Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

காதல் கடிதம்


Recommended Posts

பதியப்பட்டது

எங்கள் திரைப்படத்துறையை எப்படி கட்டியெழுப்புவது? எங்களுக்கென ஓர் திரைக்களத்தை எங்கு நிறுவுவது போன்ற கேள்விகளோடு நம்முள் வாழ்கின்ற பல ஈழத்துக் கலைஞர்களின் கலைப்படைப்புக்கள் ஆங்காங்கே குறும்படங்களாகவும், முழுநீளத் திரைப்படங்களாகவும் வெளிவந்த வண்ணமுள்ளன. இருப்பினும் எத்தனையோ நல்ல கலைஞர்கள் இந்த முயற்சியில் இறங்கி முயன்று பார்த்து மூச்சறுந்த நிலையில், போதிய ஒத்துழைப்புகள் இல்லாமல் கலைத்துறையில் இருந்து விலகிச் செல்லும் சூழலே புலம்பெயர் நாடுகளிலும் சரி இலங்கையிலும் சரி இருந்து வருகிறது.

'எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் நிற்க அதற்குத் தக" என்ற வாக்கினைப் பின்பற்றாத எந்தப் படைப்பாளியும் எங்கள் வாழ்வைத் தரமான முறையில் பதிவு செய்ய முடியாது.! இந்த உண்மையை உணர்ந்து காதல் கடிதம் திரைப்படக்குழுவினர் செயற்;பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இசை உலக வரலாற்றில் புதிய முயற்சியாக வெளிவந்த காதல் கடிதம் இசைத்தொகுப்பு அமைந்தது. இந்த இசைத் தொகுப்பு தமிழ் மக்கள் மத்தியிலும், பத்திரிகைகள் மற்றும் தமிழ் ஊடகங்கள் அனைத்திலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இப்பொழுது உலகத் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக ஓர் இசைத்தொகுப்பில் இருந்து ஒர் திரைப்படமென காதல் கடிதம் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காதல் கடிதம் இசைத்தொகுப்பை வழங்கிய அதே கூட்டணியின் அடுத்த இசைத்தொகுப்பும் வெளிவர இருக்கின்ற வேளையில் காதல் கடிதம் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எங்கள் வாழ்வை நாமே பதிவு செய்வோம். அதை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வோம். இலங்கை, இந்தியாவில் வாழ்கின்ற எமது கலைஞர்களோடும், தமிழ்நாட்டில் உள்ள திரைப்படத்துறை சார்ந்த தேர்ந்த கலைஞர்களின் ஆதரவோடும், இத்திரைப்படத்தை உருவாகிக்கொண்டிருக்கிறார்க

Posted

நன்றி மதுரன் தகவல்களை இங்கு இணைத்தமைக்கு. வாசிக்கும் போது பழைய நினைவுகளையும் அசை போட வைத்தது. காதல்க்கடிதம் சிறப்பாகவர உழைக்கும் அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Posted

ஈழ இந்திய கலைஞர்கள் இணைந்து உருவாக்கும் காதல் கடிதம் திரைப்படம் குறித்த தகவல்களை தந்தமைக்கு நன்றி மதுரன்

Posted

காதல் கடிதம் இசை வட்டினை கேட்டதுண்டு. ஈழத் தமிழர்களின் இதயத்துடிப்பாய் இத்திரைக்காவியம் அமையுமானால் அதுவே இத் திரைக்காவியத்தின் வெற்றியாகவும் அமையக்கூடும். இத்திரைப்படத்தினை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். தமிழேந்தி சேரன் சீமான் தங்கர்பச்சான் மற்றும் பால போன்ற சிலரின் தமிழ்ப்படங்களே பார்க்கக்கூடிய திரை படங்களாக தமிழர்முன் வலம் வருகின்றன. அவற்றையும் சில விமர்சகர்கள் விமர்சிக்கும் போக்குகளால் இயக்குனர்கள் மனமுடைந்து போகும் நிலை காணப்படுகின்றது. இருந்தும் அவர்கள் மிகவும் துணிச்சலோடு தவமாய் தவமிருந்து இன்னும் பல தவமாய் தவமிருந்து திரைப்படம் போன்ற படங்களை தர வேண்டி.

