Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உமாவுடனான சில நினைவுப்பதிவுகள்(அரசியல் தாண்டிய)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதை மரியாதையாச் சொன்னாலும் கேக்கிறாங்களில்லை, உப்பிடிச் சொன்னாலும் கேக்கிறாங்களில்ல-தொழில மாத்த இயலாது தானே?

குரங்குகளுடன் அமாந்து அரசியல் பேசும் எம்மை நோகவேண்டும். ஐந்தறிவை வைத்து அந்து அப்பாவி ஜீவன்கள் எதை புரிய முடியும்?

குரங்குகளுக்கு தெரிந்ததை அவர்கள் செய்கிறார்கள். நாம்தான் அதற்குள் போய் பூமாலையை பிய்க்காதே பிய்க்காதே என்று எங்களை பிய்த்துகொண்டீருக்கிறோம்.

உருப்பாடியான ஒன்றை உருகுலைத்து அதை ரசிப்பது என்பது குரங்குகளின் இயல்பு நிலை.

உருகுலைந்ததை உருப்படியாக்குவது மனித நிலை.

இரண்டிற்கு; இடையில் இடைவெளி என்பது நிறையவுண்டு.

  • Replies 70
  • Views 4.9k
  • Created
  • Last Reply

இந்த ஆண்டில் மிகவும் பாராட்டத்தக்க ஒரு பதிவை[ நகைச்சுவை] திருவாளர் அர்ச்ஜூன் அவர்கள் தந்துள்ளார் பாராட்டுக்கள்.

அப்படியே அந்த சோத்துப்பாசல் கதயையும்,விடியும்வரை காத்திரு கதையயும் கூடப்பதிந்தால் இன்னும் யாழ் களம் சிறப்புப்பெறும் என்று நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தனது சொந்த இயக்க போராளிகளையே சுட்டு புதைத்தவர் திருவாளர் உமாமகேஸ்வரன் அவர்கள் மலையகத்தில் தோன்டிய புதைகளிகளின் கதைகள் புளட்டை சார்ந்தவர்கள் மட்டிலுமே தங்கிநிற்கிறது தமது இயக்க இரகசியம் என்று திருவாளரை போட்டு தள்ளிவிட்டு இப்போதும் மௌனமாக இருக்கிறார்கள். புலிகளோடு இணைந்திருந்து ஊர்மிளாவோடு கசமுசா செய்து பல போராளிகளால் வெறுக்கபட்ட போதும் பிரபாகரன் அவர்கள் அவரை மன்னித்து போகும்படி பணித்தார். பிரபாகரனே அவரை பாதுகாப்பா ஈழத்திற்கும் அனுப்பி வைத்தார் அப்படியே வவுனியா வந்துசேர்ந்தவர் பிரபாகரனுக்கு ஒரு இயக்கம் என்றால் எனக்கும் ஒரு இயக்கம் என்று உருவாக்கியதே புளட் ஆகும். அதில் துர்ரதிஸ்டவசமாக சில நல்லவர்களும் சோந்துகொண்டு தமக்கு தாமே புதைகுழி கிண்டினார்கள். மற்றையபடி தண்ணியடிக்கலாம் ஓசியிலே சிகரட் பீடி அடிக்கலாம் என்று சேர்ந்தவர்கள்தான் பெரும்பாண்மை. இளைஞர்களை சேர்த்து தனியாக விடுவதா என்று நினைத்தார்களோ தெரியாது பெண்களையும் சேர்த்து இந்தியாவிற்கு அழைத்து சென்று எந்த முன் ஏற்பாடும் இல்லாது கொண்டு சென்ற பெண்களை அனாதைகளாக விட்டார்கள் அப்படி விட்டவர்களை பின்பு புலிகள் அழைத்துவந்து அடேல் அன்ரன் பாலசிங்கம் அவருடன் தங்கவைத்துவிட்டு என்ன செய்வது என்று சிந்தித்தே பின்பு மகளிர் படையணியையும் உருவாக்கலாம் என்று ஒரு கட்டமைப்பை உருவாக்கி சோதியாவின் தலமையில் ஒரு படையணியை சுதந்திர பறவைகள் எனும் பெயரில் உருவாக்கினார்கள். இதன் ஆரம்ப கால உறுப்பினர்கள் 80வீதமானவர்கள் ஈப்பி புளட் போன்ற இயக்கங்களால் சேர்க்கபட்டு இந்தியாவில் கைவிடபட்ட பெண்களே.

ஐயா

சும்மா வெளியில் நின்று கொண்டு அதைச்செய்தோம் இதைச்செய்தோம் புலிகள் எல்லாவற்றையும் போட்டுடைத்தார்கள் என்ற விசத்தெளிப்புக்களை விடுத்து அவர் இதை எழுதணும் என்று நான் விரும்பியதே மறுத்து ஆதாரங்களை உங்களைப்போன்றோர் கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே.

