Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு எடுத்த முடிவு சரியானதா? இல்லையா?

கூட்டமைப்பு - சிங்கள பேச்சுவார்த்தையும் தாயக மக்கள் எதிர்காலமும் 34 members have voted

  1. 1. இந்த நிலையில் கூட்டமைப்பு எடுத்த முடிவு சரியானதா இல்லையா?

    • தாயக மக்களின் ஆணையையை அவர்கள் பிரதிநிகள் என்றவகையில் கூட்டமைப்பு அந்த முடிவை எடுத்தது
      14
    • பலமாக உள்ள சிங்களத்திற்கு நிபந்தனைகளை விதித்தமை அரசியல் சாணக்கியமாகாது
      1
    • தமிழக, புதுடெல்லி, மேற்குலக உறவுகளில் கொழும்பு பலவீனமாக உள்ள நிலைமையில் இது கூட்டமைப்பின் சரியான நகர்வு
      16
    • கூட்டமைப்பின் இந்த முடிவு சிங்களத்தின் இனவழிப்பு கொள்கையை மேலும் துரிதப்படுத்தும்
      1
    • எனது காரணம் இதில் இல்லை, முடிந்தால் அதை நான் கீழே பதிந்துவிடுகிறேன்
      2
  2. 2. எந்த சர்வதேச நாட்டுடன் கூட்டமைப்பு கூடுதலான உறவுகளை இன்று வளர்க்க வேண்டும்?

    • இந்தியா
      2
    • சீனா
      1
    • உருசியா
      1
    • அமெரிக்கா
      6
    • பிரித்தானியா
      2
    • வேறு
      0

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • தொடங்கியவர்

அதிகமானோர் சர்வதேச அழுத்தமே கூட்டமைப்பு இந்த முக்கிய முடிவை எடுக்க காரணம் என கருதியுள்ளனர். இதனால் எந்த நாடுகளுடன் அவர்கள் கூடுதலாக தமது உறவுகளை முன்னெடுக்கவேண்டும் என கருதுகின்றீர்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது, அது இணைக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவதே எனது தெரிவாக உள்ள அதேவேளை, சீனாவுடம் அமெரிக்காவுடனும் ஒரு திட்டமிட்ட வகையில் இராசதந்திர(தந்திர) உறவுகளைப் பேணுவது அவசியமானது. இன்றைய பொருண்மியத் தளம்பல் உலகில் வெறுமனே கோசங்கள் மட்டும் பேசாது. எமது தாயகத்தின் அமைவிடம் கரணியமாக ஏற்பட்டுள்ள ஒரு ஆதிக்க சூழலானது தாயக விடுதலையை மேலும் காலநீட்சியை நோக்கி இட்டுச் செல்லக் கூடிய ஆபத்தான நிலையில் கிழக்கை சீனாவூடாகவும் மேற்கை அமெரிக்காவூடாகவும் கையாளும் இராசதந்திர நகர்வுகள் அவசியமானது. இதற்கு புலத்து இளையோரிடமிருந்து ஆற்றலுள்ளவர்களைத் த.தே.கூ உள்வாங்குதனூடாக சில நகர்வுகளை முன்னெடுக்கலாம். அதாவது வெளியுறவுக் குழுவொன்றைப் புலத்து இளையோரையும் இணைத்து நிறுவுவதனூடாக இதனை முன்னெடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எடுக்க வேண்டிய முடிவை எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போம் - சம்பந்தன்

நாங்கள் எடுக்க வேண்டிய முடிவை எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போம். அது குறித்து இப்போது பிரஸ்தாபிப்பதற்கு இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு காலக்கெடு வழங்கியுள்ளீர்களே. அரசு உங்கள் காலக்கெடுவை கணக்கில் எடுத்துக்கொள்ளாவிட்டால் என்ன செய்வீர்கள் என்று இரா. சம்பந்தனிடம் வீரகேசரி வார வெளியீடு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை முறிவடையும் நிலையில் உள்ளதாக பிரஸ்தாபிக்கப்படுகின்றதே, இது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன என்று வினவியபோது, ஆட்சி அதிகார முறைமை, மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான விடயதானங்கள், செயற்பாடுகள் மற்றும் வரி, நிதி அதிகாரங்கள் ஆகியவை குறித்த மூன்று விடயங்களை முன்வைத்திருக்கின்றோம்.

