Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரண தண்டனை விவகாரம்; மௌனம் கலைத்தார் ஜெயலலிதா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரண தண்டனை விவகாரம்; மௌனம் கலைத்தார் ஜெயலலிதா!

Published on August 29, 2011-10:56 am

03 பேரின் கருணை மனுவை பரிசீலிக்கும் அதிகாரம் முதல் அமைச்சருக்கு இல்லை. குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்த பின்னர் முதல் அமைச்சர் தலையிட முடியாது. தண்டனையை எதிர்கொண்டுள்ள 3 பேரும் மீண்டும் குடியரசுத் தலைவரை அணுக வேண்டும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மேலும், காஞ்சிபுரத்தில் செங்கொடி தீக்குளித்து மாண்டது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

http://www.saritham.com/?p=32395

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கில்லை : தமிழக முதல்வர்

August 29, 2011, 8:53 am[views: 145]

எதிர்வரும் செம்டெம்பர் 9ம் திகதி மரணத்தை எதிர் நோக்கியிருக்கம் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் தனக்கில்லை என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

மேலும், குடியரசுத் தலைவர் நிராகரித்த மனுவை மாற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது என்றும்,

தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் தனக்கு இருப்பதாக தவறாக பிரச்சாரம் செய்கின்றனர் என்றும் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல் செய்தார்.

http://www.paristamil.com/tamilnews/news_detail.php?id=13337&v=145

இது 98% ஜெயலாலிதாவின் தற்போதையை ஈழத்தின் சார்பான நிலையை கட்டுப்படுத்தவும். பாருங்கள் சோனியா அல்லது ராகுல் காந்தியின் விசேட அறிவித்தாலின் படி தூக்கு தண்டனை நிறுத்தப்படும் அல்லாது பின் போடப்படும் அதை வைத்து கொஞ்ச காலத்தை ஓட்டுவார்கள்.

இது முழுக்க முழுக்க மூக்கோண அரசியல்( இலங்கை , கருணா, ராகுல்) . நான் ஒரு உண்மையை சொல்லலாம் என்னை திட்டவேண்டாம்.

இந்த தூக்கு நடந்தால்( நடக்க கூடாது) இது ஈழத்தமிழர் இல்லை உலகத்தமிழர்களுக்கு மாறாத வடு ஒன்றை ஏற்ப்படுத்தி அதனால் பல நண்மைகள் நடக்கலாம்.. ஆனால் சோனியா இலகுவாக இவர்களை தூக்கில் இட்டு தனக்கு தானே தமிழகத்தில் குழிதோண்ட மாட்டார் மாறாக இதை வைத்து அரசியல் செய்து கொண்டே இருப்பார்.....................

சசி... நீங்களும் ஒரு ஆய்வாளர்ன்னு , இதுவரைல சொல்லவே இல்லியே! <_<

  • கருத்துக்கள உறவுகள்

நாடகம் என்று சொல்லுறீங்கள்.. எனக்கென்னவோ ராஜீவ் கான் விசயத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவே இவையெல்லாம் நடப்பதாகத் தெரிகிறது..! :(

  • கருத்துக்கள உறவுகள்

இது 98% ஜெயலாலிதாவின் தற்போதையை ஈழத்தின் சார்பான நிலையை கட்டுப்படுத்தவும். பாருங்கள் சோனியா அல்லது ராகுல் காந்தியின் விசேட அறிவித்தாலின் படி தூக்கு தண்டனை நிறுத்தப்படும் அல்லாது பின் போடப்படும் அதை வைத்து கொஞ்ச காலத்தை ஓட்டுவார்கள்.

இது முழுக்க முழுக்க மூக்கோண அரசியல்( இலங்கை , கருணா, ராகுல்) . நான் ஒரு உண்மையை சொல்லலாம் என்னை திட்டவேண்டாம்.