காதல் கடிதமும் தமிழர்களின் வாழ்வியலை தொட்டு செல்லும் திரை என்பதால். நிச்சயமாக இதில் தமிழர் நமக்காக பல புதிய செய்திகள் இருக்கும் என்னும் ஆவலோடு. காதல் கடிதம் திரைபடக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

காதல் கடிதத்தை

தரிசிக்க காத்திருக்கும்

இருவிழி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தகவலுக்கு நன்றி.... திரைப்படம் ஆக்குவோரின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Posted

பாடலை இணைத்தமைக்கு நன்றிகள் குளக்கட்டான். இதன் இசைத்தட்டினை எங்கோ தவறவிட்டுவிட்டேன்.

  • 2 months later...
Posted

இரு முறை பதிவாகியமையால் ஒன்றை நீக்கியுள்ளேன்.

Posted

"VNMusicdreams" நிறுவனத்தின் முதல்ப் படைப்பாக 'காதல் கடிதம்" எனும் இசைத்தொகுப்பு 02.08.2003 அன்று ஒஸ்லோ, நோர்வேயில் வெளிவந்து உலகெங்கும் வாழும் தமிழ் உள்ளங்களை இசையால் வசமாக்கியது. கவிதை வரிகளுக்கு இசைத்துளிகள் எழுதிய 'காதல் கடிதம்" ஓர் காத்திரமான கலைப் படைப்பாக அமைந்தது.

நானும், திரு.வி.எஸ்.உதயா அண்ணன் அவர்களும் இணைந்து உருவாக்கிய இவ்வெற்றிப் படைப்பு தமிழர்களின் வீடுகளில் எல்லாம் இரவும் பகலும், இனிய மலரும் நினைவுகளைத் தட்டியெழுப்பும் பாடல்களாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

நகரங்களில், கிராமங்களில், வீதிகளில், சந்திகளில், கோயில்களில், குளக்கரைகளில், தொழிலசார் நிறுவனங்களில், பாடசாலைகளில், கலை விழாக்கள் என்று எங்குமே காற்றலைகளில் தவழ்ந்து வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது 'காதல் கடிதம்" இசைத் தொகுப்பு.

நாங்கள் கலைவானில் துணிந்து சிறகசைக்க எங்களுக்கு நீங்கள் ஒரு பெரிய வானத்தையே வழங்கியிருக்கிறீர்கள். அந்த வகையில் எங்களுடைய சிறகடிப்பு காதல் கடிதம் இசைத் தொகுப்போடு மட்டும் நின்றுவிடவில்லை. அதன் எல்லைகள் விரிந்து இப்பொழுது காதல் கடிதம் என்ற பெயரிலேயே திரைப்படமாகவும் றுயவநச குயடடள ஆழஎநை ஆயமநசள நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

எங்கள் முதல் முயற்சிப் படியில் ஆணித்தரமாக நின்றுகொண்டு, இரண்டாவது படியில் எங்கள் காலத்தடத்தைப் பதிவுசெய்யத் தயாராகிவிட்டோம். இந்த விண்ணப்பக் கட்டுரையின் நோக்கம் உங்கள் இதயபுூர்வமான ஆதரவை எதிர்பர்த்து நிற்பதே ஆகும்.

எங்களுடைய காதல் கடிதம் இசைத் தொகுப்பு புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற அனைத்து மக்களையும் சென்றடையவில்i என்கின்ற முறைப்பாடுகூட இன்னும் எங்கள் காதுகளுக்கு எட்டிக்கொண்டிருக்கிறது. உங்கள் உள்மன ஆதங்கத்தை நிவர்த்தி செய்ய நாங்கள் எடுக்கின்ற ஒரு புதிய முயற்சி இதுவாகும்.