தயவு செய்து இனியாவது கொஞ்சம் வாய் திறப்போம். பச்சோந்திகள் பரப்புரைகளை களைவோம். நன்றி.

  • தொடங்கியவர்

வெள்ளி பின்னேரம் காம்பிங் போய்விட்டு இப்போதுதான் திரும்பினேன்.இரண்டு நாட்கள் பறந்துவிட்டது.30 பேர் போனோம் முழுக்க அரசியல் இலக்கியம் சம்பந்தபட்டவர்கள்.அரசியல் விவாதம் தவிர்க்க படவெண்டும் என்ற கொண்டிசனையும் மீறி இரண்டு இரவுகளும் ஒரே அரசியல்தான்.

பின்னோட்டங்கள் விட்ட அனைவருக்கும் நன்றி.

தலையங்கத்திலேயே அரசியலற்ற பதிவு என போட்டிருந்தேன்.நடந்த சில சம்பவங்களை ஞாபகத்தில் உள்ளதை நிர்வாகம் அனுமதி தந்தால் மாத்திரம் பதிவோம் என நினைத்தேன்.கோர்வையாக அரசியலற்று எழுதுதுவதால் கொஞ்சம் குளறுபட்டு போய்விட்டது.

யாழுக்கு மாற்றுக்கருத்துக்கள் புதிதாக இருக்கலாம் ஆனால் வேறு தளங்களில் ஏற்கனவே புளொட்டின் வரலாறு எழுதப்பட்டுவிட்டது.நானும் அதில் எழுதினேன் .இப்போதும் ரயாகரனின் இணையத்தில் நேசன் எழுதுகின்றார்.

முடிந்தவரை கொஞ்சம் தெளிவாக எழுத முயலுகின்றேன்.இன்றும் கனவுலகில் இருப்பவர்களுக்கு,ஒரு பக்க சார்பு கதைகளை காலம் காலமாக கேட்டவர்களுக்கு உண்மைகள் கசக்கத்தான் செய்யும்.

பழையதை எல்லாம் விட்டுபுட்டு , இனி நடக்குறத பார்க்கணும்னு ஒரு திரியில போன கிழமை நீங்க சொன்னதா ஞாபகம்! ஆமா எப்போ பாரு அங்க போனேன் இங்க போனேன் எங்கிறீங்களே, வீட்லயே இருக்கிறதில்லையா? வேலைக்கு போறதில்லையா? வீட்டு வாடகை எப்பிடி கொடுக்கிறீங்க, வாழ்க்கை செலவை எப்பிடி சமாளிக்கிறீங்க?

  • தொடங்கியவர்

அறிவிலி-போன கிழமை நடந்த கியூமன் ரயிட்ஸ் கூட்டத்திற்கும் போய்வந்தேன்.முடிந்தவரை எம்மால் இயன்றவரை ஏதோ செய்துகொண்டும் நடந்து முடிந்ததை மட்டும் கதைத்துகொண்டிருக்க கூடாதே ஒழிய நடந்தவைகளை மீளாய்வதில் எந்த தப்புமில்லை.

வார இறுதி வருவதே மனிதன் ஓய்வெடுக்க.மோட்கேச் கட்டி முடித்துவிடவேண்டும் என 2,3 வேலைகள் செய்ய தொடங்க மனுசி நித்தியானத்தாவைடம் தான் போய் நிற்கும்.

காம்பிங் போனவர்கள்.-- திருமாவளவன்(பிரான்ஸ் கலைசெல்வனின் சகோதரர்).சக்கரவர்த்தி(மிக சிறந்த கவிஞர்,நாடக நடிகர்)சுமதி ரூபன்(நாடகம்,குறும் படம்)வகைறை ரவி ( ஜ்ங்கரநேசனின் சகோதரர்,பத்திரிகையாளர்) டீ.சே.தமிழன்.(எழுத்தாளர்),மீரா பாரதி,(யோகா ஆசிரியர்,அரசியல் விமர்சகர்)தர்சன் ( நாடக நடிகர்),மித்திரன்(சகலகலா வல்லவர்).அனைவரும் குடும்பங்களுடனேயே போனோம்.

நடந்தவைகளை மீளாய்வது புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்காதா? அல்லது நடந்தவைகளை மீண்டும் மீண்டும் ...நீங்கள் பேசுவது , தொடர்ந்து... ஒரு மொழி பேசும் இனத்துக்கிடைல வன்மம் வளர்க்கவா?

பழையதை பேசிக் காலம் கடத்துவதில் ஒன்றும் இல்லை ஆனால் மீண்டும் தவறுகள் நடைபெறக்கூடாது..........................

