Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடர் அவை உறவுகளய்யா ஆதியை அம்போ என்றுவிட்டுவிட்டு காணாமல்போய்விட்டார்கள்

Featured Replies

யாழ்க்களத்திற்குள்ளும் அடர்அவை உறவுகளய்யா இவர்கள்

ஆதியை அம்போ என்று விட்டுவிட்டு காணாமல் போய்விட்டார்கள் ஆற்றாமையில் ஆதி அடர் அவையின் செயற்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு காணாமல்ப் போனோர் அறிவிப்பை வரையவேண்டி இருக்கிறது.

திருவாளர் சின்னப்பு

மூன்றடி உயரமும், இரண்டு கொம்புகளிலும் தங்கக் குமிழுடனும்

எப்போதும் புண்ணாக்கை உண்ணும் இவர் தென்னை,பனை மரங்களைக் கண்டால் அங்கேயே செக்கிழுக்க ஆரம்பித்துவிடுவார்.

இவரைப்பற்றிய மேலதிக விபரங்களாவன.....

மூக்கை எப்போதுமே முசுறிக்கொண்டும், கண்டவர்,நின்றவர், கதைகேடபவர் என்று பாகுபாடின்றி முறாய்க்கும் சக்கரவர்த்தி

நித்திலா....

நித்திலத்தில் குற்றங்கள் மலிந்து கிடப்பதால் சட்டத்தரணிகளின் வாய்சவடால்கள் உச்சமடைந்திருக்கிறது அந்த வகையில் இவருடைய வாதாட்டம் யாழ்க்களத்தில் பிரபலம்.. ஆனால் இங்கு எவருக்காக வாதாடினாலும் கால் காசுகூடக் கொடுக்கிறார்கள் இல்லையே என்று ஆதிவாசியிடம் ஒருபாட்டம் அழுதவர்தான் அதன் பின்பு காணவில்லை. இத்துடன் இணைத்த படத்தில் அவரின் அடையாளங்கள் உள்ளன. யாரேனும் அவரைக்கண்டால் அறியத்தரவேண்டிய முகவரி

அடர் அவை

யாழ்க்களம்.

0390.jpg

மணிவாசகன்.....

ஆதியின் வாலை அறுக்கப் படாதபாடுபட்டும் ஏமாற்றமே பரிசாகக் கிடைத்ததனால் எல்லை மீறிய கோபத்தில் தன்னுடைய மனையாள் பேரளம்பெண் நாச்சியாருடன் வாய்த்தர்க்கத்தில் குதித்து குமுறி வெடித்து வீட்டைவிட்டு காணாமல் போனதாகக் கேள்வி எங்கே உள்ளார் என்பது மர்மக் கதைபோல் பலமுடிச்சுகளைப் போட்டு இருக்கிறது.... இவர் தன் பேரிளம்மனையாளுடன் ஆத்திரத்தில் குதிக்கும் போது அவரின் பதினாறாவது புத்திரன் செம்புலி எடுத்த புகைப்படம் இது இவையே அவர் காணாமல் போகுமுன் அணிந்திருந்த ஆடைகள். இப்படத்தில் உள்ள அடையாளங்களுடன் முக்கியமாக கையில் மணியையும் எப்போதும் வைத்திருப்பார். ஏன் என்று கேட்டால் இது மணி நான் வாசகன் என்பார். இது அவருடைய பிரத்தியேகத் தன்மை.

இவரைக்காண்பவர்கள் தகவல் கொடுக்கவேண்டிய முகவரி

பேரிளம் பெண் நாச்சியார்

பித்தர்குளம்

எல்லாளன்......

சரியான யொள்ளுப் பார்ட்டி...