இந்த விடயத்தை நன்றாகவே உள்வாங்கி தீர்க்கமாக என்ன செய்யலாம் என்று யோசித்த போது இப்படி ஒரு யோசனை எனக்குத் தோன்றியது. இதோ அந்த யோசனையை உங்கள்முன் கொண்டுவருகிறேன்.

'காதல் கடிதம்" இசைத் தொகுப்பு இன்னும்கூட இலங்கை, இலண்டன், சுவிஸ், கனடா, பிரான்ஸ் மற்றும் நோர்வே தவிர்ந்த நாடுகளில் நேரடியாக விநியோகிக்கப்படவில்லை என்பது எனக்கு மிகுந்த கவலையைத் தருகின்றது. அதற்குக் காரணம் தகுந்த விநியோகஸ்தர்கள் எமக்கு கிடைக்காமல் போனமையே ஆகும். ஒரு கலைஞன் படைப்பாளனாக மாறி நல்ல படைப்பை உருவாக்குவதோடு மட்டும் நின்றுவிட்டால் அவன் படைப்பு ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே தங்கிவிடும். இதை நன்கு உணர்ந்து எம்மால் இயன்றவரை முயன்று நான் மேற்குறிப்பிட்ட நாடுகளில் மாத்திரமே எங்கள் படைப்பை வெளியிட முடிந்தது. இதற்கு எங்கள் மத்தியில் நிலவுகின்ற கலைசார்ந்த தொடர்;பாடல் முறைகளில் உள்ள குறைபாடும், பிற்போக்கான சில எண்ணங்களே காரணமாகும்;.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலேயே எங்களின் இரண்டாவது இசைத்தொகுப்பான 'காதல் மொழி" எனும் இறுவட்டை இன்னும் ஒர் இரு மாதங்களில் உலகெங்கிலும் வெளியீடு செய்யலாம் என எண்ணியுள்ளேன். 'காதல் கடிதம்" விநியோகம் செய்வதில் நாங்கள் செய்த தவறை இந்த இசைத் தொகுப்பின் மூலமும் செய்யவிரும்பவில்லை.

ஆகவேதான் என் இனிய தமிழ் உறவுகளே உங்களிடம் ஓர் அன்பான கோரிக்கையை இக்கட்டுரையின் மூலம் முன்வைக்கின்றேன். உலகெல்லாம் சிதறுண்டு வாழ்கின்ற எம் தமிழ் உறவுகளே உங்கள் வாழ்க்கையில் சிந்தி விழுகின்ற சில மணித்துளிகளைச் சேமித்து, எங்கள் கலைத்துறையை கட்டியெழுப்ப நீங்கள் பெரும்பாடு பட்டுக்கொண்டிருப்பீர்கள்.

கலையில் ஆர்வம் உள்ள நீங்கள் உங்கள் முதற்ப் சுவடை எப்படி பதிப்பது என்று கூட எண்ணிக் கொண்டு ஓர் எதிலியாகக்கூட இருக்கலாம். நீங்கள் எங்கள் கலைத்துறையை வளர்க்க அல்லது எங்கள் கலைச்சொத்துக்களை ஆவணப்படுத்தும் எண்ணம் உள்ளவராக இருப்பீர்கள். இந்தக் கலைத்துறைக்குள் நுழைவதற்கு நீங்கள் விரும்பின் என்னுடைய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலம் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும்.