இந்த தலைப்பில் நான் ஒரு கருத்து எழுதினேன் அதை நீக்கி விட்டார்கள்( அதில் எனக்கு வருத்தமும் இல்லை ஏன் எனில் எனக்கும் அந்த கருத்தை எழுதும் போது மனதில் சங்கடமாக இருந்த்து.) ஆனால் அந்த கருத்தை நான் எழுதியது மேலே சிலரின் நக்கலுக்கும் நையாண்டிகளுக்கும் தான் எழுதினேன். இன்று இல்லை என்றைக்கும் இந்த ஆமா போடும் கூட்டம் கருணா, டக்கிளைசை விட மோசமான கூட்டம்....

நான் வெளிநாடுவரும் வரை புலிகளின் கட்டுப்பட்டு பகுதியில் தான் வாழ்ந்தேன் வளர்த்தேன். புலிகள் ஒருவரை சுட்டால் அவர் துரோகி. காட்டி கொடுப்பவர் எந்தை தவிர வேற நினைப்பதில்லை.

அதே போல உமாமகேஸ்வரனை பற்றியும்சரி . சிறிசபாரத்தினததையும் சரி புலிகள் சொன்னதுக்காகவே தமிழர்துரோகிகளாகவே நினைத்தும் வளர்த்தேன்,( இப்பவும் அதே என்னம் தான்..

ஆனால் தற்ப்போது தான் போராட்டவழிமுறை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தமிழ்ச் சமுகம் வந்துவிட்டது. இப்ப இறந்தவன் பக்க வரலாற்றையும் தெரிந்து கொள்ளுவோமே????????????????

உமா மகேஸ்வரனைப் பற்றி தெரிந்து கொள்வதால்.. தமிழர்களின் போராட்டம் யுக்தி மாற்றத்திற்கு... அது எந்த வகையில் உதவும் என்று சொன்னால் நல்லா இருக்கும்...?????!

உமா மகேஸ்வரன்.. வழங்கப்பட்ட பல அரிய வாய்ப்புக்களை தவறவிட்ட ஒரு தற் புகழ் விரும்பி. இறுதியில் அவரது குழுவினராலேயே (மாணிக்கதாசன் குழுவினர்) சுட்டும் கொல்லப்பட்டார். ஆனால் பழி இன்னமும் புலிகள் மீது. ஏய்யா.. உங்களுக்கு புலியை குறை சொல்லித் தானா.. இன்னமும் சிங்கள.. இந்திய சார்ப்பு.. மாற்று தமிழ் ஆயுதக் கும்பல்களின் உறுப்பினர்களின் புகழைப் பாட வேண்டி இருக்குது.

இவர்கள் உண்மையில்.... மக்களுக்காக உழைச்சிருந்தா.. மக்களே இவர்களின் புகழைச் சொல்வாங்க. இது தனக்காக.. சுயநலனத்துக்காக உழைச்ச கூட்டம்.. எப்படி மக்கள் இவர்களைப் பற்றிய அறிய ஆர்வப்படுவினம்.

இவை.. தேவையில்லாத .. ஒரு வித பிரயோசனமும் இல்லாத திணிப்புக்கள்.. என்பதாகவே தெரிகிறது. அர்ஜீன் அதையே இங்கு பல தலைப்புக்களிலும் செய்து வருகிறார். புலிகள் பற்றியது எல்லாம் அவர் பார்வையில் கற்பனை.. கனவு..! உமா மகேஸ்வரன் ஊர்மிளா தொடங்கி உள்ள பெட்டையளுக்காக சண்டை போட்டது மட்டும் அவருக்கு நினைவு.. வரலாறு. அதுக்காகத் தானே தமிழ் மக்கள் உவையை ஆயுதம் தூக்கச் சொன்னவை.

இவர்களைப் பற்றி எழுதுவதிலும்.. ராஜீவ்.. ஜே ஆரைப் பற்றி எழுதினாலாவது... ஏதாவது புதிய வழிமுறைகள் குறித்து யோசிக்க முடியும்.

Edited by nedukkalapoovan

சரி உமாமகேஸ்வரன் வேண்டாம். போராட்டத்தின் வளர்ச்சியில்லேயே பாதை மாறி அழிந்து விட்டார்.

புலிகளை பற்றி போராடும் வரை விமர்சனம் செய்வது அவர்களின் போராட்டத்தை சிதைப்பதாக இருக்கும் ஆனால் 2009 மே க்கு பின் நாம் ஒருமுறை சரி பார்த்து கொள்ளுவோமா?

இலை இவர்கள் விமர்ச்சனத்துக்கு அப்பாட்பட்டவர்களா?

