Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேர்தல் முடிவு விமோசனம் தருமா?

Featured Replies

தேர்தல் முடிவு விமோசனம் தருமா?

இன்று சனிக்கிழமை நடந்த 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் வரலாற்றில் பரபரப்பை ஏற்படுத்திய  தேர்தல்கள் பல இடம்பெற்றாலும் இம்முறை நடக்கப் போவதைப் போன்று முக்கியத்துவம் இருந்ததில்லை.

ஏன், 65 உள்ளூராட்சி சபைகளுக்கும் தேர்தல் ஒத்திவைக்கப்படாமல் கடந்த மார்ச் 17ம் நாள் நடைபெற்றிருந்தாலும் கூட இந்தளவுக்கு முக்கியத்துவம் கிடைத்திருக்காது.

ஆனால், இப்போது இந்தத் தேர்தல் ஒரு கௌரவப் பிரச்சினை என்பதற்கும் அப்பாற்பட்ட அரசியல் பரிமாணம் கொண்டதாக மாறியுள்ளது.இந்தத் தேர்தலில் எப்படியாவது வென்றேயாக வேண்டும் என்று களத்தில் இறங்கியது அரசாங்கம்.

வடபகுதி மக்களின் வாக்குகளைப் பெற்று முழு இலங்கையுமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் பின்னால் தான் நிற்கிறது என்ற செய்தியை உலகத்துக்கு சொல்வதற்கே அரசாங்கம் இத்தனை பாடுபட்டது.

கடந்த மார்ச் மாதத்துக்குப் பின்னர் தான் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானது. அதன் பின்னர் தான் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கை விவகாரம் பற்றிய சர்ச்சை தோன்றத் தொடங்கியது. சனல்- 4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் அதன் பின்னர் தான் வெளியானது. இதன் பின்னர் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தவிர ஏனைய நாடுகள் இலங்கை அரசுக்கு வெளிப்படையான ஆதரவை வழங்கத் தயங்குகின்றன.

போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணைகளுக்கு அழைப்பு விடுப்பது இப்போது ஒரு சாதாரணமான விவகாரமாகி விட்டது. அந்தளவுக்கு இலங்கை அரசாங்கத்தினால் பலமுனை அழுத்தங்கள் எதிர்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழ் மக்களின் வாக்குகள் அரசாங்கத்துக்கு முக்கிய தேவையாக மாறியுள்ளது. அதன் மூலமே சர்வதேசத்தின் வாயை அடைக்கலாம் என்பது அரசாங்கத்தின் கருத்து. இதனை அமைச்சர் விமல் வீரவன்ச போன்றவர்கள் பகிரங்கமாக கூறியுள்ளனர்.

தேர்தலில் தமிழ் மக்களால் அளிக்கப்படும் வாக்குகள் மூலம் சர்வதேசத்தின் வாய் அடைக்கப்படும் என்று விமல் வீரவன்ச கூறியுள்ள கருத்து முக்கியமானது. சர்வதேச சமூகத்தின் வாயை அடைப்பதற்கான ஒரு வழியாகவே இந்தத் தேர்தல் பயன்படுத்தப்படுகிறது என்ற வகையில் இதற்கு ஒரு உயர் பெறுமானம் உருவாகியுள்ளது.

சாதாரணமாக உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதில்லை. ஆனால் இந்தத் தேர்தல அப்படியானதொன்றல்ல.

அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெற்கில் இருந்து சென்று அணிவகுப்பு நடத்தினர். மூலைக்கு மூலை திறப்பு விழாக்கள் நடத்தப்பட்டன. என்ன, எதற்கு என்றில்லாமல் வீதியெங்கும் பல்வேறு திட்டங்களின் ஆரம்பத்தைக் குறிப்பதற்கான பெயர்ப்பலகைகள் திறந்து வைக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் பிரதான போட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் இடையில் தான்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரங்களுக்கு கடுமையான அச்சுறுத்தல்கள் இருந்தன. அதனை அவர்கள் மட்டுமன்றி சுதந்திரமான கண்காணிப்பு அமைப்புகள் கூட தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளன.