ஆகவே சுற்றிவளைக்காமல் 'காதல் மொழி" இறுவட்டு விநியோகம் தொடர்பான விடயத்திற்கு வருகிறேன். "VNMusicdreams" நிறுவனத்தின் இரண்டாவது படைப்பாக வெளிவரவிருக்கும் 'காதல் மொழி" இறுவட்டினை நீங்கள் வாழ்கின்ற நாடுகளில் விநியோகம் செய்வதற்கு ஒரு தனிநபராகவோ, ஒரு குடும்பமாகவோ, ஒரு தமிழ் ஊடகமாகவோ, தொலைக்காட்சி நிறுவனமாகவோ, தமிழ்ச்சங்கமாகவோ, கலை பண்பாட்டு நிறுவனங்களாகவோ உதவிட முன்வாருங்கள.; அப்போதுதான் எங்களுடைய 'காதல் மொழி" என்னும் இறுவட்டை எல்லாத் தமிழர் வீடுகளிலும் ஒலிக்கச் செய்யலாம்.

ஒரு தனிமனிதனாக, என் குடும்பத்தினர், நண்பர்கள், ஊடக நண்பர்களின் இதயபுூர்வமான முழுமையான ஒத்துழைப்புடன்தான் ஓரளவுக்காவது 'காதல் கடிதம்" இசைத் தொகுப்பை எம்மால் புலம்பெயர் நாடுகளிலும், இலங்கையில் இசையமைப்பாளர் திரு வி.எஸ்.உதயா அண்ணனின் உதவியுடனும், ஊனு-உவைல உரிமையாளர் சாந்தகுமார் அவர்களின் உதவியுடனும் வெளிக்கொணர முடிந்தது.

இதில் விசேஷமாக இலங்கையில் உள்ள சக்தி எப்.எம் வானொலி எங்கள் குடும்ப வானொலி போலவே முழுமனதோடு எங்கள் பாடல்களை காற்றலைகளில் ஏற்றி பிரபல்யப்படுத்தினார்கள்.

இதே போன்றுதான் இங்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள ஐபிசி வானொhலி, கனேடியத்தமிழ் வானொலி, கனேடிய பல்கலாச்சார வானொலி, ஒலி எப்.எம் வானொலி என அனைத்து வானொலிகளுமே எங்கள் பாடல்களை இங்கு பிரபல்யப்படுத்தின. எமக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்தனர். அதற்காக எனது நிறுவனமும், இசையமைப்பாளர் வி.எஸ்.உதயா அண்ணா அவர்களும் என்றுமே நன்றிக் கடன்பட்டிருக்கின்றோம்.

புலம்பெயர் வாழ்வில் உங்களைப் போலவே எத்தனை இன்னல்களுக்கு மத்தியில் எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களையும் கலையாகப் படைக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

அகரமுதல் எழுத்து உச்சரிக்கப்படுகின்ற ஒவ்வொரு வீடுகளிலும் உங்கள் காதல் கதைகள், கனவுகள், கற்பனைகள், நம்பிக்கைகள், சுகங்கள், துக்கங்கள், கண்ணீர் கலந்த கோபங்கள், தாபங்களை, போராடும் வாழ்வை சொல்லப்போகும் இனிய படைப்பாக 'காதல் மொழி" அமையும். எங்கள் படைப்பின் மேல் நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உங்கள் கைகளில் எங்கள் இரண்டாவது இசைக் குழந்தையாக தவழவேண்டும் என்பது எமது விருப்பம்.

இதனால் எங்களுக்கு என்ன இலாபம் என்று நீங்கள் எண்ணுவதுகூட என் காதுகளுக்கு கேட்கிறது. ஒரு இளம் படைப்பாளனாக உங்கள் இதயக் குரலை என்னால் உணரமுடிகிறது.

என்ன பலன் கிடைக்குமென்று நினைத்துக்கொண்டிராமல் இந்தக் கட்டுரையை படித்த மறுகணமே என்னோடு தொடர்பு கொள்ளுங்கள். 'காதல் மொழி" இறுவட்டை உங்கள் நாடுகளில் எப்படி, வெளியீடு செய்யலாம் என்பதைச் சொல்ல, உங்களோடு கலந்துரையாடி, நீங்கள் வசிக்கின்ற நாட்டிற்கான 'காதல் மொழி" உரிமத்தை அதிகாரபுூர்வமாக வழங்க உங்களுக்காக காத்திருக்கிறேன்.