பாட்டு எழுதுவேன் என்று அடம்பிடித்து யாழ்க்களகிழவிகளிடம் மாட்டி துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடியவர் பின்நாளில் ஏதோ தகரப் பெட்டியுடன் தெருத்தெருவாக பாடியாடித்திரிகிறார் என்றும் உறுதிப்படுத்த நிழல்படத்தையும் யாரோ ஒரு அநாமதேயம் ஆதியின் அடர்அவைக்கு அனுப்பியுள்ளார். பார்க்கும் போது மிவும் பரிதாபமாகத் தென்படுவார். முடி உதிர்வதைத் தடுக்க எத்தனையோ உபாயங்களைக் கையாண்டும் முடியாத நிலையில் முடிகள் கொட்டி நிலவேறி நடக்கும் நிலைகொண்டவர். கூரையைப்பார்த்து முட்டாளென்று நினைக்காதீர்கள். அருகில் போய் கதைத்தாலே அரியாசனம் கேட்பார். இவரைப்பற்றிய விபரம் அறிந்தவர்கள் கீழக்கண்ட முகவரிக்கு சேதியை அனுப்பி வைக்கவும்

பட்டத்து அரிசி

எல்லாளன் சபை

oracleart_musicmaker.jpg

வெண்ணிலா....

நிலவில் தூங்கும் நிகழ்கால லேடி அப்பப்போ எல்லோரையும் நொட்டிச் செல்லும் சின்னவெண்ணிலா.

லொலிபொப் கேட்டு அடம் பிடிக்கும் இவர் அண்மையில் அடர்அவைக் கவி மேகத்தால் வாழ்க்கையில் லொலிப்பொப் கேட்கவே மாட்டேன் என்ற சபதத்துடன் காணாமல் போயுள்ளார்.

இந்த நிலாப் பெண்ணைப் பற்றி தகவல் கிடைத்தால் அறிவிக்க வேண்டிய இடம்

வம்பர் ஆரியா

வால்த் தோட்டம்

இவர் இரசிகை பார்த்தால் சாது

இயற்கையை இரசிப்பார.; இவர் இருக்குமிடத்தில் காகங்கள் சூழ்ந்து ஒப்பாரி வைக்கும் வேறொன்றுமில்லை இயற்கையை இரசிப்பது அளவு கடந்து இறக்கைகளைப் பிய்ப்பதுவரைபோயிருக்கிறது. இதில் வரும் நிழற்படத்தில் புறாக்களோடு நிற்கிறாரே புன்னகை அரசி என்று ஏமாந்து விடாதீர்கள். யாழ்க்களத்துப் புலிகேசி காகங்களைப் புறாக்களாகக் கிராபிக்ஸ் செய்து கொடுத்திருக்கிறார்

காகங்கள் அழும் இடத்தில் கட்டாயம் இந்தப் பேர்வழி இருப்பார்.

யாரேனும் அறிந்தால் அறியத்தரவும்.

ரௌத்திuசபை

பிரளயபுரம்.

1140060134_CMyDocumentsDoveLady.jpg

பித்தன் ஓ.....ஸாரி புத்தன் எல்ஸின் பிய்ந்த தொப்பிதான்

வேண்டுமென்று களவாடி ஓடியவர்தான் எங்கிருக்கிறார் என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை. அண்மையில் சிட்னியில் உலவுகிறார் என்று கந்தப்பர் தகவல் தந்துள்ளார் சிட்னி வாசிகள் யாராவது இவரைக்கண்டால் உடனடியாக கட்டி வைத்துவிட்டு ஆதிக்குத் தகவல் அனுப்புமாறு வேண்டப்படுகின்றனர்.

அடர்அவை மன்னன் ஆதிவாசி

காட்டுக்குட்டை

இவர் மாறா இளமையுடன் உலா வந்த முருகன்.

