Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம்

வெள்ளிக்கிழமை, ஜூலை 15, 2011, 18:39 [iST]

நடிப்பு - விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர், பேபி சாரா

பாடல்கள் - நா முத்துக்குமார்

இசை - ஜீவி பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு - நீரவ்ஷா

எடிட்டிங் - ஆண்டனி

தயாரிப்பு - எம் சிந்தாமணி & ரோனி ஸ்க்ரூவாலா

எழுத்து - இயக்கம் - விஜய்

கண்களைவிட்டு அகல மறுக்கும் இயற்கை காட்சிகள், மனதை வருடும் இசை, எந்த இடத்திலும் இயல்பு மீறாத நடிகர்கள், இறுதிக் காட்சி முடிந்த பிறகும் இருக்கையோடு கட்டிப் போடும் திரைக்கதை, மனதின் நெகிழ்ச்சியை கண்களில் வழிய வைக்கும் உயிர்ப்பான இயக்கம்...

-நாம் பார்ப்பது தமிழ் சினிமாதானா என்று ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, தெய்வத் திருமகள் படம் முடிந்ததும்.

ஹாட்ஸ் ஆஃப் விஜய்... . படத்துக்குப் படம் அதிகரிக்கும் சினிமா மீதான உங்கள் காதலை, ரசிகர்களுக்கு நல்ல விஷயங்களை மட்டுமே தர வேண்டும் என்ற உங்கள் வைராக்கியத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

'ஐ யாம் சாம் என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் இந்த தெய்வத் திருமகள் என்றாலும், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படம். வக்கிர அழுக்கும் மசாலா தூசும் நிறைந்த கோடம்பாக்கத்தில் பொலிவுறத் துடைத்தெடுத்து வந்த ரவிவர்மா ஓவியம் மாதிரி அத்தனை நேர்த்தி இந்தப் படத்தில்.

மனவளர்ச்சி குன்றிய கிருஷ்ணா (விக்ரம்) வுக்கும், அவரது காதல் மனைவிக்கும் பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்தக் குழந்தை பிறக்கும்போதே தாய் இறந்துவிட, மகளை வளர்க்கும் பொறுப்பு மனதளவில் குழந்தையாகவே உள்ள விக்ரமுக்கு. நிலா எனப் பெயரிட்டு வளர்க்கிறார்.

மகள் பள்ளி செல்லும் போது வருகிறது பிரச்சினை. ஒருநாள் திடீரென்று அந்த செல்ல மகளை கிருஷ்ணாவின் பணக்கார மாமனார் தூக்கிக் கொண்டு போய்விடுகிறார். மனவளர்ச்சி குன்றியவனுடன் குழந்தையை விட முடியாது என நியாயம் பேசுகிறார்.

வழக்கறிஞர் அனுராதா துணையுடன் நீதிமன்றம் போகிறான் கிருஷ்ணா. மகளைப் பார்க்க முடியாமல் தவி்க்கிறான். இந்த பாசப் போராட்டத்திலும் சட்ட யுத்தத்திலும் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை நெகிழ வைக்கும் விதமாய் சொல்லியிருக்கிறார் விஜய்.

தமிழில் இதற்கு முன் இதே மாதிரி பெற்றால்தான் பிள்ளையா, சின்னக் கண்ணம்மா என மிகச் சில படங்கள் இப்படி வந்திருந்தாலும், இந்தப் படம் அவற்றிலிருந்து ரொம்பவே வித்தியாசப்படுகிறது. காரணம், கதையின் நாயகன்.

மனப் பிறழ்வு (autism) நோயால் பாதிக்கப்பட்ட தந்தையாக விக்ரம். இவரது நடிப்பை வர்ணிப்பது, 'இனிப்பு இனிப்பாக இருக்கிறது' என்பதைப் போன்றதுதான். தனது அடுத்த பரிமாணத்தை கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தந்திருக்கிறார் மனிதர். இந்தக் காட்சி, அந்தக் காட்சி என பாகுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு அசத்தியிருக்கிறார். நடிப்பு ராட்சஸன்!!