உங்கள் குரலை எதிர்பார்த்து

இதயமுடன்

இளங் கலைத்தயாரிப்பாளன்

வசீகரன்

விளம்பரத்தை இமேஜில் பார்வையிட

www.vnmusicdreams.com

நன்றி தமிழ்நாதம் இணயம்

Posted

ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும் - காதல் கடிதம் பற்றி இயக்குநர் முகேஷ்

img1060417011_1_1.gif

இலங்கை வவுனியாவிலிருந்து சென்னைக்கு படிக்க வருகிறாள்... தன்னுடன் படிக்கும் ஒரு சென்னைப் பையனை காதலிக்கிறாள்.

இந்த நிலையில் தன் சொந்த நாட்டுக்கு சென்றுவருவதாகச் சொல்லி இலங்கை போனவள் போனவள் தான். திரும்பி வரவேயில்லை.

காத்திருந்து காத்திருந்து வெறுத்துப்போன காதலன் தன் காதலியைத் தேடி இலங்கைக்குச் செல்கிறான்... அங்கே .... அவனுக்கு நேர்ந்த, அவனுடைய காதலுக்கு நேர்ந்த அனுபவங்கள் தான் காதல் கடிதம் படத்தின் கதை.

img1060417011_1_2.gif

இப்படி சர்ச்சைக்குரிய படம் ஒன்று தயாராகி வருகிறது.

இதுபற்றி தெரிந்துகொள்ள டைரக்டர் முகேஷ் முன்பு ஆஜரானோம்.

பாரதி கண்ணையா படத்திலிருந்து ஆட்டோகிராஃப் வரை சேரனிடம் பணிபுரிந்த அனுபவத்தை வைத்து எனது முதல் படம் காதல் கடிதத்தை இயக்கி வருகிறேன்.

சேரன் பட்டறையிலிருந்து வந்ததால் இந்த சமூகத்துக்கு ஏதாவது ஒரு நல்ல செய்தியை உள்ளடக்கிய ஒரு படத்தைத் தரவேண்டும் என்கிற ஆசை உண்டு.

காதல் என்கிற ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு திரைக்கதையை உருவாக்கியதோடு இந்த நாட்டுக்கென்ன உலகம் முழுவதற்குமான ஒரு மெஸேஜ் இந்தக் கதைக்குள் வந்து விழுந்தது. யுத்தம், அது வேண்டாம். அன்புதான் இந்த உலகத்திற்குத் தேவை என்பதை ஒரு காதல் கடிதம் மூலம் சொல்லியிருகிறேன். அதனால்தான் இந்தப்படத்திற்கு காதல் கடிதம் என்று பெயர் வைத்தோம்.

யுத்தத்தின் விளைவுகளைச் சொல்லப்போகிறீர்கள் என்றால் படத்தில் யுத்தக் காட்சிகளும் இடம் பெறுகிறதா?

யுத்தக் காட்சிகள் கிடையாது. ஆனால் அந்த யுத்தங்களால் ஏற்பட்ட காயங்கள், வலிகள், இழப்புகள், பறிபோன வாழ்க்கை என மனசு வலிக்க வலிக்க அந்தக் காட்சிகளை காட்டியிருக்கிறோம். நிச்சயம் இதயங்களை தொடும்படி இருக்கும் அந்தக் காட்சிகள்.

ஒரு களத்தின் பாதிப்புகளைச் சொல்லவேண்டும் என்றால் நேரடியாக அந்தக் களத்திற்கு செல்ல வேண்டும். நீங்கள் இலங்கைக்குச் சென்று படமெடுத்தீர்களா?

ஆமாம்! சம்பந்தப்பட்ட காட்சிகளை இலங்கைக்கே சென்று படமெடுத்தோம்.

ஸ்ரீலங்கா ஃபிலிம் கார்பரேஷனின் ஒத்துழைப்போடு இதுவரை காட்டப்படாத இலங்கை லொகேஷனையும் படமெடுத்து வந்திருக்கிறோம்.