இந்த தூக்கு நடந்தால்( நடக்க கூடாது) இது ஈழத்தமிழர் இல்லை உலகத்தமிழர்களுக்கு மாறாத வடு ஒன்றை ஏற்ப்படுத்தி அதனால் பல நண்மைகள் நடக்கலாம்.. ஆனால் சோனியா இலகுவாக இவர்களை தூக்கில் இட்டு தனக்கு தானே தமிழகத்தில் குழிதோண்ட மாட்டார் மாறாக இதை வைத்து அரசியல் செய்து கொண்டே இருப்பார்.....................

இதைத் தான் எனக்கும் 4,5 நாட்களுக்கு முன்னர் ஒருவர் சொன்னவர் ஆனால் நான் வந்து இதை எழுதி இருந்தால் என்னைத் துரோகி என்றிருப்பார்கள்...அவர்கள் மூவருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றினால்[அப்படி நடக்கவே கூடாது] தமிழ்நாடு கலவர பூமியாக மாறும்.ஜெயலலிதா கலவரத்தை அடக்க முயலுவார் அதன் மூலம் அவரை தமிழருக்கு துரோகியாக்கலாம் என்பது றோவின் ஜடியாவாக இருக்கலாம்.

இந்த மரண தண்டனை நீதிமன்றத்தால் தான் விதிக்கப்பட்டது...ஆர்ப்பாட்டங்கள்,தீக்குளிப்புகள் மூலம் அதை இல்லாமல் செய்வது என்பது கேள்விக் குறியே?...ஆர்ப்பாட்டங்கள்,தீக்குளிப்புகள் இந்த மரண தண்டனையை நிறுத்தினால் நாளைக்கு உண்மையாக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டி வரும்...இது இந்தியா நீதித் துறைக்கே ஒரு களங்கமாக போய் விடும்.

இவர்களது மரண தண்டனையை தடுக்க மிகச் சிறந்த வழி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு போடுவதாகும்...அதை ஏன் என்னும் செய்யவில்லை என்பது தெரியவில்லை?

இவர்களது மரண தண்டனையை தடுக்க மிகச் சிறந்த வழி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு போடுவதாகும்...அதை ஏன் என்னும் செய்யவில்லை என்பது தெரியவில்லை?

ஏன் சகோதரம்...

எதை சொல்லி ..எப்டி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்னு நீங்க சொல்லியாகணுமே?!

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைக்கு அவசரப்பட்டு வார்த்தையை கொட்ட வேண்டாம் இரண்டு மூன்றுநாள் பொறுத்துப்பார்ப்போம்.

மரணதண்டனை விதிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு கருணை மனு அளிக்கப்பட்ட பின்னர் 11 வருடங்கள் சிறையில் இருந்திருக்கின்றனர்...உடனே தூக்கில் போட்டிருக்க வேண்டும் இவ்வளவு காலம் வைத்திருந்த பின்னர் கருணை நிராகரிக்கப்பட்டு தூக்கில் போடுவது தப்பு

இப்போதைக்கு அவசரப்பட்டு வார்த்தையை கொட்ட வேண்டாம் இரண்டு மூன்றுநாள் பொறுத்துப்பார்ப்போம்.

எப்ப?...அவர்கள் மூவரும் தூக்கில் ஏறின பிறகா?

Edited by ரதி

மரணதண்டனை விதிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு கருணை மனு அளிக்கப்பட்ட பின்னர் 11 வருடங்கள் சிறையில் இருந்திருக்கின்றனர்...உடனே தூக்கில் போட்டிருக்க வேண்டும் இவ்வளவு காலம் வைத்திருந்த பின்னர் கருணை நிராகரிக்கப்பட்டு தூக்கில் போடுவது தப்பு

எப்ப?...அவர்கள் மூவரும் தூக்கில் ஏறின பிறகா?

தூக்கில் ஏற்றமாட்டார்கள் நம்புவோம்,

  • கருத்துக்கள உறவுகள்

மரணதண்டனை விதிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு கருணை மனு அளிக்கப்பட்ட பின்னர் 11 வருடங்கள் சிறையில் இருந்திருக்கின்றனர்...உடனே தூக்கில் போட்டிருக்க வேண்டும் இவ்வளவு காலம் வைத்திருந்த பின்னர் கருணை நிராகரிக்கப்பட்டு தூக்கில் போடுவது தப்பு

எப்ப?...அவர்கள் மூவரும் தூக்கில் ஏறின பிறகா?