இவருக்கு அடுத்து நடிப்பில் இதயத்தைத் திருடுவது குழந்தை சாரா. அழகும் விவேகமும் நிறைந்த இந்தக் குழந்தை உண்மையிலேயே தெய்வத் திருமகள்தான் போங்கள்!

அனுஷ்காவுக்கு அருமையான வாய்ப்பு இது. அவரும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

குறிப்பிடத்தக்க இன்னொருவர் நம்ம சந்தானம். ஒரு வசனம் கூட எல்லைமீறாத அளவுக்கு அவரை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் விஜய்.

குழந்தையின் சித்தியாக வருகிறார் அமலா பால். அழகாக வந்து போகிறார். எம்எஸ் பாஸ்கர், நந்தகுமாராக வரும் கிஷோர், சச்சின் கெடேகர், குறிப்பாக நாசர் என அனைவருமே உணர்ந்து நடித்துள்ளனர்.

நீதிமன்றக் காட்சிகள் வெகு யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. கடைசி காட்சியில் நாசரின் முடிவான பதிலுக்காக பக்பக் இதயத்தோடு நீதிபதியே காத்திருக்க, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அப்பாவும் மகளும் சைகையால் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் காட்சியில் அழாத கண்களில் கண்ணீர் வற்றிவிட்டதென்று அர்த்தம்!

ஜீவி பிரகாஷின் இசை உண்மையிலேயே பிரமாதம். இப்போதுதான் அவர் காட்சிகளை உணர்ந்து இசை தருகிறார். தந்தை பாடும் தாலாட்டில் இசையும் முத்துகுமாரின் வரிகளும் அற்புதம். அந்த கதை சொல்லும் பாடலை படமாக்கிய விதம், விஜய்க்குள் இருக்கும் சூப்பர் ஆக்ஷன் பட ஆர்வத்தைக் காட்டுகிறது.

விஜய்யின் இன்னொரு வலது கரமாக நீரவ்ஷா. ஏசி இல்லாத தியேட்டரில் கூட ஊட்டியின் குளிரை வரவழைத்துவிடுகிறார் நீரவ்.

படத்தின் மைனஸ் என்று பார்த்தால்.... காட்சிகள் மெதுவாக நகர்வது, முதல் பாதியில் வரும் நீளமான சில காட்சிகள். ஆனால் முதல் சில நிமிடங்களிலேயே படம் பார்க்கும் ரசிகனை கதைக்குள் ஈர்த்துவிடுகிறார் விஜய். அதன்பிறகு அந்த ரசிகன் எழுந்திருப்பது 'எ பிலிம் பை விஜய்' என்ற எழுத்துக்கள் ஒளிரும்போதுதான்.

அந்தக் காட்சியில் அத்தனை பேரும் பேதமின்றி கைதட்டியது, விஜய்யின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.

கமர்ஷியல், க்ளாஸிக் என்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி பார்த்து அனுபவிக்க வேண்டிய படம்!

http://thatstamil.oneindia.in/movies/review/2011/07/15-deiva-thirumagal-movie-review-aid0136.html

  • Replies 50
  • Views 5k
  • Created
  • Last Reply

நேற்று இரவு இந்தப் படத்தினை தியேட்டர் சென்று பார்த்தேன். மிகவும் அழகான அருமையான படம். இரண்டு மூன்று இடங்களில் கண்ணீரை வரவழைக்கும் தந்தை மகள் காட்சிகள். மிகவும் ரம்மியமான ஒளித்தொகுப்பு (கமரா), கவிதைத்தனமான படத்தின் முடிவு என்று படம் அருமையாக இருக்கின்றது. இடையில் கதை கொஞ்சம் மெதுவாக போவதை தவிர குறை ஒன்றும் சொல்ல முடியாத நல்ல படம்.