இரண்டு இனங்களுக்கிடையேயான வாழ்வுரிமைப் பிரச்சினைகளால் தான் இலங்கையில் யுத்தம் வருகிறது. இந்த சூழ்நிலையில் யுத்தம் வருவதற்கான காரண கரியங்களையும் அலசியிருக்கிறீர்களா?

அந்த எல்லைக்குள் நாங்கள் போகவில்லை. உலகின் எந்த மொழி, இனத்துக்காரராக இருந்தாலும் இந்தப் படத்தைப் பார்த்தால் யுத்தம் வேண்டாம் என்றுதான் நினைக்கத் தோன்றும். நாங்கள் இந்தத் தளத்தில் இருந்துதான் படம் பிடித்திருக்கிறோம்.

இப்படி ஒரு பரபரப்பான கதையை தயாரிக்க முன்வந்தது யார்? உங்களுக்கு இந்த வாய்ப்பு எப்படி வந்தது?

இலங்கை ஃபிலிம் கார்பரேஷனில் பணிபுரியும் தேவதா° என்பவர் மூலம் இந்த வாய்ப்பு வந்தது. இலங்கைத் தமிழரான, தற்சமயம் கனடாவில் வசிக்கும் தில்லைவண்ணன் இந்தப் படத்தின் தயாரிப்பாளர். அவருக்கு யுத்த பாதிப்புகள் நன்றாகவே தெரியும். அதனால்தான் இந்தக் கதையைப் படமெடுக்க அவரும் முன்வந்தார்.

படத்தில் வேறு என்ன விசேஷம்?

படத்தின் ஹீரோ ஸ்ரீபாலாஜி, சென்னையிலுள்ள ஒரு கல்லூரியில் இன்ஜினியரிங் படித்துவருகிறார். ஹீரோயின் அனிஷா, சென்னை கல்லூரி ஒன்றில் பிஃபார்ம் படித்து வருகிறார். படத்தில் அழுத்தமான ஒரு செய்தி இருந்தாலும் இளைஞர்களுக்கு தேவையான மாடர்ன் டைப்பில் தான் ஒரு கலகலப்பான படமாக எடுத்து வருகிறோம் என்றார் முகேஷ்.

அருகே இருந்த தயாரிப்பாளர் தில்லைவண்ணனிடம் பேசினோம்.

நான் கனடாவில் வசித்து வந்தாலும் உலகம் முழுக்க ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகிறேன். சினிமா என்பது நல்ல விஷயங்களையும் கெட்ட விஷயங்களையும் சொல்லக்கூடியதுதான். அதில் நமக்குத் தேவையான நல்ல விஷயங்களை எடுத்துகொள்ள வேண்டும் என என் அப்பா அடிக்கடி சொல்லுவார். அவர் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர். தான் வாழ்க்கையில் உயர்ந்ததற்குக் காரணமே எம்.ஜி.ஆர் படங்களில் உள்ள நல்ல விஷயங்களை பின்பற்றியதுதான் எனச் சொல்லுவார். சினிமா மூலம் நல்ல விஷயங்களை இந்த உலகத்துக்குச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் தான், ஆசையில் தான் இந்தப் படத்தை தயாரித்து வருகிறேன் என்றார்.

(வெப்புலகம்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உது என்ன காதல் கதை. எங்கள் நாய் யகமும் மகே**ஸ்சும் லவ் பண்ணுவினமே ஒரு லவ்வு. அது மாதிரி எந்தக் காதல் கதையும் வராது. நானும் எப்பவாவது அதை படம் பிடிச்சுப் போடலாம் என்று தான் பார்க்கின்றேன். முடியவில்லையே!! :oops: :oops:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உது என்ன காதல் கதை. எங்கள் நாய் யகமும் மகே**ஸ்சும் லவ் பண்ணுவினமே ஒரு லவ்வு. அது மாதிரி எந்தக் காதல் கதையும் வராது. நானும் எப்பவாவது அதை படம் பிடிச்சுப் போடலாம் என்று தான் பார்க்கின்றேன். முடியவில்லையே!! :oops: :oops:

  • 2 weeks later...
  • 1 month later...
Posted

காதல் மொழி இசைத்தட்டு வெளிவந்து சக்க போடு போடுதுங்கோ....