அதேவேளை, ஆளும்கட்சிக்கு அரச அதிகாரம் தொடக்கம் எல்லாவிதமான அதிகாரங்களும், வசதிகளும் இருந்தன. எனவே பிரமாண்டத்தை காண்பித்து வாக்குகள் கவரும் உத்தியை கையாண்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தியை முன்னிறுத்தி இந்தப் பிரசாரங்கள் அமைந்தன. சலுகைகள், திட்டங்கள், வேலைவாய்ப்பு தொடர்பான வாக்குறுதிகள் என்று இந்தத் தேர்தல் பிரசாரத்தில் முற்றிலும் அரச அதிகார வாடையே வீசியது.

அதுபோன்ற வாய்ப்பு கூட்டமைப்புக்கு கிடைக்காது போனாலும், அவர்களிடம் பலமாக இருப்பது கொள்கை ஒன்று மட்டும் தான். பிரமாண்டமான தேர்தல் மேடைகளை கூட்டமைப்பினால் அமைக்க முடியாது போனாலும், தமிழ்த் தேசியம் சார்ந்த உறுதியான தளம் ஒன்று தான் அவர்களிடம் பெரும்பலமாக உள்ளது. அதேவேளை, கூட்டமைப்பு அரசியல் தீர்வு, அதிகாரப்பகிர்வு என்ற அரசியல்ரீதியான உரிமைகளை உறுதிப்படுத்த இந்தத் தேர்தலை பயன்படுத்திக் கொள்ள முனைந்தது.

ஆனால் ஆளும்கட்சியோ அரசியல்தீர்வு பற்றிய வாக்குறுதிகள் எதுவுமின்றி திட்டங்கள், அபிவிருத்தி பற்றிய வாய்ச் சவடால்களிலேயே வாக்குகள் கோரியது.

வெளிநாடுகளின் ஆலோசனைகளைக் கேட்கத் தயாரில்லை, அவர்கள் கூறும் தீர்வுகளை வழங்க முடியாது என்பன போன்ற வார்த்தைகளின் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடபகுதி மக்களுக்கு கூறியுள்ள செய்தி வெளிநாடுகளை நம்பிக் கொண்டிருக்காதீர்கள் என்பதே. அதாவது, சர்வதேச ஆதரவுடன் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கக் கூடாது என்ற கருத்தையே அவர் வடக்கில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் வலியுறுத்தியுள்ளார். அவர் இவ்வாறு கூறினாலும் சர்வதேச அழுத்தங்களில் இருந்து அரசாங்கத்தை விடுவிப்பதற்கான ஒரு ஆயுதமாகவே இந்தத் தேர்தலை அரசாங்கம் பயன்படுத்தியது என்பது  கருதப்படுகிறது

தன்னை நம்புமாறும், செய்வதைச் சொல்வேன் சொல்வதைச் செய்வேன் என்றெல்லாம் ஜனாதிபதி வடக்கில் உரையாற்றியுள்ளார். மிக விரைவில் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று வலியுறுத்தப்பட்டாலும், அரசியல் ரீதியாக தமிழருக்கு எத்தகைய அரசியல் உரிமைகள் உறுதி செய்யப்படும் என்ற கேள்விக்கு அவரிடம் இருந்து எந்த உறுதியோ, உத்தரவாதமோ கொடுக்கப்படவில்லை. சலுகைகள், அபிவிருத்தி பற்றிய திட்ட அறிவிப்புகளோடு எல்லாம் முடிந்து போயுள்ளன. தமிழர்களைப் பொறுத்தவரையில் அபிவிருத்தி மட்டும் தான் முக்கியமான பிரச்சினை என்றில்லை. அதற்கும் அப்பால் அரசியல் உறுதிப்பாடு மிகவும் அவசியம். அபிவிருத்தியைத் தக்கவைத்துக் கொள்வதற்கு உறுதியான தலைமை அவசியமாக உள்ளது. அதனை தமிழருக்கான அரசியல்தீர்வு ஒன்றின் ஊடாகவே உறுதி செய்ய முடியும்.