நான் குறிப்பிட்டது புரியவில்லைய ரதி இரண்டு மூன்றுநாட்கள் என குறிப்பிட்டிருந்தேன் நீங்கள் ரொம்பவும் அறிவாழி :lol:

மரணதண்டனை விதிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு கருணை மனு அளிக்கப்பட்ட பின்னர் 11 வருடங்கள் சிறையில் இருந்திருக்கின்றனர்...உடனே தூக்கில் போட்டிருக்க வேண்டும் இவ்வளவு காலம் வைத்திருந்த பின்னர் கருணை நிராகரிக்கப்பட்டு தூக்கில் போடுவது தப்பு

இதை சொல்லி சர்வதேச நீதிமன்றம் போகலாம் எங்கிறீங்க?

இல்ல அம்னிஸ்டி இண்டர் நேஷனலா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒன்றுதான் என்பதை சற்றுமுன் ஜெயலலிதா சட்டசபையில் நிரூபித்துள்ளார்.

  • Monday, August 29, 2011, 12:19

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேரை, வரும் 9 ம் தேதி தூக்கில் போட ஏற்பாடுகள் துரித கதியாக நடந்து வருவதை அடுத்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழக முதல்வர் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 3 பேரையும் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை குரல் எழுந்தது. ஆனால் இந்த விஷயத்தில் தலையிட முதல்வருக்கு அதிகாரம் இல்லை என சட்டசபையில் முதல்வர் ஜெ., அறிவித்தார்.

29.8.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண். 110 ன் கீழ் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் அளிக்கப்பட்ட அறிக்கை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இருப்பது போலவும், அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தி அவர்களை காப்பாற்ற முடியும் என்பது போலவும் பேசப்படுவது சட்டத்தின்படி சரியானது அல்ல.

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் சட்டங்களைத் தெரிந்து கொண்டு வேண்டுமென்றே இவ்வாறு எனக்கு அதிகாரம் இருப்பது போல சொல்லி வருகிறார்களா? அல்லது சட்டங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் முதலமைச்சருக்கு இத்தகைய அதிகாரம் இருப்பதாக கூறுகிறார்களா? என்பது தெரியவில்லை.

எனவே சட்ட நிலைமை என்ன என்பதை இந்த மாமன்றத்தின் வாயிலாக பொது மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமை ஆகும் எனக் கருதுகிறேன்.

மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72 ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161 ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1) ன்படி கட்டளையிடுகிறது.

இருப்பினும் சூழ்நிலைகள் மாறுபட்டிருந்தாலோ அல்லது புதியதாக ஏதாவது ஆதாரம் இருந்தாலோ, மரண தண்டனை பெற்ற நபரோ அல்லது அவர் சார்பாக வேறு ஒருவரோ, குடியரசுத் தலைவரின் முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு புதியதாக ஒரு மனுவினை குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கலாம். குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக பின்னர் தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களும் குடியரசுத் தலைவருக்கு தான் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இது குறித்து நடவடிக்கையை குடியரசுத் தலைவர் தான் எடுப்பார்.

எனவே, பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை மனு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நிலையில் எனக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறது என்ற பிரச்சாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தப் பேரவையின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.

குடியரசுத் தலைவர் அவர்களால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த மூவரின் உயிரைக் காப்பாற்ற தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த செங்கொடி என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. உணர்ச்சி வயப்பட்டு, இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொண்டு அமைகிறேன்.