காதல் மொழியில் எல்லா பாடல்கழும் அருமை. சாம் கீர்த்தனின் குரல் அதே யாழ்தேவி போல வளைந்து நெளிந்து போகுது. உயிராய் என்னை வளர்த்தவள் நீ இப்பாடலில் நோர்வே தமிழராகிய றாப் பாடகர் சுதாஸ் அவர்களும் பாடி இருக்கின்றமை சிறப்பாக இருக்கின்றது.

பெண்கள் இல்லாத உலகத்தில் வாழ என்னும் பாடலை ஜக்சன் போஸ்கோ (லண்டன்) அவருக்கே உரிய பாணியில் வெளுத்துவாங்கி இருக்கின்றார். அவருக்கு இணையாக இப்பாடலை சேந்து பாடியிருக்கின்றார் மேகா. பேசு பேசு (தமிழ் மொழி) காதல் மொழி பேசு. உன்னிகிருஸ்ணன் பாடியிக்கின்றார். பாடல் இனிமையாக இருக்கின்றது.

ஏஜென்சிகாரன் இப்பாடல் தூள் கிளப்பும் பாடல்.

மீண்டும் மீண்டும் கேட்கவேண்டும் போல உள்ளது.

பாடியவர்கள்:கிருஸ்ணராஜ், சாம் பி.கீர்த்தன். காஞ்சனா மற்றும் பேபி பிரியங்கா.

கண்ணீரில் குளித்த தேசம்.

அருமையான பாடல் ஒன்று.

பலமுறை கேட்டாலும் அலுக்காது. அவ்வளவு வைர வரிகளும், ஈரம் தோய்ந்த குரலும்.

பாடல் பாடியவர்: வி. எஸ். உதயா

பிறந்தநாளை கொண்டாடும் எனத்தொடங்கும் பாடல் சிறுவர்களும் விரும்பி கேட்கக் கூடிய பாடல். சாம் கீர்தனின் குரலை கேட்கின்ற போது. வானொலிகளில் வந்த பிறந்தநாள் விளம்பரங்கள் வந்து மறைகின்றன.

கடைசியாக தாளையடியில் என தொடங்கும் பாடல்.

இப்பாடல் இப்பாடலானது ஈழத்திலிருந்து தமிழகம் நோக்கி அரசியல் தஞ்சம் கோரி செல்லும்

எம் உறவுகளின் பயங்கரமான பயணம் பற்றியது. கவிஞ்ஞரும், இசை அமிப்பாளரும் பாடகர் கிருஸ்ணராஜும். நிகழ்வை கண்முன் கொண்டுவந்தார்கள் என்பதினூடே அப்பாடலின் சிறப்பினை விபரிக்க முடிகின்றது.

பாடல் ஆசிரியர்: வசீகரன்

இசை: வீ. எஸ். :உதயா

  • 4 weeks later...
Posted

எமது ஈழத்துக் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இந்த இசைத்தட்டின் பாடல்கள், தமிழமுதம் இணையத்தின் மூலம், கேட்க தரவிறக்க முடியும்.

http://tamilamutham.net/amutham/index.php?...id=19&Itemid=38

Posted

இந்த இசைத்தட்டின் பாடல்கள், தமிழமுதம் இணையத்தின் மூலம், கேட்க தரவிறக்க முடியும்.

http://tamilamutham.net/amutham/index.php?...id=19&Itemid=38

தாங்கள் குறிப்பிடுவது 'காதல் கடிதம்' இறுவட்டு. காதல் மொழி அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.