ஆனால், அந்த வகையில் அரசாங்கம் எந்த உத்தரவாதத்தையும் கொடுக்கவில்லை. தமிழருக்கான அரசியல் உரிமைகள் பற்றி வாய் திறக்கப்படவேயில்லை. தமிழ் மக்களின் நம்பகத்தன்மையைத் தக்கவைத்துள்ளதாக அரசாங்கம் காட்டிக் கொள்ளத் தொடங்கியுள்ளது. அதேவேளை ஏற்கனவே நடந்து முடிந்த பல தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது மக்களாதரவை உறுதி செய்துள்ள நிலையில், இந்த உள்ளூராட்சித் தேர்தல் அவர்களுக்கு மிகப்பெரிய அக்கினிப் பரீட்சையாகவே அமைந்துள்ளது.

இந்தத் தேர்தல் நடக்கின்ற சூழலும் காலமும் இதற்கு வரலாற்று முக்கியத்துவம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. ஒரு நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஈடான அளவுக்கு இது கௌரவப் பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் வடக்கிலுள்ள மக்களின் கருத்து என்னவென்று வரும் ஞாயிறு காலை தெரிந்து விடும். ஆனால் அந்தத் தீர்ப்பு நியாயமானதொன்றாக இருந்தால் மட்டுமே இலங்கை அரசாங்கத்துக்கு சார்பானதாக அது அமையும். இல்லையேல் சர்வதேச நெருக்கடிகள் இன்னும் அதிகமாகுமே தவிர குறையாது.

http://tamilmirror.lk/2010-08-31-14-50-37/25179-2011-07-23-16-30-15.html

தமிழர்க்கு விமோசனம் கிடைக்காது ஆனால் சிங்களம் நல்லினக்கம், அபிவிருத்தி என்று உலகை ஏமாற்றப்பார்க்கின்றது. சிங்களத்தின் மீதான வெறுப்பை மீண்டும் உலகிற்கு காட்டும் ஒரு சந்தர்ப்பமாக இந்த தேர்தல் அமையும். ஏனென்றால் அந்த அளவிற்கு சிங்களம் படங்காட்டிக்கொண்டு இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றும் இருக்காது

தேர்தல் முடிவு விமோசனம் தருமா?

http://tamilmirror.lk/2010-08-31-14-50-37/25179-2011-07-23-16-30-15.html

கூட்டமைப்பு தேர்தல் பிரசாரத்தில் தமக்கு அளிக்கப்படும் வாக்குகள், உரிமை பெற்றுகொள்ள அளிக்கப்படும் வாக்குகள் என்று தான் கூறியிருந்தார்கள்.

அதே நேரம் ஐக்கிய முன்னனி தமிழர்கள் எல்லாவற்றையும் பெற்று விட்டார்கள் என்று காட்ட முனைந்தார்கள். இதன்னால் அவர்களுக்கு உரிமைகளைப் பெற கிடைக்ககூடிய வெளிநாட்டு உதவி இழக்கப்பட இருந்தது

இதில் முதலாவது நேரடி விமோசனம். இதைத்தான் தமிழ் மக்கள் தேர்தலில் பிரதானமக எதிர்பார்க்கிறார்கள். இது எப்படியாகுமென்று சொல்வது கஸ்டம். வட்டுகோட்டை தீர்மானம் இன்னமும் பலன் அளிக்க தொடங்கவில்லை.

