Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்துமதம் பழமையற்றது – யாழ்ப்பாணத்தில் கதைவிட்டார் பிரதமர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்துமதம் பழமையற்றது – யாழ்ப்பாணத்தில் கதைவிட்டார் பிரதமர்!

Published on July 20, 2011-9:50 am

2,500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து பௌத்த மதம் பின்பற்றப்பட்டு வருகின்றது. 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து இந்து மதம் பின்பற்றப்பட்டு வருகின்றது. 800 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து இஸ்லாம் மதம் பின்பற்றப்பட்டு வருகின்றது. அந்தக் காலத்தில் சிங்கள மன்னர்களின் கீழ் தமிழ் மன்னர்கள் இருந்தார்கள்.

இவ்வாறு இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரத்ன புதிய சரித்திர விளக்கம் ஒன்றை தெரிவித்தார். கோப்பாய் நாவலர் வித்தியாலயத்தின் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்ட வரலாற்று விளக்கத்தை அளித்தார்.

அவர் மேலும் தெரிவித்தமை வருமாறு:

கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தினால் இந்தப் பிரதேசத்திலும் நாட்டின் பல பிரதேசத்திலும் ஆலயங்கள் அழிவடைந்துள்ளன. அவற்றைப் புனரமைத்து மக்களிடம் கையளித்து வருகின்றோம்.இங்கும் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இருப்பினும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்வது தவறு. எனவே 25 ஆம் திகதிக்குப் பின்னர் அவற்றை மேற்கொள்ள உள்ளோம்.

இலங்கையில் 27 லட்சம் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். வடமாகாணத்தில் 9 லட்சம் தமிழ் மக்களும் கிழக்கு மாகாணத்தில் 4 லட்சம் தமிழ் மக்களுமாக 13 லட்சம் தமிழ் மக்கள் தான் வாழ்கின்றனர். ஏனைய இடங்களில் தான் 14 லட்சம் தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.

வடக்கு கிழக்கை விட ஏனைய இடங்களில்தான் அதிகமான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். எங்களுடைய பிரதேசங்களில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள். நாங்கள் இந்தப் பகுதி மக்களுக்கு தகுதி தராதரம் பாராமல் உதவிகள் செய்து வருகின்றோம். நீங்கள் ஏன் சிந்திக்கவில்லை. அவர்கள் போன்று ஒற்றுமையாக வாழ்வதற்கு? நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு இங்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே வந்திருக்கின்றோம் என்றார்.

http://www.saritham.com/?p=26820

  • கருத்துக்கள உறவுகள்

2,500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து பௌத்த மதம் பின்பற்றப்பட்டு வருகின்றது. 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து இந்து மதம் பின்பற்றப்பட்டு வருகின்றது. 800 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து இஸ்லாம் மதம் பின்பற்றப்பட்டு வருகின்றது. அந்தக் காலத்தில் சிங்கள மன்னர்களின் கீழ் தமிழ் மன்னர்கள் இருந்தார்கள்.

புத்தரே இந்து மதத்தைச் சேர்ந்தவர்!

பிராமணர்களின் நடவடிக்கைகளில், வெறுப்படைந்தே அதனை விமரிசிக்கத் தொடங்கினார்!

இதை இந்தத் தற்குறிக்கு, விளங்கப் படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றாலும், கள உறவுகளுக்காக, இதை எழுதுகின்றேன்!!! :wub:

இந்துமதம் என்பது இந்தியாவில் உள்ள மதங்களையெல்லாம் இணைக்கப்பட்டதால் வந்த சொல்தான். அதுவும் ஆங்கிலேயர் காலத்தில்தான் அப் பெயர் உண்டாகியிருக்க வேண்டும். பழைய பாடல்களில் இந்துசமயம் என்ற பதங்களில்லை.

உண்மை தான் இறைவன்!

சைவம், சாக்தம், வைஷ்ணவம், காணபத்தியம்,கவுமாரம், காபாலம், சவுரம் என்ற மதங்களின் இணைப்பே இந்துமதம் ஆகும்!

முதல் மூன்றும், புத்தர் காலத்திற்கு முற்பட்டவை!

வேதங்களின் காலம், அதில் கூறப்பட்டுள்ள, சூரியனின் நிலைகளை வைத்துப் பார்க்கும் போது,கி.மு.5000 ஆண்டுகள் என மதிப்பிடப் பட்டுள்ளது!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த மதம் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாம்! இந்துமதம் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாம்: நீங்கள் ஏன் சிந்திக்கவில்லை என யாழில் வரலாறு போதித்த பிரதமர்!

[Wednesday, 2011-07-20 11:39:00]

2,500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து பௌத்த மதம் பின்பற்றப்பட்டு வருகின்றது. 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து இந்து மதம் பின்பற்றப்பட்டு வருகின்றது. 800 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து இஸ்லாம் மதம் பின்பற்றப்பட்டு வருகின்றது. அந்தக் காலத்தில் சிங்கள மன்னர்களின் கீழ் தமிழ் மன்னர்கள் இருந்தார்கள்.