கருணாநிதி- வைகோ கோரிக்கை : தி.மு.க., ம.தி.மு.க,. பா.ம.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் 3 பேரை காப்பாற்ற வேண்டும் என கோரி வந்த நிலையில் முதல்வர் அறிவிப்பின் மூலம் தூக்கு நிறைவேற்றுவதில் எதுவும் பிரச்னை இருக்காது என தெரிகிறது.தி.மு.க., தலைவர் கருணாநிதி காங். தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதி காப்பாற்ற கோரியுள்ளார். ம.தி.மு.க., பொதுசெயலர் வைகோ இந்த விஷயத்திற்காக முதல்வரை சந்திக்க தயங்க மாட்டேன் என்றும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டது.

சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை: இந்நிலையில் 3 பேர் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரும் மனு சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. 11 வருட நிலுவையில் இருந்த கருணைமனு தள்ளுபடியை ஏற்க முடியாது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டில்லியில் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராவார் என தெரிகிறது.

தூக்கில் போடப்படுவது குறித்து கைதிகள் 3 பேர் குடும்பத்தினருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து , இவர்களுடைய குடும்பத்தினர் இன்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்த்து பேசவுள்ளனர்.

வேலூர் சிறை முற்றுகையிட அழைப்பு: பா.ம.க., கட்சி சார்பில் வரும் 8 ம்‌ தேதி வேலூர் சிறையை முற்றுகையிட அழைப்பு விடுத்துள்ளார். சேலம் , தஞ்சாவூர் கோர்ட்டை வக்கீல்கள் புறக்கணி்த்துள்ளனர். சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வக்கீல்கள் 3 பேர் உண்ணாவிரதம் துவக்கியுள்ளனர்.

ராம்ஜெத்மலானியின் ஜூனியர்கள் கைதிகளுடன் சந்திப்பு : பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானியின் ஜூனியர் வக்கீல்கள் , டில்லியை சேர்ந்த வக்கீல் ராமசுப்பிரமணியம் ஆகியோர் கைதிகளை சந்தித்து சில விவரங்கள் கேட்டறிந்தனர். நாளை ஐகோர்ட் விசாரணைக்கு இன்றைய தகவல்கள் பயன் அளிக்கும் என வக்கீல்கள் நம்புகின்றனர்.

http://www.tamilthai.com/?p=25325

  • கருத்துக்கள உறவுகள்

நான் குறிப்பிட்டது புரியவில்லைய ரதி இரண்டு மூன்றுநாட்கள் என குறிப்பிட்டிருந்தேன் நீங்கள் ரொம்பவும் அறிவாழி :lol:

ஜெயலலிதா ஏற்கனவே தனது முடிவை சொல்லி விட்டார்...இன்று திகதி 29 என்னும் 9 நாட்கள் உள்ளது...நீங்கள் சொன்ன மாதிரி இன்னும் 2,3 நாட்கள் பொறுத்திருப்போம் அதன் பிறகு என்ன செய்வது என நீங்கள் சொல்லுங்கள் அதன் படி நடப்போம்

இதை சொல்லி சர்வதேச நீதிமன்றம் போகலாம் எங்கிறீங்க?

இல்ல அம்னிஸ்டி இண்டர் நேஷனலா?

சர்வதேச நீதிமன்றம் நெதர்லாந்தில் உள்ளது...அதில் இந்த தீர்ப்புக்கு எதிராக வழக்குப் போட்டு இடைக் கால உத்தரவு வாங்கலாம் என நினைக்கிறேன்...முயற்சி செய்து பார்க்கலாம் தானே அதில் என்ன தப்பு

அண்ணன் சீமான் கூறியது போல தமிழக அரசியலை திசை திருப்ப, ஔர்ருமைப்படும் தமிழக தலைவர்களை பிரிக்க காங்கிரஸ் செய்யும் சதியே இது.

இது முதலமைச்சருக்கும் தெரியும்.

காங்கிரஸ் இந்த அப்பாவிகளை தூக்கில் போட்டால் அவர்கள் தமிழகத்தில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள். அதேவேளை மேற்கொண்டு இந்த மரண தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றினாலும் பலவீனமானவர்கள் என டெல்லியில் இவர்கள் எதிர்க்கட்சிகளால் குற்றம் சாட்டப்படலாம்.