இரண்டாவது ஒரு மறைமுகமான வேறு ஒன்றிலிருந்து வரும் விமோசனம். இது கிடைக்ககூடிய சந்தர்ப்பம் மிக கூடுதல்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத்தீவினது விடுதலைக்குப் பின்னான எந்த நாடாமன்றத்தேர்தலோ அன்றி உள்@ராட்சி மன்றத் தேர்தல்களோ எதையும் தமிழருக்குத் தரவில்லைத் தரப்போவதுமில்லை. ஆனால் சிங்களத்தைத் தோலுருத்துத் தமிழரின் நிலையை வெளிப்படுத்த ஒரு கருவியாகப் பயன்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எவருக்கு சேதி இல்லாவிட்டாலும்

புலம் பெயர் தமிழருக்கும் உலகத்தமிழினத்துக்கும் தாயகம் நிச்சயம் தன்னால்முடிந்த நேரத்தில் ஒரு செய்தியைச்சொல்லியுள்ளது.

புரிகிறதா என்று பார்க்கலாம்..................??????

எவருக்கு சேதி இல்லாவிட்டாலும்

புலம் பெயர் தமிழருக்கும் உலகத்தமிழினத்துக்கும் தாயகம் நிச்சயம் தன்னால்முடிந்த நேரத்தில் ஒரு செய்தியைச்சொல்லியுள்ளது.

புரிகிறதா என்று பார்க்கலாம்..................??????

இதுதான் முதற் தேவை. விமோசனம் என்பது அதன் வழிதான் ஏற்பட வேண்டும். விமோசனத்தை எதிர்பார்க்கும் வழிகளில் இதுவும் ஒன்றுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் சில முடிவுகள்.. திருமலை நகர சபையையும் த தே கூ கைப்பற்றியுள்ளது.

35

திருகோணமலை மாவட்டம்

சேருவில பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 07ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்

இலங்கை தமிழரசுக் கட்சி - 01 ஆசனம்

34

யாழ்ப்பாணம் மாவட்டம்

வலிகாமம் தென் கிழக்கு பிரதேச சபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 13 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 03 ஆசனங்கள்

33

அம்பாறை மாவட்டம்

காரைதீவு பிரதேச சபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 04 ஆசனங்கள்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01 ஆசனம்

32

இரத்தினபுரி மாவட்டம்

பலாங்கொட பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 14 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 05 ஆசனங்கள்

31

புத்தளம் மாவட்டம்

சிலாபம் நகர சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 08 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனங்கள்

30

மொனராகலை மாவட்டம்

மொனராகலை பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 08 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்

----------------------------------------------------

29

பொலன்னறுவை மாவட்டம்

ஹிங்குராக்கொட பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 14 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி) - 01 ஆசனம்

28

மொனராகலை மாவட்டம்

சியம்பலாண்டுவ பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 09 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 02 ஆசனங்கள்

27

திருகோணமலை மாவட்டம்

திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 05 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 03 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்

26

மாத்தளை மாவட்டம்

வில்கமுக பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 05 ஆசனங்கள்

சுயேட்சைக் குழு - 02 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 02 ஆசனங்கள்

25

யாழ்ப்பாணம் மாவட்டம்

பருத்தித்துறை நகர சபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 07 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 02 ஆசனங்கள்

----------------------------------------------------

24

யாழ்ப்பாணம் மாவட்டம்

சாவகச்சேரி நகர சபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 09 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 02 ஆசனங்கள்

23

யாழ்ப்பாணம் மாவட்டம்

நல்லூர் பிரதேச சபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 10 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 02 ஆசனங்கள்

22

காலி மாவட்டம்

அக்மீமன பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 10 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனம்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) - 01 ஆசனம்

21

திருகோணமலை மாவட்டம்

குச்சவெளி பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 06 ஆசனங்கள்

இலங்கை தமிழரசுக் கட்சி - 02 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்

20

யாழ்ப்பாணம் மாவட்டம்

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 12 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 04 ஆசனங்கள்

19

யாழ்ப்பாணம் மாவட்டம்

வலிகாமம் வடக்கு பிரதேச சபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 15 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 06 ஆசனங்கள்