விக்ரமின் நடிப்ப மிக அருமை, அத்துடன் சின்ன பெண் பிள்ளையின் நடிப்பும் கவிதை

இப்படம் I am Sam படத்தின் கொப்பி என்று சிலர் சொல்கின்றனர். நான் I am sam பார்க்கவில்லை என்பதால் இப் படம் புதிய படமாக இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிரம் இப்படியான பாத்திரங்களில் பின்னுவார் (ஜுஜுபி) என்று மட்டும் படம் பார்க்காமலே சொல்லாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு படம்டா சாமி! தமிழ் சினிமாவில மாற்றம் தேவைன்னு நினைக்குற எல்லாரும் கண்டிப்பா பார்க்கணும்! தியேட்டர்ல உடனே பார்க்க முடியாதவங்க இங்கே இப்பவே பார்க்கலாம்! http://firstreel.blogspot.com/2011/07/deiva-thirumagal-movie-online-hq.html

  • கருத்துக்கள உறவுகள்

வெகு நாட்கள் கழித்து திரையரங்கம் சென்று படம் பார்க்கலாமென நண்பரின் குடும்பம் வற்புறுத்தி அழைத்ததால் நேற்று இந்தப் படம் சென்று பார்த்தோம்.

ஒரு இடத்திலும் ஆபாசமோ, இரட்டை அர்த்த வசனங்களோ இல்லாத மிக நேர்த்தியான, உணர்வுபூர்வமான படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் பார்க்கவைத்த இயக்குநரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

தமிழ் நாட்டின் வடமேற்கு மலை எல்லையான ஊட்டியருகே இயற்கையழகு கொஞ்சும் அவலாஞ்சி பள்ளத்தாக்கு, துருதுரு கண்களால் பேசும் குழந்தை, பாசத்தில் துடிக்கும் அப்பா, இறுதிக் காட்சியில் நெகிழ வைக்கும் நீதிமன்ற வழக்கு விசாரணை என படத்தில் பல முத்தாய்ப்புகள்...

படம் பார்த்துவிட்டு வெளியே வரும் பெண்மணிகளின் கண்களில் மெல்லிய நீர் - நேர்த்தியான படத்திற்கான சான்று.

Edited by ராஜவன்னியன்

இங்கு நல்ல கருத்துக்கள் பதியப்பட்டதால் அறிவிலி தந்த இணைப்பில் இந்த படத்தை பார்த்தேன். எல்லோருக்கும் நன்றிகள்.

நல்ல படம். விக்ரம் கூட அதிக மிகையான நடிப்பில் ஈடுபடவில்லை என்பது நல்ல விடயம்.

நீதிமன்றத்தில், தந்தையும் மகளும், தமக்கென்ற உலகில் நின்று தமது விசேஷ சைகை மொழியில் எண்ணப் பரிமாற்றங்களை செய்வது அபாரம். அது போல், வழக்குக்கு முதல் நாள் அனுஷ்காவுக்கு ஆறுதல் கூறும் YG மகேந்திராவின் பாத்திரப்படைப்பும் அற்புதம். அனுஷ்காவுக்கான கனவுப்பாடலை தவிர்த்திருக்க வேண்டும்.

நீண்ட நாட்களுக்கு பிறகு, வெட்டு, குத்து, ரத்தம் மற்றும் பிரமாண்டம் இல்லாமல் ஒரு வாழ்வியல் படம். பார்க்காதவர்கள் பாருங்கள். உங்கள் இதயத்தில் ஒரு சிறிய இடத்தை என்றாலும் நிச்சயம் ஆக்கிரமிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் நல்ல படம் என்று சொல்வதால்...... அறிவிலி இணைத்த படத்தை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பார்க்கலாம் என்று யோசித்திருக்கின்றேன். அது வரை இணையத்தில் இருக்குமா?

எல்லோரும் நல்ல படம் என்று சொல்வதால்...... அறிவிலி இணைத்த படத்தை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பார்க்கலாம் என்று யோசித்திருக்கின்றேன். அது வரை இணையத்தில் இருக்குமா?