அவரால் 'ஒன்றும் செய்யமுடியாது' என முதலமைச்சர் கூறி அவர் அந்த சதியை காங்கிரஸ் மேலேயே போட்டு, ஒட்டு மொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பையும் காங்கிரஸ் சம்பாதிப்பதாக இது அமையலாம்.

சர்வதேச நீதிமன்றம் நெதர்லாந்தில் உள்ளது...அதில் இந்த தீர்ப்புக்கு எதிராக வழக்குப் போட்டு இடைக் கால உத்தரவு வாங்கலாம் என நினைக்கிறேன்...முயற்சி செய்து பார்க்கலாம் தானே அதில் என்ன தப்பு

அங்கே உள்ளது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம். அதிலே இவ்வாறான வழக்குகளை தாக்கல் செய்யமுடியாது என எண்ணுகின்றேன்.

ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒன்றுதான் என்பதை சற்றுமுன் ஜெயலலிதா சட்டசபையில் நிரூபித்துள்ளார்.

காங்கிரஸ் விரிக்கும் வலைக்குள் காங்கிரசையே மாட்டிவிடவேண்டும். எங்களுக்குள் ஒற்றுமையாக இருந்து இதை சாதிக்கவேண்டும்.

Edited by akootha

சரியா தெரியல........

இந்த ..தமிழகம் பற்றி எரியும் , அப்புறம் காங்கிரஸ் தூக்கி எறியப்படும், மேட்டர்பத்தி எல்லாம்...! :unsure:

காங்கிரஸ் என்ன இனி............புதுசா ஒட்டுமொத்த

எதிர்ப்பை சம்பாதிக்க இருக்கு தமிழ் நாட்டுல?

ஆளும் கட்சியா இருந்தா எதிர்ப்பைபத்தி கவலை படும்!

இல்ல..எதிர்கட்சியா இருந்தா கவலைபடும்!

இந்த இரண்டில எதுவுமே இல்லியே அது! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே உள்ளது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம். அதிலே இவ்வாறான வழக்குகளை தாக்கல் செய்யமுடியாது என எண்ணுகின்றேன்.

காங்கிரஸ் விரிக்கும் வலைக்குள் காங்கிரசையே மாட்டிவிடவேண்டும். எங்களுக்குள் ஒற்றுமையாக இருந்து இதை சாதிக்கவேண்டும்.

நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம் அகூதா...ஆனால் மனித உரிமை நீதிமன்றம்,சர்வதேச நீதிமன்றம் போன்று பல உள்ளன...ஒரு நாட்டில் நீதி சரியாக வழங்கா விட்டால் நாங்கள் வாழும் புலம் பெயர் நாட்டில் கேஸ் போடலாம் என நினைக்கிறேன்... மனித் உரிமையை மீறும் விதமாக இந்தியா அரசு பிழையாக குற்றவாளிகளை தண்டிக்க போகிறது என நிருபீக்கலாம்[சர்வதேச மனித உரிமைகள் என்று இருக்கு] அதற்கு எதிராக இந்தியா நடக்கிறது என நிருபீத்தால் இவர்களை விடுவிக்கலாம்...ஏற்கனவே நளினியோடு சேர்த்து 20 வருடத்திற்கு மேலாக ஆயுள் தண்டனை[அதுவும் இரட்டை ஆயுள் தண்டனை] அனுபவித்த பின் தூக்குத் தண்டனை வழங்கக் கூடாது...3 பேரும் செத்த பிறகும் வழக்குப் போடலாம் ஆனால் இந்தியாவிற்கு அவமானம் மட்டுமே கிடைக்கும் இப்ப வழக்குப் போட்டால் அந்த 3 பேரின் உயிரையும் காப்பாற்றலாம்...ஏன் எல்லோரும் அமைதியாக இருக்கிறார்களோ தெரியவில்லை 3 பேரும் செத்தாலும் பரவாயில்லை இந்தியாவின் மானம் போகக் கூடாது என நினைக்கிறார்களோ தெரியாது

சரியா தெரியல........