உணிமை தெரியுமா? புலிகளிம் பல தவறுகளை ஓட்டுக் குழுக்களை விட கூட அல்லது அவர்களை நேஇப்பவர்களுக்கு தான் தெரியும். ஆனால் நாங்களா கண்ணாடி வீட்டில் இருந்து கல்லு எறியக் கூடாது என்ர நோக்கத்தில் தான் இன்று பல்லாயிரம் புலிகளை நேசித்தவர்கள் இருக்குறார்கள். யாழ்களத்தில் உள்ள 4 5 பேரின் கருத்து தான் யாழ்களத்தில் இருப்பவ்பர்களின்கருத்தாக ஒரு பிரமையை ஏற்படுத்தி வைத்து இருக்கு.................

நான் அறிந்த வரையில் மற்ற இயக்கத்தில் இருந்த பல்லாயிரம் பேர் தங்கள் தலமையின் அழிவுகளுக்கு பின் இனி புலிகள் ஆச்சு போராட்டம் ஆச்சு என்று ஒதுங்கியும். வெளியேயும் என்று போய்விட்டார்கள் ( ஒரு சில கடும் ஆதர்வாஅளர்கள் மாற்றுக்க்கருத்து என்ற பெயரில் புலிகளை எதிர்தார்கள்) ஆனால் புலிகள் ஒரு விடையத்தில் பயந்தவர்கள் தெரியுமா? அந்த விடையத்தில் புலிகளை போல ப்யந்த அமைப்பு ஈழத்தில் இல்லை என்று சொல்லாம். முடிந்ததால் அதை கண்டு பிடித்து கருத்து எழுதுங்கள் அதை நீங்கள் கண்டு பிடிக்காது வேற கருத்துக்களை நீங்கள் எழுதுவார்களாக இருந்தால்;??????????? நீங்கள் ஈழ அரசியல் பேசுவது வேஸ்ட்.....

  • தொடங்கியவர்

சிலரின் பின்னோட்டங்களை பார்க்க ஆடறுக்க முதல் என்ற வசனம் தான் ஞாபகம் வருகின்றது.

சுவிஸில் நடந்த வீரமக்கள் தின போஸ்டர் பார்த்துத்தான் நினைவுதினம் ஞாபகம் வந்து இதை எழுத தொடங்கினேன்.

சென்னையில் இருந்த கல்லூரியின் பெயர் ரீ.3.எஸ். தமிழீழ சமூக விஞ்ஞான கல்லூரி.இதில் அனைத்து முகாம்களில் இருந்தும் தெரிவுசெய்யப்பட்டு சமூகம் விஞ்ஞானம் (பொலிடிகல் சயன்ஸ்,உளவியல்,சர்வதேச அரசியல்.) இந்திய பல்கலை கழக விரிவுரையாளர்களாலும்,கொம்னியூஸ்ட் கட்சி உறுப்பினர்களாலும் ஆங்கிலத்தில் விரிவுரைகள் நடாத்தப்பட்டன.கல்யாணசுந்தரம்,பாண்டியன்,சத்தியநாரயணா போன்றோர் கூட வந்தார்கள்.இதை ராஜா நித்தியன் தான் நடாத்திவந்தார்(அவரை பற்றிய பதிவு ஜ்யர் எழுதியிருந்தார்.பிரபா-உமா பிரிவின் பின் இருவரையும் மீண்டும் இருதடவைகள் ஒரே இடத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தியவர்.இவரும் லண்டனில் இருந்துதான் வந்திருந்தார்).இரு வீடுகளில் 30 பேர்வரை தங்கியிருந்தார்கள்.பொறுப்பாளர்களாக நான் இருந்தேன்.இடைக்கிடை கலந்துரையாடல்கள்,பட்டி மன்றங்கள் வைப்போம் உமா,வாசு போன்றோரும் இதில் கலந்துகொள்வார்கள்.பொதுமக்களும் வருவார்கள்.எனது அப்பா கூட ஒருமுறைவந்து எல்லோருடனும் கதைத்துவிட்டு விட்டு சென்றார்.எனது மனைவியும்,தாயாரும் கூட ஒருமுறை வந்திருந்தார்கள்.எனது மாமியார் வீபூதி கொண்டுவந்து உமாவுக்கு பூசி ஒருவருக்க ஒருவர் சண்டை பிடிக்கதையுங்கோ தம்பி எனச்சொன்னார்.அவரின் ஒருமகன் அப்போது அந்த கல்லூரியிலும்,இன்னொருமகன் முகாமிலும் இருந்தார்கள்.இங்குதான் எனக்கு உண்மையில் முழு புளொட்டை பற்றிய விபரங்கள் கிடைத்ததும்,உண்மையான தோழர்கள் கிடைத்ததும் ஆகும்.

உமாவின் இருபக்கங்கள் அப்போதுதான் அறிந்துகொண்டேன்.

அர்ஜுன்,

தெரிந்தவைகளை மறைக்காமல் எழுதுங்கள்.

பல ஆயிரம் திறமையான இளைஞர்களை போராட்டத்திற்கென உள்வாங்கியவர், பாதை மாறக் காரணமென்ன? நெருக்கமாகப் பழகியவர் என்பதால் தெரிந்திருக்குமென நினைக்கிறேன்.