இந்தப் படத்தில் அழகான விடயங்களில் ஒன்று அதன் ஒளித்தொகுப்பு...முடிந்தால் தியேட்டர் போய் வாருங்கள்; இன்னும் அதிகமாக ரசிப்பீர்கள் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று நானும் இந்த படம் பார்த்தேன். உண்மையிலேயே ஒரு அற்புதமான படைப்பு. விக்ரமுக்கு இணையாக அந்த சிறுமி நடிப்பில் அசத்தி இருக்குது. மீண்டும் ஒருமுறை பார்க்கவேணும் என்று தோன்றும் படம். இங்கும் நான் இரண்டு மனநலம் குறைந்த பிள்ளைகளை அடிக்கடி பார்த்திருக்கிறேன். அண்ணாவினுடைய நண்பர்களின் குழந்தைகள். ஒரு பிள்ளை மன்னாரை சேர்ந்த தம்பதிகளின் குழந்தை இன்னொன்று ஆப்கானிஸ்தான் கார பொடியனுடைய குழந்தை இரண்டு குழந்தைகளையும் நான் அடிக்கடி பார்த்து பழகியதால் விக்கிரமுடைய நடிப்பு எனக்கு அந்த குழந்தைகளைத்தான் நினைவுபடுத்தியது.

அவ்வளவு திறமாக விக்ரம் நடித்திருந்தார். இறுதி நீதிமன்ற காட்சியில் நாசரின் நடிப்பும் அருமை. முடிவு நிழலி அண்ணா சொன்னது போல கவிதை தான்.

நானும் தெய்வ திருமகள் படம் பார்த்தேன்.. படம் தொடங்கி இடையில் அழ ஆரம்பித்ததுதான் படம் முடிந்து அழுகை நிற்க்கவில்லை... ஏனோ தெரியவில்லை இரண்டு நாள் சரியாக நித்திரை கொள்ளக்கூட முடியாமல் போயிவிட்டது....

அப்ப நான் இந்தப் படம் பார்க்கப் போறதில்லை. நமக்கு அழத்தான் உலகத்தில அதிகம் இருக்கே. அதுவும் autism அப்படி இப்படி என்று.. பிள்ளைகளை, ஆட்களைக் கண்டாலே ஒரே upset ஆகிடுறது. விக்ரம்.. கந்தசாமி போல என்ரரெயிண்ட்மெண்ட் படங்களும் அப்பப்ப தரனும்..!

Edited by nedukkalapoovan

இவ்வார விடுமுறைக்கு நேரம் கிடைத்தால் நிச்சயம் நானும் பார்க்க நினைத்து இருக்கிறேன்.

சுஜி எந்தத்தியோட்டரில இந்தப் படம் போகுது? ^_^:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வார விடுமுறைக்கு நேரம் கிடைத்தால் நிச்சயம் நானும் பார்க்க நினைத்து இருக்கிறேன்.

சுஜி எந்தத்தியோட்டரில இந்தப் படம் போகுது? ^_^:lol:

Cineworld - Ilford (தெய்வத் திருமகள் ஆங்கில எழுத்துருவோட்டத்துடன் - subtitle)

http://www.cineworld.co.uk/

Edited by nedukkalapoovan

இவ்வார விடுமுறைக்கு நேரம் கிடைத்தால் நிச்சயம் நானும் பார்க்க நினைத்து இருக்கிறேன்.