18

அநுராதபுரம் மாவட்டம்

கல்நேவ பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 08 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்

17

காலி மாவட்டம்

பத்தேகம பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 11 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனங்கள்

சுயேட்சைக் குழு 4 - 01 ஆசனம்

லங்கா சமசமாஜக் கட்சி - 01 ஆசனம்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) - 01 ஆசனம்

16

காலி மாவட்டம்

எல்பிட்டிய பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 10 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 04 ஆசனங்கள்

சுயேட்சைக் குழு - 01 ஆசனம்

15

கம்பஹா மாவட்டம்

அத்தனகல்ல பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 17 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 05 ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) - 01 ஆசனம்

14

முல்லைத்தீவு மாவட்டம்

துணுக்காய் பிரதேச சபை

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 07 ஆசனங்கள்

பிரஜைகள் முன்னணி - 02 ஆசனங்கள்

13

கண்டி மாவட்டம்

அக்குரணை பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 07 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 04 ஆசனங்கள்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 03 ஆசனங்கள்

12

அநுராதபுரம் மாவட்டம்

ராஜாங்கனை பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 08 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்

11

யாழ் மாவட்டம்

நெடுந்தீவு பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 08 ஆசனங்கள்

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 01 ஆசனம்

10

திருகோணமலை மாவட்டம்

கந்தளாய் பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 08 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனங்கள்

09

களுத்துறை மாவட்டம்

அகலவத்தை பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 09 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 02 ஆசனங்கள்

08

அநுராதபுரம் மாவட்டம்

நுவரகம்பலாத்த மத்தி பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 12 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 02 ஆசனங்கள்

07

அம்பாறை மாவட்டம்

திருக்கோயில் பிரதேச சபை

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 07 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 01 ஆசனம்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்

06

கண்டி மாவட்டம்

ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 11 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 06 ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) - 01 ஆசனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01

05

யாழ் மாவட்டம்

வல்வெட்டித்துறை நகர சபை

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 07

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 02

04

கண்டி மாவட்டம்

யட்டிநுவர பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 15 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 06 ஆசனங்கள்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01 ஆசனம்

03

மாத்தறை மாவட்டம்

அக்குரெஸ்ஸ பிரதேச சபை சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 09 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) - 01 ஆசனம்

02

நுவரேலியா மாவட்டம் - தலவாக்கலை - லிந்துல நகர சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 07 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 02 ஆசனங்கள்

01

கம்பஹா மாவட்டம்

மினுவாங்கொட நகர சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 08 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனங்கள்

அனுப்புக முகப்பு, இலங்கைச் செய்திகள்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64549/language/ta-IN/article.aspx

விமேசானம் கிடைக்காது ஆனால் சொல்ல பட்ட செய்தி தெளிவானது...........

தேர்தல் முடிவு விமோசனம் தருமா?

யாருக்கு விமோசனத்தை?

தமிழின விரோத அரச பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக வாழ்ந்துவரும் கடத்தல், கொலை, கப்பம், கொள்ளைக்கார டக்லஸ் கும்பலுக்கா?

கள்ள வோட்டுக்கள் போட்டும் சொற்ப இடங்களில் தான் வென்றுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

விமேசானம் கிடைக்காது ஆனால் சொல்ல பட்ட செய்தி தெளிவானது...........