இதற்கான அரசின் பதிலை தொடர்ந்தே நாம் எமது நிலைப்பாடு குறித்து முடிவெடுப்போம் என்றார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், நாம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றோம். அதற்கு மேல் இப்போது ஏதும் தெரிவிப்பதற்கில்லை. அரசின் பதில் கிடைத்ததும் எமது நிலைப்பாடு குறித்து தெரிவிப்போம் என்றார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/65307/language/ta-IN/article.aspx

Regional stability என்ற பதத்திற்கு மேற்கு நாடுகள் கொடுக்கும் முக்கியத்துவம் மிக அதிகம். புலிகளை அவர்கள் அழித்ததே இதற்காகத்தான்.

Regional stability ஏற்பட வேண்டும் என்றால் தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். இதற்கு கூட்டணி போன்ற ஜனனாயகக் கட்சிகளுக்கு மேற்கு நாடுகளின் பின்புலம் எப்பவும் உண்டு. மிதவாதிகளான கூட்டணி வெளியேறி அவ்வெற்றிடத்தில் மீண்டும் வன்முறை சார்பானவர்கள் முளைவிடுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

இதனால் தான் மேற்கு நாடுகள் நா.க. அரசை ஒதுக்கும் தோற்றப்பாடு தென்படுகிறது.

சிங்களவரின் திட்டம் காலத்தை இழுத்தடித்து, உலகச் சூழ்நிலை தமக்கு சாதகமாக மாறும் போது கூட்டணியை " பறதெமளு " என்று அடித்துத் துரத்துவதாகத்தான் இருக்கும். ஆகவே காலக்கெடு போடுவது ஒரு தேவை.

கூட்டணி ரொபேர்ட் பிளேக்குடன் தொடர்புகளை பேணுவதும், "ஜெ" ஐச் சந்தித்து தமிழர் பிரச்சனையில் அவரின் மிக முக்கிய பங்கை உணர்த்துவதும் கூட்டணி செய்ய வேண்டியவை.

இந்தியா சிங்களவருடன் மென்போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்பது மேற்குநாடுகளின் திட்டமாகக் கூட இருக்கலாம். தாம் இறுக்கும் போது சிங்களம் சீனா பக்கம் சாயாமல் இருக்க இந்திய -- சிங்கள நட்பு இழுத்துப் பிடிக்கும் என்று நினைக்கலாம் (??). ‍

  • தொடங்கியவர்

கூட்டணி ரொபேர்ட் பிளேக்குடன் தொடர்புகளை பேணுவதும், "ஜெ" ஐச் சந்தித்து தமிழர் பிரச்சனையில் அவரின் மிக முக்கிய பங்கை உணர்த்துவதும் கூட்டணி செய்ய வேண்டியவை.

இதற்கு புதுடெல்லி தடையாக உள்ளது என்பது எனது கருத்து. டெல்லியை மீறி இவ்வாறான தொடர்புகளை செய்வதை விட அவர்களை வெல்வதே நல்லது.

அதற்கு உதவியாகத்தான் நாடு கடந்த அரசும் சரி இல்லை உலகத்தமிழர் பேரவை சரி செயல்படல் வேண்டும். சென்னை, வாசிங்க்டன், இலண்டன் மூலமாக இவர்கள் டெல்லியை எமக்கு ஆதரவாக திருப்பல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பினர் ஏதாவது தம் வசம் தீர்வு அடிப்படையில் பேசுகிறார்களா? அதாவது,மாகாணம், மாவட்டம், உள்ளூராட்சி அல்லது கிராம சேவையோ அல்லது மக்களின் அத்தியாவசிய பிரச்சனையோ பேசுகிறார்கள் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை தெரிந்தவர்கள் கூறவும் அதன் பின் வாக்கவுள்ளேன்.

வசீ,

உங்கள் கேள்வி நியாயமானதே. என்ன பேசுகிறார்கள் என யாருக்கும் சொல்லவில்லை.

ஆனால், ' இந்த மூன்று நிபந்தனைகளுக்கும் பத்து நாட்களுக்குள் எழுத்தில் பதில் கூறாவிட்டால் பேச்சு வார்த்தைகளில் இருந்து விலகிவிடுவோம்' என கூட்டமைப்பு கூறியுள்ளது. அந்த முடிவைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என்பதே கணிப்பின் நோக்கமாக இருந்தது.