இந்த ..தமிழகம் பற்றி எரியும் , அப்புறம் காங்கிரஸ் தூக்கி எறியப்படும், மேட்டர்பத்தி எல்லாம்...! :unsure:

காங்கிரஸ் என்ன இனி............புதுசா ஒட்டுமொத்த

எதிர்ப்பை சம்பாதிக்க இருக்கு தமிழ் நாட்டுல?

ஆளும் கட்சியா இருந்தா எதிர்ப்பைபத்தி கவலை படும்!

இல்ல..எதிர்கட்சியா இருந்தா கவலைபடும்!

இந்த இரண்டில எதுவுமே இல்லியே அது! :wub:

டெல்லியில் ஆட்சி செய்யவே காங்கிரஸ் கூடுதலாக விரும்புகிறது. அதற்கு மாநில கட்சிகளின் ஆதரவு தேவை, ஏனெனில் கூட்டாட்சியே சாத்தியமாகின்றது.

தமிழகம் நாலாவது பெரிய பொருளாதாரம். எனவே இந்தியாவுக்கு தமிழகம் அரசியல் ரீதியாக முக்கியம்.

ஏற்கனவே தம்மை இரண்டாம் தர பிரசைகளாக டெல்லி நடத்துகின்றது என்ற எண்ணம் இளையோர் மத்தியில் வலுக்கும்.

பொருளாதார ரீரியில் வளரும் தமிழகம் அரசியல் உரிமைகளை கூடுதலாக கேட்கும், அதை மத்தி மறுக்கும் பொழுது பிரிவினைவாதம் உட்பட்ட பலவிதமான பிரச்சனைகள் பெருக்கும்.

அதைவிட சர்வதேச ரீதியில் இந்தியா மனித உரிமைகளை மதிக்காத நாடு என்ற 'புகழை' மேலும் பலர் மத்தியில் பெரும். இது அதன் ஐ,நா. பாதுகாப்பு குழுவில் நிரந்தர உறுப்பினர் ஆகும் எண்ணத்தை பாதிக்கும்.

பாருங்கள் இந்த 3 வருக்கும் தூக்கு மாட்டினால் அதுக்கு காரணம் ஜெயலாலிதா தான் காரணம்( உண்மையும் கூட அவர் ஆட்சியை வென்றதால் தான் இப்ப அவசரம் காட்டுகிறார்கள்)...

ஆனால் இங்கு எனது ஒரு கேள்வி எழுந்து கொண்டு இருக்கு . இந்த கொலைக்கும் புலிகள் தலமைக்கு தொடர்பு இல்லை என்று கூறும் பூனை புத்த ஜீவிகளின் குரலை இந்த தூக்கு தண்டனை எதிப்பில் காணவில்லை. சில நேரம் தூக்கு போட்டு இவர்களை கொன்ற பின் இவர்கள் நிரபராதிகள் என்ற உண்மையை சொல்லி இந்தியாவை ஜநாசபையில் தண்டிக்க போகிறார்களோ?

இன்று ஹெட்லைன் நியூஸ் இல் 5 பேர்களை வைத்துவிவாதம் நடாத்தினார்கள்.அதில் மனித உரிமைகள் சார்பில் கலந்துகொண்டவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியது,

பொதுவாகமரணதண்டனைக்கு எதிராக குரல் கொடுத்தல்,

21 வருடங்களே ஒரு பெரும் தண்டனை இனி தூக்கினால் மகாபாவம் என முடிவை மீள் பரிசீலனை செய்யகேட்பது இது இரண்டுமே ஏதோ ஒருவழியில் அவர்களுக்கு விமோசனத்தை பெற்றுக்கொடுக்கும்,அதைவிட்டு தமிழ்நாடு கொந்தளிக்கும் என்பதெல்லாம் நடைமுறைக்கு ஆகாது,அதுவும் வை.கோ,நெடுமாறன்,சீமான் வெறும் வெத்து கோஷ்டிகள். இவர்கள் இதனால் அரசியல் இலாபம் தேடலாமே தவிர எதுவும் சாதிக்க முடியாது.