இவ்வாறு இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரத்ன புதிய சரித்திர விளக்கம் ஒன்றை தெரிவித்தார். கோப்பாய் நாவலர் வித்தியாலயத்தின் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்ட வரலாற்று விளக்கத்தை அளித்தார்.

அவர் மேலும் தெரிவித்தமை வருமாறு:

கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தினால் இந்தப் பிரதேசத்திலும் நாட்டின் பல பிரதேசத்திலும் ஆலயங்கள் அழிவடைந்துள்ளன. அவற்றைப் புனரமைத்து மக்களிடம் கையளித்து வருகின்றோம்.இங்கும் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இருப்பினும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்வது தவறு. எனவே 25 ஆம் திகதிக்குப் பின்னர் அவற்றை மேற்கொள்ள உள்ளோம்.

இலங்கையில் 27 லட்சம் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். வடமாகாணத்தில் 9 லட்சம் தமிழ் மக்களும் கிழக்கு மாகாணத்தில் 4 லட்சம் தமிழ் மக்களுமாக 13 லட்சம் தமிழ் மக்கள் தான் வாழ்கின்றனர். ஏனைய இடங்களில் தான் 14 லட்சம் தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.

வடக்கு கிழக்கை விட ஏனைய இடங்களில்தான் அதிகமான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். எங்களுடைய பிரதேசங்களில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள். நாங்கள் இந்தப் பகுதி மக்களுக்கு தகுதி தராதரம் பாராமல் உதவிகள் செய்து வருகின்றோம். நீங்கள் ஏன் சிந்திக்கவில்லை. அவர்கள் போன்று ஒற்றுமையாக வாழ்வதற்கு? நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு இங்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே வந்திருக்கின்றோம் என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46797&category=TamilNews&language=tamil

புத்தம் ஒரு மதமே இல்லை, புத்தன் வீட்டில இருந்து போட்டு கோவிச்சு கொண்டு போய் மரத்துக்கு கீழ இருந்தவர்.

அவருக்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை..

எல்லா மனிதர்களில் இருந்தும் மாறுபட்டு சிந்தித்த ஒரு சிந்தனாவாதி. அவ்வளவுதான்.

புத்தர், காந்தி, நெல்சன் மண்டேலா, சுபாஸ் சந்திர போஸ். பெரியார், தலைவர் பிரபாகரன் போன்றோர் எல்லாம் ஒவ்வொரு விதமாக மக்களை விளிப்படைய வந்த சிந்த்னையாளர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் போய் அவங்க (சிங்களப் பேரினவாதிகளின்) பெரியக்கா.. (இந்தியாவில்) வீட்டில் போய் சொல்லிட்டு இவர் மீண்டும் உயிரோடு வரட்டும் பார்க்கலாம்.

சிங்கள பெளத்த பேரினவாத பித்தம் தலைக்கேறியவர்கள் பலர் வரலாறும் சமூகவியலும்.. சமய பாடமும் O/L ல்ல பெயில் போல..! அதுசரி சிங்கள மொழி மூல பாடத் திட்டங்களும் பேரினவாதத்திற்கு ஏற்பத் தானே எழுதப்பட்டிருக்குது. :lol::D

Edited by nedukkalapoovan

பெரியக்கா வீட்டிலை இதைச் சொல்லியிருந்தால்.... சாணி கரைச்சு ஊத்தியிருப்பாங்கள். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அட கொக்க மக்கா!புத்தர் ஓரு இந்துவாய் பிறந்து இந்துவாய் வாழ்ந்து இந்துவாய் இறந்தவர்.

அசோகச் சக்கரவர்த்தி தான் புத்தமதத்தை உலகெங்கும் பரப்பியவர்.குறிப்பாக தனது தங்கை சங்கமித்தையை ஈழத்துக்கு அனுப்பி அப்போதிருந்த அரசன் தேவநம்பிய தீசன் மூலமாக அதனைப் பரப்பியவர்.அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பது அந்தக் காலத்தில் கட்டாயமான வழியாகும்.அதற்கு முன் அங்கு வாழ்ந்தவர்கள் எந்த மதத்தைப் பின்பற்றினார்கள்.நிச்சயமாக சைவசமயமாகத்தான் இருந்திருக்கும்.இராவணண் ஒர் சிவபக்தன் என்று இதிகாசமான இராமயணத்தில் கூறப்பட்டுள்ளது.சில 100 ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த சங்கிலியன் சரித்திரத்தையே இந்த 21ஆம் நூற்றாண்டில் மாற்ற முயற்சிப்பவர்கள் அந்தக்காலத்தில் என்ன செய்திருப்பார்கள் என்ற ஊகிக்க முடியும்.மதம் எதற்கு 5000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட தமிழ்மொழி பேசும் மக்கள் அங்கு தொடர்ந்து வாழ்வதே அது யாருடைய பூர்வீக பூமி என்பதைச் சொல்லும்.