எனது கருத்து சரியானதோ தெரியவில்லை,

நீங்களே கேட்டு அதற்கு பதிலளிக்காவிட்டால் நன்றாக இருக்காது என்பதால் கூறுகிறேன்

ஆரம்பத்தில் த.தே.கூ பேச்சுவார்த்தையில் ஆயுத குழுக்களின் ஆயுத களைவு,கடந்த தேர்தலில் ஆயுத குழுக்கள் என்பது ஒரு கட்சிகளின் அரசியலில் ஒரு சவாலான விடயமாக த.தே.கூ இற்கு தேர்தல் காலங்களில் உள்ளது அதாவது தேர்தல் முறைகேடுகள்.

மற்றது மக்களின் அன்றாட பிரச்சனைகளை பற்றியதாகவும் பத்து சுற்று பேச்சு நடத்தப்பட்டதாகவும் கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது மூன்று நிபந்த்தனை பற்றி கூறுகிறது.

என் மனதிற்கு இது ஒரு கட்சிகளின் " அரசியல்" போலவே தென்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இi;றைய நிலையிலே தமிழர் தரப்புஅமெரிக்காவுடன் நெருக்கமான கூட்டுக்களை ஏற்படுத்த வேண்டும்.சீனாவுடனும் பேரம் பேசும் அடிப்படையில் ஒரு மெல்லிய தொடர்பை ஏற்படுத்த வேண்டும்.அதாவது நீங்கள்(மேற்கு நாடுகள்,அமெரிக்கா(இந்தியாவைச் சேர்க்காவிட்டாலும் நானும் வாறன் என்று வெட்கமில்லாமல் வந்து கூட்டணியில் ஒட்டி குட்டையைக்குழப்பும் என்பது வேறு விடயம்) )உதவி செய்யா விட்டால் எங்களுக்கு சீனாவின் தயவை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதாக எமது செயற்பாடுகள் அமைய வேண்டும்.இதைத்தான் சிங்களவன் இவ்வளவு காலமாகச் செய்து வெற்றிகரமாக வெளியுலக அரசியலைக் கையாளுகிறான். நாங்களும் அதே வழியைப் பின்பற்ற வேண்டும்.தெரிவுகள் இரண்;டு இருக்கும் போது சிங்களவனால் டிமாண்ட் பண்ண முடியாது.(நாங்க தமிழர் எல்லோ ஒரு தமிழன் ஒரு பல சரககுக் கடை போட்டால் அந்தக் கடைக்கு முன்னால இன்னொரு கடையைப் போட்டு 2 தமிழரும் நாசாமாய் போவம் ஒழிய சிங்களவன் கடைக்கு எதிராய் கடை போடமாட்டோம்)

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு

எமக்கு ஏற்பட்ட அழிவிலிருந்தும் பிரிவுகளிலிருந்தும் புல அமைப்புக்களைவிட நிதானமாக மூச்சுவிட ஆரம்பித்திருப்பதுதான் தற்போது நிம்மதியான செய்தி. இது தொடர்ந்து அடுத்த கட்ட நகர்வுகளை அவர்கள் செய்வதற்கான புறக்காரணிகளைக்கூட உருவாக்காத நாம் அவர்களை நோக்கி விரல்நீட்டுவது இடிக்கிறது............ :(

  • தொடங்கியவர்

இi;றைய நிலையிலே தமிழர் தரப்புஅமெரிக்காவுடன் நெருக்கமான கூட்டுக்களை ஏற்படுத்த வேண்டும்.சீனாவுடனும் பேரம் பேசும் அடிப்படையில் ஒரு மெல்லிய தொடர்பை ஏற்படுத்த வேண்டும்.அதாவது நீங்கள்(மேற்கு நாடுகள்,அமெரிக்கா(இந்தியாவைச் சேர்க்காவிட்டாலும் நானும் வாறன் என்று வெட்கமில்லாமல் வந்து கூட்டணியில் ஒட்டி குட்டையைக்குழப்பும் என்பது வேறு விடயம்) )உதவி செய்யா விட்டால் எங்களுக்கு சீனாவின் தயவை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதாக எமது செயற்பாடுகள் அமைய வேண்டும்.இதைத்தான் சிங்களவன் இவ்வளவு காலமாகச் செய்து வெற்றிகரமாக வெளியுலக அரசியலைக் கையாளுகிறான். நாங்களும் அதே வழியைப் பின்பற்ற வேண்டும்.தெரிவுகள் இரண்;டு இருக்கும் போது சிங்களவனால் டிமாண்ட் பண்ண முடியாது.(நாங்க தமிழர் எல்லோ ஒரு தமிழன் ஒரு பல சரககுக் கடை போட்டால் அந்தக் கடைக்கு முன்னால இன்னொரு கடையைப் போட்டு 2 தமிழரும் நாசாமாய் போவம் ஒழிய சிங்களவன் கடைக்கு எதிராய் கடை போடமாட்டோம்)

முற்றிலும் உண்மையான கருத்து.