அவர்களின் வாதம் ஏற்கனவே வழக்கு தீர விசாரித்து இவர்கள் குற்றவாளிகள் என காணபட்டு தீர்ப்பும் வழங்கிவிட்டார்கள்.இனி வழக்கை பற்றி கதைத்து பிரயோசனமில்லை.

அவர்களின் வாதம் ஏற்கனவே வழக்கு தீர விசாரித்து இவர்கள் குற்றவாளிகள் என காணபட்டு தீர்ப்பும் வழங்கிவிட்டார்கள்.இனி வழக்கை பற்றி கதைத்து பிரயோசனமில்லை.

எத்தனையோ வழக்குகள் மீண்டும் எடுக்கப்பட்டு குற்றவாளிகள் நிரபராதிகள் என காணப்படுள்ளனர்.

http://www.aidwyc.org/timeline.html

மேற்க்குலக நாடுகளிலேயே இது நடக்கின்றபொழுது இந்தியாவில் எவ்வளவு நடக்கும்!

Edited by akootha

இந்த மூன்று உயிர்களின் மரணங்களை தடுக்க வேண்டும். இதற்குள்ளும் அரசியல் வேண்டாம். இதற்குப் பின்னால் அவர்களின் பெற்றோரின் கண்ணீர் உள்ளது.

இயலுமானால் தமிழர்களாய் தமிழர்களுக்காய், மூன்று உயிரிற்காய் உதவுவோம்.

எரிதனில் கொளுத்தும் உறவுகள் வேண்டாம்

உறவைக் கொளுத்தும் எரிதணல் வேண்டாம்

... உண்மையில் ஜெயலலிதாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தவே, இந்த தூக்குத்தண்டனை நாடகம்! ... நாம், எம் முன்னைய உணர்ச்சி அரசியல்களை விடுத்து, இனியாவது சூழ்நிலைகளை புரிந்து, அனைவரையும் அரவணைக்க முயல்வோம்!!!

.... இனியாவது ராஜீவ் காந்தி கொலைக்கு பகிரங்கமாக, ஈழத்தமிழினம் மன்னிப்பு கோரினால் என்ன?????????? ... அவர்கள் அமைதிப்படை என்று வந்து செய்தவைகள் எல்லாவற்ரையும் ஒருபுறம் ஒதுக்கி விட்டு!!!!

.... நாம் உலகின் ஓர் மூலையில், யாரும் கேட்பாரற்று, பார்ப்பாரற்று முடங்கிக்கிடக்கும் ஓர் சிறிய இனம் .......

Edited by Nellaiyan

வழக்கை திரும்ப எடுத்து வாதடக்கேட்கும் நேரம் இதுவல்ல,முதலில் தூக்கு கயிற்றில் இருந்து தப்ப வழிபார்க்க வேண்டும்.

ராஜீவ் கொலையுடன் இலங்கை தமிழர் சார்பில் மன்னிப்பு கேட்கும் பக்குவம் எங்கள் ஒருவருக்கும் வரவில்லை.இன்று அவர்கள் விவாதம் கேட்கும் போது அவர்கள் இன்னமும் கோபத்தில் இருப்பது தெரிகின்றது.பட்டரி வாங்கிகொடுத்தவருக்கு மரணதண்டனையா என வைகோ தீர்ப்பு சொன்ன நேரம் கேட்டிருக்க வேண்டும் அல்லது அப்பீல் பண்ணியிருக்க வேண்டும் அதைவிட்டு இப்ப அதைக்கதைத்து எதுவித பிரயோசனமுமில்லை.

எங்களுக்கு மற்றவர்களில் இருக்கும் கொலைவெறி மாறாமல் மற்றவனுக்கு மன்னிக்கும் பக்குவம் வேண்டும் என எதிர் பார்க்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.