சுஜி எந்தத்தியோட்டரில இந்தப் படம் போகுது? ^_^:lol:

நான் கணினியில் பார்த்தேன் குட்டி :) .... தியோட்டார் போயிருந்தால் படமா நான் பார்த்திருப்பேன் அங்கே வந்த பெடியள் எல்லாரையும் சைட் எல்லோ அடித்திருப்பேன்.... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் கணினியில் பார்த்தேன் குட்டி :) .... தியோட்டார் போயிருந்தால் படமா நான் பார்த்திருப்பேன் அங்கே வந்த பெடியள் எல்லாரையும் சைட் எல்லோ அடித்திருப்பேன்.... :lol:

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கணினியில் பார்த்தேன் குட்டி :) .... தியோட்டார் போயிருந்தால் படமா நான் பார்த்திருப்பேன் அங்கே வந்த பெடியள் எல்லாரையும் சைட் எல்லோ அடித்திருப்பேன்.... :lol:

:rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நான் கணினியில் பார்த்தேன் குட்டி :) .... தியோட்டார் போயிருந்தால் படமா நான் பார்த்திருப்பேன் அங்கே வந்த பெடியள் எல்லாரையும் சைட் எல்லோ அடித்திருப்பேன்.... :lol:

இதுதான் சொல்லுறது.. பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும் என்று. தியேட்டரில அந்த இருட்டுக்க எப்படி சைட் அடிப்பினம். வெளில வைச்சு சைட் அடிச்சிட்டு.. உள்ள வைச்சு கசமுசா பண்ணுறவைக்குத் தான் தியேட்டர்..!

அதுக்காக தியேட்டர் போற எல்லாரும் அப்படி என்றில்ல. படம் பார்க்கப் போனமா... படம் பார்த்தமா.. வந்தமா என்ற பேர்வழிகளும் அநேகர் இருக்கினம். பொடியள்.. பெட்டையள்... உட்பட. :D:)

Edited by nedukkalapoovan

Cineworld - Ilford (தெய்வத் திருமகள் ஆங்கில எழுத்துருவோட்டத்துடன் - subtitle)

http://www.cineworld.co.uk/

ஆ.. :blink: அங்கையா? :mellow::unsure: நான் ஆறுதலா பார்க்கிறேன்...

இணைப்பிற்கு நன்றி நெடுக்ஸ் :)

கடைசி சீட்டில போய் நிம்மதியா இருந்தாலும், முன்னால இருக்கிற பசாசுகள் படம் பார்க்க விடாதுகள்.... <_<

  • கருத்துக்கள உறவுகள்

ஆ.. :blink: அங்கையா? :mellow::unsure: நான் ஆறுதலா பார்க்கிறேன்...

இணைப்பிற்கு நன்றி நெடுக்ஸ் :)

நான் ஹரிபோட்டர் பார்க்கப் போயிருந்தன். அப்ப கண்டன்..!

முடிஞ்சால்.. screen 1 இல் போட்டா பாருங்க. அது பெருந்திரை..! :D:)

கடைசி சீட்டில போய் நிம்மதியா இருந்தாலும், முன்னால இருக்கிற பசாசுகள் படம் பார்க்க விடாதுகள்.... <_<

எல்லா நேரமும் அப்படி என்றில்ல. படம் வந்த புதிதில் தான் அப்படி விசிலடிக்கிற கூட்டம் ஒன்று நுழையிறது. மற்றும்படி.. அமைதியாக இருக்கும்..!

ஆனால் வெள்ளையளோட படம் பார்க்கிறது.. அமைதியா இருக்கும்.. ஆரம்பம் முதல் முடிவு வரை..! லண்டனிலும் பார்க்க வெளி இடங்களில் தியேட்டர் நாகரிகம்.. நல்ல விதம். :)

Edited by nedukkalapoovan

இதுதான் சொல்லுறது.. பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும் என்று. தியேட்டரில அந்த இருட்டுக்க எப்படி சைட் அடிப்பினம். வெளில வைச்சு சைட் அடிச்சிட்டு.. உள்ள வைச்சு கசமுசா பண்ணுறவைக்குத் தான் தியேட்டர்..!