தமிழரசுக்கட்சி மட்டுமே சீனாவுடன் முதல்முறையாக சில உறவுகளை ஆரம்பித்துள்ளது. இங்கே நாம் சீனாவுக்கு சொல்லவேண்டியது நாம் அவர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் அல்ல. நாமும் அவர்களின் பொருளாதார உறவுகளை வேண்டி நிற்கும் கொள்கைகளையே கொண்டிருக்கும் ஒரு விடுதலை வேண்டி நிற்கும் இனம் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக சர்ச்சைக்குரிய கருத்துகளை எப்போதும் தவிர்த்தே உள்ளேன்,சில சமயம் நாம் நினைப்பது வக்கிரம் அதனால் நாம் அதை சொல்வதில்லை.

எனது இரண்டாவது கருத்தை பதியாமல் விடவே முயன்றேன்,ஆனால் அதை பதியாமல் விட்டால் நான் அண்மைக்காலங்களில் மிகவும் மதிக்கும் ஒரு மனிதரை(கட்சியற்ற தனிமனித சாதனையாளர்) புறக்கணிப்பது போல ஆகும் என்ற படியால் மனதில் உள்ளதை உள்ளபடியே பதிந்து விட்டேன்.தவறுக்கு மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதிகமானோர் சர்வதேச அழுத்தமே கூட்டமைப்பு இந்த முக்கிய முடிவை எடுக்க காரணம் என கருதியுள்ளனர். இதனால் எந்த நாடுகளுடன் அவர்கள் கூடுதலாக தமது உறவுகளை முன்னெடுக்கவேண்டும் என கருதுகின்றீர்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது, அது இணைக்கப்பட்டுள்ளது.

முக்யமாக மேற்குலகம்.

இi;றைய நிலையிலே தமிழர் தரப்புஅமெரிக்காவுடன் நெருக்கமான கூட்டுக்களை ஏற்படுத்த வேண்டும்.சீனாவுடனும் பேரம் பேசும் அடிப்படையில் ஒரு மெல்லிய தொடர்பை ஏற்படுத்த வேண்டும்.அதாவது நீங்கள்(மேற்கு நாடுகள்,அமெரிக்கா(இந்தியாவைச் சேர்க்காவிட்டாலும் நானும் வாறன் என்று வெட்கமில்லாமல் வந்து கூட்டணியில் ஒட்டி குட்டையைக்குழப்பும் என்பது வேறு விடயம்) )உதவி செய்யா விட்டால் எங்களுக்கு சீனாவின் தயவை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதாக எமது செயற்பாடுகள் அமைய வேண்டும்.இதைத்தான் சிங்களவன் இவ்வளவு காலமாகச் செய்து வெற்றிகரமாக வெளியுலக அரசியலைக் கையாளுகிறான். நாங்களும் அதே வழியைப் பின்பற்ற வேண்டும்.தெரிவுகள் இரண்;டு இருக்கும் போது சிங்களவனால் டிமாண்ட் பண்ண முடியாது.(நாங்க தமிழர் எல்லோ ஒரு தமிழன் ஒரு பல சரககுக் கடை போட்டால் அந்தக் கடைக்கு முன்னால இன்னொரு கடையைப் போட்டு 2 தமிழரும் நாசாமாய் போவம் ஒழிய சிங்களவன் கடைக்கு எதிராய் கடை போடமாட்டோம்)

:lol::lol::lol:

  • தொடங்கியவர்

முக்யமாக மேற்குலகம்.

சஜீவன்,

மேற்குலகம் என்ற ரீதியில் அமெரிக்காவையும் பிரித்தானியாவையும் இரண்டு தெரிவாக இணைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அமெரிக்காவை நேரடியாக அணுக உள்ள பலத்தைவிட பிரித்தானியாவை அணுகுவது கூடிய வெற்றிகளை தந்துள்ளது.

நன்றி.

நான் மேற்க்குலகம் என்று பொதுவாகத்தான் சொன்னேன்.எங்கு எந்த நாடு எமக்கு சாதகமாக உள்ளதோ அதை அணுகுவதில் ஏதாவது சாதிக்கலாம் அல்லது அனுகூலம் உன்டு என்றால் அந்த நாட்டுடன் உறவை ஏற்படுத்துவது நன்மைதான்.ஆனால் யார் அதை செய்வது :unsure:

நன்றி அகுதா. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.