என்றைக்குத் தினைப்புனத்து வள்ளிமயிலைக் கண்டாரோ இப்படி ஆகிவிட்டார். பழுத்த தள்ளாமையால் பசுங்கிளியை வளைக்கத் திட்டமிட்டு ஆதியின் ஆசியுடன் கானகக்குயிலைத் தேடிச்சென்றவர்தான் எத்தகவலும் கொடுக்கவில்லை. யானை அடித்துவிட்டதா? புூனை அடித்துவிட்டதா? எதுவுமே தெரியவில்லை

பொல்லாத முதுமை உச்சமேறி எங்Nகுனும் பிதற்றித்திரிகிறாரா? என்பதும் தெரியவில்லை. கானகம் செல்லும் களத்து உறவுகள் யாரேனும் இம்முதியோனைக் கண்டால் எப்பாடுபட்டேனும் இவ்விடம் சேர்ப்பீராக.

அண்ணன் மோதகவயிரோன்

கைலாசமலை

old-guy.gif

புண்ணியம் செய்த ஆத்மா அல்லிகா ஆதியின் கோலத்தை அலங்கோலம் செய்வதற்கே பிறவி எடுத்தவர்...... காணமல் போனவரை தொலைந்து போகட்டும் என்று விட்டுவிட முடியவில்லை பிறகு அவையில் ஆதிவாசி அல்லிகாவைக் கொன்றுவிட்டதாகக் கதைகட்டத் தயங்க மாட்டார்கள். அதற்காகவேணும் கட்டாயம் கண்டுபிடித்தே ஆகவேண்டும். இப்போது புரிகிறதா புண்ணியம் செய்த ஆத்மா என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்று....

இவரின் mழகு கொழிக்கும் உருவம் இதுதான் கோமாளி மாதிரித் தெரிவார். கவனம் கூர்மையானதால் தாக்குவார்????? அதாங்க புத்தியையைச் சொல்கிறேன் எதிராளிகளை இலாவகமான வசைக்கத்தெரிந்தவர் மட்டுமல்ல வறுக்கவும் தெரிந்தவர் ஆதிவாசி அடிக்கடி வறுபட்ட அநுபவத்தால் கூறுகிறேன். சொல்ல மறந்து விட்டேன் இவரைப்பற்றிய தகவலைக் கொடுக்க வேண்டிய இடம்.

தசமத் தலையன்

இவர்தான் வெட்டுக்கொத்துக்குச் சரியான பேர்வழி

யாழ்க்களம்

இவர் சயீவன் ஆளைக் கவனமாப் பாருங்கோ...

ஆதியின் வாலில் எப்போதுமே கண் வைத்துள்ளவர்.... ஒண்டுமில்லை ஆதியின் வாலை நறுக்கி ஆராய்ச்சி ஏதும் செய்து அதிசய சக்தி கிடைக்காதா? என்ற நப்பாசை இவருக்கு....

இப்பவெல்லாம் இவர் காணக்கிடைக்கிறதில்லை வேறை ஆருடைய வாலும் கிடைத்து விட்டதோ என்னவோ? காணவில்லைப் பட்டியலில் இவரைச் சேர்க்கிறதா விடுவதா? என்று யோசனையாக்கிடக்கு! திரும்ப வந்தாலும் இந்த வாலைத்தானே குறிவைப்பார்.... பார்வைக்கு பைத்தியம் மாதிரி விசர்குணத்தில் ஏதேனும் செய்தபடியே இருப்பார். எல்லாம் முடிஞ்ச பிறகு கேட்பார் என்ன நடக்குது என்று அறிய வெளிக்கிட்டு மாடிவீட்டுக்காரனுக்குத் தீனி போடுவார் இந்த மாதிரி குண இயல்போடும் அடையாளங்களோடும் யாரேனும் அகப்பட்டால் வாயைத் திறக்காமல் யாழ்க்களத்திற்கும் அங்கொடைக்கும் தகவல் கொடுக்கவும்

uhshawnmadscientist.JPG

Edited by ஆதிவாசி

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசி நல்லா இருக்கு

தேடுங்கள் கிடைப்பார்கள் விடமுயற்ச்சியுடன், மே 2009 ற்கு பிறகு எத்தனை உறவுகளை காணவில்லை, எத்தனை இலைமறைகாய்கள் இப்ப வெளியில,............