மகிந்தவின் ஆளுங்கூட்டணிக்கு ஆதரவு கிடைக்காது என்பது தெளிவான செய்தி. அத்தோடு வன்முறையற்ற அரசியலைச் செய்யும் த.தே.கூ. தமிழர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை பெற்றுக்கொள்ள உதவுவார்கள் என்று மக்கள் நம்பிக்கை காட்டுவதும் தெளிவாக உள்ளது. இதற்கு மேல் வேறு என்ன சொல்லியிருக்கின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை சோதனைகளின் மத்தியிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற பாடுபட்ட.. மற்றும் வாக்களித்த அன்பார்ந்த தமிழீழ மக்களுக்கு நன்றிகள். இந்த நன்றி உணர்வை.. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக வேட்பாளர்களைக் களமிறக்காத தமிழ் தேசியத்தை நேசிக்கும் இதர ஒரு சில கட்சிகளுக்கும் தெரிவித்தாக வேண்டும். அதேபோன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கக் கோரிய தமிழக சொந்தங்களுக்கும் நன்றி சொல்லியாக வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வடக்குக் கிழக்கு தமிழ் பேசும் மக்கள் வழங்கி உள்ள ஆணையை சரியாக பயன்படுத்தி அவர்களின் துன்பங்களில் இருந்து அவர்களை மீட்கும் கைங்கரியங்களை செய்வதோடு.. மிகப் பெரிய பொறுப்பாக.. சிங்கள இனவாத அரசின் அக்கிரமங்கள்.. ஆக்கிரமிப்புக்கள்.. இராணுவ மேலாதிகங்களில் இருந்து அவர்களை ஜனநாயக வழியில் போராடி மீட்டு சர்வதேசத்தின் உதவியோடு உருப்படியான அரசியல் உரிமையைப் பெற்றும் கொடுக்க வேண்டும்.

இதுவே புலம்பெயர் தமிழ் மக்களின் விருப்பும் கூட. தேர்தல் வெற்றியோடு சுருண்டு படுத்துக் கொண்டு மக்கள் மீது சிங்கள அரச பயங்கரவாதம் தலைவிரித்து ஆடுவதை மேலும் மேலும் விடுப்புப் பார்க்கும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கக் கூடாது. சிங்கள அரச பயங்கரவாதம் குறித்து உலகின் கவனத்திற்கு உடனுக்குடன் கொண்டு வந்து.. அதனைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் அது குறித்துப் பேசுவதோடு இராணுவ மயமாக்கல்.. இனத்துவருவமயமாக்கல்.. சிங்கள குடியேற்றங்கள்.. தமிழ் பேசும் மக்களின் உரிமை பறிப்பு பற்றியும் பேச வேண்டும்.

முஸ்லீம் காங்கிரஸ்.. இந்தத் தேர்தலில் படுதோல்வி கண்டிருந்தாலும்.. தமிழ் மக்களோடு சேர்ந்து வாழும் சமூகத்தினர் என்ற வகையில் முஸ்லீம் மக்களின் குறைகளையும் நிறைகளையும் செவிமடுத்து அவர்களின் அரசியல் விருப்பங்களும் நிறைவேறும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. செயற்பட்டு தன்னை அரசியல் ரீதியிலும் இராஜதந்திர ரீதிலும் இன்னும் இன்னும் மக்களின் நம்பிக்கைக்குரிய கட்சியாக.. காட்டிக் கொடுக்காத கட்சியாக வளர்க்க வேண்டும். அதுவே தமிழர்களுக்கு தாயகத்தில் தற்காலிக ஆறுதலாக முடியும்.

மேலும் கிழக்கில்.. குச்சவெளி.. கந்தளாய் போன்ற தமிழர் பாரம்பரிய பிரதேசங்கள் உள்ளடங்கிய சில பிரதேச சபைகளையும் வடக்கில் தீவகத்தில் காரைநகர் தவிர்ந்த பிற பிரதேச சபைகளையும் சிங்கள இனவாதக் கட்சிகள் கைப்பற்றி உள்ளன. இது குறித்த சரியான மதிப்பீடும்.. காரணங்களும் கண்டறியப்பட்டு அந்த மக்களின் தேவைகள் உணரப்பட்டு அவர்களின் குறைகளை நீக்கி.. அந்த மக்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழ் தேசியக் கட்சிகள் நெருங்கி அரவணைக்க வேண்டும். எதிர்காலத்தில் அவர்களின் வாக்குகளையும் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த நலனுக்காக பெற்றுக் கொள்ள முனைய வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.