ஒரு சந்தர்ப்பத்தில் புளொட் போராளிகள் மிகவும் வெறுப்படைந்த நிலையில் இருந்தார்கள். பலர் புலிசார்பான மனநிலையிலேயே இருந்தார்கள்.

ஒருமுறை புளொட் இன் நிழல் உலக வேலைகள் செய்து கொண்டிருந்த உமாவுக்கு நெருக்கமான ஒரு பெண்மணி,

'தெரியாமல் இவங்களோட வந்து சேர்ந்திட்டன். தம்பி ஒருவன்தான் நாட்டில ஆமியோட அடிபடுகிறான். இவங்கட போக்கே சரியில்லை' என்று கூறினார்.

இவர் கேகே நகர் போலிஸ் நிலையத்திற்கு அருகில் வசித்தவர். அவரை தெரிந்திருக்குமென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி உமாமகேஸ்வரன் வேண்டாம். போராட்டத்தின் வளர்ச்சியில்லேயே பாதை மாறி அழிந்து விட்டார்.

புலிகளை பற்றி போராடும் வரை விமர்சனம் செய்வது அவர்களின் போராட்டத்தை சிதைப்பதாக இருக்கும் ஆனால் 2009 மே க்கு பின் நாம் ஒருமுறை சரி பார்த்து கொள்ளுவோமா?

இலை இவர்கள் விமர்ச்சனத்துக்கு அப்பாட்பட்டவர்களா?

உணிமை தெரியுமா? புலிகளிம் பல தவறுகளை ஓட்டுக் குழுக்களை விட கூட அல்லது அவர்களை நேஇப்பவர்களுக்கு தான் தெரியும். ஆனால் நாங்களா கண்ணாடி வீட்டில் இருந்து கல்லு எறியக் கூடாது என்ர நோக்கத்தில் தான் இன்று பல்லாயிரம் புலிகளை நேசித்தவர்கள் இருக்குறார்கள். யாழ்களத்தில் உள்ள 4 5 பேரின் கருத்து தான் யாழ்களத்தில் இருப்பவ்பர்களின்கருத்தாக ஒரு பிரமையை ஏற்படுத்தி வைத்து இருக்கு.................

நான் அறிந்த வரையில் மற்ற இயக்கத்தில் இருந்த பல்லாயிரம் பேர் தங்கள் தலமையின் அழிவுகளுக்கு பின் இனி புலிகள் ஆச்சு போராட்டம் ஆச்சு என்று ஒதுங்கியும். வெளியேயும் என்று போய்விட்டார்கள் ( ஒரு சில கடும் ஆதர்வாஅளர்கள் மாற்றுக்க்கருத்து என்ற பெயரில் புலிகளை எதிர்தார்கள்) ஆனால் புலிகள் ஒரு விடையத்தில் பயந்தவர்கள் தெரியுமா? அந்த விடையத்தில் புலிகளை போல ப்யந்த அமைப்பு ஈழத்தில் இல்லை என்று சொல்லாம். முடிந்ததால் அதை கண்டு பிடித்து கருத்து எழுதுங்கள் அதை நீங்கள் கண்டு பிடிக்காது வேற கருத்துக்களை நீங்கள் எழுதுவார்களாக இருந்தால்;??????????? நீங்கள் ஈழ அரசியல் பேசுவது வேஸ்ட்.....

புலிகள் தான் மக்கள். மக்கள் தான் புலிகள். போராட்ட ஆரம்ப காலத்தில் இருந்து விடுதலைப்புலிகளை மக்களில் அநேகர் நேசித்தார்கள். காரணம்.. ஒழுக்கம்.. நேர்மை.. கட்டுக்கோப்பு.. இலட்சியப் பற்று. ஒரு விடுதலை இயக்கத்திற்கு அவசியமான அம்சங்களை விடுதலைப்புலிகள் கொண்டிருந்தமை மக்களுக்கு தங்கள் பிள்ளைகள் அந்த அமைப்பில் சேரவும் போராடவும் வழி செய்து கொடுத்தது. அதன் நிமித்தமே புலிகள் அமைப்பு மாபெரும் அமைப்பாக வளர்ந்தது.

விடுதலைப்புலிகள் சும்மா மற்ற ஆயுதக் கும்பல்களைத் தாக்கி இருந்தாலோ தண்டித்திருந்தாலோ.. மக்கள் அந்த அமைப்பை நிச்சயம் வெறுத்துப் புறக்கணித்திருப்பர். மக்களுக்கு புலிகளின் செயல் குறித்த நேர்மையான பார்வை இருந்தது. அது மட்டுமன்றி மற்றக் குழுக்கள் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாமே மக்களைத் துன்புறுத்தி தாங்கள் வாழ்வதில் குறியாக இருந்தனர். இறுதியில் மக்களின் பூரண வெறுப்பை சந்தித்தனர். இதுதான் யதார்த்தம். இதற்கு மாறான.. யதார்த்ததிற்குப் புறம்பான.. உங்களின் சப்பைக்கட்டுக்களைக் கேட்டு காதே புளித்துவிட்டது.