  • கருத்துக்கள உறவுகள்

இவையள் எல்லாரும் விருப்ப ஓய்வில், வேளைக்கே... பென்சன் எடுத்துக் கொண்டு, பேரப் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பவர்களை யாழுக்கு இழுத்து வந்து.. ரென்சன் ஆக்குவதில், ஆதிக்கு சந்தோசம் போலை.smiley-gen146.gif

  • கருத்துக்கள உறவுகள்

இவையள் எல்லாரும் விருப்ப ஓய்வில், வேளைக்கே... பென்சன் எடுத்துக் கொண்டு, பேரப் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பவர்களை யாழுக்கு இழுத்து வந்து.. ரென்சன் ஆக்குவதில், ஆதிக்கு சந்தோசம் போலை.smiley-gen146.gif

எப்படி இப்படி உங்களால் மட்டும் கன இணைக்க முடிகிறது, நான் பல images இணைக்க முயன்று (கடைக்குட்டி கேட்டவன் எல்லா images ஒருக்கா akootha க்கு போட செல்லி) முடியல, ஆனா நல்லா இருக்கு திரிக்கு ஏற்ற மாதிரி.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இப்படி உங்களால் மட்டும் கன இணைக்க முடிகிறது, நான் பல images இணைக்க முயன்று (கடைக்குட்டி கேட்டவன் எல்லா images ஒருக்கா akootha க்கு போட செல்லி) முடியல, ஆனா நல்லா இருக்கு திரிக்கு ஏற்ற மாதிரி.

கூகிளில் Free Smiley என்று தேடினீர்கள் என்றால், பல இணையங்களில் தேவையான சிமைலிகளை தாராளமாக எடுக்கலாம். மேலும் குறிப்பிட சிமைலிதான் வேணுமென்றால்... அதன் பெயரை கூகிளில் தேட... அது சம்பந்தப் பட்ட சிமைலி கிடைக்கும் உடையார்.

  • கருத்துக்கள உறவுகள்

அடர் அவை உறவுகளய்யா ஆதியை அம்போ என்றுவிட்டுவிட்டு காணாமல்போய்விட்டார்கள்

தேடுங்க தேடுங்க தேடிக்கிட்டே இருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எல்லோரையும் மீண்டும் சந்திக்கத்தான் ஆசை, ஜம்முவையும் கூட ... ம் ... பொறுத்திருந்து பார்க்கலாம்! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனும்,சஜீவனும் அடிக்கடி யாழுக்கு வாறவை...மணிவாசகன் கூட இடைக்கிடை வந்து போவார்...தான் யாழுக்கு வராமல் இருந்து கொண்டு யாழுக்கு வந்து போறவையை தேடுற ஆதிவாசியை என்ன செய்ய :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனும்,சஜீவனும் அடிக்கடி யாழுக்கு வாறவை...மணிவாசகன் கூட இடைக்கிடை வந்து போவார்...தான் யாழுக்கு வராமல் இருந்து கொண்டு யாழுக்கு வந்து போறவையை தேடுற ஆதிவாசியை என்ன செய்ய :lol:

காட்டுவாசம் பிடிக்கலையாக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

கூகிளில் Free Smiley என்று தேடினீர்கள் என்றால், பல இணையங்களில் தேவையான சிமைலிகளை தாராளமாக எடுக்கலாம். மேலும் குறிப்பிட சிமைலிதான் வேணுமென்றால்... அதன் பெயரை கூகிளில் தேட... அது சம்பந்தப் பட்ட சிமைலி கிடைக்கும் உடையார்.

நன்றி சிறி

  • தொடங்கியவர்

மேல நான் காணமல் போனோர் பட்டியலில் பதிஞ்ச ஆரும் வேற மூஞ்சியோ வந்து கதைக்கேல்லைதானே...

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஆதிவாசி எங்களை கண்ணுக்கு தெரியலையா, எவ்வளவு ஆசையா எங்கட மூததையர் வந்திருக்கிறார் என்று வரவேற்றால், இப்படி சொல்லிப்போட்டிங்களே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.