அதுக்காக தியேட்டர் போற எல்லாரும் அப்படி என்றில்ல. படம் பார்க்கப் போனமா... படம் பார்த்தமா.. வந்தமா என்ற பேர்வழிகளும் அநேகர் இருக்கினம். பொடியள்.. பெட்டையள்... உட்பட. :D:)

சீஈஈஈஈஇ பிறதர் அசிங்கமாக பேசாதீர்கள்...அழகானவர்களை பார்த்து ரசித்து சைட் அடிப்பதில் தப்பு இல்லைத்தானே ...கசமுசா பண்ணுறதுக்குத்தான் வீடு இருக்கின்றது இதுக்கு தியோட்டார் தேவையோ..... ஆனாலும் எனக்கு பெடியளை சைட் அடிக்கத்தான் பிடிக்கும் கூட வைச்சிருக்கப்பிடிக்காது.... பெடியங்களே தொல்லை....100கட்டுப்பாடு போடுவாங்கள்... இதுக்கு தனியாக இருத்திட்டுப்போகலாம்... :D

தமிழ் படம் பார்க்க... காண்ட்சம் கைஸ் வருவினமா..???! எங்கையோ இடிக்குதே...! நான் பார்த்த அளவில்.. தமிழ் படம் பார்க்க வாற கேர்ள்ஸும் ஒன்றும் அவ்வளவு நல்லதாயும் இல்ல. வேஸ்ட்..! அதிலும் கோவில் தரிசனம்.. நல்லது. :lol::D

நீங்க நல்ல மாதிரி இருந்தா.. அவங்க ஏன் கட்டுப்பாடு போடப் போறாங்க. நீங்க அவங்களுக்கு மேலாக கதை விடத் தொடங்கினா.. அவங்க கண்காணிக்கத்தான் செய்வாங்க. பெட்டையள் எண்டாப் போல மட்டும் என்னவாம்...! :lol::D

Edited by nedukkalapoovan

ஆமாம் நான் இருக்கும் இடத்தில் தியோட்டர் பக்கம் போனால் நிம்மதியாக படம் பார்க்கலாம்.. ஆனால் எல்லா இடமும் படம் ஓடி முடிந்து கடசியாகத்தான் எங்கள் இடத்துக்கும் வரும் அதுவும் எல்லாப்படமும் இல்லை....

எல்லா நேரமும் அப்படி என்றில்ல. படம் வந்த புதிதில் தான் அப்படி விசிலடிக்கிற கூட்டம் ஒன்று நுழையிறது. மற்றும்படி.. அமைதியாக இருக்கும்..!

ஆனால் வெள்ளையளோட படம் பார்க்கிறது.. அமைதியா இருக்கும்.. ஆரம்பம் முதல் முடிவு வரை..! லண்டனிலும் பார்க்க வெளி இடங்களில் தியேட்டர் நாகரிகம்.. நல்ல விதம். :)

ஆமாம் நான் இருக்கும் இடத்தில் தியோட்டர் பக்கம் போனால் நிம்மதியாக படம் பார்க்கலாம்.. ஆனால் எல்லா இடமும் படம் ஓடி முடிந்து கடசியாகத்தான் எங்கள் இடத்துக்கும் வரும் அதுவும் எல்லாப்படமும் இல்லை....

தமிழ் படம் பார்க்க... காண்ட்சம் கைஸ் வருவினமா..???! எங்கையோ இடிக்குதே...! நான் பார்த்த அளவில்.. தமிழ் படம் பார்க்க வாற கேர்ள்ஸும் ஒன்றும் அவ்வளவு நல்லதாயும் இல்ல. வேஸ்ட்..! அதிலும் கோவில் தரிசனம்.. நல்லது. :lol::D

அதுதான் நாங்கள் கோவில் பக்கம் போறது தியோட்டர் பக்கம் போவதில்லை.... :lol:

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் நாங்கள் கோவில் பக்கம் போறது தியோட்டர் பக்கம் போவதில்லை.... :lol:

எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். பார்த்து அங்க கலியாணம் ஆன ஆக்களும் மனிசிமார வீட்டில விட்டிட்டு வருவினம். :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் படம் பார்க்க ஆசைதான். பட்...............தனியே போகத்தான் விருப்பம் இல்லாமல் இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.