மேலும் சாவுக்கே அஞ்சாத புலிகள்.. எதற்கோ அஞ்சினராம் என்பது உங்களினதும்.. புலிகளின் இலட்சிய உறுதி முன் தோற்று ஓடியவர்களினதும் மகா கற்பனை. புலிகளின் வெற்றிக்கு அவர்களின் தியாகம்.. நேர்மை.. இலட்சிய உறுதி... ஒழுக்கம்.. கட்டுக்கோப்பு இவையே முக்கிய காரணம். மாற்று ஆயுதக் குழுக்கள் இவற்றில் மிகப் பலவீனமாக இருந்ததால்.. அவற்றின் தலைமைகள் தவறான வழியில் பயணித்ததால் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டார்கள். எனியும் அவர்கள் மக்களால் புறக்கணிக்கப்படவே செய்வார்கள்.. காரணம்.. மக்களில் பெரும்பான்மையானோர்.. இவர்களால் எதிரிகளினதை விட அதிக துன்பத்தை சந்தித்து நிற்கிறார்கள்.

இந்த இடத்தில் உமா மகேஸ்வரன் போன்றவர்களைப் பற்றி மக்களில் அநேகர் இதய சுத்தியோடு அறிய விரும்புவதாகவும் இல்லை. காரணம்.. மக்களுக்கு தெரியும் அவர்கள் என்ன செய்தார்கள் என்று. புலிகள் சொல்லி அல்ல.. உமா மகேவரன் போன்றவர்கள் செய்தவற்றை மக்கள் நன்கு அறிவர். புலிகளை முன் வைத்து உமா மகேஸ்வரனையோ எவரையுமோ மக்கள் விரும்பும் தலைவர்களாக நிச்சயம் சித்தரிக்க முடியாது. காரணம் மக்கள் அதனை ஏற்க எப்போதும் தயாராக இல்லை..!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இங்கு எங்களுடன் ஒரு மிக சிறந்த தலைவாராக இயக்கத்தை நடாத்திவருபவர் உளவுப்பிரிவு என்ற பெயரில் தனது பாதுக்காப்பிற்காக ஒரு அமைப்பை வைத்திருந்தார்.அவர்கள் தான் தனது பாதுகாப்பிற்கு நம்பகமானவர்கள் என முழுமையாக நம்பினார் அவர்கள் என்ன செய்தாலும் அதை வாய்மூடி,கண்மூடி தெரியாதுபோல் இருந்தார்.இங்குதான் புளொட்டில் ஒரு பெரிய இடைவெளி உருவாகிவிட்டது.இப்படியே தொடர்ந்து இருக்க முடியாது என உணர்ந்ததில் சிலர் விட்டுவிட்டு ஓடவும்,சிலர் எதிர்ப்பு குரல் எழுப்பவும்,பலர் பயத்தில் மவுனித்து சந்தர்ப்பம் வரும் போது நாட்டிற்கு போனால் காணும் என்றும் இருந்தார்கள்.

மாற்றம் கொண்டுவரப்படவேண்டும் என்பவர்களுடன் நானும் சேர்ந்துகொண்டேன்.எனக்கு ஏனோ அங்கு பயம் இருக்கவில்லை ஆனால் பலர் என்னை அண்ணை நீங்கள் முகாம்களில் இருக்கவில்லை வாயை திறந்தவன் பட்டபாடு எங்களுக்கு தெரியும் என்றார்கள்.

இருந்தும் அடுத்த முறை உமாவை சந்தித்த போது தோழர்களின் மனநிலைச்சொன்னேன்.ஆரம்பத்தில் சில பிழைகள் நடந்துவிட்டதாகவும் அதையே திரும்ப திரும்ப கதைத்துக்கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை.உமக்கென்று சில பொறுப்புக்கள் தந்திருக்கு அதைவிட்டு ஏன் தேவையில்லாத விடயங்களில் தலையிடுகின்றீர் என்ற தொனியில் கதைத்தார்.அப்போது அகதிகளுக்கான அமைப்புக்கும் சில வேலைகள் செய்துகொண்டிருந்தேன்.நான் கேட்டேன் கழகமே பிழையாக போகின்றதென்றால் பின் நான் எனது வேலையை செய்து என்ன பிரயோசனம் என கேட்டேன்.உம்மை கேடவேண்டாம் எனச்சொல்லவில்லை.அங்கேயே நிற்க வேண்டாம் எமக்கு இருக்கும் அரசியல் அழுத்தங்கள் உமக்கும் தெரியும் இப்போ எப்படி அடுத்த கட்டத்திற்கு போகவேண்டும் என்பதுதான் பெரிய பிரச்சனை.காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் .உங்கள் விருப்பத்திற்கு தான் முழுப்பொறுப்பாளர்களையுமே மாற்றிவிட்டேனே இனியும் என்ன வேண்டும் என்றார்.உங்கள் என்று யாரை குறிக்கின்றார் எனவும் அதில் என்னையும் சேர்த்து இருப்பது நடப்பது எல்லாம் உடனுக்குடன் அறிந்தே வைத்திருக்கின்றார் என புரிந்துகொண்டேன்.