உண்மை தான் இறைவன்!

சைவம், சாக்தம், வைஷ்ணவம், காணபத்தியம்,கவுமாரம், காபாலம், சவுரம் என்ற மதங்களின் இணைப்பே இந்துமதம் ஆகும்!

முதல் மூன்றும், புத்தர் காலத்திற்கு முற்பட்டவை!

வேதங்களின் காலம், அதில் கூறப்பட்டுள்ள, சூரியனின் நிலைகளை வைத்துப் பார்க்கும் போது,கி.மு.5000 ஆண்டுகள் என மதிப்பிடப் பட்டுள்ளது!

இவற்றை எழுதியதுக்கு நன்றிகள்.

இல்லையெனின் ஒருசில புலம்பெயர் தமிழர் சிங்களவன் சொல்வதே உண்மையென்று நம்பிவிடுவார்கள். அதாவது சிங்கள பயங்கரவாதிகள் புலிகளின் தலையில் கட்டிவிடும் கொலைகளை உண்மையென்று நம்பி புதிது புதிதாகக் காரணங்களைக் கண்டுபிடித்து திருப்பதிப்பட்டுக்கொள்வது போல.

ஸ்ரீ லங்கா என்ற பெயரும் எழுபதுகளில் தான் வந்தது. அதை வைத்து இந்தநாடு முன்னர் இருந்ததே இல்லையென சொல்லலாமோ எனத் துடிக்கும் ஒரு சிலரும் இருக்கும் வரையில் தமிழனின் பாடு கஷ்டம் தான். சம்பந்தன் போன்றவர்கள் பிழைப்பதற்கு இப்படியானவர்களும் தேவை.

1. இலங்கை(தீவு) தனி சைவ-தமிழ் நாடு.

2. புத்தர் வைஸ்னவாராய் இருக்கவேண்டும். சிந்துவெளியின் வீழ்சிக்குப் பின் வந்த ஆரியர்கள் அங்கே இருந்தவர்கள் மீது தமது மதத்தை பரப்பினார்கள். அந்தக் கலவைதான் தற்கால இந்து மதம். கொடூரம் நிறைந்த வேள்விகள் யாகங்கள் நிறந்தது அது. புத்தர் பழைய மதத்தை புதுபிக்க முயன்றார். ஆனால் அவரின் ஆரிய சீடடர்கள் புத்தரின் போதனைகளை திரும்பவும் ஆரிய மதம் ஆக மாற்றினார்கள். கொல்வது பாவம், தின்பது பவமில்லை போன்ற கருத்துகளும், நாலந்தா காலத்தின் பின் ஞானம் என்பது படித்து வரும் வறட்டுது தத்துவமாயும் மாற்ற பட்டது. இன்று காவி சட்டைகள் செய்வது ஏதும் ஞானத்தை நோக்கி மனத்தை திருப்பாது என்றுதான் புத்தர் வாதிட்டிருந்தார். புத்தர் படிப்பு, பட்டிணி கிடத்தல், (பிரித்து) ஓதுதல் போன்ற எல்லாவற்றையும் முயன்று பார்த்தவர். களைத்துப்போய் வாழ்க்கையை கைவிட்டுவிட்டு அரமரத்தின் கீழ் வாழத்தொடடங்கியவர். அப்போது அவர் மிக எளியமுறையாக ஞானத்தை கண்டார். புத்தர் போதிக்க தொடங்கிய காரணம் ஒன்று, ஞானம் உணர்ந்து வருவது, காவி சட்டைகள் போல் படித்து வருவதில்லை என்பதை அற்விக்கவே.

3. சிவன், கிருஸ்ணன், முருகன், (காளியும் உள்ளடங்கலாம்) தமிழர்களினதும் சிந்துவெளி மக்களினதும் மன்னர்கள். இவர்கள் நீதியாக ஆண்டது மட்டுமின்றி புத்தர் போன்று ஞானம் சம்பந்தமான போதனைகளையும் செய்து வந்தார்கள். புத்தர் காலத்தில் அரசியல், தந்திரம் கலந்த ஆரியமயமாய் இருந்ததால் புத்தர் தனது முன்னோர்களான சிவன், கிருஸ்ணன், முருகன் போலல்லாமல் அரண்மனையை விட்டால்த்தான் உண்மை பேசமுடியும் என்று வந்துவிட்டது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களுக்கு முன்பு இலங்கையில் தமிழர்கள் பெளத்த மதத்தினைப் பின்பற்றினார்கள். அவர்களினால் கட்டப்பட்ட விகாரைகளை சிங்களவர்கள் கட்டியதாக சிங்களம் இப்பொழுது சொல்கிறது. தமிழ் நாட்டில் இருந்து படையெடுத்து வந்த சோழ அரசர்களில் சிலர் பெளத்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அனுராதபுரம், பொல நறுவையில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் பல இருக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.