணக்கில் போடப்பட்டுள்ளதாக எப்படி அவர்கள் செய்தியில் போட முடிந்தது? அதற்குரிய ஆதாரம் அவர்களிடம் உள்ளதா? இல்லை ஏனெனில், அந்த கணக்கிலக்கத்தில் உள்ள காசு சம்பந்தமாக நீங்கள் சாவகச்சேரி cid போளிசரிடமோ அல்லது commercial bank மனகேரிடம் விசாரித்து பாருங்கள் உண்மை என்னவென்று உங்களுக்கு உங்களுக்கு தெரியவரும்.

4 ) நன்றாக ஆராயாது போட்ட இந்த செய்தியால் இன்று எங்கள் அம்மா, அப்பா ஏன் எங்கள் மொத்த குடும்பமுமே தற்கொலை செய்கிற எண்ணத்தில் மன உளைச்சலில் இருக்கின்றோம். ஒரு செய்தியை போடும்போது எல்லா பக்கமும் விசரித்திருக்கவேண்டும். எங்கள் அம்மா அப்பாவுக்கு எதாவது நடந்தால் அவர்களால் அவங்க உயிரை திருப்பி தர இயலுமா?

5 ) எதாவது தவறு நடந்திருந்தால் முதலில் வழக்கு போட்டு அதன்மூலம் குற்றம் நிருபிக்கப்பட்டவுடன் செய்தியை பிரசுரிப்பது வேறு விடயம். அனால் அவர்கள் உங்கள் செய்திப்பக்கத்தில் போட்டது சரியாவென சற்று சிந்தித்து பாருங்கள்.

ஒருவரின் தனிப்பட்ட காதல் தோல்விக்காக ஏன் அவர் இந்த செய்தியை போட்டிருக்ககூடாது. தனிப்பட்ட அவரின் பிரச்னையை அவர் இப்படி கேவலமான முறையில் செய்தியாக பயன்படுத்தி எங்கள் குடும்பத்தினை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார்.

எனவே நீங்களாவது இந்த செய்தியை நன்கு விசாரித்து வெளிவிடவேண்டுமேன்று கேட்டு கொள்கிறேன்.

Kandiah Sutharsan

sutharszan@gmail.com

குறிப்பு :- கந்தையா தர்சிகா தற்போது கொழும்பில் உள்ள ஊடகம் ஒன்றில் பணிபுரியும் இம் மோசடிகளின் மூலகாரமானவரைத் திருமணம் செய்துள்ளதாகவும் இம் மோசடிகளில் இவருடைய தாய் தந்தையுட்பட்ட குடும்பத்தினருக்கு எந்த வித தொடர்புகளும் இல்லை என்றும் தெரியவருகின்றது. ஆனால் தர்சிகாவினால் ஏமாற்றப்பட்ட 63 வயது சுவிஸ்தமிழர் மற்றும் ஏனையோரது விபரங்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன் இப் பெண் உண்டியல் மூலமே பெருமளவு பணத்தை வாரிச் சுருட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தனி ஒருவரை ஏமாற்றவில்லை என்பதையும் பல்வேறு புலம் பெயர் தமிழர்களை ஏமாற்றியுள்ளதும் ஆதாரங்களுடன் தெரியவருகின்றது.

கொழும்பில் தங்கை என்ன செய்கின்றார்.... எவ்வாறு வங்கிகளில் இவ்வாறு தங்கையினால் கொடுக்கல் வாங்குதல்கள் நடைபெற்றுள்ளது என்பது பற்றி அறியாது இருந்த இவ்வாறான அண்ணன்கள் மற்றும் குடும்பங்களுக்கு இது ஓர் படிப்பினையாக அமையும்.

http://newjaffna.com/fullview.php?id=NDUwOA==

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மொத்த குடும்பமுமே தற்கொலை செய்கிற எண்ணத்தில் - தர்ஷனாவின் அண்ணா

-----

18 வயதுக்கு மேற்பட்ட அந்த யுவதி செய்த மோசடியால் அந்தக் குடும்பமே... பாதிக்கப் பட்டது கவலையான விடயம்.

இதற்கு தற்கொலை தீர்வாக முடியாது. தலையில் தண்ணியை தெளித்து, அந்த யுவதியை கை கழுவி விடுவதே.... அந்தக் குடும்பத்தினருக்கு நிம்மதியை கொடுக்கும்.

தாயகத்தில் சாதனை படைத்த பெண்கள் மத்தியில் இப்படியும் சிலரா?

  • கருத்துக்கள உறவுகள்

அந்த 63 வயது சுவிஸ் தமிழன் சத்தியமாய் நான் இல்லை :lol::lol:

அந்த 63 வயது சுவிஸ் தமிழன் சத்தியமாய் நான் இல்லை :lol::lol:

sinnappuuu? or mugathaar?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பவெல்லாம் என்னென்ன சுத்துமாத்துக்கள்???????ஆரை இப்ப நம்புறதெண்டேதெரியேல்லை?

விஞ்ஞானம் முன்னேறமுன்னேற..........விண்ணாணங்களும்முன்னேறிக்கொண்டுவரத்தொடங்கீட்டுது........ஆளுக்கொரு கொப்பியூட்டர் அதுக்கொரு இன்ரநெற் லைன்.......மிச்சம் சொல்லியே தெரியோணும்?

அருமையான ஒரு தொலைத்தொடர்பு கண்டுபிடிப்பு.........தேவையில்லாத விசயங்களுக்கு பறிபோறதை நினைக்க கவலையாய்கிடக்கு :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.