தொடரும்.

இனிய உறவுகளே எதையோ திரும்பிப்பார்ப்பதை விட்டு விட்டு எதையெதையோ திரும்பிப்பார்க்கின்றோம். அதனால்தானோ எம் துன்பத்திலிருந்து நாம் இன்னும் மீளவில்லை போலும்? நான் உங்களிடம் கேட்பது இவை தான். இவற்றிற்கு முதலில் விடை காண்போம்.

35 வருடங்களிற்கு முன் ஈழத்தமிழர்களின் நிலை எவ்வாறு இருந்தது.

புளட். ஈபிஅர் எல் எவ், விடுதலைப்புலிகள்..........உட்பட பல தமிழமைப்புகள் ஏன் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்தனஅதன் பின் எப்படியான வழியில் எம் விடுதலை நோக்கிய பயணம் அமைந்தது அல்லது நகர்த்தப்பட்டது.

அதன்பின் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது என்று உலகமும். சிங்கள அரசும் ஏன் கூறி நின்றது.

35 வருடத்தின் முன் அன்று எமக்கு ஏற்பட்ட அல்லது எம் சமூகம் எதிர்கொண்ட பிரச்சனைகள் யாவும் தீர்க்கப்பட்டு இன்று சுமூக நிலை உருவாகி விட்டதா.இந்த சுருக்கமான கேள்விகளுக்கு முதலில் விடை கண்டு முதலில் அல்லல்படும் எம் உறவுகளின் இடுக்கண் தீர்க்க முயற்சிப்போம்.அதன் பின் ஒவ்வொரு வரலாறாக யாரைப்பற்றியும் பதிவுகளை வரைவோம்.இப்பொழுது எதை எழுதவேண்டும் என்பதை மட்டும் சிந்திது எழுதுதலே காலத்தின் தேவையாகும்

நன்றி வணக்கம்.

ஆளாளுக்கு முந்தைய போராட்டத்தை வைத்து, தங்களின் தேவைகேற்ப கதை, கவிதைகள், கட்டுரைகள், புனை கதைகள் வரைவது இன்றைய காலத்தின் தேவை.

பாதிக்கப்பட்ட போராளிகளைப் பற்றி பேசுவதையோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலத்தில் சேர்த்த பணம் போய் சேர்வதைப் பற்றியோ இங்கு யாரும் கதைப்பதில்லை. கதைத்தாலும் அடக்கப்படுகிறார்கள். எல்லோருக்கும் தங்கள் சொந்தப் பிள்ளைகளின் வாழ்வின் மீதே அக்கறை.

இவற்றைப் பற்றி யாழ் களத்தில் யாரும் விவாதிக்க விரும்புவதில்லை. கருத்தாளர்களால் தவிர்க்கப்படும் ஒரு விடயம் இது. வெறும் பழங்கதை பேசிப் பிரயோசனமில்லை.

இணையத்தில் எல்லோரும் தேசியவாதிகள்தான்.

புலிகள் தான் மக்கள். மக்கள் தான் புலிகள். போராட்ட ஆரம்ப காலத்தில் இருந்து விடுதலைப்புலிகளை மக்களில் அநேகர் நேசித்தார்கள். காரணம்.. ஒழுக்கம்.. நேர்மை.. கட்டுக்கோப்பு.. இலட்சியப் பற்று. ஒரு விடுதலை இயக்கத்திற்கு அவசியமான அம்சங்களை விடுதலைப்புலிகள் கொண்டிருந்தமை மக்களுக்கு தங்கள் பிள்ளைகள் அந்த அமைப்பில் சேரவும் போராடவும் வழி செய்து கொடுத்தது. அதன் நிமித்தமே புலிகள் அமைப்பு மாபெரும் அமைப்பாக வளர்ந்தது.

விடுதலைப்புலிகள் சும்மா மற்ற ஆயுதக் கும்பல்களைத் தாக்கி இருந்தாலோ தண்டித்திருந்தாலோ.. மக்கள் அந்த அமைப்பை நிச்சயம் வெறுத்துப் புறக்கணித்திருப்பர். மக்களுக்கு புலிகளின் செயல் குறித்த நேர்மையான பார்வை இருந்தது. அது மட்டுமன்றி மற்றக் குழுக்கள் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாமே மக்களைத் துன்புறுத்தி தாங்கள் வாழ்வதில் குறியாக இருந்தனர். இறுதியில் மக்களின் பூரண வெறுப்பை சந்தித்தனர். இதுதான் யதார்த்தம். இதற்கு மாறான.. யதார்த்ததிற்குப் புறம்பான.. உங்களின் சப்பைக்கட்டுக்களைக் கேட்டு காதே புளித்துவிட்டது.

மேலும் சாவுக்கே அஞ்சாத புலிகள்.. எதற்கோ அஞ்சினராம் என்பது உங்களினதும்.. புலிகளின் இலட்சிய உறுதி முன் தோற்று ஓடியவர்களினதும் மகா கற்பனை. புலிகளின் வெற்றிக்கு அவர்களின் தியாகம்.. நேர்மை.. இலட்சிய உறுதி... ஒழுக்கம்.. கட்டுக்கோப்பு இவையே முக்கிய காரணம். மாற்று ஆயுதக் குழுக்கள் இவற்றில் மிகப் பலவீனமாக இருந்ததால்.. அவற்றின் தலைமைகள் தவறான வழியில் பயணித்ததால் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டார்கள். எனியும் அவர்கள் மக்களால் புறக்கணிக்கப்படவே செய்வார்கள்.. காரணம்.. மக்களில் பெரும்பான்மையானோர்.. இவர்களால் எதிரிகளினதை விட அதிக துன்பத்தை சந்தித்து நிற்கிறார்கள்.

இந்த இடத்தில் உமா மகேஸ்வரன் போன்றவர்களைப் பற்றி மக்களில் அநேகர் இதய சுத்தியோடு அறிய விரும்புவதாகவும் இல்லை. காரணம்.. மக்களுக்கு தெரியும் அவர்கள் என்ன செய்தார்கள் என்று. புலிகள் சொல்லி அல்ல.. உமா மகேவரன் போன்றவர்கள் செய்தவற்றை மக்கள் நன்கு அறிவர். புலிகளை முன் வைத்து உமா மகேஸ்வரனையோ எவரையுமோ மக்கள் விரும்பும் தலைவர்களாக நிச்சயம் சித்தரிக்க முடியாது. காரணம் மக்கள் அதனை ஏற்க எப்போதும் தயாராக இல்லை..!

புலிகள் பற்றிய உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி. இனி எந்த பகுதியிலும் உங்களை போன்ற புத்தஜீவிகளுடன் அரசியல் பேசுவதில் பலன் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பற்றிய உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி. இனி எந்த பகுதியிலும் உங்களை போன்ற புத்தஜீவிகளுடன் அரசியல் பேசுவதில் பலன் இருக்காது.

அப்ப இவ்வளவு நேரமும் நீங்கள் பேசியது அரசியலா??

அதுதான் இது போரடிக்கும் என்று புலிகள் செய்யவில்லை போலும்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அர்ஜீன் .........................

அப்ப இவ்வளவு நேரமும் நீங்கள் பேசியது அரசியலா??

அதுதான் இது போரடிக்கும் என்று புலிகள் செய்யவில்லை போலும்

உண்மை தான் தெரியாத ஒன்றை அவர்கள் செய்வதில்லை........... உங்களை போன்ற கடும் ஆதரவாளர்களால் பாதிக்கபட்டது கப்பலோட்டியும் நம்பி கப்பலில் ஏறியவர்களும். ஆனால் கப்பல் இன்னும் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது.

சுத்திவளைச்சு பழியை கொண்டுவந்து எங்களிலே போடுங்கோ................... இது ஒன்றும் புதியதல்ல கருத்தெழுதி ஆர்ப்பாட்டம் செய்ய.

ஆமா பழிச்சொல்லை தாங்க முடியாது தீக்குளிக்கிற முடிவுக்கு போகவேண்டாம். ஏன் எனில் தற்ப்போது தேசியம் வாய்யளவில் இருக்கிறது அதுவும் இல்லாமல் போடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோத்து பாசல் என்று அழியாத பெயர் வர அமைந்த முதல் காரணத்தை அறிய ஆவலாக இருக்கிறேன், முதலில் யாரின் சிந்தனையில் இந்த கருத்து உதித்தது? இதுபற்றி அந்த அமைப்பின் ஒரு அங்கத்தவன் என்ற முறையில் உங்களது கருத்து என்ன? உங்களது காலத்திலேயே அந்த பெயர் வந்து விட்டதா? அந்த பெயர் வந்த கால எல்லை எது?

Edited by சித்தன்

ஸேம் பிளட்...

என்ன து சோத்துப் பாசல் பற்றி எழுதச் சொன்னதும் அர்ஜீனைக் காணோம்? :D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.